PDA

View Full Version : அவன் - 5

Nivas.T
01-06-2011, 04:43 PM
அவன் - 1

அன்று ஆய்தபூசை, பெரம்பூரிலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தின் கடைசி இருக்கையின் சன்னலோரம் அவன். மரங்களும் கட்டிடங்களும் கண்முன்னால் கடந்து செல்ல மனக்கண்முன் நினைவலைகள் ஒவ்வொன்றாய் தோன்றி மறைந்தது.

இரண்டு வருடங்களாக வேலை கிடைக்கவில்லை, தேடி தேடியும் அவன் அலுக்கவில்லை. என்றாவது விடியல் வரும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு விடியலும் அவனுக்கு பொய்யாய்த்தான் போனது. அவனுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை காலம் அவனுக்கு கற்றுக்கொடுக்கவே அந்த தாமதமென்று.

"அண்ணாநகர் ரௌண்டான" என்ற நடத்துனரின் குரலிலும் விசில் சத்தத்திலும் நினைவுகளிலிருந்து விடுபட்டவன் மெல்ல எழுந்து படிகளில் இறங்கினான். நேர்முகத்தேர்வு இல்லாத இதுபோன்ற நாட்களில் அவன் நண்பர்களை சந்திப்பது அவனுக்கு மிக ஆறுதலான விசயம். இன்றும் கூட அப்படி ஒரு நண்பனை சந்திக்கத்தான் அவன் அங்கு சென்றுகொண்டிருந்தான்.

காலை 8:00 மணி, அந்தநேரம் அண்ணாநகர் ரவுண்டானாவை அப்படி பார்ப்பது மிக மிக அரிது. முழுதும் அமைதியாக, வாகனங்களின் இரைச்சல் இல்லாமலும், அதிக நடமாட்டமில்லாமலும் இருந்த ஒரு அழகான காலைப்பொழுது அது.

அந்த அமைதியை ரசித்தவாறே அங்கு கடக்கும் ஒன்றிரண்டு வாகனங்களுக்காகவும் எரிந்துகொண்டிருந்த சிக்னல் விளக்குகாகவும் காத்திருந்த நான்குபேருடன் அவனும் கலந்து நின்று கொண்டான்.

சிவப்பு விளக்கு எறிந்தவுடன் அனைவரும் சாலை கடக்க, அவனும் நடந்தான் தன் நினைவுகளிலிருந்து இன்னும் விடுபாடமலே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு ரணமாய் கழிந்த நாட்கள் அவை. கையில் அறுபது ரூபாய்த்தான் இருக்கு நாளை அப்பாவிடம் பணம் போட சொல்ல வேண்டும்,

"என்ன பொழப்புடா இது? ஏழு கழுத வயசாகுது இன்னும் அப்பாகிட்ட பணம் வேண்டி இருக்கே" என்று தன்னைத்தானே நொந்துகொண்டாலும் வேறு வழியில்லை என்று தானே சமாதனம் செய்துகொண்டபோழுது சாலையின் எதிர்புறம் நடைபாதையை நெருங்கவிருந்தான்.

"டமால்........." என்று திடீரென எழுந்த சப்தம் கேட்டு அவன் திரும்ப அதே கணம் ஒரு உருவம் காற்றில் அவனை கடந்து செல்ல என்ன வென்று புரியாமல் அதிர்ச்சியடைந்தான்.

கணப்பொழுதில் நடந்துவிட்ட அந்த விபத்து அவனை திக்குமுக்காடச் செய்தாலும் சட்டென சுய உணர்வுக்கு வந்தவன் பின்புறம் திரும்பிப் பார்க்க, நம்பரை படிக்கமுடியாத தொலைவை அடைந்துவிட்டான் அந்த ஆட்டோக்காரன்.

ஆழ்ந்த அமைதி நிலவியது, அனைவரும் அசையாமல் அந்த திசையை நோக்கியபடி நிற்க அவன் மெல்ல திரும்பி அந்த திசையில் பார்த்தான்.

அவர் ஒரு முதியவர் வயது 60 முதல் 65 வயதுவரை மதிக்கத்தக்கவர். ஒரு பழைய வெள்ளையில் நீல கட்டம் போட்ட சட்டை, வெளுத்துப்போன வெள்ளை வேட்டி, 40 கிலோவுக்கு மேல் இருக்காது என்று அடித்துகூறும் அளவுக்கு ஒரு ஒல்லியான தேகம், அந்த நடைபாதைக்கும் சாலைக்கும் குருக்குமாக விழுந்துகிடக்க செய்வதறியாது உறைந்து நின்றான்.

தொடரும்....

aren
01-06-2011, 04:50 PM
நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று தெரியவில்லை. பெரியவருக்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது என்றே மனது நினைக்கிறது. தொடருங்கள்.

M.Jagadeesan
01-06-2011, 04:55 PM
தொடக்கமே பரபரப்பாக உள்ளது! தொடருங்கள் நிவாஸ்!

கீதம்
02-06-2011, 07:04 AM
ஆரம்பமே பல எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. காலம் அவனுக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தை அறியும் ஆவலில் காத்திருக்கிறேன். தொடருங்கள் நிவாஸ்.

