PDA

View Full Version : பூக்கள் பூக்கும் தருணம் - நிறைவுப்பகுதி



Pages : [1] 2

கீதம்
31-05-2011, 09:18 AM
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே… (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGGVP0095'&lang=ta)

ஏமி ஜாக்ஸன் ஏனோ சுந்தருக்கு ஜாக்கியாய்த் தெரிந்தாள். மனம் படத்தில் லயிக்காமல் பின்னோக்கி நழுவியது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஜாக்குலினைத் தான் முதன்முதலாய்ப் பார்த்து வாய் பிளந்த காட்சி மனத்திரையில் தோன்றியது. இதற்குமேலும் படம் பார்ப்பது போல் நடிப்பது சாத்தியமில்லை என்று புரிந்தபின் கிரியைத் தனித்து விட்டுவிட்டு மெல்ல எழுந்து அறைக்குள் தஞ்சமடைந்தான்.

அறைக்கதவைச் சாத்தியபின்பும் விடுவேனாவென்று பாடல் ஒலி சுந்தரின் செவிநரம்புகளைத் தீண்டியது. இந்தக் காதுகளுக்கும் கதவிருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? காதுகளை மட்டும் அடைத்து என்ன புண்ணியம்? அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டி தாய்மடி தேடி ஓடுவதுபோல் ஓய்வாக இருக்கும்போதெல்லாம் இந்தப் பாழாய்ப்போன மனம் கடந்தகாலத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறதே.... அதை என்ன செய்து அடக்குவது?

தலைக்கு அடியில் இரு கைகளையும் கொடுத்து வெறித்த கண்களுடன் சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி படுத்திருந்த சுந்தருக்குள் சட்டென்று வெறுமை பரவத் தொடங்கியது. இந்த மின்விசிறிக்கும் தனக்கும்தான் எத்தனை ஒற்றுமை! காலம் முழுவதும் சுழன்றாலும் தானிருக்கும் நிலையிலிருந்து அங்குலமும் நகரவியலாத அதைப்போல்தான் தானும். எத்தனை வேகமாய் காலம் என்னைச் சுழற்றினாலும் என் மனம் என்னவோ இன்னும் அவள் நினைவைத் துறக்க முடியாமல் அன்றிருந்த அதே நிலையில்!

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே……

மெல்லிய வருடலாய்த் துவங்கி மனதை வியாபித்தப் பாடல் ஆழ்மனம் வரை சென்று அங்கிருந்த நினைவுகளைத் தட்டியெழுப்பத் தொடங்கியிருந்தது. அவை எழுந்தால் ஆபத்தாயிற்றே என்று பயந்து மீண்டும் அவற்றைத் துயிலவைக்கும் அவன் முயற்சிகளைத் தட்டிவிட்டு வெடுக்கென்று கொத்தாய் அள்ளி வந்து அவன் முன்னால் ஆட்டி அரக்கத்தனமாய்ச் சிரித்தது.

இதம் தரவேண்டிய பாடல் இம்சிக்க.... 'ச்சே... என்ன வாழ்க்கை இது?'. எத்தனையோ முறை எழுந்தும் ஒவ்வொருமுறையும் அடக்கிவைக்கப்பட்ட சலிப்பு மீண்டும் தலையெடுக்க முனைய.... இந்த முறையும் அதன் முயற்சியில் தோல்வியே.

"சுந்தர்...."

அழைத்துக்கொண்டே கிரி அறைக்குள் வந்தான்.

"என்னடா..... படம் பாக்காம பாதியிலேயே வந்திட்ட?"

"தலை வலிக்கிற மாதிரி இருந்துது...."

"பொய் சொல்லாதடா.... என்ன மலரும் நினைவுகளா?"

மலரும் நினைவுகளா? மலர்ந்து வாடி உதிர்ந்த நினைவுகள் அல்லவா அவை? ஆனாலும் இன்னும் தொடர்ந்துவந்து இம்சிக்கிறதே? அப்படியானால் உதிர்ந்துவிட்டதாய் நினைத்த யாவும் இன்னும் உதிரவில்லையா? இதிலிருந்து மீள வழியே இல்லையா?

கிரியிடம் பேச்சை மாற்ற விரும்பினான்.

"நீ பாக்கலையா? நிறுத்திட்டே?"

"ப்ச், எனக்கு கவிதா ஞாபகம் வந்திட்டு"

"ஸ்கைப்ல பேசவேண்டியதுதானடா...?"

"முடியலைடா... அவள் என்னைப் பார்த்ததுமே அழ ஆரம்பிச்சிடுறா.... அவளைப் பாத்தா எனக்கு மனசே கேக்கமாட்டேங்குதுடா...."

சுந்தர் அவனுக்கு எப்படி தேறுதல் சொல்வதெனப் புரியாமல் விழித்தான். அவளும் என்ன செய்வாள்? எட்டு வயதில் ஒரு சிறப்புக் குழந்தையை வைத்துக் கொண்டு காதல் கணவனைப் பிரிந்து சொந்தங்களால் விலக்கப்பட்டு வாழும் வாழ்க்கை! மன உறுதி, துணிவு எல்லாம் இவனைப் பார்த்ததும் உடைந்துவிட, அழுகை பீறிடுகிறது. இரண்டு வருடங்களில் இவனுக்குப் பழகிப் போனாலும் அவளுக்கு இன்னும் பழகவில்லை, பாவம்.

கிரி தானே தேற்றிக்கொண்டவனாய்,

"சரி, சாப்பிடலாமா? டைம் ஆயிடுச்சி" என்றான்.

"ஹும், அதுக்கென்ன? வேளாவேளைக்கு அது மட்டும் தவறாம நடக்குது...."

"ரொம்பத்தான் சலிச்சுக்காதடா... இன்னும் ஒரு வாரந்தானே... அப்புறம் ரெண்டு மாசம் ஜாலியா இந்தியால எஞ்சாய் பண்ணப்போறே….. அக்கா கையாலே சூப்பர் சாப்பாடு! "

"என்னவோடா... ஊருக்குப் போறோம்கிற ஆர்வமே இல்ல. ஏதோ அக்கா கட்டாயப்படுத்துறதால போறேன். இல்லைனா.... "

"ம்! அக்காவைப் பாக்கப் போறதால இப்படி, இதுவே பெண்டாட்டியைப் பாக்கப்போறதா இருந்தா....... சரி, முறைக்காதே...விட்டுட்டேன், எதுக்கு இப்ப வம்பு... வா... சாப்பிட்டுட்டு வந்து படு.... "

பசியே இல்லை. இருந்தாலும் எழுந்தான். தனக்காக இல்லாவிட்டாலும் கிரிக்காகவாவது அவன் போயே ஆகவேண்டும். ஒருநாளும் இவனை விட்டு அவன் உண்பதில்லை. நல்ல சமையற்காரன், நல்ல சாப்பாட்டுப் பிரியனும் கூட. சுந்தர் நேரெதிர். சமைப்பதிலும் சரி, சாப்பிடுவதிலும் சரி, அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலேயே சுந்தருக்கு அடுப்படியில் கழுவுவதையும், துடைப்பதையும் தவிர வேறு வேலை இருப்பதில்லை. அதையும் சமயங்களில் கிரியே செய்துவிடுவான்.

நண்பர்களின் சந்திப்பும் அடிக்கடி இந்த வீட்டில் நடக்கும். பணி நிமித்தம் சிட்னிக்கு வரும் நண்பர்கள் இன்னும் அரைமணி நேரம் கூடுதலாய் தெற்கு நோக்கி காரைச் செலுத்தினால் சுந்தர், கிரி இவர்களின் சிறு போர்ஷனை அடைந்துவிடலாம்.

கிரி அத்தனைப் பேருக்கும் சமைத்துவிடுவான். சமைப்பதே தெரியாது. ஆனால் சைவமோ, அசைவமோ பக்கத்துணையாக பல கறிகளும் செய்து அசத்திவிடுவான். ஊரை, உறவுகளை, சொந்த மண்ணைப் பிரிந்து ஐயாயிரம் மைலுக்கு அப்பால் வாழும் உணர்வை முற்றிலுமாக நீக்கிவிடும் கிரியின் சமையலும் பக்குவமும். கிரியின் சமையலுக்கு அனைவருமே அடிமை என்றுதான் சொல்லவேண்டும்.

சுந்தர் ப்ரிட்ஜிலிருந்த சோறு, குழம்பு எல்லாவற்றையும் எடுத்து மைக்ரோவேவில் சூடுபடுத்தினான். கிரி எண்ணெயைக் காயவைத்து மிளகு அப்பளங்களைப் பொரிக்கத் தொடங்கினான்.

"ஏண்டா.... மைக்ரோவேல்லேயே பொரிச்சிடலாம்ல?"

"அப்பா சாமி, அதை நீயே சாப்பிடு, எனக்கு எண்ணெயில பொரிச்சதுதான் இறங்கும்"

"நாக்கு நீளம்டா உனக்கு"

மணித்தக்காளி, கத்தரிக்காய் வத்தக்குழம்பு பிரமாதமாய் மணத்தது.

"டேய், ரெண்டு அப்பளம் பொரிக்க இத்தனை நேரமா? வாடா... "

"இருடா, இருடா.... சாப்பிட ஆரம்பிச்சிடாதே... "

சுடச்சுட நான்கைந்து வடைகளைக் கொண்டுவந்து தட்டோரத்தில் தள்ளினான்.

"ஏதுடா வடை?"

"ம்? முக்குக் கடையில வாங்கிட்டு வந்தேன்"

சொல்லிச் சிரித்தான். வடையைப் பிட்ட சுந்தர் அதன் வித்தியாசமான நிறத்தைப் பார்த்துவிட்டு பரவசமானான்,

"டேய், இது வாழைப்பூ வடைத்தானே? ஏதுடா வாழைப்பூ?"

"எங்க ஆபிஸ்ல இருக்கிற ரெஜி பொண்ணு கொண்டுவந்து குடுத்துச்சிடா... நம்மூர் மரம் செடி அத்தனையும் வச்சி வளக்குதுடா.... அன்னைக்கி முருங்கக்காய், முருங்கக்கீரை எல்லாம் கொடுத்துதே... "

சுந்தர் சிரித்தான்.

"ஏண்டா சிரிக்கிறே?"

"ஒண்ணுமில்லடா..." சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தான்.

"ஏய் என்னன்னு சொல்லு, இல்லைனா நானும் ஏதாவது சொல்லிடுவேன்... "

"சரி, சரி சொல்றேன்.... ஒரு பழைய பாட்டு ஞாபகம் வந்திட்டு... அதான்" மீண்டும் சிரித்தான்.

"என்ன பாட்டுடா?"

"சிலை செய்யக் கைகள் உண்டு, தங்கம் கொஞ்சம் தேவை. சிங்காரப் பாடலுண்டு, தமிழ் கொஞ்சம் தேவைன்னு கேட்டிருக்கியா?"

"ம். அதுக்கென்ன?"

"கறி செய்யக் காய்கள் உண்டு, கிரி கொஞ்சம் தேவைன்னு அந்தப் பொண்ணு பாடினா எப்படி இருக்கும்னு....." முடிக்காமல் ஓகோவென்று மறுபடியும் சிரிக்க, கிரி எதுவும் சொல்லாமல் சுந்தரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே இருந்தான்.

"என்னடா பாக்குறே?"

"நீ இப்படிச் சிரிச்சி சந்தோஷமா இருக்கிறதைப் பாக்க எனக்கும் சந்தோஷமா இருக்குடா... "

சட்டென்று சுயநிலைக்கு வந்த சுந்தர் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.

"சாரிடா..." நண்பனின் சந்தோஷத்தைக் கெடுத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன் சொன்னான் கிரி.

"ச்சீ.... நமக்குள்ள என்னடா?"

"சரி, இந்தியா போறதுக்கு எல்லாம் எடுத்துவச்சிட்டியா? “

"ம், ஏதோ வச்சிருக்கேன்."

"முதல்ல அதை முடி. நாளைக்கு பசங்க எல்லாரும் வரேன்னிருக்காங்க. ஆளாளுக்கு ஒரு பொருள் டெலிவரி பண்ணச் சொல்வானுங்க... அதனால முதல்ல உன் சாமானையெல்லாம் வச்சி வெயிட் பாத்துக்கோ..."

"சரிடா... நீ உன் வீட்டுக்கு ஒண்ணுமே இன்னும் குடுக்கலையே...."

"பெரிசா எதுவுமில்ல, பரத்துக்கு ஏதாவது டாய்ஸ் வாங்கித் தரலாம்னு இருக்கேன்."

"கவிதாவுக்கு…?"

சுந்தரின் கேள்விக்கு கிரி மெளனம் காத்தான். பின் சற்றே நெகிழ்ந்த குரலில் சொன்னன்.

"எந்தப் பொருளைக் கொடுத்தும் அவளை சந்தோஷப்படுத்த முடியாதுடா.... காதலிச்சதுக்கான தண்டனையை இப்ப ரெண்டுபேருமே அனுபவிக்கிறோம், ப்ச்!"

பிரிவின் வலியை சுந்தரால் உணரமுடிந்தது. கிரியின் வலிக்கு வயது இரண்டு வருடங்கள் என்றால் சுந்தருக்கோ அது இருபது வருடத்தை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தது. இருபது வருடமோ, இரண்டு வருடமோ... அனுபவிக்கும் ஒவ்வொரு நொடியிலும் பழுக்கக் காய்ச்சிய இரும்பென ஆழ்மனத்தில் இறங்கும் வேதனையை என்னவென்று சொல்வது?

சுந்தர் கைக்குக் கிடைத்த ஒரு டிவிடியை அதன் ப்ளேயரில் போட்டு இயக்கினான். பாட்டுத் தொகுப்பு போலும். எல்லாம் கிரியின் ரசனை. ஒவ்வொரு பாடலாய்த் தள்ளிக்கொண்டே வந்தவனுக்கு, அந்தப்பாடலைக் கண்டதும் கைகள் இயங்க மறுத்தன.

மனப்புண்ணை, பாடல்காக்கையொன்று மறுபடியும் கொத்திக்கிளற… நினைவுக்குருதி வழிய ஆரம்பித்தது.

வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்…..
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்…..

நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்… (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2306'&lang=ta)

(தொடரும்)

Nivas.T
31-05-2011, 11:40 AM
என்னடா இன்னும் எதுவும் அரம்பிக்களியேன்னு பாத்தேன், என்னோட எதிர்பார்ப்பு பொய்யாகல. சோகத்தோடு தொடங்கும் நண்பர்கள் கதையா? கூட்டிகிட்டு போங்க, ஆனா ரொம்ப அழவைக்க கூடாது ஆமா :)

அக்னி
31-05-2011, 11:45 AM
புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் நிழல், பிரிவு...
அதுவே, நிரந்தரப் பிரிவை மறக்க முடியாமல் நினைத்து வாழ்வது என்றாகையில்,
முழுக்கணங்களுமே கனதிதான்...

அற்புதமான தொடக்கம்...

தொடருங்கள் கீதம்+அக்கா...

Ravee
31-05-2011, 01:12 PM
அழுத்தமான தொடக்கம் .... அசத்துங்கள் ... கதையை படித்து முடிக்கும் வரை எமி ஜாக்சனின் அழகிய கண்களும் எங்கள் மனக்கண்ணில் கூடவே வந்தது .

சிவா.ஜி
31-05-2011, 02:08 PM
ஆஹா...தங்கையின் கை வண்னத்தில் அடுத்ததொரு அற்புதத் தொடரா....ஆரம்பமே மென்மையான பாடல் வரிகளுடன் மனதுக்குள் நுழைந்து அமர்ந்துகொண்டது. ஏமி ஜாக்சன் நினைவு படுத்தும் அந்த பழையப் பறவை யார்...அதுக் கொத்திக் கிளறும் நினைவுப்புண்ணுக்கு பின்னனி என்ன என்ற சிறிய சஸ்பென்ஸும் சேர்ந்துகொண்டு,

“மனப்புண்ணை, பாடல்காக்கையொன்று மறுபடியும் கொத்திக்கிளற… நினைவுக்குருதி வழிய ஆரம்பித்தது.”

இப்படிப்பட்ட ’அட’ ரக வார்த்தையாடல்களுடன் அட்டகாசமாய் பயணிக்கத்தொடங்கியக் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பூக்கள் பூக்கும் தருணம்...இனி அடிக்கடி வரனும் என்ற ஆவலுடன்......

(முதல் பின்னூட்டமாய் இட இருந்தேன்....இணையம் காலை வாரிவிட்டதால்....இப்போது இடுகிறேன்...அது ஏங்க மன்றம் மட்டும் திறக்கவேமாட்டேங்குது....ஆ...ஊன்னா....oops அப்படீன்னு வருது)

அக்னி
31-05-2011, 02:55 PM
அது ஏங்க மன்றம் மட்டும் திறக்கவேமாட்டேங்குது....ஆ...ஊன்னா....oops அப்படீன்னு வருது)
ஏங்காமத் திறந்துபாருங்க பாஸ்...

அ, ஆ, இ, ஈ, உ, ஊ...
நீங்க நினைச்சபடிக்கு அகர வரிசையை மாற்றி மாற்றிச் சொன்னாற் திறக்குமா...
தமிழ் மன்றமாயிற்றே... நான் மேலே குறிப்பிட்டபடி வரிசையாகச் சொல்லிப் பாருங்கள்...

அதற்குப் பிறகும்ம் திறப்பதில் ஏதாவது பிரச்சினை என்றால்,
பிரவீன், அன்புரசிகன் போன்றோரை நாடுங்கள்...

ஜானகி
31-05-2011, 03:06 PM
பூக்கும் தருணத்தில் பூ விடும் பெருமூச்சு சூடாக இருக்கிறதே..... மனதுக்கு இதமளிக்கும் பாடல் கூட அதன் தாபத்தைத் தீர்க்கமுடியவில்லையே.....சீக்கிரம் குளிரவையுங்கள்...

கலையரசி
31-05-2011, 03:40 PM
பூ பூக்கும் தருணம் என்ற தலைப்பில் கவிதையோ என்று திறந்தால் தொடர்கதை! ஆரம்பமே அட்டகாசமாயிருக்கிறது. நேரங்கிடைக்கும் போது படிப்பேன்.
வாழ்த்துக்கள் கீதம்!

சிவா.ஜி
31-05-2011, 03:54 PM
ஏங்காமத் திறந்துபாருங்க பாஸ்...

அ, ஆ, இ, ஈ, உ, ஊ...
நீங்க நினைச்சபடிக்கு அகர வரிசையை மாற்றி மாற்றிச் சொன்னாற் திறக்குமா...
தமிழ் மன்றமாயிற்றே... நான் மேலே குறிப்பிட்டபடி வரிசையாகச் சொல்லிப் பாருங்கள்...

அதற்குப் பிறகும்ம் திறப்பதில் ஏதாவது பிரச்சினை என்றால்,
பிரவீன், அன்புரசிகன் போன்றோரை நாடுங்கள்...

என் கவலை எனக்கு......நெடிய பின்னூட்டம் தட்டச்சி....பதியப்போகும் நேரத்தில்......மன்றம் திறக்காமல் சண்டித்தனம் செய்கிறது....என்ன செய்வது?

அக்னி
31-05-2011, 04:31 PM
சிவா.ஜி...
மாற்று உலாவிகளைப் பயன்படுத்திப் பாருங்களேன்...
இப்போது அதிகமாக குரோமைத்தான் பயன்படுத்துகின்றேன். சில ஒத்துழைப்புக்கள் நல்காத போதும், நன்றாகவே இயங்குகின்றது...

சிவா.ஜி
31-05-2011, 05:04 PM
நான் எப்போதுமே குரோம்தான் அக்னி...அதுதான் இப்படி அடிக்கடி oops ன்னு சொல்லுது...

சிவா.ஜி
31-05-2011, 05:05 PM
நான் எப்போதுமே குரோம்தான் அக்னி...அதுதான் இப்படி அடிக்கடி oops ன்னு சொல்லுது...

கீதம்
31-05-2011, 10:32 PM
என்னடா இன்னும் எதுவும் அரம்பிக்களியேன்னு பாத்தேன், என்னோட எதிர்பார்ப்பு பொய்யாகல. சோகத்தோடு தொடங்கும் நண்பர்கள் கதையா? கூட்டிகிட்டு போங்க, ஆனா ரொம்ப அழவைக்க கூடாது ஆமா :)

இப்படியெல்லாம் நிபந்தனை விதிச்சா நான் அழுதிடுவேன் ஆமா.... :)

முதல் பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ். முதல் பகுதியிலேயே கதையைக் கணிச்சிடாதீங்க. தொடர்ந்து வாங்க.


புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் நிழல், பிரிவு...
அதுவே, நிரந்தரப் பிரிவை மறக்க முடியாமல் நினைத்து வாழ்வது என்றாகையில்,
முழுக்கணங்களுமே கனதிதான்...

அற்புதமான தொடக்கம்...

தொடருங்கள் கீதம்+அக்கா...

நன்றி அக்னி. அருகிருந்தாலும் அந்நியமாயிருந்தாலும் பிரிவின் வலி கொடுமையல்லவா? தொடர்ந்து வாங்க.


அழுத்தமான தொடக்கம் .... அசத்துங்கள் ... கதையை படித்து முடிக்கும் வரை எமி ஜாக்சனின் அழகிய கண்களும் எங்கள் மனக்கண்ணில் கூடவே வந்தது .

பின்னூட்டத்துக்கு நன்றி ரவி. இனி ஏமி ஜாக்ஸனை மறந்திடுங்க. அவருக்குப்பதில் ஜாக்கி தொடர்வாள். :)

கீதம்
31-05-2011, 10:39 PM
ஆஹா...தங்கையின் கை வண்னத்தில் அடுத்ததொரு அற்புதத் தொடரா....ஆரம்பமே மென்மையான பாடல் வரிகளுடன் மனதுக்குள் நுழைந்து அமர்ந்துகொண்டது. ஏமி ஜாக்சன் நினைவு படுத்தும் அந்த பழையப் பறவை யார்...அதுக் கொத்திக் கிளறும் நினைவுப்புண்ணுக்கு பின்னனி என்ன என்ற சிறிய சஸ்பென்ஸும் சேர்ந்துகொண்டு,

“மனப்புண்ணை, பாடல்காக்கையொன்று மறுபடியும் கொத்திக்கிளற… நினைவுக்குருதி வழிய ஆரம்பித்தது.”

இப்படிப்பட்ட ’அட’ ரக வார்த்தையாடல்களுடன் அட்டகாசமாய் பயணிக்கத்தொடங்கியக் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பூக்கள் பூக்கும் தருணம்...இனி அடிக்கடி வரனும் என்ற ஆவலுடன்......

(முதல் பின்னூட்டமாய் இட இருந்தேன்....இணையம் காலை வாரிவிட்டதால்....இப்போது இடுகிறேன்...அது ஏங்க மன்றம் மட்டும் திறக்கவேமாட்டேங்குது....ஆ...ஊன்னா....oops அப்படீன்னு வருது)

உங்கள் பின்னூட்டம் கண்டு பெரும் மகிழ்ச்சி அண்ணா. எழுத்தைக் கூர்ந்து கவனித்து சிலாகிக்கும் பாங்குக்கு என் சிறப்பு நன்றி.

அது ஏன் இணையம் சில நாட்களாய் (மாதங்களாய்?) உங்களுடன் சண்டித்தனம் செய்துகொண்டே இருக்கிறது? விரைவில் பிரச்சனை தீர்ந்து மறுபடியும் பழையபடி படைப்புகளால் வலம் வர வேண்டுகிறேன்.


பூக்கும் தருணத்தில் பூ விடும் பெருமூச்சு சூடாக இருக்கிறதே..... மனதுக்கு இதமளிக்கும் பாடல் கூட அதன் தாபத்தைத் தீர்க்கமுடியவில்லையே.....சீக்கிரம் குளிரவையுங்கள்...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே. கொதித்திருக்கும் மனத்தைக் குளிர்விப்பது அத்தனை சுலபமா, என்ன? இருந்தாலும் முயற்சி செய்கிறேன். :)


பூ பூக்கும் தருணம் என்ற தலைப்பில் கவிதையோ என்று திறந்தால் தொடர்கதை! ஆரம்பமே அட்டகாசமாயிருக்கிறது. நேரங்கிடைக்கும் போது படிப்பேன்.
வாழ்த்துக்கள் கீதம்!

நன்றி அக்கா. பொறுமையாகத்தான் தொடர இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது படிங்க.

கீதம்
01-06-2011, 10:31 AM
(2)

நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…

மனம் பழைய நினைவுகளைத் தூசு தட்டத் தொடங்கியிருந்தது. அது இப்போது அவன் கட்டுப்பாட்டை விட்டு விலகிப்போயிருந்தது. சொல்பேச்சுக் கேளாக்குழந்தை போல் அதன் விருப்பத்துக்கு அங்குமிங்கும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது. சுகமான கற்பனைகளில் மூழ்கியது. விழித்துக்கொண்டே கனவுகள் கண்டது.

ஜாக்கியோடு குடும்பம் நடத்துவதாகக் கற்பனை செய்துபார்த்தான். இனித்தது. இப்போது ஜாக்குலின் எப்படி இருப்பாள்? அவள் அம்மாவைப் போல் இருப்பாளா? பதினாறு வயதில் பாப் கட்டிங்கும், கையில்லாத குட்டைக் கவுனும் போட்டுக்கொண்டு பட்டாம்பூச்சியெனத் திரிந்த அவள் உருவமே மனத்தில் வளையவந்தது. ஒரு நடுத்தர மாதுவாக அவளைக் கற்பனை செய்ய முடியவில்லை. இவனைத் திருமணம் செய்துகொண்டதால் அவள் புடவையுடுத்தி இருப்பாளா? அல்லது அவள் பாரம்பரியப்படி இன்னமும் அவள் அம்மா, பாட்டி போல் கவுன் அணிந்திருப்பாளா? தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவள் குணம் மாறியிருக்கப்போவதில்லை.

கிரியின் மனைவியைப் போல் ஜாக்குலின் கலங்கி அழமாட்டாள். எப்போதும் சிரித்த முகமும், மெல்லிய தெனாவெட்டும் அவள் உடன்பிறந்தவை.

சுந்தர் வீட்டுக்குப் போன் செய்கிறான். அதோ.... விரித்தக் கூந்தல் காற்றில் அலையெழுப்ப ஜாக்கி ஓடி வருகிறாள்.

சந்தன நிறத்தில் கருநிறப்பூக்கள் தெளித்தாற்போன்ற மெல்லிய பூனம் புடவையணிந்திருக்கிறாள். அதற்குப் பொருத்தமாய் கையில்லாத கருநிற ரவிக்கை அணிந்திருக்கிறாள். சந்தனச் சிற்பமாய் வழுவழுப்பான தேகத்தில் அவளுக்கும் புடவையின் நிறத்துக்கும் வித்தியாசம் அதிகம் தெரியவில்லை.

இளஞ்சிவப்பு வண்ண இதழ்களில் புன்னகை இழையோட ஓடிவந்து தொலைபேசியை எடுக்கிறாள். இரண்டு குழந்தைகளைப் பெற்றவள் என்பது சொன்னால்தான் தெரியும் என்ற அளவில் கட்டுக்கோப்பாயிருக்கும் அவள் தேக வனப்பில் கிறங்கிப்போகிறான். மெலிதாய் மூச்சுவாங்க, கண்களில் பரவசத்துடன்,

"ஹாய், டார்லிங், எப்படியிருக்கே?"

"ஏய், ஜாக்கி, நான்தான்னு எப்படிக் கண்டுபிடிச்சே?"

" இந்நேரத்துக்கு நீதான டார்லிங் போன் பண்ணுவே..."

"நம்ம வாரிசுகள் எங்க?"

"சன் ஸ்கூலுக்குப் போயிருக்கு, பேபி தூங்குது"

"அக்கா?"

"அக்கா மார்க்கெட் போயிருக்கு, என்ன நீ என்னை விட்டுட்டு எல்லாரையும் கேக்குறே?"

"ச்சீ, அசடு, யாரும் இல்லைனாதானே உங்கிட்ட ஒண்ணு கேக்கமுடியும், அதான்..."

"ஓ.... நீ ரொம்ப ஸ்மார்ட்தான், என்ன வேணும் உனக்கு?"

"என்னடி எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறே...."

“ஏய், நீ டீ சொன்னா.... நான் அதை சொல்வேன்.."

"என்னடீ சொல்லுவே...? "

"ம்? சுந்தர் பந்தர்னு சொல்லுவேன்"

"அடிப்பாவி, இன்னுமா ஞாபகம் வச்சிருக்கே?"

"மறக்குமா அதெல்லாம்?"

"ஹும், அப்போ.... நீ குட்டிப் பொண்ணு.... ரொம்ப அழகா துருதுருன்னு இருப்பே...."

"அப்படின்னா... இப்ப வயசாயிப்போச்சின்னு சொல்றியா?"

"வயசாக ஆகத்தான் ஜாக்கி நீ ரொம்ப அழகா இருக்கே...."

"ஐ லவ் யூ டார்லிங், எப்போ இந்தியா வருவே?"

"வந்திடுறேன்டி செல்லம், அதுக்கு முன்னாடி ஒண்ணு கேட்டேனே.... அப்படியே பேச்சை மாத்திட்டே பாரு.... சரி, இப்ப கொடு..."

"யூ நாட்டீ.... பேபி முழிச்சிடுச்சி.... அழுவுது பாரு.... நான் போறேன்"

"ஏய்... சும்மா சொல்லாத.... கொடுத்திட்டுப் போடீ...."

"ஓ மை காட்.... உனக்கு பேபி அழுவுற சத்தம் கேக்கலையா.... நீ நாளைக்கு போன் பண்ணு.... பை....."

"யேய்.... ஜாக்கீ......ஜாக்கீ......ஜாக்கீ....."

காதலின் தீவிரத்தில் உணர்ச்சிபொங்கக் கத்தினான், அது கனவென்பதையும் மறந்து. பக்கத்திலிருந்த கிரி பயந்துபோய் அவனை உலுக்கினான்.

"சுந்தர், என்னடா..... என்னடா ஆச்சி ஏண்டா ஜாக்கி ஜாக்கின்னு கத்துறே.... ஏதாவது ரேஸா....? எந்தக் குதிரை ஜெயிச்சது? "

கிரி சிரித்தான். சுந்தர் குற்றவுணர்வின் பிடிக்குள் இறுக்கப்பட்டான். தன் கேடுகெட்டத் தனத்தை நினைத்து வெறுப்பின் உச்சத்துக்குப் போனான். தனக்குச் சொந்தமில்லாத ஒருத்தியைப் பற்றித் தவறாக எண்ணியதற்காகக் குமைந்தான்.

ஆழ்மனத்துள் அழுத்திவைக்கப்பட்டிருந்த அற்ப ஆசையெல்லாம் நேரம்பார்த்து துளிர்விடத்தொடங்கிவிட்டது புரிந்தது. சட்டென்று எழுந்து குளியலறை புகுந்து முகத்தைக் கைகளால் தாங்கி அழ ஆரம்பித்தான்.

கனவு தந்த சுகம் பரம திருப்தியாயிருந்தது. ஜாக்கியுடன் நிஜமாகவே வாழ்வதைப் போன்ற பரவச உணர்வைத் தந்தது. இது இன்னமும் நீடித்திருக்க கூடாதா என்று மனம் ஏங்கியது. இத்தனைக் காலமும் இந்த அனுபவத்தைத் தவற விட்டோமே என்று துடித்தது. கண்டதெல்லாம் உண்மை என்று கண்மூடித்தனமான நம்பிக்கை ஒன்றும் கிளைத்தது. முட்டாள்! கனவுக்கும் நனவுக்கும் வித்தியாசம் அறியாப் பேதையென சமகாலத்தில் மூளை அறிவித்து உணர்வுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொணர்ந்தது.

முட்டாள்தான்! இல்லையென்றால் அந்த மாசற்ற ரத்தினத்தைத் தவறவிட்டுவிட்டு இப்படி கண்காணாத இடத்தில் அவள் நினைவுகளோடு போராடிக் கொண்டிருப்பேனா? சுந்தர் அழுது ஓய்ந்தபின் தெளிவானான். குளிர்நீரால் முகத்தைக் கழுவிவிட்டு வெளியில் வந்தான்.

கிரி எதுவும் கேட்கவில்லை. சுந்தரின் அழுகை புதியது. அவனுள் உண்டாகியிருக்கும் மாற்றத்தை உள்ளுக்குள் வரவேற்றான். இதுவரை இறுக்கம், விரக்தி, எரிச்சல், இயலாமை, கோபம், விட்டேத்தியான சிரிப்பு இவற்றை மட்டுமே தக்கவைத்திருந்த முகத்தில் முதன்முறையாகக் கண்ணீர்! அடக்கிவைக்கப்பட்ட துக்கத்தைக் கண்ணீரால் கரைத்து வெளியேற்றுகிறான் போலும். யாரிடமும் பகிராமல் வேதனைகளைத் தனக்குள் முடக்கி வைத்திருப்பதால் அவன் கண்ட பலன் தான் என்ன? இப்போதாவது இறுக்கம் தளரட்டும்.

ஜாக்கி யார்? ஜாக்கி என்னும் வார்த்தையை முதன் முதலாகக் சுந்தரின் வாயிலிருந்து கேட்கிறான். சுந்தருக்கு ஒரு பழைய காதல் இருந்ததாக மட்டும்தான் அறிந்திருக்கிறான். மற்றபடி அவன் காதலியின் பெயரோ.... ஊரோ.... அந்தக் காதல் தோற்றதா? ஏமாற்றப்பட்டதா? எதுவும் தெரியாது. இன்று ஜாக்கி என்ற பெயரைச் சொல்லி அவன் கத்தியதும் தான் அவனைக் கேலி செய்ததும் ஏதாவது காயத்தை உண்டாக்கியிருக்கலாம் என்ற நினைப்போடு கிரி அமைதி காத்தான்.

சுந்தரின் அழுது சிவந்த கண்கள் கிரிக்கு அவன்பால் மிகுந்த பச்சாதாபத்தை உண்டாக்கின. சுந்தரைப் பொறுத்தவரை அவனுக்கு பெரிய அளவில் நண்பர்கள் கிடையாது. எல்லாரையும் ஒரு எல்லைக்கு வெளியிலேயே நிறுத்திக் கொண்டாடினான். மற்றவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதும் இல்லை, தன் அந்தரங்கத்தில் மற்றவர் தலையிடுவதையும் வரவேற்பதில்லை. ஆனால் கிரிக்கு தனிமையின் கொடுமையைத் தவிர்க்க நட்பு தேவைப்பட்டது. அவனாகவே வலிந்து சுந்தரின் நட்பைப் பெற்றான். ஒரு கட்டத்தில் உரிமையின் மிதப்பில் கிரி அவனிடம் கேட்டான்.

"நம்ம ரெண்டுபேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதானே... நண்பர்களா இருப்போமே....நான் உங்களை போடா வாடான்னு சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டீங்கதானே? "

உடன்பாடான பதிலை எதிர்நோக்கியவனுக்குக் கிடைத்தது அதிர்ச்சிதான்.

"நான் யோசிச்சுச் சொல்றேனே...."

பெருத்த ஏமாற்றம் அடைந்தாலும் கிரி தன்னிலை மாறவில்லை. வழக்கம்போலவே அவனுடன் உறவாடினான். அப்போது டேனியலும் சுந்தரும் இந்த வீட்டைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். டேனியல் பெர்த்துக்கு வேறு வேலை கிடைத்துப் போய்விட... டேனியலின் அறிமுகத்தால் அங்கு தங்கிய கிரி வேறுவழியில்லாமல் அங்கேயே தங்கிவிட... சுந்தருக்கும் கிரிக்குமிடையில் நட்பிழை அவர்களறியாமலேயே வலுவாகப் பின்னப்பட்டது.

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. என்னதான் வாடா போடா என்று அழைத்துப் பேசிப் பழகினாலும், கிரி அளவுக்கு சுந்தர் அவனிடம் வெளிப்படையாய் இல்லை என்பதுதான் உண்மை.

கிரி, தன்னைப் பற்றி, கவிதாவைப் பற்றி, தங்கள் காதலைப் பற்றி, ஆட்டிஸக் குழந்தையான மகனைப் பற்றி, அந்தஸ்த்தில் ஊறித் திளைத்தப் பெற்றோரின் பாராமுகம் பற்றி, வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்னும் வெறியோடு துவங்கிய வியாபாரம் பற்றி, அதில் நுணுக்கம் அறியாது தோற்றது பற்றி, வாட்டிய கடன் பற்றி, வழியற்று அங்கு வந்து சேர்ந்த விதி பற்றி.... எல்லாவற்றையும் அவனிடம் ஒப்பித்துவிட்டான்.

ஒளிவுமறைவில்லாத தன் இறந்தகாலம் பற்றி அவன் இத்தனை எடுத்துரைத்தப் பின்னும் கூட, சுந்தரால் தன் இறந்த காலம் பற்றி எதையும் பகிரத்தோன்றவில்லை. எதுவோ தடுத்தது.

இத்தனை நாள் மனதுக்குள் மூடிவைத்திருந்த உணர்வுகள் இன்று அவன் சுயநினைவற்ற நொடியில் கசியத் தொடங்கிவிட்டன. இனியும் அவற்றைக் கட்டுப்படுத்தினால் என்றேனும் அது வெடித்துச் சிதறி பெருத்த சேதம் உண்டாக்கலாம் என்னும் நினைவு எழ... தோள் பற்றித் தேற்றிய நண்பனிடம் சுந்தர் தன் மனதை மெல்லத் திறந்து காட்டலானான். மடை திறக்கப்பட்ட நினைவு வெள்ளத்தில் சுகமாய் எதிர்நீச்சல் போட்டு முன்னேறினான்.

ஏதோ நினைவுகள்…. கனவுகள்…..
மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பது தான் ஏனோ....
ஏதோ நினைவுகள்... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0124'&lang=ta)

(தொடரும்)

Ravee
01-06-2011, 10:57 AM
ம்ம் ஜெசிதா ஜெசிகா எல்லாம் போய் இப்ப புதிதாய் ஜாக்கி அலையா ? :p ஆடுகளம் டாப்சியை வர்ணித்தது போல இருக்கே அக்கா .... உங்க வழக்கமான ஸ்டெயிலே மாறி இருக்கு .... சுஜாதாவின் குறும்புகள் போல தெரிகிறது இடையிடையே .... இளமை கொண்டாடும் தொடராக இருக்குமா ..... இனிமேலும் .... :aetsch013:

கீதம்
01-06-2011, 11:32 AM
ம்ம் ஜெசிதா ஜெசிகா எல்லாம் போய் இப்ப புதிதாய் ஜாக்கி அலையா ? :p ஆடுகளம் டாப்சியை வர்ணித்தது போல இருக்கே அக்கா .... உங்க வழக்கமான ஸ்டெயிலே மாறி இருக்கு .... சுஜாதாவின் குறும்புகள் போல தெரிகிறது இடையிடையே .... இளமை கொண்டாடும் தொடராக இருக்குமா ..... இனிமேலும் .... :aetsch013:

அக்காவுக்கு அழுகாச்சி கதைகள் மட்டும்தான் எழுதத் தெரியும்னு இனிமேல் யாரும் சொல்லமாட்டீங்கதானே? :D

வித்தியாசமான முயற்சிதான். விஷப்பரிட்சை தேவையான்னு வாசகர்கள் புலம்பாமல் இருந்தால் அதுவே போதும். :)

அக்னி
01-06-2011, 11:32 AM
அந்தரங்கங்களோடு அந்தரங்கமாய் வாழ்வது மிகக் கடினம்தான்.
ஆனால், ஏதோ ஒன்று அப்படியே வாழ வைத்துவிடுகின்றது.
சொல்லி என்ன பயன், அல்லது சொல்லாது விடுவதால் என்ன நட்டம் என்று,
சீர்தூக்கும் மனித மனது, சொல்லாமலே வாழப் பழகிக் கொள்கின்றது.

அந்தரங்கத்தோடு வாழும் ஒருவன்/ள், அனைத்திலும் அவனாக அவளாக வாழ்ந்துகொண்டேயிருப்பார்கள்...
அவர்களின் அந்தரங்க உலகில், தனிமையாக அவர்கள் மட்டுமே..,
ஆனால் எல்லாமாக நிறைந்திருப்பார்கள்...

எல்லோர் மனதும் மற்றோர் நுழையவிடாமல் ஓர் எல்லையோடு தடுத்துவிடும்.
அந்த எல்லைக்கப்பால், அந்த மனதுக்குரியவருக்கு மட்டுமே அனுமதி.
உட் கொண்டு வரவும் முடியாமல், வெளிக் கொண்டு செல்லவும் முடியாமல்,
மனச்சிறைச்சாலைக்குள் அடிக்கடி சிறைப்பட்டுத்தான் வாழ்கின்றோம் அந்தரங்கமாய்...

எழுத்தில் வித்தியாசம், களம் புதிது, கதை அமைப்புப் பாடலோடு இணைந்து மிகப் புதிது...

அடுத்த பாகத்திற்காய்க் காத்திருக்கின்றேன்...

சிவா.ஜி
01-06-2011, 01:17 PM
சுந்தரின் பழையக் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் எழுத்து. அழகான வார்த்தையாடல்களுடன், நேர்த்தியான சம்பவக் கோர்ப்புகள் அதனோடு இழைந்திருக்கும் உணர்வுகள் என மிக அழகாய் பயணிக்கிறது கதை.

சுந்தரின் மூடிய மனக்கதவுகள் கிரியின் நட்புச் சாவிக்கு எப்போது திறக்கும், அவனுடைய மனக்குதிரையை உள்ளுக்குள் உதைத்துக்கொண்டிருக்கும் ஜாக்கியின் நினைவுகளிலிருந்து எப்போது, எப்படி வெளியே வரப்போகிறான்....

பரிமாறியவுடன் சூடு ஆறாமல் சுவைக்கக் காத்திருக்கிறோம் தங்கையே....

Nivas.T
01-06-2011, 02:49 PM
சூழ்நிலையும் அதற்க்கான பாடல்களின் வரிகளும் மிக பொருத்தம். நட்பின் விளக்கமும் இருவேறு என்னங்ககளின் சங்கமிப்பும் ஒரு அற்ப்புதம் அதை நட்பைத்தவிர வேறு எங்கும் சிறப்பாக காண முடியாது.

மிக அருமை தொடருங்கள்

கீதம்
02-06-2011, 07:13 AM
அந்தரங்கங்களோடு அந்தரங்கமாய் வாழ்வது மிகக் கடினம்தான்.
ஆனால், ஏதோ ஒன்று அப்படியே வாழ வைத்துவிடுகின்றது.
சொல்லி என்ன பயன், அல்லது சொல்லாது விடுவதால் என்ன நட்டம் என்று,
சீர்தூக்கும் மனித மனது, சொல்லாமலே வாழப் பழகிக் கொள்கின்றது.

அந்தரங்கத்தோடு வாழும் ஒருவன்/ள், அனைத்திலும் அவனாக அவளாக வாழ்ந்துகொண்டேயிருப்பார்கள்...
அவர்களின் அந்தரங்க உலகில், தனிமையாக அவர்கள் மட்டுமே..,
ஆனால் எல்லாமாக நிறைந்திருப்பார்கள்...

எல்லோர் மனதும் மற்றோர் நுழையவிடாமல் ஓர் எல்லையோடு தடுத்துவிடும்.
அந்த எல்லைக்கப்பால், அந்த மனதுக்குரியவருக்கு மட்டுமே அனுமதி.
உட் கொண்டு வரவும் முடியாமல், வெளிக் கொண்டு செல்லவும் முடியாமல்,
மனச்சிறைச்சாலைக்குள் அடிக்கடி சிறைப்பட்டுத்தான் வாழ்கின்றோம் அந்தரங்கமாய்...

எழுத்தில் வித்தியாசம், களம் புதிது, கதை அமைப்புப் பாடலோடு இணைந்து மிகப் புதிது...

அடுத்த பாகத்திற்காய்க் காத்திருக்கின்றேன்...

அழகான உளவியல் ஆராய்ச்சி. சிலர் இயல்பாகவே அப்படி இருப்பார்கள். சிலர் வலிய உருவாக்கியிருப்பார்கள். வலிந்து உருவாக்கியதெனில் என்றேனும் தன்னையறியாமலேயே கலைந்துவிடும் அல்லவா?

தொடர்ந்து வருவதற்கு நன்றி அக்னி.


சுந்தரின் பழையக் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் எழுத்து. அழகான வார்த்தையாடல்களுடன், நேர்த்தியான சம்பவக் கோர்ப்புகள் அதனோடு இழைந்திருக்கும் உணர்வுகள் என மிக அழகாய் பயணிக்கிறது கதை.

சுந்தரின் மூடிய மனக்கதவுகள் கிரியின் நட்புச் சாவிக்கு எப்போது திறக்கும், அவனுடைய மனக்குதிரையை உள்ளுக்குள் உதைத்துக்கொண்டிருக்கும் ஜாக்கியின் நினைவுகளிலிருந்து எப்போது, எப்படி வெளியே வரப்போகிறான்....

பரிமாறியவுடன் சூடு ஆறாமல் சுவைக்கக் காத்திருக்கிறோம் தங்கையே....

ரொம்ப அழகாப் பின்னூட்டமிடுகிறீர்கள். தொடர்ந்து வருவதற்கு நன்றி அண்ணா.


சூழ்நிலையும் அதற்க்கான பாடல்களின் வரிகளும் மிக பொருத்தம். நட்பின் விளக்கமும் இருவேறு என்னங்ககளின் சங்கமிப்பும் ஒரு அற்ப்புதம் அதை நட்பைத்தவிர வேறு எங்கும் சிறப்பாக காண முடியாது.

மிக அருமை தொடருங்கள்

நன்றி நிவாஸ். உங்கள் தொடர்கதையும் அசத்தலான ஆரம்பத்துடன் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. தொடர்ந்து வருவதற்கு நன்றி நிவாஸ்.

பூமகள்
02-06-2011, 10:46 AM
நான் இன்னும் படிக்கவில்லை.. பின்னே எதுக்கு பின்னூட்டம் போடுகிறேன் என்று கேட்கிறீர்களா??

அக்காவை தட்டிக் கொடுக்கத் தான்.. அக்கா அசத்துங்க.. பின்னூட்டங்களே கட்டியம் கூறுகிறது..

மனம் போர் மூட்டி வேடிக்கைப் பார்க்க போகிறீர்கள்.. ஹ்ம்ம்... எத்தனை பேர் தன்னுள் சண்டையிட்டுப் போகிறார்களோ??!! ;)

தொடருங்கள் அக்கா.. :)

கீதம்
02-06-2011, 10:50 AM
நான் இன்னும் படிக்கவில்லை.. பின்னே எதுக்கு பின்னூட்டம் போடுகிறேன் என்று கேட்கிறீர்களா??

அக்காவை தட்டிக் கொடுக்கத் தான்.. அக்கா அசத்துங்க.. பின்னூட்டங்களே கட்டியம் கூறுகிறது..

மனம் போர் மூட்டி வேடிக்கைப் பார்க்க போகிறீர்கள்.. ஹ்ம்ம்... எத்தனை பேர் தன்னுள் சண்டையிட்டுப் போகிறார்களோ??!! ;)

தொடருங்கள் அக்கா.. :)

அன்புக்கு நன்றி பூமகள். நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படிச்சிட்டு கருத்து சொல்லணும். என்ன?

கீதம்
02-06-2011, 12:27 PM
(3)

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்,

விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு.

நேரம் மாலை ஏழு மணி நாற்பத்தைந்து நிமிடம் பத்து நொடிகள்.

தேன் கிண்ணம்.

இன்றைய தேன்கிண்ணத்தில் முதலாவதாய் ஒலிக்கும் பாடல் இடம்பெற்றத் திரைப்படம் இதயக்கமலம்.

பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்,

இசை கே.வி.மகாதேவன்,

பாடலைப் பாடியவர் பி.சுசிலா.

அறிவிப்பைக் கேட்டதுமே சித்ரா துள்ளலுடன் ஓடிச்சென்று வானொலியின் சத்தத்தைக் கூட்டினாள். தேன்குரலில் சுசீலா பாடத்தொடங்கினார்.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல…
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல….
நீ இல்லாமல் நானும் நானல்ல….
நீ இல்லாமல் நானும் நானல்ல….

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி…
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி…
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0505'&lang=ta)….


இந்தப் பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம் அப்பா அம்மாவை குறும்புன்னகையுடன் பார்ப்பார். அம்மாவும் இதழ்களில் நெளியும் புன்னகையை மிகவும் வலிந்து அடக்கி மெளனமாய் ரசிப்பாள்.

இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தத் திரைப்படம்தான் அவர்கள் திருமணமானபின் பார்த்த முதல் திரைப்படமாம். பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்தக் காலத்துக்கே தங்கள் நினைவுகளை அழைத்துச் சென்று ரசிக்கும் அவர்களின் அந்நியோன்னியம் சுந்தருக்கும், சித்ராவுக்கும் மிகவும் பிடிக்கும். இருவரின் இந்த இதமான ரசனைக்காகவே இப்பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகாதா என்றிருக்கும்.

கரம்பிடித்து கால்நூற்றாண்டாகப் போகிறதென அம்மா அலுப்பது போல் சொல்லிக்கொண்டாலும் உள்ளுக்குள் உவகை மிளிர்வதை அவள் கண்களும் உதடுகளும் காட்டிக்கொடுத்தன.

அப்படியொரு அழகான சந்தர்ப்பமாக அமையவேண்டிய அந்த நாளில் அம்மா எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள். அவளது நடவடிக்கைகள் புதிராக இருந்தன.

"சுந்தர், உங்கப்பாவுக்கு தோசை ஊத்தலாமான்னு கேளு"

"சுந்தர், தோசைக்கு சாம்பாரும் பொடியும் போதுமா, இல்ல... சட்னி அரைக்கணுமான்னு கேட்டுச் சொல்லு"

"சித்ரா, அந்த மேஜை மேல உங்க அத்தைகிட்டயிருந்து வந்த லெட்டர் இருக்கு. உங்கப்பாகிட்ட எடுத்துக்குடு"

அம்மாவின் கடுகடுப்பைத் துளியும் பொருட்படுத்தாமல் குமுதத்தை முகர்ந்துகொண்டிருந்தார் அப்பா. சித்ராவும் சுந்தரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாய்ப் புன்னகைத்துக்கொண்டனர். ஊடல் போலும். இன்று கொஞ்சம் காரம் தூக்கலாய்!

எனவேதான் குதூகலமான சித்ரா அம்மா அப்பாவின் ஊடல் தீர்க்கும் நிமித்தம் பாட்டின் சத்தத்தைக் கூட்டிவைத்தாள். சட்டென்று அம்மா இளகிவிடமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில்!

"சனியன்களா.... ரேடியோ சத்தத்தைக் குறைச்சி வைங்க...காதை அடைக்குது..."

இப்படியொரு வசனம் அம்மாவின் வாயிலிருந்து அதுவும் அந்தப் பாடலின்போது வெளிப்படுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் சனியன்கள்? புழக்கத்திலிருந்து மறைந்து போன வார்த்தையை அம்மா அகழ்வாராய்ந்து கொண்டுவருகிறாள், அதுவும் வளர்ந்த பிள்ளைகளைப் பார்த்து எனில்....அம்மா பலமாகக் காயப்பட்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

சித்ரா பாவாடை தடுக்க எழுந்தோடிச் சென்று பாட்டின் சத்தம் குறைத்தாள். அவள் பயந்துவிட்டாள் என்பது அவள் ஓடிய ஓட்டத்தில் புரிந்தது. என்னாச்சு அம்மாவுக்கு?

படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வீசியெறிந்துவிட்டு ஆவேசமாக எழுந்தார் அப்பா. எழுந்தவேகத்தில் சாய்வுநாற்காலி சரிந்து விழுந்தது.

"இங்க பார், உனக்கு என்மேல கோவம்னா என்கிட்ட காட்டு, எதுக்குப் பிள்ளைகளை சனியன் அது இதுங்கறே?"

அம்மாவும் பதிலுக்கு ஆக்ரோஷமானாள்.

"என் பிள்ளைகளைத் திட்டக் கூட எனக்கு உரிமை இல்லையா? இந்த வீட்டுல எனக்குன்னு என்னதான் உரிமை இருக்கு. சொல்லிடுங்க. நான் பாட்டுக்கு ஒரு வேலைக்காரி மாதிரி வேலை செஞ்சிட்டு ஒரு மூலையில கிடக்கிறேன்."

"ஏய், என்ன நினைச்சிகிட்டிருக்கே நீ? ஒரு மனுஷன் கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி அவ்வளவு தூரம் சொல்றேன், புரிஞ்சுக்காம நாட்டுப்புறம்கிறதை நிரூபிக்கிறியே.... "

"அப்பாடி, இத்தனை வருஷம் சொல்லலையேன்னு நினைச்சேன், இன்னைக்கு சொல்லிட்டீங்க, நாட்டுப்புறம்னு தெரிஞ்சிதானே கட்டிகிட்டீங்க? அப்புறம் என்ன இருவத்திநாலு வருசத்துக்கு அப்புறம் சொல்லிக்காட்டுறது? கெழவியாயிட்டேன், தல நரச்சிப்போச்சி, இனிமே உங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிவேன்? பட்டிக்காடாத்தான் தெரிவேன்"

இருபத்திரண்டு வயதில் மகளையும் பதினெட்டு வயதில் மகனையும் முன்னிலையில் வைத்துக்கொண்டு சண்டையிடுகிறோமே என்ற பிரக்ஞையற்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சித்ராவும் சுந்தரும் அப்பா அம்மாவின் பிரச்சனையின் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பி நின்றனர். நேற்றுவரை ஊர் மெச்சும் வகையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் இப்படியொரு தர்க்கம் செய்வதை நம்ப முடியாமலும் அதை நிறுத்தும் வழியறியாமலும் சித்ரா தேம்பித் தேம்பி அழத்துவங்கினாள்.

"அப்பா.... என்னப்பா.... சத்தம் போட்டுகிட்டு? என்ன விஷயம்பா... அம்மா.... நீங்களாவது சொல்லுங்க... என்ன பிரச்சனை? உங்களால அக்கா அழுவுது பாருங்க, அக்கா... அழுவாத...ப்ளீஸ்..."

சுந்தர் மூவருக்குமிடையில் அல்லாடினான். சட்டென்று யுத்தகளம் அமைதியானது. அம்மா கண்ணீருடன் சித்ராவை அணைத்துக் கொண்டாள். சித்ரா அம்மாவின் மடியில் தலைசாய்த்துக்கொள்ள, அப்பா நாற்காலியை அவளருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"சித்ரா.... எழுந்திரும்மா.... ஒண்ணுமில்லம்மா.... சின்னப் பிரச்சனைதான். உங்கம்மாதான் ஒரேயடியா பெரிசு பண்றா....சுந்தர், நீயும் வா.... என்ன பிரச்சனைன்னு சொல்றேன் கேளுங்க.... என் ஃபிரெண்டு ராமலிங்கம் தெரியும்ல... அவங்க வீட்டுல ஒரு ஆங்கிலோ இந்தியன் எஞ்சினியர் ரொம்ப வருஷமா குடியிருக்கார். ரொம்ப நல்ல மாதிரின்னு சொன்னான். ராமலிங்கம் இப்போ பொண்ணு வீட்டோட வட இந்தியாவுக்கே போறதால் வீட்டை விக்கிறான். வாங்கினவன் வீட்டை இடிச்சிட்டு அபார்ட்மென்ட்ஸ் கட்டப்போறானாம். எஞ்சினியருக்கு வீடு ஒண்ணும் அவசரத்துக்குக் கிடைக்கலையாம். ராமலிங்கம் என்கிட்ட கேட்டான், நானும் கீழ் போர்ஷனுக்கு இன்னும் ஆள் வரலைங்கிறதால் சரின்னு சொல்லிட்டேன்...."

"நம்மள ஒரு வார்த்தை கேக்கிறதில்ல..." அம்மா முணுமுணுத்தாள்.

"நல்ல மனுஷங்க, பிக்கல் பிடுங்கல் கிடையாது, கிட்டத்தட்ட ஏழு வருஷம் அவன் வீட்டுல எந்தப் பிரச்சனையும் இல்லாமத்தானே இருந்திருக்காங்கன்னு சொன்னேன். அது தப்பாம், எப்படி என்னைக் கேக்காம வாக்குக் குடுக்கலாம், அவங்க இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு தகராறு பண்றா உங்கம்மா...அவங்க இன்னும் வந்து வீட்டையும் பாக்கல... அட்வான்ஸும் கொடுக்கல.... அதுக்குள்ள ஆச்சா போச்சான்னு கத்துறா"

அப்பா முடித்துவிட்டு அமைதியானார்.

"அம்மா, அவங்க வரதுல உங்களுக்கு என்னம்மா பிரச்சனை?" சுந்தர் கேட்டான்.

