PDA

View Full Version : என் இனிய கதீஜா.

M.Jagadeesan
03-06-2011, 05:25 AM
அன்று ரவியின் பிறந்த நாள். உணவு பறிமாறுவதற்காகப் புதிய எவர்சில்வர் தட்டை அன்னை கொண்டுவந்து வைத்தாள். அவன் பிறந்த நாளுக்காக அன்னை எடுத்தது. அந்தத் தட்டையே ரவி உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். பளபளக்கும் அந்தத் தட்டில் அவன் காதலி கதீஜாவின் முகம் தோன்றி அவனைப் பார்த்து சிரித்தது. வசீகரமான புன்னகையும், அந்த மயக்கும் கண்களும் அவனை எங்கோ இழுத்துச் சென்றன.

" என்னப்பா ரவி! தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உன் பிறந்த நாளுக்காக நான் எடுத்தது. சோறு போடட்டுமா?" ஆவி பறக்கும் சோறு கரண்டியில் இருந்தது.

'வேண்டாம் அம்மா! சூடு ஆறட்டும்"

" உன் பிறந்த நாளுக்காக ரவாகேசரி கொஞ்சம் செய்தேன்" என்று சொல்லி தட்டில் ரவாகேசரியை அன்னை வைத்தாள். மீண்டும் தட்டிலே கதீஜா தோன்றி அவனைப் பார்த்து சிரித்தாள். சிரிக்கும் கதீஜாவின் வாயிலே ரவாகேசரியை ரவி வைத்தான்.

" என்னப்பா ரவி! ஸ்வீட்டை நடுத்தட்டிலே வைத்திருக்கிறாயே! கொஞ்சம் ஓரமாக வை. சாப்பாடு போடுகிறேன்." ரவி ஸ்வீட்டைத் தள்ளி தட்டின் ஓரமாக வைத்தான்.
அன்னை சோற்றைத் தட்டிலே போட்டாள்.

" ரவி! உனக்குப் பிடிக்குமே என்று காரசாரமாக வத்தக்குழம்பு செய்துள்ளேன்" என்று சொல்லி வத்தக்குழம்பை ஊற்ற முனைந்தாள் அன்னை.

" ஐயையோ! வேண்டாம். வத்தக்குழம்பு வேண்டாம். வயிறு சரியில்லை" என்று மறுத்துவிட்டான் ரவி.

" அப்படியானால் ரசம் ஊற்றிக் கொள். சீரக ரசம். வயிற்றுக்கு நல்லது"

" வேண்டாம் அம்மா! மோர் மட்டும் போதும்' என்று சொன்னான் ரவி.

" என்ன ஆயிற்று இவனுக்கு? எப்பொழுதும் காரசாரமாக சாப்பிடும் இவன் இன்றைக்கு மோர் மட்டும் போதும் என்கிறானே!" என்று அதிசயித்தாள் அன்னை.

ஸ்வீட்டும், மோர் சாதமும் சாப்பிட்டுவிட்டு ரவி எழுந்துகொண்டான்.

"தட்டிலே தோன்றிய கதீஜாவின் அகன்ற அழகிய கண்களில் வத்தக்குழம்பும், ரசமும் பட்டால் அவள் என்ன வேதனைப்படுவாள் என்பது எனக்குமட்டும்தான் தெரியும்! அம்மாவுக்குத் தெரியுமா?" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ரவி.

Ravee
03-06-2011, 05:52 AM

இதில இருந்து தெரிஞ்சிகோங்க ரவிக்கு எத்தனை நல்ல மனசுன்னு ....:lachen001: :D :lachen001:

கீதம்
03-06-2011, 06:47 AM
ஆசையுடன் அம்மா பரிசளித்தத் தட்டில் அன்புக் காதலியின் உருவமா? போதாதென்று அம்மா சமைத்ததையும் ஒதுக்கி.... காதல் எப்படியெல்லாம் பித்தாக்குகிறது ஒருவனை?

தட்டில் கண்ட உருவத்துக்கே இத்தனை மதிப்பளிப்பவன், அவளைக் கட்டிக்கொண்டால் எத்தனைக் கரிசனத்துடன் பார்த்துக்கொள்வான்! கொடுத்துவைத்தவள்தான் கதீஜா.