Ravee
02-06-2011, 07:58 AM
அஹா எல்லோரும் தொடர்கதை ஆரம்பித்துவிட்டீர்களா ? வாழ்த்துக்கள் நிவாஸ் :)

Nivas.T
02-06-2011, 09:45 AM
நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று தெரியவில்லை. பெரியவருக்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது என்றே மனது நினைக்கிறது. தொடருங்கள்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆரென்

Nivas.T
02-06-2011, 09:47 AM
தொடக்கமே பரபரப்பாக உள்ளது! தொடருங்கள் நிவாஸ்!
மிக்க நன்றி ஐயா

Nivas.T
02-06-2011, 09:47 AM
ஆரம்பமே பல எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. காலம் அவனுக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தை அறியும் ஆவலில் காத்திருக்கிறேன். தொடருங்கள் நிவாஸ்.

மிக்க நன்றீங்க கீதம்

Nivas.T
02-06-2011, 09:50 AM
அஹா எல்லோரும் தொடர்கதை ஆரம்பித்துவிட்டீர்களா ? வாழ்த்துக்கள் நிவாஸ் :)

ஆசை யாரை விட்டது? இத்தனை பேர் இருக்கும்போது விட்டுவிடுவேனா என்ன? கத்திபோடாமல் விடப்போவதில்லை :lachen001:

முதல் முயற்சி பாரக்கலாம் எந்த அளவுக்கு முடிகிறதென்று :smilie_abcfra:

sarcharan
02-06-2011, 10:21 AM
சஸ்பென்சாய் தொடங்கி உள்ளீர்கள்.. கதைக்குள் சீக்கிரமாய் செல்லுங்கள்...

Nivas.T
02-06-2011, 10:28 AM
சஸ்பென்சாய் தொடங்கி உள்ளீர்கள்.. கதைக்குள் சீக்கிரமாய் செல்லுங்கள்...

மிக்க நன்றி சாரா

Nivas.T
02-06-2011, 10:29 AM
அவன் - 2

கண்முன் நடந்ததை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை, இமைப்பொழுதில் நடந்துவிட்ட அந்த சம்பவம் அவன் நினைவை இன்னும் கூட விடவில்லை. அந்த முதியவர் வாங்கிவந்த டீ தூக்கு நடைபாதையில் உருண்டுகொண்டிருந்த ஒலி மட்டும் அவன் காதுகளில் உணர்த்திக் கொண்டிருந்தது.

உயிர் இருக்கிறதா? இல்லையா? முதன் முறையாக கண்முன் ஒரு மரணம், அவனது இருபத்தேழு வருட வாழ்க்கையில் பார்க்கும் முதல் விபத்து. அங்கு நிற்கலாமா? இல்லை போய் விடலாமா? என்ன செய்வதென்று விளங்கவில்லை அவனுக்கு. உறைந்து போனவன் உறைந்தே நின்றான்.

சிறுதுநேரம் அந்த பெரியவரையே உத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று அந்த ஒரு நொடி அந்தக் காட்சி அவனை உயிப்பித்தது, அந்த உடல் அசையவில்லை ஆனால் அவர் விட்ட ஒரு மூச்சுக்காற்றில் சாலைப் புழுதி கொஞ்சம் பரக்க உணர்ச்சிவந்தவனாய் "இன்னும் உயிர் இருக்கு........... இன்னும் உயிர் இருக்கு.................." என்று கத்தியவாறே அவரை நோக்கி ஓட்டிச்சென்று தன் மடியில் கிடத்திக்கொண்டான்.

"தம்பி.... வேணாம் வந்துருப்பா போலிசு, கேசு அப்படீன்னு ஆகிடும்..... உனக்கு இது தேவையில்லாத வேல, விட்டுடு அவங்க வந்து பாத்துப்பாங்க" என்றார் ஒருவர்

"ஐயோ... இங்க பாரேன் இன்னும் உசுரு இருக்குது........" என்று பரிதாபப்பட்டாள் ஒரு பெண்

ஆனால் யாருமே அருகில் கூட வரவில்லை.

"யோவ்... எவனாவது வாங்கையா, எல்லாரும் பாக்குறீங்களே யாராவது வந்து உதவி பன்னுங்கையா........." என்னும் அவனது குரலை யாரும் அசட்டை செய்வதாக தெரியவில்லை

"டேய்.... எவனாவது வாங்கடா, சீக்கிரம் வாங்கடா....." என்று கதறியவன் அங்கு கடந்துசெல்லும் ஆட்டோவை பார்த்து "ஆட்டோ... ஆட்டோ...." என்று கூப்பிட்டாலும் வண்டியை நிறுத்தாமல் காது கேக்காதவன் போல் கடந்து சென்றான்.

இதற்க்கு மேல் எவனையும் நம்பி புண்ணியமில்லை என்று உணர்ந்தவன், அந்தப் பெரியவரை அப்படியே கிடத்திவிட்டு சாலையின் எதிர் புறமிருந்த போக்குவரத்து காவல்துறை உதவிநிலையம் நோக்கி ஓடினான்.

-தொடரும்...

sarcharan
02-06-2011, 11:57 AM
அந்நியன் அம்பி...

சிவா.ஜி
02-06-2011, 03:32 PM
நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க நிவாஸ். அப்பாக் கையை இன்னமும் எதிர்பார்க்கும் இளைஞன்...ஆனால் சாலையில் அடிபட்டுக் கிடப்பவருக்கு உதவி செய்யத்துப்பவனாய் நாயகனைக் காட்டி...ஆவலைத் தூண்டுகிறீர்கள். தொடருங்கள்....என்ன சொல்லப்போகிறீர்களென தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பின் தொடர்கிறேன்.