"என்ன பிரச்சனையா? டேய்... அவங்க சுத்தபத்தமா இருக்கமாட்டாங்கடா... மாட்டுக்கறி, பன்னிக்கறியெல்லாம் சாப்புடுவாங்க, வீட்டுலயும் ஆளுங்க மேலயும் எப்பவும் கவுச்சி வாடை அடிக்கும், குளிக்கவும் மாட்டாங்க, ஆம்பள பொம்பள வித்தியாசம் பாக்காம கட்டிப்புடிச்சிப் பேசுவாங்க, நான் நிறைய சட்டக்காரங்களப் பாத்திருக்கேன், முக்கியமா குடிப்பாங்க... ஐயையோ... என் விரதமெல்லாம் கெட்டுப்போயிடுமே..."

அம்மா குறைகளைப் பட்டியலிட்டாள். அப்பா அவசரமாக மறுத்தார்.

"ஏதோ ஒருத்தர் ரெண்டுபேர் இருந்தா ஒட்டுமொத்தமா எல்லாரையும் சொல்றதா? ஓவரா கற்பனை பண்றா..."

"சரி, அதை விடுங்க... அவங்க எப்படியோ போவட்டும், என்னைச் சொல்லுங்க, நான் ஒரு ஆத்திர அவசரத்துக்கு சீனி, காப்பித்தூள்னு இரவல் வாங்க முடியுமா? இல்ல, ஒருநாள் முடியலைன்னா வாசத்தெளிச்சு கோலம் போடுவாங்களா? தோ.... சித்ராவுக்கு வரன் பாக்க ஆரம்பிச்சாச்சி.... சட்டக்காரங்கள குடித்தனம் வச்சிருக்கோம்னு ஊரெல்லாம் ஒரு மாதிரி பேசமாட்டாங்க?"

"அப்பா... அம்மா சொல்றதும் சரிதானேப்பா? நீங்க கொஞ்சம் யோசிச்சி முடிவெடுத்திருக்கலாம்"

"நீயும் என்னடா அவளாட்டம் புரியாம பேசுறே? அந்த ராமலிங்கம் எனக்கு எத்தனை உபகாரம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஏன் உங்கம்மாவுக்கு நல்லாத் தெரியுமே... உங்க அத்தை கல்யாணத்துக்கு அவன் உதவலேன்னா நான் நடுத்தெருவுலதான் நின்னிருப்பேன். எவ்வளவோ செஞ்சிருக்கான், ஆனா.... என்கிட்ட உதவின்னு பதிலுக்கு எதையுமே கேட்டதில்ல. முதத் தடவையா கேட்டான், அதுவுமில்லாம இனி அவனை பார்ப்பேனான்னு கூடத் தெரியல... இதுவே எங்களோட கடைசி சந்திப்பாவும் இருக்கலாம். அதான் மனசு கேக்கல.... சரின்னு சொல்லிட்டேன். ஆனா அந்தத் துரை வந்து பாக்கட்டும், வீடு அவர் வசதிப்படி இருந்தா மேற்கொண்டு பேசுவோம். ஒருவேளை அவருக்குப் பிடிக்கலைன்னு வை... பிரச்சனையே இல்ல..."

அப்பா சொல்வதன் நியாயம் புரிந்தது. அம்மா சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், இனி சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல் சோர்ந்து அமர்ந்திருந்தாள். சித்ரா கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டு சிரித்தாள்.

"என்னடி, இவ்வளவு நேரம் அழுதே... இப்ப சிரிக்கிறே?"

"இதானா விஷயம்? நான் வேற என்னவோன்னு நினைச்சு பயந்திட்டேன்,"

"என்ன நினைச்சே?" மூவரும் ஒத்தக் குரலில் கேட்க, சித்ரா நெளிந்தாள்.

"சொல்லு, என்னன்னு நினைச்சு பயந்தம்மா?"

சித்ரா அம்மாவின் காதுகளில் கிசுகிசுப்பாய் எதையோ சொல்லிவிட்டு வெட்கத்துடன் எழுந்தோடிவிட....அம்மா ஆச்சர்யத்துடன் மேவாயில் கைவைத்து அவள் போன திக்கையே பார்த்திருந்தாள்.

"என்னவாம்?"

"ம்? என்னை டைவர்ஸ் பண்ணிட்டு வேற எவளையோ கட்டிக்கப் போறீங்கன்னு நினைச்சு பயந்தாளாம்" சொல்லிவிட்டு அம்மா சிரிக்க, அப்பா உச்சஸ்தாயியில் சிரிப்பலை எழுப்ப, சுந்தர் அக்காவின் அப்பாவித்தனத்தைக் கேலி செய்ய... தேன்கிண்ணத்தில் இறுதிப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.


காலம் மாறலாம் நம் காதல் மாறுமா…
தடைகள் தோன்றும்போதும்… தலைவியுன் பார்வை போதும்…
இனி வரும்....காலம் மாறலாம் நம் காதல் மாறுமா…

காலம் என்னும் தேனாற்றில் நாமிரண்டு ஓடங்கள்
வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை… வையகத்தின் பாடங்கள்

உள்ளங்கைகளால் உன்னை மூடுவேன்
உன்னை காக்கவே மண்ணில் வாழுவேன்

வாழும் காலம் யாவும்…மடியில் சாய்ந்தால் போதும்…
தோள்களில் தூங்கும் பாரிஜாதம்... இனி வரும்

காலம் மாறலாம் நம் காதல் மாறுமா… (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR3936'&lang=ta)

(தொடரும்)

Ravee
02-06-2011, 01:44 PM
ம்ம்ம் இதுதான் காதல் .... ஆழமான, அழுத்தமான காதல் ... அருமையாக போகிறது கதை .... ஒரு இல்லறத்தில் இது போல ஒரு கண்ணீர் , கலகலப்பு இல்லாவிட்டால் அது இனிக்காது.... தொடர்ந்து கீதம் பாடுங்கள் அக்கா .... :)

கீதம்
03-06-2011, 02:18 AM
ம்ம்ம் இதுதான் காதல் .... ஆழமான, அழுத்தமான காதல் ... அருமையாக போகிறது கதை .... ஒரு இல்லறத்தில் இது போல ஒரு கண்ணீர் , கலகலப்பு இல்லாவிட்டால் அது இனிக்காது.... தொடர்ந்து கீதம் பாடுங்கள் அக்கா .... :)

தொடர்ந்து தரும் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி ரவி.

ஜானகி
03-06-2011, 06:22 AM
பக்கத்து வீட்டில் நடப்பதை பைனாகுலரில் பார்த்து எழுதுகிறீர்களா என்ன...? இயல்பாக இருக்கிறது...தொடருகிறோம்

M.Jagadeesan
03-06-2011, 06:25 AM
கசப்பும், இனிப்பும் போல கூடலும், ஊடலும் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் என்பதை அழகாகக் காட்டிவிட்டீர்கள்! தொடரட்டும் உங்களது படைப்புகள்!

அன்புரசிகன்
03-06-2011, 06:30 AM
பக்கத்து வீட்டில் நடப்பதை பைனாகுலரில் பார்த்து எழுதுகிறீர்களா என்ன...?

நான் பதிய நினைத்ததை சற்று முன்னதாக நீங்கள் பதிந்துள்ளீர்கள். :D


மிக மிக எளிமையான நடையில் உங்களது எழுத்து பயணிக்கிறது. கணவன் மனைவிக்கிடையான சம்பாசனைகள் முதல் நண்பர்களிடையான சம்பாசனைகள் மற்றும் அவர்களிடையே உள்ள திரை மறை அன்நியோன்யம் போன்றவற்றை தெளிவாக உங்களது எழுத்து படம்பிடித்துக்காட்டுகிறது. தொடருங்கள்...

கீதம்
03-06-2011, 07:07 AM
பக்கத்து வீட்டில் நடப்பதை பைனாகுலரில் பார்த்து எழுதுகிறீர்களா என்ன...? இயல்பாக இருக்கிறது...தொடருகிறோம்

ஆகா.... அப்படியா இருக்கு? :D மிகவும் நன்றி ஜானகி அம்மா.


கசப்பும், இனிப்பும் போல கூடலும், ஊடலும் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் என்பதை அழகாகக் காட்டிவிட்டீர்கள்! தொடரட்டும் உங்களது படைப்புகள்!

ஊக்குவிக்கும் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஐயா.

கீதம்
03-06-2011, 07:13 AM
பக்கத்து வீட்டில் நடப்பதை பைனாகுலரில் பார்த்து எழுதுகிறீர்களா என்ன...? இயல்பாக இருக்கிறது...தொடருகிறோம்


நான் பதிய நினைத்ததை சற்று முன்னதாக நீங்கள் பதிந்துள்ளீர்கள். :D

அன்பு, இங்கு பக்கத்து வீட்டில் நடக்கிறதெல்லாம் தமிழ் மன்றத்தில் எழுதும்படியாவா இருக்கும்? :) உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்களும் கேக்க நினைச்சேங்கறீங்க?


மிக மிக எளிமையான நடையில் உங்களது எழுத்து பயணிக்கிறது. கணவன் மனைவிக்கிடையான சம்பாசனைகள் முதல் நண்பர்களிடையான சம்பாசனைகள் மற்றும் அவர்களிடையே உள்ள திரை மறை அன்நியோன்யம் போன்றவற்றை தெளிவாக உங்களது எழுத்து படம்பிடித்துக்காட்டுகிறது. தொடருங்கள்...

அடுத்த கதை எப்போ? எப்போ? அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தீங்களே... கதையைப் பதிச்சதுக்கப்புறம் இந்தப்பக்கம் ஆளையேக் காணலையே... சரி, நேரமில்லை போலன்னு நினைச்சேன். உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அன்பு.

Nivas.T
03-06-2011, 07:52 AM
பாத்திரங்களின் வடிவமைப்பும், தன்மையும் எழுத்துகளில் மூலம் இயலப்பாக கண்முன்னால். சம்பவங்களின் வர்ணிப்புகள் பிரமாதம்.

தொடருங்கள்

சிவா.ஜி
03-06-2011, 01:04 PM
ஜானகியம்மா....அது பக்கத்துவீட்ல நடக்கிற கதையில்ல...எங்க வீட்ல நடக்கிற கதை...அது எப்படி ஆஸ்த்திரேலியா வரைக்கும் போச்சுன்னுதான் ஆச்சர்யமா இருக்கு.

அழகான குடும்பம், காதல் வாழும் இல்லம்....இத்தனை சந்தோஷமும்தொலையப்போகிறதா....சுந்தரின் ஃப்ளாஷ்பேக் என்ன சொல்லப்போகிறது..

செமையான ஆவலைத் தூண்டிவிடுகிறது கதையும், எழுத்தும். தொடருங்க தங்கையே.

கீதம்
03-06-2011, 01:41 PM
பாத்திரங்களின் வடிவமைப்பும், தன்மையும் எழுத்துகளில் மூலம் இயலப்பாக கண்முன்னால். சம்பவங்களின் வர்ணிப்புகள் பிரமாதம்.

தொடருங்கள்

தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி நிவாஸ்.


ஜானகியம்மா....அது பக்கத்துவீட்ல நடக்கிற கதையில்ல...எங்க வீட்ல நடக்கிற கதை...அது எப்படி ஆஸ்த்திரேலியா வரைக்கும் போச்சுன்னுதான் ஆச்சர்யமா இருக்கு.

அழகான குடும்பம், காதல் வாழும் இல்லம்....இத்தனை சந்தோஷமும்தொலையப்போகிறதா....சுந்தரின் ஃப்ளாஷ்பேக் என்ன சொல்லப்போகிறது..

செமையான ஆவலைத் தூண்டிவிடுகிறது கதையும், எழுத்தும். தொடருங்க தங்கையே.

அண்ணா, இந்தக் கதை பெரும்பாலான வீடுகளில் நடக்கும் கதைதானே.... உங்க வீட்டிலும் என்றால் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா.

கீதம்
03-06-2011, 01:44 PM
(4)

வாழவைக்கும் காதலுக்கு ஜே!
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே!
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே…
அம்பு விட்ட காமனுக்கும் ஜே…
வாசம் உள்ள பூவெடுத்துத் தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே…

உற்சாகமாய்ப் பாடலை ஹம்மிங் செய்தபடி கம்ப்யூட்டர் வகுப்பிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்த சுந்தருக்கு, தெருமுனையில் திரும்பும்போதே வீட்டுவாசலில் ஒரு ஸ்கூட்டரும், ஒரு அழகான லேடீஸ் சைக்கிளும் கண்ணில் தென்பட, யாரோ வந்திருப்பது புரிந்தது. யாராயிருக்கும்?

அக்காவுக்குத் தோழிகள் இருந்தாலும் சைக்கிளில் வீட்டுக்கு வருமளவு பக்கத்தில் இல்லை. வேறு யார்? யாராவது வீடு பார்க்க வந்திருக்கிறார்களா?

குடித்தனக்காரர்களைத் தீர்மாணிப்பதில் அம்மாவுக்குதான் பிரதான உரிமை இருந்தது, இரண்டுநாள் முன்புவரை! இப்போது அது பறி போய்விடும் அபாயத்தில் இருந்ததால் அம்மா கடுப்புடனே இருந்தாள். பிரார்த்தனையெல்லாம் செய்துகொண்டிருந்தாள்.

அம்மாவின் பிரார்த்தனை பலித்ததா? அப்பாவின் நன்றிக்கடன் நிறைவேறியதா? நடந்தது என்ன என்றறியும் ஆவல் உந்த வேகமாக வந்தான்.

பக்கவாட்டிலிருக்கும் படிகளில் ஏறத்தலைப்பட்டவன், மேற்படிகளிலிருந்து பேச்சுக்குரல்கள் வழிய...இறங்குபவர்களுக்கு வழிவிட்டு கீழேயே நின்றுகொண்டான்.

அப்போதுதான் அந்தத் தேவதையைப் பார்த்தான். படிகளில் இறங்குபவளைப் பார்க்க, வானுலகத்திலிருந்து மிதந்து இறங்குவதுபோல் தோன்றியது. மாவினால் செய்ததுபோல் மொழு மொழுவென்றிருந்த அவள் பார்ப்பதற்கு ஒரு பொம்மை போலவே இருந்தாள். அவள் அணிந்திருந்த குட்டைக் கவுன் அவளது கைகளை முழுமையாகவும் கால்களை முக்கால்பாகமும் மறைக்காதுவிட்டிருந்தது. கவுனில் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள், பார்த்துக்கொண்டிருந்த சுந்தரின் மனதுக்குள் இடம்பெயரத் துடித்தன.

கன்னக்கதுப்புகளும் இளஞ்சிவப்பு வண்ண இதழ்களும் நெருக்கத்தில் அவனை நிலைகுலையவைத்தன. அருகில் வருமுன்னே ஆளைக் கிறங்கடித்த மணம் ஒரு வித புது அனுபவத்தைத் தந்தது. சீராய் வெட்டப்பட்ட கேசம் தோளிலும் முகத்திலும் புரண்டு காற்றோடு கபடி விளையாட.... கைகளால் மிக லாவகமாக ஒதுக்கியபடி அவனைக் கடந்தாள். இவள் யார்?

அவளுக்குப் பின்னாலேயே அப்பாவுடன் பேசியபடி அந்த மனிதரும் இறங்கிக்கொண்டிருந்தார். தோற்றத்தையும் பேச்சையும் வைத்து அவர்தான் துரை என்பது புரிந்தது. கீழ்விட்டுக்கு குடிவரப்போகிறவர் இவர்தானா? அப்படியென்றால் அந்தத் தேவதையும் வருவாளே... இவளையா தவறவிடத் துணிந்தேன்? என்ன மடத்தனம் செய்யப் பார்த்தேன்?

அப்பா இவனை அவருக்கு அறிமுகம் செய்துவைக்க, அவர் தன்னை 'ஆண்ட்ரூ’ என்று அறிமுகம் செய்து சிநேகமாய்க் கை குலுக்கினார். தேவதையின் பெயர் தெரியவில்லை. அவர் அவளை பேபியென்றே அழைத்தார். ஒருவேளை பேபி என்பதே அவள் பெயரோ? இவனை குறுகுறுக்கவைத்துவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

அவள் போக்கில் லேசான அலட்சியம் தென்படுவதுபோல் தோன்றினாலும் அதெப்படி முன்பின் அறியாத ஒருவனிடம் அவள் இயல்பாயிருக்கமுடியும் என்று மனதைத் தேற்றிக் கொண்டான். அவர்கள் புறப்படும்வரை அப்பா வாசலில் நின்று வழியனுப்பிவிட்டு வந்து சொன்னார்.

"வீடு பிடிச்சிருக்குன்னு சொல்லி அட்வான்ஸும் கொடுத்திட்டாரு, இனி உங்கம்மாவை எப்படி சமாளிக்கிறதுன்னுதான் தெரியல. மூஞ்சைத் தூக்கிவச்சிகிட்டு மாடிரூம்ல உக்காந்திருக்கா..."

இவனுக்கு அப்பாடா என்றிருந்தது. எங்கே அம்மாவின் பிடிவாதத்தால் அந்த அழகுப் பதுமையை இழந்துவிடுவோமோ என்று உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்தான். தேவதை வரும் நாளை எதிர்நோக்கி மனம் குதூகலிக்கத்தொடங்கியது.

மொட்டை மாடியிலிருந்த ஒற்றை அறையில் அம்மா தனியாக அமர்ந்திருந்தாள். தன் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்று புலம்பினாள். அம்மாவின் புலம்பல் தாளாமல் அப்பா சொன்னார்.

"இங்க பார், பானு, அவங்க இப்போதைக்கு வரட்டும், ஒரு ஆறுமாசம் பாப்போம், சரிப்பட்டு வரலைன்னு வை, சித்ரா கல்யாணத்தைக் காரணம் காட்டி முழு வீடும் தேவைப்படுதுன்னு சொல்லி காலி பண்ணச் சொல்லிடுவோம், சரியா?"

அம்மாவுக்கு அதில் உடன்பாடு என்பதை அவளது பிரகாசித்த முகம் சொன்னது.

"எத்தனைப் பேராம்?"

"இவர், இவர் சம்சாரம், ரெண்டு பொண்ணுங்களாம்... இப்ப வந்தது சின்னப் பொண்ணாம், +2 படிக்குதாம், பெரிசு எங்கயோ வேலைக்குப் போவுதுன்னாரு. அப்புறம் இவரோட அம்மா...வயசானவங்களாம். மொத்தம் அஞ்சு பேர்தான். பெரிய பொண்ணுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணமாகப் போவுதுன்னும் சொன்னார்.”

"மிஸ்ஸி ஏன் வரலையாம்?"

"யாருக்குத் தெரியும்? புருஷனுக்குப் பிடிச்சிருந்தாப் போதும், புருஷன் சொல்லே வேதவாக்குன்னு நினைக்கிறாங்களோ என்னவோ?"

அம்மா முறைத்தாள்.

"முறைக்காதே... நீ கூடத்தான் வந்து வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லலை. உனக்கு முடியலைன்னு சொல்லி சமாளிச்சேன். அதே மாதிரிதான் அவரும் சொன்னாரு, சம்சாரத்துக்கு கொஞ்சம் முடியலைன்னு. வீட்டுக்கு வீடு வாசப்படிதானே..."

அடுத்த ஞாயிறு சாமான்கள் வந்திறங்கின. சுந்தர் மாடி பால்கனியிலிருந்தபடியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"சுந்தர், அவங்களுக்கு எதுவும் உதவி தேவையான்னு கேட்டு வாயேம்பா"

"எதுக்குப்பா? அவரே ஆளுங்களக் கூட்டி வந்திருக்காருப்பா"

"அதுக்கில்ல, காப்பி, கீப்பி வேணுமான்னு..."

"ஆமா, காப்பி குடுத்து உபச்சாரம் பண்ணி விருந்து வைங்க. பால் கூடக் காச்சல... அந்தப் பாட்டியம்மா ஆம்லெட் போட்டுகிட்டிருக்கு" அம்மா சொன்னாள்.

"ஆம்லெட்டா? உனக்கெப்படித் தெரியும்?"

"ம்? நானும் சித்ராவும் டீ போட்டு எடுத்திட்டுப் போய் குடுத்துட்டுதான் வரோம், மதியத்துக்கு வெளியில ஆர்டர் பண்ணிட்டாங்களாம்."

அம்மா சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, அப்பா அம்மாவைப் பார்த்தப் பார்வையில் பெருமிதம் பொங்கிவழிந்தது.

காலையிலிருந்து களேபரமாயிருந்த வீடு மாலை நாலு மணியளவில் ஓய்ந்திருந்தது. தஸ்ஸுபுஸ்ஸென்ற ஆங்கில உரையாடல்களும், ஆட்களிடம் அதை அங்கே வை, இதை இங்கே வை என்னும் அரைகுறைத் தமிழில் ஏவல்களும், சாமான்களை ஏற்றி இறக்கும் தடாபுடாவென்ற சத்தங்களும் அடங்கிவிட்டிருந்தன.

சுந்தர் மொட்டை மாடி அறையிலேயே பழியாய்க் கிடந்தான். அவனும் சித்ராவும் எந்த இடையூறும் இல்லாமல் படிப்பதற்காகவே கட்டப்பட்ட அறை அது. சித்ரா பெரும்பாலும் கீழேயே இருந்துவிடுவாள். அதுவும் கல்லூரி முடித்தப் பின் இந்த அறைப்பக்கமே வருவதில்லை. மொத்தமாய் இவனுடையது என்றாகிவிட்டது.

தனித்திருந்தாலும், அறை தனக்கென்று ஒரு சிறிய பால்கனியைக் கொண்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தால் வீட்டின் முன்வாயிலும், இடதுபக்கத் தோட்டமும் தெரியும். பக்கத்திலிருக்கும் ஒட்டு மாமரத்தின் தயவாலும், முன்புறமிருந்த பலா மரத்தின் தயவாலும் அறையும் பால்கனியும் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். படிக்க இதமான சூழல் நிலவும்.

இன்று சுந்தர் அறையை விட்டு வெளியேறாது தஞ்சமடைந்திருந்ததற்குக் காரணம் படிப்பல்ல, தேவதை. அவள் வெளியில் வரும் நேரமெல்லாம் மனம் இறக்கைக் கட்டிப் பறப்பதை உணர்ந்தான். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றியது. எத்தனையோ பெண்களுடன் பேசிப் பழகியிருந்தும் இவளிடத்தில் கண்ட ஈர்ப்பு இதுவரை அறியாததாக இருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டே எதிரில் அமர்ந்திருக்கத் தோன்றியது. மற்றப் பெண்களைப் பார்த்தால் ரசித்துவிட்டுக் கடந்துசெல்லும் மனது, இவளைவிட்டு அங்குலமும் நகர மறுத்தது. ஆனால் அவள் பெயர் கூடத் தெரியவில்லையே...

"சுந்தர்... கொஞ்சம் கீழ வரியா?" சித்ரா குரல் கொடுத்தாள்.

"என்னக்கா?"

"அப்பா கூப்புறாங்க"

கீழே வந்தபோது இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தேவதை அவன் வீட்டு வரவேற்பறையில்!

அவளைப் பார்த்தக் கணத்தில் மீண்டும் மனம் ஜிவ்வென்று உயரப் பறந்தது. அவனைப் பார்த்து புன்னகையை உதிர்த்தாள். அவன் பார்த்த மற்றப் பெண்களைப் போல் நெளியவில்லை, நாணவில்லை, இயல்பாயிருந்தாள். ஆனால் இவனைத் தடுமாறவைத்தன அவளது பழுப்பு நிறவிழிகள்.

“ஹாய், சுந்தர், ஐயாம் ஜாக்கி.... ஜாக்லின்”

அவள் கை நீட்டியபோது, அதை எதிர்பாராதக் காரணத்தால் சற்றே தடுமாறிப் பின் கை நீட்டினான். பூனைக்குட்டியின் உடலைப்போல் மெத்தென்றும் வெதுவெதுப்பாகவும் இருந்தன அக்கரங்கள். சுந்தருக்கு அது கனவு போல் இருந்தது.

"ஐயாம் சுந்தர்"

"யேஸ், ஐ நோ" அவள் அழுத்தமாய்ச் சொன்னபோதுதான் தவறு புரிந்து அசடு வழிந்தான். அவள் பொருட்படுத்தவில்லை. வெகு நாட்களுக்குப் பின் வந்திருக்கும் விருந்தாளி போல் அனைவரிடமும் சரளமாகப் பேசினாள். சித்ராவை 'சித்ரா' என்றே அழைத்தபோது அக்கா அதிர்ந்து பின் புன்னகைத்தாள்.

சித்ராவின் சுடிதார் எங்கு தைத்தது என்று வினவினாள். சுவரில் மாட்டியிருந்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் பற்றிக் கேட்டாள். அலமாரியில் இருந்த நாட்டியப்பெண்ணை ஆட்டிவிட்டு மகிழ்ந்தாள். நாற்காலியில் உட்காரும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். அம்மா அவளறியாமல் முகத்தைச் சுழித்தாள்.

சுந்தருக்கோ அவளது ஒவ்வொரு செய்கையும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. அவளை விடவும் அவள் பெயர் இனித்தது. ஜாக்லின்... ஜாக்கி... ஜாக்கி! ஜாக்கியை விடவும் ஜாக்லின் என்றபோது வாய்க்குள் கல்கண்டு உருளுவதுபோல் இருந்தது.

கனவில் மிதந்திருந்தவனை அப்பாவின் குரல் உலகுக்குக் கொண்டுவந்தது.

"அப்பவே துரை எல்லாரையும் வீட்டுக்கு வரச்சொன்னாரு. நான் தான் குடி வந்த களைப்பு போகட்டும், இன்னொருநாள் வரோம்னு சொன்னேன். கேக்கல, இப்ப பொண்ணை அனுப்பிவிட்டிருக்கார், அழைச்சிட்டு வரச்சொல்லி! குடும்பத்தாரை அறிமுகம் பண்ணனுமாம். வா... கூப்புட்ட மரியாதைக்கு ஒரு எட்டு பாத்துட்டு வந்திடலாம். சித்ரா.... அம்மா கெளம்பியாச்சாம்மா?"

"ஆச்சுப்பா...."

தயாராகி வந்த அம்மாவைப் பார்த்து, அப்பா அதிர்ச்சியானார்.

"ஏ... பானு, என்ன பட்டுப்புடவையெல்லாம் கட்டிட்டு வரே?"

"இது பட்டு இல்லீங்க, பட்டு மாதிரி, முதத் தடவையா போறோம், கொஞ்சம் நல்லா இருக்கட்டுமேன்னுதான் கட்டினேன். நீங்க எல்லாரும் இப்படியேவா வரீங்க? கொஞ்சம் நல்லதாப் போட்டுகிட்டு வந்தா என்ன?"

"சரிதான், கீழ்வீட்டுக்குப் போறதுக்கு இத்தனை முஸ்தீபா? சும்மா தலையைக் காட்டிட்டு வந்திடுவோம்."

அப்பா அம்மாவின் சம்பாஷனையை ஜாக்கி ரசித்துக்கொண்டிருந்தாள். ஜாக்கியை சுந்தர் ரசித்துக்கொண்டிருந்தான்.

படிகளில் இறங்கும்போது ஜாக்கி சித்ராவின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டாள். அவளது நடவடிக்கைகளில் தெரிந்த தோழமையுணர்வு வெகுவாக ரசிக்கவைத்தது. இதோ வந்துவிட்டாள் உனக்கான தேவதை என்று ஆணித்தரமாய் அழுத்திச் சொன்னது. அந்தக் கரங்கள் தன் கழுத்தைச் சுற்றி வளைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உள்மனம் உற்சாகத்தில் கூத்தாடியது.

நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0642'&lang=ta)…

(தொடரும்)

Nivas.T
03-06-2011, 01:55 PM
ஆஹா அழகுங்க,

காதல் பறவை சிறகடிக்கிறது, இளமைத்துள்ளல் ஆங்காங்கு எதார்த்தமாய் அழகாக, ஆழமாக உணரமுடிகிறது.

//ஜாக்லின் என்றபோது வாய்க்குள் கல்கண்டு உருளுவதுபோல் இருந்தது//

இதுபோன்ற சிலவரிகளில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை

சிவா.ஜி
03-06-2011, 02:04 PM
அச்சு அசலாய் பக்கத்துவீட்டு சம்பவம் போன்ற அதி அழகான விவரிப்பும், உரையாடல்களும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் சுபாவங்களும்...அடடா....அழகு.

என் வீட்ல நடக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதால....அம்மா பேரையும் எங்க வீட்டம்மா பேராவே வெச்சது எப்படீங்கம்மா.....

தொடருங்க தங்கையே....ஆவலோட தொடர்ந்து வரேன்.

அக்னி
03-06-2011, 02:09 PM
சிலர் இயல்பாகவே அப்படி இருப்பார்கள். சிலர் வலிய உருவாக்கியிருப்பார்கள். வலிந்து உருவாக்கியதெனில் என்றேனும் தன்னையறியாமலேயே கலைந்துவிடும் அல்லவா?

என்னைப்பற்றி என்னைத் தவிர முழுமையாய் எவருக்கும் தெரியாது.
ஒவ்வொரும் நிச்சயம் அப்படித்தான். அந்த எல்லைகள் மனிதரின் இயல்புகளுக்கு ஏற்ப கூடிக்குறையுமே அன்றி, நிச்சயமான ஒரு எல்லையை எல்லோர் மனதும் தடுப்பரணாக்கி வைத்திருக்கும். அரணுக்குப் பின்னால், எவருக்கும் எதுவும் தெரியாத சில விடயங்கள் நிச்சயம் இருக்கும்.

மூன்றாவது பாகம்...
சில பாடல்களை வாசிக்கும்போதே இசையாய் நமக்குள் ஒலிக்கும்.
அந்தவகைப் பாடல்களில் ஒன்றோடு ஆரம்பித்த இந்தப் பாகம், மற்ற உறவுகள் சொல்லியதுபோல,
பக்கத்து வீட்டு மதிலால் எட்டிப்பார்த்து ஒட்டுக்கேட்டது போல இருந்தது.
நல்லவேளை யாரும் என் தோள் தொட்டுத் தட்டி என்ன பார்க்கின்றாய் எனக் கேட்கவில்லை.

இப்பதிவைப் போடுவதற்கிடையில் நான்காம் பாகமும் வந்துவிட்டதால்,
அதைப்பற்றி...
கீதம்+அக்கா...
ஒரு இளைஞனின் மனதில் அரும்பும் காதல் உணர்வுகளை மிகத் துல்லியமாக வடித்துவிட்டீர்கள்.
பக்கத்துவீட்டுக்குப் பருவப்பெண் ஒருத்தி வருவதென்றாலே பற்றும் தீ. அந்தத் தீயை அணைக்குமா நியாயம் பேசிய சுந்தர் அநியாயத்துக்கு விடும் ஜொள்ளு நீர்...
என்னதான் எதிரியாய் இருந்தாலும், என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் இந்தப் பொண்ணுங்க, உடையலங்காரம் மட்டும் விட்டுப் போவதில்லை.

இன்னுமொன்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
புதிதாக அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் திணிப்பாக இல்லாமல், எப்போது வந்தன என்று எண்ணவைக்காமல், பார்வையில் மங்கலாக இருந்து பார்க்கையிற் துலங்கும் பாத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு...

ஜானகி
03-06-2011, 03:19 PM
கதையின் இயல்பான போக்கும், கதையைத் தொடர்ந்துவரும் விமரிசனங்களும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன...பாராட்டுக்கள்.
[ கதையின் ஊடே சித்திரை மாதத்துச் சித்திரமும் வருமோ....]

கீதம்
04-06-2011, 03:01 AM
ஆஹா அழகுங்க,

காதல் பறவை சிறகடிக்கிறது, இளமைத்துள்ளல் ஆங்காங்கு எதார்த்தமாய் அழகாக, ஆழமாக உணரமுடிகிறது.

//ஜாக்லின் என்றபோது வாய்க்குள் கல்கண்டு உருளுவதுபோல் இருந்தது//

இதுபோன்ற சிலவரிகளில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை

சிரிப்பு வருதா உங்களுக்கு? உங்களுக்குப் பிடிச்சப் பேரைச் சொல்லிப்பாருங்க.... உங்களுக்கும் வாய்க்குள் கல்கண்டு உருளும். எதிரில் கல்கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. :)


அச்சு அசலாய் பக்கத்துவீட்டு சம்பவம் போன்ற அதி அழகான விவரிப்பும், உரையாடல்களும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் சுபாவங்களும்...அடடா....அழகு.

என் வீட்ல நடக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னதால....அம்மா பேரையும் எங்க வீட்டம்மா பேராவே வெச்சது எப்படீங்கம்மா.....

தொடருங்க தங்கையே....ஆவலோட தொடர்ந்து வரேன்.

அண்ணி பேரும் அதுதானா? அடடா, இப்போதே சுந்தரின் அம்மாவுக்குப் பெயர் மாத்திடறேன். இல்லையென்றால் என்னால் சுதந்திரமாக எழுதமுடியாது. :icon_ush: :)

தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி அண்ணா.


கதையின் இயல்பான போக்கும், கதையைத் தொடர்ந்துவரும் விமரிசனங்களும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன...பாராட்டுக்கள்.
[ கதையின் ஊடே சித்திரை மாதத்துச் சித்திரமும் வருமோ....]

பாராட்டுக்கு நன்றி ஜானகி அம்மா.

(சித்திரை மாதத்துச் சித்திரமா? ஒருவரே தொடர்ந்து வரைந்தால் ரசிக்காது. அதனால் எனக்கு கொஞ்ச காலத்துக்கு ஓய்வு.:) )

கீதம்
04-06-2011, 03:08 AM
என்னைப்பற்றி என்னைத் தவிர முழுமையாய் எவருக்கும் தெரியாது.
ஒவ்வொரும் நிச்சயம் அப்படித்தான். அந்த எல்லைகள் மனிதரின் இயல்புகளுக்கு ஏற்ப கூடிக்குறையுமே அன்றி, நிச்சயமான ஒரு எல்லையை எல்லோர் மனதும் தடுப்பரணாக்கி வைத்திருக்கும். அரணுக்குப் பின்னால், எவருக்கும் எதுவும் தெரியாத சில விடயங்கள் நிச்சயம் இருக்கும்.

மூன்றாவது பாகம்...
சில பாடல்களை வாசிக்கும்போதே இசையாய் நமக்குள் ஒலிக்கும்.
அந்தவகைப் பாடல்களில் ஒன்றோடு ஆரம்பித்த இந்தப் பாகம், மற்ற உறவுகள் சொல்லியதுபோல,
பக்கத்து வீட்டு மதிலால் எட்டிப்பார்த்து ஒட்டுக்கேட்டது போல இருந்தது.
நல்லவேளை யாரும் என் தோள் தொட்டுத் தட்டி என்ன பார்க்கின்றாய் எனக் கேட்கவில்லை.

இப்பதிவைப் போடுவதற்கிடையில் நான்காம் பாகமும் வந்துவிட்டதால்,
அதைப்பற்றி...
கீதம்+அக்கா...
ஒரு இளைஞனின் மனதில் அரும்பும் காதல் உணர்வுகளை மிகத் துல்லியமாக வடித்துவிட்டீர்கள்.
பக்கத்துவீட்டுக்குப் பருவப்பெண் ஒருத்தி வருவதென்றாலே பற்றும் தீ. அந்தத் தீயை அணைக்குமா நியாயம் பேசிய சுந்தர் அநியாயத்துக்கு விடும் ஜொள்ளு நீர்...
என்னதான் எதிரியாய் இருந்தாலும், என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் இந்தப் பொண்ணுங்க, உடையலங்காரம் மட்டும் விட்டுப் போவதில்லை.

இன்னுமொன்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
புதிதாக அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் திணிப்பாக இல்லாமல், எப்போது வந்தன என்று எண்ணவைக்காமல், பார்வையில் மங்கலாக இருந்து பார்க்கையிற் துலங்கும் பாத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு...

உங்கள் கருத்துகளோடு ஒத்துப்போகிறேன், அக்னி. ஒருவர் நம்மிடம் வெளிப்படையாக இருப்பதாக நம்மை நம்பவைக்கலாம். ஆனால் வெளிப்படையாக இருக்கிறாரா என்பதை அவர் மட்டுமேதான் அறியமுடியும்.

தொடர்ந்து தரும் ஊக்கமிகுப் பின்னூட்டங்களுக்கு நன்றி அக்னி. இதுபோன்ற விமர்சனப் பின்னூட்டங்களால் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகம் உருவாகிறது. மிகவும் நன்றி அக்னி.

அன்புரசிகன்
04-06-2011, 10:03 AM
அடுத்த கதை எப்போ? எப்போ? அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தீங்களே... கதையைப் பதிச்சதுக்கப்புறம் இந்தப்பக்கம் ஆளையேக் காணலையே... சரி, நேரமில்லை போலன்னு நினைச்சேன். உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அன்பு.

நிதி வருட கடசி. கணக்கு சரிபார்க்கிறது அது இது என்று அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பழு. வீடு வந்தால் வீட்டிலிருக்கும் பெரியவர் விடமாட்டார். :D

கதையை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. தொடருங்கள்.

கீதம்
04-06-2011, 10:09 AM
நிதி வருட கடசி. கணக்கு சரிபார்க்கிறது அது இது என்று அலுவலகத்தில் கொஞ்சம் வேலை பழு. வீடு வந்தால் வீட்டிலிருக்கும் பெரியவர் விடமாட்டார். :D

சரி. கிடைக்கும் நேரத்தில் படிங்க. உங்கள் வீட்டு வி.ஐ.பிக்கு என் அன்பான ஆசிகளைச் சொல்லிடுங்க.


கதையை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.

உங்ககிட்ட இல்லையென்றால் என்ன? எங்கயாவது கொஞ்சம் கடன் வாங்கியாவது சொல்லுங்க. :D

கீதம்
04-06-2011, 11:57 AM
(5)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2671'&lang=ta)…

முகிலினத்தின் அழுகையை அகிலமே அறிகிறது. ஆனால் இங்கொருவனின் அழுகையை அவனைத் தவிர எவருமே அறியவில்லை. இவனும் முகவரி தொலைத்தவன்தான். தனக்கான தேவதையின் முகவரி. விலாசம் தவறி வேறொருத்தியின் வாயிலில் போய் நின்று ஏமாறிய வேதனையை நினைத்து ஊமைக்கதறல் கதறுகிறான்.

சுந்தருக்கு நினைக்க நினைக்க மனம் ஆத்திரத்திலும் ஆற்றாமையிலும் கொதித்தது. ஜாக்கி ஏன் அப்படி செய்தாள்? தன்னைப் பற்றிக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாளா? எல்லாம் திமிர்! என்னை வேண்டுமென்றே வெறுப்பேற்றினாளா? ச்சீ... இனி அவளைப் பற்றிக் கனவிலும் நினைக்கக் கூடாது.

அவள் யார்? அவளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? பார்த்த மாத்திரத்தில் வருவதெல்லாம் காதலாகுமா? இதற்குமுன் வகுப்புத்தோழி ஸ்வாதியிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அப்போதும் அதையெல்லாம் காதல் என்றே நினைக்கத்தோன்றியது. அதன்பின் ராஜேஷின் தங்கை பாமா... அஞ்சனா ஆண்ட்டியின் மகள் செளமி... எல்லாம் கொஞ்சநாள் இருந்தது. அதன்பின் போன இடம் தெரியவில்லை. இதுவும் அதுபோல் ஒரு இனக் கவர்ச்சிதான்.

இதற்குமுன் இப்படியொரு பெண்ணைப் பார்த்ததில்லை என்பதால் அவனறியாமல் எழுந்த ஒரு ஈர்ப்பு. அவ்வளவே... இதுவும் கொஞ்சநாளில் காணாமற்போகக் கூடியதுதான். இன்று அது சட்டென்று நிகழ்ந்ததால் ஒரு அதிர்ச்சி. அதுதான் இப்படிக் கண் கலங்க வைத்துவிட்டது. ச்சீ.... இவளல்ல என் தேவதை! வேறெங்கோ இருக்கிறாள் எனக்கான... எனக்கு மட்டுமேயான என் தேவதை! நிச்சயமாய் இவளாக இருக்க முடியாது.

என்னென்னவோ சமாதானம் சொல்லி மனதைத் தேற்றினான். அதுவும் சமர்த்துக் குழந்தையாய் கைகட்டி வாய்பொத்திக் கேட்டுக்கொண்டது. அன்று அத்தனை உற்சாகமாய் அவளைத் தொடர்ந்த மனம் இப்படிப் புலம்புமளவுக்கு என்னதான் நடந்தது. நடந்ததை மறுபடியும் நினைவுநாடாவில் சுழற்றினான்.

"ஹா…..ய், கம்……மின், வாங்கோ..... உக்காருங்கோ..."

ஜாக்கியின் அக்காதான் வரவேற்றாள். மழலைத் தமிழ் கொஞ்சியது. இவளும் பொம்மை போலவே இருந்தாள். ஜாக்கியை ஒரு குழந்தைப் பொம்மை என்றால் இவளை ஜவுளிக்கடை பொம்மை எனலாம். அவள் தன்னை சூசன் என்று அறிமுகம் செய்துகொண்டாள். பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டார்கள்.

புதிதாய்க் குடிவந்த வீடு போலவே தெரியவில்லை. சாமான்கள் அனைத்தும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அலங்காரப் பொருட்கள் கூட அலமாரியில் அழகாய் அணிவகுத்தன. பீங்கான் தட்டுகளும், கண்ணாடிக் கோப்பைகளும் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தன. திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த வித விதமான மதுக்கோப்பைகளும் அங்கு இருந்ததைப் பார்த்த அம்மாவின் பார்வையில் கலவரம் தெரிந்தது.

பாட்டியும் பெரிய பெண்ணுமே பேச்சில் கலந்துகொண்டார்கள். ஜாக்கி தொலைக்காட்சி முன் அமர்ந்து ஏதோ ஹிந்தி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஜாக்கியின் அம்மாவிடம் பெரிய அளவில் உற்சாகம் காணப்படவில்லை. வீடு மாற்றும் வேலைகளால் அவள் அதீதமாக களைத்துப்போயிருக்கலாம் என்று தோன்றியது. வரவேற்றுவிட்டு உள்ளே சென்றவளை அதன்பின் கண்ணில் காணவே இல்லை.

பாட்டி மற்ற எல்லாரையும் விட நன்றாகவே தமிழ் பேசினாள். கேக்கும் ஜூஸும் கொடுத்தாள். அம்மா தொடவில்லை. விரதம் என்று பொய் சொன்னாள். மற்றவர்கள் எடுத்துக்கொண்டனர்.

சுந்தரின் கவனம் முழுவதும் ஜாக்கியிடமே இருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லயித்தபடி கண்ணாடிக் குவளையில் பழரசத்தை உறிஞ்சிக் குடித்த அழகில் சொக்கினான். அறைக்குள் பாட்டியிடம் எதையோ கேட்டு அவர் தர மறுத்தபோது அவர் கழுத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடியே கெஞ்சியதை அவன் இருந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. இன்னும் குழந்தை போல் இருக்கிறாளே என்றெண்ணி வியந்துகொண்டிருந்தபோதுதான் அவன் வந்தான்.

ஒல்லியாக, உயரமாக இருந்தான். ஜீன்ஸும் டீ ஷர்ட்டுமாக ஸ்டைலாக இருந்தான். ஹிப்பி போல் தலைமயிரை வளர்த்திருந்தான். சிரிக்கும்போது அழகான பல்வரிசையுடன் தெரிந்த இளஞ்சிவப்பு ஈறுகள் அவனுடைய வசீகரத்தைக் கூட்டின. சூசனின் வருங்காலக் கணவன் லீ என்று அவனை அறிமுகப்படுத்தினார் ஆண்ட்ரூ. அவன் வந்ததுமே எல்லோர் முன்னிலையிலும் சூசனின் கன்னத்தில் சம்பிரதாய முத்தம் பதித்துப் பின் அவளது இடுப்பைத் தன் கரங்களால் வளைத்துப் பிடித்தபடியே உள்ளே அழைத்துச் சென்றான்.

சித்ரா சங்கோஜத்துடன் நெளிய அம்மா வீட்டில் வேலையிருக்கிறதென்று சித்ராவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அப்பா நாகரிகம் கருதி அமர்ந்திருக்க, சுந்தரும் வேறு வழியில்லாமல் இருந்தான். மேலும் ஜாக்கியை ரசிக்க இது நல்ல வாய்ப்பாகவும் தெரிந்தது. இதுபோல் அவள் வீட்டில் அமர்ந்து, இயல்பாக இருக்கும் அவளைத் தரிசிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிட மனமில்லை.

சற்று நேரத்தில் லீ வந்து தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ரிமோட்டில் சானல்களை மாற்றத் தொடங்கினான். அதுவரை பாட்டியிடம் ஏதோ வம்பு செய்துகொண்டிருந்த ஜாக்கி ஓடிவந்து அவன் கையிலிருந்த ரிமோட்டைப் பிடுங்க முயற்சி செய்ய....அவன் தர மறுத்து இரு கைகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் போக்குக் காட்ட... இவள் அவன்மேல் விழுந்து பிடுங்க.... சரி, சின்னப்பெண்தானே என்று விடவேண்டாமா? பதிலுக்கு இவன் அவள் கையிலிருந்து ரிமோட்டைப் பிடுங்குகிறேன் என்று ஜாக்கியைத் திமிறத் திமிறக் கட்டியணைத்துக் கன்னாபின்னாவென்று அவள் மேல் விழுந்துகொண்டிருந்தான். ஜாக்கியோ செல்லச்சிணுங்கல் சிணுங்கியபடியும் ‘நோ…. நோ….’ என்று சத்தமிட்டபடியும் அவனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள்.

சுந்தருக்கு ஜாக்கியின் மேல் கோபம் வந்தது. விட்டுத் தொலையவேண்டியதுதானே... இப்படிப் பலவந்தப் படுத்துகிறான், இவள் என்னவோ நாய்க்குட்டியுடன் விளையாடுவதுபோல் சிரித்துக்கொண்டிருக்கிறாளே.... இவளுக்கு இதெல்லாம் தவறு என்று யாரும் சொல்லிப் புரியவைக்க மாட்டார்களா? ஆமாம், அவன் எல்லோருக்கும் முன்னால்தானே இத்தனையும் நடத்துகிறான்!

சுந்தர் ஆண்ட்ரூவைப் பார்த்தான். அவரோ அப்பாவுடன் மிகவும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி, சூசன் யாரையும் காணவில்லை. இவர்கள் கண்டுகொள்ளாதது அவனுக்கு வசதியாக இருக்கிறது. அந்த நிமிடத்திலிருந்து சுந்தருக்கு லீயைப் பிடிக்காமல் போனது.

வெறுப்போடு பக்கத்திலிருந்த மாகஸினைப் புரட்டிவிட்டு நிமிர்ந்தவன் கண்ட காட்சி அவனை தடாலடியாகத் தலைகுப்புறத் தள்ளியது. தொலைக்காட்சியில் ஏதோ ஹிந்திப்படம் ஓடிக்கொண்டிருக்க, ஜாக்கி, லீ அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் அமர்ந்து விழாமலிருக்கும்பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டு ரசித்துப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இதற்குமேல் தாங்காது என்று அவன் கிளம்ப … நேரமாகிவிட்டதென்று அப்பாவும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவின் கேள்விநேரம் துவங்கிவிட்டது.

"இவ்வளவு நேரம் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க ரெண்டுபேரும்? போனோமா வந்தோமான்னு இருக்கணும்னு சொல்லிட்டு என்னவோ உறவுக்காரங்க மாதிரி மணிக்கணக்காப் பேசிட்டு வரீங்க?

"சும்மாதான்.... ஆபிஸ் பத்திப் பேச்சு வந்திச்சு... பிள்ளைங்க படிப்பு.... அது இதுன்னு நேரம் போயிடுச்சி"

"சரி, மிஸ்ஸி மறுபடி வந்துச்சா?"

அம்மா குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள்.

"அந்தம்மாவுக்கு நிஜமாவே உடம்புக்கு முடியலையாம் பானு. எதோ தூக்க வியாதியாம். இருந்தாப்புல இருந்து தூங்கிடுவாங்களாம், சமைக்கும்போது தூங்கிடுவாங்களாம், சாப்பிடும்போது தூங்கிடுவாங்களாம், பேசிகிட்டிருக்கும்போதே அப்படியே உக்காந்தமேனிக்கு தூங்கிடுவாங்களாம். வைத்தியமெல்லாம் செஞ்சுபாத்தும் பலனில்லையாம். பத்து பன்னிரெண்டு வருஷமா இப்படித்தான் இருக்காங்களாம். பாவமா இருக்கு."

"இன்சோம்னியாவாப்பா?" சித்ரா கேட்டாள்.

"இல்லம்மா... அது ராத்திரியில தூக்கம் வராத வியாதியில்ல... இதுக்குப் பேரு என்னமோ சொன்னாரு... மறந்திடுச்சி... சுந்தர்.... அது என்ன வியாதின்னு சொன்னாரு?"

"எ... எது?"

"அது கெட்டுது போ... என்னடா... உனக்குமா? அதான்... மிஸ்ஸிக்கு ஏதோ வியாதின்னு பேர் சொன்னாரே..."

"நான் கவனிக்கலையேப்பா..."

"சரி, ஏதோ ஒண்ணு.... அது ஒரு வியாதி... அவ்வளவுதான்."

"அதான் அந்தம்மா சுரத்தே இல்லாம இருந்துச்சா? நான் பாக்கும்போதே நினைச்சேன்."

"பாட்டியம்மாதான் வீட்டு வேலை முழுக்கச் செய்யிறாங்களாம், இந்தப் பொண்ணுங்களை வளர்த்ததும் அவங்கதானாம். அவர் சம்சாரம் உணர்ச்சிவசப்படக் கூடாதாம். சந்தோஷமா இருந்தாலும் துக்கமா இருந்தாலும் சட்டுனு சொன்னா அதிர்ச்சியில மயக்கம் போட்டுடுவாங்களாம். அதனால அந்தம்மாகிட்ட எதையுமே சொல்லுறதில்லையாம். என்ன கொடுமை பாரு...கேக்கவே மனசு கனத்துப் போச்சு..."

"இப்படிக் கூடவா வியாதி வரும்? ஆனாலும் இத்தன வருஷமா அந்தப் பாட்டியம்மா மருமகளுக்கு சேவை செய்யிறாங்கன்னா நிச்சயம் பெரிய விஷயம்தான்."

சுந்தருக்கு எதுவும் கவனமீர்க்கவில்லை. சிந்தனை முழுவதையும் ஜாக்கியே ஆக்கிரமித்திருந்தாள். அவள் மீது விருப்பும் வெறுப்பும் மாறி மாறி வந்து அலைக்கழித்தது.

"அந்தப் பையனைப் பாத்தீங்களா? ஆளும் தலையும், எனக்குப் பாக்கவே என்னவோ போல ஆயிட்டு. வயசுப்பொண்ணை வேற கூட்டிட்டுப் போய்ட்டோமேன்னுதான் சட்டுனு கிளம்பிவந்துட்டேன். அவன்தான் அவங்க மாப்பிள்ளையாமா? அந்தப் பொண்ணுக்குப் போயும் போயும் இவனையா பிடிச்சிருக்கு?"

"பானு, சத்தமாப் பேசாதே.... அவங்க காதுல விழுந்திடப்போவுது....."

"எனக்கெதுக்கு வம்பு? இன்னும் பத்துப் பதினொரு மாசம் தானே? சகிச்சுக்கறேன்."

அம்மா முடிவே செய்துவிட்டாளா? சுந்தருக்கும் ச்சீ என்றுதான் இருந்தது. சந்தனம் என்று நினைத்துச் சாக்கடையில் விழ இருந்தோமே என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாய் ஒரு எண்ணம் தோன்றி அடிக்கடி அவனை அலைக்கழித்தது. தன்னை அழவைத்த அவள்மேல் கோபம் வந்தது. கோபத்தை எழவிடாமல் அவளது சிரித்தமுகம் கண்முன் வந்து பாடாய்ப்படுத்தியது.

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்…
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்…

ஓ நெஞ்சே…..
ஓ நெஞ்சே….. நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGSHK0031'&lang=ta)…

(தொடரும்)

அக்னி
04-06-2011, 12:07 PM
முதலில் ஒரு கோப்பில் இத்தொடரில் வரும் பாடல்கள் அனைத்தையும் சேமிக்க வேண்டும்.

இப்பாகத்தினை வாசிக்கையில் சுந்தரின் மனநிலை மாற்றம் என் மனதிலும் மாறி மாறிப் பிரதிபலித்தது...

தொடர்கின்றேன்...

Nivas.T
04-06-2011, 12:30 PM
ஒருதலைக் காதலில் பலருக்கு ஏற்ப்படும் அனுபவம்தான் இது, ஆனால் அந்த வலி மிகவும் கொடுமையானது, அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

மிகவும் சுவாரசியமாக உள்ளது

தொடருங்கள்

பாரதி
04-06-2011, 12:53 PM
பணிப்பளு, பயணத்தால் விட்டவற்றை எல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டும்.

பிரபல எழுத்தாளர்களைப் போன்று ஒரு எழுத்தாளுமை உங்களிடம் இருக்கிறது. கதையை சொல்லும் கைவண்ணமும் உங்களிடம் இருக்கிறது.

பொருத்தமான பாடல்வரிகள் மனதை வருடுகின்றன. வாய்ப்பிருக்கும் நேரங்களில் கதையை தொடர்ந்து வாசிப்பேன். தொடருங்கள்.

என் மனம் கனிந்த வாழ்த்து.

Ravee
05-06-2011, 12:41 AM
ம்ம்ம் ... எனக்கு இந்த சுந்தரை பார்க்க பாவமாய் இருக்கிறது . பாவம் இந்த பசங்களை பொண்ணுங்க இப்படி படுத்த கூடாது ( உங்களையும் சேர்த்துதான் அக்கா ,,, ஒரு பையன் மாட்டினான் என்பதற்காக இப்படி அழ விடகூடாது ) .... அப்புறம் எங்க செண்டம் எடுக்குறது .... கடவுளே சுந்தருக்கு ஒரு நல்ல வழி காண்பி....:frown:

கீதம்
05-06-2011, 10:39 AM
முதலில் ஒரு கோப்பில் இத்தொடரில் வரும் பாடல்கள் அனைத்தையும் சேமிக்க வேண்டும்.

இப்பாகத்தினை வாசிக்கையில் சுந்தரின் மனநிலை மாற்றம் என் மனதிலும் மாறி மாறிப் பிரதிபலித்தது...

தொடர்கின்றேன்...

இந்தப் பாடலை எல்லாம் முன்பே நீங்க கேட்டிருக்கீங்கதானே அக்னி? எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்!

பின்னூட்டத்துக்கு நன்றி அக்னி.


ஒருதலைக் காதலில் பலருக்கு ஏற்ப்படும் அனுபவம்தான் இது, ஆனால் அந்த வலி மிகவும் கொடுமையானது, அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

மிகவும் சுவாரசியமாக உள்ளது

தொடருங்கள்

உணர்வுபூர்வமான பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.


பணிப்பளு, பயணத்தால் விட்டவற்றை எல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டும்.

பிரபல எழுத்தாளர்களைப் போன்று ஒரு எழுத்தாளுமை உங்களிடம் இருக்கிறது. கதையை சொல்லும் கைவண்ணமும் உங்களிடம் இருக்கிறது.

பொருத்தமான பாடல்வரிகள் மனதை வருடுகின்றன. வாய்ப்பிருக்கும் நேரங்களில் கதையை தொடர்ந்து வாசிப்பேன். தொடருங்கள்.

என் மனம் கனிந்த வாழ்த்து.

உங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை மேலும் ஊக்கத்துடன் தொடரவைக்கின்றன. நன்றி பாரதி அவர்களே.


ம்ம்ம் ... எனக்கு இந்த சுந்தரை பார்க்க பாவமாய் இருக்கிறது . பாவம் இந்த பசங்களை பொண்ணுங்க இப்படி படுத்த கூடாது ( உங்களையும் சேர்த்துதான் அக்கா ,,, ஒரு பையன் மாட்டினான் என்பதற்காக இப்படி அழ விடகூடாது ) .... அப்புறம் எங்க செண்டம் எடுக்குறது .... கடவுளே சுந்தருக்கு ஒரு நல்ல வழி காண்பி....:frown:

சுந்தருக்கு வக்காலத்தா? நடக்கட்டும், நடக்கட்டும்!:)

கீதம்
05-06-2011, 10:44 AM
(6)

நின்னுக்கோ...ரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தே...டி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க…
உனக்கெனத் தவமிருக்க….
இரு விழி சிவந்திருக்க…
இதழ் மட்டும் வெளுத்திருக்க…
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோ...ரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தே...டி வரணும் வரணும் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0127'&lang=ta)…

இனிமையான இந்தப் பாடலின் கழுத்தைத் திருகிக் கதற வைப்பது யார்? செமஸ்டர் தேர்வுகளுக்காக மாடியறையில் தனிமைத் தவமிருந்தவனின் செவியோரம் நின்று 'என்னைக் காப்பாற்ற மாட்டாயா?' என்று இறைஞ்சிக் கொண்டிருந்தது அந்தப் பாடல். கூர்ந்து கவனித்தபோதுதான் அது ஜாக்கியின் ஆர்வக் கோளாறால் எழுந்த விபரீதம் என்பது புரிந்தது. இவளுக்கு எதற்கு இந்த வீண் வேலை?

