PDA

View Full Version : புதிதாய் தொடங்க இருக்கும் தொடர்கள் - ஒரு பார்வை



lavanya
09-12-2003, 06:32 PM
புதிதாய் தொடங்க இருக்கும் தொடர்கள் - ஒரு பார்வை

மதனும் மணியாவும் மெகா சீரியல் தொடங்க சேரன் கயலுடன் சேர்ந்து திட்டமிட்டது
தமிழ் மன்றம் அறிந்ததே...இதற்கு தயாரிப்பாளர் பப்பி அவர்கள் நிதி உதவி அளிக்காததால்
அது கொஞ்சம் 'கிடப்பில்'இருப்பதும் தாங்கள் அறிந்ததே..அதுவரை வெளியே உள்ள
டிவிகளில் கொஞ்சம் ( கொஞ்சம் என்ன எல்லா டைமும்தான்) ஸ்லாட் ப்ரீயாக இருப்பதால்
கீழ்க்கண்ட தலைப்புகளுக்கு உள்ள கதைகளுக்கு நல்ல இயக்குனர்கள்,வசனகர்த்தாக்கள்
தேவைப்படுகிறார்கள்

1. நரகம்

(அவ - நம்பிக்கை ) - இரண்டாம் பாகம்

பெரிய கோடீஸ்வரரின் மூத்த ஏழை மகள் குடிசை வீட்டு பணக்கார இளைஞனை
காதலிக்க அவனை ஏற்கனவே காதலிக்கும் (கதைக்கு ஒட்டாத) இன்னொரு பெண்
அதை தடுக்க அந்த இரண்டு பெண்களுக்கும் நடுவில் மாட்டி கொண்டு கதாநாயகன்
கடைசியில் ஏதாவதொரு நரகமே தேவலை என்று புரட்சி முடிவு எடுக்கும் புத்தம்
புதிய தொடர் - அம்மா செண்டிமெண்ட் - மாமியார் கொடுமை - நாத்தனார் தொல்லை என
எல்லா வாரமும் கண் கலங்க வைக்கும் அற்புத கவிதை.

2. அதுவும் நாய்தானே....
பட்டணத்தில் சுகபோகமாக வாழ்ந்து வரும் தெருநாய் ஒன்று சின்ன வயதில் தொலைந்து
போன தன் தம்பி நாயை தேடி கிராமத்திற்கு வருகிறது..அங்கு ஏராள நாய்கள்...எதுவுமே
இந்த நாயை சட்டை செய்யாமல் ஒதுக்கி வைக்க இன்னொரு சொறிநாய் இதற்கு ஆதரவு
தருகிறது...உடனே எல்லா நாய்களும் செம்மையாய் இரண்டு நாய்களையும் எதிர்க்க அவர்களை மனம் மாற இந்த இரண்டு நாய்களும் போராடுவதுதான் கதை. கடைசியில் தன்
தம்பி நாயலேயே கடிபட்டு சாகும் நெகிழ்வான கதை...'அதுவும் நாய்தானே நீயும் நாய்தானே தானே'என்ற டைட்டில் பாடலில் நாய் சைக்கிள் ஓட்டுவதும்,தம் அடிப்பதும் பக்கா பில்டப்பில் தொடர் செல்கிறது.

3. ஓடுகிறான் கண்ணன்.

கண்ணன் நல்ல ஓட்டபந்தய வீரன்... அவனை வாழ்வில் நிறைய கஷ்டங்கள் துரத்துகிறது...
முடிவாய் ஒரு பைனான்ஸ் கம்பெனி துவங்குகிறான். அங்கு ஒரு பெண் அவனை துரத்த
அவளிடமிருந்து தப்ப மக்கள் போட்ட பணத்தோடு ஓடும் கண்ணனை ஊரே துரத்துகிறது...எல்லா காட்சிகளிலும் ஓடி கொண்டிருக்கும் கண்ணன் சந்திக்கும் அனுபவங்கள்தான் கதை. சொந்த மருமகனையே சூடு போடும் மாமியாரின் கொடுமை காட்சிகள் பார்க்காமலேயே எல்லா பெண்களையும் அழ வைக்கும்.

4. ஜன்னி.....

மெட்ராஸ் மக்களின் அடிப்படை பிரச்னையான தண்ணியை வைத்து எடுக்கப்படும் தொடர்...
ஒரு குடும்பத்திற்கு வாக்கப்படும் மூத்த மருமகள் வரதட்சணையாக 50 லாரி தண்ணீர்
கொண்டு வருகிறார்.அதை அபகரிக்க மாமியார் ஒருபுறமும்,சின்ன மாமனார் ஒருபுறமும்
திட்டமிடுகிறார்கள். அதை முறியடிக்க கதாநாயகி ஜன்னி வந்தவளாய் நாடகமிட்டு நடித்து
எல்லோரையும் திருத்துகிறாள். கல்யாணத்திற்கு காத்திருக்கிறா கன்னி...தலையில ஜலம்
இருந்தா ஜன்னி போன்ற சூடுபறக்கும் வசனங்கள் ஆங்காங்கே தொடரை அற்புதமாக
கொண்டு செல்ல உதவும்.க்டைசியில் ஒரு லாரியை தண்ணியை செலவு செய்யும் பிரமாண்டம்
எல்லோரையும் நிச்சயம் அசர செய்யும்.