Ravee
02-06-2011, 03:56 PM
அந்நியன் அம்பி...

அதெல்லாம் சரி உங்களுக்கும் டைரேக்டருக்கும் ஏதோ உரசலாமே கிசு கிசு பார்த்தேன் ...படம் பாதியிலே நிக்குது ... வெள்ளிவிழா வரைக்கும் போஸ்டர் அடிச்சுருவோம்ன்னு பார்த்தா படமே வெளிய வருமா இல்லை வாருமான்னு தெரியலியே ... பேசி முடிவுக்கு வாங்க ..... :lachen001:

Nivas.T
02-06-2011, 04:39 PM
அந்நியன் அம்பி...

அப்படி தெரியும் ஆனா அது இல்ல :aetsch013::aetsch013:

Nivas.T
02-06-2011, 04:43 PM
நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க நிவாஸ். அப்பாக் கையை இன்னமும் எதிர்பார்க்கும் இளைஞன்...ஆனால் சாலையில் அடிபட்டுக் கிடப்பவருக்கு உதவி செய்யத்துப்பவனாய் நாயகனைக் காட்டி...ஆவலைத் தூண்டுகிறீர்கள். தொடருங்கள்....என்ன சொல்லப்போகிறீர்களென தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பின் தொடர்கிறேன்.

இது ஒரு உண்மைச் சம்பவம் அண்ணா, எந்த அளவுக்கு சுவாரசியமாக சொல்லமுடியும் என்று தெரியவில்லை, என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்

நன்றி அண்ணா

Nivas.T
02-06-2011, 04:45 PM
அதெல்லாம் சரி உங்களுக்கும் டைரேக்டருக்கும் ஏதோ உரசலாமே கிசு கிசு பார்த்தேன் ...படம் பாதியிலே நிக்குது ... வெள்ளிவிழா வரைக்கும் போஸ்டர் அடிச்சுருவோம்ன்னு பார்த்தா படமே வெளிய வருமா இல்லை வாருமான்னு தெரியலியே ... பேசி முடிவுக்கு வாங்க ..... :lachen001:

:confused: எந்த படம்? ஓ............. அந்தப் படமா!!!!

அது வரு.........ம் ஆ.........னா வரா.........து :aetsch013::aetsch013::D:D

கீதம்
03-06-2011, 01:54 AM
நம்மிடம் மனிதநேயமிருப்பதை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எப்படி செயலப்டுகிறோம் என்பதே சவாலான கேள்விதான். இதேபோல் சிலவருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் விபத்துக்குள்ளாகி அடிபட்டுத் தொடை எலும்புகள் சிதைந்து பலமாய்க் காயம்பட்டிருந்த ஒருவரை, வேலை முடிந்து வீட்டுக்கு தான் வந்துகொண்டிருந்த ஆட்டோவில் டிரைவரின் அனுமதியுடன் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்களுக்குத் தகவல் சொன்ன என் கணவரின் செயலைப் பெருமையுடன் இங்கு நினைவு கூர்கிறேன்.

ஆனால் என் கணவரோ... உதவியதோடு அந்த உதவிக்குப் பணமும் வாங்க மறுத்த அந்த ஆட்டோக்காரரை நன்றியுடன் நினைவுகூர்வார். அவர் மறுத்திருந்தால் இவர் உதவ நினைத்தும் உதவமுடியாமல் போயிருக்கும் அல்லவா?

உங்கள் கதையிலும் அதுபோல் இரக்கமனமுள்ள ஒருவனைக் காண்கிறேன். அவன் என்ன செய்தான்? அடுத்த நிகழ்வுகளை அறியும் ஆவலில்....

Nivas.T
03-06-2011, 09:41 AM
அவன் - 3

"சார்....சார்..... ஒரு ஆட்டோ காரன் ஒரு பெரியவர அடிச்சுட்டு போய்ட்டான்.. சார்... இன்னும் உயிர் இருக்கு சார்....." என்று பதறியபடி சொன்ன அவனை மேலும் கீழுமாக ஏற இறங்கப் பார்த்தவாறே
"விடிஞ்சா.... பொழுதுபோனா.... போதும் இவன்ககூட இதே ரோதனையா போச்சு........" என்று அலுத்துக்கொண்டவர், நிதானமாக யோசித்து நின்று எழுந்து தொப்பியை அணிந்து கொண்டு " வா போகலாம்" என்று அழைத்து வந்தவர், எதிர் வந்த ஒரு ஆட்டோவை கை மறித்தவாரே
"தம்பி நீ போய் அவர தூக்கு பா..... இந்த ஆட்டோல கொண்டுபோகலாம்" என்று கூறி அவரும் இரண்டடி பின்னாலே நின்றுகொண்டார்.

"என்ன உலகமடா இது?" என்று தனக்குள் தானே நொந்துகொண்டு..... அந்த முதியவரை தூக்கும் பொழுது அவனுக்கு கையில் பாரமில்லை, நெஞ்சில்தான் பாரம் கூடியது.

ஆட்டோவுக்குள் அவரை ஏற்றும்போது மட்டும் மனதில் எங்கோ ஒரு மூலையில் கருணையுள்ள ஒருவன் வந்து உதவிவிட்டு அவனும் ஓடிவிட்டான். அத்துனைப் பேரில் இதாவது ஒருவன் வந்து செய்தானே என்ற ஆறுதல் மட்டும் அவனுக்கு.