பாடல் மிக அருகில் கேட்டதை வைத்து அவள் மேல்மாடிக்கு வந்திருக்கிறாள் என்பது புரிய... தன்னைத் தேடித்தான் வந்திருக்கிறாளோ என்ற சந்தேகமும் வந்தது. அதுவரை கடிவாளமிட்டு கட்டிவைத்திருந்த மனக்குதிரை, கதவு திறந்து, விருட்டென்று வெளிப்பாய்ந்தது.

தன்னை மறந்து உற்சாகமாய்ப் பாடிக்கொண்டிருந்தவள், அவனை அங்கே எதிர்பாராமல் திடுக்கிட்டாள்.

"ஜீஸஸ்!"

சொல்லிவிட்டுப் படபடக்கும் நெஞ்சைக் கையால் பிடித்துக்கொண்டாள். விழிகளின் படபடப்பிலிருந்து சுந்தரால் அவள் இதயத்தின் படபடப்பையும் உணரமுடிந்தது. அவள் தன்னைத் தேடிவரவில்லை என்பதும் புரிந்தது.

" ஹே... சுந்தர், இங்க என்ன பண்றே?"

‘இந்தக் கேள்வியை நான் கேக்கணும்' நினைத்தான். சொல்லவில்லை.

"திடீர்னு உன்னப் பாக்கவும் பயந்திட்டேன்."

'ஹூ…ம், நீ பாடினதைக் கேட்டு நானும்தான் பயந்திட்டேன்.' சொல்லத் துடித்தான். சொல்லவில்லை.

ஏனோ அவளிடம் பேசப் பிடிக்கவில்லை. தன்னை ஒரு பார்வை பார்க்க மாட்டாளா, ஒரு வார்த்தை பேச மாட்டாளா என்று ஏங்கியவன், இன்று அவள் ஆர்வத்துடன் பேசும்போது அதை அலட்சியப்படுத்துவதை எண்ணி அவனுக்கே வியப்பாக இருந்தது.

"ஸ்டடி ஹாலிடேஸா?"

"ம்!"

"எக்ஸாம் எப்போ?"

"நெக்ஸ்ட் மன்த்"

"படிச்சிட்டியா?"

"ம்!"

"ஆல் த பெஸ்ட்!"

கட்டைவிரலை உயர்த்திக் காட்டிப் புன்னகைத்தாள். அந்தச் சிரிப்பிலும் சிநேகத்திலும் மனமுருகிப் போனான்.

“தாங்ஸ்!"

"ஸாரி, நான் உன் படிப்பை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். ஐயாம் சோ…. ஸாரி..."

அவள் முகத்தில் உண்மையான வருத்தம் தெரிந்தது. அத்தனை ஆசையாய்ப் பேசுபவளிடம் இத்தனை இறுக்கம் காட்டுவது தவறு என்று தோன்ற, கனிவின் ஊற்று மெல்லச் சுரந்தது.

"நீ இங்க என்ன பண்றே?"

"ஜஸ்ட் ரிலாக்ஸிங். சன்செட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

சுந்தர், அவளைத் தன்னகத்தே வரவழைத்த மாலைக் கதிரவனுக்கு மனதார நன்றி சொன்னான். அவள் தன் எதிரிலேயே இருந்தால் மனம் உற்சாகத்தில் கரைபுரள்வதை உணர்ந்தான். கட்டிப்போட்ட மனம் கட்டவிழ்த்துக் குதியாட்டம் போட்டது.

மரங்களின் பின்னே கதிரவன் ஒளிந்ததும், இவள் வந்தவேலை முடிந்ததென்று புறப்பட்டாள். இவன் சோர்ந்தான்.

"ஓ.கே. நீ படி, நான் போறேன்"

என்ன சொல்வதென்று தெரியாமல் சுந்தர் தலையசைத்தான். மனமோ அவளை நிறுத்தச் சொல்லிப் பிறாண்டியது. இரண்டு படிகள் இறங்கியவள்,

"உன் வீட்டுல யாரும் இல்லையா? பூட்டுப் போட்டிருந்துது" என்றாள்.

"இல்ல, எல்லாரும் தஞ்சாவூர் போயிருக்காங்க, அக்காவோட க்ளோஸ் ஃப்ரெண்டுக்குக் கல்யாணம்!"

"நீ ஏன் போகலை?"

இதென்ன கேள்வி என்று தோன்றினாலும், அழகாகத் தலையைச் சாய்த்து, கண்ணைச் சிமிட்டிக் கேட்பவளிடம் அவள் மனம் கோணாமல் பதில் சொல்லத் தோன்றியது.

"கொஞ்சம் படிக்கவேண்டியிருந்தது, உனக்குப் படிக்க எதுவும் இல்லையா?"

"ப்ச்! எனக்கு படிக்கவே அவ்வளவா பிடிக்காது. என் டாடி ஃபோர்ஸ் பண்றதாலதான் படிக்கிறேன். ஐ ஹேட் ஸ்டடிஸ்!"

"ஏன், எந்தப் பாடமாவது கஷ்டமா இருக்கா? ட்யூஷன் வச்சிக்கலாமில்ல?"

"நோ....நோ... எனக்கு இன்ட்ரஸ்டே இல்ல. எனக்கு மாரேஜ் பண்ணிக்கணும், நிறைய பேபீஸ் வேணும், ஹேப்பியா இருக்கணும். தட்ஸ் இட்! ஐ வான்ட் டூ பீ அ பஃபெக்ட் வய்ஃப்!"

சுந்தர் அதிர்ந்தான். என்னதான் மனதுக்குள் ஆசை இருந்தாலும் இப்படியா அப்பட்டமாகப் போட்டு உடைப்பாள். யாராவது கேட்டால் இவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஒளிவு மறைவே கிடையாதா?

இந்த நவீன யுவதிக்குள் இப்படி ஒரு புராதன ஆசையா? படிக்காத கிராமத்துப் பெண்கள்தான் இப்படியெல்லாம் யோசிப்பார்கள்! கல்யாணம் பண்ணி, நிறையப் புள்ளகுட்டிப் பெத்து, புருஷனோட சந்தோஷமா இருக்கணும்னு! இவளைப் போன்றவர்கள் நிறையப் படிக்கணும், வேலைக்குப் போகணும், கைநிறையச் சம்பாதிக்கணும், உல்லாசமா இருக்கணும் இப்படித்தானே நினைப்பார்கள். இப்படி நேர்மாறாய் இருக்கிறாளே...

விநோதமாய்ப் பார்த்தவனின் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளைப் படித்தவள் போல் ஜாக்கி சொன்னாள்.

"யூ நோ... சுந்தர், என் மம்மியை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். மம்மிகிட்ட நான் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணியதே இல்ல. மம்மி இருந்தும் இல்லாத மாதிரிதான் எங்களுக்கு. சூசனும் இப்பவெல்லாம் என்னக் கண்டுக்கிறதே இல்ல, அவளுக்கு எப்பவும் லீ நினைப்புதான். நானிக்கு வயசாயிப் போச்சு. அதுக்கும் அடிக்கடி முடியலேன்னு படுத்துக்குது. டாடிக்கு ஆஃபிஸ் வர்க்கே அதிகம். சோ... என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டதான் என்னோட எல்லா ஃபீலிங்க்ஸையும் ஷேர் பண்ணுவேன். உன்னயும் என் ஃப்ரெண்டா நினைச்சுதான் சொல்றேன். என் மம்மிகிட்ட நான் இழந்த எல்லா லவ்வையும் என் பேபிக்கு நான் கொடுக்கணும். என் டாடி மாதிரி ஒரு நல்ல ஆள் எனக்கு ஹஸ்பெண்டா வரணும். யூ நோ.... என் டாடி என் மம்மி மேல எவ்வளவு லவ் வச்சிருக்கு தெரியுமா... எல்லாரும் மம்மிய டிவோர்ஸ் பண்ணச் சொன்னப்போ டாடிக்கு பயங்கரக் கோவம் வந்திடுச்சு. ஸ்டில்… ஹி லவ்ஸ் ஹர் வெரி மச்."

அவள் பேசி முடிக்கும்போது அவள் கண்கள் கசிந்திருந்தன. அவளது ஏக்கமும், வருத்தமும் புரிய... அவள் விழியோரத்து நீரைத் துடைத்து, 'கவலைப்படாதே, உனக்கு நானிருக்கேன் கண்ணம்மா' என்று சொல்லவேண்டும்போல் கைகள் துடித்தன.

அவள் பேசுவதையெல்லாம் கவனித்தாலும் காற்றிலாடும் அவள் குட்டைப்பாவாடை அடிக்கடி அவன் கவனம் ஈர்த்தது. இவன் கவனிப்பதை அவள் கவனித்திருப்பாளா? எண்ணியபோது சிரிப்புதான் வந்தது. இவளுக்காவது நாசுக்குப் புரிவதாவது? அப்படி இருந்திருந்தால் அன்று லீயுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்திருப்பாளா? இப்போது அந்த சம்பவத்தை நினைத்தபோது ஜாக்கியின் மேல் கோபம் வரவில்லை. மாறாக பரிதாபம்தான் எழுந்தது.

"ஜீஸஸ்! டைம் ஆயிடுச்சி, ஸாரி, சுந்தர், நான் உன் நேரத்தை வீணாக்கிட்டேன்"

வீணா? அடிப்பாவி! எத்தனை விலைமதிப்பற்ற நேரம் இது! உன்னை முழுமையாய்ப் புரிந்துகொள்ள உதவியதே.... உன் ஆழ்மனதுள் புதைந்திருக்கும் ஆசைகளை என்னிடம் தனிமையில் வெளிப்படுத்தியிருக்கிறாய்... உன் நண்பனாய் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாய்! இதற்கு மேல் என்ன வேண்டும்?

"ஜாக்கி!"

கீழே போக முற்பட்டவளை அழைத்தான்.

"என்ன?"

"குட்நைட்!"

"குட்நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்!" என்றபடியே துள்ளலாய் இறங்கி ஓடினாள்.

சுந்தர் அவள் சொன்னபடியே இனிய கனவுகளில் மிதக்கலானான்.

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்…

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
ஆஹஹஹா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0789'&lang=ta)…

(தொடரும்)

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 03:25 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு கீதம் அவர்களின் நெடுங்......கதை தொடர் ...அருமை கதையின் நடையுடன் நானும் நடை பயில்கிறேன்...

அக்னி
05-06-2011, 09:02 PM
கன்னி ஜாக்கியின் கவர்ச்சியைப் பளிச்செனச் சொல்லாமலே சொல்லும் கண்ணிய எழுத்து...
பாண் (பிரெட்) எனக்குப் பிடித்த உணவு. இரு பாண் துண்டுகளின் நடுவே இனிப்பாய் இருந்தாலும், உறைப்பாய் இருந்தாலும் ரசித்து உண்பேன்.
இத்தொடரின் பாகங்களின் அமைப்புப் போல...

தொடர்ந்தும் உண்ணக் காத்திருக்கின்றேன்.

அன்புரசிகன்
06-06-2011, 02:14 AM
7G ரெய்ன்போ காலணி படத்தில வாற மோட்டை மாடி போன்ற ஒரு நினைப்பு உங்கள் கதையை படிக்கும் போது மனதில் தோன்றியது. தொடருங்கள். நல்ல காட்சி விபரிப்புக்கள்.
வாழ்த்துக்கள்.

Ravee
06-06-2011, 08:09 AM
(6)

[FONT="Franklin Gothic Medium"][COLOR="Blue"]

அவள் முகத்தில் உண்மையான வருத்தம் தெரிந்தது. அத்தனை ஆசையாய்ப் பேசுபவளிடம் இத்தனை இறுக்கம் காட்டுவது தவறு என்று தோன்ற, கனிவின் ஊற்று மெல்லச் சுரந்தது.


வீணா? அடிப்பாவி! எத்தனை விலைமதிப்பற்ற நேரம் இது! உன்னை முழுமையாய்ப் புரிந்துகொள்ள உதவியதே.... உன் ஆழ்மனதுள் புதைந்திருக்கும் ஆசைகளை என்னிடம் தனிமையில் வெளிப்படுத்தியிருக்கிறாய்... உன் நண்பனாய் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாய்! இதற்கு மேல் என்ன வேண்டும்?



அடப்பாவி இப்படிதான் கழுத்தில கல்லை கட்டி குதிக்கிறதா .... :lachen001:

கீதம்
06-06-2011, 10:16 AM
கன்னி ஜாக்கியின் கவர்ச்சியைப் பளிச்செனச் சொல்லாமலே சொல்லும் கண்ணிய எழுத்து...
பாண் (பிரெட்) எனக்குப் பிடித்த உணவு. இரு பாண் துண்டுகளின் நடுவே இனிப்பாய் இருந்தாலும், உறைப்பாய் இருந்தாலும் ரசித்து உண்பேன்.
இத்தொடரின் பாகங்களின் அமைப்புப் போல...

தொடர்ந்தும் உண்ணக் காத்திருக்கின்றேன்.

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி அக்னி. உங்கள் உவமையை மிகவும் ரசித்தேன்.


நீண்ட நாட்களுக்கு பிறகு கீதம் அவர்களின் நெடுங்......கதை தொடர் ...அருமை கதையின் நடையுடன் நானும் நடை பயில்கிறேன்...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய். தொடர்ந்து வந்து கருத்துச் சொல்லுங்க.


7G ரெய்ன்போ காலணி படத்தில வாற மோட்டை மாடி போன்ற ஒரு நினைப்பு உங்கள் கதையை படிக்கும் போது மனதில் தோன்றியது. தொடருங்கள். நல்ல காட்சி விபரிப்புக்கள்.
வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி அன்புரசிகன்.


அடப்பாவி இப்படிதான் கழுத்தில கல்லை கட்டி குதிக்கிறதா .... :lachen001:

கடலில் குதிக்கிறதான்னு கேட்கணும். :icon_b:

கீதம்
06-06-2011, 10:19 AM
(7)

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் .... தரத..தா…ததா….
தொடருதே தினம் தினம் .... தரத..தா…ததா…
என் இனிய பொன் நிலாவே…

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே….
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே….
வெண் நீலவானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே….. அன்பே..... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2063'&lang=ta)

சுந்தர் பாடலை சன்னமாக சீட்டியடிக்க, ஜாக்கி தானும் சத்தமாக சீட்டியடித்து அவனுடன் இணைந்துகொண்டாள். சுந்தர் ஆச்சர்யத்துடன் புருவங்கள் உயர்த்தி அவளைப் பார்க்க, அவள் இன்னும் உற்சாகத்துடன் ஒலியெழுப்பினாள். பாடும்போதுதான் சகிக்கவில்லை, சீட்டி பிரமாதமாக அடிக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்.

ஆளரவமற்ற அந்தத் தார்ச்சாலையில் மிதமான வேகத்தில் செல்லும் தன் சைக்கிளையும் ஜாக்கியின் சைக்கிளையும் உள்ளத்தில் உவகை பொங்கப் பார்த்தான் சுந்தர். இரண்டும் எங்கோ உருவாக்கப்பட்டு, எங்கோ விற்கப்பட்டு எங்கோ வாங்கப்பட்டவை. தாங்கள் ஒரு காதல் கதைக்கு சாட்சியாக இருப்போம் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்குமா? போன மாதம் வரை சுந்தருக்கே தெரியாதே!

ஜாக்கி மிக மெதுவாக ஓட்டினாள். தேர்ப்பவனி வருவதுபோல் மிதிவண்டிப் பவனி வருகிறாள். தேவதையுடன் பவனி வருவதற்கு கசக்கவா செய்யும்? நல்லவேளை, இன்று இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடாமல் இருந்தேனே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

காலை பத்துமணிவாக்கில் ஸ்போர்ட்ஸ் ஷூவைப் போடும்போது அப்பா கேட்டார்.

“எங்கப்பா?”

"சும்மாதாம்ப்பா... கிரவுண்டுக்குப் போய்ட்டு வரேன்"

"எதுக்கு?"

"எதுக்குப் போவாங்க? விளையாடத்தாம்ப்பா"

"யாரு? அந்த சீனு, பார்த்தசாரதி, சைமன் இவன்களோடதானே... அவனுங்களோட சேராதேன்னு சொன்னா கேக்கவே மாட்டியே…”

"சனி, ஞாயிறு மட்டும்தானப்பா பாக்குறேன். இவ்வளவு வருஷம் பழகிட்டு இப்ப திடீர்னு ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ண முடியுமாப்பா? போய்ட்டு வந்திடறேன்"

“அவனுங்க போக்கு ஒண்ணும் அவ்வளவு நல்லா இல்லப்பா... அவனுங்களோட சேர்ந்து உன் பேரும் கெட்டுடப் போவுது, பாத்துக்கோ...."

"அப்படியெல்லாம் ஆவாதுப்பா.... "

"சேர்க்கை சரியில்லாமப் போயிடக்கூடாதுன்னுதான் பயப்படுறேன். இந்த வயசு அப்படி! புத்திசாலித்தனமா பிழைச்சுகிட்டா சரி!”

வழக்கமாய் சொல்வதுதான். சுந்தர் வழக்கம்போலவே மெளனம் காத்தான். அப்பா சொல்வதில் தவறில்லை என்றாலும், அதை அவர் அடிக்கடி சொல்வது சற்றே சலிப்பைத் தந்தது.

“சரி, இன்னைக்கு ஒருநாள் வீட்டிலே இருக்கலாமில்ல? சாயங்காலம் அக்காவைப் பாக்க வராங்களே.... நீ வீட்டில் இல்லைனா நல்லா இருக்குமா?"

"அடுத்தவாரம் டோர்ணமெண்ட் இருக்குப்பா... ப்ராக்டிஸ் எடுக்கணும். போய்ட்டு சீக்கிரம் வந்திடறேன்.."

அதற்குமேல் அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவரும் முன்னாள் பூப்பந்தாட்டக்காரர் என்பதால் டோர்ணமெண்ட்டின் முக்கியத்துவம் அறிந்திருந்தார்.

"அம்மா, நான் கிரவுண்டுக்குப் போய்ட்டு வந்திடறேன்"

"சுந்தர், இன்னைக்கு கட்டாயம் வீட்டுக்கு சாப்பிட வந்திடுப்பா.... அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டான்னு யார் வீட்டுக்கும் சாப்பிடப் போயிடாதே..." அம்மா முன்கூட்டி எச்சரித்தாள்.

சுந்தர் சிரித்துக்கொண்டே சொன்னான், "அம்மா, இன்னைக்கு அக்காவைப் பொண்ணு பாக்க வராங்கன்னு தெரிஞ்சாலே எல்லாரும் இங்க வந்திடுவானுங்க. இன்னைக்கு எப்படியும் ஸ்பெஷலா ஏதாவது செஞ்சிருப்பீங்கன்னு தெரியும்.”

" உனக்குப் புண்ணியமாப் போவட்டும், இன்னைக்கு மட்டும் எவனையும் அழைச்சிகிட்டு வந்திடாதே... கலாட்டா பண்ணி மாப்பிள்ளையைக் கலங்கடிச்சிடுவானுங்க."

அம்மாவின் பயம் நியாயம்தான். விளையாட்டுப் பேச்சுப்போல் எப்பொழுதும் கலாட்டா பண்ணுவதே அவர்களுக்கு வாடிக்கை. அப்பாவுக்கு அவர்களின் இந்த வேடிக்கைப் பேச்சு சுத்தமாகப் பிடிக்காது. அவர்களுக்கும் அது தெரியும்.

மூவரும் உள்ளூர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து இவனோடு படித்தவர்கள். சீனுவுக்கு ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. அப்பாவின் தயவால் காலத்தை ஓட்டுகிறான். பார்த்தாவும் பத்தாவது தேர்வில் தோற்று கிரைண்டர், மிக்ஸி போன்ற எலக்ரிகல் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கடை வைத்து உக்கார்ந்துவிட்டான். சைமன் பாலிடெக்னிக்கில் சேர்ந்துவிட்டான், இவன் பொறியியல் கல்லூரி.

பள்ளிகளில், கல்லூரியில் என்று எத்தனையோ நண்பர்கள் வந்தாலும் பால்ய நண்பர்களைக் கைவிட முடியவில்லை. வார இறுதிகளில் மைதானத்தில் பேட்மிண்ட்டன் விளையாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள். பேச்சுக்குப் பேச்சு, விளையாட்டுக்கு விளையாட்டு.

ஒருவழியாக அப்பாவை சமாளித்து வெளியில் வந்தவனைத் தடுத்து நிறுத்தியது ஜாக்கியின் குரல்.

"சுந்தர், பேட்மிண்ட்டனா? நானும் வரேன், இரு!" சொல்லிவிட்டு கிடுகிடுவென்று தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அவன் சைக்கிளில் மாட்டியிருந்த ராக்கெட்டைப் பார்த்து யூகித்தாள் போலும்.

சுந்தருக்கு அவள் தன்னுடன் ஜோடியாக சைக்கிளில் வருவது கொள்ளை மகிழ்வைத் தந்தது. ஜாக்கி என்னென்னவோ பேசிக்கொண்டே வந்தாள். இவன் எதையுமே கவனிக்கவில்லை. தன் வயது இளைஞர்களின் பொறாமைப் பார்வைகளை மனதுக்குள் ரசித்தபடி கடந்தான். எல்லாம் மைதானம் செல்லும் வரைதான்.

வழக்கமாய் விளையாடுபவர்களும் வேடிக்கைப் பார்ப்பவர்களுமாக மைதானத்தில் ஆட்கள் நிறைந்திருந்தனர். அத்தனைப் பேரும் ஜாக்கியையும் சுந்தரையும் புதிராய்ப் பார்த்தனர். சீனு சுந்தரைப் பார்த்து விஷமமாகக் கண்ணடித்தான்.

சைமன், "என்னடா, இது கூட வந்திருக்கே?" என்று அதிர்ச்சி காட்டினான்.

"இது ஜாக்கி... இவங்கதான் எங்க வீட்டுக்குக் கீழ குடித்தனம் வந்திருக்காங்க." சுந்தர் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினான். ஆனால் அங்கிருந்த பெரும்பாலோர்க்கு ஜாக்கியின் அறிமுகம் தேவைப்படவில்லை. அவர்கள் சுந்தரை விடவும் ஜாக்கியைப் பற்றி அதிகம் தகவல்களைத் தெரிந்துவைத்திருந்தனர். என்னவோ கிசுகிசுப்பாய் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டனர்.

"என்னடா?" சுந்தர் ரகசியமாய்க் கடுகடுத்தான்.

"இன்ஸ்டியூட்க்கு இது அவங்க அக்கா, அப்பாவோட தம்போலா விளையாட வரும்டா... சமயத்தில் அவங்க பாட்டி கூட வரும். கில்லாடிடா..."

"டேய், சுந்தர், போன தடவை பொங்கல் திருவிழாவில பானை உடைக்க இதுவும் வந்திச்சிடா... பசங்க எல்லாம் ஒரே கிண்டல்! எதைப் பத்தியும் கவலப்படாது. ஆம்பள மாதிரி எப்பவும் சைக்கிளில் ஊரச் சுத்திகிட்டே இருக்கும்"

"ஆமாம்டா... இது கூட நிறைய ஆங்கிலேண்டியன் பசங்க சுத்திகிட்டே இருப்பானுங்க. ரொம்ப வச்சிக்காதடா... ஆளு சரியில்ல... "

"டேய், சும்மா எதையாவது உளறாதீங்க... நான் பழகினவரைக்கும் அது நல்ல பொண்ணுதான். "

சுந்தர் அவர்கள் பேச்சை அலட்சியம் செய்து விளையாட்டில் இறங்கினான். மைதானத்தில் மருந்துக்கும் பெண்கள் இல்லை என்றாலும் ஜாக்கி பையன்களுக்கு நிகராக அவர்களுடன் பேசினாள். அவளும் ஒரு ராக்கெட் பெற்று அவர்களுடன் விளையாடினாள்.

சுந்தருக்கு ஆட்டத்தில் கவனம் சிதைந்துபோயிற்று. ஜாக்கி பந்தடிப்பதையும் குனிந்து பந்தெடுப்பதையும் பையன்கள் அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கேலி பேசிச் சிரிப்பதைக் கண்டான். அவள் சிறுமைப்படுவதை விரும்பாத அவன் பாதியிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினான்.

"ஜாக்கி, வா போகலாம்"

"நீ விளையாடு, நான் இவங்களோட டைம் பாஸ் பண்ணிகிட்டிருக்கேன்"

"வான்னா வாயேன்"

"நீ போ சுந்தர், நான் கொஞ்சநேரம் விளையாடிட்டு வரேன்"

"ஜாக்கி, விளையாடினது போதும், வா!" சுந்தர் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

"நான் அப்புறமா வரேன், நீ போ...."

ஓங்கி அறையத் தோன்றியது. சுயபுத்தியுமில்லை, சொல்புத்தியுமில்லை. ச்சே! என்ன பெண் இவள்! கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துப் போனால்தான் என்ன?

"ஜாக்கி, வான்னு சொன்னேன்" இப்போது அவன் குரலில் கடுமை காட்டினான்.

அவளிடமிருக்கும் அதீத உரிமையில் அவனறியாமல் அந்தக் கடுமை வெளிப்பட்டுவிட்டது. ஜாக்கிக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது.

"நீ யாரு மேன் என்னைக் கண்ட்ரோல் பண்ண? மைன்ட் யுவர் பிஸினெஸ்!" ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரித்தாள்.

சுந்தர் அவமானத்தால் குறுகிப்போனான். இத்தனைப் பேர் முன் தன்னை அவமானப்படுத்திவிட்டாள் என்பதை விடவும், தான் அவள்மீது கொண்டிருந்த அன்பின் ஆதிக்கத்தை அறுத்தெறிந்துவிட்டாள் என்பதே மிகுந்த வேதனை தந்தது.

தன்மானம் காயப்பட்டதில் அவன் தன்னை மறந்துபோனான்.

"ச்சீ.... போடி, நீ எப்படிப் போனா எனக்கு என்ன? எக்கேடோ கெட்டுத் தொலை!"

"ஏய்.... என்ன டீ சொல்றே? நீ டீ சொன்னா.... நான் டா சொல்வேன்."

"சொல்லுடி... சொல்லுடி பார்ப்போம்.... "

"போடா..... சுந்தர்.... பந்தர்...."

இதுவரை விளையாட்டாய் நினைத்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பர்கள் விபரீதம் புரிந்து சுந்தரைச் சமாதானப்படுத்த முன்வந்தனர்.

"டேய்.... விடுறா... நாங்கதான் அப்பவே சொன்னோம்ல.... அது ஒரு மாதிரின்னு.... "

ஜாக்கி சைக்கிளை எடுத்துக்கொண்டே கத்தினாள், "டேய்.... நானா ஒரு மாதிரி? நீங்கதாண்டா ஒரு மாதிரி.... லூஸுங்கோ....இடியட்ஸ்!"

"ஏய்... வந்தேன்னா.... சைக்கிளையும் உன் வாயையும் சேத்துப் பஞ்சர் பண்ணிடுவேன்...” சீனு கத்தினான். அவள் ஆங்கிலத்தில் என்னென்னவோ திட்டியபடியே விருட்டென்று சைக்கிளில் ஏறிப் பறந்தாள்.

நண்பர்களின் கையைத் தட்டிவிட்டு சுந்தரும் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேறு திசையில் பறந்தான்.

வீட்டுக்குப் போக மனமில்லாமல் கால் போன போக்கில் சுற்றிவந்தான். கால்கள் களைத்துப்போனபோது பக்கமிருந்த தூங்குமூஞ்சி மர நிழலில் சைக்கிளை நிறுத்தி இறங்காமல் கால்களை மட்டும் ஊன்றி நின்றுகொண்டான்.

காற்று வீசும்போதெல்லாம் பாராசூட் போல் வெண்ணிற மலர்கள் ஆடி ஆடித் தரையிறங்கின. மறு காற்றில் தரையில் கிடந்தவை எல்லாம் அங்குமிங்கும் உருண்டு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. பார்த்து ரசித்தபோது மனம் லேசானது. ஆனாலும் மனம் முழுக்க படர்ந்த வெறுமையை விரட்ட முடியவில்லை.

நிதானமாக யோசித்தபோது ஜாக்கியைக் கையாண்டவிதத்தில் கடுமை காட்டியது தவறென்று புரிந்தது. அவள் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதும், இன்னமும் எதையும் புரிந்துகொள்ளாத நிலையில் இருக்கிறாள் என்பதும் புரிந்தது. கூடவே அவள் கலாச்சாரத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்பதும் நினைவுக்கு வர... தன் அதிகப்பிரசங்கித் தனத்தாலும் அவசரத்தாலும் அவளது நட்பை இழந்ததை எண்ணி மனம் குமைந்தான். அவளிடம் மன்னிப்புக் கேட்கத் துடித்தான்.

தொலைவில் எங்கோ ஒலிபெருக்கியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ...
பார்வையிலே குமரியம்மா...
பழக்கத்திலே குழந்தையம்மா...
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD1041'&lang=ta)

(தொடரும்)

அக்னி
06-06-2011, 12:10 PM
வேறுபட்ட கலாச்சார அமைப்புக்களுக்குள் ஒரு தலைக்காதல் நன்றாகவே பந்தாடப்படுகின்றது.
இரு தலைகளும் காதலிக்கையில் இந்தக் கலாச்சார வேறுபாடு எவ்வாறு ஒத்துப் போகும் என்பதைக் காணக் காத்திருக்கின்றேன்...

Ravee
06-06-2011, 01:30 PM
சுந்தருக்கு ஆட்டத்தில் கவனம் சிதைந்துபோயிற்று. ஜாக்கி பந்தடிப்பதையும் குனிந்து பந்தெடுப்பதையும் பையன்கள் அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கேலி பேசிச் சிரிப்பதைக் கண்டான். அவள் சிறுமைப்படுவதை விரும்பாத அவன் பாதியிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினான்.

"ஜாக்கி, வா போகலாம்"


"நீ விளையாடு, நான் இவங்களோட டைம் பாஸ் பண்ணிகிட்டிருக்கேன்"

"வான்னா வாயேன்"

"நீ போ சுந்தர், நான் கொஞ்சநேரம் விளையாடிட்டு வரேன்"

"ஜாக்கி, விளையாடினது போதும், வா!" சுந்தர் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

"நான் அப்புறமா வரேன், நீ போ...."

ஓங்கி அறையத் தோன்றியது. சுயபுத்தியுமில்லை, சொல்புத்தியுமில்லை. ச்சே! என்ன பெண் இவள்! கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துப் போனால்தான் என்ன?


அட காதலிக்க ஆரம்பிச்சவுடனே இல்லை கல்யாணம் செய்த உடனே இந்த பாடிகாட் வேலைதான் நமக்கு செருப்படி வாங்கி தராது .... :eek: :frown:

ஏண்டா சுந்தர் நம்ப ஆதவா மாதிரி புத்திசாலியா இருக்க வேண்டாமா நீ .... :lachen001:

சிவா.ஜி
06-06-2011, 02:05 PM
விடுபட்ட இரண்டு பாகத்தையும் வாசித்தேன். பாரதி சொன்னதைப்போல....பிரபல எழுத்தாளர்களுக்கே சவால் விடுமளவுக்கான உயர்தர எழுத்து. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட யோசித்து, அவற்றக் கதையோடு ஒருங்கிணைத்து, ஒவ்வொரு பாத்திரத்தையும்...அவர்களின் அதே குணாதிசயங்களோடு உலாவ விட்டு......

சான்ஸே இல்லம்மா.....அண்ணனாய் மிகப் பெருமைப்படுகிறேன்.

ஜாக்கியின் பாத்திரப்படைப்பு அற்புதம். கண்முன்னால் பார்ப்பதைப்போன்ற அசத்தலான உரையாடல்கள்+காட்சியமைப்பு. வாழ்த்துக்கள் தங்கையே.

அன்புரசிகன்
07-06-2011, 12:57 AM
ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு போன்ற ஒரு கதையோட்டம். வெள்ளித்திரையில் காண்பது போல்.......... தொடருங்கள்.

கீதம்
07-06-2011, 10:23 AM
வேறுபட்ட கலாச்சார அமைப்புக்களுக்குள் ஒரு தலைக்காதல் நன்றாகவே பந்தாடப்படுகின்றது.
இரு தலைகளும் காதலிக்கையில் இந்தக் கலாச்சார வேறுபாடு எவ்வாறு ஒத்துப் போகும் என்பதைக் காணக் காத்திருக்கின்றேன்...

உங்களை ரொம்பநாள் காக்கவைக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா ஜாக்கி சுந்தரை இப்படித்தானே காத்திருக்கவைக்கிறா... :)

தொடர்ந்துவந்து ஊக்கமூட்டுவதற்கு நன்றி அக்னி.




அட காதலிக்க ஆரம்பிச்சவுடனே இல்லை கல்யாணம் செய்த உடனே இந்த பாடிகாட் வேலைதான் நமக்கு செருப்படி வாங்கி தராது .... :eek: :frown:

ஏண்டா சுந்தர் நம்ப ஆதவா மாதிரி புத்திசாலியா இருக்க வேண்டாமா நீ .... :lachen001:


ரவீ..... என்ன ஆச்சு? ஆதவாவை இப்படி வாருறீங்க?:)


விடுபட்ட இரண்டு பாகத்தையும் வாசித்தேன். பாரதி சொன்னதைப்போல....பிரபல எழுத்தாளர்களுக்கே சவால் விடுமளவுக்கான உயர்தர எழுத்து. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட யோசித்து, அவற்றக் கதையோடு ஒருங்கிணைத்து, ஒவ்வொரு பாத்திரத்தையும்...அவர்களின் அதே குணாதிசயங்களோடு உலாவ விட்டு......

சான்ஸே இல்லம்மா.....அண்ணனாய் மிகப் பெருமைப்படுகிறேன்.

ஜாக்கியின் பாத்திரப்படைப்பு அற்புதம். கண்முன்னால் பார்ப்பதைப்போன்ற அசத்தலான உரையாடல்கள்+காட்சியமைப்பு. வாழ்த்துக்கள் தங்கையே.

உங்க பாராட்டுக்கு நன்றி அண்ணா. கதைக்கரு மனதில் இருந்தாலும் எழுத்துவடிவில் கொணர்வது சவாலாகத்தான் இருக்கிறது. இந்த முயற்சியிலும் வெற்றி பெறுகிறேனா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு போன்ற ஒரு கதையோட்டம். வெள்ளித்திரையில் காண்பது போல்.......... தொடருங்கள்.

அனுபவம்தான். ஆனால் எல்லாம் இரவல்! :D பின்னூட்டத்துக்கு நன்றி அன்பு.

கீதம்
07-06-2011, 10:31 AM
(8)

வீட்டுக்கு வந்தபோது அங்கே ஜாக்கி இருந்தது ஆச்சர்யம் அளித்தது. தன்னுடன் கோபித்துக்கொண்டு போனவள் இனிமேல் தன் முகத்திலேயே விழிப்பாளோ மாட்டாளோ என்று நினைத்திருக்க, அவளோ... படு அலட்சியமாய் இவன் வீட்டுக் கூடத்தில் அமர்ந்து ஜாலியாகக் காலாட்டிக்கொண்டிருக்கிறாள். இவளை என்னவென்பது?

சித்ராவிடம் எதைப் பற்றியோ சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தவள், சுந்தரைக் கண்ட நொடி கண்களில் உக்கிரம் காண்பித்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தாள். சுந்தருக்கு வியப்பாக இருந்தது. எப்படி இவளால் தன்னுடன் கோபமாகவும் தன் வீட்டாருடன் இணக்கமாகவும் ஒரே நேரத்தில் இருக்கமுடிகிறது? ஜாக்கியின் செயலை மனதுக்குள் ரசித்தான்.

பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடு நான் பார்க்கிறேன்
பூவென்பதா..... பெண்ணென்பதா..
நெஞ்சோடுதான் நான் கேட்கிறேன்...
முள்ளோடு தான் கள்ளோடு தான்..
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்.
கோபம் ஒரு கண்ணில்... தாபம் ஒரு கண்ணில்...
வந்து வந்து செல்ல... விந்தையென்ன சொல்ல..
வண்ண மலரே.............

ராஜா மகள்... ரோஜா மகள்....
ராஜா மகள்... ரோஜா மகள்...
வானில் வரும் வெண்ணிலா ...
வாழும் இந்த கண்ணிலா...
கொஞ்சும் மொழி பாடிடும்.. சோலைக்குயிலா....... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2722'&lang=ta)

சித்ரா சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள். ஜாக்கி அவளருகில் அமர்ந்து அவளுடைய அணிகலன்களை ஒவ்வொன்றாய்க் காட்டி பெயர் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"ஆண்ட்டீ... எனக்கும் இது மாதிரி ஒருநாள் மேக்கப் பண்ணுவியா??"

"நல்லாத்தான் இருக்கும், ஆனா உங்க வீட்டுல என்ன சொல்வாங்களோ?"

"நோ வொரிஸ், எனக்குப் பிடிச்சிருந்தா யாரும் எதுவும் சொல்லாது."

"பாரு, சித்ரா.... ஜாக்கியே ஆசைப்படுறா, நீ என்னவோ புடவை கட்ட அத்தனை அழிச்சாட்டியம் பண்ணுனியே..."

"சுடிதார் மாதிரி வசதிப் பட மாட்டேங்குதும்மா... ரெண்டடி நடந்தா தழைஞ்சு போவுது. எங்க அவுந்திடுமோன்னு பயமா இருக்கு"

"அதெப்படி அவிழும்? எத்தனை பின் போட்டு வச்சிருக்கே... ஒண்ணும் ஆகாது, பயப்படாம இரு!"

சுந்தரைப் பார்த்ததும் சித்ரா கேலியாகக் கேட்டாள், "என்னடா, இவ்வளவு அலங்காரம் பண்ணியிருக்கேனே... மாப்பிள்ளைக்கு என்னைக் கட்டாயம் பிடிச்சிடுமில்ல?"

சுந்தர் அக்காவைப் பார்த்தான். கருநீலத்தில் வெளிர் நீல பார்டர் வைத்த மைசூர் பட்டு கட்டி தலையில் மல்லிகைச்சரம் தொங்கவிட்டு கண்களில் மையெழுதி, கன்னத்தில் வெட்கமெழுதி, முழு அலங்காரத்துடன் அழகாகக் காட்சியளித்தாள்.

"மயங்கிடுவாரு...." என்றான் சுந்தர்.

ஓரக்கண்ணால் ஜாக்கியைப் பார்த்தபோது அவள் ஆசையுடன் சித்ராவின் புடவையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். சுந்தர் என்று ஒருவன் அங்கிருப்பதையே சட்டை செய்யாதவளாய் சித்ராவிடமும் அம்மாவிடமும் பேசிக்கொண்டிருந்தாள். அவளை எப்படி வீட்டுக்கு அனுப்பவது என்று அம்மா கவலைப்பட்டாள்.

ஜாக்கி வீட்டுக்குப் போக மனமில்லாதவளாய் இருந்தாள். இதுபோன்ற வைபோகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திராத காரணத்தால் மிகவும் ஆர்வமாக இருந்தாள்.

"ஜாக்கி, நிறையபேர் வருவாங்க, உனக்கு ஒரு மாதிரி இருக்கும், நீ வீட்டுக்குப் போய்ட்டு அப்புறமா வரியா?" அம்மா இந்த நேரத்தில் அவளிருப்பதை விரும்பவில்லை என்பதை அவளிடம் சூசகமாகத் தெரிவித்தாள்.

"பரவாயில்ல ஆண்ட்டி, நான் இருக்கேன். மாப்பிள்ளயப் பாத்துட்டுப் போறேன்."

சுந்தருக்கு ஜாக்கியைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

"உங்க நானி உன்னக் கூப்பிடுற மாதிரி இருக்கு பாரு..." அம்மாவின் அடுத்த உபாயமும் பலனில்லாமல் போனது.

"நானி வீட்டுல இல்ல, மம்மி மட்டும்தான் இருக்கு... அதுவும் தூங்குது"

"சுத்தம்!" பல்லைக் கடித்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தவளிடம்,

"அம்மா, உருளக்கிழங்கு போண்டா சூப்பர்!" சுந்தர் வாய்க்குள் மென்றபடியே வந்து சொல்ல, அம்மா கத்தினாள்.

"டேய், அவங்க எத்தனைப் பேர் வராங்கன்னு தெரியல. அவங்களுக்குத் தரும்போது தரேன்டா... இப்பவே காலி பண்ணிடாதே..."

"அம்மா, எனக்கு?" சித்ராவின் கெஞ்சலுக்கு அம்மா மசியவில்லை.

"புடவையெல்லாம் எண்ணைக்கறையாயிடும். அதுவுமில்லாம அவங்க வர நேரமாயிடுச்சி, வந்திட்டாங்கன்னா… வாயில போண்டாவோட நிப்பியா?"

"என்னை சாக்கா வச்சி போண்டா செஞ்சிட்டு என்னைத் தவிர எல்லாரும் சாப்பிடுங்க." சிணுங்கினாள்.

"ஏண்டி, இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றே?" ஜாக்கியை வெளியேற்ற இயலாத எரிச்சலை ஒவ்வொருவரிடமும் காண்பித்தாள் அம்மா.

"எனக்கு கொஞ்சம் எடுத்து வச்சிட்டு அப்புறமா எல்லாருக்கும் சப்ளை பண்ணுங்க, சொல்லிட்டேன்"

"என்னம்மா..... என்ன பிரச்சனை?" அப்பா வாசலிலிருந்து குரல் கொடுக்க,

"ம்? போண்டா பிரச்சனை!" சொல்லிவிட்டு மாப்பிள்ளை வீட்டாரை எதிர்பார்த்து பால்கனியில் நின்றாள் அம்மா.

சுந்தர் அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு போண்டாவைப் பிய்த்து கொஞ்சம் கொஞ்சமாய் சித்ராவின் வாயில் ஊட்ட, ஜாக்கி அதைப் பார்த்துச் சிரித்தாள். தான் கொடுத்தால் வாங்குவாளோ மாட்டாளோ என்று நினைத்துக்கொண்டே ஒரு போண்டாவை எடுத்து ஜாக்கியிடம் நீட்ட, அவள் அதற்காகவே காத்திருந்தவள் போல் ஆர்வத்துடன் "தாங்க் யூ" என்று பெற்றுக்கொண்டாள்.

கொஞ்சம் பிட்டு வாயில் போட்ட நிமிடம், "ஸ்....ஸ்..... ஹாட்.... ஹாட்ட்.... " என்று கையை உதறிக் கொண்டு பதறினாள்.

"ஆறித்தானே இருக்கு?" சித்ரா சந்தேகத்துடன் கேட்க,

"நோ.... நோ.... ஹாட்... ஹா…..ட்....ஸ்ஸ்....ஸ்.... வாட்டர்.....ப்ளீஸ்.... " ஜாக்கி தவித்தாள்.

"அக்கா.... மிளகாயைக் கடிச்சிட்டான்னு நினைக்கிறேன்." சுந்தர் சொல்லிக்கொண்டே ஜக்கிலிருந்து ஒரு தம்ளரில் தண்ணீரைச் சாய்த்து அவளிடம் நீட்டினான். நீர் வழியும் கண்களுடன் அவனைப் பார்த்து "தாங்க்ஸ்" என்றபடி பெற்றுக்கொண்டாள்.

"உறைக்குதுங்கிறததான் ஹாட் ஹாட்டுன்னு கத்துனியா... நல்லவேளை, அம்மா கவனிக்கல... இல்லைனா எங்க ரெண்டு பேருக்கும் திட்டு விழுந்திருக்கும். "

ஜாக்கி கொஞ்சநேரத்துக்கு ஸ்ஸ்...ஸ்ஸ்... என்று சொல்லிக்கொண்டும் தண்ணீரைக் குடித்துக்கொண்டும் இருந்தாள். அம்மாவின் கவனத்திலிருந்து தப்ப, அவள் பட்ட பாடு கண்டு சுந்தர் பரிதாபப்பட்டான்.

"பானு, இன்னும் அஞ்சு பத்து நிமிஷத்துல வந்திடுவாங்களாம், சுப்பையா போன் பண்ணினாரு" அப்பா குரல் கொடுத்தார்.

"அவளை போய்ட்டு அப்புறமா வரச்சொல்லுடா" ஜாக்கியைக் கண்ணால் சுட்டி அம்மா கெஞ்சினாள். எப்படி அவளிடம் சொல்வது? அம்மா பாட்டுக்கு சொல்லிவிட்டாள். இவள் மறுபடி எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திவிட்டால்....? நிலைமை மிகவும் மோசமாகிவிடுமே... யோசித்துக்கொண்டிருந்தபோது...

“சுந்தர், ஜாக்கியை இங்கே வரச்சொல்லேன்" சித்ரா அறையிலிருந்து அழைத்தாள்.

"ஏன்க்கா...?"

"ப்ச், வரச்சொல்லுடா...."

"ஜாக்கி, இங்க வா" சித்ரா ஜாக்கியை அவசரமாய்ப் பிடித்திழுத்து அறைக்கதவை மூடிக்கொண்டாள்.

"அந்தப் பொண்ணை அனுப்புறதுக்கு நான் படாதபாடு படறேன், இவள் என்னடான்னா அறைக்குள்ள கூப்பிட்டு வச்சிக்கறாளே..." அம்மா முணுமுணுத்தபடி அறைக்கதவைத் தட்டினாள்.

"ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்மா..."

ஐந்து நிமிடத்தில் கதவு திறக்கப்பட, அம்மா அதிர்ச்சியில் வாய்பிளந்தாள்.

அப்படியெதைக் கண்டு அம்மா வியக்கிறாள் என்று எட்டிப்பார்த்த சுந்தரும் வாய்பிளந்தான்.

அங்கே... சித்ராவின் இளஞ்சிவப்பு வண்ண சுடிதார் அணிந்து தலையில் குதிரைவால் கட்டி, பொட்டு வைத்து, வளையல், சங்கிலி எல்லாம் அணிந்து, இன்ஸ்டன்ட் தமிழச்சியாக மாறியிருந்தாள் ஜாக்கி. வயது மீறிய வளர்த்தி இருந்ததாலோ என்னவோ சித்ராவின் சுடிதார் இவளுக்கு அம்சமாகப் பொருந்திப்போயிருந்தது. சித்ராவை மிஞ்சும் அவள் அழகைக் கண்டு அம்மா, முன்னிலும் கூடுதலான பயத்தால் அடிவயிறு கலங்கி நிற்க, ஜாக்கியின் புதிய அவதாரம் கண்டு மெய்சிலிர்த்துப் போனான், சுந்தர்.

ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட.. பொங்கும் கடல் ஓயலாம்..
மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
தெய்வ மகள் என்று தேவன் படைத்தானோ...
தங்க சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ..
மஞ்சள் நிலவே....

ராஜா மகள்... ரோஜா மகள்....
ராஜா மகள்... ரோஜா மகள்...
வானில் வரும் வெண்ணிலா ...
வாழும் இந்த கண்ணிலா...
கொஞ்சும் மொழி பாடிடும்.. சோலைக்குயிலா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2721'&lang=ta).......

(தொடரும்)

சிவா.ஜி
07-06-2011, 01:20 PM
பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமான பாடல்கள். அம்மாவுக்கே உரிய பதட்டத்தை மிக அழகாய் அந்தப் பாத்திரப்படைப்பில் கொண்டு வந்திருக்கிறீர்கள். சுந்தரின் எதிர்பார்ப்பு, அம்மாவின் தவிப்பு, சித்ராவின் இன்னும் மாறாத குழந்தைத்தனம்....எல்லாமே அசத்தல்.

ஜாக்கியின் இருப்பு இந்த வைபவத்தை என்னவெல்லாம் செய்யப்போகிறதோ......ஆவலுடன் காத்திருக்கிறேன் தங்கையே.

அக்னி
07-06-2011, 01:22 PM
காலம் மாறினாலும், நாமும் மாறினாலும் வெள்ளைத்தோலின் மீதான ஒரு ஈர்ப்பும், இப்படியான நிகழ்வுகளின் போதான அச்சமும் இன்னமும் மாறவில்லை.

நம் பண்பாட்டு உடைகள் வெள்ளைத்தோலை அலங்கரிப்பது அழகுதான். பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களுக்கு கிடைக்கும் வித்தியாசம், வியப்பாய் விரியத்தான் செய்யும்.

இதுவரையில் ஒரு கறுப்புத்தோலுக்கு நம் உடைகளைப் போட்டு அலங்கரித்துப் பார்க்க எவருக்கும் ஆசை வந்திருக்குமா?
நிறவெறி எம்மிடமும் இருக்கத்தானே செய்கின்றது.

சுடுபடாதது - வெள்ளை
கருகிப்போனது - கறுப்பு
பதமானது - மாநிறம்
அட... ரொட்டியைச் சொல்லுகின்றேன்...

இந்தப் பாகமும் ஒரு சராசரி குடும்பத்தின் பரபரப்பொன்றை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கின்றது.
எதிர்பார்ப்பு, அச்சம், பரபரப்பு, குழப்பம், தவிப்பு... என்று அனைத்தும் கலந்த கலவைக்குள், போண்டாவின் காரமும் சுவைக்கின்றது...

அன்புரசிகன்
08-06-2011, 03:48 AM
ஏதும் பொல்லாப்பு நடக்கப்போகுதோ.......... தொடருங்கள்..

Nivas.T
08-06-2011, 08:31 AM
கண்டிப்பா ஏதோ ஒன்னு நடக்க போகுது அது என்னனுதான் தெரியல, ரொம்ப சுவாரசியமா போகுது கொஞ்சம் கூட தொய்வலே இல்லாம அழகா கதைய நகர்த்தியிருக்கீங்க

தொடருங்க

கீதம்
08-06-2011, 12:19 PM
பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமான பாடல்கள். அம்மாவுக்கே உரிய பதட்டத்தை மிக அழகாய் அந்தப் பாத்திரப்படைப்பில் கொண்டு வந்திருக்கிறீர்கள். சுந்தரின் எதிர்பார்ப்பு, அம்மாவின் தவிப்பு, சித்ராவின் இன்னும் மாறாத குழந்தைத்தனம்....எல்லாமே அசத்தல்.

ஜாக்கியின் இருப்பு இந்த வைபவத்தை என்னவெல்லாம் செய்யப்போகிறதோ......ஆவலுடன் காத்திருக்கிறேன் தங்கையே.

ஒவ்வொரு பதிவையும் சிலாகித்து நீங்கள் இடும் பின்னூட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நன்றி அண்ணா.


காலம் மாறினாலும், நாமும் மாறினாலும் வெள்ளைத்தோலின் மீதான ஒரு ஈர்ப்பும், இப்படியான நிகழ்வுகளின் போதான அச்சமும் இன்னமும் மாறவில்லை.

நம் பண்பாட்டு உடைகள் வெள்ளைத்தோலை அலங்கரிப்பது அழகுதான். பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களுக்கு கிடைக்கும் வித்தியாசம், வியப்பாய் விரியத்தான் செய்யும்.

இதுவரையில் ஒரு கறுப்புத்தோலுக்கு நம் உடைகளைப் போட்டு அலங்கரித்துப் பார்க்க எவருக்கும் ஆசை வந்திருக்குமா?
நிறவெறி எம்மிடமும் இருக்கத்தானே செய்கின்றது.

சுடுபடாதது - வெள்ளை
கருகிப்போனது - கறுப்பு
பதமானது - மாநிறம்
அட... ரொட்டியைச் சொல்லுகின்றேன்...

இந்தப் பாகமும் ஒரு சராசரி குடும்பத்தின் பரபரப்பொன்றை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கின்றது.
எதிர்பார்ப்பு, அச்சம், பரபரப்பு, குழப்பம், தவிப்பு... என்று அனைத்தும் கலந்த கலவைக்குள், போண்டாவின் காரமும் சுவைக்கின்றது...

நன்றி அக்னி. ரொட்டி, போண்டா, பாண் என்று எல்லாவற்றையும் உவமையாக்கி ரசிக்கவைக்கிறீர்கள். ரசனையான உங்கள் பின்னூட்டத்திற்காகவே நிறைய எழுதவேண்டும்போல் உள்ளது.


ஏதும் பொல்லாப்பு நடக்கப்போகுதோ.......... தொடருங்கள்..

பொல்லாப்பா? இல்லப்பு... அட... இல்ல அன்பு.:) தொடர்ந்துவந்து பாருங்க.


கண்டிப்பா ஏதோ ஒன்னு நடக்க போகுது அது என்னனுதான் தெரியல, ரொம்ப சுவாரசியமா போகுது கொஞ்சம் கூட தொய்வலே இல்லாம அழகா கதைய நகர்த்தியிருக்கீங்க

தொடருங்க

ஆகா... இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே... இதுக்காகவாவது எதையாச்சும் நடக்கவைக்கணும் போல இருக்கே...:)

ஆனா.... என்ன பிரச்சனைன்னா... நான் பல பாகங்களை முன்கூட்டியே எழுதிவைத்துவிடுவதால் கதையை மாத்த முடிய மாட்டேங்குது.:mini023:

கீதம்
08-06-2011, 12:24 PM
(9)

"ஸ்ஸ்.... அப்பாடா..."

மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பிவிட்டு வந்து சாய்வுநாற்காலியில் பெருமூச்சுடன் சாய்ந்தார் அப்பா.

"இதுக்கே பெருமூச்சா? இன்னும் ஏகப்பட்டது இருக்கே.. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கணும், மண்டபம் பாக்கணும், சமையலுக்கு ஆள் பாக்கணும், சொந்தபந்தங்களுக்கு அழைப்பு விடணும். தலைக்கு மேல வேலை இருக்கு.." அம்மா மலைத்தாள்.

"ஏன் சலிச்சுக்கறே... தலைக்கு மேல வேலை இருந்தா என்ன? நமக்குதான் தோளுக்கு மேல வளர்ந்த பையன் இருக்கானே, அக்கா கல்யாணத்தை அமோகமா பண்ணிடமாட்டானா?"

சுந்தர் அப்பா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கண்டு நெகிழ்ந்தான்.

"நிச்சயமாப்பா.... என்ன என்ன செய்யணும்னு ஒரு லிஸ்ட் கொடுத்திடுங்க... ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க...... சூப்பராப் பண்ணிடலாம்பா..."

"பிள்ளையே சொல்லிட்டான், அப்புறமென்ன பானு? நம்ம வீட்டுல முதல் தேவை. யார் மனசும் கோணாம எல்லாம் நல்லபடியா நடக்கணும், அதுதான் என் கவலை. சரி, சித்ரா எங்க? ஆளையே காணோம்?"

“அறையில இருப்பா." சொல்லிவிட்டு அம்மா கேட்டாள்,

"சித்ரா…. உருளக்கிழங்கு மசாலா எடுத்து வச்சிருக்கேன். சூடா போண்டா போட்டுத் தரவா?"

"ப்ச், வேண்டாம்மா..."

"ஏண்டி, அப்போ அப்படி ஆர்ப்பாட்டம் பண்ணினே?"

"தலையை வலிக்குதும்மா... வேணும்னா .... எடுத்துவந்து இந்த ஜாக்கி வாயிலே திணிங்க. என்னைப் போட்டுப் படுத்துறா...."

"ஏண்டி, அவ என்ன பண்ணினா? பாவம் புள்ள, அவபாட்டுக்கு சமர்த்தா இருந்தா...... " அம்மா ஜாக்கியை மெச்சிக்கொண்டாள்.

"இப்ப வந்து பாருங்க"

"சுந்தர், என்னன்னு போய்ப் பாரு.... அடுப்பில வேலையா இருக்கேன்"

சித்ரா கட்டிலில் குப்புறப் படுத்திருக்க, அவளருகில் ஜாக்கி அமர்ந்துகொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். சுந்தரைக் கண்டபோது முன்போல் கண்ணில் உக்கிரம் தென்படவில்லை.

"பாரசிட்டமால் எடுத்துத் தரவாக்கா?"

"ரெண்டு போட்டிருக்கேன், தலைவலி இன்னும் போகல" சித்ரா நிமிராமலேயே சொன்னாள்.

"தலைவலியைப் பக்கத்திலேயே உக்கார வச்சிகிட்டிருந்தா எப்படிப் போவும்?"

சுந்தரின் குறும்பு புரிந்து சித்ரா குலுங்கிச் சிரிக்க, ஜாக்கி ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

"ஜாக்கிக்கு சந்தேகத்துக்கு மேல சந்தேகம். நைநைன்னு என்னைப் போட்டுக் குடைஞ்சுகிட்டு இருக்கிறா..."

"என்னவாம்?"

“எங்க மீட் பண்ணினீங்க? எப்போ டேட்டிங் போனே? எப்படி ப்ரபோஸ் பண்ணினாருன்னு இல்லாத கேள்வியெல்லாம் கேட்டுகிட்டிருக்கிறா. அதெல்லாம் இல்லன்னு சொன்னா... ஒய் ஒய்ங்கிறா. எப்படி ஒரு ஆளைப் பாத்த மாத்திரத்தில் கல்யாணம் பண்ணலாமா கூடாதான்னு முடிவெடுக்கிறங்கிறா. என்ன சொன்னாலும் அவளால் புரிஞ்சிக்கவே முடியல. ஜாக்கி, உன் கேள்வியை சுந்தர்கிட்ட கேளு, அவன் சொல்லுவான். என்னைக் கொஞ்சநேரம் தூங்க விடு, ப்ளீஸ்!"