நல்ல கற்பனை. பாராட்டுகள் ஐயா.

கீதம்
03-06-2011, 06:50 AM
இதில இருந்து தெரிஞ்சிகோங்க ரவிக்கு எத்தனை நல்ல மனசுன்னு ....:lachen001: :D :lachen001:

ரொம்ப நல்ல மனசுதான். அம்மா வாங்கிய தட்டில் அவள் முகத்தைப் பார்க்காமல் காதலியின் முகம் என்ன வேண்டிக்கிடக்கு? அதுக்கு நீங்க வேற தட்டை வாங்கிவைத்துப் பாக்கணும். இல்லையென்றால் காலம் முழுக்கத் தயிர் சோறுதான் சாப்பிடவேண்டியிருக்கும். :)

Nivas.T
03-06-2011, 08:05 AM
என்ன ஒரு காதல், காதலென்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்:D:D:D

அருமை அருமை மிக அருமை :D

Ravee
03-06-2011, 08:17 AM
ரொம்ப நல்ல மனசுதான். அம்மா வாங்கிய தட்டில் அவள் முகத்தைப் பார்க்காமல் காதலியின் முகம் என்ன வேண்டிக்கிடக்கு? அதுக்கு நீங்க வேற தட்டை வாங்கிவைத்துப் பாக்கணும். இல்லையென்றால் காலம் முழுக்கத் தயிர் சோறுதான் சாப்பிடவேண்டியிருக்கும். :)

அம்மா வாங்கி தந்த தட்டுக்குள் அடங்கிய காதலி அம்மாவுக்கு அடங்கி இருக்க மாட்டாளா என்ன .... ம்ம்ம் இதில் இருந்தே உங்களுக்கு ஓய்வு பெரும் வயது ஆகிவிட்டது என்று தெரிகிறது அக்கா ...... :lachen001:

கீதம்
03-06-2011, 08:37 AM
அம்மா வாங்கி தந்த தட்டுக்குள் அடங்கிய காதலி அம்மாவுக்கு அடங்கி இருக்க மாட்டாளா என்ன .... ம்ம்ம் இதில் இருந்தே உங்களுக்கு ஓய்வு பெரும் வயது ஆகிவிட்டது என்று தெரிகிறது அக்கா ...... :lachen001:

மருமகள் பதவியிலிருந்து மாமியாரா இன்னும் ப்ரமோஷனே கிடைக்கல, அதுக்குள்ளே ரிட்டயர்மெண்டா? :icon_p:

தாமரை
03-06-2011, 11:22 AM
இதில இருந்து தெரிஞ்சிகோங்க ரவிக்கு எத்தனை நல்ல மனசுன்னு ....:lachen001: :D :lachen001:

கதீஜா வா? சரி சரி.. ஞாயிற்றுக் கிழமை ஃபோன் செய்யறேன். அப்புறம் உங்க கதி - ஜா ஜா தான்

ரொம்ப நல்ல மனசுதான். அம்மா வாங்கிய தட்டில் அவள் முகத்தைப் பார்க்காமல் காதலியின் முகம் என்ன வேண்டிக்கிடக்கு? அதுக்கு நீங்க வேற தட்டை வாங்கிவைத்துப் பாக்கணும். இல்லையென்றால் காலம் முழுக்கத் தயிர் சோறுதான் சாப்பிடவேண்டியிருக்கும். :)

காலம் முழுக்கச் சோறு கிடைக்கும்னு எப்படி உத்திரவாதமாச் சொல்றீங்க? அதுவும் தயிர் சோறு? அம்மாவுக்குப் பின்னாடி பழைய சோறுதான் தெரியுமில்ல?