இன்னும் அந்தப் பெரியவரின் தலைக்காயத்தில் கைவைத்தும் பீறிடும் ரத்தக்கசிவு நிற்கவில்லை, அவருக்கு சுயநினைவில்லை, உயிருள்ளது என்னும் அடையாளமாக அவரின் மூச்சுக்காற்று மட்டும் அவன் கழுத்தினில் மோதிக்கொண்டிருந்தது அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையை அடைந்தவுடன் அவனுக்கு ஒரு நம்பிக்கை, ஆனால் அதுவும் பொய்த்துபோகும் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ஒரு மனிதஉயிர் ஊசலாடிக்கொண்டிருக்க, அவர்கள் சட்டம் பேசிக் கொண்டிருந்தார்கள், போலீஸ்காரர் சொல்லியும், அவர்கள் அனுமதிக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் இன்னும் வண்டியிலிருந்துகூட கீழிறங்க விடவில்லை.

இறக்கப்போகும் ஒருவனைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இறுகிய நெஞ்சம் படைத்த மனித உருவ விலங்குகளைக் கண்டான், கோபம் ஒருபுறம், அந்த உயிரைக்காக்க பதட்டம் ஒரு புறம், என்னசெய்வதென்று புரியாமலிருந்த அவனிடம் ஓடி வந்த அந்த போலீஸ்காரர்

"தம்பி இது சரிபடாது... இப்படியே உட்டா கெழவன் புட்டுக்குவா... நீ.... KMC க்கு கொண்டுகிட்டு போ.... நான்..அவங்களுக்கு இன்போர்ம் பண்ணிடுரன்....." என்று கூறிவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் ஆட்டோ ஓட்டுனரிடம் "நீ இவங்கள KMC ல விட்டுடு பா...." என்று சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார் திரும்பி கூட பாராமல்.

ஏற்கனவே செய்வதறியாது இருந்தவனுக்கும் இன்னும் அதிர்ச்சியே, கண்ணைக்கட்டி காட்டிவிட்டதுபோல் ஆகிவிட்டது அவனுக்கு, எந்த நேரமும் அந்த உயிர் நின்றுவிடலாம் என்ற கலக்கமும் இன்னும் அவனை பீதிக்குள்ளாக்க, எப்படியும் அவரை காப்பாற்றியாகவேண்டும் என்று எண்ணியவன் கோபத்தையும் வெறியையும் ஒன்றாக்கி

"அண்ணா... நீ வண்டிய எடுண்ணா... சீக்கிரம்.... நீ எவ்வளவு கேட்டாலும் நான் தரேன்.... " என்று கதற வண்டி நகர்ந்தது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியை நோக்கி

-தொடரும்

Nivas.T
03-06-2011, 09:53 AM
நம்மிடம் மனிதநேயமிருப்பதை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எப்படி செயலப்டுகிறோம் என்பதே சவாலான கேள்விதான். இதேபோல் சிலவருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் விபத்துக்குள்ளாகி அடிபட்டுத் தொடை எலும்புகள் சிதைந்து பலமாய்க் காயம்பட்டிருந்த ஒருவரை, வேலை முடிந்து வீட்டுக்கு தான் வந்துகொண்டிருந்த ஆட்டோவில் டிரைவரின் அனுமதியுடன் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்களுக்குத் தகவல் சொன்ன என் கணவரின் செயலைப் பெருமையுடன் இங்கு நினைவு கூர்கிறேன்.

ஆனால் என் கணவரோ... உதவியதோடு அந்த உதவிக்குப் பணமும் வாங்க மறுத்த அந்த ஆட்டோக்காரரை நன்றியுடன் நினைவுகூர்வார். அவர் மறுத்திருந்தால் இவர் உதவ நினைத்தும் உதவமுடியாமல் போயிருக்கும் அல்லவா?

உங்கள் கதையிலும் அதுபோல் இரக்கமனமுள்ள ஒருவனைக் காண்கிறேன். அவன் என்ன செய்தான்? அடுத்த நிகழ்வுகளை அறியும் ஆவலில்....

உண்மையில் உங்கள் கணவர் மிகவும் பாராட்டத்தக்கவர், அவருக்கும் இந்த கதையின் நாயகனுக்கும் அதிக வித்தியாசமில்லை. இதுபோன்ற மனிதர்களைக் காண்பது இப்பொழுது இன்னும் அரிது என்று சொல்லும் சம்பவத்தின், ஒரவன் வாழ்க்கையில் சந்திக்க கூடாத ஒரு கசப்பான அனுபவத்தின் தொகுப்பில் ஒரு பகுதிதான் இது

உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி

aren
03-06-2011, 11:40 AM
மனது கனக்கிறது. கதையை அருமையாக எடுத்துச் செல்கிறீர்கள், அவசரப்படாமல் மெதுவாக எழுதவும், அப்பொழுதுதான் ஒரு தெளிவான கதை கிடைக்கும்.