சொல்லிவிட்டு சித்ரா மீண்டும் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். சுந்தர் ஜாக்கியைப் பார்க்க, அவள் எதுவும் பேசாமல் வெளியேறினாள்.

"என்ன ஜாக்கி, இன்னும் இந்த ட்ரெஸ்ஸைக் கழட்ட உனக்கு மனசு வரலையா?" அம்மா வியப்போடு கேட்க,

"ஐ வான்ட் டு ஷோ இட் டு மை டாடி." என்றாள் மகிழ்வுடன்.

"பானு, அவர் தப்பா நினைச்சுடப் போறாரு... இங்கயே மாத்திட்டுப் போவ சொல்லு" அப்பா பயந்தார்.

"நோ. அங்க்கிள்.. ஹி வில் லைக் திஸ்" ஜாக்கி விடாப்பிடியாக இருந்தாள்.

"அம்மா.... அந்த சுடியை அவளே வச்சிக்கட்டும்மா... ரொம்ப ஆசைப்படுறா" சித்ரா உள்ளேயிருந்து சொல்ல, ஜாக்கி உற்சாகத்தில் துள்ளினாள்.

"ரியலி?" கேட்டுவிட்டு ஓடிச்சென்று சித்ராவின் கன்னத்தில் முத்தம் பதித்து, "தாங்க் யூ" எனவும் சித்ரா "ச்சீ....ய், வெக்கமே இல்ல ஜாக்கி உனக்கு" என்று கன்னத்தைத் துடைத்துக்கொண்டே சிரித்தாள்.

"வெக்கமா? கிலோ என்ன விலைன்னு கேக்கும்" தன்னையறியாமல் சுந்தர் சொல்ல, சித்ரா, "பார், ஜாக்கி, சுந்தருக்குக் கூட உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு" என்று சிரித்தாள். என்ன தெரிந்து என்ன பயன்? தன் மன உணர்வுகளைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் தன்னை வெறுப்பவளிடம் எதைச் சொல்லி புரியவைப்பது?

சுந்தரை அலட்சியப்படுத்தியவளாய்.. அவளைக் கேலி செய்வதையும் உணராதவளாய் சுற்றி சுற்றி வந்தாள்.

"ஆண்ட்டீ... நீ அங்க்கிளை லவ் பண்ணிதானே மேரேஜ் பண்ணிச்சு?"

"அவளை விட்டுட்டு என்கிட்ட வந்திட்டியா?" அம்மா அலுத்துக்கொள்ள,

"ஜாக்கி.. " அப்பா அழைத்தார்.

"எங்க கலாச்சாரத்தில் காதலுக்கு அப்புறம் கல்யாணம் கிடையாது, கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்! புரியுதா?"

"லவ் பண்ணாம எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்? ஐ கான்ட் இமாஜின்."

"என்ன பண்ணுறது? உங்க கலாச்சாரம் வேற, எங்க கலாச்சாரம் வேற"

"பட் ஐ லைக் யுவர் கல்ச்சர், இட்ஸ் த்ரில்லிங். எனக்கு என் டாடி மாதிரி ஒரு பஃபெக்ட் ஜென்டிமேன் தான் ஹஸ்பெண்டா வரணும். என்னை நெறைய லவ் பண்ணனும், திட்டவே கூடாது. செல்லமா வச்சிக்கணும். ஸோ..... நான் லவ் பண்ணிதான் மேரேஜ் பண்ணுவேன்." உறுதியாகச் சொன்னாள்.

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மேலும் அவள் சொன்னதுதான் அப்பா அம்மாவை அதிரவைத்ததுடன் சுந்தரையும் காயப்படுத்தியது.

"எனக்கு நெறைய பாய்ஃப்ரெண்ட்ஸ் இருக்குது. எல்லாமே என்னை லவ் பண்ணுது. என்னை யார் இம்ப்ரஸ் பண்ணுதோ... அதைத்தான் நான் லவ் பண்ணுவேன், மேரேஜ் பண்ணுவேன்."

இதுவரை அவள் போக்கை விளையாட்டு என்றும் வேடிக்கை என்றும் எண்ணிக்கொண்டிருந்த சுந்தரின் மனதில் இப்போது புதுக்கவலை ஒன்று பிறந்தது. இத்தனைக் காதலை மனதுக்குள் தேக்கி வைத்திருக்கும் தன்னை விலக்கி யாரையோ தேர்ந்தெடுக்கவிருக்கிறாள் என்னும் கசப்பான உண்மையை அவனால் சீரணிக்கவே இயலவில்லை.

அக்காவின் திருமணம், தன் படிப்பு எல்லாம் முடிந்து வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்தியபின் அவள் கரம் பற்றுவதில் தனக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று நம்பியிருந்தான். அதற்குள் ஜாக்கியின் மனதைத் தன் வசம் ஈர்த்துவிடமுடியும், தன் அன்பை அவளுக்கு புரியவைத்திட முடியும் என்று உறுதியாக நம்பியிருந்தவனின் தலையில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தான். அப்படி என்ன அவசரமோ இந்தப் பெண்ணுக்கு?

அவளிடம் மனம்விட்டுப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்தான். முதலில் தன்மீது அவளுக்கிருக்கும் கோபத்தைப் போக்கும் விதமாக அவன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறவேண்டும்.

ஜாக்கி விஷயத்தில் அவசரப்படக்கூடாது. அவள் போக்கிலேயே போய்தான் அவளைத் தன் வழிக்குக் கொண்டுவரவேண்டும். அவள் எதிர்பார்க்கும் அந்த ஈடற்ற அன்பு தன்னிடம்தான் கிடைக்கும் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும். அதன்பின்...... மதம், மொழி, கலாச்சாரம் இன்னபிற வேற்றுமைகள் யாவும் மறைந்து அன்புவட்டத்துள் தாங்கள் இருவர் மட்டுமே அடைபட்டுக்கிடக்கும் நன்னாளே எந்நாளும். நினைக்கும்போதே மனம் உற்சாகவானில் ஊஞ்சலாடியது.

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே… வா இங்கே…

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1776'&lang=ta)…

(தொடரும்)

Nivas.T
08-06-2011, 01:22 PM
உண்மைதான் காதலில் பாசத்தையும் அன்பையும் புரியவைத்துவிட்டால் போதும் மதம், இனம், மொழி, கலாச்சாரம், அந்தஸ்த்து என எதுவும் தடையாயிருக்க முடியாது. ஆனால் காதலை உணர்த்துபவரும், உணர்ந்துகொள்பவரும் சரியாக அமைய வேண்டும், எது ஒன்று பிசகினாலும் அதோகதிதான்.

பார்க்கலாம் சுந்தர் தனது காதலை ஜாக்கிக்கு எப்படி புரியவைக்கிறான் என்றும், அவள் எப்படி அதைப் புரிந்துகொள்கிறாள் என்றும்.

சிவா.ஜி
08-06-2011, 01:43 PM
வெள்ளத்தோலைப் போலவே வெள்ளை மனசுக்காரியாய் இருக்கிறாள் ஜாக்கி. ஆனால் அதே வெள்ளை மனசால் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறாள்.

பெண்பார்க்கும் படலத்தை விலாவரியாய் சொல்லாமல்...பின் நிகழ்வுகளை வைத்தே நடந்ததிச் சொல்லும் உங்கள் உத்தி மிக அருமை. ஜாக்கியால் ஏதும் பிரச்சனை வராமல், சித்ராவுக்கு இந்த வரன் தகைந்தது சந்தோஷம்.

சுந்தரின் மனதைப் புரிந்துகொள்ளப்போகிறாளா....அல்லது மனதை அறிந்து ‘கொல்லப்’போகிறாளா.....

தொடருங்கள் தங்கையே.

அன்புரசிகன்
09-06-2011, 12:30 AM
சுந்தரின் அடுத்த கட்ட நடவெடிக்கை என்னவாக இருக்கும் என அறியும் ஆவல். பெண்பார்க்கும் படலத்தில் ஏதாவது நடந்திருக்கும் என்று நினைத்தேன். (மாப்புவை நீ எங்க வேலைபார்க்குது? நீ யாரையாச்சும் லவ்பண்ணீச்சு? என்று கேட்டிருப்பாள் என்று நினைத்தேன் :D)

தொடருங்கள்...

கீதம்
09-06-2011, 09:15 AM
உண்மைதான் காதலில் பாசத்தையும் அன்பையும் புரியவைத்துவிட்டால் போதும் மதம், இனம், மொழி, கலாச்சாரம், அந்தஸ்த்து என எதுவும் தடையாயிருக்க முடியாது. ஆனால் காதலை உணர்த்துபவரும், உணர்ந்துகொள்பவரும் சரியாக அமைய வேண்டும், எது ஒன்று பிசகினாலும் அதோகதிதான்.

பார்க்கலாம் சுந்தர் தனது காதலை ஜாக்கிக்கு எப்படி புரியவைக்கிறான் என்றும், அவள் எப்படி அதைப் புரிந்துகொள்கிறாள் என்றும்.

தொடர்ந்து தரும் பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.


வெள்ளத்தோலைப் போலவே வெள்ளை மனசுக்காரியாய் இருக்கிறாள் ஜாக்கி. ஆனால் அதே வெள்ளை மனசால் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறாள்.

பெண்பார்க்கும் படலத்தை விலாவரியாய் சொல்லாமல்...பின் நிகழ்வுகளை வைத்தே நடந்ததிச் சொல்லும் உங்கள் உத்தி மிக அருமை. ஜாக்கியால் ஏதும் பிரச்சனை வராமல், சித்ராவுக்கு இந்த வரன் தகைந்தது சந்தோஷம்.

சுந்தரின் மனதைப் புரிந்துகொள்ளப்போகிறாளா....அல்லது மனதை அறிந்து ‘கொல்லப்’போகிறாளா.....

தொடருங்கள் தங்கையே.

அழகாச் சொல்லியிருக்கீங்க. தொடர்ந்து வருவதற்கு நன்றி அண்ணா.


சுந்தரின் அடுத்த கட்ட நடவெடிக்கை என்னவாக இருக்கும் என அறியும் ஆவல். பெண்பார்க்கும் படலத்தில் ஏதாவது நடந்திருக்கும் என்று நினைத்தேன். (மாப்புவை நீ எங்க வேலைபார்க்குது? நீ யாரையாச்சும் லவ்பண்ணீச்சு? என்று கேட்டிருப்பாள் என்று நினைத்தேன் :D)

தொடருங்கள்...

என்ன நடக்குதுன்னு கவனிக்கிற ஆர்வத்தில் கேட்க மறந்திட்டாளோ?:)

பின்னூட்டத்துக்கு நன்றி அன்புரசிகன்.

கீதம்
09-06-2011, 09:25 AM
(10)

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா …
என் தம்பியை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா…
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே…
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட…

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது…
எழில் பொங்கிடும் அன்பு அக்காவின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது …
மங்கலக் குங்குமம் சிரிக்கின்றது (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD1976'&lang=ta)…


சுந்தர் அக்காவைச் சுற்றி சுற்றி வந்து பாடிக்கொண்டிருந்தான். சித்ரா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள். அத்தை சிரிப்பை அடக்கப் படாத பாடுபட்டாள்.

"என்னடா மாத்தி மாத்திப் பாடுறே?" பெரியம்மா அவன் பாடியதை ரசித்தாலும் வேண்டுமென்றே கேட்டாள்.

"வேற என்ன பெரியம்மா பண்றது? எல்லாரும் அண்ணன் தங்கைப் பாட்டுதான் பாடியிருக்காங்க, அக்கா தம்பி பாட்டு ஒண்ணு கூட இல்லையே... அதான் இப்படி!"

"ரொம்ப நல்லா இருக்கு!" நொடித்துக்கொண்டு போனாள் புவனியக்கா.

முன்கூட்டி வந்திருந்த நெருங்கிய உறவுகளால் வீடு களைகட்டியிருந்தது. சித்ராவின் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டதிலிருந்து வீடே பரபரப்பாக இருந்தது. சுந்தரின் செமஸ்டர் முடிந்ததும் திருமணம் என்று முடிவானாலும் அதற்கான முன்னேற்பாடுகளிலேயே அவன் நேரம் கரைந்துபோனது. கிடைக்கும் நேரத்தையும் ஜாக்கியின் நினைவு விழுங்கிக்கொண்டது. அவளை நினைக்கக் கூடாது என்று எத்தனைப் பிடிவாதமாக இருந்தாலும் அவள் விடுவதாயில்லை.

பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் அவன் வீடே கதியென்று இருந்தாள். ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் காரண காரியம் கேட்டுக்கொண்டு அம்மாவைத் துளைத்தெடுத்தாள். ஒரு செல்லப்பிராணி கணக்காக வீட்டில் வளையவந்துகொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அந்நியமாய்த் தெரிந்த அவளது பேச்சும் நடவடிக்கையும் அதிவிரைவில் அனைவரையும் ஈர்த்து அவள்பால் அன்பைப் பொழிய வைத்தது. குடும்பத்தில் ஒருத்தியாகவே தன்னை உட்படுத்தியிருந்தாள்.

"சுந்தர், இந்த ட்ரெஸ் நல்லா இருக்கா?" ஜாக்கி மூச்சுவாங்கக் கேட்டாள். படிகளில் வேகமாக ஏறிவந்திருப்பாள் போலும்.

"சூப்பரா இருக்கு!"

"இத்தனைப் பேரு இருக்கோம், சுந்தர்கிட்ட மட்டும் காட்டிக் கேக்கிறாளே...." அத்தை அதிசயித்தாள்.

"என்ன ஜாக்கி, ஆளே மாறிட்டே? புது ட்ரெஸெல்லாம் போட்டிருக்கே?" அம்மா கேட்டாள்.

"நல்லா இருக்கா ஆண்ட்டீ?"

குழந்தை போல் தன் புதிய உடையைக் காட்டி நின்றாள். வெள்ளை நிறத்தில் பெரிய பெரிய சிவப்புப் பூக்கள் போட்ட முழுப்பாவாடையும், மேலே சிவப்புநிற டாப்ஸும் போட்டு முன்னிலும் அழகாகத் தெரிந்தாள்.

"அம்சமா இருக்கு!" அம்மா அவள் முகத்தைத் தன்னிரு கைகளாலும் வழித்து நெட்டி முறித்து, திருட்டி கழித்தாள்.

"சாக்கி, கொஞ்சம் தண்ணி எடுத்துக்குடு... கால் மரத்துப்போச்சி..." காலையிலிருந்து காலை மடக்கி அமர்ந்தபடியே தேங்காய்த் துருவிக்கொண்டிருந்த அத்தை சொல்லவும்,

"என்னை ஜாக்கி சொல்லுங்கோ.... சாக்கி இல்ல" என்றாள்.

"அடி, ஏதோ ஒண்ணு, தண்ணி எடுத்துக்குடுடின்னா... கதை பேசுறா"

இந்த அளவுக்கு அத்தை ஜாக்கியுடன் உறவாடும்படியாக அவளது உரிமையின் எல்லை விரிவடைந்திருந்தது.

"சித்ரா... உன் மேரேஜ்க்கு நான் தான் மெய்ட் ஆஃப் ஆனர்! உனக்கு போடுற எல்லா மேக்கப்பும் எனக்கும் போடணும்.ஓ.கே.?"

"என்ன சொல்றா ஜாக்கி?"

"அவதான் பொண்ணுத்தோழியா இருப்பாளாம். என்னை மாதிரியே அவளுக்கும் அலங்காரம் பண்ணனுமாம்" சித்ரா மொழிபெயர்த்தாள்.

"கிழிஞ்சுது... ஆர்வக்கோளாறில…. மாப்பிள்ள தாலியை எடுத்ததும் இவ தலையை நீட்டிடப் போறா..எதுக்கும் ஜாக்கிரதையா இருடி சித்ரா." புவனியக்கா சொல்ல, எல்லோரும் சிரித்தனர்.

ஜாக்கியும் சிரித்தாள்.

"உங்க அக்காவுக்கு கல்யாணம் எப்போ?"

"அது இன்னும் ஃபிக்ஸ் ஆகல , சித்ரா மேரேஜ் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. ஐ வான்ட் டூ பீ தேர்." "

"ஜாக்கி, உனக்கிருக்கிற ஆர்வத்துக்கு பேசாம நீ எங்க சுந்தரையே கல்யாணம் பண்ணிக்கோ" அத்தை விளையாட்டாய் சொல்ல,

"சரோ... என்ன இது?"

எங்கிருந்தோ அப்பாவின் அதட்டல் கேட்டது.

"இல்லண்ணே... சும்மா விளையாட்டுக்கு..." அத்தை இழுத்தாள்.

"விளையாட்டாப் பேசுற பேச்சா இது?"

சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. சுந்தரும் ஒருகணம் பயந்துதான் போனான். அத்தை வேடிக்கையாய்ப் பேசியதை அப்பா விபரீதமாய் எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்ன? என்றாவது ஒருநாள் இந்த வேடிக்கையும் உண்மையாகிப் போகும் நாள் வரத்தானே செய்யும்?

"அண்ணன் வீட்டுலதான் இருக்கா? சொல்லக்கூடாதுடி சித்ரா? நான் எங்கயோ வெளியில போயிருக்குன்னு நினைச்சேன்..." அத்தை கிசுகிசுத்தாள்.

"ஆண்ட்டீ, நீங்க கெஞ்சினாலும் நான் சுந்தரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், அவன் ஃப்ரெண்டா இருக்கவே அத்தனைக் கண்டிஷன் போடுறான். ஹஸ்பெண்டானா அவ்வளவுதான்.... நோ வே..."

"என்ன கண்டிஷன் போடுறான்?" சித்ரா அப்பாவுக்குக் கேட்காமல் மெதுவாகக் கேட்டாள்.

"கவுன் போடக்கூடாதாம், பாய்ஸோடு க்ளோசாப் பழகக் கூடாதாம், இன்னும் என்னென்னமோ சொன்னான். டோடலி, உன்ன மாதிரி இருக்கணுமாம். அவனோட ஃப்ரெண்ட்ஷிப்பை மெயின்டெய்ன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?"

சத்தமாகவே ஜாக்கி சொன்னாள். ஜாக்கி சொன்னதைக் கேட்டு சுந்தர் அதிர்ந்தான். தான் அவளிடம் அன்று சொன்னதை அவள் இத்தனை எதிர்மறையாகப் புரிந்திருப்பாள் என்று எதிர்பாராதக் காரணத்தால் நொந்துபோனான். தனக்கும் ஜாக்கிக்கும் இடையில் இருப்பது காதல்தான் என்றும், கூடிய சீக்கிரம் அவள் வாயாலேயே ஒத்துக்கொள்ளவைக்கவேண்டும் என்றும் நினைத்திருந்தவனுக்கு ஜாக்கியின் இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஏன் இப்படி என்னை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறாள்? உண்மையில் அவளுக்கு தன்னிடம் இருக்கும் ஈர்ப்பு காதல் என்பதே புரியவில்லையா? அல்லது நடிக்கிறாளா?



************


சிலநாட்களுக்கு முன் ஒரு வெள்ளியன்று...

ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0933'&lang=ta)…

டிடிங்...டிடிங்...

ஒலியும் ஒளியும் ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அழைப்புமணி இடையூறு செய்தது.

கதவைத் திறந்தவன் முன்... ஜாக்கி நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் வழக்கம்போலவே மனம் துள்ளியது. எனினும் கட்டுப்படுத்தியபடி முகத்தில் உணர்வுகாட்டாமல் சொன்னான்.

"அக்காவும் அம்மாவும் கோவிலுக்குப் போயிருக்காங்க...."

"ஐ நோ"

"அப்பாவும் வெளியில போயிருக்கார்"

"யேஸ், ஐ நோ..."

கேட்டதும் திரும்பிவிடுவாள் என்று நினைத்திருக்க, அவளோ அவனை மீறி உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். எதற்கு வந்திருக்கிறாள்? தான் மட்டும்தான் இருக்கிறேன் என்பதை இதைவிடவும் எப்படிச் சொல்வது?

"ஐயாம் ஸாரி, சுந்தர்!" அவனை அதிகம் யோசிக்கவிடாமல் பட்டென்று சொன்னாள்.குரலில் வருத்தம் தெரிந்தது.

"எதுக்கு?"

"அன்னைக்கு உன்னையும் உன் ஃப்ரெண்ட்ஸையும் திட்டினதுக்கு"

அந்த விஷயத்துக்காக தான்தான் அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் நினைத்திருக்க... அவளே வந்து மன்னிப்பு கேட்கிறாளே... திடீரென்று என்ன தோன்றியதோ?

"ஜாக்கி, அன்னைக்கு நான் தான் உன்கிட்ட ஹார்ஷா நடந்துட்டேன். அதுக்காக நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கறேன்."

"ஓ.கே. நானும் ஸாரி கேட்டாச்சு, நீயும் ஸாரி கேட்டாச்சு. நெள வீ ஆர் ப்ஃரெண்ட்ஸ் அகெய்ன். ஓ.கே.?"

சுந்தரால் நம்பமுடியவில்லை. ஜாக்கி ஜாக்கியாக இல்லை. கலகலவென்றும் துருதுருவென்றும் வெடுக் வெடுக்கென்றும் பேசும் ஜாக்கி காணாமற்போயிருந்தாள். இவளுக்கு என்ன ஆனது? திடீரென்று என்னிடம் மன்னிப்புக் கேட்க ஏதோ காரணம் இருக்கவேண்டுமே...

டோர்ணமெண்டுக்கு தான் வரவில்லையென்று சொன்னதால் "எல்லாம் உன்னால்தான்" என்று சீனு இவளைக் கண்டு திட்டியிருப்பானா? ஆனால் இவள் அதற்கெல்லாம் மசிகிறவள் இல்லையே.... இருந்தாலும் விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது என்று தோன்ற,

"ஜாக்கி, என் ஃப்ரெண்ட்ஸ் யாராவது ஏதாவது சொன்னாங்களா?" கொஞ்சம் பதற்றத்தோடே கேட்டான்.

"நோ... நோ...” உடனடியாக மறுத்தாள்.

"பின்ன என்ன திடீர்னு?"

“சுந்தர்... நீ என்னோட பேசாம இருந்தா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... ஐ மிஸ் யூ அ லாட்...”

ஜாக்கி சொல்லச் சொல்ல, சுந்தரின் மனம் ஆனந்தக் கூத்தாடியது. என்னுடன் பேசாமலிருக்க முடியவில்லையென்கிறாளே.... நான் மட்டும் என்ன சந்தோஷமாகவா இருக்கிறேன்? எல்லோரிடமும் கலகலப்பாய் பேசுபவள் தன்னிடம் மட்டும் இறுக்கம் காட்டுவதை ஏற்க முடியாமல் எத்தனைத் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் சொல், இன்னும் சொல்லென்று அவள் இதழ்வழி நழுவும் வார்த்தைகளில் அவன் இதயம் எதிர்பார்ப்பதை வலைவீசிப்பிடிக்கக் காத்துநின்றான். அவனுடைய மெளனம் கண்டு தடுமாறியவள், சட்டென்று கேட்டாள்.

"சுந்தர், டோன்ட் யூ லைக் மீ?"

என்ன வார்த்தை கேட்டாயடி? உன்னைப் பிடிக்காமலா உன்னை என் தேவதையாய் என் கனவுகளில் வரித்துக்கொண்டேன். உன்னைப் பிடிக்காமலா நீ கேலிக்காளாவதைத் தடுக்க முனைந்தேன்? உன்னைப் பிடிக்காமலா......

"சுந்தர்... ஐயாம் ஸாரி.... " ஜாக்கியின் குரல் இறைஞ்சியது.

என்ன? என்ன? என் ஜாக்கியா இது? அவளுக்குள்ளும் காதல் பூத்துவிட்டதோ? இல்லையெனில் இப்படி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தனிமையில் என்னைச் சந்திக்க வந்து தானே மன்னிப்புக் கேட்பாளா?

சந்தேகமேயில்லை, இது காதல்தான். ஆனால் பாவம், அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. இப்படியா ஒரு பெண் தான் காதல்வயப்பட்டதை அறிய இயலாத அப்பாவியாக இருப்பாள்?

அவளைக் கொஞ்சம் சீண்டிப்பார்க்கும் ஆவல் எழுந்தது. தன்னை எத்தனை முறை தவிக்கவிட்டிருக்கிறாள்! இவளைக் கொஞ்சநேரம் தவிக்கவிட்டால்தான் என்ன? அணை கடந்த ஆர்வம், சுந்தரை அதிகம் யோசிக்கவிடாமல் செய்தது. தன்மீது இளகியிருக்கும் இந்நிலையில் தான் என்ன சொன்னாலும் ஜாக்கி கட்டுப்படுவாள் என்று தோன்ற,

"ஜாக்கி, நான் உன்கூட ஃப்ரெண்டா இருக்கணும்னா... நான் சொல்ற சில விஷயங்களை நீ கேட்கணும், கேப்பியா?"

"என்ன?" புருவங்களை மேலேற்றிக் கேட்டாள்.

"நீ முதல்ல இந்த மாதிரி அரைகுறையா ட்ரெஸ் பண்றதை மாத்து. உங்க அக்கா மாதிரி ஜீன்ஸ் போட்டுக்கோ... இல்லைனா எங்க அக்கா மாதிரி சுடிதார் போட்டுக்கோ... "

“நான் கவுன் போடுறதுக்கும் ஃப்ரெண்ட்ஷிப்புக்கும் என்ன கனெக்ஷன்?"

"ஜாக்கி, மத்தவங்க உன்னப் பாத்து அசிங்கமா கமெண்ட் அடிக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு. அன்னைக்கு கூட கிரவுண்ட்ல வா வான்னு கூப்பிட்டதுக்கு காரணம் அதான். நீதான் புரிஞ்சுக்கல."

"ஸோ... வாட்? அவங்க என் நானியைக் கூடத்தான் கமெண்ட் அடிக்கிறாங்க"

"நானியைச் சொன்னா பரவாயில்ல, உன்னைச் சொன்னாதான்... எனக்கு கோவம் வருது. அதனால்தான் சொல்றேன், நீ இன்னும் சின்னப்பாப்பா மாதிரி கவுன் போடறதை விடுன்னு."

"ஓ மை காட், இதெல்லாம் எங்க நானி எனக்காக கஷ்டப்பட்டு தச்சது. அதைப் போய் வேணாம்னு சொல்றியே... நானி ரொம்ப ஃபீல் பண்ணும்"

சுந்தர் அவள் சொன்னதைக் கேட்டுத் தலையில் அடித்துக்கொண்டான்.

"ஓ.கே. ஓ.கே..நெக்ஸ்ட்?"

"பசங்களோட சுத்துறதை நிறுத்து... எல்லாரும் நல்லவங்க கிடையாது. உன்கிட்ட நல்லாப் பேசிட்டு நீ போனதுக்கப்புறம் உன்னையும், உன் கேரக்டரையும் கேவலமாப் பேசுற பசங்களும் இருக்காங்க. அதனால் எல்லார்கிட்டயும் ஒரு டிஸ்டன்ஸ் வச்சிப் பழகு.”

"அப்போ உன்கிட்டயும்தானே?" அவள் குறும்பாகச் சிரித்தாள். அவள் இயல்புநிலைக்கு வந்துவிட்டாள் என்பதை விடவும் இந்தமுறை தன் பேச்சுக்கு செவிமடுத்திருக்கிறாள் என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது

"ஆமா... என்கிட்டயும்தான்."

"ஹும், தென்?"

"இப்போதைக்கு அவ்வளவுதான்"

"ஐ வில் ட்ரை"

கண்ணைச் சிமிட்டிச் சொல்லிச் சென்றவள், இன்று தன்னைக் கண்கலங்கச் செய்கிறாளே...

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாயோ...
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாயோ...

நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது

இன்று காதல் பிறந்தநாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0933'&lang=ta)…

Nivas.T
09-06-2011, 12:12 PM
இந்தப் பொண்ணுங்கள புரிஞ்சிகிறது ரொம்ப கஷ்டம் பா? அதுவம் அது ஒருதலைக் காதலா இருந்து அந்த பொண்ணுக்கும் அது தெரிஞ்சிருந்தா......... அவ்வளவுதான்.... அவனைவிட பாவம் பண்ணவன் இந்த உலகத்துல யாரும் கிடையாது. :D:D:D:D:D

சிவா.ஜி
09-06-2011, 01:50 PM
நட்புங்கற வட்டத்துலருந்து வெளிய வர சுந்தர் நினைக்கிறான்...ஆனா அந்த வட்டத்திலேயே அவனை வைத்துக்கொள்ளவே ஜாக்கி பிகு செய்கிறாள். வெகுளியான அவள் பேச்சும் பழக்கமும்...இன்னும் எதுவரைக் கொண்டுவிடும் தெரியவில்லை.

அழகாய் போகிறது கதை. ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்ப்பதைப்போன்ற எதார்த்த எழுத்து.

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 02:36 PM
என்னவென்று சொல்ல இந்த வார்த்தைகளின் வர்ண ஜாலத்தை ..கவிதைகளுடன் கூடிய கதை தொகுப்பு ஒரு புதிய வார்ப்புகள் .....தொடருங்கள் ....

அன்புரசிகன்
10-06-2011, 05:49 AM
பழைய நினைவுகளுக்குள் ஒரு பழைய நிகழ்வு. நல்லதோ கெட்டதோ. மப்பும் மந்தாரமாக இருந்த உறவுப்பாலத்தில் ஒரு சூரிய ஒளி. அதையாவது துணிந்து அவளுடன் பேசினானே... தொடருங்கள்.

Ravee
10-06-2011, 06:13 AM
கதையை படிக்கும் போது எங்கேயாவது ஒரு ஓட்டை விடுவீங்க என்று பார்க்கிறேன் ... இதுவரை சிக்க வில்லை ... அக்கா நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது ... ஆனால் நான் பார்த்த பழகிய ஆங்கிலோ இந்திய குடும்பங்கள் இவ்வளவு மேற்க்கத்திய கலாச்சாரத்தில் இருந்ததாக தெரியவில்லை ... ஒரு வேலை மதுரை மண் அவர்களையும் மாற்றி இருந்ததோ தெரியாது .... விறுவிறுப்பாக செல்கிறது கதை .... வாழ்த்துக்கள் அக்கா ... :)

கீதம்
10-06-2011, 08:38 AM
இந்தப் பொண்ணுங்கள புரிஞ்சிகிறது ரொம்ப கஷ்டம் பா? அதுவம் அது ஒருதலைக் காதலா இருந்து அந்த பொண்ணுக்கும் அது தெரிஞ்சிருந்தா......... அவ்வளவுதான்.... அவனைவிட பாவம் பண்ணவன் இந்த உலகத்துல யாரும் கிடையாது. :D:D:D:D:D

ரொம்ப அலுத்துக்கிறீங்களே... அனுபவம் பேசுதோ?:icon_ush:

பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.


நட்புங்கற வட்டத்துலருந்து வெளிய வர சுந்தர் நினைக்கிறான்...ஆனா அந்த வட்டத்திலேயே அவனை வைத்துக்கொள்ளவே ஜாக்கி பிகு செய்கிறாள். வெகுளியான அவள் பேச்சும் பழக்கமும்...இன்னும் எதுவரைக் கொண்டுவிடும் தெரியவில்லை.

அழகாய் போகிறது கதை. ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்ப்பதைப்போன்ற எதார்த்த எழுத்து.

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி அண்ணா.

கீதம்
10-06-2011, 08:45 AM
என்னவென்று சொல்ல இந்த வார்த்தைகளின் வர்ண ஜாலத்தை ..கவிதைகளுடன் கூடிய கதை தொகுப்பு ஒரு புதிய வார்ப்புகள் .....தொடருங்கள் ....

தொடர்ந்து வருவதற்கு நன்றி ஜெய்.


பழைய நினைவுகளுக்குள் ஒரு பழைய நிகழ்வு. நல்லதோ கெட்டதோ. மப்பும் மந்தாரமாக இருந்த உறவுப்பாலத்தில் ஒரு சூரிய ஒளி. அதையாவது துணிந்து அவளுடன் பேசினானே... தொடருங்கள்.

பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி அன்பு.


கதையை படிக்கும் போது எங்கேயாவது ஒரு ஓட்டை விடுவீங்க என்று பார்க்கிறேன் ... இதுவரை சிக்க வில்லை ... அக்கா நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது ... ஆனால் நான் பார்த்த பழகிய ஆங்கிலோ இந்திய குடும்பங்கள் இவ்வளவு மேற்க்கத்திய கலாச்சாரத்தில் இருந்ததாக தெரியவில்லை ... ஒரு வேலை மதுரை மண் அவர்களையும் மாற்றி இருந்ததோ தெரியாது .... விறுவிறுப்பாக செல்கிறது கதை .... வாழ்த்துக்கள் அக்கா ... :)

கதையில் ஓட்டை இல்லாமல் இருக்காது ரவி. அதைக் கண்டுபிடிக்காத அளவுக்கு மறைச்சிக் கொண்டுபோகணும். :)

நான் என்னுடைய சின்ன வயதில் நிறைய ஆங்கிலோ இந்திய குடும்பங்களைப் பார்த்திருக்கேன். அப்பவே நவநாகரிகமா இருப்பாங்க. ஆனா அழகா தமிழ் பேசுவாங்க. நம் மக்களோடு தண்மையாப் பழகுவாங்க. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் டைனி (tiny) என்றொரு பெண் இருந்தாள். அவளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான் ஜாக்கியின் கதாபாத்திரம்.

தொடர்ந்து வருவதற்கு நன்றி ரவி. குறைகளைத் தயங்காமல் சொல்லுங்க. சரி செய்ய முயற்சிப்பேன்.

கீதம்
10-06-2011, 08:49 AM
(11)


கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்!
சுதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே…
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே…

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2968'&lang=ta)….

மண்டபம் களைகட்டியிருந்தது. மாலை ஆறு மணிக்குதான் விழா என்றாலும் மூன்று மணிக்கே அழகு நிலையத்திலிருந்து வந்து சித்ராவுக்கு அலங்காரம் செய்துவிட்டு காசு வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

சுந்தருக்கு இன்ன வேலை என்றில்லாமல் ஆளாளுக்கு என்னென்னவோ வேலை சொல்லி விரட்டிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் பந்தி பரிமாறும் வேலையை மேற்கொண்டனர்.

வருபவர்களை வரவேற்பதிலும், மாப்பிள்ளை வீட்டாருக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனிப்பதிலும் அம்மாவும் அப்பாவும் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்க, சித்ராவை தோழிகள் கலாட்டா செய்துகொண்டிருந்தனர்.

"சுந்தர், உன்னை சித்ரா வரச்சொல்றா" போட்டோகிராபரிடம் விவரம் சொல்லிக்கொண்டிருந்த சுந்தரிடம் யாரோ குரல் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

"என்னக்கா?"

பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த அறைக்கு வெளியிலேயே நின்று எட்டிப்பார்த்தவனைப் பார்த்து சித்ராவின் தோழிகள் நகைத்தனர்.

"சித்ரா, நீ கொடுத்து வச்சவடி, அருமையான தம்பி! ஓடி ஓடி எப்படி வேலை பாக்கிறான் பாரு, எனக்கு இருக்குதே ஒண்ணு.... எப்படீ நீ இந்த வீட்டை விட்டுத் தொலைவேன்னு கேக்குது"

"நம்மை வெளியேத்தினாதானே அவங்க லைன் க்ளியர் ஆகும், அதான்"

"ச்சீ... சும்மா இருங்கடி... " தோழிகளை அடக்கிவிட்டு சித்ரா சொன்னாள்.

"சுந்தர், யாரையாவது அனுப்பி ஜாக்கியை அழைச்சிட்டு வரச்சொல்லுடா.... அவங்க வீட்டில இருந்து யாரும் வரலையாம். சங்கோஜப்படுறாங்க போல இருக்கு. எல்லாரும் கல்யாணத்துக்கு வரோம்னு சொன்னாங்களாம். அம்மா இப்பதான் சொல்றாங்க. ஜாக்கி வரணும்னு ரொம்ப ஆசையா இருந்தா... நீ போகவேணாம், யார்கிட்டயாவது ஸ்கூட்டரைக் கொடுத்து அழைச்சிட்டு வரச் சொல்லுடா, ப்ளீஸ். இல்லைனா என்னை ஒரு வழி பண்ணிடுவா..."

"சரிக்கா"

"யாருடி ஜாக்கி?"

"வருவா பாருங்க.... அவ கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே நீங்க எல்லாரும் டயர்டாகிடிவீங்க.. ரொம்ப நல்ல பொண்ணு"

ஜாக்கி தன் குடும்பத்தோடு வருவாள், அழகிய தேவைதையாய் அவதரிப்பாள் என்று வாயில் பார்த்திருந்த சுந்தருக்கு அவளை அழைத்துவர இனிதான் ஆளனுப்பவேண்டும் என்று தெரிய... ஏமாற்றமானது. அவள் இல்லாமல் தன் வீட்டில் விழாவா?

தான் இருக்கையில் யாரையோ ஏன் அனுப்பவேண்டும்? ஸ்கூட்டர் சாவி அவனிடம்தான் இருந்தது. ஆனால் இந்நேரத்தில் தன்னை செல்லவிடுவார்களா? மணி இப்போதே ஐந்தரை. எப்படியும் போய்வர ஒருமணி நேரமாவது ஆகும். யாருக்கும் தெரியாமல் போகவேண்டியதுதான்.

அப்படி இப்படி போக்குக் காட்டி எப்படியோ ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது சீர்காழி மாமாவின் கண்ணில் மாட்டிக்கொண்டான்.

"சுந்தர், எங்க போற?" மாமா கேட்டபோது, "தோ... பக்கத்துலதான், மாமா" சொல்லிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கண்ணை விட்டு மறைந்தான்.

ஜாக்கியைத் தன்னுடன் ஸ்கூட்டரில் அழைத்துவரப்போகிறான். தன் தோள் தொட்டு அமர்ந்து... காற்றில் பறக்கும் கேசம் தன் கன்னம் வருட, தன் இடுப்பை வளைத்துக் கட்டிக்கொண்டு.... என்னென்னவோ கற்பனைகள்! நினைவே பரவசம் தந்தது.

ஜாக்கியின் வீட்டு அழைப்புமணியை பலமுறை அழுத்தியும் கதவு திறக்காததால் குழப்பமானான். ஒருவேளை, மனசு மாறி எல்லாரும் கிளம்பி மண்டபத்துக்குதான் போயிருக்காங்களோ? கொஞ்சநேரம் காத்திருக்கலாமா? உள்ளே வேலையாய் இருந்து கதவு திறக்கத் தாமதமானால்?

காத்திருக்க முடிவு செய்து, மாடிப்படிக்கட்டில் அமர எத்தனிக்கும்போது, மேலே மெல்லிய விசும்பல் கேட்க... திடுக்கிட்டான்.

இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறிச் சென்றவன், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்துநின்றான்.

பூட்டப்பட்டிருந்த அவன் வீட்டுக் கதவின் முன் ஜாக்கி மஞ்சள் ரோஜாவாய் வசீகரிக்கும் புஸுபுஸுவென்ற முழுநீள கவுன் அணிந்து தலையை முழங்கால்களுக்குள் புதைத்து அமர்ந்திருந்தாள்.

"ஜாக்கி.... " மெல்ல அழைத்தவாறே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்த....

ரோஜாவில் பனித்துளிகள் போல் ஜாக்கியின் கண்களில் திரண்ட நீர் முத்துக்கள் அவளது வழுவழுப்பான கன்னங்கள் வழியே வழுக்கிச் சென்றன.

ஏமாற்றம், கோபம், வெறுப்பு எல்லாம் சேர்ந்து கலவையாகக் கொதித்துக்கொண்டிருந்த ஜாக்கியின் மனம் அவன் வரவால் கொந்தளித்து வெளிக்கிளம்பியது. அவன் கைகளைத் தட்டிவிட்டு வெடித்தாள்.

"போடா... நீயும் என்னை விட்டுட்டுப் போயிட்டே..."

"ஜாக்கி..." அவள் அழுகை பொறுக்கமுடியாமல் சுந்தர் தவித்தான்.

"போ... எவ்ரிபடி ச்சீட்டட் மீ..."

குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழும் அவளைக் கண்டு சுந்தரின் கண்ணோரமும் ஈரம். எவ்வளவு ஆசையுடன் இருந்திருக்கிறாள்! நல்லவேளை, இவளை அழைக்க, தானே வந்தது. வேறு யாருமென்றால் இவள் வீட்டில் இல்லையென்று நினைத்து திரும்பி வந்திருப்பார்கள்.

அழுதழுது அவள் முகம் வீங்கிச் சிவந்திருந்தது. இதுவரைப் பார்த்திராத ஜாக்கியின் முகம் இது. அவளும் ஒரு சாராசரிப் பெண் என்பதை நிரூபித்த நிமிடம் இது. அவளை அப்படியே அணைத்துத் தேற்ற மனம் ஏங்கியது. என்ன நினைப்பாளோ?

"ஜாக்கி, நான் உன்னை விட்டுட்டுப் போவேனா? நீ உங்க டாடியோட வருவேன்னு நினைச்சிருந்தேன். என் மனசு முழுக்க உன் நினைப்புதான். என்னைப் புரிஞ்சுக்கோ...." அவள் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தான்.

"எ...என் வீட்டில யாருமே இல்ல…. எல்லாம்…. டாடியோட ப்ஃரெண்ட் வீட்டுக்கு…. டின்னர்க்கு…. போயிருக்கு. மம்மி டூ. ஐ ஃபீல் லோன்லி...…. “ மேற்கொண்டு சொல்லமுடியாமல் அழுதாள்.

"ஸாரி, ஜாக்கி...."

"ஜாக்கி, நீ அழுது நான் பார்த்ததே இல்லை. நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா.... அதான் நான் வந்திட்டேனே... வா... போகலாம்"

ஜாக்கியின் ஓயாத அழுகை, அவளது ஏமாற்றத்தின் காயத்தைக் காட்டி, இவனுக்கு வலி ஏற்படுத்தியது.

"ஜாக்கி, என் செல்லம்ல... என் ஸ்வீட்டியில்ல…. என் கன்னுக்குட்டியில்ல.... அழாதம்மா... ப்ளீஸ்..."

என்னென்னவோ சொல்லி அவளைக் கெஞ்சினான். கொஞ்சினான். அவளோ அவன் கெஞ்சலையும் கொஞ்சலையும் ரசித்து இன்னும் மிஞ்சினாள்.

சுந்தர், அவள் முகம் மறைத்துப் பரவிக்கிடந்த கேசத்தை விலக்க,... எதிர்பாராதத் தருணத்தில் அவன் கரங்களை விலக்கி அவனைக் கட்டிக்கொண்டாள். சுந்தர் நிலைகுலைந்துபோனான். ஜாக்கியின் கரங்கள் தன்னை வளைத்துப் பிடித்திருக்கின்றன. அவள் முகமோ தன் மார்பில் புதைந்திருக்கிறது. எல்லாம் கனவா? நனவா?

'ப' வடிவத் தடுப்புச் சுவர் மறைவும் துணிவும் தர... சுந்தர் அவளைத் தன் கரங்களால் இறுக்கிக்கொண்டான்.

"சுந்தர், ஐ லவ் யூ..." ஜாக்கி சொன்னாள்.

இத்தனை விரைவில் ஜாக்கியின் மனம் தன்பால் ஈர்க்கப்படும் என்பதை அவனால் இன்னும் நம்பமுடியவில்லை.

எத்தனை எளிதாக சொல்லிவிட்டாள். இதைச் சொல்லத்தானே இத்தனை நாள் தவித்திருந்தேன்? இதை அவள் வாயால் கேட்கத்தானே இத்தனை நாள் தவமிருந்தேன்?

சண்டாளி, இப்படியா திடுதிப்பென்று சொல்லி என்னைத் திடுக்கிடவைப்பது? கால நேரம் பார்த்து ஒரு ரம்மியமான சூழலில் இதமாய்க் கை பிடித்து, இதழில் ஒற்றியெடுத்து விழிகளில் பரவசம் மிளிர, காதலைச் சொல்லி, காதலை ஏற்று..... கனவுகளில் மிதக்கவைக்க வேண்டாமா?

அழுத முகத்துடன்… அந்த முகத்தையும் தன் மார்பில் மறைத்து இப்படியொரு இக்கட்டானத் தருணத்திலா சொல்வது?

எப்படியோ சொன்னாளே.... அது போதாதாடா மடையா? என்றது மனம். ஆமாம், ஆமாம்! போதும், போதும்!

இந்த நிமிடத்தில் யாராவது ஒரு முனிவர் வந்து எல்லோரும் கல்லாய் சமையக் கடவது என்று சாபமிடமாட்டாரா என்று ஏங்கினான்.

மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தினான். காதலைச் சொன்ன அந்த நொடியைக் கடத்த விரும்பாமல் அவள் கண்களையேப் பார்த்து நின்றான். அலைபாயும் அவள் விழிகளுக்குள் தன்னைக் கண்டான்.

"ஜாக்கி…. ஐ லவ் யூ டூ"

சொன்ன நிமிடம் ஜாக்கி அவனை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தாள். ஜிவ்வென்று உடல் முழுவதும் புதுரத்தம் பாய்ந்து அவன் இதயத் துடிப்பைத் துரிதமாக்கியது. சுந்தர் தன்னிலை மறந்தான்.

உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை….
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை…
இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே… வளர்கவே…
இது ஒரு காவியம்…

ஒரு வானவில் போலே…
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0703'&lang=ta)…

ஜாக்கியைக் கட்டியணைத்தபடி கனவுலகில் மிதந்திருந்தவனுக்கு சுயநினைவு வந்தபோது.... அவன் கைக்கடிகாரம் நேரம் ஆறரை என்று காட்டியது.

அங்கே எல்லோரும் தன்னைத் தேடிக்கொண்டிருப்பார்களே! அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது? ஜாக்கியை அழைத்துவரப் போயிருந்தேன் என்றால் அதற்கு நீதான் போயிருக்கவேண்டுமா என்றொரு கேள்வி வரும். அப்படியே போயிருந்தாலும் அவளை அழைத்துவர இத்தனை நேரமா என்று அடுத்தக் கேள்வி வரும். கிளம்பிய நேரத்துக்கு சீர்காழி மாமா சாட்சியாக இருப்பார்.

அப்பா கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால்.... அத்தனைப் பேர் முன்னிலையிலும் தான் அவமானப்படும் நிலை உண்டாகும். ஜாக்கியின் அழுது சிவந்த முகம் கூடுதல் பிரச்சனையை உண்டாக்கும். போகாமலேயே இருந்திடலாமா?

அக்காவின் திருமண நிச்சயதார்த்தம். தம்பி இல்லாமல்! எல்லோரும் வாய்க்கு வந்தபடி பேசினால் அப்பா அம்மாவின் மனம் தாங்குமா? என்னதான் செய்வது?

தப்ப வழியில்லை. ஜாக்கியின் காதல் கிடைத்தபின் மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுவதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று தோன்ற, ஜாக்கியை அவசரமாகக் கிளப்பினான்.

"ஜாக்கி, உன் வீட்டு சாவி இருக்கா...?"

"ம்"

"நல்ல பொண்ணாம், ஓடிப்போய் முகத்தைக் கழுவிட்டு லேசா மேக்கப் போட்டுட்டு சீக்கிரம் வருவியாம்...."

ஜாக்கி துள்ளலுடன் ஓடினாள். சுந்தரின் மனமும் உற்சாகத் துள்ளல் துள்ளியது.

மண்டப வாயிலில் சீனு நின்றிருந்தான். ஜாக்கியைப் புதிராய்ப் பார்த்தபடி சுந்தரிடம் கேட்டான்.

"ஏண்டா இவ்வளவு நேரம்?"

"ஏண்டா? எதும் பிரச்சனையா?"

"இதைக் கூட்டிட்டு வரத்தான் போயிருக்கேன்னு அக்கா சொன்னாங்க. ஏண்டா, வேற யார்ட்டயாவது சொல்லியிருக்கலாமில்ல..."

"சரி, அதனால் என்ன இப்போ? வா... ஜாக்கி"

அனைவரது பார்வையும் ஜாக்கியின் வசம் தங்களை இழந்து மீள்வதை ஓரக்கண்ணால் கவனித்தபடி மேடைக்கு விரைந்தான். நலுங்கு நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளையின் அக்கா வரத் தாமதமானதால் விழாவும் தாமதமாகத் தொடங்கப்பட்டதாம். சுந்தர் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

ஜாக்கி மேடைக்குச் செல்லாமல் முன்புறமிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். உயர்த்திக் கட்டிய அவளுடைய கூந்தலில் சுந்தர் தன் கையால் பறித்துச் செருகிய மஞ்சள் ரோஜா சிரித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்)

அன்புரசிகன்
10-06-2011, 12:19 PM
அடடா... இதயங்கள் சம்பிரதாயபூர்வமாக இடமாறியாச்சா.... திருமண வீட்டின் பரபரப்பு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது. தொடருங்கள்.

Nivas.T
10-06-2011, 01:01 PM
எதிர்பாராத தருணம், எதிர்பாராத வார்த்தை யாரையும் திகைப்படையச் செய்யும், சுந்தர் மட்டும் விதிவிலக்கா என்ன? காதல் இழையோடுகிறது எப்படி அவன் காதல் நிறைவேறியது பார்க்கலாம்

தொடருங்கள்

பாரதி
10-06-2011, 01:33 PM
”எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு எல்லாம் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில வந்தே தீருவேன்” என்ற வசனத்தை இப்பகுதி நினைவு படுத்தியது.

தொடர்ந்து படித்து வருகிறேன். கதையில், சில இடங்களில் ஜாக்கியின் வசனங்கள் அவள் ஆங்கிலோ இண்டியன் என்பதை உணர்த்துவதற்காக வலிந்து கூறப்படுகிறதோ என்ற எண்ணம் லேசாக மனதில் தோன்றுகிறது. மற்றபடி கதை சீராக நகருகிறது. பாடல்களின் தேர்வும் அருமை. தொடருங்கள்.

சிவா.ஜி
10-06-2011, 05:16 PM
உள்ளிருந்த காதல்....நிகழ்வுகளாலோ...நிஜத்தினாலோ வெளிப்பட்டுவிட்டது....அதுவும் அழகான கவிதையாய் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அருமை தங்கையே.
தொடருங்கள்.....இனி என்ன...ஆவலுடன்......

கீதம்
11-06-2011, 11:36 AM
அடடா... இதயங்கள் சம்பிரதாயபூர்வமாக இடமாறியாச்சா.... திருமண வீட்டின் பரபரப்பு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது. தொடருங்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி அன்பு.


எதிர்பாராத தருணம், எதிர்பாராத வார்த்தை யாரையும் திகைப்படையச் செய்யும், சுந்தர் மட்டும் விதிவிலக்கா என்ன? காதல் இழையோடுகிறது எப்படி அவன் காதல் நிறைவேறியது பார்க்கலாம்


பாருங்க... பாருங்க... :)

பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.


”எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு எல்லாம் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில வந்தே தீருவேன்” என்ற வசனத்தை இப்பகுதி நினைவு படுத்தியது.

தொடர்ந்து படித்து வருகிறேன். கதையில், சில இடங்களில் ஜாக்கியின் வசனங்கள் அவள் ஆங்கிலோ இண்டியன் என்பதை உணர்த்துவதற்காக வலிந்து கூறப்படுகிறதோ என்ற எண்ணம் லேசாக மனதில் தோன்றுகிறது. மற்றபடி கதை சீராக நகருகிறது. பாடல்களின் தேர்வும் அருமை. தொடருங்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி பாரதி அவர்களே. நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மைதான். பேசும்போது இயல்பாகத் தெரியும் வார்த்தைகளை எழுத்தில் காணும்போது சற்று கடினமாகத்தான் உள்ளது. எனக்கும் வலிந்து புகுத்துவது போன்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் நான் குறிப்பிட்ட பெண் (இந்தக் கதாபாத்திரத்தின் முன்மாதிரி) இப்படித்தான் பேசினாள். :)


உள்ளிருந்த காதல்....நிகழ்வுகளாலோ...நிஜத்தினாலோ வெளிப்பட்டுவிட்டது....அதுவும் அழகான கவிதையாய் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அருமை தங்கையே.
தொடருங்கள்.....இனி என்ன...ஆவலுடன்......

தொடர்ந்து வருவதற்கு நன்றி அண்ணா.

கீதம்
11-06-2011, 11:39 AM
(12)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ….
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ….
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ…..
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ…..
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள்…….. இரு பூங்குயில்கள்…..
இளங்காதல் மான்கள்……
என்ன சத்தம் இந்த நேரம்..... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2895'&lang=ta)


என்ன சத்தம் இந்த நேரம்?

தொப்ப்...தொப்பென்று தேங்காய்கள் விழுந்த அதிர்வில் சுந்தரின் பகல் கனவு கலைந்தது.

ச்சே... எத்தனை இனிமையான கனவு! இதுவரை கடற்கரையைக் கண்ணில் கண்டிராதவன் கனவில் கடற்கரைக் காற்று வீசிக்கொண்டிருந்தது. கடற்கரையோரம் தானும் ஜாக்கியும் மட்டும்! சிறுமி போல் மணல்வீடு கட்டி, சிப்பிகளால் அலங்கரிக்கிறாள். நுரை தவளும் அலைகள் அவள் கால்தொட ஆசையுடன் வருகின்றன. அவளோ போக்குக் காட்டி பின்வாங்குகிறாள்.. அலைகள் அவளைத் துரத்துகின்றன. ஓடிவந்து சுந்தரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அலைகளுக்கு பழிப்பு காட்டுகிறாள். ஈரமணலில் அவனைத் தள்ளிச் சிரிக்கிறாள்..... நெருக்கத்தில் அவள் முகம் பார்த்து முத்தாடும் வேளை....

"த்தொப்ப்...."

"அவ்வளவுதாங்கம்மா... இதெல்லாம் அரக்காயா இருக்கு... அடுத்தநடைக்குப் பறிக்கலாம்..."

"சரி, இறங்கிடு, கோவிந்து... "

தேங்காய் பறிக்கும் கோவிந்தன் மீதும், பறிக்கச் சொல்லி உத்தரவு போட்ட அம்மாவின் மீதும்.... இன்னும் இப்படி குலைகுலையாய்க் காய்த்துக் கிடக்கும் தென்னைமரங்களின் மீதும் கோபம் வந்தது. கோவிந்தன் வந்தான் என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாகத்தான் இருக்கும்

ஜாக்கி குடும்பத்தோடு தேவாலயம் செல்லும் நாள்! மணி பத்தானபின்னும் ஜாக்கி வீட்டில் எந்த சத்தமும் இல்லை.. காலையில் தேவாலயம் சென்றவர்கள் இன்னுமா வரவில்லை? இன்று முழுவதும் ஜாக்கியைத் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது. இன்னும் இருபத்துநான்கு மணிநேரம் காத்திருக்கவேண்டுமே... அதுவரை அவள் நினைவுகளே துணை.

சுந்தர் சில நாட்களாகவே தனிமையை வலிந்து ஏற்றிருந்தான். ஜாக்கியின் நினைவுகளைப் பொட்டலம் கட்டி எடுத்துவந்து தனிமையில் பிரித்துப் பார்த்துப் பரவசம் அடைவது விருப்பமான பொழுதுபோக்காயிற்று. அம்மா சொல்லும் வேலைகள் அடிக்கடி மறந்துபோயின. மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த.... எரிச்சல் வந்தது. சித்ரா அவனிடம் வேலை சொல்லப் பயந்தாள். வழக்கமாயிருக்கும் துறுதுறுப்பும் வாய்ப்பேச்சும் காணாமற்போய்.... யாவும் ஜாக்கியிடம் ரகசியமாக வந்தடைந்திருந்தன.

பாடப்புத்தகம் முதல் எதிரியானது. புத்தகத்தை விரித்தாலே எழுத்துக்கள் எழுந்து கைகோர்த்து நடனமாடின. அவற்றின் நடுவில் தானும் ஜாக்கியும் சுற்றிச் சுழன்று ஆடுவதுபோல் தோன்றியது. எப்போதோ ஒருமுறை சூசையப்பர் கல்யாண மண்டபத்தில் நிகழந்த ஆங்கிலோ இந்தியத் திருமண விருந்தை தானும் நண்பர்களும் மதிலேறி சாளரம் வழியே வேடிக்கைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. ஆணும் பெண்ணும் கை கோர்த்து இசைக்கேற்றபடி எத்தனை நளினமாக, சாதுர்யமாக அடிவைத்து ஆடிக்களித்தனர். யார் யாருடன் என்ற வரைமுறை இல்லாமல் யாரும் எவருடனும் கைகோர்த்து ஆடுவதைக் கண்டு அன்று பிரமித்ததும், கேலி செய்து பேசியதும் நினைவுக்கு வந்தது.

"சுந்தர், கீழ வந்து ரெண்டு தேங்கா உரிச்சிக் கொடுத்திட்டுப் போப்பா..."

அம்மாவின் குரலுக்கு அடிபணிபவன் அன்று இறங்காமலேயே கேட்டான்.

"கோவிந்தனை உரிச்சுத் தரச் சொல்லவேண்டியதுதானே?"

"அவன் இருந்தா உன்னையேண்டா கேட்கப்போறேன். அவன் போனதும்தான் ஞாபகம் வந்துது.. கொஞ்சம் வாப்பா... சமையலுக்கு வேணும்."