5. பானை ஒலி

<span style='color:#1200ff'>ஐந்து ஆண்களை கொண்ட ஒரு அப்பாவி அப்பாவின் கதை...பானை வியாபாரம் செய்யும் பாண்டுவுக்கு
பிறக்கும் எல்லா பிள்ளைகளுமே சொல்லி வைத்தாற்போல் தறுதலையாக இருக்கிறார்கள். பொங்கலுக்கு பானை வாங்க வரும் ஒரு பெண் அந்த அப்பாவின் சோக கதை கேட்டு அந்த
ஐந்து ஆண்களையும் திருத்தும் தொடர். "...

பொறந்ததும் பால் காய்ச்ச
பொங்கலுக்கு சோறு ஆக்க
போய்சேர்ந்தா தண்ணி இறைக்க ....
வருவது பானை ஒலிதான்

என்ற டைட்டில் பாடலுக்க்காவே பேசப்படும் தொடர். </span>


இன்னும் பல தொடர்கள் பரிசீலனையில் வசனகர்த்தாக்கள்
தயாராக இருங்கள்

சேரன்கயல்
09-12-2003, 11:51 PM
அடடே...
எல்லாம் அற்புதமான காவியக்கதைகளா இருக்கே...
எங்க டீம் கூடிப்பேசி ஒரு முடிவு எடுக்கிறோம்...

ஓடுகிறான் கண்ணன்ல...

.....சொந்த மருமகனையே சூடு போடும் மாமியாரின் கொடுமை காட்சிகள் பார்க்காமலேயே எல்லா பெண்களையும் அழ வைக்கும்....

அப்படினு எழுதி இருக்கீங்க...நீங்க மருமகனுக்கு சூடு போடுவதால் பெண்கள் அழுவறதா சொல்லியிருக்கீங்க...நீங சொல்ல வந்தது அதுதான் என்றால்...இது மிகப்பெரிய புரட்சி...(ஆண்களுக்கு சூடு போட்டு பெண்கள் அழுவறதுனா சும்மாவா... :wink: )

மன்மதன்
10-12-2003, 08:39 AM
அடடே..
என்னவொரு கதை..என்னவொரு சென்டிமெண்ட் ..
இதை சீரியஸாகவே யாரேனும் எடுக்க முன்வருவார்களேயானால் அவர்தான் இப்பொதைய சின்னத்திரை முண்ணனி இயக்குனராக வருவார்..


.ஏன் லாவண்யாவே இயக்கக்கூடாது..


.

பாரதி
10-12-2003, 04:34 PM
வழக்கம் போல சிறந்த தொடருக்கான கருத்தை வழங்கி இருக்கும் எங்கள் அன்புக்குரிய வி.வி என்கிற பட்டமும் வழங்கலாம் போல....

இளசு
10-12-2003, 10:20 PM
சின்ன தம்பி : அண்ணே அண்ணே , உங்களுக்குத்தான் லாவண்யா பிரண்டாச்சேண்ணே...
அருமையான சான்ஸ் அண்ணே...
சூப்பர் கதைங்கண்ணே.. சொல்லி வசனகர்த்தா வாய்ப்பு வாங்கிக்கொடுங்கண்ணே...

பெரிய தம்பி : ரொம்ப லாஜிக்கான கதைகளா இருக்கேடா.. எப்படி சமாளிப்ப?

சின்ன தம்பி : சமாளிப்பேண்ணே.. இப்ப...முதல் கதை நரகம் இருக்கே...

கோடீஸ்வரன் என்பது பேரு... ஆனா அவரு ஏழை
பணக்காரன் வீட்டில் வாஸ்து பிராப்ளம்..
அதால அவங்க ஏசி வச்ச குடிசையை அக்கினி மூலையில் போட்டு வாழுறாங்க...

அண்ணே எங்க கெளம்பிட்டீங்க....?? அண்ணே..அண்ணே...

முத்து
10-12-2003, 10:32 PM
அட .. லாவண்யா அவர்களே ..
மிகவும் நல்லா இருக்கு ...
எப்படி உங்களால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது ..
நான் தலைப்பைப் பார்த்துவிட்டு
ஏதோ உண்மைய்லேயே சன் டிவி யில் வரப்போற தொடர்க்ளைப் பற்றி
லாவண்யா ஏதோ தகவல் தர்ராங்க அப்படின்னு நினைச்சுட்டேன் ... :D
எதுக்கும் இந்தக் கதைகளைப் பதிவு செய்து வைத்துவிடுங்கள் ..
யாராவது சுட்டுடப் போறாங்க .. :wink:

lavanya
10-12-2003, 11:23 PM
ஆல்ரெடி காப்பிரைட்ஸ் தமிழ் மன்றத்திற்குதான் முத்து அவர்களே...
நீங்க கொஞ்சம் டயலாக் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினா நல்லா இருக்கும்

ஆல்ரெடி இளசு ஆ'ரம்பிச்சிட்டாரு பாருங்க

இளசு
10-12-2003, 11:32 PM
ஆல்ரெடி இளசு ஆ'ரம்பிச்சிட்டாரு பாருங்க

ஆ'ரம்பமா????
அப்ப, எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... :D

அது தம்பிமார் பண்ணியது லாவ்..
பெரிய தம்பி உங்க பிரண்டாமே...
இங்கியும் சிபாரிசு கலாச்சாரமாப் போச்சு போல..
ரொம்ப கெஞ்சுறாங்க..
பெரிய மனசு பண்ணி உதவுங்களேன்..

poo
11-12-2003, 03:44 PM
இனிமேவாது தொடர்களை பார்க்கனும்னு தோணுது...

இளசு
11-12-2003, 10:25 PM
இனிமேவாது தொடர்களை பார்க்கனும்னு தோணுது...

விதி வலியது பூ!

poornima
25-01-2009, 06:27 AM
காலம் கடந்தாலும் தொடர்களின் கருத்து மட்டும் மாறவேயில்லை :-)