PDA

View Full Version : TNPSC GROUP II தேர்வுக்கு உதவலாமா...



kulirthazhal
05-06-2011, 02:53 PM
அன்பு நண்பர்களே நமது பொது அறிவு குறிப்பாக TNPSC GROUP II தேர்விற்கான தங்களிடமுள்ள குறிப்புகளை நமது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தளத்திற்கு ரத்த ஓட்டமாக அமையுமென்பது எனது வேண்டுகோள்... தற்போது GROUP I தேர்வில் 133 இடங்களுக்கு 1,33,000 பேர் போட்டியிட்டனர் என்பது தொலைகாட்சி செய்தி.. அடுத்த வாரம் GROUP II தேர்வு என்பது எனது செய்தி....

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 03:28 PM
அவசியம் அனைவருக்கும் உதவும் வகையில் இந்த பதிவின் தோற்றம் ...மன்ற நண்பர்களின் உதவிகள் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் ..என்னால் முயன்ற அளவில் நானும் முயல்கிறேன் ...மேலும் நமக்குள் கேள்விதனை கேட்டு பதிலிட்டு நம்முடைய அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம் ...

பாரதி
05-06-2011, 03:35 PM
கீழ்க்கண்ட தளத்தில் இருந்து சில குறிப்புகள் கிடைக்கும். இத்தளத்தை பல வருடங்களுக்கு முன்னரே பகிர்ந்ததாக நினைவு. இதன் மூலம் பலரும் வெற்றிக்கனியைப் பறித்துள்ளதாக செய்தித்தாள்களில் செய்தியும் வந்திருக்கிறது. முயற்சிக்கும் மன்ற உறவுகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

http://www.saidaiduraisamysmanidhaneyam.com

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 04:09 PM
நண்பர் முரளி ராஜா நமது மன்றத்தில் முன்னர் பதிவிட்டுள்ள இந்த பதிவும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26444) உதவும் ..