"ஏன் தேங்கா இல்லாம சமையல் பண்ண முடியாதா?"

"தேங்கா இல்லாம எப்படிடா குருமா வைக்கமுடியும்? கேள்வி கேக்கிறான் பாரு..."

"வரேன்." அலுப்பும் எரிச்சலுமாய்ப் புறப்பட்ட அவன் வார்த்தையை அம்மா கவனிக்கத் தவறவில்லை.

"என்ன, வர வர ஐயா ரொம்பத்தான் பிகு பண்றீங்க? மாப்பிள்ளைக்குத்தான்டா முறுக்கு இருக்கும். மச்சானுக்கு இருக்கக் கூடாது.”

“படிச்சிட்டிருக்கவனை எதுக்கு தொல்லை பண்றே? இங்க குடு, நான் உரிச்சித் தரேன்" அப்பா முன்வந்தார்.

"ஆமா, அப்புறமா மூச்சுப் பிடிப்பு வந்து சிரமப்படுறதுக்கா? ரெண்டு தேங்கா உரிக்க எவ்வளவு நேரம் ஆகப்போவுது? இன்னும் கல்யாணவேலை இருக்கு. இவனை நம்பினா இனிமே சரிப்படாதுன்னு நினைக்கிறேன். ஒரு வேலை வாங்குறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுது. வீரா கடையில சித்ராவோட பட்டு ஜாக்கெட் தைக்கக் குடுத்திருக்கு. போய் வாங்கிட்டு வாடான்னு ஒரு வாரமா சொல்றேன்…. இந்தா போறேன், அந்தா போறேன்னு இன்னிவரைக்கும் போகல. அதை வாங்கிட்டு வந்து போட்டுப் பாத்து சரியா இல்லைனா ஆல்டர் பண்ணனும். கல்யாணத்தன்னிக்கு கணக்கா போடவேண்டாம்?”

"வீரா கடைக்குதானே? எனக்கு அந்தப் பக்கம் போகவேண்டிய வேலை இருக்கு, நானே போய் வாங்கிட்டு வரேன். ரசீது எதும் இருக்கா அதுக்கு? சும்மா….. படிக்கிறவனைப் போட்டு வேலை வாங்கிட்டு இருக்காதே!"

"ஆமா... நீங்க நினைச்சுகிட்டிருக்கீங்க, அவன் படிக்கிறான்னு. இப்பெல்லாம் ஆளு வீட்டுல தங்கறதே இல்ல. நீங்க ஆபிஸ் போனதும் அவனும் சைக்கிளை எடுத்திட்டு கிளம்பிடறான். இன்ன இடத்துக்குப் போறேன்னு சொல்லிட்டும் போறதில்ல. கேட்டா அவனைப் பாக்கப் போனேன், இவனைப் பாக்கப் போனேன், நோட்ஸ் வாங்கப்போனேன்னு என்னென்னவோ கதை சொல்றான்."

அம்மா பேசப் பேச...சுந்தரின் ஆத்திரம் முழுவதும் அரிவாள் வழியே தேங்காய் மட்டைக்குள் சொத்து சொத்தென்று விழுந்தது.

"பாத்துடா... கையில போட்டுக்கப்போறே..."

"ரொம்ப அக்கறைதான்" முணுமுணுத்தபடியே பல்லைக் கடித்துக்கொண்டு மட்டையை உரித்தான்.

"உரிச்சாச்சு."

இரண்டு தேங்காய்களையும் உருட்டிவிட்டுவிட்டு மாடிக்குப் போக விழைந்தவனிடம், "டீ போடறேன், குடிச்சிட்டுப் போடா" என்றாள் சித்ரா.

"எனக்கு எதுவும் தேவையில்ல" சொல்லிவிட்டு விடுவிடுவென்று படியேறியவனைப் பார்த்து வருந்தினாள்.

"ஏம்மா... அவன் ஏதோ டென்ஷன்ல இருக்கான், நீங்களும் இப்படி சத்தம் போட்டா... என்னம்மா அர்த்தம்? பாருங்க... அவன் முகமே சரியில்ல"

"தம்பிக்கு வக்காலத்தா? நீயே சொல்லு, அவன் முன்ன மாதிரியா இருக்கான்?"

"விடு பானு! நான் அவன்கிட்ட பேசிப் பாக்கறேன். காலேஜ்ல , ஃப்ரெண்ட்ஸ்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்கும். நீ கொஞ்சம் பொறுமையா இரு."

"என்னத்தப் பொறுமையா இருக்கிறது? ஊர்ல இருந்து ராமக்கா மகனை வரச்சொல்லி லெட்டர் போடுங்க. அவன் வந்தா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். அங்கயும் வெட்டியாதானே சுத்திகிட்டு இருப்பான்."

"சரி, போடறேன்"

அம்மாவின் புலம்பலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட இரண்டாவது நாள்....

அப்பா அலுவலகம் போன கையோடு வீடு திரும்பி வந்தார்.

"என்னங்க, என்ன ஆச்சி? உடம்பு சரியில்லையா?" அம்மா பதறினாள்.

"ஒண்ணுமில்ல, லேசா தலைவலி"

"லேசா தலைவலியா? அதுக்கெல்லாம் லீவு போடமாட்டீங்களே... முடியலைன்னா டாக்டர்கிட்ட போய்ட்டு வந்திடுவோம், கிளம்புங்க"

"பானு, அதான் ஒண்ணுமில்லன்னு சொல்றேனே... ஏன் தேவையில்லாம ஊரைக் கூட்டுறே? சித்ரா... ஸ்ட்ராங்கா ஒரு காப்பி போடும்மா"

"சரிப்பா"

"காப்பியும் டீயும் குடிச்சு குடிச்சுதான் பசியடங்கிப் போவுது... ஒழுங்கா சாப்பிடாம உடம்பும் ஓடாத் தேயுது..."

"அடடா... உன் புலம்பலுக்கு நான் ஆபிஸ்லயே இருந்திருக்கலாம் போலயிருக்கே..."

"சரி, சரி, நான் வாயைத் திறக்கலை..."

"சுந்தர் எங்க?"

"ம்? சார் இறங்கி வர நேரம்தான்!" அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுந்தர் வந்தான். அப்பாவைக் கண்டதும் மெலிதாய் மிரண்டான்.

"என்னப்பா.... ஆ.. ஆபிஸ் போகலையா?"

"அப்பாவுக்குத் தலைவலியாம்டா" சித்ரா சொன்னாள்.

"ம், லேசா...." காபி குடித்துக்கொண்டே அப்பா சொன்னார்.

"எங்கே சுந்தர்.... வெளியில கிளம்பியிருக்க போலயிருக்கு?"

"ஆ... ஆமாம்பா... ரத்தீஷ் வீடு வரைக்கும்.... ரெஃப்ரென்ஸுக்கு ஒரு புக் வேணும்... போய் வாங்கிட்டு வந்திடறேன்பா"

"சுந்தர், ஒரு சின்ன வேலை இருக்கு, என்கூட வா... முடிச்சிட்டு அப்புறம் அவனைப் பார்க்கப் போ.."

"இல்லப்பா.... வந்து...."

"வந்து... போயிங்காம வாப்பா....சீக்கிரம் முடிஞ்சிடும்"

இதற்கு மேலும் மறுத்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதால் சுந்தர் அப்பாவுடன் கிளம்பினான்.

"தலையை வலிக்குதுன்னு சொல்லிட்டு... இப்ப எங்க வெயில்ல கிளம்புறீங்க?"

"ஒரு முக்கியமான வேலை, பானு. இப்பதான் ஞாபகம் வந்திச்சு, உடனே வந்திடுவேன்"

வழக்கத்துக்கு மாறாக, ஸ்கூட்டரில் அவனைப் பின்னால் உட்காரச் சொல்லி அப்பா தானே ஓட்டுவதை பார்க்க, சுந்தருக்கு கிலி அப்பியது.

அவன் நினைத்ததுபோலவே அவனுடன் பேசுவதற்கான தனிமை தேடியே இத்தனை தூரம் வந்திருப்பதும் கரும்புக்கொல்லைக்கும் ஏரிக்கரைக்கும் இடைப்பட்ட செம்மண் பாதையோரம் வண்டியை நிறுத்தியதிலிருந்து புரிந்தது.

“சுந்தர்! உன்கூடப் பேசணும்னுதான் இன்னைக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கேன். நான் எதைப் பத்திப் பேசப்போறேன்னு உன்னால் யூகிக்க முடியுதா?"

"இ...இல்லப்பா..."

"இன்னைக்கு நம்ம கீழ் வீட்டு ஆண்ட்ரூ என்னைப் பார்க்க ஆபிஸ் வந்திருந்தார்."

சுந்தருக்கு உடல் சில்லிட்டது. அடுத்து அப்பா என்ன சொல்லப்போகிறார் என்பதை நினைத்து பீதி கிளம்பியது.

(தொடரும்)

சிவா.ஜி
11-06-2011, 12:51 PM
ஆண்ட்ரூ என்ன சொல்லப்போகிறார்.....முக்கியமானக் கட்டமா....இல்லை...அதற்கு முந்தியக் கட்டமா....ஆவல் கூடுகிறது.

காதல்வயப்பட்ட இளைஞனின் உணர்வுகளையும், செயல்களையும் மிக அழகாய் எழுத்தில் வடிக்கிறீர்கள். எதார்த்த நடை....தொடருங்கள் தங்கையே.

Ravee
11-06-2011, 03:14 PM
ஆஹா வெள்ளிக்கிழமை மாலை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டு சனி ஞாயிறு வெளிய வரமுடியாதபடி இப்படி தவிக்க விட்டு போயிட்டீங்களே அக்கா .... இனி நான் திங்கள்தானே வர முடியும் .... ஆண்ட்ரு வந்து ஏதாவது நல்ல சேதி சொல்லி போயிருக்கட்டும் ... எல்லாம் வல்ல பரம பிதா பெருசுங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்...... :)

கீதம்
12-06-2011, 11:31 AM
ஆண்ட்ரூ என்ன சொல்லப்போகிறார்.....முக்கியமானக் கட்டமா....இல்லை...அதற்கு முந்தியக் கட்டமா....ஆவல் கூடுகிறது.

காதல்வயப்பட்ட இளைஞனின் உணர்வுகளையும், செயல்களையும் மிக அழகாய் எழுத்தில் வடிக்கிறீர்கள். எதார்த்த நடை....தொடருங்கள் தங்கையே.

தொடர்ந்து வருவதற்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி அண்ணா.


ஆஹா வெள்ளிக்கிழமை மாலை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டு சனி ஞாயிறு வெளிய வரமுடியாதபடி இப்படி தவிக்க விட்டு போயிட்டீங்களே அக்கா .... இனி நான் திங்கள்தானே வர முடியும் .... ஆண்ட்ரு வந்து ஏதாவது நல்ல சேதி சொல்லி போயிருக்கட்டும் ... எல்லாம் வல்ல பரம பிதா பெருசுங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்...... :)

ரொம்ப ஆசைதான். தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ரவி.

கீதம்
12-06-2011, 11:32 AM
(13)

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஜாக்கியைக் காணாமல் பைத்தியம் பிடித்தவனைப் போல் அதையும் இதையும் நினைத்துக் குழம்பிக்கிடந்தவனுக்கு, ஜாக்கி மாயமான காரணம் இப்போது புலப்படத் தொடங்கியது. துரைக்கு தங்கள் காதல் பற்றித் தெரிந்திருக்கவேண்டும்.

வழக்கமாய் அப்பாக்கள் செய்வது போல் அவளை அடித்தோ... மிரட்டியோ அடைத்துவைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் என்னைப் பார்க்காமல் அவளால் ஒரு நாளும் இருக்கமுடியாதே... அங்கே மகளை அடைத்துவைத்துவிட்டு இங்கே அப்பாவிடம் என்னைக் கோள்மூட்ட வந்துவிட்டாரா? சரியான எமகாதகன்தான்!

"துரை அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்றேன்னு சொன்னார். அதுக்கான காரணத்தையும் சொன்னார்"

சொன்ன நிமிடம் சுந்தரின் முகம் வெளிறியதைக் கவனித்தவர், அதைக் கவனியாததுபோல் தொடர்ந்தார்.

“அவசரத்துக்கு வீடு கொடுத்த எனக்கு தர்மசங்கடத்தை உருவாக்க விரும்பலைன்னு சொன்னார். அப்படியென்ன தர்மசங்கடம் வந்திடப்போகுதுன்னு கேட்டேன். தன் மகளைப் பத்தி, அதான் ஜாக்கியைப் பத்தி ரொம்ப குறைப்பட்டுகிட்டார். ஜாக்கி கொஞ்சநாளாவே ஸ்கூலுக்குப் போகலையாம். ஸ்கூல்ல இருந்து லெட்டர் வந்திருக்காம். அவள் ஸ்கூலுக்குப் போகாம டவுன்ல சினிமா தியேட்டர்லதான் கழிச்சிருக்கான்னார். அவளுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லைன்னாலும் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போய்ட்டுதான் இருந்தாளாம். இப்போ யாரோ ஒரு பையனோட சுத்துறதாக் கேள்விப்பட்டாராம். ஞாயிற்றுக்கிழமை மாதா கோவிலுக்குப் போனபோது அவருடைய நண்பர்கள் அதை உறுதிப்படுத்தினாங்களாம். ஜாக்கியை விசாரிச்சப்போ... அதெல்லாம் உண்மைதான்னு ஒத்துகிட்டாளாம்....”

அப்பா கதை சொல்வது போல் சொல்லிக்கொண்டிருந்தார். ஜாக்கி தன் பெயரைச் சொல்லியிருப்பாளோ? அதனால்தான் துரை வீட்டைக் காலி செய்யும் முடிவெடுத்திருப்பாரோ? அப்படிதான் இருக்கும். ஆனால்.... நியாயப்படி பார்த்தால்... இந்நேரம் அப்பா இவன் மேல் கோபப்பட்டிருக்கவேண்டுமே... இப்படி அமைதியாகப் பேசுவதைப் பார்த்தால் உண்மை இவருக்குத் தெரிந்திருக்காதோ... குழப்பமாய் அப்பாவை ஏறிட்டான்.

அப்பா தொடர்ந்தார். “சரி, இதுக்கும் வீட்டைக் காலி பண்றதுக்கும் என்ன சம்பந்தம்? இதிலென்ன எனக்கு தர்மசங்கடம் வந்திடப்போகுதுன்னு கேட்டேன், அதுக்கு ஜாக்கியோட சுத்துற பையன் உங்க மகன் சுந்தர்தான்னு சொன்னார்."

அப்பா இதைச் சொல்லிவிட்டு சுந்தரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். சுந்தருக்கோ தரையில் ஊன்றியிருந்த தன் கால்களை யாரோ விருட்டென்று வாரித் தன்னைத் தலைகுப்புறத் தள்ளியது போல் இருந்தது. கண்களில் தோன்றிய மிரட்சியை காட்டாமல் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

“என்னால் இதை நம்பமுடியலை. உங்க ரெண்டுபேருக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு இருக்கிறதாதான் நான் இத்தனை நாள் நினைச்சிருந்தேன். ஆனா... ஒரு நண்பனா இருக்க நீ நிபந்தனை விதிக்கிறதா ஜாக்கி சொன்னப்போ... லேசா ஒரு சந்தேகம் எட்டிப்பாத்துச்சி. ஏன்னா... உண்மையான நட்புக்கு எந்த நிபந்தனையும் தேவையில்லை. ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை!. என் பிள்ளை வழிதவறிப் போகமாட்டான்னு நானே என்னைச் சமாதானப்படுத்திகிட்டேன். அந்த நம்பிக்கையை இன்னும் என்னால் அசைக்க முடியலை. அதனால்தான் உன்னை நேரடியாவே கேட்க அழைச்சிட்டு வந்திருக்கேன்."

அப்பா இப்படி படீரென்று கேட்பாரென்று எதிர்பாராதக் காரணத்தால் அதிர்ந்துபோனான். எல்லா உண்மைகளும் தெரிந்தபிறகு எப்படி இவரால் இத்தனைத் தண்மையாக, மென்மையாகப் பேசமுடிகிறது? அன்று அத்தை ஜாக்கியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு விளையாட்டாய்ச் சொல்லியதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆவேசப்பட்டவர், இன்று தானும் ஜாக்கியும் காதலிக்கும் விவரத்தை ஜாக்கியின் அப்பா ஆதாரத்தோடு நிருபித்தும் நம்பாமல் இப்படி தன்னை நடுத்தெருவில் நிறுத்திக் கேள்வி கேட்கிறார். என்ன பதில் சொல்வது?

“சுந்தர், நீ இப்படி எதுவுமே பேசாம மெளனமா இருக்கிறதை நான் என்னன்னு புரிஞ்சுக்கிறது? ஏதாவது வாயைத் திறந்து சொல்லுப்பா...."

அப்பாவின் தவிப்பு அவர் பேச்சில் தெரிந்தது. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் நட்பைத் தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கண்களில் மின்னியது.

"நான் இப்படிப் பேசுறது உனக்கு வருத்தமா இருக்கலாம். என்னடா அப்பா நம்ம மேல நம்பிக்கை இல்லாம இப்படிப் பேசுறாரேன்னு நீ நினைக்கலாம். ஒருவேளை, நீ இப்போ ஏதாவது குழப்பமான மனநிலையில் இருந்தா என் உதவி தேவைப்படலாம். எப்படி அப்பாகிட்ட கேட்கிறதுன்னு நீ தயங்காதே... உனக்கு நல்லவழியைத்தான் இதுவரைக்கும் காட்டியிருக்கேன், இனிமேலும் காட்டுவேன்."

சுந்தருக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. நான் எங்கே குழம்பியிருக்கிறேன். நீங்கள்தான் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லவேண்டும்போல் தோன்றினாலும் தொடர்ந்து மெளனம் காத்தான்.

“சுந்தர். .. நீ வளர்ந்த பையன். நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை. எது நல்லது, எது கெட்டதுன்னு பிரிச்சிப் பார்க்கத் தெரியும். உன் மனசில் எந்த அநாவசியமான எண்ணத்துக்கும் இடம் கொடுத்திடாதே. இது அதுக்கான வயசு இல்ல. படிப்புதான் உனக்கு இப்போ முக்கியமா இருக்கணும். வீணா மனசை அலையவிட்டு உன் எதிர்காலத்தை நீயே பாழாக்கிக்காதே....”

என்ன சொல்லவருகிறார்? மறைமுகமாக ஜாக்கியைக் காதலிக்காதே என்கிறாரா? ஜாக்கியைக் காதலிப்பதால் என் எதிர்காலம் எப்படி வீணாகும்? அவள் இல்லையென்றால்தான் என் வாழ்க்கையே வீணாகும். ஏன் எல்லாப் பெற்றோருமே தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்றை எந்த ரூபத்திலும் நுழையவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்?

சாம, தான, பேத தண்டத்தில் அப்பா இப்போது முதல் படியில் நிற்கிறார்!

வழக்கம்போல் "சரிப்பா" என்று சொல்லிச் சென்றுவிடலாம். அப்போதைக்குப் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் ஜாக்கி? இனி அவளைக் காண இயலுமா? துரை சாமர்த்தியக்காரர்! எப்படியாவது அவளைத் தன் கண்ணிலிருந்து காலத்துக்கும் மறைத்துவிடுவார்.

அப்பாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது. ஆனால் அதை ஏற்கும் மனத்திடம் இல்லாமல் தன் பிள்ளையிடம் நயமாய்ப் பேசி தன் விருப்பத்தை நிறைவேற்றப்பார்க்கிறார்.

ஜாக்கி இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்தும் பார்க்கமுடியவில்லை. அவள் எனக்கே சொந்தம்! அவள் என் தேவதை! கையில் கிடைத்த அந்தத் தேவதையை சாத்தானிடம் கையளிக்க நான் என்ன மடையனா? எத்தனைக் காத்திருப்புக்குப் பின் கனிந்த காதல் மனம் அது! இப்படிக் கைகூடிவந்து களித்திருக்கும் வேளையில் முட்டுக்கட்டைப் போட இவர்கள் யார்?

தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது. இனி சாண் என்ன? முழம் என்ன?

சுந்தர் அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். இப்போது அவன் கண்களில் பயம் இல்லை. மிகவும் உறுதியான குரலில் சொன்னான்.

"அப்பா.... நான் ஜாக்கியை லவ் பண்றேன்! அவளை என்னால் மறக்க முடியாது.”

(தொடரும்)

Ravee
13-06-2011, 05:45 AM
அப்படி போடு அருவாளை .... வர வர பரபரப்பா ஒரு வசனத்தை போட்டு முடிக்கிறதே வேலையாப் போச்சு உங்களுக்கு ... அடுத்த பாகம் வர வரை நாங்க அந்த வீணா போன சுந்தருக்காக :wub: மண்டை காயணுமா ??? .........கிர்ர்ரர்ர் :nature-smiley-006:

நாஞ்சில் த.க.ஜெய்
13-06-2011, 07:36 AM
இந்த பொண்ணுங்களே இப்படிதான் சிக்கலில் மாட்டிவிடுறதே வேலைய வச்சிருப்பாங்க...பாவம்டா சுந்தர் ,போற போக்கபார்த்த அலைகள் ஓய்வதில்லை போல் ஓடித்தான் கல்யாணம் கட்டுவாங்களோ...:confused::confused::confused:

கீதம்
13-06-2011, 08:37 AM
அப்படி போடு அருவாளை .... வர வர பரபரப்பா ஒரு வசனத்தை போட்டு முடிக்கிறதே வேலையாப் போச்சு உங்களுக்கு ... அடுத்த பாகம் வர வரை நாங்க அந்த வீணா போன சுந்தருக்காக :wub: மண்டை காயணுமா ??? .........கிர்ர்ரர்ர் :nature-smiley-006:


இந்த பொண்ணுங்களே இப்படிதான் சிக்கலில் மாட்டிவிடுறதே வேலைய வச்சிருப்பாங்க...பாவம்டா சுந்தர் ,போற போக்கபார்த்த அலைகள் ஓய்வதில்லை போல் ஓடித்தான் கல்யாணம் கட்டுவாங்களோ...:confused::confused::confused:

பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி ரவி, நன்றி ஜெய்.

கீதம்
13-06-2011, 08:39 AM
(14)

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்ம்ம்……
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாத்தியே….
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்…

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0936'&lang=ta)…


ஜாக்கியைப் பார்த்து இன்றோடு நான்கு நாட்களாகிவிட்டன. ஏதோ விபரீதம் என்று உள்மனம் ஓலமிட்டது.

நாளை முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகின்றன. ஜாக்கியின் நினைவில் படித்தது கூட மறந்து போனது. அவள் நிச்சயமாய் வீட்டில் இல்லை என்பது புரிந்தது. அவள் மட்டுமல்ல, அந்த வீட்டில் யாருமே இல்லை. துரை மட்டும் அவ்வப்போது வந்துபோகிறார். குடும்பத்துடன் எல்லோரையும் எங்கு ஒளித்துவைத்திருக்கிறார்? காதல் என்ன அத்தனைப் பெரிய குற்றமா? இப்படி குடும்பத்தையே தலைமறைவாய் வைப்பதற்கு? அவரைப் பொறுத்தவரை காதலுக்கு அவர் எதிரி இல்லை என்பது சுந்தருக்கு நன்றாகவே தெரியும். அவருடைய சமூகத்தில் காதலுக்குப் பின்னரே திருமணம் என்பது எழுதப்படாத விதி.

சூசனும் லீயும் எல்லோருடைய முன்னிலையிலும் அணைத்துக் கொள்கின்றனர், முத்தமிட்டுக்கொள்கின்றனர். அப்படி இருக்கையில் ஜாக்கி காதலிப்பதில் அவருக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கப்போவதில்லை. வேண்டுமெனில், இத்தனைச் சிறிய வயதில் ஜாக்கி காதலிப்பதை எதிர்க்கலாம். ஆனால் சுந்தருடன் பழகுவதற்கு முன்பே அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் அவள் பல இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறாள். ஜாக்கியின் படிப்பு கெட்டுவிட்டது என்று காரணம் சொல்வதற்குமில்லை. அவளுக்கு படிப்பில் அத்தனை ஆர்வமில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

எல்லாக் கோணங்களிலும் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தபோது தெளிவு பிறந்திருந்தது. ஜாக்கி, தன் காதலனாய் சுந்தரைத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் அவர் மன உளைச்சலுக்குக் காரணம் என்பதும், அவள் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவனை விரும்புவதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதும் புலனாக... சுந்தர் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றான்.

"சுந்தர், சாப்பிட வா"

சித்ரா அழைத்தாள். அவள் குரலில் சுரத்தில்லை, முகத்தில் ஒளியில்லை. ஒரு கல்யாணவீட்டைப் போலில்லாமல் இழவு விழுந்த வீடு போல் வீட்டுக்குள் நிலவிய அமைதி அவனை எரிச்சலூட்டியது.

சாப்பாட்டு மேசையில் அவனுக்கு மட்டுமே உணவு பரிமாறப்பட்டிருந்தது. வழக்கமாய் அம்மாவைத் தவிர அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது வழக்கம். அம்மா மட்டும் எப்போதும் சேர்ந்து அமர்ந்து உண்ண உடன்படமாட்டாள். மேசையைச் சுற்றி சுற்றி வந்து ஒவ்வொருவர் பக்கத்திலும் நின்று, என்னென்ன தேவை என்பதைக் கவனித்துப் பரிமாறி, போதும் என்றால் இன்னும் கொஞ்சம் சாப்பிடச் சொல்லி போலியாய்க் குரலில் கடுமை காட்டி, மூவரையும் உண்பித்தப் பிறகே தான் சாப்பிட அமர்வாள். அப்பாவும், சித்ராவும் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லையே என்று யோசித்தபோது, மேசையில் அடுக்கப்பட்டிருந்த தட்டுகள் அவர்கள் இன்னும் சாப்பிடவில்லை என்பதைக் காட்டின. ஏன் இப்படி? ஏன் தன்னை இப்படி ஒரு தீண்டத்தகாதவனைப் போல் ஒதுக்கவேண்டும்?

அப்பா நேற்று பேசியதையெல்லாம் வீட்டில் வந்து சொல்லியிருக்கிறார் என்பது அம்மாவின், சித்ராவின் நடவடிக்கையில் அப்பட்டமாய்த் தெரிந்தது. ஆனால் அம்மா ஊமையாய் இருப்பதன் பொருள் மட்டும் விளங்கவில்லை. ஒரு சின்ன விஷயத்துக்கே ஆர்ப்பாட்டம் பண்ணும் அம்மா.... இந்த விஷயத்தில் மெளனவிரதம் பூண்டிருப்பதை சுந்தரால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம் என்று எதிர்பாத்தே இருந்தான். எதுவாய் இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவில் திடமாக இருந்தான். முற்றிலுமாய் பயம் தெளிந்திருந்தான்.

நேற்று அப்பாவிடம் தான் ஜாக்கியைக் காதலிக்கிறேன் என்று சொன்னபோது அப்பா அதிர்ச்சி காட்டவில்லை. மாறாக விரக்தியாய்ப் புன்னகைத்தார்.

"நீ இப்படி சொல்வேன்னு தெரியும், ஆனால், இதெல்லாம் காதல் இல்லைன்னு உனக்குப் புரிய வைக்கவேண்டியது என் கடமை! சுந்தர், இன்னும் ரெண்டு நாளில் பரிட்சை இருக்கு, அதில் முதல்ல கவனம் செலுத்து. இந்தக் காதல், கத்தரிக்காயையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்."

"அப்பா.... நீங்கதான் இன்னும் புரிஞ்சுக்கல... நான் நிஜமாவே ஜாக்கியை லவ் பண்றேன். அவளும் என்னை உயிராக் காதலிக்கிறா... அவளையும் என்னையும் பிரிச்சுவைக்க நினைச்சீங்கனா......."

"என்ன, ஊரை விட்டு ஓடப்போறீங்களா?"

"இல்ல, உயிரை விட்டுடுவோம்" சொல்லவேண்டும் என்று எண்ணிச் சொல்லவில்லை. ஏதோ ஆத்திரத்தில் சொன்னான். சொன்னபின் அதைச் சொல்லியிருக்கக்கூடாது என்று நினைத்தான். ஆனால் கொட்டியதை அள்ளமுடியுமா? குத்தூசிகளாய் சொன்ன வார்த்தைகள் யாவும் அப்பாவின் செவி வழியே சென்று இதயத்தைத் துளைத்துவிட்டிருந்தன. அப்போதும் அப்பா கோபப்படாதது அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

"அஹ்ஹ்…… உன்னைப் பெத்ததுக்காக இந்த நிமிஷம் ரொம்பப் பெருமைப்படறேன்பா.... ரொம்பப் பெருமைப்படறேன். உங்கம்மா பக்கத்தில் இல்லாமல் போய்ட்டாளே.... இந்த வார்த்தையைக் காது குளிரக் கேட்க! கேட்டா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பா....... தம்பி தம்பின்னு உயிரை விட்டுகிட்டிருக்காளே உன் அக்கா... அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்! நினைவிருக்கா? ஒரு வீட்டில் ஒரு ஆண்பிள்ளை இருந்து செய்யவேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கு. அற்ப சுகத்துக்காக உயிரை விட்டுடுவேன்னு பெத்த தகப்பன்கிட்ட சொல்லி மிரட்டுறே... ரொம்ப நல்லா இருக்குப்பா... இப்படியெல்லாம் பேச உனக்கு யாருப்பா கத்துக்கொடுத்தா..? என் மகனா நீ?”

சுந்தர் தலைகவிழ்ந்து நின்றான். அப்பா சொன்ன எதைப் பற்றியும் நினைத்துப் பார்க்கவும் அவனுக்கு விருப்பமில்லை. அநாவசியமாய்த் தன் வாழ்வில் குறுக்கிடும் இவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும் என்னும் எண்ணமே மேலோங்கியிருந்தது.

"நான் உண்மையாவே அவளை லவ் பண்றேன்"

"சுந்தர், காதல் வேண்டாம்னு சொல்லலை. இந்த வயசில் வேண்டாம்னுதான் சொல்றேன். உன் எதிர்காலத்தைப் பலி கொடுத்துக் கிடைக்கிற காதல் உன் வாழ்க்கையை சந்தோஷமா வச்சிக்குமா? சொல்லு! படிப்பை முடி. ஒரு வேலையில சேரு. அப்புறம் யாரை வேணும்னாலும் காதலி, கல்யாணம் பண்ணிக்கோ....”

“அப்பா... நீங்க நினைக்கிறமாதிரி நினைச்சவுடனே எல்லாம் காதல் வராது."

"சுந்தர், நீ எனக்குப் பாடம் சொல்லவேண்டாம். நானும் உன் வயசைக் கடந்துவந்தன்வன்தான். இந்த மாதிரிக் காதல் எல்லாம் எதில் முடியும்னு எனக்குத் தெரியும்."

"அப்பா... அசிங்கமாப் பேசாதீங்க"

"எது அசிங்கம்? படிக்கிற வயசில் ஒரு பள்ளிக்கூடத்துப் பொண்ணைக் காதலிக்கிறேன்னு அப்பா முன்னாடி நீ சொல்லலாம், அதையே நான் வேறுவிதமா சொன்னா அசிங்கமா?" அப்பாவின் குரலில் சட்டென்று உக்கிரம் எட்டிப்பார்த்தது. பின் தவறுணர்ந்தவர் போல் அவரே இறங்கிவந்தார்.

"சுந்தர், ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ற வயசுமில்ல, கல்யாண வயசு வரைக்கும் இந்தக் காதல் நிலைக்குமாங்கிறது சந்தேகம். அப்படி நிலைச்சு கல்யாணமும் நடந்தா.... கடைசிவரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு வாழமுடியுமாங்கிறதும் சந்தேகம். ரெண்டுபேரும் ரெண்டு வேறுபட்ட கலாச்சாரத்து மேல் பிடிப்பா இருக்கிறவங்க. இதெல்லாம் சரிப்படாது..."

"சரிப்படும்...."

அப்பாவுடன் சரிக்கு சமமாக வாதாடுவது இதுதான் முதல்முறை! கொடுக்கப்பட்ட வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவே அவன் மனம் விழைந்தது.

"நீங்களும் அம்மாவும் இல்லையா? நீங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணும்போது அம்மாவுக்கு எழுதப் படிக்கக் கூடத் தெரியாது. நீங்க அப்பவே பி.ஏ. படிச்சிருந்தீங்க. ரெண்டுபேரும் வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சிக்கலையா? என்னையும் அக்காவையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கலையா?"

"சுந்தர், எங்க காலம் வேற, உங்க காலம் வேற... அதுவுமில்லாம... “

"எல்லாக் காலத்திலயும் காதல் ஒண்ணுதானேப்பா"

"அடச்சீ.... நீயும் ஒரு பிள்ளையா? எவ்வளவு பொறுமையா நான் எடுத்துச் சொல்லிகிட்டிருக்கேன். எதையுமே புரிஞ்சுக்காம சொன்னதையே சொல்லிகிட்டு நிக்கிறே? இனி உன்கூடப் பேசினா நான் தான் மடையன்! போடா.... போ... போய் கெட்டுத் திருந்தி வா.... உன்னைப் பெத்தப் பாவத்தை நாங்க அனுபவிக்கிறோம். கூடப்பிறந்த பாவத்தை எம்பொண்ணு அனுபவிக்கட்டும். இனி உன் வாயாலே அப்பான்னு என்னைக் கூப்புடாதே... "

நடுரோடு என்றும் பார்க்காமல் கத்திவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார். அந்தப் பக்கம் சைக்கிளில் போன இருவர் இவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் போயினர்.

சுந்தர் வெட்கித்து நின்றான். திடீரென்று அப்பா இப்படி உணர்ச்சிவசப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஆத்திரத்தை உள்ளடக்கியபடி அவனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

எங்கே போவது? வீட்டுக்குப் போனால் அங்கே அம்மா வடிவில் இன்னொரு பிரச்சனை காத்திருக்கும். ஜாக்கியைக் காணாமல் மனம் சோர்ந்திருக்கும் நிலையில் எவருடனும் பேசவும் பிடிக்கவில்லை. இந்நிலையில் எப்படி பிரச்சனையை சமாளிப்பது?

நாளைமறுநாள் தேர்வு. ஜாக்கியே இல்லை என்றானபின் படித்துப் பாஸாகி என்ன பயன்? வீட்டுக்குப் போகாமல் இப்படியே எங்காவது ஓடிவிட்டால்தான் என்ன?

வேண்டாம், அப்படிப் போய்விட்டால் ஜாக்கியைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியாமலேயே போய்விடும், தான் இல்லாமல் ஜாக்கி எத்தனைக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பாள்? முதலில் ஜாக்கி எங்கிருக்கிறாள் என்பதைக் கண்டறிய வேண்டும்.அதற்காகவாவது வீட்டுக்குப் போயே ஆகவேண்டும். ஜாக்கியின் நினைவுகள் வழிநடத்த.... சுந்தரின் கால்கள் தானாக வீடு நோக்கி நடைபோட்டன, காதலின் அருமை புரிந்த அப்பாவும் தன் காதலைப் புரிந்துகொள்ளாத துர்பாக்கியத்தை எண்ணி நொந்தபடி!

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா!

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1662'&lang=ta)…

(தொடரும்)

Ravee
13-06-2011, 09:21 AM
ஆகா ... சுந்தரின் அப்பா கதாபாத்திரத்தை உச்சியில் தூக்கி வைத்துவிட்டீர்கள் .... துரையையும் சும்மா சொல்லக்கூடாது பெண்ணை பெத்தவர் தன் பக்கம் இருந்த குறையை கூட மறைத்து அடக்கி வாசித்து இருக்கிறார். இந்த வயசு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பெத்தவங்க படுற பாடு இருக்கே .... முதலமைச்சர் அம்மாவிடம் சொல்லி எல்லாரையும் வந்து கீதம் அக்காவின் பூக்கள் பூக்கும் தருணம் கதையை படிக்க சொல்லி ஒரு GO போடச்சொல்லணும்...... :)

கீதம்
13-06-2011, 09:27 AM
ஆகா ... சுந்தரின் அப்பா கதாபாத்திரத்தை உச்சியில் தூக்கி வைத்துவிட்டீர்கள் .... துரையையும் சும்மா சொல்லக்கூடாது பெண்ணை பெத்தவர் தன் பக்கம் இருந்த குறையை கூட மறைத்து அடக்கி வாசித்து இருக்கிறார். இந்த வயசு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பெத்தவங்க படுற பாடு இருக்கே .... முதலமைச்சர் அம்மாவிடம் சொல்லி எல்லாரையும் வந்து கீதம் அக்காவின் பூக்கள் பூக்கும் தருணம் கதையை படிக்க சொல்லி ஒரு GO போடச்சொல்லணும்...... :)

'O' போடுறது தெரியும். அதென்ன 'GO' போடறது?:confused:

Ravee
13-06-2011, 09:48 AM
'O' போடுறது தெரியும். அதென்ன 'GO' போடறது?:confused:


G.O - கவர்மென்ட் ஆர்டர் ..... :)

கீதம்
13-06-2011, 10:02 AM
ஓ! விளக்கத்துக்கு நன்றி ரவி.

மன்ற மக்களே படிக்கவரமாட்டேங்கறாங்க. படிச்சாலும் கருத்து சொல்ல மாட்டேங்கறாங்க. இதில் அரசாணை பிறப்பித்து எல்லாரையும் படிக்கவைக்கணும் என்றால்.... பாவம்... விட்டுங்க ரவி... மக்கள் பிழைச்சிப்போவட்டும்!:)

Ravee
13-06-2011, 10:50 AM
ஓ! விளக்கத்துக்கு நன்றி ரவி.

மன்ற மக்களே படிக்கவரமாட்டேங்கறாங்க. படிச்சாலும் கருத்து சொல்ல மாட்டேங்கறாங்க. இதில் அரசாணை பிறப்பித்து எல்லாரையும் படிக்கவைக்கணும் என்றால்.... பாவம்... விட்டுங்க ரவி... மக்கள் பிழைச்சிப்போவட்டும்!:)

aren , ayyappansa , அக்னி , அன்புரசிகன் , அமரன் , ஆதவா , கலையரசி , கீதம் , சிவா.ஜி , த.ஜார்ஜ் , தூயவன் , நாஞ்சில் த.க.ஜெய் , பாரதி , பூமகள் , மதி , வெங்கி , francisarockiasamy , Hega , innamburan , krishnansubbarao , lenram80 , M.Jagadeesan , Mano.G. , minmini11 , Namasiva , Naren Nandagopal , Nivas.T , poonkundran , profdanand , Ravee , sarcharan , sharavanan , shiva.srinivas78 , somumico , tamilkumaran


இது அடுக்குமா ..... :eek: எங்கேயாவது இத்தனை பேர் வந்தாங்களா பாருங்கள் ..... :D எல்லோரும் இப்ப அவங்க அவங்க பிளாஷ் பேக் போட்டு பார்த்து சந்தோசமா இருக்காங்க .... முடிவில் கருத்து சொல்வாங்க அக்கா... :D

கீதம்
13-06-2011, 10:55 AM
aren , ayyappansa , அக்னி , அன்புரசிகன் , அமரன் , ஆதவா , கலையரசி , கீதம் , சிவா.ஜி , த.ஜார்ஜ் , தூயவன் , நாஞ்சில் த.க.ஜெய் , பாரதி , பூமகள் , மதி , வெங்கி , francisarockiasamy , Hega , innamburan , krishnansubbarao , lenram80 , M.Jagadeesan , Mano.G. , minmini11 , Namasiva , Naren Nandagopal , Nivas.T , poonkundran , profdanand , Ravee , sarcharan , sharavanan , shiva.srinivas78 , somumico , tamilkumaran


இது அடுக்குமா ..... :eek: எங்கேயாவது இத்தனை பேர் வந்தாங்களா பாருங்கள் ..... :D எல்லோரும் இப்ப அவங்க அவங்க பிளாஷ் பேக் போட்டு பார்த்து சந்தோசமா இருக்காங்க .... முடிவில் கருத்து சொல்வாங்க அக்கா... :D

ரவீ... இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கீங்களே... வந்தவங்க எல்லாரும் என்னைக்கு கடைசியா வந்தாங்கன்னு பாருங்க. ஏதோ ஆர்வக் கோளாறில் எட்டிப்பாத்தவங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கப்படாது.

Ravee
13-06-2011, 11:07 AM
ரவீ... இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கீங்களே...

வந்தவங்க எல்லாரும் என்னைக்கு கடைசியா வந்தாங்கன்னு பாருங்க. ஏதோ ஆர்வக் கோளாறில் எட்டிப்பாத்தவங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கப்படாது.


ம்ம்ம் ஏதோ உங்களுக்காவது இந்த உண்மை தெரியுதே ..... :eek:

நாஞ்சில் த.க.ஜெய்
13-06-2011, 11:28 AM
சிறிது நாட்களில் மகளுக்கு திருமணம் மகனோ பெண் மீதான காதல் எனும் ஈர்ப்பில் ..நிலை மிகவும் கவனமாக கையாண்டும் துரை புரியாது சூரியன் மேற்கில் தான் உதிக்கும் என்றால் என்ன செய்வது ...தொடருங்கள் ..


ரவீ... இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கீங்களே... வந்தவங்க எல்லாரும் என்னைக்கு கடைசியா வந்தாங்கன்னு பாருங்க. ஏதோ ஆர்வக் கோளாறில் எட்டிப்பாத்தவங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கப்படாது.
நீங்களே சொல்லுறீங்க ஆர்வ கோளாறுன்னு இது இருந்தால் தானே பதிவுல அபப்டி என்ன இருக்குன்னு எட்டிபார்த்து பதிவிடமுடியும்...நான் இது வரை மன்றத்தில் என் பங்களிப்பை அளித்தவரை இது போன்று பின்னோட்டத்தினை எவரும் மற்றவருக்கு இட்டதாக தெரியவில்லை அப்படியிருக்க இப்படியோரு சந்தேகமா கீதம் அவர்களே ...:confused::confused::confused:

அன்புரசிகன்
14-06-2011, 12:38 AM
3 பாகங்களை படித்து முடித்தேன். (நேற்றிரவு) காதல் இவ்வளவு பிரச்சனைகளை கொண்டுவருமா? கதையின் உயிரோட்டம் மிக அழகாக உள்ளது. (இறுதியான பாடலை தவிர. இவ்வளவு பிரச்சனைகளின் பின்னர் வீதியில் நடந்துசெல்லும் போது முத்துமணி ரத்தினங்களும் பாட வருமா???)
தொடருங்கள்.

ஜானகி
14-06-2011, 05:12 AM
ஒரு நாடகம் பார்ப்பதுபோல, மிகவும் உயிரோட்டத்துடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது உங்களது தொடர்....பின்னூட்டமிட்டு, அதன் ஓட்டத்தைத் த்டைப்படுத்த விரும்பவில்லை....யாருக்காக பரிதாபப் படுவது என்றே தெரியவில்லை...அத்தனை அழகாக பாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன...தொடரட்டும்...

Nivas.T
14-06-2011, 07:37 AM
தலைமுறை இடைவெளியில் இருக்கும் போராட்டத்தை மிக்க அழகாக இணைச்சிருக்கீங்க
கதை மிக சுவாரசியம்
தொடருங்கள்

பி.கு - சிலருக்கு இது போன்ற கதைகளை ஒரே தொகுப்பாக படிப்பது திருப்தி அளிக்கலாம்

கீதம்
14-06-2011, 08:14 AM
சிறிது நாட்களில் மகளுக்கு திருமணம் மகனோ பெண் மீதான காதல் எனும் ஈர்ப்பில் ..நிலை மிகவும் கவனமாக கையாண்டும் துரை புரியாது சூரியன் மேற்கில் தான் உதிக்கும் என்றால் என்ன செய்வது ...தொடருங்கள் ..


நீங்களே சொல்லுறீங்க ஆர்வ கோளாறுன்னு இது இருந்தால் தானே பதிவுல அபப்டி என்ன இருக்குன்னு எட்டிபார்த்து பதிவிடமுடியும்...நான் இது வரை மன்றத்தில் என் பங்களிப்பை அளித்தவரை இது போன்று பின்னோட்டத்தினை எவரும் மற்றவருக்கு இட்டதாக தெரியவில்லை அப்படியிருக்க இப்படியோரு சந்தேகமா கீதம் அவர்களே ...:confused::confused::confused:

ஜெய், நீங்க என்னுடைய முந்தைய தொடர்கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்திருந்தா... நான் சொல்வது புரியும். என்னுடையது என்றில்லை, மற்றவர்களுடைய படைப்புகளுக்கும் இப்போதெல்லாம் பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்த பல பேர் முன்வருவதில்லை. உங்களைப் போல் சிலர் கொடுக்கும் ஊக்கத்தால் தான் இன்னும் இந்த வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.:)


3 பாகங்களை படித்து முடித்தேன். (நேற்றிரவு) காதல் இவ்வளவு பிரச்சனைகளை கொண்டுவருமா? கதையின் உயிரோட்டம் மிக அழகாக உள்ளது. (இறுதியான பாடலை தவிர. இவ்வளவு பிரச்சனைகளின் பின்னர் வீதியில் நடந்துசெல்லும் போது முத்துமணி ரத்தினங்களும் பாட வருமா???)
தொடருங்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி அன்பு.

அந்தப் பாடலை சுந்தர் பாடுவதாக நான் குறிப்பிடவில்லையே... சுந்தரின் மனநிலை அப்போது அப்படி இருக்கிறது... காதலின் அருமை தெரியாத மனிதர்களைச் சாடுவது போல்... அதைக் குறிப்பிடும் விதமாகத்தான் அந்தப் பாட்டைப் புகுத்தினேன். :D


ஒரு நாடகம் பார்ப்பதுபோல, மிகவும் உயிரோட்டத்துடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது உங்களது தொடர்....பின்னூட்டமிட்டு, அதன் ஓட்டத்தைத் தடைப்படுத்த விரும்பவில்லை....யாருக்காக பரிதாபப் படுவது என்றே தெரியவில்லை...அத்தனை அழகாக பாத்திரங்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன...தொடரட்டும்...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா. அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தலையில் ஒரு குட்டோ... முதுகில் ஒரு ஷொட்டோ கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.:)


தலைமுறை இடைவெளியில் இருக்கும் போராட்டத்தை மிக்க அழகாக இணைச்சிருக்கீங்க
கதை மிக சுவாரசியம்
தொடருங்கள்

பி.கு - சிலருக்கு இது போன்ற கதைகளை ஒரே தொகுப்பாக படிப்பது திருப்தி அளிக்கலாம்

நன்றி நிவாஸ். நீங்கள் சொல்வதும் சரிதான். ரவி சொன்னாரேன்னு சும்மா அப்படிச் சொன்னேன். மற்றபடி நீங்களெல்லோரும் தொடர்வதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சியே.:icon_b:

கீதம்
14-06-2011, 08:20 AM
(15)

காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே….
இனிமையின் உருவம் மலர
வா பொன்மயிலே….

நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்கிது
என்றும் நீ இன்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி….
வா பொன்மயிலே (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR2822'&lang=ta)…..

எத்தனை ஏங்கி அழைத்தும் ஜாக்கி வரவில்லை. இனி பொறுக்கமுடியாது. அவளை நினைத்து நினைத்து தனிமையில் இப்படி வாடுவதில் எந்தப் பயனும் இல்லை என்பது புரிந்தது. துரையைப் பார்த்துப் பேசலாம் என்றால் துரை எப்போது வருகிறார் , எப்போது போகிறார் என்பதே தெரியவில்லை. எப்படியும் இன்று துரையைப் பார்த்து 'உன் பெண்ணை மறைத்துவைப்பதால் எங்கள் காதல் மாறிவிடாது' என்று எச்சரிக்கும் எண்ணத்தில் இருந்தான். அப்பாவையே எதிர்த்துப் பேசியாயிற்று. துரை எம்மாத்திரம்?

வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. ஜாக்கி வந்துவிட்டாளா? ஆர்வத்துடன் மாடியறைப் பால்கனியிலிருந்து எட்டிப்பார்க்க, அம்மா, அப்பா, சித்ரா மூவரும் ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரிந்தது. இன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாய் அம்மாவும் சித்ராவும்தான் கோவிலுக்குப் போவார்கள். அப்பாவும் போகிறார் அதுவும் ஆட்டோவில் என்றால்.... வேறெங்கோ செல்லுகிறார்கள் போலும். இப்படி தன்னை விலக்கி, ஒதுக்கி, உதாசீனப்படுத்துவதன் மூலம் என்ன சாதிக்கிறார்கள்?

எப்படியோ போகட்டும், இவர்களுக்கு மட்டும்தான் வீம்பு இருக்கிறதா? இவர்கள் பெற்ற பிள்ளைதானே நான்? எனக்கும் வீம்பு இருக்கத்தானே செய்யும்?

கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தவனைக் குளிர்விக்கும் விதமாய் அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் வாசலில் ஒரு டாக்ஸி வந்து நிற்க, அதிலிருந்து ஜாக்கியும் அவள் குடும்பத்தினரும் இறங்கினர். துரையைக் காணோம். ஜாக்கி மிகவும் மெலிந்து களைத்துக் காணப்பட்டாள். அவள் மட்டுமல்லாது அவள் அக்கா, அம்மா, பாட்டி அனைவருமே முகத்தில் ஏதோ ஒரு சோகத்தைத் தேக்கிவைத்திருப்பது போல் தோன்றியது.

ச்சே! தானும் ஜாக்கியும் காதலிப்பதை இவர்கள் இப்படியா துக்கம் கொண்டாடி கேவலப்படுத்தவேண்டும்? ஜாக்கியைப் பார்த்த மாத்திரத்தில் ஓடிச்சென்று கட்டிக்கொள்ளத் தோன்றியது. அவசரப்படவேண்டாம், ஜாக்கியே வருவாள். பொறுமையாய் இரு என்று படபடத்த மனத்திடம் வேண்டுகோள் விடுத்தான். இனி அவளைப் பார்க்கவே முடியாதோ என்று மருகி நின்றவனுக்கு ஜாக்கியைக் கண்ணாரப் பார்த்துவிட்டோம் என்ற நினைவே மகிழ்வைத்தந்தது. நல்லவேளை, தன் வீட்டில் யாரும் இல்லை.

ஜாக்கியைப் பார்த்து இன்றோடு ஆறுநாட்களாகிவிட்டதென மனம் கணக்குப் போட்டது. ஆறு நாட்களும் ஆறு மாதமாய்த் தெரிந்ததை எண்ணி வியந்தான்.

என்ன இன்னும் அவளைக் காணோம்? ஒருவேளை இவன் வீடு பூட்டியிருக்கிறதென்று திரும்பிவிட்டாளா? இருக்காதே... தான் எப்போதும் மாடியறையில்தான் இருப்பேன் என்பது அவளுக்குத் தெரியுமே!

கதவைத் திறந்துவைத்தான். மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்தது. இருளைக் கிழித்துக்கொண்டு வரும் மெழுகின் ஒளி போல, ஜாக்கி அவன்முன் தோன்றினாள்.

அறைவாயிலில் தயங்கி நின்றவளைச் சட்டென உள்ளே இழுத்துக் கதவை மூடினான். மிரண்டவளைத் தன்னருகில் இழுத்து அணைத்தான். ஜாக்கி அவனை விலக்கியபடி ஏதோ சொல்லவர... அழுத்தமாய் அவள் இதழ்களைத் தன்னிதழ்களால் பூட்டினான். ஜாக்கி திமிறியபடி அவனைப் பிடித்துத் தள்ளியதில் சற்றே சுய உணர்வு பெற்றவன், " ஜாக்கி, நீ இல்லாமல் நான் எவ்வளவு தவிச்சுப் போய்ட்டேன், தெரியுமா?" என்றபடியே அவளை மீண்டும் நெருங்க... ஜாக்கி விலகி நின்றாள்.

ஜாக்கியின் போக்கு இன்று விசித்திரமாயிருப்பது போல் தோன்றியது. இதற்குமுன் திரையரங்கத்தின் அரையிருளில் எத்தனையோ முறை முத்தமிட்டிருக்கிறான். ஜாக்கி ஒருபோதும் எதிர்ப்புக் காட்டியதே இல்லை. இன்று என்ன ஆயிற்று? ஒருவேளை, யாரும் வந்துவிடுவார்கள் என்று பயப்படுகிறாளா? இத்தனை நாள் நான் தவித்த மாதிரிதானே இவளும் தவித்திருப்பாள். அந்தத் தவிப்பு துளியும் இவளிடம் தென்படவில்லையே.... மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டாளா?

"ஜாக்கி, இத்தனை நாள் எங்க போயிருந்தே? என் நினைப்பு உனக்கு வரலையா? என்னை நினைச்சு நீ வருத்தப்படவே இல்லையா?"

"சுந்தர், நான் இத்தன நாள் எங்கப் போயிருந்தேன்னு உனக்கு ப்ராமிஸா தெரியாதா?" ஜாக்கி அவநம்பிக்கை மிளிர கேட்டாள்.

"எனக்கெப்படி தெரியும்? நீ என்ன என்கிட்ட சொல்லிட்டா போனே?"

"ஓ மை காட்! என் டாடி உன் டாடிகிட்டப் பேசும்போது சொல்லலையா?"

"என்ன புதுக்கதை சொல்றே?"

"ஹே... சுந்தர், லாஸ்ட் ஸன்டே சர்ச் விட்டு வரும்போது நானிக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சி. வெரி சீரியஸ். அதைப் பாத்து மம்மிக்கு மயக்கம் வந்து மம்மிக்கும் சீரியஸாயிடுச்சு. ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நானும் சூசனும் பக்கத்துலயே இருந்தோம். லீ ஹெல்ப்ட் அஸ். டாடி பாவம். ஹீ வாஸ் வெரி அப்செட்.”

அப்படியென்றால்... தங்கள் காதலுக்காக ஜாக்கியை மறைத்துவைக்கவில்லையா? ச்சே! என்ன முட்டாள்தனம் செய்ய இருந்தேன்? இன்று துரையைப் பார்த்து எச்சரிக்க நினைத்திருந்தானே! தாய்க்கும், மனைவிக்கும் ஒரே சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல்போய் நொந்து நூலாகி இருப்பவரிடம் மகளின் காதல் பற்றிச் சொல்லி வீரவசனம் பேசினால் என்ன நடந்திருக்கும்?

ஒன்று... அவரே நாலு அறை அறைந்து அனுப்பியிருப்பார், இல்லையெனில் மைனர் பெண்ணைக் காதலிக்கிறான் என்று என் பெயரில் ஏதாவது வழக்குப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார். இதுபோல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பது எனக்கு ஏன் முன்பே தோன்றாமல் போனது? நல்லவேளை, அதற்குள் ஜாக்கியே வந்துவிட்டாள்.

"சுந்தர், நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா.... டாடியே நம்ம மேரேஜ் பத்தி உன் ஃபேமிலியில பேசறேன்னு அஷ்யூர் பண்ணியிருக்கார். ஹீ அட்வைஸ்ட் மீ அ லாட். ஹீ இஸ் கரெக்ட். நீ உன் ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேட்....'

"ஜாக்கி.... ஸ்டாப்!"

சுந்தரின் கோபம் கண்டு ஜாக்கி திகைத்தாள்.

"ஜாக்கி, உனக்கு இன்னுமா புரியல? நம்மளப் பிரிக்க ரெண்டு அப்பாக்களும் போடுற சதி இது, ஜாக்கி! நீ உன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் துணையா ஹாஸ்பிடல்லதான் இருக்கேன்னு என்கிட்ட யாரும் சொல்லல. உன் டாடி சொல்லி என் அப்பா அதை மறைச்சிட்டாரா? இல்ல.... உன் டாடியே அதை சொல்லாம மறைச்சிட்டாரா? புரியல. ஆனா நம்மைச் சுத்தி ஒரு சதித்திட்டம் போடுறாங்கன்னு மட்டும் புரியுது. இல்லைனா... ஏன் வீட்டை மாத்தணும்?"

"நோ... சுந்தர், நாம அடிக்கடி மீட் பண்றது உன் ஸ்டடிஸைப் பாதிக்கும். என் டாடி சொன்னதில தப்பு இல்ல. எல்லாமே உன் ஃப்யூச்சர் நல்லா இருக்கணும்னுதான். நீ நல்லா இருந்தாத்தானே நம்ம லைஃப் நல்லா இருக்கும். என் டாடி உன்னை ஏமாத்தாது..."

"ஜாக்கி, என் அப்பாவே என்னைப் புரிஞ்சுக்கல.... உன் டாடி என்னை எங்கே புரிஞ்சுக்கப்போறாரு? ஜாக்கி, அவங்களை விடு. நீ சொல்லு, உன்னால் என்னைப் பார்க்காம இருக்கமுடியுமா? நீ இல்லாம எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்போல இருந்தது ஜாக்கி. உன்னால் அதை உணரமுடியலையா? "

சுந்தரின் நிலை கண்டு இரங்கிய ஜாக்கியின் கண்கள் குளமாயின. உதடு கடித்து அழுகையை விழுங்கினாள். தன்மேல் இத்தனைக் காதலை வைத்திருப்பவனை விட்டு விலகித் தன்னாலும் நிச்சயமாய் இருக்கமுடியாது என்னும் உண்மை புரிய.... எதுவும் பேசாமல் அவனை நெருங்கி வந்து கட்டிக்கொண்டாள். சுந்தருக்கு நம்பிக்கைப் பிறந்தது. ஜாக்கியால் தன்னைப் பிரிந்து இருக்கமுடியாது. ஜாக்கி போராடியேனும் தன் காதலைக் காப்பாற்றுவாள். ஜாக்கி தன்னைவிட்டுப் போகமாட்டாள் என்று உறுதியாய் நம்பியவன், தேக்கிவைத்திருந்த காதற்பிரிவின் வலியை அவள் இதழில் தொடர்கதை ஒன்று எழுத முதல் அத்தியாயத்தைப் பதித்தான்.