சிவா.ஜி
03-06-2011, 01:08 PM
சம்பவ விவரணைகள் மிக அருமை. எத்தனைதான் சட்டம் போட்டாலும்...மருத்துவமனைகள் திருந்துவதாயில்லை. போலீஸ் கேஸ் என்றாலே அச்சப்படும் நிலையை நினைத்து வருந்துவதா, நமக்கென்ன எனப்போகும் அலட்சிய மனப்பான்மையை நினைத்து வருந்துவதா....ம்...

தொடருங்க நிவாஸ்.

கீதம்
04-06-2011, 02:31 AM
மனதைத் தொடும் விதத்தில் கருவும் எழுதும் விதமும் உள்ளது. விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. முதியவர் பிழைத்தாரா? அவன் பட்ட பாடுகளுக்குப் பலன் இருந்ததா? அறியக் காத்திருக்கிறேன். தொடருங்கள், நிவாஸ்.

Nivas.T
04-06-2011, 05:59 AM
மனது கனக்கிறது. கதையை அருமையாக எடுத்துச் செல்கிறீர்கள், அவசரப்படாமல் மெதுவாக எழுதவும், அப்பொழுதுதான் ஒரு தெளிவான கதை கிடைக்கும்.

உங்களது ஊக்கமான பின்னுட்டத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி ஆரென் நீங்கள் கூறியபடி முயல்கிறேன்

Nivas.T
04-06-2011, 06:03 AM
சம்பவ விவரணைகள் மிக அருமை. எத்தனைதான் சட்டம் போட்டாலும்...மருத்துவமனைகள் திருந்துவதாயில்லை. போலீஸ் கேஸ் என்றாலே அச்சப்படும் நிலையை நினைத்து வருந்துவதா, நமக்கென்ன எனப்போகும் அலட்சிய மனப்பான்மையை நினைத்து வருந்துவதா....ம்...

தொடருங்க நிவாஸ்.

வருந்துவதால் பயனேதுமில்லை அண்ணா, அவரவராய் பார்த்து திருந்தினால் மட்டுமே உண்டு.
அந்த நிலைமையில் நமது தந்தையோ, தாத்தாவோ இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்று யாரும் நினைப்பதுமில்லை, அதற்காக நேரம் செலவிடவும் அவர்களுக்கு மனமிருப்பதுமில்லை.

பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அண்ணா

Nivas.T
04-06-2011, 06:04 AM
மனதைத் தொடும் விதத்தில் கருவும் எழுதும் விதமும் உள்ளது. விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. முதியவர் பிழைத்தாரா? அவன் பட்ட பாடுகளுக்குப் பலன் இருந்ததா? அறியக் காத்திருக்கிறேன். தொடருங்கள், நிவாஸ்.

தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Nivas.T
04-06-2011, 08:41 AM
அவன் - 4

"துவண்டுபோன உடல், சுருங்கிப்போன தோல்கள், ஒட்டிப்போனக் கன்னம், இன்றோ நாளையோ நாங்களும் உதிர்ந்துபோய்விடுவோம் என்னும் நிலையில் நரைத்துப்போன நாலு முடிகள், உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துபோன தேகம், இவன் சட்டையெங்கும் அவரின் இரத்தக் கரைகள்" இதையெல்லாம் பார்த்தவனுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு, நாம் என்ன செய்கிறோம், யார் இவர்? இவருக்கும் நமக்கும் என்ன உறவு? எதுவும் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த ஆட்டோ கீழ்ப்பக்கம் மருத்துவக் கல்லூரியை அடைந்தது.

அந்தப் பெரியவரை வண்டியில் விட்டுவிட்டு உதவிக்கு யாரையாவது கூப்பிடலாம் என்று அவன் கீழிறங்க

"ஹலோ சார்.... நீங்கபாட்டுக்கு அப்படியே போனா? என்ன அர்த்தம்? போலீஸ்கார் சொன்னதால்ல தான் ஒத்துகிட்டேன் இல்லனா நான் ஏத்திருக்க மாட்டேன் நீங்க ஆட்டோவ கட்பன்னுக சார், எனக்கு சவாரி இருக்கு" என்று ஆட்டோக்காரன் மனசாட்சியில்லாமல் கூற

"அண்ணா... ஒரு நிமிஷம் இருண்ணா.... அவர அட்மிட் பண்ணிட்டு.... வந்து பேசிக்கலாம் அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல..." என்று திரும்ப முயன்றவனை வழிமறித்தவன்

" எனக்கு அதெல்லாம் தெரியாது 50 ரூபாய் குடுத்தீன்னா? நான் போய்கிட்டே இருப்பேன்" என்றவனிடம் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து அவன் கையில் எறிந்துவிட்டு அருகில் இருந்த ஒரு ஸ்ரட்ச்சரை அவனே இழுத்து அந்தப் பெரியவரை தூக்க முயலும்போது,

"இரு சார் நானும் உதவி பண்றேன்..." என்று அக்கறையாய் வந்தவன் "ஏன் சார் உங்க தாத்தாவா இது? பத்தரம பாத்து கூட்டிகிட்டு போகக்கூடாது? " என்று கேக்க

"இவரு யாருன்னே எனக்கு தெரியாது" என்று சொல்லிவிட்டு அதிர்ந்து நின்ற ஆட்டோக்காரனை சிறிதும் அசட்டைசெய்யாமல் அவனே ஸ்ரட்ச்சரை தள்ளிக்கொண்டு ஓடினான்.