அம்மா வாங்கி தந்த தட்டுக்குள் அடங்கிய காதலி அம்மாவுக்கு அடங்கி இருக்க மாட்டாளா என்ன .... ம்ம்ம் இதில் இருந்தே உங்களுக்கு ஓய்வு பெரும் வயது ஆகிவிட்டது என்று தெரிகிறது அக்கா ...... :lachen001:

ஆமாங்க ஆமாங்க.. கல்யாண ஃபோட்டோவை சட்டத்தில் மாட்டி அடக்கியதால மனைவிகள் எல்லாம் அடங்கி போயிட்டாங்க பாருங்க... நீங்க எல்லாம் எப்படித்தான் சம்சார சாகரத்தில் நீந்தறீங்களோ தெரியலை

மருமகள் பதவியிலிருந்து மாமியாரா இன்னும் ப்ரமோஷனே கிடைக்கல, அதுக்குள்ளே ரிட்டயர்மெண்டா? :icon_p:

அது பிரமோஷன் இல்லை.. புற மோஷன் ஹி ஹி ஹி:icon_ush::icon_ush::icon_ush:

தாமரை
03-06-2011, 11:25 AM
ஆமாங்க.. ஜெகதீசன்.. இப்படித்தான்

பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி

என்று பாடினான் பாரதி...

அதேதான்..

சிவா.ஜி
03-06-2011, 12:47 PM
இந்த மாதிரிக் குருட்டுக்காதல் எனக்குப் பிடிப்பதில்லை. இது வெறும் இன்ஃபாக்ஷுவேஷன். அதனாலேயே...இந்தக் கதை எனக்கு அவ்வளவாய் பிடிக்கவில்லை. மன்னிச்சுக்குங்க ஜெகதீசன்.

மீண்டும் ஜெகதீசனைப் பார்க்க வேண்டும்.

Ravee
04-06-2011, 05:58 AM
இந்த மாதிரிக் குருட்டுக்காதல் எனக்குப் பிடிப்பதில்லை. இது வெறும் இன்ஃபாக்ஷுவேஷன். அதனாலேயே...இந்தக் கதை எனக்கு அவ்வளவாய் பிடிக்கவில்லை. மன்னிச்சுக்குங்க ஜெகதீசன்.

மீண்டும் ஜெகதீசனைப் பார்க்க வேண்டும்.

அட அய்யா என் பெயரை வச்சு சும்மா குண்டு விளையாடி பார்த்திருக்கார் அண்ணா ... நீங்க சீரியஸ் ஆகாதீங்க .... :lachen001:

Ravee
04-06-2011, 06:11 AM
கதீஜா வா? சரி சரி.. ஞாயிற்றுக் கிழமை ஃபோன் செய்யறேன். அப்புறம் உங்க கதி - ஜா ஜா தான்

நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது ...... :thumbsup:

காலம் முழுக்கச் சோறு கிடைக்கும்னு எப்படி உத்திரவாதமாச் சொல்றீங்க? அதுவும் தயிர் சோறு? அம்மாவுக்குப் பின்னாடி பழைய சோறுதான் தெரியுமில்ல?

ஹீ ஹீ அங்கயும் அப்படித்தானா .... மதுரை வெயிலுக்கு பழைய சோறு அமிர்தம் ......:aetsch013: பெங்களூர் குளிருக்கு பழைய சோறு பாவம் அண்ணா நீங்க ...... :eek:

ஆமாங்க ஆமாங்க.. கல்யாண ஃபோட்டோவை சட்டத்தில் மாட்டி அடக்கியதால மனைவிகள் எல்லாம் அடங்கி போயிட்டாங்க பாருங்க... நீங்க எல்லாம் எப்படித்தான் சம்சார சாகரத்தில் நீந்தறீங்களோ தெரியலை

வட்டமான வட்டிலில் விழும் சாப்பாட்டில் மதி மயங்கி சதுரமான சட்ட சிக்கலில் மாட்டிய விதி ....ம்ம்ம் வாழ்க்கையே வட்டத்துக்குள் சதுரம் அண்ணா ....:lachen001:

தாமரை
05-06-2011, 09:22 AM
வட்டமான வட்டிலில் விழும் சாப்பாட்டில் மதி மயங்கி சதுரமான சட்ட சிக்கலில் மாட்டிய விதி ....ம்ம்ம் வாழ்க்கையே வட்டத்துக்குள் சதுரம் அண்ணா ....:lachen001:

அப்புறமா வாட்டத்தில் சாது ரம் ரவி!!!