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ….
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ…..
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது தனிமையில்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது….

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ… (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR3811'&lang=ta).

"சுந்தர்!"

தன்னிலை இழந்திருந்த சுந்தரும் ஜாக்கியும் அந்த ஆவேசக்கத்தலால் திடுக்கிட்டு பார்வையைத் திருப்ப... சன்னலுக்கு வெளியே அனல் கக்கும் விழிகளோடு காட்சி அளித்தாள் அம்மா.

வெடவெடத்துப்போன சுந்தர் கதவைத் திறந்தபோது....

அவன் முகத்தைக் கூட பார்க்கவிரும்பாதவளாய் அடங்காதக் கோபத்தோடு கீழே செல்ல அடியெடுத்துவைத்தவளின் கால்கள் படிக்கட்டுகளைத் தவறவிட்டுவிட... 'மட்டேர்' என்று பக்கவாட்டுச் சுவற்றில் மோத…..

"ஆஆஆஆ......"

அலறலோடு விழுந்தவள், சுந்தர் ஓடிவந்து பார்த்தபோது கீழ்ப்படிக்கட்டில் மூக்கு, வாயோரம் இரத்தம் வழிய...... எக்குத்தப்பான நிலையில் கிடந்தாள்.

"அம்மா…. ஆ.. ."

(தொடரும்)

சிவா.ஜி
14-06-2011, 01:23 PM
விடுபட்ட மூன்று பாகங்களையும் படித்தேன். அழகய் சொல்லப்படும் கதை, தங்கல், தங்கள் குணங்களை சிறப்பாய் வெளிக்காட்டும் பாத்திரங்கள், அதற்கேற்ர மிகச் சிறந்த உரையாடல்கள்.

சுந்தரின் அப்பா மிக உயர்ந்துவிட்டாரென்றால்...ஜாக்கியின் வயதுக்கு அவளுடைய பொறுப்பான பேச்சால்...இன்னும் உயர்ந்துவிட்டாள்.

சுந்தர் இன்னும் மயக்கத்திலேயே இருக்கிறான். எதார்த்தத்தை எட்டிப் பார்க்கக்கூட விரும்பாமல், முகமூடிக்குள் முழுகிக்கிடக்கிறான். பாவம் ஜாக்கி...அந்த எக்குத்தப்பான விழுதல்...அவளை எந்த நிலைக்குக் கொண்டுபோகும் என்று பதட்டத்தோடு அடுத்த பாகத்துக்காக காத்திருக்க வைத்துவிட்டீர்கள். மிகப் பிரமாதம் தங்கையே.

(நீங்க கதையைப் பதிவிடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்தான் பலரின் பின்னூட்டம் தாமதமாகிறது என நினைக்கிறேம்மா.....தினம் ஒரு பாகம்ன்னு அசத்துறீங்க....ஆனா...தினமும் வருவதற்கு எனக்கு இணையம் கைகொடுக்க மறுக்கிறது...இனி நிச்சயம் தொடர்ந்து வருவேன்.)

Nivas.T
14-06-2011, 04:41 PM
ஏதோ ஒன்று நடக்கப் போகிறதென்று நினைத்தேன், அதன் படியே நடந்துவிட்டது. சுந்தரின் அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ஆனால் சுந்தர் காதலா? இல்லை குடும்பமா? என்று இருதலைக் கொள்ளியாகப்போவது உறுதி. பாவம் சுந்தர்

தொடருங்கள்

பாரதி
14-06-2011, 07:38 PM
கடந்த இரண்டு பகுதிகளையும் இப்போது படித்தேன். பல முக்கிய நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து வருவேன். படையுங்கள்.

(சுந்தர் அப்பாவுடன் உரையாடும் போது “ நிஜாமாகவே ஜாக்கியை லவ் பண்றேன்” என்று கூறுகிறானே...? சுந்தராகவே ஜாக்கியை காதலித்தால் என்னவாம்?:)...... நகைச்சுவைக்காக மட்டும். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.)

அன்புரசிகன்
15-06-2011, 12:49 AM
சிவா அண்ணா கூறியது போல் ஜாக்கி யதார்த்தத்திற்கு வந்துவிட்டாள். வரவேண்டிய சுந்தர் இன்னும் வரவில்லை. இறுதியில் சுந்தரது தாயின் நடவெடிக்கை ஜாக்கியின் வீட்டில் ஏதாவது மாற்றம் கொண்டுவருமா? தொடருங்கள்...

(எனக்கெல்லாம் வாசிப்புக்கு இருக்கும் திறமை விமர்சிப்பதற்கு அல்லது பின்னூட்டம் இடுவதற்கு இல்லை. யாராவது பின்னூட்டம் இட்டபிறகு தான் அட இப்படியும் போட்டிருக்கலாம் என்று தோன்றும். நல்லாயிருக்கு என்று ஒரே வரியில் எப்படி எழுதுவது என்ற மன போராட்டத்திலேயே பலதடவை பதிலிடாமல் சென்றுவிடுகிறேன். தவிர வீட்டிலிருக்கும் மடிக்கணினியின் space bar ஐ பெரியவர் பிடுங்கிவிட்டார். ஒவ்வொருதடவையும் இடைவெளிக்கு சுண்டுவிரலால் குறிப்பிட்ட இடத்தை அழுத்துவதிலேயே போதும் போதும் என்றாகிவிடுகிறது....)

Ravee
15-06-2011, 07:18 AM
நன்றி நிவாஸ். நீங்கள் சொல்வதும் சரிதான். ரவி சொன்னாரேன்னு சும்மா அப்படிச் சொன்னேன். மற்றபடி நீங்களெல்லோரும் தொடர்வதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சியே.:icon_b:

அப்படி போடுங்க அருவாளை .... ஏன் தாயி வேற யாருமே கிடைக்கலியா உங்களுக்கு .... :sauer028:

ஐயோ பாவம் ஒரு பொம்பளபுள்ள இப்படி பேரு தெரியாத ஊருல இருந்து தனியா அழுவுதேன்னு நாலு வார்த்தை பேசினதுக்கு இப்படி கோர்த்துவுட்டாங்க .... :traurig001:

மன்ற மக்களே இதுக்கு நான் பொறுப்பில்ல .... :icon_ush:

இவங்க ஸ்பீடுக்கு எல்லோரும் பன்சர் ஆகி கிடக்காங்க ... இது தெரியாம இந்த அம்மா கண்ணை கசக்குது .... யாரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் ஆற அமர கதையை படித்து பதில் போடுங்க ஒண்ணும் அவசரம் இல்ல .... :icon_b:

அப்புறம் எல்லோரும் நிவாஸ் மாதிரி ஸ்மைலி மட்டும்தான் போடா முடியும் ...... :lachen001:

கீதாக்கா உன் பேச்சு நான் கா கா கா ........... :mad:

Ravee
15-06-2011, 07:25 AM
சிவா அண்ணா கூறியது போல் ஜாக்கி யதார்த்தத்திற்கு வந்துவிட்டாள். வரவேண்டிய சுந்தர் இன்னும் வரவில்லை. இறுதியில் சுந்தரது தாயின் நடவெடிக்கை ஜாக்கியின் வீட்டில் ஏதாவது மாற்றம் கொண்டுவருமா? தொடருங்கள்...

(எனக்கெல்லாம் வாசிப்புக்கு இருக்கும் திறமை விமர்சிப்பதற்கு அல்லது பின்னூட்டம் இடுவதற்கு இல்லை. யாராவது பின்னூட்டம் இட்டபிறகு தான் அட இப்படியும் போட்டிருக்கலாம் என்று தோன்றும். நல்லாயிருக்கு என்று ஒரே வரியில் எப்படி எழுதுவது என்ற மன போராட்டத்திலேயே பலதடவை பதிலிடாமல் சென்றுவிடுகிறேன். தவிர வீட்டிலிருக்கும் மடிக்கணினியின் space bar ஐ பெரியவர் பிடுங்கிவிட்டார். ஒவ்வொருதடவையும் இடைவெளிக்கு சுண்டுவிரலால் குறிப்பிட்ட இடத்தை அழுத்துவதிலேயே போதும் போதும் என்றாகிவிடுகிறது....)

தட்டச்சு பலகையின் விசைகளை மாற்றிக்கொள வழியுண்டு ... எனவே இடைவெளி விசையை அதிகம் உபயோகப்படுத்தாத மற்ற ஒரு விசைக்கு மாற்றிக்கொள்ளுங்கள் .... வலது கை என்றாலும் இடது கை என்றாலும் சுண்டுவிரல் முக்கியம் அண்ணே .... :lachen001:

Nivas.T
15-06-2011, 07:34 AM
அப்புறம் எல்லோரும் நிவாஸ் மாதிரி ஸ்மைலி மட்டும்தான் போடா முடியும் ...... :lachen001:


:sauer028::sauer028::sauer028::sauer028:

Ravee
15-06-2011, 07:37 AM
:sauer028::sauer028::sauer028::sauer028:


:icon_b: ............... இதோ , இது போலத்தான் .... நீங்கள் வந்து விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நிவாஸ் ........ :lachen001: :D :lachen001:

Nivas.T
15-06-2011, 07:38 AM
:icon_b: ............................. இதோ , இது போலத்தான் .... நீங்கள் வந்து விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நிவாஸ் ............ :lachen001: :D :lachen001:

:eek::icon_rollout::confused::fragend005::traurig001::traurig001::traurig001::traurig001:

அன்புரசிகன்
15-06-2011, 07:45 AM
தட்டச்சு பலகையின் விசைகளை மாற்றிக்கொள வழியுண்டு ... எனவே இடைவெளி விசையை அதிகம் உபயோகப்படுத்தாத மற்ற ஒரு விசைக்கு மாற்றிக்கொள்ளுங்கள் .... வலது கை என்றாலும் இடது கை என்றாலும் சுண்டுவிரல் முக்கியம் அண்ணே .... :lachen001:
சில பழகினால் மாற்றுவது கடினம். எனக்கு எப்போதும் பெருவிரல் தான் இடைவெளிக்கு பாவிப்பது. வேறு எழுத்துக்கு மாற்றி அதை எங்கு மாற்றுவது??? :D

Ravee
15-06-2011, 07:55 AM
சில பழகினால் மாற்றுவது கடினம். எனக்கு எப்போதும் பெருவிரல் தான் இடைவெளிக்கு பாவிப்பது. வேறு எழுத்துக்கு மாற்றி அதை எங்கு மாற்றுவது??? :D



http://farm5.static.flickr.com/4028/4487632241_baa3448b66.jpg


http://www.blowupthemoon.co.uk/wp-content/uploads/2011/03/1193_escape.jpg

கீதம்
15-06-2011, 08:47 AM
விடுபட்ட மூன்று பாகங்களையும் படித்தேன். அழகய் சொல்லப்படும் கதை, தங்கல், தங்கள் குணங்களை சிறப்பாய் வெளிக்காட்டும் பாத்திரங்கள், அதற்கேற்ர மிகச் சிறந்த உரையாடல்கள்.

சுந்தரின் அப்பா மிக உயர்ந்துவிட்டாரென்றால்...ஜாக்கியின் வயதுக்கு அவளுடைய பொறுப்பான பேச்சால்...இன்னும் உயர்ந்துவிட்டாள்.

சுந்தர் இன்னும் மயக்கத்திலேயே இருக்கிறான். எதார்த்தத்தை எட்டிப் பார்க்கக்கூட விரும்பாமல், முகமூடிக்குள் முழுகிக்கிடக்கிறான். பாவம் ஜாக்கி...அந்த எக்குத்தப்பான விழுதல்...அவளை எந்த நிலைக்குக் கொண்டுபோகும் என்று பதட்டத்தோடு அடுத்த பாகத்துக்காக காத்திருக்க வைத்துவிட்டீர்கள். மிகப் பிரமாதம் தங்கையே.

(நீங்க கதையைப் பதிவிடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்தான் பலரின் பின்னூட்டம் தாமதமாகிறது என நினைக்கிறேம்மா.....தினம் ஒரு பாகம்ன்னு அசத்துறீங்க....ஆனா...தினமும் வருவதற்கு எனக்கு இணையம் கைகொடுக்க மறுக்கிறது...இனி நிச்சயம் தொடர்ந்து வருவேன்.)

பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா. நேரம் கிடைக்கும்போது வந்து படிங்க.

விழுந்தது ஜாக்கியில்லை, சுந்தரின் அம்மா. அந்த இடத்தில் நான் தெளிவாக எழுதவில்லையோ?



ஏதோ ஒன்று நடக்கப் போகிறதென்று நினைத்தேன், அதன் படியே நடந்துவிட்டது. சுந்தரின் அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ஆனால் சுந்தர் காதலா? இல்லை குடும்பமா? என்று இருதலைக் கொள்ளியாகப்போவது உறுதி. பாவம் சுந்தர்

தொடருங்கள்

சுந்தருக்காக நீங்கள் இப்படி வருத்தப்படறதைப் பார்த்தால் எனக்கே வருத்தமா இருக்கு. நம்ம கையில் என்ன இருக்கு? மனசைத் தேத்திக்கங்க, நிவாஸ்.:)


கடந்த இரண்டு பகுதிகளையும் இப்போது படித்தேன். பல முக்கிய நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து வருவேன். படையுங்கள்.

(சுந்தர் அப்பாவுடன் உரையாடும் போது “ நிஜாமாகவே ஜாக்கியை லவ் பண்றேன்” என்று கூறுகிறானே...? சுந்தராகவே ஜாக்கியை காதலித்தால் என்னவாம்?:)...... நகைச்சுவைக்காக மட்டும். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.)

பின்னூட்டத்துக்கும் பிழை சுட்டியமைக்கும் நன்றி பாரதி அவர்களே. ஒரு பதிவைப் பத்துமுறைக்கும் மேல் படித்துதான் பதிவிடுகிறேன். அப்படியும் என் கண்ணில் படவே இல்லை, அந்த நிஜாம். (தவறாக நினைப்பதா? உங்கள் நகைச்சுவை படித்து நானும் சிரித்தேன். :lachen001:)

கீதம்
15-06-2011, 09:01 AM
சிவா அண்ணா கூறியது போல் ஜாக்கி யதார்த்தத்திற்கு வந்துவிட்டாள். வரவேண்டிய சுந்தர் இன்னும் வரவில்லை. இறுதியில் சுந்தரது தாயின் நடவெடிக்கை ஜாக்கியின் வீட்டில் ஏதாவது மாற்றம் கொண்டுவருமா? தொடருங்கள்...

(எனக்கெல்லாம் வாசிப்புக்கு இருக்கும் திறமை விமர்சிப்பதற்கு அல்லது பின்னூட்டம் இடுவதற்கு இல்லை. யாராவது பின்னூட்டம் இட்டபிறகு தான் அட இப்படியும் போட்டிருக்கலாம் என்று தோன்றும். நல்லாயிருக்கு என்று ஒரே வரியில் எப்படி எழுதுவது என்ற மன போராட்டத்திலேயே பலதடவை பதிலிடாமல் சென்றுவிடுகிறேன். தவிர வீட்டிலிருக்கும் மடிக்கணினியின் space bar ஐ பெரியவர் பிடுங்கிவிட்டார். ஒவ்வொருதடவையும் இடைவெளிக்கு சுண்டுவிரலால் குறிப்பிட்ட இடத்தை அழுத்துவதிலேயே போதும் போதும் என்றாகிவிடுகிறது....)

பின்னூட்டத்துக்கு நன்றி அன்பு.

நல்லா இருந்தாதான் சொல்லணும் என்றில்லை. நல்லா இல்லைன்னாலும் சொல்லலாம். போரடிச்சாலும் சொல்லலாம். சொதப்பினாலும் சொல்லலாம். :D


அப்படி போடுங்க அருவாளை .... ஏன் தாயி வேற யாருமே கிடைக்கலியா உங்களுக்கு .... :sauer028:

ஐயோ பாவம் ஒரு பொம்பளபுள்ள இப்படி பேரு தெரியாத ஊருல இருந்து தனியா அழுவுதேன்னு நாலு வார்த்தை பேசினதுக்கு இப்படி கோர்த்துவுட்டாங்க .... :traurig001:

மன்ற மக்களே இதுக்கு நான் பொறுப்பில்ல .... :icon_ush:

இவங்க ஸ்பீடுக்கு எல்லோரும் பன்சர் ஆகி கிடக்காங்க ... இது தெரியாம இந்த அம்மா கண்ணை கசக்குது .... யாரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் ஆற அமர கதையை படித்து பதில் போடுங்க ஒண்ணும் அவசரம் இல்ல .... :icon_b:

அப்புறம் எல்லோரும் நிவாஸ் மாதிரி ஸ்மைலி மட்டும்தான் போடா முடியும் ...... :lachen001:

கீதாக்கா உன் பேச்சு நான் கா கா கா ........... :mad:

ரவீ... உங்க நல்ல மனசு தெரியாதா எனக்கு? பாருங்க... நீங்க கிளப்பியதன் காரணமாய் எத்தனைப் பேர் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்து ஊக்கப்படுத்தியிருக்காங்க. அது சும்மா நிவாஸுக்காக சொன்னது.:icon_ush: நீங்க கா விடாம சமத்தா தொடர்ந்து வந்து படிங்க.:)

Ravee
15-06-2011, 09:16 AM
ரவீ... உங்க நல்ல மனசு தெரியாதா எனக்கு? .

அதானே ... :icon_b:

அது சும்மா நிவாஸுக்காக சொன்னது.:icon_ush:

:aetsch013: :lachen001: :aetsch013:

நீங்க கா விடாம சமத்தா தொடர்ந்து வந்து படிங்க.:)

ஹா ஹா ஹா ..... நீங்களும் ஒரு தாய்குலம் என்பதை நிருபித்துவிட்டீர்கள் அக்கா .... நல்ல சமாளிப்பு.

கீதம்
15-06-2011, 10:04 AM
ரவீ... உங்க நல்ல மனசு தெரியாதா எனக்கு? .

அதானே ... :icon_b:

அது சும்மா நிவாஸுக்காக சொன்னது.:icon_ush:

:aetsch013: :lachen001: :aetsch013:

நீங்க கா விடாம சமத்தா தொடர்ந்து வந்து படிங்க.:)

ஹா ஹா ஹா ..... நீங்களும் ஒரு தாய்குலம் என்பதை நிருபித்துவிட்டீர்கள் அக்கா .... நல்ல சமாளிப்பு.

நன்றி:) நன்றி:) நன்றி:).

கீதம்
15-06-2011, 10:07 AM
(16)

"அம்..மா.... அம்மா..."

படீர் படீர் என்று முகத்தில் அறைந்துகொண்டு அழுபவனின் கைகளைப் பிடித்துத் தடுத்த கிரியின் கண்ணிலும் நீர்!

ஜாக்கியில் ஆரம்பித்த நினைவுகள் அம்மாவின் இழப்பில் முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அம்மா இறந்துவிட்டாள் என்று சொல்லியிருக்கிறான். எப்படி இறந்தாள் என்பதை இன்றுதான் சொல்கிறான். குலுங்கிக் குலுங்கி அழும் சுந்தரின் தோளில் மெதுவாய்த் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினான் கிரி.

"கிரி, என் அம்மாவை நானே கொன்னுட்டேன்டா.... “

"சுந்தர், அவங்க தவறி விழுந்ததுக்கு நீ என்ன செய்யமுடியும்? கொன்னுட்டேன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதடா"

"எங்கப்பா அப்படித்தானேடா சொன்னார்.. கொலகாரப் பாவீன்னு சொன்னார்."

காயத்தின் வடுவையும் இதுநாள் வரைக் காட்டாதிருந்தவன், இன்று அந்த வடுவைக் கீறி காயத்தின் ஆழத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறான். போதும் என்றாலும் நிறுத்தாமல் இன்னும் நினைவுகளால் பிறாண்டிக்கொண்டே இருக்கிறான். என்ன செய்து அவனைத் திசைத் திருப்புவது என்று கிரி தவித்தான்.

சில நிமிடங்களை மெளனத்தில் கரைத்தபின் சுந்தர் மீண்டும் தொடர்ந்தான். கிரி அவனைத் தடுப்பதா தொடரவிடுவதா என்னும் குழப்பத்தில் இருக்கும்போது சுந்தர் சொல்ல ஆரம்பித்திருந்தான். இப்போது சுந்தரிடத்தில் ஒரு அமைதி பிறந்திருந்தது. எந்த வித உணர்வுகளையும் முகத்தில் காட்டாமல் வெறித்தக் கண்களோடு விட்டதைத் தொடர்ந்தான்.

“இருபது வருஷமா அவங்க ஏறி இறங்கின படிக்கட்டுடா அது! ஒரு தடவைக் கூட ஸ்லிப் ஆனதில்ல. அன்னைக்கு என்னையும் ஜாக்கியையும் அந்தக் கோலத்தில் பார்த்து மனசு தடுமாறினவங்க.... காலும் தடுமாறி விழுந்திட்டாங்க...... விழுந்தவங்க விழுந்தவங்கதான். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில வச்சிருந்தோம். கண்ணே திறக்கல. இந்தப்பாவி முகத்தில் முழிக்க விரும்பல போல! அக்கா கல்யாணத்துக்கு வச்சிருந்த பணமெல்லாம் கரைஞ்சுபோச்சு... அம்மா பிழைக்கல. ப்ச்! எங்க வீட்டோட அத்தனை சந்தோஷமும் என்னால போயிடுச்சி.”

சுந்தர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவனிடமிருந்த இறுக்கம் தளர்ந்திருப்பதுபோல் தோன்றியது.. அடைபட்டிருந்த பாரம் அத்தனையும் வெளிப்பட்டதா என்று தெரியவில்லை என்றாலும், ஓரளவுக்கேனும் சுமை குறைந்திருக்கும் என்பதை கிரியால் யூகிக்க முடிந்தது.

"அப்பா என்கூடப் பேசவே இல்லடா... ஒரு கொலைகாரனைப் பார்க்கிற மாதிரிதான் பாத்தார். எங்க அம்மாவுக்கு கொள்ளிவைக்கவும் என்னை விடல.... உறவுக்காரங்க எல்லாரும் வற்புறுத்தினபின்னாலதான் என்னை அனுமதிச்சார். ஆனா... அப்ப சொன்னார்....இந்தப் பய கையால நான் கொள்ளி வாங்கமாட்டேன், இவன் கொள்ளி வச்சா... என் கட்ட வேகாதுன்னு. சொன்னபடியே செஞ்சும் சாதிச்சிட்டார்."

"என்னடா செஞ்சார்?" கிரி பயந்துகொண்டே கேட்டான்.

"கண்காணாமப் போய்ட்டாருடா.... "

"என்னடா சொல்றே?"

"அம்மா இறந்ததால் ஒரு வருஷத்துக்கு நல்ல காரியம் செய்யக்கூடாதுன்னு எல்லாரும் சொன்னாங்க. அப்பா அதை விரும்பல. கடனை வாங்கியாவது அக்காவுக்கு கல்யாணம் பண்ண தயாரா இருந்தார். ஆனா... மாப்பிள்ள வீட்டில் ஒத்துக்கல. சகுனம் சரியில்லைன்னு சொல்லி அவங்க அக்காவை நிராகரிச்சிட்டாங்க. அப்பா நடைப்பிணமாயிட்டார். என்னோட நடவடிக்கைகளால் ஏற்கனவே மனசுடைஞ்சு போயிருந்தவரை அம்மாவோட மரணமும், அக்காவோட கல்யாணம் நின்னதும் அளவுக்கு அதிகமா பாதிச்சிடுச்சி. பித்துப் பிடிச்சவர் மாதிரி தானே பேசுறதும், சிரிக்கிறதுமா இருந்தார். ஒரு நாள் யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் எங்கயோ போய்ட்டார். எங்க போனார்னே தெரியல.”

"தேடிப்பாத்தீங்களா?"

"நிறையத் தேடினோம், நானும் என் ஃப்ரெண்ட்ஸும். அவரைக் கண்டுபிடிக்க முடியல. போலிஸ்ல புகார் கொடுத்தோம், காணவில்லைன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தோம். எதுக்கும் பலனில்ல... எத்தனை சந்தோஷமா இருந்த குடும்பம், எல்லாம் போயிடுச்சு.”

"ஜாக்கி...?"

தயங்கியபடியே கேட்டான். கேட்டபின் கேட்டிருக்கவேண்டாமோ என்று நினைத்துக்கொண்டான்.

"ப்ச்! அவளும் போய்ட்டா...சொல்லிக்காமலேயே போய்ட்டா... எங்க அம்மா ஆஸ்பத்திரியில உயிருக்குப் போராடிகிட்டு இருக்கும்போது... என் உயிர் என்னை விட்டுப் போய்ட்டுது. ராத்திரியோட ராத்திரியா அந்த ஆள் வீட்டைக் காலிபண்ணிட்டுப் போய்ட்டார். அட்வான்ஸைக் கூட திருப்பி வாங்கல. என்னைச் சுத்தி யாருமே இல்லடா... என் அக்காவைத் தவிர! இனிமே என்ன வாழ்க்கைன்னு தற்கொலைக்குக் கூட ட்ரை பண்ணினேன். கடைசி நிமிஷத்தில் அக்காவோட நினைப்பு வந்து தடுத்திட்டுது."

அதிர்ச்சியில் கிரி ஊமையாய் நின்றான்.

“அநாதையா நிக்கிற என் அக்காவைப் பாத்தேன். நீ நம்பமாட்டே கிரி. அப்பவும் அக்கா என்னை ஒரு வார்த்தை கேட்கல... உன்னாலதானேடா இத்தனையும்னு என்னைப் பார்த்து ஒரு விரல் நீட்டல. வேளாவேளைக்கு எனக்கு சோறு போட்டுதுடா... அய்யோ..... என்னை முச்சந்தியில் நிக்கவச்சி செருப்பால அடிச்சிருந்தாக் கூட அத்தனை அவமானமா இருந்திருக்காதுடா.. கிரி, எங்க அக்கா தெய்வம்டா.... எங்க அக்காவுக்காகத்தான் என் உடம்பில இன்னமும் உயிர் ஓடிகிட்டிருக்கு... எங்க அக்கா.... என் அம்மாவுக்கும் மேலடா... “

சுந்தரின் அன்றைய கையாலாகாத நிலை கிரியால் கற்பனை செய்ய இயலாததாய் இருந்தது. அவன் சுந்தருக்காக மிகவும் வருந்தினான்.

“சொந்தக்காரங்க எல்லாரும் ஒதுங்கிட்டாங்க. அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கிற பொறுப்பு தங்களோட தலையில் விழுந்திடுமோன்னு எல்லாருக்கும் பயம். எங்க அக்கா வேலைக்குப் போக ஆரம்பிச்சுது... அக்காவோட இந்த நிலைமைக்குக் காரணம் நான்தானேங்கிற குற்ற உணர்வு என்னைக் கொல்லாமல் கொன்னது. இந்த நேரம் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் தரவேண்டிய ஜாக்கி சொல்லிக்காமல் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனது மனசை ரொம்ப பாதிச்சிது. ஆனாலும் அவளை மறக்க முடியல. அவளோட நினைவுகளை ஒரு பக்கமா ஒதுக்கி வச்சிட்டு என் அக்காவுக்காக வாழ ஆரம்பிச்சேன்டா... என் அக்காவுக்காக படிச்சேன்டா.. நல்ல வேலையும் கிடைச்சது. ஆனாலும் அக்காகிட்ட கல்யாணத்தைப் பத்திப் பேச தயக்கமாவே இருந்தது.”

"அதான் அக்கா இப்போ குடும்பம், குழந்தைன்னு செட்டில் ஆயிட்டாங்களே... அதை நினைச்சு சந்தோஷப்படு"

“அதுக்கு முன்னாடி அவங்க பட்டதையெல்லாம் என்னன்னு சொல்றது? எனக்கு வேலை கிடைச்சதும் முதல் வேலையா அக்காவுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சேன். கல்யாணம் வேண்டாம்னு அக்கா ஒரே பிடிவாதம்! அப்பதான் ஒருநாள் கார்த்திகேயன் சார் எங்க வீட்டுக்கு வந்தார்."

"யாரு, உங்க அத்தானா?"

"ம்! அக்காவோட ஆபிஸ்ல வேலை பார்த்துகிட்டிருந்தார். என்கிட்ட அக்காவைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற தன் விருப்பத்தைச் சொன்னார். இதையேன் என்கிட்ட சொல்றீங்கன்னு கேட்டேன். உன்மேல் உங்க அக்கா ரொம்ப மதிப்பு வச்சிருக்கா. நீ சம்மதிச்சாதான் அவள் சம்மதிப்பான்னு சொன்னார்.... அப்படியே ஆடிப்போய்ட்டேன். சட்டுனு அவர் காலில் விழுந்துட்டேன். அப்பவும் அக்கா கல்யாணத்துக்கு உடன்படல. நானும் கார்த்திகேயன் சாரும் அக்காகிட்ட நிறையப் பேசினோம். நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு அக்கா என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் கல்யாணத்துக்கே ஒத்துகிட்டுது. ஆனா... என்னால் ஜாக்கியை மறக்கவே முடியலை.... இன்னொருத்தியை அவளிடத்தில் வைக்க மனசு ஒப்பமாட்டேங்குது. அந்த விஷயத்தில மட்டும் அக்காவுக்கு என்மேல் கோபம். இன்னைக்கில்லைன்னாலும் என்னைக்காவது அக்கா என் உணர்வுகளைப் புரிஞ்சுக்கும்கிற நம்பிக்கையோட இருக்கேன்.” சுந்தரின் வார்த்தைகள் தழுதழுத்தன.

"சுந்தர், நிச்சயம் புரிஞ்சுப்பாங்க, நீ கவலைப்படுறதை விடு... பழசை நினைச்சி நினைச்சி கவலைப்பட்டுகிட்டிருந்தா... நடந்தது எல்லாம் இல்லைன்னு ஆயிடுமா? மனசைத் தேத்திக்கோ... அடுத்தவாரம் ஊருக்குப் போறே... அதை நினைச்சி சந்தோஷமா இரு... வேற எதைப்பத்தியும் யோசிக்காதே..."

“கிரி, என்மேல் அக்கா வச்சிருந்த பாசத்தில் நான் நூத்தில் ஒரு பங்கு வச்சிருந்திருந்தால் கூட... அப்பா பேச்சைக் கேட்டு ஒழுங்கா நடந்திருப்பேனே... எந்தக் காதலுக்காக எல்லாரையும் உதாசீனப்படுத்தினேனோ... அந்தக் காதலே என்னை விட்டுப் போயிடுச்சேடா...."

காலந்தாழ்த்தி உணரப்பட்ட உண்மை. என்ன செய்வது? எல்லோர் வாழ்க்கையிலும் இதுபோல் தவறவிட்டத் தருணங்கள் சில நிச்சயம் இருக்கக்கூடும். அதை எந்தக் காலத்திலும் நிவர்த்தி செய்யவே இயலாது. நிர்ணயிக்கப்பட்டப் பாதையில் மட்டுமே செல்ல இது என்ன புகையிரதமா? அதுவும் கூட சமயங்களில் தடம்புரண்டு பல வாழ்க்கைகளைப் புரட்டிப்போட்டுவிடுகிறதே....

சுந்தர் உறங்கிவிட்டதாய் கிரியும் கிரி உறங்கிவிட்டதாய் சுந்தரும் நினைத்துக்கொண்டு ஆளுக்கொரு நினைவில் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். சுந்தர் சொன்னதையெல்லாம் கிரியும், கிரியிடம் சொல்லாமல் விட்ட மீதத்தை சுந்தரும்!

அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…

அது ஒரு அழகிய நிலாக்காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலாக்காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGBAR0025'&lang=ta)…..

(தொடரும்)

Ravee
15-06-2011, 12:30 PM
வாசிக்கும் போது லேசாக கண்ணில் நீர் முட்டியது ... எந்த இடத்தில் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் ....

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 01:28 PM
கதையின் ஓட்டம் வித்யாசமான களத்தை நோக்கி செல்கிறது...ஒருவினாடி தன்னையறியாமல் உணர்ச்சியில் செய்த கண நேரத்தவறு ஒரு தாயின் நம்பிக்கை சிதைந்து ஒரு தந்தையின் மனநிலை திரிந்து சகோதரி பேசவியலா ஊமையாக என ஒட்டு மொத்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு இறுதிமணி என் செல்லும் கதை ..மற்றொன்று இது காதல அல்ல ஈர்ப்பு என உண்மை நிலையினை அறிந்த ஜாக்கி தன பெற்றோர் நிலை உணர்ந்து சென்றது வரவேற்க்கதக்கது...இது முன்பே நிகழ்ந்திருந்தான் இழப்புகள் தடுக்க பட்டிருக்கும் ...


ஜெய், நீங்க என்னுடைய முந்தைய தொடர்கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்திருந்தா... நான் சொல்வது புரியும். என்னுடையது என்றில்லை, மற்றவர்களுடைய படைப்புகளுக்கும் இப்போதெல்லாம் பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்த பல பேர் முன்வருவதில்லை. உங்களைப் போல் சிலர் கொடுக்கும் ஊக்கத்தால் தான் இன்னும் இந்த வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.:)


கீதம் அவர்களே நீங்கள் கூறுவது உண்மைதான் .நானும் இதனை சில தனி பதிவுகளில் கூறியுள்ளேன் ..ஆரம்ப காலத்தில் மன்ற முன்னோடி நண்பர்கள் காட்டிய வேகம் இன்று குறைகிறதென்றால் அது அவர்கள் மிகுந்த வேலைப்பளுவில் சிக்கியுள்ளது தெளிவாக காட்டுகிறது ...இந்நிலையில்அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவிட்டாலும் அந்த கால இடைவெளியில் பல பதிவுகள் தவறிவிடுகின்றன ...அவர்களுக்கு வந்த பதிவுகள் என்னவென்று தேடி எடுக்க நேரமும் இருப்பதில்லை ..இது போன்று தொடர்வதால் தான் பின்னோட்டத்தினை தொடர்ந்து இடமுடிவதில்லை ...குறிப்பாக பார்த்தால் தற்போது பதிவிடுவதில் புதியவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது கண் கூடாக தெரியும் ..இதற்க்கு காரணாமாக நான் நினைப்பது அவர்களுக்கும் மன்ற முன்னோடிகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து கொண்டே செல்வதாக படுகிறது இது பல பதிவுகளில் தெரிகிறது ..மற்றொன்று தான் இடும் பதிவிற்கு பின்னோட்டம் இடுபவர்களுக்கு பதிலிடுபவர்கள் அவர்கள் இடும் பதிவுகளில் இடும் பின்னோட்டம் என்பது எங்கோ ஒரு பதிவில் நிகழும் நிகழ்வாகிவிடுகிறது ..இந்த தவறுகள் களையப்பட்டு இடைவெளிகள் குறையுமானால் நம்முடைய ஆதங்கம் குறையும் ..அந்த காலம் வரும் ... ..அதற்காக உங்களுடைய கலை படைப்புகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து தாருங்கள் கீதம் அவர்களே...

Nivas.T
16-06-2011, 07:27 AM
ஒரு சிறு தவறுக்கு ஒருவன் வாழ்க்கையில் இத்தனை பெரிய தண்டனையா? காதல் அவ்வளவு பாவமானதா? என்று எண்ணத் தோன்றினாலும் வாழ்க்கையில் சில நிகழ்வுகளை வேண்டாம் என்று நினைத்தாலும் அவற்றை தவிர்க்க முடியாது முழுதும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தவறுகளும், அதனால் ஏற்ப்படும் இழப்புகளும், இழப்பின் வலியும் , காலம் கடந்த படிப்பினையும், அதன் அனுபவமுமே நம்மை செம்மை படுத்தும்.

மிக அழக்காக போகிறது கதை

தொடருங்கள்

கீதம்
16-06-2011, 11:24 AM
வாசிக்கும் போது லேசாக கண்ணில் நீர் முட்டியது ... எந்த இடத்தில் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் ....

எழுதும்போதே எனக்கும் ஒரு இடத்தில் மனம் நெகிழ்ந்தது. (சுந்தர் அக்கா சோறு போட்டதைச் சொல்லிக்காட்டும்போதுதானே..?)


கதையின் ஓட்டம் வித்யாசமான களத்தை நோக்கி செல்கிறது...ஒருவினாடி தன்னையறியாமல் உணர்ச்சியில் செய்த கண நேரத்தவறு ஒரு தாயின் நம்பிக்கை சிதைந்து ஒரு தந்தையின் மனநிலை திரிந்து சகோதரி பேசவியலா ஊமையாக என ஒட்டு மொத்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு இறுதிமணி என் செல்லும் கதை ..மற்றொன்று இது காதல அல்ல ஈர்ப்பு என உண்மை நிலையினை அறிந்த ஜாக்கி தன பெற்றோர் நிலை உணர்ந்து சென்றது வரவேற்க்கதக்கது...இது முன்பே நிகழ்ந்திருந்தான் இழப்புகள் தடுக்க பட்டிருக்கும் ...




கீதம் அவர்களே நீங்கள் கூறுவது உண்மைதான் .நானும் இதனை சில தனி பதிவுகளில் கூறியுள்ளேன் ..ஆரம்ப காலத்தில் மன்ற முன்னோடி நண்பர்கள் காட்டிய வேகம் இன்று குறைகிறதென்றால் அது அவர்கள் மிகுந்த வேலைப்பளுவில் சிக்கியுள்ளது தெளிவாக காட்டுகிறது ...இந்நிலையில்அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவிட்டாலும் அந்த கால இடைவெளியில் பல பதிவுகள் தவறிவிடுகின்றன ...அவர்களுக்கு வந்த பதிவுகள் என்னவென்று தேடி எடுக்க நேரமும் இருப்பதில்லை ..இது போன்று தொடர்வதால் தான் பின்னோட்டத்தினை தொடர்ந்து இடமுடிவதில்லை ...குறிப்பாக பார்த்தால் தற்போது பதிவிடுவதில் புதியவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பது கண் கூடாக தெரியும் ..இதற்க்கு காரணாமாக நான் நினைப்பது அவர்களுக்கும் மன்ற முன்னோடிகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து கொண்டே செல்வதாக படுகிறது இது பல பதிவுகளில் தெரிகிறது ..மற்றொன்று தான் இடும் பதிவிற்கு பின்னோட்டம் இடுபவர்களுக்கு பதிலிடுபவர்கள் அவர்கள் இடும் பதிவுகளில் இடும் பின்னோட்டம் என்பது எங்கோ ஒரு பதிவில் நிகழும் நிகழ்வாகிவிடுகிறது ..இந்த தவறுகள் களையப்பட்டு இடைவெளிகள் குறையுமானால் நம்முடைய ஆதங்கம் குறையும் ..அந்த காலம் வரும் ... ..அதற்காக உங்களுடைய கலை படைப்புகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து தாருங்கள் கீதம் அவர்களே...

கதைக்கான நெகிழ்ந்த விமர்சனத்துக்கும் பின்னூட்டத்துக்கான நெடிய விமர்சனத்துக்கும் நன்றி ஜெய். உங்களைப்போல்தான் நானும் வசந்தகாலத்துக்காகக் காத்திருக்கிறேன்.:)


ஒரு சிறு தவறுக்கு ஒருவன் வாழ்க்கையில் இத்தனை பெரிய தண்டனையா? காதல் அவ்வளவு பாவமானதா? என்று எண்ணத் தோன்றினாலும் வாழ்க்கையில் சில நிகழ்வுகளை வேண்டாம் என்று நினைத்தாலும் அவற்றை தவிர்க்க முடியாது முழுதும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தவறுகளும், அதனால் ஏற்ப்படும் இழப்புகளும், இழப்பின் வலியும் , காலம் கடந்த படிப்பினையும், அதன் அனுபவமுமே நம்மை செம்மை படுத்தும்.

மிக அழக்காக போகிறது கதை

தொடருங்கள்

ஆம், நிவாஸ். தவிர்க்க இயலாத் தருணங்கள் அவை. பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
16-06-2011, 11:29 AM
(17)

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு...
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0814'&lang=ta)

மனம் வருடும் விதத்தில் மெல்லிய வீணையிசை, பாடலைக் குழைத்து அமுதமாய் காதில் ஊட்டிக்கொண்டிருந்தது. அந்தத் தனியார் மருத்துவமனை பிரமாண்டமாக இல்லாவிடினும் சகல வசதிகளையும், திறமை வாய்ந்த மருத்துவர்களையும் தன்னகத்தே கொண்டு மகளிர்நலம் பேணும் சிறப்பு மருத்துவமனையாய் விளங்கி அந்த வட்டாரத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. அதன் வரவேற்புக் கூடத்தில் இருந்த சொகுசு நாற்காலிகளில் சுந்தரும், கார்த்திகேயனும் அமர்ந்திருக்க, மிதமான ஒப்பனையில் அழகிய இளம்பெண் ஒருத்தி சித்ராவை மட்டும் அழைத்து விபரம் சேகரித்துக்கொண்டிருந்ததோடு ஓரக்கண்ணால் அவ்வப்போது சுந்தரை நோட்டம் விட்டுக்கொண்டுமிருந்தாள்.

“நீங்கதான் சித்ராவா?”

“ஆமாம், கே.சித்ரா.”

“வயசு?”

“முப்பத்தொண்ணு”

“ஹஸ்பண்ட் பேர்?”

“ஆர். கார்த்திகேயன்.”

“இதுதான் முதல் பிரசவமா?”

“ஆமாம்.”

“இதுக்கு முன்னாடி அபார்ஷன் ஏதாவது ஆயிருக்கா?”

“இல்ல...”

“என்னைக்கு ட்யூ டேட்?”

“ஜூன் 9”

“இதுவரைக்கும் எந்த ஹாஸ்பிடல்ல பாத்தீங்க?”

“திருச்சியில டாக்டர் லலிதாகிட்ட காட்டிகிட்டிருந்தேன். இப்ப சென்னைக்கு குடிவந்ததால டாக்டர் லலிதாதான் இந்த ஆஸ்பிடல்ல காட்டச் சொல்லி ரெகமண்ட் பண்ணினாங்க. லெட்டர் கூட குடுத்திருக்காங்க.”

“அதை டாக்டர்கிட்ட கொடுங்க. பழைய ஸ்கேனிங் ரிப்போட்டெல்லாம் கையில வச்சிருக்கீங்களா?”

“ம், எல்லாம் இருக்கு.”

மீண்டும் சுந்தரிடம் சென்று மீண்டது அவள் பார்வை! பதிவு செய்யப்பட்டதற்கு அத்தாட்சியாய் அட்டை ஒன்றை இவள் கையில் கொடுத்துவிட்டு சொன்னாள்.

“உக்காருங்க. நர்ஸ் வந்து வெயிட்டும் BP யும் பாப்பாங்க. அப்புறம் உங்களைக் கூப்பிடும்போது நீங்க உள்ள போங்க. அடுத்தது வைஷ்ணவி வாங்க....”

"ங்ஙா...." பூனைக்குட்டி முனகுவதுபோல் மெல்லிய சத்தம் கேட்டுத் திரும்பினாள். அதுவும் ஒரு கண்திறவாப் பூனைக்குட்டி போல்தான் இருந்தது. தன் இளஞ்சிவப்பு பிஞ்சு விரல்களை ஒருமுறை விரித்து மூடியது. பார்க்க ஒரு ரோஜா மொட்டு விரிந்து மீண்டும் மூடியதுபோல் இருந்தது. அதை ரசித்தபடியே சித்ரா தன் பெருத்த வயிற்றைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.

"என்ன சித்தூ...? என்ன சொன்னாங்க?"

"வெயிட் பண்ணச் சொன்னாங்க. கூப்பிடும்போது போவணும்."

ஒரு நர்ஸ் வந்து எடையும் இரத்த அழுத்தமும் சோதித்து கையேட்டில் குறித்துக்கொண்டு போனாள்.

சித்ரா ஆயாசத்துடன் சுற்றியுள்ள பெண்களைப் பார்வையிட்டாள். சிலர் சந்தோஷமாக இருந்தனர். சிலரது முகத்தில் கவலை, இன்னும் சில முகங்களில் பயம், சிலவற்றில் நிச்சலனம்! தன் முகத்தில் இப்போது எந்த உணர்வு உள்ளது என்று யோசித்தாள்.

இரண்டு வருடங்களாய் ஏங்கியிருந்த தாய்மையை இன்னும் சில நாட்களில் பெறவிருக்கும் பூரிப்பா? திருமணமே வேண்டாமென்று பிடிவாதமாக இருந்து, இத்தகு அரிய தாய்மையை இழக்கவிருந்த தன் பேதைமையை எண்ணிப் பெருமூச்சா? இந்த நேரத்தில் தன்னருகில் இருந்து தன்னைச் சீராட்டவேண்டிய அம்மாவும் அப்பாவும் தன்னை நிர்க்கதியாய் விட்டுபோனதை எண்ணித் துயரமா? முப்பது வயதுக்கு மேல் முதல் பிரசவமெனில் அதில் சிக்கல்கள் நேரலாம் என்று பத்திரிகையில் படித்த செய்தி உண்டாக்கிய கலவரமா? வரவேற்பிலிருந்த அந்த இளம்பெண்ணை சுந்தருக்கு இணையாக மனதுக்குள் பொருத்திப் பார்த்து உண்டான பரவசமா?

"சுந்தர் எங்கே?" சுந்தர் அங்கு இல்லையென்பது அப்போதுதான் கவனத்துக்கு வந்தது.

"என்னன்னு தெரியல. ஒரு பேஜர் மெசேஜ் வந்துது... கொஞ்சம் அர்ஜண்ட் போல... ஃப்ரெண்டுக்கு போன் பண்ணிட்டு வரேன்னுட்டு போனான். இன்னும் காணோம்.”

இவளைப்போலவே பெரும்வயிற்றுக்காரி ஒருத்தி புஸ்ஸு புஸ்ஸுவென்று மூச்சுவாங்க அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தாள். வலி தொடங்கிவிட்டது என்று செவிலிகள் பரபரத்தபடி அவளை அழைத்துப்போக ஸ்ட்ரெச்சரை வரவழைக்க... சித்ரா சற்று மிரண்டாள்.

சூழலைக் குலைக்கும் விதமாய் மருத்துவமனையின் வராந்தாவில் யாரோ ஒருவன் உரத்த குரலில் வாதிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. பார்த்தமாத்திரத்திலேயே அவன் போதையில் தள்ளாடுவது புரிந்தது. காவலாளியை மீறி உள்ளே நுழைய முயன்றவனை அவன் தடுத்துக்கொண்டிருந்தான்.

"ஜோசப்பு... போய்டு... உம்பொண்டாட்டிக்கி நைட் டூட்டி... இந்நேரத்துக்கு வூட்லதான் இருக்கும்... அங்க போய்ப்பாரு... வீணா... அம்மாகிட்ட என்னய வாங்கிக்கட்டிக்க வுடாத.... ஜோசப்பு....."

அவனைப் பார்த்த செவிலிப்பெண்கள் பதறினர்.

"ஐயையோ.... இவன் உள்ள வந்தான்னா.... நாம தொலைஞ்சோம்டி....... அந்தாளை எப்படியாவது அனுப்பணுமே... டீ... சுதாவை வரச் சொல்லு... அவ வந்து தாட் பூட்டுனு நாலு கத்து கத்தினா... போய்டுவான்."

ஆயாம்மா யாரும் கேட்காமலேயே விவரம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"சரியான குடிகாரப்பய... இங்க வேலை பாக்கிற நர்ஸோட புருசந்தேன். பாவம் அந்தம்மா... இவனாலேயே அதும்மானம் போவுது... கேடு கெட்டவன்... ரெண்டுநடை போலிஸ்ல கூட புச்சிக் குட்த்துப் பாத்தாச்சி. ஆளு சுளுவா வெளியில வந்துடறான்..... இன்னா பண்றது?"

சித்ரா அவன் மனைவியை எண்ணிப் பரிதாபப்பட்டுக்கொண்டிருந்தபோது அவள் பெயர் அழைக்கப்பட்டது.

டாக்டர் தேன்மொழி மிகவும் இனிமையாகப் பேசினார்.வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம். மிக ஒல்லியான தேகத்தில் விறைப்பான நூல்சேலை மொடமொடக்க… கண்ணாடியும், புன்சிரிப்புமாய் வழக்கமான பெண் மருத்துவர்களின் சிறப்பம்சத்தோடு இருந்தார்.

"சித்ரா... இந்தப் பிரசவம் உங்களுக்கு நார்மலா நடக்கிற சான்ஸ் ரொம்பக் கம்மி. குழந்தை ரொம்பப் பெரிசா இருக்கு. அதனால் சிசேரியன் தான் பண்ணவேண்டியிருக்கும். லலிதா சொல்லியிருப்பாங்களே..."

"ஆமாம், டாக்டர்."

இன்னும் பத்திலிருந்து பதினஞ்சு நாளுக்குள்ள ஏதாவது ஒருநாள் ஆபரேஷன் வச்சுக்கலாம். நல்லநாள் எதுவும் நீங்க பார்க்கணுமா? "

"தேவையில்லை, டாக்டர், நீங்க சொல்ற அன்னைக்கே வரோம்." கார்த்திக்கும் சித்ராவும் ஒரே குரலில் சொல்ல, டாக்டர் சிரித்தார்.

"கருத்தொத்த தம்பதிகள், வாழ்க!"

வாசலுக்கு வந்தபோது சுந்தரின் பைக் வந்து நின்றது. பரபரப்போடு இறங்கியவன், ஏதோ சொல்லத் தொடங்குமுன் சித்ரா அவனைக் கடிந்தாள்.

"எங்கடா போயிருந்தே?"

"அக்கா... சீனு மெசேஜ் குடுத்திருந்தான்...இப்பதான் பேசிட்டுவரேன். திருவண்ணாமலையில அப்பாவைப் பார்த்தானாம். அப்பா மாதிரிதான் இருந்தாருங்கிறான். தாடி மீசையெல்லாம் வச்சிருந்ததால் அவ்வளவு கரெக்டாவும் சொல்லமுடியலங்கிறான். நான் உடனே போய்ப் பாத்துட்டு வரேன்க்கா..."

"அப்பாவா? இத்தன வருஷம் கழிச்சா?" சித்ரா மகிழ்ச்சியில் விழிவிரித்தாள்.

"எந்த இடத்தில் பாத்தானாம்?" கார்த்திக்கின் கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கினான்.

"சொல்லுடா... எந்த இடத்தில் பாத்தானாம்? அதான் கேட்கிறாருல்ல?"

"கோவில்லதான் எங்கியோ பாத்தானாம். அவருக்கு இவனைத் தெரியலயாம்."

விரும்பியே பொய் சொன்னான். உண்மையைச் சொன்னால் அக்கா மனம் துடிதுடித்துப்போகும் என்பதோடு அவரின் அந்த நிலைமைக்குத் தானே காரணம் என்னும் குற்ற உணர்வும் உந்த... தெருவோரம் ஒரு பிச்சைக்காரரைப்போல் அவரைப் பார்த்தததாய் சீனு சொன்னதை மறைத்து உள்ளுக்குள் புழுங்கினான்.

(தொடரும்)

அக்னி
16-06-2011, 02:54 PM
17வது பாகத்திற்கிடையில் இன்னுமொரு பாகம் வைத்திருக்கலாம்.
திடீரென சூழல் மாற முடியவில்லை.

16வது பாகம் திடீரென நிகழ்காலம் வந்தாலும், ஒரு திரைப்படத்தைப் போலவே தெளிவாக விரிகின்றது.

சுந்தரின் குடும்பம் இப்படிச் சின்னாபின்னமாகிப்போகும் என்பதை நினைக்கவே இல்லை.
சமூகத்தினால் காதலின் மீது விதிக்கப்படாத விதிகள், அழகான ஒரு குடும்பத்தைச் சிதைத்துவிட்டது.
கதையில் மட்டுமல்ல என்பது நிஜம்.

பருவ வயதின் காதற்கோளாறு, சட்டம் போட்டாலும் மாறாது.

இதுவரையில் பாத்திரங்கள் எதுவுமே வீணாகத் திணிக்கப்படவில்லை என்கையில்,
ஜோசப்பு எதற்கு உள்ளே வந்து கலாட்டா செய்கின்றார்... :confused:




விழுந்தது ஜாக்கியில்லை, சுந்தரின் அம்மா. அந்த இடத்தில் நான் தெளிவாக எழுதவில்லையோ?
நீங்கள் எழுதியதும் சிவா.ஜி எழுதியதும் எனக்குத் தெளிவாகவே இருக்கின்றதே...

*****
நான் பின்னூட்டமிடாது செல்வதற்கு நான் பொறுப்பல்ல.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.
அலைபேசியில் இணையத்தை இணைத்து, தமிழையும் தெரியவைக்காவிட்டால்,
நான் கணினியின் ஊடாக மட்டும்தானே மன்றம் வந்திருக்க முடியும்.
ஆக, இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, நான் சொல்லச்சொல்லத் தமிழிற் தானாகவே தட்டச்சிப் பதியும் தொழில்நுட்பத்தை, அலைபேசித் தொழில்நுட்பம் கண்டறிய வேண்டும்.

தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
16-06-2011, 04:36 PM
அக்காவிற்கு சுந்தர் கொடுத்த வாக்கு என்னவாயிற்று ...சுந்தரின் நிலை தான் என்ன? ...தந்தையார் கிடைப்பாரா? என கண் முன் நிக்கும் கேள்விகளுடன் ..

கீதம்
16-06-2011, 11:48 PM
17வது பாகத்திற்கிடையில் இன்னுமொரு பாகம் வைத்திருக்கலாம்.
திடீரென சூழல் மாற முடியவில்லை.

16வது பாகம் திடீரென நிகழ்காலம் வந்தாலும், ஒரு திரைப்படத்தைப் போலவே தெளிவாக விரிகின்றது..

இறந்தகாலத்தை விரிப்பதா? நிகழ்காலத்தைத் தொடர்வதா என்று என் மனதில் எழுந்த குழப்பத்தை மிகத் துல்லியமாகக் கண்டுணர்ந்துவிட்டீர்கள். இதற்குதான் அக்னி வரவேணும் என்கிறது. :D

சுந்தரின் குடும்பம் இப்படிச் சின்னாபின்னமாகிப்போகும் என்பதை நினைக்கவே இல்லை.
சமூகத்தினால் காதலின் மீது விதிக்கப்படாத விதிகள், அழகான ஒரு குடும்பத்தைச் சிதைத்துவிட்டது.
கதையில் மட்டுமல்ல என்பது நிஜம்.

பருவ வயதின் காதற்கோளாறு, சட்டம் போட்டாலும் மாறாது.

விமர்சனத்துக்கு நன்றி அக்னி.:)


இதுவரையில் பாத்திரங்கள் எதுவுமே வீணாகத் திணிக்கப்படவில்லை என்கையில்,
ஜோசப்பு எதற்கு உள்ளே வந்து கலாட்டா செய்கின்றார்... :confused:.

இந்த அத்தியாயத்தில் ரிஸப்ஷனிஸ்ட், டாக்டர் தேன்மொழி, சுதா, ஆயாம்மா, காவலாளி என்று அநேக பாத்திரங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஜோசப் மட்டும் கவனத்தில் வந்தது ஏன்? :confused:


நீங்கள் எழுதியதும் சிவா.ஜி எழுதியதும் எனக்குத் தெளிவாகவே இருக்கின்றதே....

அப்போ... நானாத்தான் உளறி மாட்டிகிட்டேனா?:eek:


நான் பின்னூட்டமிடாது செல்வதற்கு நான் பொறுப்பல்ல.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம்.
அலைபேசியில் இணையத்தை இணைத்து, தமிழையும் தெரியவைக்காவிட்டால்,
நான் கணினியின் ஊடாக மட்டும்தானே மன்றம் வந்திருக்க முடியும்.
ஆக, இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, நான் சொல்லச்சொல்லத் தமிழிற் தானாகவே தட்டச்சிப் பதியும் தொழில்நுட்பத்தை, அலைபேசித் தொழில்நுட்பம் கண்டறிய வேண்டும்.

தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றேன்.

நீங்க அலைபேசியினூடாகவே தமிழ்மன்றம் வருகிறீர்கள் என்பதை அறிவேன் அக்னி. பின்னூட்டமிடாததற்கு காரணம் இருக்கும் என்பதையும் அறிவேன். அதனால் உங்கள் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

படிப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளாமலேயே மன்றம் வந்து படைப்புகளைப் படித்துச் செல்கின்றனர். அவர்களுள்ளும் நல்ல விமர்சகர்கள் இருக்கலாம். தொடர்ந்து இல்லையென்றாலும் எப்போதாவது தலை காட்டி, ' நாங்கள் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம், ஓவராய்க் கதை விடாதே...' என்பது போல் கருத்துச் சொன்னாலும் எழுதுவதற்கு ஊக்கமாய் இருக்குமே. அந்த ஆதங்கமே அது. தவறாக நினையாதீர்கள். தொடர்வதற்கு நன்றி அக்னி.

