PDA

View Full Version : தோற்றவர் வென்றார்

M.Jagadeesan
05-06-2011, 10:53 AM
கண்ணன் அலுவலகத்திற்குப் புறப்படும் வேளையில், மனைவி பத்மா அவனைப் பார்த்து,

" இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க! நாளைக்கி நம்ம ராணிக்குப் பிறந்தநாள்.கடையில அவளுக்கு ட்ரெஸ் எடுத்துகிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடுவோம். 4 மணிக்கெல்லாம் வந்திடுங்க!"

" சரி பத்மா!" என்று சொல்லிவிட்டுக் கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய்விட்டான்.

மாலை 4 மணி. பத்மாவும், 5 வயதுக் குழந்தை ராணியும் கண்ணன் வருகைக்காகக் காத்திருந்தனர். பத்மா, கண்ணனுக்குப் போன் செய்தாள்.

" சரியா 5 மணிக்கு வந்திடறேன் பத்மா! நீயும், ராணியும் ரெடியா இருங்க!"

மணி 5 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. மீண்டும் போன் செய்தாள் பத்மா.

" ஆபீஸ்ல இன்னிக்கின்னு பார்த்து 2 பேர் லீவு போட்டுட்டாங்க. அவங்க வேலையும் சேர்த்து நான் செய்யவேண்டியிருக்கு. அதனாலதான் லேட்டு. சரியா 6 மணிக்கெல்லாம் வந்திடறேன்." என்றான் கண்ணன்.

மணி 6 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. பத்மா அவனுக்கு மீண்டும் போன் செய்யவில்லை. இது அவளுக்குப் பழகிப்போன விஷயம்.

இரவு 9 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்தான். குழந்தை ராணி தூங்கிக்கொண்டு இருந்தாள். கண்ணனைப் பார்த்த ராணி எதுவும் பேசவில்லை.

" பத்மா.." என்று பேசவந்த கண்ணனை இடைமறித்து.

' நீங்கள் எதுவும் பேசவேண்டாம்; 24 மணி நேரமும் உங்க ஆபீஸையே கட்டிட்டு அழுங்க; எதுக்கு என்னக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அப்பா எப்பம்மா வருவார்னு
ராணி கேட்டுகிட்டே இருந்தா; பாவம் குழந்தை! அப்படியே தூங்கிப் போயிட்டா!' என்று சொல்லி கண்களைக் கசக்கிக் கொண்டே பத்மா உள்ளே சென்றுவிட்டாள்.

கடந்த ஒரு வாரமாக பத்மா கண்ணனிடம் எதுவும் பேசவில்லை. குழந்தை ராணி மூலமாக ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். கண்ணன் அலுவலகம் செல்லும்போது தன் அம்மாவின் போட்டாவைப் பார்த்து, "அம்மா! நான் ஆபீஸூக்குக் கிளம்பறேன்" என்று பத்மாவுக்குக் கேட்பதுபோலச் சொல்லுவான்.இந்த ஊமை நாடகம் எப்போது முடியும் என்று ராணி காத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை 9 மணி இருக்கும். பத்மாவின் செல்போன் அலறியது. பத்மா எடுத்தாள்.

' பத்மா! நாந்தான் அப்பா பேசறேன். உன் தங்கை கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக நானும், உன் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வர்றோம்." என்று பக்கத்து ஊரிலிருந்து பத்மாவின் அப்பா போன் செய்தார்.

உடனே பத்மா கண்ணனைப் பார்த்து," என்னங்க! அப்பாவும் அம்மாவும் கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வராங்க; நீங்க கடைக்குப் போய் வாழை இலை வாங்கிட்டு வாங்க." என்று சொன்னாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராணி கை கொட்டி சிரித்தபடியே,'ஐய! அம்மா தோத்துட்டாங்க; அப்பாதான் ஜெயிச்சாரு!" என்று சொன்னாள்.

" என்னடி சொல்றே?"அதட்டலாய் கேட்டாள் பத்மா.