அவன் அந்தப் பதிலை சொல்லும்போதுதான் அவனுக்கு தான் இன்னும் செய்ய வேண்டி காரியம் என்னவென்று நினைக்கத்தோன்றியது "முதலில் முதலுதவியாவது அவர்கள் ஆரம்பிக்கட்டும் பிறகு அவர் யாரென்று கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கலாம்" என்று தனக்குத்தானே முடிவுசெய்து கொண்டு அங்கு மிகவும் சுவாரசியமாக அன்றைய ஒரு சினிமாவின் கதைப்பற்றி பேசிக்கொண்டிருந்த பணியில் இருக்கும் இரு பயிற்சி மருத்துவர்களை அணுகினான்.

-தொடரும்

கீதம்
04-06-2011, 10:04 AM
இந்த பாகம் ரொம்பக் குட்டியா இருந்தது. ஆனாலும் சுவாரசியம் குலையவில்லை. அந்த நிலையில் அவன் மனப் போராட்டங்களை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். இனிதான் பெரும் சோதனை ஆரம்பம். என்ன செய்யப் போகிறான், அவன்?

ஜானகி
04-06-2011, 12:30 PM
உண்மை சம்பவமாக இல்லாமல் கதையாகவே இருந்திருக்கக்கூடாதா என்று நினைக்கத் தோன்றுகிறது.....மிகவும் பாரமாக இருக்கிறது....முடிவு நல்லதாக அமையட்டும்.

Nivas.T
04-06-2011, 12:42 PM
இந்த பாகம் ரொம்பக் குட்டியா இருந்தது. ஆனாலும் சுவாரசியம் குலையவில்லை. அந்த நிலையில் அவன் மனப் போராட்டங்களை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். இனிதான் பெரும் சோதனை ஆரம்பம். என்ன செய்யப் போகிறான், அவன்?

அலுவலகத்திலிருந்து பதிப்பதால் நினைத்தபடி பதிக்க முடிவதில்லை, பின்னூட்டமிடுவதென்றால் பிரச்சனையில்லை, கதையை பதிப்பதென்பது பெரும்பாடாக உள்ளது அதனால்தான்.

மிக்க நன்றீங்க

Nivas.T
04-06-2011, 12:47 PM
உண்மை சம்பவமாக இல்லாமல் கதையாகவே இருந்திருக்கக்கூடாதா என்று நினைக்கத் தோன்றுகிறது.....மிகவும் பாரமாக இருக்கிறது....முடிவு நல்லதாக அமையட்டும்.

அப்படியென்றால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் என்ன சொல்வது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அனைத்துக் கதைகளும் முழுவதும் கற்பனையும் இல்லை, முழுவதும் உண்மையுமில்லை

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜானகியம்மா

பாரதி
04-06-2011, 12:58 PM
முதலில் கதை எழுதுவதற்கு பாராட்டு.

சிறப்பான தொடக்கமும், அதைத் தொடர்ந்து கதையில் சற்றும் விறுவிறுப்பு குறையாத வகையில் எழுத உண்மையான சம்பவம் என்பதும் ஒரு காரணமாக அமைந்திருந்தாலும், அதை படிப்பவர் உணரும் வண்ணம் சிறப்பாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். நன்றி.

அருள் கூர்ந்து எழுத்துப்பிழைகளை தவிர்ப்பீர்கள் என்றால் இன்னும் கதை மிளிரும்.

Nivas.T
04-06-2011, 01:04 PM

இயன்றவரை பிழைகளை தவிர்க்க முயல்கிறேன் அண்ணா

உங்கள் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அண்ணா

Ravee
05-06-2011, 12:57 AM
அருமையாக போகிறது நிவாஸ் ஆரேன் அண்ணா சொன்னது போல அவசரப்படாமல் எழுதுங்கள் ... எழுத்தும் கதா பாத்திரங்களும் குலையாது ...... முடிந்தால் அக்கா சொல்வது போல நோட்டில் எழுதி விட்டு பதிவிடுங்கள். இன்னும் சிறப்பாக வரும் ... சம்பவங்களை தொடர்ந்து மனம் அலை பாயும் இடங்கள் ...அதையும் தொட்டு எழுத சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்... :)

Nivas.T
05-06-2011, 05:41 AM

அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா, ஆனாலும் கொஞ்சம் இல்லை ரொம்பவே கடினமாக உணரமுடிகிறது.

இப்படியும் சொல்லலாம் போல

வீட்டைக் கட்டிப்பாரு
கல்யாணத்தைப் பண்ணிபாரு
கதையா எழுதிப்பாரு

என்று :D

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 02:55 PM
மனிதநேயம் எனபது என்றோ ஒரு நாள் பூக்கும் குறிஞ்சி மலர் போன்றது போலாகிவிட்டது ..இந்த கதையினை படிக்கும் போது அந்த பெரியவர் என்னவானார் என்று என் ஆர்வம் கட்டுபடுத்த முடியாததாக உள்ளது ..இன்றும் என் வேண்டுதல் பிழைத்தல் எந்த வொரு குறை பாடும் இன்றி பிழைக்க வேண்டும் என்பதுதான் ...அருமையான துவக்கம் சிற்சில பிழைகள் தவிர எழுத்து நடை நன்றாக உள்ளது ...தொடருங்கள் நண்பரே..

