PDA

View Full Version : நீதான் சொல்லவேண்டும்...



kulirthazhal
03-06-2011, 04:37 AM
என்
வாழ்வின் தடங்கள்
வரைபடமாய் கிடைக்கிறது.,,
அதில்
எந்த வளைவுகளுக்கும்
நான் பொறுப்பாளியல்ல.,,
இன்னும் சில கோடுகள்
என்மேல் திணிக்கப்பட்டவை..,
மற்றும் சிலவற்றுள்
எனக்கு
ஏற்றுக்கொள்ள எதுவுமில்லை..,

சில கோடுகள்
நான் பாடாத ராகங்கள்..,
சில கோடுகள்
நான் ரசிக்காத சங்கீதம்..,
என்னதாய்
ஏனோ
ஏக்கங்கள்..,
கோபங்கள்..,

எனது வெற்றி
பிறரால்
வரையப்பட்டது..,
எனது அமைதி
என்னால்
பிழைக்கப்பட்டது..,

இன்னமும்
என்னென்னவோ
கோடுகள்..,
புள்ளிகள்..,
வளைவுகள்..,
திருப்பங்கள்..,
கிறுக்கல்கள்..,
மை கசடுகள்..,
மயக்கப்பதிவுகளும்
வெறுமையாய் வீற்றிருக்க
ஒரு
முகம்
தெரிவதாய் வதந்திகள்..,

அது
அழகாய் இருப்பதாக
அம்மா சொன்னாள்..,
அறிவாய் இருப்பதாக
அப்பா சொன்னார்..,
இணக்கமாக இருப்பதாக
நண்பன் சொன்னான்..,
இன்பமாய் இருப்பதாக
எவளோ சொன்னாள்..,

இரண்டாவது காதிலும்
வதந்திகள்..
திமிர் தோய்ந்து கிடப்பதாக
எதிரி சொன்னான்..,
பொய்மை பூத்துக்கிடப்பதாக
தோற்றவன் பொய்த்தான்..,
இயல்பாய் இருப்பதாக
துரோகி சொன்னான்..,
உருப்படாது என்றான்
குடியான்
மகனை மறைத்துக்கொண்டு..,

அது
என் முகமா
தெரியவில்லை...
என்னிடம்
கண்ணாடியுமில்லை...

துணிச்சலாய்
கேட்கிறேன்
நீயே சொல்லேன்....

-குளிர்தழல்...

ஜானகி
03-06-2011, 05:37 AM
வித்தியாசமான சிந்தனை.... சுய விமரிசனம் கடினமானதுதான்...!

Ravee
03-06-2011, 06:07 AM
எனக்குள் பலமுறை ஏற்ப்படும் குழப்பமான சிந்தனை இதுதான் ... பலமுறை சி.டி தட்டின் பின் புறம் தெரியும் பிம்பத்தை உற்றுப்பார்ப்பேன்... அதில் தெரியும் கீறல்கள் மனதை கொஞ்சம் கஷ்டப்படுத்தும் .... மிகவும் மோசமான நிலையில் இருந்தால் முகமே தெரியாமல் போகச் செய்யும் கோடுகள் அவைகள். அருமையான உணர்வுகளை உயிரோட்டமாக வெளிகொணர்ந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே ... :)

கீதம்
03-06-2011, 06:59 AM
வரைபடம் சொல்கிறதே வாழ்க்கைப்பாடம்!எனவே வதந்திகளை என்றுமே நம்பாதீர்!

யாரிடம் கேட்கப்படுகிறது இறுதிக்கேள்வி என்பதைப் பொறுத்து சுயவிமர்சனம் பற்றிய பார்வையும் மாறலாம்.

கவிதை அருமை. பாராட்டுகள் குளிர்தழல்.

Nivas.T
03-06-2011, 08:02 AM
பிறரைப் பொறுத்து
நம்மை வரைய
நமக்கு தேவை
ஒன்றுமில்லை

எதுவுமிங்கு சரியில்லை
எதுவுமிங்கு தவறில்லை
பிழைகளின்றி வாழ்க்கையா?
தடைகளின்றி கல்வியா?

எப்போதும் ஒருமகமாய் இருந்தால்
உருகிவிடாத வாழ்க்கையின்
வசந்தம்?
உன்னுள் இருக்கும் மகிழ்ச்சியை
ஊராரிடம் காண முயல்வது ஏனோ?


நல்லக் கண்ணோட்டம், வித்தியாசமான சிந்தனை, ஆழமான கருத்துகள்

பாராட்டுகள் குளிர்தழல்

kulirthazhal
10-06-2011, 01:54 AM
கவிதையை ரசித்து விமர்சித்த ஜானகி, ரவி, கீதம், நிவாஸ் அனைவருக்கும் நன்றி....

aren
10-06-2011, 02:26 AM
உங்களை நம்புங்கள் வெற்றி தானாகவே வந்தடையும்.

கவிதை அழகாக வந்துள்ளது, இங்கே அடிக்கடி எழுதுங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 04:53 AM
கவிதையின் வரிகள் அருமை ..ஆனால் கவிதை எதனை கூறவருகிறது என்பதனை தான் புரிந்து கொள்ளமுடியவில்லை...தொடருங்கள் உங்கள் கவிதையினை ..

kulirthazhal
10-06-2011, 04:34 PM
வரைபடம் சொல்கிறதே வாழ்க்கைப்பாடம்!எனவே வதந்திகளை என்றுமே நம்பாதீர்!

யாரிடம் கேட்கப்படுகிறது இறுதிக்கேள்வி என்பதைப் பொறுத்து சுயவிமர்சனம் பற்றிய பார்வையும் மாறலாம்.

கவிதை அருமை. பாராட்டுகள் குளிர்தழல்.

அன்பு நாஞ்சில்.,, இது நமது நிகழ்வுகள்தான் .. எதிரிகளுக்கு நாம் எதிரியாய் தெரிவோம்.. நண்பர்களுக்கு நாம் நண்பனாய் தெரிவோம்.. மற்றும் பலருக்கு எப்படி தெரிவோம் என்பதே நமது கவிதை.... கீதம் அவர்களின் விளக்கம் எனது தெளிவுகோலாக இருக்குமென்று நம்புகிறேன்.. மீண்டும் சுழல்வோம் கருத்தொத்த உணர்வு சுழலின் புயலினூடே....

சிவா.ஜி
10-06-2011, 05:13 PM
நிஜ வரிகள் நிதர்சனமானவை. வாழ்த்துக்கள் குளிர்தழல்.

lenram80
13-06-2011, 01:32 PM
புத்தர் ஒருமுறை சொன்னாராம். "நான் ஒரு சுத்தமான கண்ணாடி" என்று. அதாவது அடுத்தவர்களது உணர்வுகளுக்கு ஏற்ப நாம் உணர்ச்சி செய்கிறோம். நாம் நாமாக எப்போது தான் இருப்போம்?

பாராட்டுகள் குளிர்தழல்