ஹீ ஹீ அங்கயும் அப்படித்தானா .... மதுரை வெயிலுக்கு பழைய சோறு அமிர்தம் ...... பெங்களூர் குளிருக்கு பழைய சோறு பாவம் அண்ணா நீங்க ......

உங்களுக்கும் உதவும் என்றுதான் இது...

ஆரோக்கிய உணவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6551)

நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது ......

அடிச்சதில அவ்வளவு தூரமா போய் விழுந்தீங்க... அடப்பாவமே!!!

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 02:47 PM
கதை அருமை ...

கதையின் நீதி :கண்ணில் காணும் நிலவை காட்டிலும் கனவில் தோன்றும் நிழல் உருவம் சிலநிமிடங்கள் தான் ..

Ravee
06-06-2011, 05:09 AM
அப்புறமா வாட்டத்தில் சாது ரம் ரவி!!!

உங்களுக்கும் உதவும் என்றுதான் இது...

ஆரோக்கிய உணவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6551)

அடிச்சதில அவ்வளவு தூரமா போய் விழுந்தீங்க... அடப்பாவமே!!!

அலும்புக்கு வயதில்லை .... லொள்ளுக்கு குறைவில்லை என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறீர்கள்

aren
10-06-2011, 03:09 AM
இதில இருந்து தெரிஞ்சிகோங்க ரவிக்கு எத்தனை நல்ல மனசுன்னு ....:lachen001: :D :lachen001:

நண்பரே

இதெல்லாம் கதையில்தான் நடக்கும். நிஜவாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ஊருகாயையும் சேர்த்து வைங்கன்னு சொல்லியிருப்பார் கதையின் நாயகன்.

aren
10-06-2011, 03:10 AM
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இதைத்தான் போலும்.

நல்ல கதை. இன்னும் நிறைய இங்கே எழுதுங்கள்.

Ravee
10-06-2011, 05:34 AM
நண்பரே

இதெல்லாம் கதையில்தான் நடக்கும். நிஜவாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ஊருகாயையும் சேர்த்து வைங்கன்னு சொல்லியிருப்பார் கதையின் நாயகன்.

அந்த மிளகாய் பொடி அதை மறந்துடீங்களே அண்ணா .... :lachen001:

aren
10-06-2011, 11:29 AM
அந்த மிளகாய் பொடி அதை மறந்துடீங்களே அண்ணா .... :lachen001:

மிளகாய்ப்பொடியையும் சேர்த்து வைங்கன்னு நீங்கதான் சொல்றீங்க, நான் சொல்லவில்லை!!!

ஆதவா நோட் திஸ் பாயிண்ட். என்னிக்காவது ஆப்பு வைக்க உதவும்.

Ravee
10-06-2011, 11:55 AM
மிளகாய்ப்பொடியையும் சேர்த்து வைங்கன்னு நீங்கதான் சொல்றீங்க, நான் சொல்லவில்லை!!!

ஆதவா நோட் திஸ் பாயிண்ட். என்னிக்காவது ஆப்பு வைக்க உதவும்.

ஆஹா .... இதை சபை குறிப்பில் இருந்து நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... :icon_ush:

தாமரை
10-06-2011, 01:28 PM
ஆஹா .... இதை சபை குறிப்பில் இருந்து நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... :icon_ush:

இப்ப தெரியுது உங்க இரண்டு கண்ணமும் (அவதாரில்) ஏன் சிவந்திருக்குன்னு...!!!:lachen001::lachen001::lachen001:

Ravee
11-06-2011, 04:36 AM
இப்ப தெரியுது உங்க இரண்டு கண்ணமும் (அவதாரில்) ஏன் சிவந்திருக்குன்னு...!!!:lachen001::lachen001::lachen001:

சும்மா சும்மா தம்பியை பார்த்து பொறாமை படக்கூடாது... :icon_ush:

M.Jagadeesan
11-06-2011, 06:11 AM
கதீஜாவின் கதி இப்படி ஆகுமென்று நான் நினைக்கவில்லை!