Nivas.T
08-06-2011, 03:24 PM

பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜெய்

Nivas.T
08-06-2011, 04:18 PM
அவன் - 5

மருத்துவர்களுக்கு பதட்டம் வேண்டாம் தான், ஆனால் அக்கறை இல்லாமல் இருந்தால் எப்படி? இப்படிதான் அவனுக்கும் தோன்றியது.

அரக்கப் பறக்க ஓடிவந்து அவன் கூறியதை சட்டை செய்யாமல் ஆர்வமில்லாதவராய் ஒரு பார்வையை வீசிவிட்டு, அசைந்து ஆடி எழுந்து பொறுமையாய் வந்து ஏதோ ஒரு குப்பையை பார்ப்பதுபோல் பார்த்தார், இத்தனைக்கும் அவர் ஒரு பெண். அவனால் நம்பவும் முடியவில்லை, கோபப்படவும் இயலவில்லை, உணர்விழந்து உறைந்து நின்றவனை நோக்கி

"கொஞ்சம் சீரியஸ்தான் பா..... இங்க ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது... GH க்குத்தான் கொண்டு போகணும், ஆம்புலன்ச வரச்சொல்றோம்..... அங்க கொண்டு போங்க......" என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு கடமைக்கு ஒரு குளுக்கோஸ் பாட்டிலையும் சொருகிவிட்டு திரும்பிச் சென்று கதையளக்க ஆரம்பித்து விட்டார்.

சிலநொடிகள் வரை சிலையாய் நின்றவன் மீண்டும் உணர்வு வந்தவனாய், அந்தப் பெரியவரையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ஏழையின் உயிரை காக்க இத்தனைப் போராட்டமா? என்ன உலகமடா இது? என்று நொந்துகொண்டு அவரது சட்டைப் பைகளை ஆராயத் தொடங்கினான்.

கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டு, இரத்தக்கறை படிந்த சில காகிதத் துண்டுகள், ஒரு கந்தலான நோட்டுப்புத்தகம். இதைத்தவிர வேறொன்றுமில்லை அந்த இந்தியக் குடிமகன் பையில்.

ஏதோ சிறு சிறு கணக்குகள் இருந்த அந்த நோட்டுப் புத்தகத்தில் சில தொலைபேசி எண்களும் இருக்க, தனது அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டான். இரண்டு மூன்று எண்களுக்குப் பிறகு, ஒரு எண்ணில் ஒரு பெண்குரல் ஒலித்தது

"ஹலோ யாருங்க?"

"இல்லைங்க, நான் KMC லிருந்து பேசுறேன், அண்ணாநகர் ரவுண்டானாகிட்ட ஒரு பெரியவரு வண்டியில அடிபட்டாரு.... அவரு யாருன்னு எனக்கு தெரியல... அவர் பாக்கெட்ல இந்த நம்பர்தான் இருந்தது அதான் கால் பண்ணேன்...."

"பெரியவரா.......? அம்மா மாமா எங்க டீ வாங்க போனாரா................? ஐயையோ... மாமாவுக்கு ஆக்சிடண்ட்டுன்னு யாரோ பேசுறாங்க........" "சார் அது எங்க மாமாதான் சார். என்னாச்சுங்க.... இப்ப எங்க இருக்காங்க...?" என்றார் அழுதவாறே.

"ஒண்ணும் பதட்டப்படாதீங்க, KMC ஹாஸ்பிடலுக்கு வாங்க, அங்கே வந்து இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க........." என்று அவன் முடிக்கும் முன்னரே தொடர்பு துண்டிக்கப்பட்டது. உடனே அவன் பேலன்சை பரிசோதிக்க 0.50 என்று காட்டியது.

அவன் என்ன செய்வான்? அவனும் அவரும் ஒன்றுதான், கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருவரும். நண்பனை உதவிக்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்தவனுக்கு அந்த வாய்ப்பும் போயிற்று. மீதமிருக்கும் பணத்தில் ரீசார்ஜ் செய்யவோ அல்லது வேறு தொலைபேசி கடையைத் தேடி போகலாம் என்றால் அவரை விட்டுவிட்டு கடைக்குப் போகவும் இயலவில்லை. யாருடைய கெட்ட நேரமோ? எதுவும் செய்ய முடியாமல், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்க....

குளுக்கோஸ் குத்தப்பட்டிருந்த ஊசியின் வழியே இப்பொழுது இரத்தம் கசிந்து வழிந்துகொண்டும், குழாயின் வழி ரத்தம் எதிர்த்து ஏறிக்கொண்டிருக்கவும், இவனுக்கு இரத்தம் உறைந்துவிடுவதைப் போல உணர்ந்தான்.

-தொடரும்

கீதம்
08-06-2011, 10:16 PM
ரொம்பக் கொடுமையா இருக்கு, நிவாஸ்.

கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருவரும் என்ற வாக்கியத்தில் அவனுடைய இயலாமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். இவனுக்கு மனம் இருக்கிறது, பணம் இல்லை. அவருக்கு உயிர் இருக்கிறது, உதவி கிடைக்கவில்லை.

ஒரு உயிரைப் பிரசவிக்க தாய் படும் பாட்டைப் போல் அவரைக் காப்பாற்ற அவன் படும் போராட்டத்தை மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறீர்கள். அடுத்த கட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

aren
09-06-2011, 07:51 AM
ரொம்பவும் கொடுமையா இருக்குங்க. பாவர் அந்தப் பெரியவர்.