அன்புரசிகன்
17-06-2011, 12:53 AM
புதிய திருப்பங்கள் கதையில் வரவுள்ளது போல் தோன்றுகிறது? யார் சுதா? யோசப்போட மனைவியா அல்லது யோசப் ஐ அடக்கக்கூடிய வல்லவியா? :D?
தந்தையார் பிச்சைக்காரராக மாற்றியதற்கான குற்ற உணர்வு நிச்சயம் சுந்தரை வாட்டும். தொடருங்கள்...

அக்னி
17-06-2011, 01:13 AM
என்னமோ ஏதோ... ஜோசப் தான் கண்ணில உறுத்துறாரு...
ஜாக்கியை கதைக்குள் மீளவும் கூட்டி வருபவராக இருப்பாரோ...

Ravee
17-06-2011, 07:14 AM
எழுதும்போதே எனக்கும் ஒரு இடத்தில் மனம் நெகிழ்ந்தது. (சுந்தர் அக்கா சோறு போட்டதைச் சொல்லிக்காட்டும்போதுதானே..?)

“அநாதையா நிக்கிற என் அக்காவைப் பாத்தேன். நீ நம்பமாட்டே கிரி. அப்பவும் அக்கா என்னை ஒரு வார்த்தை கேட்கல... உன்னாலதானேடா இத்தனையும்னு என்னைப் பார்த்து ஒரு விரல் நீட்டல. வேளாவேளைக்கு எனக்கு சோறு போட்டுதுடா... அய்யோ..... என்னை முச்சந்தியில் நிக்கவச்சி செருப்பால அடிச்சிருந்தாக் கூட அத்தனை அவமானமா இருந்திருக்காதுடா.. கிரி, எங்க அக்கா தெய்வம்டா.... எங்க அக்காவுக்காகத்தான் என் உடம்பில இன்னமும் உயிர் ஓடிகிட்டிருக்கு... எங்க அக்கா.... என் அம்மாவுக்கும் மேலடா... “

அக்கா என்னும் இடத்தில் அண்ணன் என்று போட்டால் அப்படியே என் வாழ்க்கைக்கு பொருந்தும் அக்கா .... இழப்பு என்னும் சொல்லுக்கு அர்த்தம் படித்தது அவரிடம் இருந்து ...

கீதம்
17-06-2011, 11:22 AM
அக்காவிற்கு சுந்தர் கொடுத்த வாக்கு என்னவாயிற்று ...சுந்தரின் நிலை தான் என்ன? ...தந்தையார் கிடைப்பாரா? என கண் முன் நிக்கும் கேள்விகளுடன் ..

தொடர்ந்து வந்து ஊக்குவிப்பதற்கு நன்றி ஜெய்.


புதிய திருப்பங்கள் கதையில் வரவுள்ளது போல் தோன்றுகிறது? யார் சுதா? யோசப்போட மனைவியா அல்லது யோசப் ஐ அடக்கக்கூடிய வல்லவியா? :D?
தந்தையார் பிச்சைக்காரராக மாற்றியதற்கான குற்ற உணர்வு நிச்சயம் சுந்தரை வாட்டும். தொடருங்கள்...

உங்கள் ஆர்வமான கேள்விகளுக்கு பதில் விரைவில். நன்றி அன்பு.


என்னமோ ஏதோ... ஜோசப் தான் கண்ணில உறுத்துறாரு...
ஜாக்கியை கதைக்குள் மீளவும் கூட்டி வருபவராக இருப்பாரோ...

உங்கள் கண் உறுத்தலுக்கு இன்று தீர்வு கிடைக்கலாம்.:)


அக்கா என்னும் இடத்தில் அண்ணன் என்று போட்டால் அப்படியே என் வாழ்க்கைக்கு பொருந்தும் அக்கா .... இழப்பு என்னும் சொல்லுக்கு அர்த்தம் படித்தது அவரிடம் இருந்து ...

உங்கள் நெகிழும் நினைவுகளில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் ரவி. அண்ணனுக்கு என் வணக்கம்.

கீதம்
17-06-2011, 11:26 AM
(18)

அடிவயிற்றில் உதயமான வலி மெல்லப் படர்ந்து விலா எலும்புகளை வெடுக்கெனச் சுண்டியது. அங்கிருந்து பளீரென்று ஒரு மின்னல்வெட்டுப் போலப் புறப்பட்டு முதுகுத்தண்டு முழுவதும் பரவி விடுபட்டது. ஒருசில நொடிகள் அவளை ஆசுவாசப்படுத்திவிட்டு அசந்தநேரம் மறுபடியும் தன் விளையாட்டைத் தொடர்ந்தது. தாங்கமுடியவில்லை. மெல்லியதாய்த் துவங்கி இடுப்புப் பிரதேசத்தை வியாபித்து நாணிலிருந்து சுண்டிய அம்பு போல் சுரீரென்று பாய்ந்து உயிர் வாங்கும் வலியைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் சித்ரா திணறினாள். இன்னும் நாள் இருக்கிறதே... அதற்குள்ளாகவா?

யோசிக்க அவகாசமில்லை. பல்லைக்கடித்தபடியே வலியை மென்று முழுங்கினாள். விளக்கைப் போட, கூசும் கண்களால் அவளை மேய்ந்த கார்த்திக், கண்களில் வழியும் நீருடன், முகத்தைக் கோணியபடி இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிற்கும் சித்ராவைப் பார்த்துத் திடுக்கிட்டு எழுந்தான்.

"என்ன சித்தூ....?என்ன பண்ணுது?"

"பயங்கரமா வலிக்கிதுங்க....தாங்க முடியல...."

கார்த்திக் தவித்தான். உதவிக்கு சுந்தர் இல்லாமல் போய்விட்டானே... என்ன செய்வது?

"சித்ரா.... கொஞ்சம் பொறுத்துக்கோ... நான் ஆட்டோ கூப்புடறேன்."

அவசரமாய் டைரி தேடி அதில் குறித்திருந்த பழக்கப்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுக்கு போன் செய்ய.... ஐந்தாவது நிமிடம் அந்த அதிகாலையிலும் ஊதுபத்தி மணக்க.... ஆட்டோ வந்து வாசலில் ஒலியெழுப்பியது. அதற்குள் சித்ரா சொல்லச் சொல்ல, அவளுக்குத் தேவையான மாற்றுப்புடவை, துவாலை, ஃப்ளாஸ்க் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கார்த்திக் ஒரு பையில் அடைத்து எடுத்துக்கொள்ள...ஆட்டோ மருத்துவமனைக்குப் பயணப்பட்டது.

சித்ரா தன்னிரு கரங்களையும் இடுப்பின் இருபுறமும் தாங்கிப் பிடித்தப்படி வலி உண்டாகும் ஒவ்வொரு நிமிடமும் கண்களைச் சுருக்கி, உதட்டைக் கடித்து மெலிதான முணகலோடு எப்படியெப்படியோ சமாளித்தாள். கார்த்திக்கின் கரங்கள் அவளை அணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேயிருந்தன.

டாக்டர் தேன்மொழி இன்னும் வரவில்லை. வேறு மருத்துவர் பரிசோதித்துவிட்டு சொன்னார்.

"இது பொய்வலின்னு சொல்வாங்கம்மா... இது கொஞ்சநேரம் இருந்திட்டுப் போயிடும். இன்னும் டைம் இருக்கு. எதுக்கும் அப்ஸர்வேஷனில் வைக்கிறேன். பெரிய டாக்டர் வந்து பாக்கட்டும்..... சிஸ்டர்.... நீங்க இவங்களுக்கு ஒரு அட்மிஷன் போடச் சொல்லிடுங்க. "

நர்ஸிடம் செய்யவேண்டியவற்றைச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

வலி மட்டுப்பட்டது போல் இருந்தாலும் முற்றிலுமாக நின்றுவிடவில்லை. சித்ராவை அவளுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்தாம் எண் அறைக்கு அழைத்துச் சென்ற ஆயாம்மா, குரலைத் தணித்துக்கொண்டு அவளிடம் கேட்டாள்.

"வூட்ல பெரியவங்க யாரும் கெடையாதா??"

"இல்ல"

"ஹு….ம், இருந்தா வலி கண்டவொடனே கருக்கு வச்சிக் குடுத்திருப்பாங்க. பொய்வலின்னா கப்புனு நின்னுடும். நெசம்னா தூக்கிவுட்டுடும். அதவுட்டுட்டு இன்னாத்துக்கு இதுக்கெல்லாம் ஆசுபத்திரி வந்து காச அழுவுறீங்க?"

‘என் பெண்டாட்டி துடிக்கிறாள், இப்போது பணமா முக்கியம்’ என்பது போல் கார்த்திக் ஆயாம்மாவை முறைக்க...தனக்கேன் வம்பு என்பது போல் அவள் நடையைக் கட்டினாள்.

காலை ஆறுமணிக்கு மருத்துவமனையே பரபரப்பானது. வெள்ளைப் பட்டாம்பூச்சிகள் பணிமாற்றும் நேரம். அங்குமிங்கும் பறந்துக் களைத்தவற்றின் இடத்தில் புத்துணர்வுடன் உற்சாகமானவை! அறைக்கதவைத் திறந்துகொண்டு பழையதும் புதியதுமாய் இரண்டு பட்டாம்பூச்சிகள் உள்ளே வந்தன. இவளது கேஸ் நோட்டைச் சுட்டி ஒன்று மற்றொன்றிடம் சொன்னது.

"அஞ்சாம் நம்பர் பேஷண்ட் பேரு சித்ரா... ஃபால்ஸ் லேபர்... அஸ்வதி மேடத்தோட அட்மிஷன். அப்ஸர்வேஷனுக்காக..."

அசதியாய்ப் படுத்திருந்த சித்ரா அரைக்கண்ணைத் திறந்து பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள்.

இவளைக் கண்டு அவளும் அதிர்ந்தாள்.

"சித்ரா..."

"ஜாக்கி..."

"ஏய், ஜாக்கி, உனக்குத் தெரிஞ்சவங்களா?" முன்னவள் கேட்டாள்.

"யா..."

"சரிப்பா....நீ அப்புறமா வந்து குசலம் விசாரிச்சுக்கோ.... நான் வீட்டுக்குக் கிளம்பணும்...வா..."

அவள் அவசரம் அவளுக்கு! ஜாக்கி நிதானிக்கவும் அவகாசம் கொடுக்காமல் அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.

"ஏங்க...ஜாக்கிங்க.... சுந்தர் லவ் பண்ணின பொண்ணு.... இவ எப்படி.... இங்க? ஒண்ணுமே புரியலங்க.... "

சித்ரா ஆரவாரித்தாள். கார்த்திக்கால் அவளது பரவசத்தை உணரமுடிந்தது. குறைந்த நிமிடமே பார்த்திருந்தாலும் ஜாக்கியின் மலர்ந்த முகமும், கவர்ந்திழுக்கும் கண்களும், கண்ணுக்குள்ளேயே உறைந்து போயின. அவை சுந்தரை ஈர்த்ததில் எந்த ஆச்சரியமும் இல்லையென்று தோன்றியது. சுந்தரிடம் உடனே ஜாக்கியைப் பற்றிச் சொல்ல மனம் துடித்தது.

சித்ரா கண்மூடி கடவுளிடம் என்னவோ பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள். கார்த்திக்குக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு நேரம் வலியில் துடித்தவள், பிரார்த்தனை செய்து வலிகுறைக்க முயலவில்லை. ஜாக்கியைப் பார்த்ததும், அவளைத் தம்பியுடன் இணைக்க, பிரார்த்திக்கிறாளே...

நல்ல நேரம் வந்தால் எல்லாம் கூடிவரும் என்று இதைத்தான் சொல்வார்களோ? சித்ராவுக்கு அப்பாவும் கிடைத்து, தம்பியும் தன் காதல் பெண்ணுடன் இணைந்து நல்லவாழ்க்கை அமைத்துக்கொண்டால்... அவள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதோடு குட்டிப் பையனோ... பெண்ணோ.. குடும்பத்தில் புதிய உறுப்பினராகிவிடும். இனி குதூகலத்துக்குக் குறைவே இருக்காது. வருங்காலத்தை எண்ணி கார்த்திக்கின் மனம் உள்ளூர மகிழ்ந்துகொண்டிருந்தது.

**********************************************************************************

வெறுமை! எல்லாம் வெறுமை! பயணத்தின் துவக்கத்தில் இருந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும், அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு அதனால் உண்டாகப்போகும் மனநிறைவும், அப்பாவைத் தங்களுடன் வைத்துக்கொண்டு அக்காவின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அளித்து அதனால் அவருக்கெழும் புளகாங்கிதத்தைக் கண்டு தாங்கள் அடையப்போகும் ஆனந்தமும்..... எல்லாம் கனவு....கனவு... நிறைவேறாக்கனவாய்ப் போயிற்றே...

பாவமன்னிப்பு கேட்கச் சென்றவனுக்கு ஆலயம் நுழையவே அனுமதி மறுக்கப்பட்டது போல்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற்போனதைப் போல்....

அக்காவிடம் என்னவென்று சொல்வது? இரண்டுநாட்களாய் தேடாத இடம் இல்லை. பிச்சைக்காரராய்த் தெருவோரம் குந்தியிருந்தவரைப் பற்றி யாரிடம் என்னவென்று அடையாளம் சொல்லி விசாரிப்பது? அப்படியும் விசாரித்ததில் அறிந்துகொள்ள முடிந்தது ஒன்றே.... அங்கே அநேகம் பேர் தங்கள் வீடு, வாசல், உறவுகளை இழந்து, பிச்சைக்காரர்களைப் போலவே சுற்றுகிறார்கள் என்பது. அதிலும் தன் அப்பாவைப் போல் மனம் விடுபட்டவர்கள் சிலரும் அடக்கம்!

சீனுவும் உறுதிபடச் சொல்லவில்லை. சொல்லப்போனால் தன்னாலேயே இப்போது அவரை அடையாளம் காண இயலுமா என்ற சந்தேகமும் தோன்றியது. இலக்கற்றத் தேடுதல் எந்தவொரு பயனையும் தராத நிலையில் விரக்தியின் விளிம்புக்கே சென்றவனுக்கு வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் வழங்கியது ஒரு குறுஞ்செய்தி.

‘உன் ஜாக்கியைப் பார்த்துவிட்டோம். சென்னையில்தான் இருக்கிறாள். அப்பாவைப் பார்த்தாயா?’

அப்பாவைப் பற்றிய கவலைகளை ஜாக்கியின் நினைவு போர்த்தியது.

'உன் ஜாக்கி'

அத்தான் அனுப்பிய வாசகத்தைப் பலமுறைப் படித்தான்.

ஆமாம், என் ஜாக்கி... அவள் என்றுமே என் ஜாக்கிதான்.

நடத்துநரிடம் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு அமர்ந்தவனை ஈர்த்தது, பேருந்தில் பாடிக்கொண்டிருந்த பாடல்!

என்மேல் விழுந்த மழைத்துளியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGARR0054'&lang=ta)…


**********************************************************

"சித்ரா... எதுக்கு பயப்படுறீங்க?. இது இயல்பா நடக்கிறதுதான். வலி வர ஆரம்பிச்சிட்டதால் இன்னும் கொஞ்சம் முன்னாடியே ஆபரேஷனை வச்சுக்கப் போறோம். உங்க பாப்பாவை சீக்கிரம் பார்க்கணும்னு உங்களுக்கு ஆசையில்லையா? தைரியமா இருங்க. கார்த்திக், யாராவது லேடீஸ் சித்ரா பக்கத்தில் இருந்தா நல்லா இருக்கும். ஊரில் இருந்துதான் வரவழைக்கணுமா?"

"அது வந்து.... டாக்டர்..." கார்த்திக் தடுமாறுவதைப் பார்த்து அவரே புரிந்துகொண்டார்.

"ஒண்ணும் பிரச்சனையில்ல. இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். அவங்களுக்கு ஒரு தைரியம் கொடுப்பாங்க. அதுக்காகத்தான்!"

"சரிங்க டாக்டர், வரவழைக்கிறேன்.." சொன்ன கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சித்ரா. டாக்டர் போனபின் கார்த்திக் கேட்டான்.

“சித்ரா... உங்க பெரியம்மா... அத்தைன்னு யாராவது பெரியவங்களை வரவழைச்சா என்ன?"

"ப்ச்! அதெல்லாம் வேண்டாங்க... நீங்க இருக்கீங்க... சுந்தர் இருக்கான். நம்ம ஜாக்கி இருக்கா... எனக்கு வேற யாரும் வேண்டாம்."

"நீதான் ஜாக்கி ஜாக்கின்னு புலம்பிகிட்டு இருக்க? அவ வரவே இல்லையே... அவ டூட்டியைக் கூட வேற நர்ஸ்தான் வந்து பாக்கிறாங்க"

"எத்தனை நாள் கழிச்சிப் பாக்கிறோம்? பேசவேண்டியது நிறைய இருக்கு. எல்லா வேலையையும் முடிச்சிட்டு கடைசியா வருவா..."

"சரி, நான் கேன்டீன் போய் ஒரு காப்பி குடிச்சிட்டு உனக்கு ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வரேன். வேற எதாவது வேணுமா சித்தூ?"

"எனக்கு எதுவும் வேணாம், நீங்க கொஞ்சம் காலாற நடந்திட்டு வாங்க... ஒரே இடத்திலேயே அடைஞ்சுகிடக்கறீங்க..."

"சரி, வரேன். பத்திரமா இரு..."

"ஆமாம், என்னை காக்காவா தூக்கிட்டுப் போகப்போவுது? நான் பத்திரமா இருக்கேன், நீங்க போய்ட்டு வாங்க!"

சித்ரா சிரித்தாள். ஜாக்கியைப் பார்த்ததிலிருந்து புதிய உற்சாகம் வந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. ஜாக்கியை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள். ஆனால் ஜாக்கி போனவள் போனவள்தான். அதன்பின் எட்டியும் பார்க்கவில்லை. அவளுக்குப் பதில் வானதி சிஸ்டர் வந்து பார்த்து இரத்த அழுத்தம் சோதித்துவிட்டு, ஒரு ஊசி போட்டுப் போனாள். ஜாக்கியைப் பற்றிக் கேட்டபோது அவள் லேபர் வார்டில் கேஸ் ஒன்றைக் கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னாள்.

மாலை வீட்டுக்குப் போகுமுன் வந்து சந்திப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

ஜாக்கி ஏன் இப்படி பாராமுகமாய் நடந்துகொள்கிறாள்? தன்னைப் பார்க்கவே பிரியப்படாத அளவுக்கு தான் என்ன கெடுதல் செய்தோம் என்று மனம் வெதும்பினாள். கதவு திறக்கும்போதெல்லாம் ஜாக்கியோ என்று ஆர்வத்துடன் பார்க்க... இரத்த அழுத்தம் சோதித்தவள் சொன்னாள்.

"உங்களுக்கு ஏன் இப்படி திடீர் திடீர்னு BP அதிகமாவுது? ரொம்ப டென்ஷனா இருக்கீங்களா? பயப்படாதீங்க... இந்தாங்க மாத்திரைப் போட்டுக்கங்க"

நான் ஏன் பயப்படவேண்டும்? ஜாக்கியல்லவோ என்னைப் பார்த்து பயந்துகொண்டு ஒளிகிறாள்?

நர்ஸ் கொடுத்த மாத்திரையைக் கையில் வாங்கியபோது கயல்விழி சிஸ்டர் அவசரமாய் உள்ளே வந்தாள்.

"வானதி... இன்னைக்கும் குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றான்டி"

"யாருடி?"

"ஜாக்கிபுருஷன்தான். பெரிய இம்சை.... ஜாக்கி எங்க?"

“அவ அப்பவே போய்ட்டாளே....”

“போய்ட்டாளா? சொல்லிக்கவே இல்ல?”

"என்னன்னு தெரியல. காலையில இருந்தே ஆளு டல்லா இருந்தா... போகும்போது நான் ஒரு வாரத்துக்கு லீவுன்னு சொல்லிட்டுப் போறா... மேடத்தை எப்படி சமாளிச்சான்னு தெரியல..."

என்ன? ஜாக்கிக்குத் திருமணமாகிவிட்டதா? அதுவும் அந்தக் குடிகாரனோடு? அடிப்பாவி, உன்னையே நினைத்து உருகிக்கொண்டிருக்கிறானே ஒரு பாவி! நீ என்னடாவென்றால் ஒரு உருப்படாதவனைத் திருமணம் செய்து உன் வாழ்க்கையைப் பாழடித்துக்கொண்டிருக்கிறாயே!

நம்பிக்கை பொய்த்ததில் உண்டான ஏமாற்றமும், ஜாக்கியின் மீதான கோபமும் பொங்கியெழுந்ததில் இதயம் தாறுமாறாய்த் துடிக்க.... இரத்த அழுத்தம் அதிகமாகி, கட்டிலில் அமர்ந்திருந்தவள், நினைவு தப்பி…. பக்கவாட்டில் மெல்லச் சரிந்தாள்.

"சித்ரா.... என்னங்க ஆச்சு? கயல்.... சீக்கிரமா டாக்டரைக் கூப்புடுடீ....மயக்கம் போட்டாங்கன்னு சொல்லு"

(தொடரும்)

Nivas.T
17-06-2011, 11:41 AM
எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. காட்சிகளின் விளக்கங்களும் சம்பவங்களின் வர்ணனைகளும் மிக அழகு. கதையில் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.

கதையில் நிகழும் முக்கிய நிகழ்வுகளும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்தும் பாடல்களும் மிக அருமை

தொடருங்கள்

Ravee
17-06-2011, 01:39 PM
சப்பா தலை சுத்துது ... :mini023: ஏன் இந்த அவசர கோலம் .... :eek: கொஞ்சம் நிதானம் அக்கா .... :icon_ush: அவசரமில்லாமல் பிரசவம் நடக்கட்டும் ... :)

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 06:59 PM
அவங்க பதட்டபடுறத பார்த்தா இங்க இரத்த அழுத்தம் உயர்கிறது ..எல்லா பொண்ணுங்களுமே இப்படித்தான் கிடைச்சா நல்லாஇருக்கும் நடந்தா நல்லா இருக்கும்னு எதிபார்கிறது அது நடக்கலைன்னா மற்றவங்கள் நெருக்கடிக்குள்ளாக்கிறது ..இப்படி இருந்தா அந்த கார்த்திக் மாதிரியான ஆண்கள் என்ன செய்வாங்க ..கொஞ்சம் எடுத்து சொல்லுங்கம்மா ..

கீதம்
18-06-2011, 10:55 AM
எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. காட்சிகளின் விளக்கங்களும் சம்பவங்களின் வர்ணனைகளும் மிக அழகு. கதையில் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.

கதையில் நிகழும் முக்கிய நிகழ்வுகளும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்தும் பாடல்களும் மிக அருமை

தொடருங்கள்

பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ். :)


சப்பா தலை சுத்துது ... :mini023: ஏன் இந்த அவசர கோலம் .... :eek: கொஞ்சம் நிதானம் அக்கா .... :icon_ush: அவசரமில்லாமல் பிரசவம் நடக்கட்டும் ... :)

அதெல்லாம் நம்ம கையிலா இருக்கு. :) பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.


அவங்க பதட்டபடுறத பார்த்தா இங்க இரத்த அழுத்தம் உயர்கிறது ..எல்லா பொண்ணுங்களுமே இப்படித்தான் கிடைச்சா நல்லாஇருக்கும் நடந்தா நல்லா இருக்கும்னு எதிபார்கிறது அது நடக்கலைன்னா மற்றவங்கள் நெருக்கடிக்குள்ளாக்கிறது ..இப்படி இருந்தா அந்த கார்த்திக் மாதிரியான ஆண்கள் என்ன செய்வாங்க ..கொஞ்சம் எடுத்து சொல்லுங்கம்மா ..

நான் என்ன சொல்றது? நீங்களே பாருங்க. தொடர்வதற்கு நன்றி ஜெய்.

கீதம்
18-06-2011, 11:00 AM
(19)

காற்றுவெளியிடைக் கண்ணம்மா …. நின்றன்
காதலையெண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினையொத்த இதழ்களும்
இதழ்களும் ஆ... .. ஆ...

அமுதூற்றினையொத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்…
பத்துமாற்றுப் பொன்னொத்த நின்மேனியும்
ஆ... .. ஆ... .. ஆ... ..

பத்துமாற்றுப் பொன்னொத்த நின்மேனியும்
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே…. இந்தக்
காற்றுவெளியிடைக் கண்ணம்மா… நின்றன்
காதலையெண்ணிக் களிக்கின்றேன்…

நீயெனதின்னுயிர் கண்ணம்மா…
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
துயர் போயின போயின துன்பங்கள்
நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே

என்றன் வாயினிலேயமுதூறுதே…..
கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே
கண்ணம்மா… ம்… கண்ணம்மா….ம்….
உயிர்த்தீயினிலே வளர்சோதியே…
என்றன் சிந்தனையே என்றன் சித்தமே…

பாரதி கண்ணம்மாவிடம் கொண்ட காதல் எத்தன்மையது? காற்றுக்கு மட்டுமே அங்கு அனுமதியாம். விரலிடைவெளி, நூலிடைவெளி என்பது போல் காற்றிடைவெளியாம். காற்று புகுந்து புறப்படாத இடமும் உண்டோ? அத்தனை நுண்ணிய இடைவெளிதான் அவருக்கும் கண்ணம்மாவுக்கும் உள்ள காதலின் இடைவெளி!

இப்படித்தானே ஒருவன் பைத்தியக்காரனாய் ஒரு பெண்ணின் பின்னால் சுற்றி சுற்றி வந்தான். காற்றும் புகமுடியா இடைவெளியில் காதலைக் காணப்போய்த்தானே கண்மூடித் திறப்பதற்குள் வாழ்க்கை இழந்து நிற்கிறான். இன்றும் அவளை மறக்கமுடியாமல் தனிமையில் அழுதுகொண்டிருக்கிறான்.

‘என்ன? என்ன சொல்கிறாய்? நான் எங்கே அழுதேன் என்கிறாயா? பிறந்ததில் இருந்து உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் அருகிருந்து கவனிக்கிறேனே.... எனக்குத் தெரியாதா, உன் அழுகையும், ஆனந்தமும்? என்னவள், எனக்காகவே காத்திருப்பாள், என்றேனும் ஒருநாள் அவளைக் காண்பேன் என்று கனவு கண்டிருந்தாயே.... பார், அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள்.அவள் இப்போது உன்னவள் இல்லை. இனி அவளை மறந்துவிட்டு உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வழியைப் பார்!’

சுந்தரிடம் இத்தனையும் சொல்லத்தான் மனம் துடித்தது. ஆனால்... ஆனால்... தாங்கமாட்டான்! நிச்சயமாய்த் தாங்கமாட்டான்.

ஜாக்கியைத் தான் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளக்கூடாது. அவளும் தானிருக்கும்வரை இந்தப் பக்கம் தலைகாட்டமாட்டாள். தொலையட்டும். சுந்தர் அவளுடைய நினைவுகளிலேயே நெடுநாள் வாழ்ந்திருப்பான். கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மனதை மாற்றி அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமையச் செய்வதே இனி தன் வேலை. இதுதான் திட்டவட்டமான முடிவு. அவளறியாமலேயே விழியோரம் நீர் வழிந்தது.

"சித்தூ... நீ எதை நினைச்சும் கவலைப்படாம இருக்கணும்னுதான் வீட்டில இருந்து உனக்குப் பிடிச்ச பாரதியார் பாட்டு கேஸட் எடுத்திட்டுவந்து போட்டிருக்கேன். டாக்டர் என்ன சொன்னாங்க? உணர்ச்சி வசப்படக்கூடாது. பயப்படக்கூடாதுன்னு சொன்னாங்கல்ல? தைரியமா இரும்மா..."

"ப்ச்! ஆபரேஷனை நினைச்செல்லாம் பயப்படலங்க..."

"பின்ன என்ன?"

"சுந்தர் மனசு என்னபாடு படும்னு நினைச்சேன்.."

"என்ன பண்றது? அவன் மட்டும் இல்ல, நாம் எல்லாருமே ஆசையாதானே இருந்தோம், உங்க அப்பாவைக் கண்டுபிடிச்சாச்சின்னு... கவலைப்படாத... கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்."

"நான் கவலைப்படுறது, அப்பாவை நினைச்சு இல்ல... ஜாக்கியை நினைச்சு..."

"ஏன், என்ன ஆச்சு?"

சித்ரா அதுவரை அடக்கிவைத்திருந்த துக்கத்தை அவன் முன் வார்த்தைகளாகவும் கண்ணீராகவும் கொட்டினாள். கார்த்திக் சிலையாய் சமைந்தான். ஐயையோ... இது தெரியாமல் சுந்தரிடம்....

"சித்தூ....ஸாரி சித்தூ..."

சித்ரா விழிகளால் கேள்விக்குறி வரைந்தாள்.

"நான் இது தெரியாம சுந்தருக்கு நம்பிக்கை ஊட்டுற மாதிரி மெசேஜ் அனுப்பிட்டேன்."

"எப்போ? என்னன்னு? அடக்கடவுளே.... ஏங்க எதையும் முழுசாத் தெரிஞ்சுகிட்டு செய்யமாட்டீங்களா? அவன் எத்தனை ஆசையோட வருவான்! உண்மை தெரிஞ்சா… மறுபடியும் ஏதாவது செஞ்சுக்கமாட்டானா? ஏங்க இப்படி செஞ்சீங்க? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா?" சித்ரா படபடத்தாள்.

"இல்ல சித்தூ.... அந்தப் பொண்ணு கிடைச்சிட்ட சந்தோஷத்தில நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்."

"அப்படி என்ன அவசரம்? எதிலயும் ஒரு நிதானம் இருக்கணும்"

"இப்ப என்ன பண்ணச் சொல்றே? வந்தான்னா... எடுத்துச் சொல்லிதான் புரியவைக்கணும்... "

"என்னத்தைப் புரியவச்சி என்ன? அவன் மறுபடியும் மனசுடைஞ்சு போனா... உயிரோடவே இருக்கமாட்டான்.. அவன் போய்ட்டா அப்புறம் நானும் போய்டுவேன்"

"நீ என்ன பைத்தியமா? ஏன் இப்படியெல்லாம் உளறுறே? நினைச்சவுடனே உயிரைப் போக்கிக்கிறதா பெரிய விஷயம்? வாழ்ந்து காட்டணும். யதார்த்தத்தை யோசி. ஜாக்கி செஞ்சதில் என்ன தப்பு? பார், ஒரு குடிகாரனைக் கட்டிகிட்டாலும் அவ முகத்தில் கவலை தெரியுதா? சிரிச்ச முகமா இருக்கிறா... எத்தனை அழகா வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுறா? ஏன் உனக்கும் உன் தம்பிக்கும் அது புரிய மாட்டேங்குது? அவன் தான் சின்னப்பையன், புரிஞ்சுக்கலைன்னா நாம் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கணும். அதை விட்டுட்டு....."

சித்ரா அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தபோதுதான் கார்த்திக்குக்கு தன் தவறு தெரிந்தது. சுதாரிப்பதற்குள் சித்ராவிடமிருந்து அனலாய்க் கேள்வி எழுந்தது.

"என்னையிலருந்து சுந்தர் 'உன் தம்பி' ஆனான்?"

"சித்தூ... டென்ஷனாவாத... ஏதோ வாய் தவறி வந்திடுச்சி.."

"ஜாக்கிக்கு சார்பா பேசறீங்களே... அவ உண்மையாவே என் தம்பியைக் காதலிச்சிருந்தா... அவனை மாதிரி அவளும் தன் காதலில் உறுதியா இருந்திருக்கணும், இப்படி அவசரப்பட்டு எவனையோ கட்டியிருந்திருக்கக்கூடாது. இவளுக்காக அவன் இன்னும் உருகிட்டு இருக்கான். இவ சந்தோஷமா இருக்கா..."

"சித்ரா... மறுபடியும் சொல்றேன்... உணர்ச்சிவசப்படாம பிரச்சனையைப் பாரு... சுந்தர் ஆண்பிள்ளை, அவனை மாதிரி இவளால் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாமல் இருந்திருக்கலாம்."

"இவளைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... அப்பவே தன்னிச்சையா யார்க்கும் கட்டுப்படாமல் நடப்பா... உங்களுக்குதான் அவளைப் பத்தி எதுவும் தெரியாது... ... சண்டாளி, நம்பவச்சிக் கழுத்தறுத்திட்டா....."

சித்ராவின் இந்த ஆவேசம் புதிது. அனலாய் கக்கும் வார்த்தைகள் புதிது. ஏன் இப்படி ஆனாள்? உடல் வேதனையும், மன வேதனையும் ஒன்றுசேர்ந்தால் இப்படியெல்லாம் ஒருத்தியை ஆட்டுவிக்கக்கூடுமா? அளவுக்கு அதிகமாய் உணர்ச்சிவசப்படக்கூடாது என்னும் மருத்துவரின் அறிவுரையை அவள் மீறும்வகையில் தானே தூண்டிவிடுவது எத்தனை முட்டாள்தனம்! சொந்த பந்தங்களின் ஆதரவற்ற நிலையில் தான் ஒருவனே இப்போது அவளுக்கு உறுதுணையாய் இருக்கவேண்டிய கட்டத்தில் ஏன் இப்படி தானும் புத்தி கெட்டத்தனமாய் நடந்துகொள்ளவேண்டும்?

கார்த்திக் அமைதியாய் இருக்க நினைத்தாலும், சித்ரா விடுவதாய் இல்லை.

"தப்பு பண்ணிட்டோம்கிறதால்தான் அவள் என் கண்ணிலேயே படாம ஓடிட்டா... அவ நல்லாவே இருக்கமாட்டா...."

"சித்ரா... என்ன இது? ஏன் இப்படி வெறி பிடிச்சமாதிரி பேசுறே? கன்ட்ரோல் யுவர்செல்ஃப்... "

கார்த்திக் குரலை உயர்த்திய சமயம், டாக்டர் தேன்மொழி, வானதி சிஸ்டருடன் உள்ளே நுழைந்தார்.

"என்ன மிஸ்டர் கார்த்திகேயன்... என்ன இது? ம்? என்ன சண்டை? பையனா? பொண்ணான்னா?"

சூழ்நிலையை மாற்ற முயன்று தோற்றார்.

"சித்ரா... ஏன் அழறீங்க? எனி ப்ராப்ளம்?" சித்ரா அமைதியாய் இருந்தாள்.

சித்ராவின் புலம்பலுக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் பிரசவ நேரத்தில் தன் உடல்நிலையை கெடுத்துக்கொள்வாள் மேலும் சுந்தர் வந்ததும் இவளே அதை பூதாகரமாக்கி அவனை நோகடித்துவிடுவாள். அதுமட்டுமில்லாமல் தான் சித்ராவிடம் கடுமையாய் நடந்துகொள்வதற்காக டாக்டர் தன்னைத் தவறாக நினைத்துவிடுவாரோ என்ற ஐயமும் தோன்ற..... கார்த்திக் வாய்திறந்தான்.

"டாக்டர், நீங்களே அவளுக்கு புத்தி சொல்லுங்க... இவளோட தம்பியும் ஒரு பொண்ணும் கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கு முன்னாடி லவ் பண்ணி சந்தர்ப்பவசத்தால் பிரிஞ்சிட்டாங்க. இப்ப அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவ எப்படி என் தம்பியை விட்டுட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணலாம்னு சதா புலம்பலும், அழுகையுமா இருக்கா... எந்தப் பொண்ணாவது காலம் பூரா காதலிச்சவனை நினைச்சுகிட்டே காலத்தைக் கழிக்க முடியுமா? சமுதாயத்தில் அவளுக்குப் பாதுகாப்புக்காகவோ இல்ல, வேற ஏதாவது காரணத்துக்காகவோ கல்யாணம் பண்ணிக்கிறதில் என்ன தப்பு?"

"இதுக்கு நான் பதில் சொல்லணும்னா சித்ராவுக்குதான் சாதகமா சொல்லணும்.”

டாக்டர் சொல்லவும் சித்ரா ' நல்லாக் கேட்டுக்கோங்க' என்பது போல் கார்த்திக்கைப் பார்த்தாள்.

“ஏன்னா.... உதாரணம் சொல்ல நானே இருக்கேனே..."

டாக்டர் தேன்மொழி சொல்லிவிட்டு சித்ராவைப் பார்த்து அர்த்தமாய்ப் புன்னகைத்தார். பக்கத்தில் நர்ஸ் ஒருத்தியை வைத்துக்கொண்டே அவர் அப்படிச் சொன்னது இருவருக்கும் தர்மசங்கடத்தை உண்டுபண்ணியது. ஆனால் வானதி சிஸ்டர் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நின்றதிலிருந்து அவளுக்கு இந்த விஷயம் பழைய செய்தி என்பதையும் உணர்த்தியது.

"ஸாரி டாக்டர்!" சித்ரா, கார்த்திக் இருவரும் ஒரே குரலில் சொல்ல டாக்டர் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்..

"ஆனா... இதெல்லாம் தனிப்பட்டவங்க மனசு சம்பந்தப்பட்டது. அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்கதான் தீர்மானிக்கணும். இது உங்க தம்பி யோசிக்கவேண்டிய, முடிவெடுக்கவேண்டிய விஷயம்! சித்ரா...இப்ப உங்க சிந்தனையெல்லாம் உங்களைப் பத்தியும் உங்க பாப்பாவைப் பத்தியும்தான் இருக்கணும். தேவையில்லாம மனசைப்போட்டு அலட்டிக்காதீங்க. கார்த்திகேயன், ப்ளீஸ்... அவங்களை ஹேப்பியா வச்சுக்கங்க... சண்டை போட இது நேரமில்ல.... புரியுதா?"

"இதுவரைக்கும் நாங்க சண்டையே போட்டதில்ல, டாக்டர். இன்னைக்குதான்...."

"இன்னைக்கும் வேண்டாமே.... சித்ரா... ரெண்டு நாளில் உங்களுக்கு ஆபரேஷன் இருக்கு. ஸோ.... ரிலாக்ஸ்டா இருங்க.... பாருங்க... என்ன அருமையான பாட்டு... கேட்டுகிட்டே தூங்குங்க... "

இரத்த அழுத்தம் சோதித்து, நாடி பார்த்து, சித்ராவின் பருத்த வயிற்றை மெல்ல அழுத்தி, குழந்தையின் தற்போதைய நிலை பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதென்று உறுதி செய்தபின் டாக்டர் போய்விட்டார்.

ட்ரிப்ஸ் சொட்டு சொட்டாய் இறங்கிக்கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாய் சித்ராவின் கண்களும்! கார்த்திக் சித்ராவின் அருகில் அமர்ந்தான். அவள் நெற்றியில் முத்தமிட்டு, கண்ணீரைத் துடைத்து, கன்னங்களை இதமாய் வருடிக்கொடுக்க.... ஒலிநாடா வழியே M.L.வசந்தகுமாரி அவர்களின் இனிய குரல் தாலாட்டிக்கொண்டிருந்தது.

கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி…
உன்னைத் தழுவிடிலோ
கண்ணம்மா உன்மத்தமாகுதடி…

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி…
என் கண்ணில் பாவையன்றோ…
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ…

சின்னஞ்சிறு கிளியே…
கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…
என்னைக் கலி தீர்த்தே
உலகில் ஏற்றம் புரிய வந்தாய் (http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/manamagal/chinnanjiru-kiliye.php)…

(தொடரும்)

நாஞ்சில் த.க.ஜெய்
18-06-2011, 05:05 PM
அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்கதான் தீர்மானிக்கணும். இது உங்க தம்பி யோசிக்கவேண்டிய, முடிவெடுக்கவேண்டிய விஷயம்! சித்ரா...இப்ப உங்க சிந்தனையெல்லாம் உங்களைப் பத்தியும் உங்க பாப்பாவைப் பத்தியும்தான் இருக்கணும். தேவையில்லாம மனசைப்போட்டு அலட்டிக்காதீங்க.
மருத்துவர் கூறும் இந்த வரிகள் அருமையான அதேநேரத்தில் உண்மையான வரிகள் ....கதையின் சுவாரசியம் இன்னும் கூடுகிறது ...பெண்களின் கண்ணீர் எவ்வித வீரனையும் கோழை ஆக்கிவிடும் ..இந்த கார்த்திக் எம்மாத்திரம் ....

கீதம்
20-06-2011, 09:19 AM
மருத்துவர் கூறும் இந்த வரிகள் அருமையான அதேநேரத்தில் உண்மையான வரிகள் ....கதையின் சுவாரசியம் இன்னும் கூடுகிறது ...பெண்களின் கண்ணீர் எவ்வித வீரனையும் கோழை ஆக்கிவிடும் ..இந்த கார்த்திக் எம்மாத்திரம் ....

பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
20-06-2011, 09:24 AM
(20)

மனம் உற்சாகக் கும்மாளம் போட்டது. எட்டுவருடக் காத்திருப்புக்குப் பின் என் தேவதையின் மீள் தரிசனம்!

ஜாக்கி இப்போது எப்படி இருப்பாள்? என்னைக் கண்டதும் என்ன செய்வாள்? ஓடிவந்து கட்டிக்கொள்வாளா? கதறி அழுவாளா? மெளனமாய் கண்ணீர் சொரிந்து என் மார்பில் சாய்ந்துகொள்வாளா? என்னைப் பிரிந்து ஒரு வாரம் இருக்கமுடியவில்லையென்று தவித்துதானே அன்று மூர்க்கம் காட்டினாய், இப்போது எப்படியடா இத்தனை வருடங்களைக் கடத்தினாய் என்று கேட்டு கோபிப்பாளா?

என்ன ஆனாலும் சரி, இனி அவளைக் கைவிட்டுவிடக்கூடாது. கண்கலங்கவைக்கக் கூடாது. காலமெல்லாம் அவளைக் கண்ணுக்குள் வைத்துக் காதலித்துக்கொண்டே இருக்கவேண்டும். இத்தனை நாள் பிரிவே போதும், இனி ஒரு கணமும் அவளைப் பிரியாது, அவளை ஒரு இளவரசி போல் உள்ளங்கையில் வைத்துத் தாங்கவேண்டும். என் தேவதை எனக்குக் கிடைத்துவிட்டாள். வரம் கொடுக்க என்னைத்தேடி வந்துவிட்டாள்.

காதற்பிரவாகம் பொங்கிப் பேரலையாய் உருவெடுக்க, சுந்தரின் மனக்கப்பல் சந்தோஷச்சுமையோடு சாய்ந்தாடத் தொடங்கியது.

நெஞ்சோடு நினைவுச்சுமைகள்
நீங்காத உறவுச்சுமைகள்
என்னோடு பருவச்சுமைகள்
எல்லாமே அழகு சுமைகள்
கண்ணோடு கனவுச்சுமைகள்
கையோடு கனியின் சுமைகள்
ஒன்றல்ல அன்புச்சுமைகள்
ஒவ்வொன்றும் இன்பச்சுவைகள்!

ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
ஸிங் ஸிங் உனது பாடல் நான்
ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
ஷூர் ஷூர் உனது அமுதம் நான் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD2930'&lang=ta)…

***********************************************************************

கனவிலிருந்து இன்னும் விடுபட இயலவில்லை. விடுபடவும் விரும்பவில்லை. ஏன்? ஏன்? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

பசியில் வாடுபவனின் முன் சோற்றுத்தட்டை நீட்டி, அவன் ஆசையுடன் ஒரு கவளம் அள்ளி வாயிலிடுமுன் தட்டிவிட்டு ரசிப்பதுபோல்... விதி என்னைப் பார்த்து சிரிக்கிறது. ஏன்? ஏன் இப்படி நடக்கவேண்டும்?

ஜடமாய் வாழ்ந்திருந்தேன். திடீரென ஒருவன் உன் அப்பாவைப் பார்த்தேன் என்று தகவல் சொல்கிறான், வாழ்வை உயிர்ப்பிக்கும் ஆவலோடு ஓடிச்சென்று பார்த்தால்... அங்கே அவரைக் காணோம். சோர்ந்துபோன வேளையில் ஜாக்கியைப் பார்த்தேன் என்று இன்னொருவர் தகவல் சொல்கிறார்... மற்றொரு நம்பிக்கைக் கீற்றுத் தெரிகிறது. இங்கே வந்து பார்த்தால்.... அவளுக்குத் திருமணமாகிவிட்டது, நீ அவளை மறந்துவிடு என்று உபதேசிக்கிறார்.

ச்சே..... என்ன வாழ்க்கை இது? கானல் நீரோட்டம் போல்.... தாகத்துடன் நெருங்க நெருங்க விலகியோடிக்கொண்டே இருக்கிறது... ஜாக்கியைப் பார்க்கவேண்டும். ஒரு கேள்வி கேட்கவேண்டும். ஒரே ஒரு கேள்வி!

"ஜாக்கி, எப்படி உன்னால் என்னை மறக்கமுடிந்தது?"

அவளால் நிச்சயம் பதில் சொல்லமுடியாது. தவிப்பாள், கண்ணீர் வடிப்பாள், குற்ற உணர்வுடன் தலைகுனிந்து நிற்பாள். அவளை அப்படி நிற்கவைப்பதால் நான் என்ன சாதிக்கப்போகிறேன்? அப்படிக் குற்றவாளியாய் நிறுத்துவதே எனக்கு மனநிம்மதியைத் தந்துவிடுமா? அவள் மீது எனக்கு உண்மையான காதல் இல்லையா? என் காதல் உண்மையாய் இருந்தால் இப்படி அவளைத் துடிக்கவைக்கத் துணிவேனா?

கேள்விகள் ஆழ்மனத்தினின்று அம்புகள்போல் விடுபட்டு அவனைத் துளைத்தன.

வேண்டாம். என்னால் அவளுக்குக் குற்ற உணர்வு உண்டாகவேண்டாம். என் ஜாக்கியை நானே காயப்படுத்துவதா? என் தேவதையை நானே நோகடிப்பதா? மாட்டேன்.

இனி அவளிடம் ஒன்றும் கேட்கப்போவதில்லை. சந்தர்ப்பமோ... சூழ்நிலையோ... மனநிலையோ.... எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் ஜாக்கி நலமாக இருந்தால் அதுவே போதும். ஜாக்கி நீ என்னை மறந்து வாழ்கிறாயோ அல்லது என்னை மறக்க வாழ்கிறாயோ ... நீ வாழவேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது. உன்னை மறந்துவிடும்படி என்னைக் கோர யாருக்கும் உரிமை கிடையாது.

"யாருக்கும் உரிமை கிடையாது!" கடைசிவரிகளைத் தன்னையறியாமல் வாய்விட்டுச் சொன்னான்.

"என்ன சுந்தர்?" கார்த்திக்கின் கேள்வியால் நினைவுகளைக் கலைத்தான்.

"அத்தான், ஜாக்கிக்குக் கல்யாணமானதில் எனக்கு எந்த வருத்தமும் இல்ல. அவ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்! அவ வாழ்க்கையில் தலையிட நம்ம யாருக்கும் உரிமை கிடையாது."

சுந்தரின் குரலில் தெரிந்த உறுதியால் கார்த்திக்கின் கண்கள் பனித்தன.

"சுந்தர், நீ இவ்வளவு சீக்கிரம் யதார்த்தத்தைப் புரிஞ்சிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க அக்காதான் ரொம்ப டென்ஷனாயிட்டிருக்கா....”

"அக்காவைத் தனியாவா விட்டுட்டு வந்திருக்கீங்க?"

"ஊரில இருந்து உங்க அத்தையை வரவழைச்சிட்டேன், சுந்தர். அவங்களும் நிலைமையைப் புரிஞ்சிகிட்டு உடனே வந்திட்டாங்க... சித்ரா மாசமா இருக்கிறதை ஏன் முன்னாடியே தெரியப்படுத்தலன்னு ரொம்ப கோவிச்சுகிட்டாங்க. அவங்களைப் பார்க்கவும் சித்ராவுக்கும் தெம்பு வந்திட்டு... ஆனா... ஜாக்கியை நினைக்கும்போதெல்லாம் இரத்த அழுத்தம் எகிறிடுது. என் தம்பியை ஏமாத்திட்டா... என் தம்பியை ஏமாத்திட்டான்னு ஒரே புலம்பல்தான்! "

"நீங்க கவலப்படாதீங்க அத்தான். நான் அக்காகிட்டப் பேசுறேன்"

"அப்புறம் பேசலாம். நீ ரொம்பக் களைப்பா இருக்கே...வீட்டுக்குப் போய்க் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வா.... வரும்போது இந்த லிஸ்ட்ல இருக்கிற சாமானெல்லாம் வாங்கிட்டு வா... "

"சரி அத்தான்"

'அப்பாடா! எத்தனை எளிதாய் விஷயம் முடிந்துவிட்டது. இதற்காகவா சித்ரா இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தாள்? அவளை விடவும் சுந்தர் மிகத் தெளிவாக இருக்கிறான். உலகத்தைப் புரிந்துகொண்டுவிட்டான். சுந்தரின் பக்குவத்தை நினைக்கும்போது பெருமையாக இருந்தது. இந்த விஷயத்தைச் சித்ராவிடம் சொல்லி அவள் கவலையை உடனே குறைக்கவேண்டும். இனியாவது புலம்பாமல், ஜாக்கியை சபிக்காமல் வாய் ஓய்ந்திருப்பாள்.’

நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? கார்த்திக் எல்லாவற்றையும் சொன்ன நொடியில் சித்ரா குய்யோ முறையோவென்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டாள்.

"ஐயையோ.... என்ன காரியம் பண்ணியிருக்கீங்க? அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி தனியா வீட்டுக்கு அனுப்பியிருக்கீங்களே... உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.....? அவனை இந்த நேரத்தில தனியா அனுப்பலாமா? எதையாவது பண்ணிகிட்டானா என்ன பண்றது? கடவுளே... ஏங்க....உடனே போங்க.... முன்னாடி இப்படிதான் ஒருதடவை அவனை வீட்டுல தனியா விட்டு.... தூக்கு மாட்டிக்கப்போய்.... ஐயையோ... அத்தை..... நான் என்ன பண்ணுவேன்.... ஏங்க.... செய்யிறதையும் செஞ்சிட்டு இப்படி கல்லாட்டம் நிக்கிறீங்களே.... போய்ப் பாருங்க... தயவுசெஞ்சி என் தம்பியை என்கிட்டயிருந்து பிரிச்சிடாதீங்க...."

"சித்ரா..... ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் பண்றே? என்ன ஆச்சு உனக்கு? அவன் நல்லா இருக்கான். அவன் முன்ன மாதிரி இல்ல. தெளிவா இருக்கான். நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் நடக்காது, அம்மா.... நீங்க அவளுக்கு எடுத்துச் சொல்லுங்க...."

"சித்ரா..." அத்தை வாயைத்திறக்குமுன் சித்ரா ஆவேசமானாள்.

“அத்தே.... நீங்க சும்மா இருங்க... உங்களுக்குத் தெரியாது, நான் அவனை எப்படிப் பொத்திப் பொத்தி வச்சிருக்கேன்னு!" அத்தை கொஞ்சம் பயந்துதான் போனாள்.

"இப்ப நீங்க வீட்டுக்குப் போகப்போறீங்களா... இல்ல.... நானே கிளம்பிப் போகவா?"

கையிலிருக்கும் ஊசி மருத்துக்கான இணைப்பைப் பிடுங்கும் முயற்சியில் சித்ரா இறங்க... அவசரமாய் அவள் கையைப் பிடித்துத் தடுத்த கார்த்திக் குரலில் கடுமை காட்டினான்.

"சித்ரா, என்ன இது?"

சித்ராவின் ஆவேசம் எரிச்சலைத் தந்தாலும் உள்ளுக்குள் அவள் சொன்னது குறுகுறுப்பைத் தந்தது. ஒருவேளை, சுந்தர், தன்னிடம் நல்லபிள்ளை போல் நடித்துவிட்டு வீட்டுக்குப் போய் இவள் சொல்வது போல் ஏடாகூடமாக ஏதாவது செய்துகொண்டால்....? நானே அதற்குக் காரணமாகிவிடுவேனே.... ச்சே! அவனை வீட்டுக்கனுப்பாமல் நேராக மருத்துவமனைக்கே அழைத்துவந்திருக்கலாம்.

இரண்டு மூன்று நாட்களாய் அப்பாவைத் தேடி அலைந்து திரிந்து சோர்ந்து வந்திருக்கிறானே... வந்ததும் ஜாக்கியைப் பற்றிச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபோது சித்ரா வாயால் கேட்பதை விடவும் தானே அதைப் பக்குவமாய்ச் சொல்லிவிடுவதே உத்தமமென்று தோன்ற, சொல்லிவிட்டான், ஒன்றைத்தவிர! அது ஜாக்கியின் கணவன் ஒரு குடிகாரன் என்பது. ஜாக்கியைப் பற்றி அவனிடம் சொன்னது தவறோ என்று இப்போது மனம் தந்தியடிக்கத் தொடங்கியிருந்தது.

மாடியிலிருந்து இறங்கி வரவேற்பறை கடந்து வராந்தாவுக்குப் போகும்போது ரிஸப்ஷனிஸ்ட் பெண் அவனை அழைத்தாள்.

"மிஸ்டர் கார்த்திகேயன்…"

"எஸ்?"

" உங்க ப்ரதர் இன் லாவை எங்கே காணோம்? ஊர்ல இல்லையா? “

இதைக் கேட்கத்தானா அழைத்தாள்? அன்றே சித்ரா சொன்னாள். ரிஸப்ஷனில் இருக்கும் பெண் சுந்தரை விழுங்கிவிடுவது போல் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று. இன்று அவனைப் பற்றி தன்னிடமே விசாரிக்கிறாள். நல்ல துணிச்சல்தான். நான் இங்கே தலைபோகும் அவசரத்தில் இருக்கிறேன், இவளுக்கு நின்று நிதானமாக பதில் சொல்லிக்கொண்டிருக்கமுடியுமா?

"வருவார்!"

முறைப்புடன் ஒற்றையாய் சொல்லிவிட்டு விடுவிடுவென்று வாசலுக்குப் போகவும், சுந்தர் பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"என்னத்தான், எதுவும் வாங்கணுமா?"

பளிச்சென்று தன் முன்னால் வந்து நின்ற சுந்தரைப் பார்த்தபோது நிம்மதியாக இருந்தது.

"அப்பா... சுந்தர், என் வயித்தில் பாலை வார்த்தப்பா.... சீக்கிரம் போ..... உங்க அக்கா சாமியாடிகிட்டு இருக்கா...."

"ஏன் என்னச்சு?"

"நீயே போய்ப் பாரு..."

"நீங்க எங்க போறீங்க?"

"கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேம்பா.... "

சுந்தர் படியேறுகையில் ரிஸப்ஷனிஸ்ட் பார்த்துவிட்டு பரபரப்பாய்க் குரல் கொடுத்தாள்.

"சார்.... சார்.... மிஸ்டர்.... மிஸ்டர் சுந்தர்..."

அனிச்சையாய்த் திரும்பிப் பார்க்க….. கையில் ஒரு கவரை வைத்துக்கொண்டு அதை ஆட்டி ஆட்டி அந்தப் பெண் இவனை அழைத்தாள்.

"எஸ்?"

"சார், இதை ஜாக்கி சிஸ்டர் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க"

கொடுத்துவிட்டுக் கேட்டாள். "சார் உங்க பேருதானே சுந்தர், அஞ்சாம் நம்பர் பேஷண்ட் சித்ராவோட ப்ரதர்?"

"ஆமாம்"

கவரில் கவனத்தை ஓட்டியபடியே பதில் சொல்லிவிட்டு இரண்டடி நடந்தவன் எதையோ மறந்தவன் போல் திரும்பி, "தாங்க்ஸ்" எனவும் அவள் அழகாகப் புன்னகைத்து, "வெல்கம்" என்றாள்.

(தொடரும்)

பாரதி
20-06-2011, 11:13 AM
தொடர்ந்து படித்து வருகிறேன். நன்று. தொடருங்கள்.

அன்புரசிகன்
20-06-2011, 11:22 AM
உங்களின் யதார்த்தமான விவரணைகள் காட்சி அமைப்புக்கள் அசத்தலாக உள்ளன. அதிலும் இறுதியில் அந்த நன்றி சொல்லும் காட்சி..... அந்த கடிதத்தில் என்ன என அறியும் ஆவலில்.

தொடருங்கள்.