" நீதானே அப்பாகிட்ட மொதல்ல பேசினே? அதனால் நீ தோத்துப் போயிட்டே! அப்பா ஜெயிச்சுட்டாரு"

" யாரு ஜெயிச்சாங்க; யாரு தோத்தாங்கன்னு உங்க அப்பாகிட்டகேளு!" என்று சொல்லிவிட்டுக் கண்ணனைப் பார்த்து சிரித்தபடியே பத்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும்.

கருத்து: கணவன், மனைவி இருவருள் ஊடலின் கண் யார் தோற்றாரோ அவரே வென்றவராவார்.அது அப்பொழுது அறியப்படாதது ஆயினும், பின்னர் புணர்ச்சியின் கண் அவரால் அறியப்படும்.

கீதம்
05-06-2011, 12:00 PM
விட்டுக் கொடுத்து, வாழ்க்கையைச் சுவையாக்கும் பாங்கை, அழகிய குறளுக்கேற்ப கதையாக்கிய விதம் அருமை. முன்பே திருக்குறள் கதைகளில் படித்திருந்தாலும் மீண்டும் படிக்கச் சுவைக்கிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 02:00 PM
கணவன் மனைவி ஊடல் பின்னர் நிகழும் கூடல் என குறள் கூறும் கதை அருமை....

M.Jagadeesan
06-06-2011, 03:34 AM
கீதம், ஜெய் ஆகியோருக்கு நன்றி!!

கிருஷ்ணன்
07-06-2011, 02:13 PM
கண்ணன் அலுவலகத்திற்குப் புறப்படும் வேளையில், மனைவி பத்மா அவனைப் பார்த்து,

" இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க! நாளைக்கி நம்ம ராணிக்குப் பிறந்தநாள்.கடையில அவளுக்கு ட்ரெஸ் எடுத்துகிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடுவோம். 4 மணிக்கெல்லாம் வந்திடுங்க!"

" சரி பத்மா!" என்று சொல்லிவிட்டுக் கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய்விட்டான்.

மாலை 4 மணி. பத்மாவும், 5 வயதுக் குழந்தை ராணியும் கண்ணன் வருகைக்காகக் காத்திருந்தனர். பத்மா, கண்ணனுக்குப் போன் செய்தாள்.

" சரியா 5 மணிக்கு வந்திடறேன் பத்மா! நீயும், ராணியும் ரெடியா இருங்க!"

மணி 5 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. மீண்டும் போன் செய்தாள் பத்மா.

" ஆபீஸ்ல இன்னிக்கின்னு பார்த்து 2 பேர் லீவு போட்டுட்டாங்க. அவங்க வேலையும் சேர்த்து நான் செய்யவேண்டியிருக்கு. அதனாலதான் லேட்டு. சரியா 6 மணிக்கெல்லாம் வந்திடறேன்." என்றான் கண்ணன்.

மணி 6 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. பத்மா அவனுக்கு மீண்டும் போன் செய்யவில்லை. இது அவளுக்குப் பழகிப்போன விஷயம்.

இரவு 9 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்தான். குழந்தை ராணி தூங்கிக்கொண்டு இருந்தாள். கண்ணனைப் பார்த்த ராணி எதுவும் பேசவில்லை.

" பத்மா.." என்று பேசவந்த கண்ணனை இடைமறித்து.

' நீங்கள் எதுவும் பேசவேண்டாம்; 24 மணி நேரமும் உங்க ஆபீஸையே கட்டிட்டு அழுங்க; எதுக்கு என்னக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அப்பா எப்பம்மா வருவார்னு
ராணி கேட்டுகிட்டே இருந்தா; பாவம் குழந்தை! அப்படியே தூங்கிப் போயிட்டா!' என்று சொல்லி கண்களைக் கசக்கிக் கொண்டே பத்மா உள்ளே சென்றுவிட்டாள்.