ஏழைகளின் நிலமை இன்றும் இப்படியேதான் இந்தியாவில் இருக்கிறது. மனசாட்சியை அனைவரும் அடகு வைத்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

Nivas.T
09-06-2011, 11:49 AM
ரொம்பக் கொடுமையா இருக்கு, நிவாஸ்.

கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருவரும் என்ற வாக்கியத்தில் அவனுடைய இயலாமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். இவனுக்கு மனம் இருக்கிறது, பணம் இல்லை. அவருக்கு உயிர் இருக்கிறது, உதவி கிடைக்கவில்லை.

ஒரு உயிரைப் பிரசவிக்க தாய் படும் பாட்டைப் போல் அவரைக் காப்பாற்ற அவன் படும் போராட்டத்தை மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறீர்கள். அடுத்த கட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

உண்மைதாங்க இதுபோன்ற நிலைமையில் எப்படிப்பட்ட வலிய மனம் படைத்தவர்களும் தடுமாறத்தான் செய்வார்கள், அவன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல, இப்படிப்பட்ட சமுதாயத்தில் நாமும் ஒரு அங்கம் என்று நினைக்கும்பொழுது மிகவும் கொடுமையாக உணர்கிறேன்.

தொடர்ந்துவரும் உங்கள் பின்னூட்டத்திற்கும், நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

Nivas.T
09-06-2011, 11:54 AM
ரொம்பவும் கொடுமையா இருக்குங்க. பாவர் அந்தப் பெரியவர்.

ஏழைகளின் நிலமை இன்றும் இப்படியேதான் இந்தியாவில் இருக்கிறது. மனசாட்சியை அனைவரும் அடகு வைத்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இல்லைங்க பலர் தங்களது மனசாட்சியை இங்கு தொலைத்து விட்டார்கள், ஈவு, இறக்கம், மனிதநேயம் என்பதெல்லாம் இந்தநாட்டில் பெரும்பாலும் பேச்சளவில் மட்டுமே.

மிக்க நன்றி ஆரென்

சிவா.ஜி
09-06-2011, 02:01 PM
உணர்வுப்பூர்வமா எழுதுறீங்க நிவாஸ். யாருக்கோ என்னவோ என்று அலட்சியமாய் விட்டு விட்டுப் போகாமல், தனது இக்கட்டான சூழ்நிலையிலும் அந்தப் பெரியவருக்கு உதவ நினைப்பவனின் மனப் போராட்டத்தை அழகாய் சொல்கிறீர்கள்.

தொடருங்க.....

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 02:23 PM
உணர்வுபூர்வமான வார்த்தைகளின் வழியே உங்கள் கதை என்னை அந்த மருத்துவமனை வாயிலில் காத்திருக்க செய்கிறது ..ஒரு மகிழ்வான முடிவுக்காக ...

Nivas.T
11-06-2011, 09:14 AM
உணர்வுப்பூர்வமா எழுதுறீங்க நிவாஸ். யாருக்கோ என்னவோ என்று அலட்சியமாய் விட்டு விட்டுப் போகாமல், தனது இக்கட்டான சூழ்நிலையிலும் அந்தப் பெரியவருக்கு உதவ நினைப்பவனின் மனப் போராட்டத்தை அழகாய் சொல்கிறீர்கள்.

தொடருங்க.....

உங்கள் கதைகளைப்போல் இல்லாவிட்டாலும் ஒரு பத்து சதவிகித அளவிற்காவது எழுத முயல்கிறேன்

மிக்க நன்றி அண்ணா

Nivas.T
11-06-2011, 09:15 AM
உணர்வுபூர்வமான வார்த்தைகளின் வழியே உங்கள் கதை என்னை அந்த மருத்துவமனை வாயிலில் காத்திருக்க செய்கிறது ..ஒரு மகிழ்வான முடிவுக்காக ...

தொடர்ந்து வரும் உங்கள் பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஜெய்

Ravee
11-06-2011, 09:35 AM
நிவாஸ் , உங்கள் உணர்வை எங்களுக்குள் விதைத்து விட்டீர்கள்....:icon_b:

Nivas.T
11-06-2011, 09:38 AM
நிவாஸ் , உங்கள் உணர்வை எங்களுக்குள் விதைத்து விட்டீர்கள்....:icon_b:

உங்கள் ஊக்கத்திற்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அண்ணா

sarcharan
13-06-2011, 10:28 AM
அதெல்லாம் சரி உங்களுக்கும் டைரேக்டருக்கும் ஏதோ உரசலாமே கிசு கிசு பார்த்தேன் ...படம் பாதியிலே நிக்குது ... வெள்ளிவிழா வரைக்கும் போஸ்டர் அடிச்சுருவோம்ன்னு பார்த்தா படமே வெளிய வருமா இல்லை வாருமான்னு தெரியலியே ... பேசி முடிவுக்கு வாங்க ..... :lachen001:

இதென்ன புது கதை...:confused:
கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரி:confused: :frown:

aren
28-07-2011, 08:20 AM
இந்தக் கதையை எப்போது தொடர்வதாக உத்தேசம்.

Nivas.T
28-07-2011, 08:46 AM
இந்தக் கதையை எப்போது தொடர்வதாக உத்தேசம்.

விரைவில் மீதிக்கதையும் பதிப்பிட்டுவிடுகிறேன் ஆரென், தாமதத்திற்கு மன்னிக்கவும்