PDA

View Full Version : சிலேடைத் தொகுப்பு



பாரதி
05-06-2011, 05:40 PM
ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.

ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.


உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.

மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்.

நன்றி : மைநந்தவனம் வலைப்பூ.

M.Jagadeesan
06-06-2011, 03:36 AM
கற்பனை என்றாலும் ரசிக்கும்படி இருந்தது. பகிர்தலுக்கு நன்றி பாரதி!

கீதம்
06-06-2011, 08:14 AM
சொல்லாடலில் கவியரசரிடம் புவியரசர் போட்டியிட இயலுமா? ரசிக்கவைத்தப் பதிவு. பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

Ravee
06-06-2011, 08:21 AM
நல்ல கற்பனை ... இன்றைக்கு இப்படி ஒரு சூழல் ஏற்ப்பட்டு இருந்தால் கம்பரின் நிலைமை .... " யாரடா , அங்கே ... லகுட பாண்டிகளா ... இந்த புலவரை தலை கீழாக கட்டி இவன் கண்களிலும் மூக்கிலும் மிளகாய் பொடி தூவுங்கள் " .... :lachen001:

ஆதி
06-06-2011, 09:12 AM
வயதில்லா சொற்களுக்கு சொந்தக்காரனிடம் வாய்கொடுத்தால்
வாயிலா சொற்களுடன் நொந்துபோக வேண்டியதுதான்..

சொற்திறமும், சுவையும் அருமை.. பகிர்வுக்கு நன்றி அண்ணா...

அக்னி
06-06-2011, 12:15 PM
சமயோசிதக் கதைகள் பல சிறுவயதில் இதுபோலப் படித்திருக்கின்றேன்.

இன்னும் இதுபோலப் பகிர்ந்துகொள்ளுங்கள் அண்ணா...


சொல்லாடலில் கவியரசரிடம் புவியரசர் போட்டியிட இயலுமா? ரசிக்கவைத்தப் பதிவு. பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.
எது எப்படியோ உங்கள் சொல்லாடலால் தமிழை ஆள்கின்றீர்கள்...

பாரதி
08-06-2011, 05:21 PM
ஜெகதீசன் ஐயா, கீதம், இரவி, ஆதன், அக்னி ஆகியோருக்கு நன்றி.
மன்றத்தில் முன்பும் சில சிலேடைகளை பகிர்ந்ததாக நினைவு. படிக்கும் போது மனதை கவர்ந்தவற்றை கண்டிப்பாய் பகிர்ந்து கொள்கிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
09-06-2011, 01:57 AM
தமிழில் சிலேடைகள் நிரம்ப உண்டு. சுவையான ஒன்றை அறியத் தந்த உங்களுக்கு என் பாராட்டு.

பாரதி
09-06-2011, 08:02 AM
ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், "ஏன் எந்த விடயத்திலும் முன்னுக்கு நிற்காமல் பின்வாங்குகிறீர்கள்?"

அதற்கு ஒரு மாணவன், "நீங்கள் ஊக்குவித்தால் நாங்கள் ஏன் பின்வாங்கப் போகிறோம்?" என்று சொன்னான்.

நன்றி : தமிழ்நாட்டுடாக்.காம்

கீதம்
09-06-2011, 08:59 AM
ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், "ஏன் எந்த விடயத்திலும் முன்னுக்கு நிற்காமல் பின்வாங்குகிறீர்கள்?"

அதற்கு ஒரு மாணவன், "நீங்கள் ஊக்குவித்தால் நாங்கள் ஏன் பின்வாங்கப் போகிறோம்?" என்று சொன்னான்.

நன்றி : தமிழ்நாட்டுடாக்.காம்

பிரமாதம். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ? பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே.

aren
09-06-2011, 09:29 AM
பசங்க நல்லாத் தேறிட்டாங்கப்பா!!!

sarcharan
09-06-2011, 10:56 AM
கோகுலம் பத்திரிக்கையில் முன்னர் இது போன்ற பல கதைகள், கட்டுரைகள், பதினாறு பக்க வண்ண படக்கதை எல்லாம் வரும்.
இப்பொழுது அவ்வளவாய் இல்லை

sarcharan
09-06-2011, 11:01 AM
அதியமான் ஒளவையாருக்கு ஒரு பொன்னாடை பரிசளித்தானாம்.

பொன்னாடையை கண்ட அவ்வையார் அதில் ஒரு கிழிசல் இருந்ததை கண்டு,
மன்னா, "இதில் செடியிருக்கு, கொடியிருக்கு, இலையிருக்கு, காயிருக்கு, கனியிருக்கு, பிஞ்சும் இருக்கு" என்றாராம்

அதியன் அவ்வையின் இந்த சொல்நயத்தை கண்டு அவருக்கு வேறொரு பொன்னாடை அளித்தானாம்

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 01:33 PM
இருபொருள் நயம் பட உருவாக்கிய சொல்லாடல் அருமை...கி.வ.ஜா மற்றும் கவிகாளமேக புலவரின் புகழ்வது போல் இகழும் கவிகள் மற்றும் தன்நிலையினை மற்றவர் நேரடியாக உணர்த்தாது மறைமுகமாக உணர்த்தும் கவிகள் மிகவும் அருமையாகவும் தமிழின் சுவைதனையும் அழகுற உரைக்கும் ...

கிருஷ்ணன்
09-06-2011, 01:41 PM
நல்ல பதிவு .அவையில் வெளிப்படையாக கூறி மனதை புண்படுத்தாமல் குறிப்பால் உணர்த்தும் பண்புகளை உணர்த்தும் சொல்லாடல்கள் அருமை. தொடரட்டும் இது நல்ல போன்ற பதிவுகள்.

ஆதி
09-06-2011, 01:44 PM
கண்ணதாசனின் கதை என்று நினைக்கிறேன்..

ஒரு பெண் பணியுற்று படுத்தப்படுக்கையான தன் தந்தைக்கு துணியை பாலில் நனைத்து ஊட்டுவால்.. அந்த* துணி அழுக்கான*தாய் இருக்கும் ப*டியால், பாலின் சுவை கெட்டிருக்கும்..

அவ*னின் முக* பாவ*னைக*ளை க*வ*னித்த*வ*ளாய்..

என்ன*ப்பா பால் க*ச*குதா என கேட்பாள்..

அத*ற்கவ*ன், பாலும் ச*க*க்க*ல, துணியும் ச*க*க்க*ல*.. என் சொல்லுவான்

innamburan
13-06-2011, 05:51 PM
சிலேடை ஒரு நயமான அணி. குறிப்பால் உணர்த்தும். மென்மையாக உரைக்கும். ஒரு வள்ளல் ஒரு புலவருக்கு பரிசில் அளித்தான், தங்கத்தட்டில் வைத்து.

புலவர்: 'பணத்தட்டு அங்கேயே, இங்கேயா?
வள்ளல்: பனத்தட்டு (பனத்தட்டுப்பாடு) அங்கேயே இருக்கட்டும்!