கடந்த ஒரு வாரமாக பத்மா கண்ணனிடம் எதுவும் பேசவில்லை. குழந்தை ராணி மூலமாக ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். கண்ணன் அலுவலகம் செல்லும்போது தன் அம்மாவின் போட்டாவைப் பார்த்து, "அம்மா! நான் ஆபீஸூக்குக் கிளம்பறேன்" என்று பத்மாவுக்குக் கேட்பதுபோலச் சொல்லுவான்.இந்த ஊமை நாடகம் எப்போது முடியும் என்று ராணி காத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை 9 மணி இருக்கும். பத்மாவின் செல்போன் அலறியது. பத்மா எடுத்தாள்.

' பத்மா! நாந்தான் அப்பா பேசறேன். உன் தங்கை கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக நானும், உன் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வர்றோம்." என்று பக்கத்து ஊரிலிருந்து பத்மாவின் அப்பா போன் செய்தார்.

உடனே பத்மா கண்ணனைப் பார்த்து," என்னங்க! அப்பாவும் அம்மாவும் கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வராங்க; நீங்க கடைக்குப் போய் வாழை இலை வாங்கிட்டு வாங்க." என்று சொன்னாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராணி கை கொட்டி சிரித்தபடியே,'ஐய! அம்மா தோத்துட்டாங்க; அப்பாதான் ஜெயிச்சாரு!" என்று சொன்னாள்.

" என்னடி சொல்றே?"அதட்டலாய் கேட்டாள் பத்மா.

" நீதானே அப்பாகிட்ட மொதல்ல பேசினே? அதனால் நீ தோத்துப் போயிட்டே! அப்பா ஜெயிச்சுட்டாரு"

" யாரு ஜெயிச்சாங்க; யாரு தோத்தாங்கன்னு உங்க அப்பாகிட்டகேளு!" என்று சொல்லிவிட்டுக் கண்ணனைப் பார்த்து சிரித்தபடியே பத்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும்.

கருத்து: கணவன், மனைவி இருவருள் ஊடலின் கண் யார் தோற்றாரோ அவரே வென்றவராவார்.அது அப்பொழுது அறியப்படாதது ஆயினும், பின்னர் புணர்ச்சியின் கண் அவரால் அறியப்படும்.
ஒவ்வொரு வீட்டிலும் நிகழும் இயல்பான நிகழ்வே ஆயினும் அதை சுவைபட திருக்குறளோடு கூறியிருப்பது மிகவும் அருமை .

சிவா.ஜி
07-06-2011, 02:16 PM
நல்ல தாம்பத்யத்தை அழகான கதைமூலமும், அதற்கேற்றக் குறள் மூலமும் சொன்ன ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
07-06-2011, 03:05 PM
கி.சு.ரா மற்றும் சிவா. ஜி ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

அக்னி
07-06-2011, 03:40 PM
பெற்றோரின் ஊடல் குழந்தைகளிடம் தவிப்பான ஏக்கத்தை ஏற்படுத்தும்.
தமது ஊடலின்போது தகவற்பரிமாற்றம் செய்யப் பிள்ளைகளைப் பயன்படுத்துவதைப் பெற்றோர் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

வீட்டின் விசேட தினங்களில், எப்படியாவது நேரத்தை ஒதுக்கி குடும்பத்தினருடன் சந்தோஷமாய் இருந்திட வேண்டும்.

எதிர்ப்பார்ப்புக்கள் ஏமாற்றங்களைத் தந்துவிடக்கூடாது.

ஊடலின் முடிவில் வெற்றியும் தோல்வியும் இருவருக்குமே.

இவ்வாறான குடும்ப நுண்ணுணர்வுகளை, அனுபவங்கள் பதிவு செய்வது, அனுபவிக்கப்போகின்றவர்களுக்கு அறிவுறுத்தல்களாக அமையும்...

M.Jagadeesan
07-06-2011, 03:59 PM
நன்றி அக்னி!

Nivas.T
08-06-2011, 07:41 AM
அழகானக் கதை
விடுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை

ஊடலும் கூடலும் கலந்ததுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை

மிக்க நன்றி ஐயா

Narathar
08-06-2011, 07:45 AM
அருமை! அருமை!! அருமை!!!