Nivas.T
20-06-2011, 03:55 PM
ஒருமுறை ஏமாற்றமென்றால் கடினம்தான் ஆனால் அதுவே தொடர்ந்தால் பழகிவிடும், எத்தனை பெரிய ஏமாற்றம் வந்தாலும் இயல்புநிலை தானாக இயங்கிவிடும். சுந்தருக்கும் அதே நிலைமைதான். ஜாக்கி அந்தக் கடிதத்தில் என்ன சொல்லிருக்கிறாள் என்று கொஞ்சம் சீக்கிரம் சொன்னால் நன்று :sprachlos020::sprachlos020:

நாஞ்சில் த.க.ஜெய்
20-06-2011, 04:50 PM
எதார்த்த உலகில் காலடி வைத்த சுந்தருக்கு என் வாழ்த்துகள் ..ஒரு தாயின் பதைபதைப்பு அந்த சகோதரியின் கண்களில் ..அந்த கடித்ததில் அப்படி என்ன தகவல் ? என் ஆவலை தூண்டுகிறது ....தொடருங்கள் கீதம் அவர்களே

Ravee
20-06-2011, 10:50 PM
இதுவரை வந்ததில் கடைசி மூன்று அத்தியாயங்கள் கதையின் போக்கை, இயல்பை, வேகத்தை இழந்து பூக்கள் செடியை விட்டு பறித்து கூடையில் எறிந்தது போல இருக்கிறது..... ஏதோ வலுக்கட்டாயமாக பறித்து போட்டது போல உணர்வு .... அக்கா தப்பாக நினைக்க வேண்டாம்...... உயிரோட்டம் இழந்து கதாபாத்திரங்கள் கதையின் நிழல்கள் ஆகிவிட்டார்கள் ........ டாக்டர் கீதம் மீண்டும் அவர்களுக்கு உயிரோட்டம் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

கீதம்
21-06-2011, 01:14 AM
தொடர்ந்து படித்து வருகிறேன். நன்று. தொடருங்கள்.

தொடர்வதற்கு நன்றி பாரதி அவர்களே.


உங்களின் யதார்த்தமான விவரணைகள் காட்சி அமைப்புக்கள் அசத்தலாக உள்ளன. அதிலும் இறுதியில் அந்த நன்றி சொல்லும் காட்சி..... அந்த கடிதத்தில் என்ன என அறியும் ஆவலில்.

தொடருங்கள்.

தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி அன்பு.


ஒருமுறை ஏமாற்றமென்றால் கடினம்தான் ஆனால் அதுவே தொடர்ந்தால் பழகிவிடும், எத்தனை பெரிய ஏமாற்றம் வந்தாலும் இயல்புநிலை தானாக இயங்கிவிடும். சுந்தருக்கும் அதே நிலைமைதான். ஜாக்கி அந்தக் கடிதத்தில் என்ன சொல்லிருக்கிறாள் என்று கொஞ்சம் சீக்கிரம் சொன்னால் நன்று :sprachlos020::sprachlos020:

நிறைய அனுபவம் போல இருக்கு. ஜார்ஜின் திரியிலும் சொல்லியிருக்கிறீர்கள். ம்..ம்..:D

தொடர்வதற்கு நன்றி நிவாஸ்.


எதார்த்த உலகில் காலடி வைத்த சுந்தருக்கு என் வாழ்த்துகள் ..ஒரு தாயின் பதைபதைப்பு அந்த சகோதரியின் கண்களில் ..அந்த கடித்ததில் அப்படி என்ன தகவல் ? என் ஆவலை தூண்டுகிறது ....தொடருங்கள் கீதம் அவர்களே

உங்கள் தொடர்பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
21-06-2011, 01:19 AM
இதுவரை வந்ததில் கடைசி மூன்று அத்தியாயங்கள் கதையின் போக்கை, இயல்பை, வேகத்தை இழந்து பூக்கள் செடியை விட்டு பறித்து கூடையில் எறிந்தது போல இருக்கிறது..... ஏதோ வலுக்கட்டாயமாக பறித்து போட்டது போல உணர்வு .... அக்கா தப்பாக நினைக்க வேண்டாம்...... உயிரோட்டம் இழந்து கதாபாத்திரங்கள் கதையின் நிழல்கள் ஆகிவிட்டார்கள் ........ டாக்டர் கீதம் மீண்டும் அவர்களுக்கு உயிரோட்டம் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி ரவி. மாறுபட்ட விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? நிச்சயம் தவறாக நினைக்கமாட்டேன்.

உங்கள் விமர்சனத்திற்கான என் விளக்கம்: உங்கள் எண்ணவோட்டம் ஓரளவு சரியே ரவி. இதுவரை சுந்தருடன் மட்டுமே பயணித்துவந்த கதை சற்றே அதன் போக்கிலிருந்து விலகி மற்றப் பாத்திரங்களின் பின்னும் செல்லத்துவங்கியுள்ளது. ஆறு இரு கரைகளுக்குள் மட்டுமே எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் கிடையாதே... சமயங்களில் அருவியாக வீழ்ந்தும் சமயங்களில் சிறு வாய்க்கால்களாகப் பிரிந்தும் ஓடக்கூடும் அல்லவா? முடிவில் கடலைச் சேர்வதில் மட்டுமே அதன் கவனம். இதுவும் முடிவை நோக்கியப் பயணத்தின் ஒரு பகுதியே.

கீதம்
21-06-2011, 09:07 AM
(21)

முதலில் அக்காவைப் பார்ப்பதா? ஜாக்கியின் கவரைப் பிரிப்பதா? இரண்டே நொடிகள் சிந்தித்து அக்காவைப் பார்க்கச் செல்லும் முடிவெடுத்துப் படிகளில் ஏறினான்.

"வா, சுந்தரு... உக்காரு..." அத்தை வரவேற்றாள்.

"அக்கா எங்கே?"

"நாளைக்கு ஆப்பரேசன் இருக்கில்ல...அதுக்கு ரெடி பண்ணனுமாம்...ஸ்கேன் பாக்கணுமாம்... இப்பத்தான் ஒரு சிஸ்டர் வந்து கூட்டிகிட்டுப் போச்சு...உன்னப் பத்திதான் அதுக்கு ஒரே கவல... இந்நேரமும் மாப்பிள்ளயோட தர்க்கம்தான்... "

அத்தை அவன் திருவண்ணாமலை சென்ற விவரம் கேட்டாள். பின் அப்பாவை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அத்தையின் பேச்சில் பழைய பாசம் தெரிந்தது.

அத்தை ஏதோ வாரப்பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருக்க... சுந்தர் தவிப்புடன் கையிலிருந்த கவரைப் பிரித்துப் படிக்கலானான்.

அழகான ஆங்கிலத்தில் அடித்தல் திருத்தலின்றி ஜாக்கியின் கையெழுத்து சற்றே இடப்புறம் சாய்ந்தபடி அவனைப் பார்த்துச் சிரித்தது.

சம்பிரதாயமான துவக்க விளிப்புகளற்றுத் தொடங்கப்பட்டிருந்த அதில்.....

என்னை மன்னித்துவிடு, சுந்தர். அன்று என் அப்பா அதிரடியாக முடிவெடுத்து மும்பைக்கு அழைத்துவந்துவிட்டார். உன்னிடம் சொல்லாமல் வந்தது தவறுதான். ஆனால் உன்னிடம் சொல்லிக்கொள்ளும் மனநிலையில் அன்று நானும் இல்லை.

உன்னை நேசித்ததைவிடவும் உன் குடும்பத்தை அதிகமாய் நேசித்தவள் நான். உன்னையும் என்னையும் இணையச் செய்ததும் உன் குடும்பம்தான். உன் அம்மா, அப்பா, அக்கா, நீ என்று ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் அன்பைப் பொழிந்துகொண்டிருந்தீர்கள். உங்களில் ஒருத்தியாய் வரத்துடித்தேன். ஆனால் என்னுடன் பழகத் தொடங்கியதும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் இடையில் விரிசல் உண்டாவதை உணர்ந்தேன். அதைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் என் வாயை அடைத்துவிடுவாய்... எப்படி என்பது உனக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

சுந்தர், உன் அம்மா மறைந்தது, சித்ரா கல்யாணம் நின்றுவிட்டது, உன் அப்பா காணாமல் போனது என்று எல்லா விஷயத்தையும் என் நண்பர்கள் மூலமாக அறிந்துகொண்டேன். என்னால் உனக்கு உண்டான இழப்புக்கு எதை நான் ஈடு செய்வேன்?

சுந்தர், உன்னை நான் நேசித்தது உண்மை. ஆனால்... இந்த துர்நிகழ்வுகளுக்குப் பின் உன்னால் என்னிடம் முன்போல் இயல்பாகப் பழகமுடியுமா என்னும் சந்தேகம் வந்துவிட்டது. மனம் ஒருநிலையில் இல்லை. உனக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கக் கூடும். என்னைப் பார்க்கும்போதெல்லாம் உன் அம்மாவின் மரணமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்து வாட்டலாம். உனக்கு அத்தகைய தர்மசங்கடமான நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.

சுந்தர், உன்மேல் நான் கொண்டிருந்த காதலின் மேல் சத்தியம் செய்து சொல்கிறேன், உன்னை எக்காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாது என்று கர்த்தரை வேண்டாத நாள் இல்லை. ஆனால் உன்னை மறக்கவும் முடியாமல்... உன்னைச் சந்திக்கவும் விரும்பாமல் நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும்.

அதனால் விட்டிருந்த படிப்பைத் தொடர்ந்தேன். செவிலியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். அது எனக்குப் பெருமளவு உதவியது. பயிற்சி முடிந்ததும் சிலநாள் மும்பையில் பணிபுரிந்தேன்.

சூசனும் லீயும் திருமணம் செய்துகொண்டு லண்டன் சென்றுவிட்டார்கள். ஒரு வருடத்தில் அம்மாவின் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது. ஒருநாள் தூக்கத்திலேயே இறந்துவிட்டார்.எப்போதும்போல் அம்மா தூங்குவதாகவே அனைவரும் நினைத்துவிட்டோம். அந்த அதிர்ச்சியில் நானிக்கு அடுத்த மாரடைப்பு வந்து அவரும் கர்த்தரிடம் போய்விட்டார்.

சூசனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் வளர்ப்பதற்கு அப்பா லண்டன் போய்விட்டார். சொல்லப்போனால் அவரை அனுப்பிவைத்ததே நான்தான். அம்மாவையும், பாட்டியையும் ஒரே சமயத்தில் பறிகொடுத்துவிட்டு அவர் படும் வேதனையை பேரக்குழந்தைகள் மூலம் குறைக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் வற்புறுத்தி அனுப்பினேன். என்னையும் அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். ஏனோ எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருந்தது. எல்லாத் துயரங்களையும் நோயாளிகளின் துயரம் துடைப்பதிலும், அதன்பின் அவர்களது முகத்தில் பூக்கும் புன்னகையிலும் மறந்தேன்.

ஆனால்... பணி நேரம் போக வீட்டுக்கு வந்தால்... வெறுமை...தனிமை... வேதனை! உன் நினைவுகள் என்னைக் கொல்லாமல் கொன்றன. அதிலிருந்து விடுபட... மனம் துடித்தது. அப்போதுதான் ஜோவைப் பார்த்தேன். ஜோசஃப்!

பைக் விபத்தால் கால் எலும்பு முறிந்து மருத்துவமனை நுழைந்தவன், என் பணிவிடையால் ஈர்க்கப்பட்டு எனக்கு வாழ்க்கைத் துணையாய் வரவிரும்பி சம்மதம் கேட்டான். அன்றிருந்த நிலையில் எனக்கு சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேவைப்பட்டது. இதைச் சொல்லும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது, சுந்தர். ஆனால் அது உண்மை. காதல் இல்லாமலேயே கல்யாணம் செய்துகொண்டேன். அப்பாவுக்கும் தெரிவிக்கவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னைத் தடுத்தது. மிகவும் எளியமுறையில் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அப்போது தெரியாது, சுந்தர், அவனால் என் தாய்மையை வாழவைக்க முடியாது என்னும் உண்மை.

எத்தனை எத்தனை ஆசைகள் வைத்திருந்தேன், உனக்குத் தெரியும் அல்லவா? காதல் கணவன், நிறைய குழந்தைகள்.... என் அம்மாவிடம் கிடைக்காத பாசத்தை நான் என் குழந்தைகளுக்கு ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டும்... அவை 'மம்மி...மம்மி..' என்று என்னைச் சுற்றிச் சுற்றி வரவேண்டும்... எதுவுமே நிறைவேறவில்லை. சுந்தர். அதனால் என்ன? ஒரு நல்ல மனைவியாகவும் ஒரு நல்ல தாயாகவும் வாழ்வதுதானே என் இலட்சியம். அதில் பாதியையாவது நிறைவேற்றுவோம் என்று நல்ல மனைவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

ஜோவின் தேவை பணம். அதற்காகத்தான் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவனுக்கு அளவுமீறியக் குடிப்பழக்கம் உண்டு என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன். நீ ஏன் இன்னும் அவனுடன் வாழ்கிறாய் என்று நீ கேட்கலாம். உன்னிடம் சொல்வதற்கென்ன? அவனோடு சேர்ந்து வாழ்வதன்மூலம் என்னை நானே தண்டித்துக்கொள்ளும் ஒரு குரூர திருப்தி எனக்குக் கிடைக்கிறது, சுந்தர்!

சரி, என் கதையை விடு. உன் கதைக்கு வருவோம். நீ என்னை மறக்கவில்லையென்று சித்ரா சொல்கிறாள். நேற்று அவளைச் சந்தித்துப் பேசினேன். என்னை என்னென்னவோ சொல்லித் திட்டுகிறாள். சித்ராவா என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை அமைதியாய்... சாதுவாய் இருப்பாள்! என்னிடம் சொல்வாயே... சித்ரா மாதிரி இருக்கவேண்டும் என்று! அந்த சித்ரா என்ன ஆனாள்? காலம் அவளையும் விட்டுவைக்கவில்லையா? என்னைப்போல் கல்நெஞ்சக்காரியாக மாற்றிவிட்டதா?

உனக்கு என்னால் நிம்மதி போய்விடும் என்று நினைத்து நான் ஒதுங்கியிருக்க... என்னால்தான் இன்றும் நீ நிம்மதி இழந்து தவிக்கிறாய் என்கிறாள். ஏன் சுந்தர்? கடந்துபோனவை என்றுமே திரும்பி வராது. நீயும் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு நிகழ்காலத்துக்கு வா...

எல்லாவற்றையும் உன் முகம்பார்த்துச் சொல்லவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் உன் முகம் பார்த்தால் நான் பலவீனமாகிவிடுவேன், சுந்தர்.

ஏன் இவ்வளவையும் என்னிடம் சொல்கிறாய் என்று கேட்கிறாயா? என் கதை முடிந்துபோன அத்தியாயம். நீ இனியும் என்னை நினைத்துக்கொண்டிருக்காதே என்று தெரிவிக்கத்தான். சித்ராவிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லத்தான் சென்றேன். அவளிருக்கும் நிலையில் எதையும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. ஜோவையும் பார்த்திருப்பாள் போலும். என் தம்பியை ஏமாற்றிவிட்டாயே என்கிறாள். ஒரு குடும்பம் சிதைந்துபோனதற்கு நானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்விலிருந்து என்னால் விடுபட இயலவில்லை. என்னை நீயாவது புரிந்துகொள் சுந்தர்.

சுந்தர், தயவுசெய்து என்னை மறந்துவிட்டு உன் வாழ்க்கையைப் பார், சித்ராவை எப்படியாவது சமாதானப்படுத்து.

சித்ராவின் குழந்தையை நான் தான் முதலில் தூக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பரவாயில்லை. அவளும் குழந்தையும் நலமாக இருக்கக் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.


அவ்வளவுதான்! முடித்துவிட்டாள். சம்பிரதாய முடிவுரையும் இல்லை. நான்கு பக்கத்துக்கு நீண்டிருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் வாசிக்க நினைத்தபோது எழுத்துகள் மங்கித் தெரிந்தன.

ஜாக்கியிடம் என்ன ஒரு முதிர்ச்சி! துருதுருவென்று துள்ளிக்கொண்டு வம்பு பிடிவாதம் என்று வளையவந்த பெண்ணுக்குள் இத்தனை மாற்றமா? ஆனால் என்னை மீண்டும் சந்திக்கவிரும்பாத அவள் பிரார்த்தனைக்கு கர்த்தர் ஏன் செவிசாய்க்கவில்லை?

ஜாக்கியின் கணவன் ஒரு குடிகாரன் என்பதும், தந்தையாகும் பாக்கியமற்றவன் என்பதும் தெரியவந்தபோது ஜாக்கியின் அர்த்தமற்ற வாழ்க்கையை எண்ணி மனம் அழுதது.

நல்லவேளை! ஜாக்கி கடிதம் எழுதினாள். கண்முன்னால் தோன்றி இத்தனையும் சொல்லியிருந்தால் கழிவிரக்கத்தால் உந்தப்பட்டு அவள் கணவனை உதறிவிட்டு என்னோடு வந்துவிடும்படி அவளைக் கட்டாயப்படுத்தியிருப்பேன். ஏன் இப்போது அப்படிச் செய்தால்தான் என்ன? ஜாக்கிக்கு அவன் மேல் காதல் இல்லை. அவனை உதறி வருவதில் என்ன தவறு? அவள் மகிழ்வாக இருக்கிறாள் என்று நினைத்துதானே அவளது வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை என்று உறுதி பூண்டேன். நரகத்தில் தவறி விழுந்துவிட்ட என் தேவதையை அங்கிருந்து மீட்க நினைப்பதில் என்ன தவறு?

கடிதத்தை எடுத்து மடித்து உறைக்குள் இட்டபோது சித்ரா அறைக்குள் வந்தாள். அவனைக் கண்டதும் ஆனந்தக்கண்ணீர் விட்டாள்.

நர்ஸ் அவளை படுக்கவைத்துவிட்டு, சொன்னாள்.

"நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க... நைட் லைட்டா சாப்பிடுங்க... காலையில் 4 மணிக்கு எழுந்து தயாரா இருங்க.... நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன். தைரியமா இருங்க...."

சித்ரா தலையசைத்தாள்.

நேற்று ஜாக்கி வந்துபோனதைப் பற்றி அக்காவிடம் கேட்கலாமா என்று யோசித்தவன், இப்போது வேண்டாம் என்று அந்த நினைவை ஒத்திப்போட்டான். இப்போது அக்காவின் பிரசவம்தான் முக்கியம். அதற்கு அவள் நல்ல மனநிலையில் இருக்கவேண்டும்.

மேசை மேலிருந்த ஒலிநாடாக்களைப் பார்வையிட்டான். அக்காவின் மனங்கவர்ந்த பாடகியான வாணி ஜெயராமின் பாடல்கள் இருந்த ஒலிநாடாவைப் பொருத்தி ஓடவிட்டான். மூடுபனியாய் மனதுக்குள் நிலவிய குழப்பம் கலையத் தொடங்கியது முதற்பாடலின் தயவால்!


ஆ..... ஆ..... ஆ.....
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்….

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ.....
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்….

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ.........
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்….

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ.........
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD1622'&lang=ta)….

(தொடரும்)

Nivas.T
21-06-2011, 12:26 PM
விதி வலியது என்று சொல்லத்தூண்டும் கதைக்கூறு, நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு ஒரு படத்தைக் கற்றுக்கொடுக்கும், நாம் தான் அதை கவனிக்க மறுக்கிறோம். பண்படுதல் என்பதன் பொருள் பலமுறை அடிபடுதல் என்றுகூட கொள்ளலாம். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பாடம், கையில் பிரம்புடன் காலம் காத்திருக்கும்.

ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்விக்கு இங்கு இடமேது?

ஆனால் நடப்பதெல்லாம் நன்மைக்கே

தொடருங்கள் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்

Ravee
22-06-2011, 08:52 AM
கதையின் கடைசி பாகத்தில் இணைந்துகொள்கிறேன் அக்கா ... :)

கீதம்
22-06-2011, 10:07 AM
விதி வலியது என்று சொல்லத்தூண்டும் கதைக்கூறு, நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு ஒரு படத்தைக் கற்றுக்கொடுக்கும், நாம் தான் அதை கவனிக்க மறுக்கிறோம். பண்படுதல் என்பதன் பொருள் பலமுறை அடிபடுதல் என்றுகூட கொள்ளலாம். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பாடம், கையில் பிரம்புடன் காலம் காத்திருக்கும்.

ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்விக்கு இங்கு இடமேது?

ஆனால் நடப்பதெல்லாம் நன்மைக்கே

தொடருங்கள் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்

பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.:icon_b:


கதையின் கடைசி பாகத்தில் இணைந்துகொள்கிறேன் அக்கா ... :)

இதுவரை தொடர்ந்ததற்கு நன்றி ரவி. :)

(கதை பிடிக்கவில்லை என்னும் கண்டனத்தை இப்படியும் சொல்லலாமோ? :icon_ush: )

கீதம்
22-06-2011, 10:14 AM
(22)

அழகிய ரோஜாப்பந்தைக் கொண்டு வந்து கையில் கொடுத்ததைப் போல் இருந்தது சுந்தருக்கு. அது உடலை முறுக்கி, மெலிதாய் வாயைக் கோணிக் கொண்டு ஒரு கொட்டாவி விட்டது. பின் அரைக்கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டது. பச்சிளம் சிசுவை முதலில் வாங்கப் பயந்து மறுத்தவனிடம் எப்படி ஏந்திப் பிடிக்கவேண்டும் என்று கற்றுத் தந்து வற்புறுத்திக் கொடுத்துவிட்டுக் கேட்டாள் அத்தை,

"உம்மருமவன் என்ன சொல்றான்?"

"ஆமா.... அவன் எப்பவும் தூங்கிகிட்டே இருக்கான்...என்ன சொல்லப் போறான்?"

"சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு எனக்கொரு பொண்ணு பெத்துக்குடு மாமான்னு சொல்லல?"

வழக்கமான கிராமத்துக் கிண்டல் பேச்சு. முன்பென்றால் சட்டென்று கோபமோ வருத்தமோ வெளிப்படும். இப்போது மனமெங்கும் ஜாக்கியின் நினைவு இருந்ததால் இனம் புரியாத பரவசமே உண்டானது.

சித்ரா மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாலும், அது அழும் வேளையில் மெலிதாய் சலித்துக்கொண்டாள். அடிக்கடி சோர்ந்துபோனாள். காரணமின்றி கார்த்திக்கிடம் கடுகடுத்தாள்.

டாக்டர் கார்த்திக்கைத் தனியே அழைத்துச் சொன்னார், "மிஸ்டர் கார்த்திகேயன், சித்ரா இப்போ நார்மலா இல்ல. அவங்க மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்காங்க. அதனால்..."

"டாக்டர், ஏதாவது பிரச்சனையா?"

"நோ... நோ... சில பெண்களுக்கு பிரசவகாலத்தில் இதுபோல் டிப்ரஷன் உண்டாவது உண்டு. கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு க்ராஜுவலா அதிகரிச்சிருக்கும். குழந்தை பிறந்த கொஞ்ச நேரத்துக்குள்ள அது கிடுகிடுன்னு குறைஞ்சு வழக்கமான அளவை அடைஞ்சுடும். இந்த ஹார்மோன் இம்பேலன்ஸ் டிப்ரஷனை உண்டாக்குது. ப்ளஸ் குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை, அழகு குறைஞ்சிடுமோன்னு பயம்...."

"அவ அப்படி நினைக்கிற டைப் இல்லை, டாக்டர்"

"அவங்களைச் சொல்லல. பொதுவான காரணங்களைச் சொல்றேன். அதனால் அவங்க மூடு ஸ்விங் ஆகிட்டே இருக்கும். மத்தவங்கதான் அனுசரிச்சு நடக்கணும். அதுக்காகத்தான் உங்களை கூப்பிட்டேன். சித்ராவோட ப்ரதர் விஷயமா அவங்க ஏற்கனவே ரொம்ப அப்செட் ஆனாங்க இல்லையா?"

"ஆமாம், டாக்டர்"

"அதனால்தான் சொல்றேன்... எச்சரிக்கையா இருங்க... சமயத்தில் குழந்தையிடம் கூட அவங்க கடுமையா நடந்துக்கலாம்."

"டாக்டர்..."

"பயப்படாதீங்க... போஸ்பாடம் டிப்ரஷனுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு. மாத்திரைகள் கொடுக்கறோம். நாளைக்கு சைக்காலஜிஸ்ட் வந்து பார்ப்பாங்க.சித்ராவைக் குணப்படுத்துற முயற்சியில் உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை. அதனால்...."

"புரியுது, டாக்டர். இனி அவளச் சங்கடப்படுத்துற மாதிரி எந்த டாபிக்கும் எடுக்கமாட்டேன்."

"தட்ஸ் குட்"

கார்த்திக் இத்தனையையும் சொன்னபிறகு அக்காவிடம் ஜாக்கியைத் திருமணம் செய்ய நினைப்பது குறித்துப் பேசுவது சரியா? சரியில்லை. இப்போதைக்கு இந்த விஷயம் தனக்குள்ளேயே இருக்கட்டும். ஜாக்கியை சந்தித்தபின் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம்.

ஜாக்கியை எப்படி சந்திப்பது? எப்படித் தொடர்பு கொள்வது? ஜாக்கி தன் நிலையைத் தெரிவித்துவிட்டாள். தான் எப்படி அவளிடம் என் நினைவை எடுத்துச் சொல்வது? இடையில் இருப்பவள் இந்த வரவேற்பாளினிதான். அவளிடம் ஜாக்கியின் தொலைபேசி எண்ணையோ... வீட்டு முகவரியையோ கேட்டால் என்ன?

கேன்டீனிலிருந்து வெந்நீர் வாங்கி வரச் சொல்லி அத்தை கையில் ஃப்ளாஸ்கைக் கொடுக்க... படியிறங்கும்போதே வரவேற்பறையில் அவள் இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே இறங்கினான். இரவுப் பணியிலிருப்பவள் தலைவாரி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டு, கிளம்புவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அவள் இன்னும் வரவில்லை. பகல் வேலை என்பதால் ஆறுமணிக்குதான் வருவாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது ஆறாக ஐந்துநிமிடங்கள் என்று காட்டியது. சாலையைக் கடந்து எதிர்புறமிருந்த கேன்டீனுக்குள் நுழையும்போது அவள் அரக்கப்பரக்க ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் செல்வது தெரிந்தது.

வெந்நீரைப் பெற்றுக்கொண்டு வந்தபோது அவள் ரெஜிஸ்டரில் என்னவோ மும்முரமாக எழுதிக்கொண்டிருக்க... இப்போது போய் நின்றால் காலையில் வந்ததும் வராததுமாக கழுத்தறுக்கிறானே என்று நினைத்துவிட்டால் என்னாவது என்ற பயத்துடன் சுந்தர் தயக்கமாய்ப் படியேற... அவள் அழைத்தாள்.

"குட்மார்னிங், சுந்தர் சார்.... என்ன சார், கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?”

"எ..என்ன?"

"என்னவா? உங்க சிஸ்டருக்கு பையன் பிறந்திருக்கான். எங்களுக்கெல்லாம் சாக்லேட் எங்கே? கார்த்திகேயன் சாரும் கண்டுக்க மாட்டேங்கறார். நீங்கதானே பையனோட தாய்மாமா.... நீங்க வாங்கித் தாங்க... தப்பில்ல.."

அவள் கிண்டலும் கேலியுமாய் சொல்ல பக்கத்திலிருந்த நர்ஸ் சிரித்தாள். நேற்றே எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித்தரவிருப்பதாக அத்தான் சொன்னாரே... இன்னுமா வாங்கவில்லை? அலுவலகத்தில் தொடர்விடுப்பு எடுக்க இயலாததால் சுந்தர் அவ்வப்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு தேவையானதை வாங்கித்தந்துவிட்டு சென்றுகொண்டிருந்தான். முன்பே தெரிந்திருந்தால் தானே வாங்கித் தந்திருக்கலாம். சரி, இப்போது என்ன, சாக்லேட்டுக்குப் பதில் ஸ்வீட் பாக்ஸே வாங்கித் தந்துவிடவேண்டியதுதான். அப்படியே ஜாக்கியின் முகவரியையும் வாங்கிவிடவேண்டும்.

"என்ன சார்... யோசிக்கிறீங்க?"

"ஸாரிங்க... நேத்தே வாங்கித்தரதா அத்தான் சொன்னார். மறந்திட்டார் போல... இன்னைக்கு வாங்கித் தரேன்.மொத்தம் எத்தனைப் பேரு?"

"ஏன் கணக்காதான் வாங்கித்தருவீங்களோ? ஹா….. ஹா….. சும்மா சொன்னேன் சார், ஸ்டாஃப், டாக்டர்ஸ், அட்டென்டர்ஸ் எல்லாரையும் சேத்தா... முப்பத்திரண்டு பேர் சார்.... எல்லாருக்கும் ஃபைவ் ஸ்டார்தான் வேணும். லாக்டோகிங் வாங்கிக் குடுத்து ஏமாத்திடாதீங்க"

அவள் பேச்சில் அதீத உரிமை பிரதிபலித்தது. சுந்தரைப் பார்க்கும் பார்வையில் கனிவு தென்பட்டது. ஜாக்கி தன்னைப் பற்றி இவளிடம் ஏதாவது சொல்லியிருப்பாளோ?

அன்று அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ஆனந்தபவன் சென்று இரண்டு கிலோ மில்க் ஸ்வீட் வாங்கிவந்து அவளிடம் கொடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் விநியோகிக்கச் சொல்ல.... விழி விரித்தாள்.

"சார், நான் விளையாட்டுக்கு சொன்னேன். நிஜமாவே வாங்கிட்டு வந்திட்டீங்களா?....வாவ்... சார்... யூ ஆர் க்ரேட்! தாங்க் யூ சார்!"

"இந்தாங்க நீங்க கேட்ட ஃபைவ் ஸ்டார்!"

"ஓ மை காட்! சார்... அசத்துறீங்க... தாங்க் யூ... தாங்க் யூ... "

சுந்தர் பக்கத்தில் ஒருவருமில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு கேட்டான்.

"நீங்க தவறா நினைக்கக் கூடாது... ஜாக்குலின் அட்ரஸ் கொஞ்சம் சொல்லமுடியுமா?"

"ஓ! இதுக்குதான் இந்த ஸ்பெஷல் ஃபைவ் ஸ்டாரா?" விஷமமாய்க் கண்ணடித்தாள். சுந்தர் அதிர்ந்தான். இப்படி அவள் கண்ணடித்தும் சிரித்தும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் தங்களைத் தவறாக நினைக்கக் கூடும் என்று பயந்தான்.

"எதுக்குக் கேக்கறீங்க?"

"சும்மாதான்... அவகிட்ட... அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"சாரி சார்! ஜாக்கி சிஸ்டர் அனுமதியில்லாம அதை நான் கொடுக்க முடியாதே..."

அத்தனை உற்சாகமும் வடிந்துவிட்டது. இவளென்ன முட்டுக்கட்டை போடுவது? வேறுவழிகளில் முயன்றால் முடியாதா என்ன?

"சார், நான் வேணும்னா அவங்ககிட்ட போன்ல பேசிப் பாக்கறேன். அவங்க சம்மதிச்சா அட்ரஸ் தரேன்."

இவனின் சோர்ந்த முகம் அவளை இரங்கவைத்தது போலும்.

"எப்போ பேசுவீங்க?"

"இப்ப டாக்டர் வர நேரம்! அப்புறமா பேசிச் சொல்றேன் சார்!"

"சரிங்க..."

அதுவரை இங்கென்ன செய்வது? அக்காவைப் பார்த்துவரலாம் என்று போனால்.... அறைக்கு வெளியில் அத்தை நின்றிருந்தாள்.

"என்ன அத்தை, போரடிச்சிடுச்சா?"

"டாக்டர் வந்திருக்காங்க...... என்னை வெளியில இருக்கச் சொன்னாங்க"

"அத்தான் எங்க?"

"புள்ளைக்கு ஏணை கட்டக் கயிறு, ஏணைத்துணி, ரப்பர் ஷீட்டு, மடக்கு கொசுவல.... எல்லாம் வாங்கணும்னு சொல்லி கடைக்குப் போயிருக்காரு.... நாளைக் கழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்..."

"நாளன்னிக்கா?"

"ஆங்.... இப்பெல்லாம் தையல் பிரிக்கிற வேலையே கெடையாதாமே... தானாவே சரியாயிடும்னு சொல்றாங்க..."

அத்தை மருத்துவ முன்னேற்றத்தை வியந்தபடி இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தரின் நினைவோ... அந்தப் பெண் இந்நேரம் ஜாக்கிக்கு போன் செய்திருப்பாளா? ஜாக்கி என்ன சொல்லியிருப்பாள்? என்பதையே நினைத்துக்கொண்டிருந்தது.

கீழே போகலாமா? அவள் என்ன நினைப்பாள்? திருமணமாகிவிட்ட பெண்ணைத் தொடர்புகொள்ள இவன் ஏன் இப்படித் துடிக்கிறான் என்று தவறாக நினைப்பாளோ? நினைத்தால் நினைக்கட்டும். அவளுக்கென்ன தெரியும் எங்கள் காதலைப் பற்றி! பொறுமையற்று மீண்டும் கீழே வந்தான்.

வரவேற்பறையில் ஆட்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அவளிடம் இப்போது பேச முடியாது. அவளும் வருவோர் போவோருக்கு தகவல்கள் தெரிவித்து, வரும் நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகள் பதிந்து, அவற்றைக் கணினியில் ஏற்றி, கண்ணும் கையும் வாயும் ஓயவே இல்லை.

சுந்தர் வரவேற்பறையில் ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அங்கிருந்த இந்தியா டுடேவை எடுத்து வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தான். இடைக்கிடை அவளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். அவளை நோட்டமிடுவதற்காகவே இவன் வந்து அமர்ந்திருப்பதுபோல் யாரும் நினைக்க நிறைய வாய்ப்புள்ளது என்று நினைத்தபோது பயமும் வந்தது.

ஒருமுறை நேருக்கு நேர் கண்கள் சந்தித்தபோது, இவனது நோக்கம் அறிந்து அவள், தொலைபேசியைக் காட்டி உதட்டைப் பிதுக்கி, லைன் கிடைக்கவில்லையென்று சாடை காட்டினாள். நேரம் கடக்க.. கடக்க... சுந்தர் பொறுமை இழந்தான். தன்னிடம் ஜாக்கியின் தொலைபேசி எண்ணையும் தரமறுக்கும் அந்தப் பெண்ணின் மேல் கோபம் வந்தது. வேலையில் நேர்மை கடைப்பிடிக்கிறாளாம்.

வேறு யாருடனும் அதிகம் பழகவில்லையென்பதால் இப்போதைக்கு இவளை விட்டால் வேறு வழியுமில்லை. ஜாக்கிக்கும் இவனுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை ஜாக்கியின் கடிதத்தின் மூலம் இவள் அறிந்திருக்கிறாள். அதனால் மேற்கொண்டு காய் நகர்த்துவது இவள் மூலமெனில் எளிது. பொறுமை காக்க வேண்டும்.

"என்ன சுந்தர், இங்க உக்கார்ந்திருக்கே... ஆபிஸ் போகல?"

திடீரென முன்னால் வந்து நின்ற அத்தானின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறினான். கார்த்திக் ஏதோ சந்தேகம் கொண்டு வரவேற்பாளினியைப் பார்க்க... அவள் ரெடிமேட் புன்னகையை உதிர்த்தாள்.

"சரி, வா.... ரூமுக்குப் போகலாம்"

"இல்ல... நீங்க போங்க...நான் அப்புறம் வரேன்"

"சுந்தர், இங்க உக்கார்ந்திருக்கிறதுக்கு.... மேல வந்து சித்ராகிட்ட அத்தைகிட்ட பேசிட்டு உக்காந்திருக்கலாமே...."

"என்னைத் தொந்தரவு பண்ணாம போறீங்களா? ப்ளீஸ்" சுந்தரின் குரலில் மெலிதாய்க் கோபம் எட்டிப்பார்த்தது.

"ஓஹோ... கதை அப்படிப் போகுதா?"

"எப்படி?" சுந்தர் கோபமும் எரிச்சலுமாய்க் கேட்டான். கார்த்திக் அதை அலட்சியப்படுத்திப் புன்னகைத்துச் சொன்னான்.

"ம்..ம்.. நடக்கட்டும்... நடக்கட்டும்" சொல்லிவிட்டு சென்றுவிட.... சுந்தருக்கு சற்றுத் தாமதமாகவே அதன் பொருள் விளங்கியது.

ச்சே! ஏன் இப்படி அவசரப்படுகிறார் இவர்?

சட்டென்று ஏதோ நினைவுக்கு வர.... 'கடவுளே... ' என்று பதற்றத்துடன் மாடியேறினான்.

எதைத் தடுக்க ஓடிவந்தானோ அது அவன் வருவதற்குள்ளாகவே நடந்துமுடிந்திருந்தது.

"அப்படியா? கேக்கவே சந்தோஷமா இருக்கு. அந்த நாசமாப் போனவளை மறந்து தொலைச்சானே.... அது போதும். இந்தப் பொண்ணு யாரு...என்னன்னு விசாரிங்க... பேரு உதயநாயகின்னு தெரியும். வேற விவரம் எதுவும் தெரியல."

அக்கா குதூகலத்துடன் அத்தானுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தாள். விட்டால் அடுத்த முகூர்த்தத்திலேயே சுந்தருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்துவிடுவது போல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"வா... வா.. சுந்தரு, உனக்கு நூறு ஆயுசு..." அத்தை சொன்னாள்.

"இப்படிக் கண்டவளையும் கட்டிகிட்டு நூறு வயசு வாழுறதுக்கு, பொட்டுனு போய்ச் சேர்ந்திடலாம்"

"பாவி... உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா? எப்ப நல்ல விஷயம் பேசுனாலும் குதர்க்கமா ஏதாவது பேசு" சித்ரா கடிந்தாள்.

"அக்கா... அத்தான், ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கங்க.... நான் ஜாக்கியைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் என் மனசாலயும் நினைக்க மாட்டேன். ஜாக்கியைக் கல்யாணம் பண்றது பத்திதான் இப்ப யோசிச்சுகிட்டு இருக்கேன்."

சித்ரா அதிர்ச்சியில் வாயடைத்திருக்க... கார்த்திக் சரமாரியாக கேள்விகள் கேட்டான்.

"என்னது? ஜாக்கியைக் கல்யாணம் பண்ணப் போறியா? அதுக்கு அவ ஒத்துகிட்டாளா? அப்போ அவ புருஷன்?"

"ஜாக்கிகிட்ட இதுபத்தி இன்னும் பேசல. பேசுறவிதத்தில் பேசினா ஒத்துப்பா..."

"நான் ஒத்துக்க மாட்டேன்" சித்ரா அழுத்தமாய்ச் சொன்னாள்.

"எனக்கு அதைப் பத்திக் கவலையில்ல" சுந்தரும் அழுத்தம் காட்டினான். சுந்தரின் அழுத்தமான பேச்சு அனைவரையுமே அதிரவைத்தது.

சித்ரா அரைநிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு முகம் திருப்பி அழ ஆரம்பித்துவிட்டாள். கார்த்திக் தவித்தான். மருத்துவர் சொன்ன அறிவுரையை மறந்து அவளிடம் இந்தப் பேச்சை எடுத்தது எத்தனைத் தவறு? ஆனால் இப்படி நடக்குமென்று யாருக்குத் தெரியும்?

காலையில் போகும்போது அந்தப் பெண்ணிடம் சுந்தர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததையும் வேலையெல்லாம் முடித்துத் திரும்பிவரும்போது அவளுக்கெதிரில் அமர்ந்து தவிப்பாய் அவளையே நோட்டமிட்டுக்கொண்டிருந்ததையும் வேறு என்னவென்று புரிந்துகொள்வது?

"சுந்தருங்கிறவருக்கு போன் வந்திருக்காம். கீழ கூப்புடுறாங்கோ.."

தகவல் சொல்லவந்த ஆயாம்மாவைத் தள்ளிக்கொண்டு படிகளில் பாய்ந்தான் சுந்தர்.

"போன்தானே வந்திருக்கு. இவரு என்னமோ பொதையலைக் கண்டமாதிரி இப்படி ஓடுறாரு?" அவள் நொடித்தாள்.

கீழே வந்தபோது அவள்... உதயநாயகி அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.

"போன் வந்திருக்குன்னு...." ரிஸீவரைக் காணாமல் இவன் தவித்தான்.

"ஸாரி, சார், உங்ககிட்ட போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எதுவும் தரவேண்டாம்னு சொல்லிட்டாங்க சார், அதுவுமில்லாம இனிமே அவங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு கண்டிப்பா சொன்னாங்க சார்"

தொல்லை தருகிறேனா? நானா? அடிப்பாவி! உன்னைக் காப்பாற்ற வந்த தேவதூதனை அலட்சியப்படுத்துகிறாயே... ஜாக்கி... என்னை நீ புரிந்துகொண்டது அவ்வளவுதானா? கண்ணில் அணை கட்ட சட்டென்று கைக்குட்டை எடுத்து முகத்து வேர்வையைத் துடைப்பதுபோல் துடைத்துக்கொண்டான்.

"சார்.."

"ம்?" வேறென்ன சொல்லியிருக்கிறாளோ?

"ஜாக்கி சிஸ்டரோட எக்ஸ் லவ்வரா சார்?"

அவமானத்தாலும் ஆற்றாமையாலும் அடிபட்டுக் கிடந்த மனம் அவளது இந்தக் கேள்வியால் அசுரத்தனம் கொண்டது. சூழலை மறந்து சுந்தர் அவளிடம் பாய்ந்தான்.

"என்னங்க அது எக்ஸ் லவ்வர்... ஒய் லவ்வர்னு? காதலில் என்னங்க முன்னாள் பின்னாள்னு இருக்கு? அவ காதல் உண்மையா இருந்தா.... என்னோட ஒரு வார்த்தைக்காவது மதிப்பு குடுத்திருப்பா... இப்படி முகத்தில அடிச்சமாதிரி பேசாதேன்னு சொல்லமாட்டா... அவகிட்ட சொல்லிடுங்க... நான் சாகுறவரைக்கும் அவளத்தான் நினைச்சுகிட்டிருப்பேன்னு.... எனக்கு இப்ப இருக்கிற ஜாக்கி தேவையில்ல... அந்த உலகம் தெரியாத அப்பாவி ஜாக்கி போதும். அன்னைக்கு அவகிட்ட நான் பார்த்த காதல் போதும். சொல்லிடுங்க... என்னை மறக்க சொல்லிடுங்க... ஆனா.... அவளை மறக்கச் சொல்லி யாரும் என்னைக் கட்டாயப்படுத்த முடியாது... அவளுக்கே அந்த உரிமை இல்லைன்னு சொல்லிடுங்க.... பேச விரும்பலையாமா? பேசாம இருப்பா.... என்னை நினைக்காம இருப்பாளா? நெஞ்சைத் தொட்டு சொல்லச் சொல்லுங்க.... என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சிட்டாளா? பரவாயில்ல... ஆனா... என்னைக்காவது ஒருநாள் என்னோட தவிப்பும் காதலும் அவளுக்குப் புரியும்...."

சுந்தர் வெறிபிடித்தவனைப் போல் கத்திக்கொண்டிருந்தான்.கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் கசமுசாவென்று பேசிக்கொண்டார்கள். உதயநாயகி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள். அவளிடம்தான் ஏதோ பிரச்சனையென்று மருத்துவமனை ஊழியர்கள் குழுமிவிட... தலைமைச்செவிலி சுதா சிஸ்டர் வந்து சத்தமிட்டாள்.

"ஹலோ.... என்ன? ஏன் இங்க வந்து கத்திக் கலாட்டா பண்ணிட்டிருக்கே? உன் வீட்டுப் பிரச்சனையையெல்லாம் உன் வீட்டோடு வச்சுக்கோ... இது ஹாஸ்பிடல். ஹாஸ்பிடல்ல எப்படி பிஹேவ் பண்ணணும்னு தெரியாதா? படிச்சவனாட்டம் இருக்கே... இப்படிக் கூச்சல் போட்டு எல்லாரையும் டிஸ்டர்ப் பண்றியே... முதல்ல வெளியே போப்பா..."

சுந்தர் அவமானத்தால் குறுகிப்போனான். யாரோ தகவல் சொல்லி… ஓடிவந்த கார்த்திக், சுந்தரை நிலைக்குக் கொண்டுவர முயல, கார்த்திக்கின் கைகளைத் தட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தவன், தன் கோபத்தையும் எரிச்சலையும் பைக்கிடம் காட்டிப் புறப்பட…. அழகாய்ப் புலர்ந்த அந்த நாளின் மகிழ்வெல்லாம் அவனது ஆக்ரோஷ வாய்வீச்சால் சின்னாபின்னமாகி அற்பாயுளில் கரைந்துபோனது.

love is torture
words can’t just express
love is gamble
with tears of pain in life’s distress
love makes your life a strain
where money’s there
to lose the game
love has this crazy name
of pain and sorrow
die down in shame (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGARR0033'&lang=ta)…

(தொடரும்)

மதி
22-06-2011, 11:06 AM
ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?

கீதம்
22-06-2011, 11:30 AM
ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?

:mini023: :aktion033: :icon_b: :D :smilie_abcfra: :icon_wink1: :)

Nivas.T
22-06-2011, 12:19 PM
கதை மிக அழகாக நகர்கிறது

காதலின் வலியை வார்த்தையில் உணர்த்துவது கடினம்

ஆனால் நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள்

தொடருங்கள்

பாருங்க நீண்ட நாளாக காணாமல் போன மதியை அழைத்து வந்து விட்டது உங்கள் கதை :D

Ravee
22-06-2011, 12:44 PM
ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?

என்ன மதி விரதம் முடிஞ்சதா ? எல்லாம் நல்ல சேதிதானே ? எப்ப பந்தி சாப்பாடு ? ............ :p

கீதம்
23-06-2011, 07:53 AM
ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?

நன்றி மதி.:)


கதை மிக அழகாக நகர்கிறது

காதலின் வலியை வார்த்தையில் உணர்த்துவது கடினம்

ஆனால் நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள்

தொடருங்கள்

பாருங்க நீண்ட நாளாக காணாமல் போன மதியை அழைத்து வந்து விட்டது உங்கள் கதை :D

நன்றி நிவாஸ்.:)

கீதம்
23-06-2011, 07:56 AM
(23)

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா…..

ஜாக்கியும் அமுதவிஷம்தான். என் மனக்கடலைக் கடைந்தெடுத்தால் கிடைக்கும் இனிய விஷம்! அவளே வதைக்கிறாள்; அவளே வலி மறக்கச் செய்கிறாள். அவளே மனம் சிதைக்கிறாள்; அவளே மறுசீரமைக்கிறாள்.

தன் வாழ்க்கை நாடகத்தில் ஜாக்கி என்னும் பாத்திரத்தின் காட்சி முற்றுப் பெற்றுவிட்டது. இனி அதற்கு வேலையில்லை என்றபோதும் ஏனோ அதை ஏற்றுக்கொள்ளும் மனம் இன்னும் வரவில்லை. காட்சிப் பிழையாயேனும் கண்முன் அவள் தோற்றம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஜாக்கியின் நினைவால் எழுவதும் விழுவதுமான உணர்வலைகளை வாழவைக்கும் இந்த உடலை வாழவைப்பதில் அக்கா வெற்றிபெற்றுவிடுகிறாள்.

அக்கா! ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் அமைதியாய் இருந்தாள். அமைதியாயிருக்கவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட்டாள்! அதிசயத்திலும் அதிசயமாய் வாழ்வதற்கான பிடிப்பு முற்றிலுமாய்க் கைநழுவிப் போய்விடாமல் அக்காவின் கையில் அன்புக் கயிறு அகப்பட்டுக்கிடக்கிறது. இதுவும் ஒரு வகையில் பாசக்கயிறுதான். அந்தப் பாசக்கயிற்றை எமன் வீசினால் மரணம். இந்தப் பாசக்கயிற்றை இவள் உருவினால் மரணம். என்ன விநோதம்! மூன்று பெண்களால் நிர்ணயிக்கப்பட்ட தன் வாழ்க்கைப் பாதையை நினைத்து வேதனையோடு சிரிப்பும் வந்தது.

அக்காவின் மனவருத்தம், அத்தானின் தர்ம சங்கடம், ஜாக்கியின் பிடிவாதம், புறக்கணிப்பு எல்லாவற்றிடமிருந்தும் தப்ப… ஓடி ஓடிக் கடைசியில் இந்தத் தீவுக்கண்டத்தினுள் தஞ்சம் புகுந்துவிட்டான். எந்தப் பொந்தினுள் நுழைந்தாலும் சில நினைவுகளிடமிருந்து தப்பவே இயலாது என்னும் நிதர்சனம் உணர்ந்துகொள்வதற்குள் வயது கூடிவிட்டது. இளமை கடந்துவிட்டது.

காலம்தான் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. ஆயிற்று ஒரு மாமாங்கம். அன்று இந்தக் கையிலேந்திய ரோஜாப்பந்து இன்று கால்பந்து விளையாடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. அதற்கு இரண்டு வருடம் பிந்திப்பிறந்த பூப்பந்தும் பூப்பந்து விளையாடுகிறதாம்.

நான் மட்டும் ஏன் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறேன்... வெகுதூரம் ஓடிவந்த களைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன். துவங்கிய இடத்திலிருந்து ஒரு அங்குலமும் நகர்ந்திருக்கவில்லையென்னும் உண்மை நெற்றிப்பொட்டில் சுடுகிறது. இப்படி நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தால் எப்போது என் இலக்கை அடைவது? இலக்கா? அது எங்கே இருக்கிறது? அதைத் தேடுவதுதானோ என் இலக்கு? விரக்தியில் நெஞ்சு விம்மியது.

ஏன் இத்தனைப் போராட்டம்? எக்கேடோ கெட்டுப் போ என்று அக்காவும் கைவிரித்துவிட்டால் எத்தனை நலமாயிருக்கும். ஒரு தேசாந்திரியைப் போல் ஊர் ஊராய் சஞ்சாரம் செய்துகொண்டு கிடைத்ததை உண்டுவிட்டு மீதமிருக்கும் நாட்களைக் கழித்துவிடலாம். அப்பாவும் இப்படி நினைத்துதான் போனாரோ? அப்பாவின் வாழ்வாதாரம் அம்மாவின் உயிர்மூச்சில் கலந்திருந்ததோ? அவள் மூச்சை விட்டதும் இவர் வாழ்வை விட்டாரோ?

அம்மாவை நினைத்ததும் சுந்தருக்கு உள்மனதில் ஏதோ நெருடியது. ஆம்! அப்பாவைப் பற்றியாவது எப்போதாவது நினைக்கிறேன். எப்படி அம்மாவை நினைக்க மறந்துபோனேன்? ரோஜாவாய் மணக்கும் ஜாக்கியின் நினைவை அணைக்கையில் முள்ளாய் அம்மாவின் நினைவு தைக்கவேண்டுமே! இல்லையே! ஏன்? ஜாக்கியை இழக்க அம்மாதான் காரணமென்று அடிமனதில் வஞ்சம் வைத்துவிட்டேனோ? ச்சீ! எத்தனைக் கேவலமான மைந்தன் நான்! கடமை தவறிய மகனாய்.... கண்ணியம் தவறிய காதலனாய்... பாசத்தைப் பிரதிபலிக்கத் தவறிய சகோதரனாய்....

தவறுகளின் அடிப்படையிலேயே என் வாழ்க்கை அமைந்துவிட்டதா? இதுவரை என்ன சாதித்தேன்? இனிமேல் என்ன சாதிக்கப்போகிறேன்?

சுயபரிசோதனை மிகக் கடினமாயிருந்தது. பதில் கிடைக்காத கேள்விகள்! உள்ளிருந்து எழும் கேள்விகளுக்கே விடை தெரியா நிலையில் வெளியிலிருந்து வீசப்படும் கேள்விக்கணைகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கடும்பயிற்சிக்குப் பின் அதுவும் கைவந்தது. அதுவரை மனம் துளைத்துக்கொண்டிருந்த வினா அம்புகளை லாவகமாகப் பிடித்து முறித்துப்போடும் கலையில் தேர்ச்சி பெற்றாயிற்று. இலவச இணைப்பாக… வினா எழுப்பிய மனங்களை முறிக்கும் கலையும் ஏகலைவனைப் போல் ஏகாந்தமாகவே கற்றுத் தேர்ந்தாயிற்று.

கொஞ்சம் கொஞ்சமாய் ஈரம் காணாமற்போய்.... இறுகிய களிமண் பாறையானது மனம். பந்தங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடத்தான் மனம் ஏங்குகிறது. என்றாலும் பாலையில் எப்போதாவது கருணை காட்டும் கார்முகில் போல் சமயங்களில் அக்காவின் கண்ணீர் இளக்கி விடுகிறது. அதன் காரணமாகவே நான்கைந்து வருடத்துக்கு ஒருமுறை அக்காவுக்கு தரிசனம் கொடுக்கும் இந்தியப் பயணம்!

எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. நண்பர்கள் ஆவலுடன் தத்தம் உறவுகளுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துச் சென்றுவிட்டனர். ஏதோ தாங்களே நேரில் போய்க் கொடுப்பதுபோல் அவர்களின் முகத்தில் தென்பட்ட பூரிப்பில் இவன் தன்னை மறந்துபோனான். கிரிதான் அருகிலிருந்து எல்லாவற்றையும் அழகாகப் பேக் செய்து முகவரியைப் பெரிய அளவில் பிரிண்ட் எடுத்து பெட்டிகளின் எல்லாப் பக்கமும் ஒட்டி எடை பார்த்து என்று மிகவும் உதவினான்.

கிரி பயணப்படுவதாயிருந்தால் தான் இத்தனை உதவிகள் செய்திருப்போமா என்று யோசித்தான். ம்கூம், வாய்ப்பே இல்லை. பெட்டியில் உடமைகளை அடுக்குவது அவனது தனிப்பட்ட விருப்பம். அதில் உதவ முன்வருவது அவனுடைய அந்தரங்கத்தில் நுழைவது போலிருக்கும் என்றெண்ணி அவன் தனியே போராடுவதை இவன் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பான் என்றே தோன்றியது.

இத்தனை வருடங்களாக அப்படித்தான் இருந்திருக்கிறான். உடனிருந்த நண்பர்களும் இவனை அப்படியே விட்டிருக்கிறார்கள். கிரி மட்டுமே இவன் எத்தனை விலக்கினாலும் மறுபடி வந்து ஒண்டிக்கொள்கிறான். சரியான பாசப் பறவை. பாசத்திற்காக ஏங்குபவன். அருமையான குடும்பத்தைப் பிரிந்து இங்கே தனிமையில் கிடந்து உழல்கிறான்.

"ஹூம், நீ இல்லாம இந்த ரெண்டு மாசமும் எப்படிப் போகும்னே தெரியலடா!"

கிரியின் பேச்சில் அவனுடைய வருத்தம் வெளிப்பட்டது. தனிமை மிகக்கொடுமையானது. என்னவேண்டுமானாலும் செய்யத் தூண்டும். நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள் என்று குடிப்பழக்கத்தை கற்றுக்கொள்ளாதே என்று சொல்லத் தோன்றியது. வழக்கமாய் எழும் எண்ணமொன்று அதன் தலையில் தட்டி, குடிப்பதும் குடிக்காததும் அவனவன் சொந்த விஷயம் என்றது. வாயை மூடிக்கொண்டான்.

விமானநிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரின் ஸ்டியரிங் கிரியின் வசம் இருந்தது. சுந்தர் அமைதியாக இருந்தான். அவனது முகத்தில் இருந்து அவனுடைய அகத்துள் ஓடுவது பரவசமா கலவரமா என்று இனம் பிரித்துப் பார்க்கமுடியவில்லை. அவன் அமைதியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அமைதியற்றுத் தவிக்கிறான் என்பது புரிந்தது.

கிரியின் அலையும் மனத்தை ஒருமுகப்படுத்த உதவும் பாடல்கள் சுந்தருக்கும் உதவும் என்ற நம்பிக்கையோடு சிடியைப் பொருத்திப் பாடவிட்டான்.

ஒரு குளிகை ஒருவனுக்கு மருந்தாகவும் வேறொருவனுக்கு விஷமாகவும் செயல்படுவதுபோல் ஒரு பாடல் இவனுக்கு இதத்தையும் அவனுக்கு வேதனையையும் தந்தது.

ஏ… அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு…
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு…
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ…

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGGVP0038'&lang=ta)…

கிரியிடம் விடைபெறும்போதும், சோதனை முடிந்து உள்ளேகி, விமானத்துடன் தன்னை இணைத்துக் கட்டும்போதும் அந்தப் பாடலே மனமுழுவதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப் பெண்ணே உன்னாலதான் வாழுறேன்….

அறிவிப்புகள் முடிந்து அந்தரத்தில் எழும்பியபோது.... வேரறுந்து நிற்பதுபோலத்தான் தோன்றியது. என்னுடைய கிளிப்பெண் எங்கே? இலவு காத்த இந்தக் கிளியை ஏன் துரத்தினாள் மனக்கூட்டைவிட்டு? விமானத்தின் வேகத்தை முந்திப் பறந்து சென்றது சுந்தரின் இறக்கை கட்டிய மனம் இருபது வருடத்துக்கு முந்தையக் கிளிப்பெண்ணைத் தேடிக்கொண்டு!

(தொடரும்)

Akila.R.D
23-06-2011, 08:13 AM
அக்கா,

நல்லா இருக்கீங்களா?...
இன்னிக்கு ஒரே நாள்ல எல்லா பாகத்தையும் படிச்சுட்டேன்...
நான் சரியான நேரத்துலதான் வந்துருக்கேன் போல...

கதை ரொம்ப வித்யாசமா இருக்கு...
இனிமே தினமும் வரேன்...

கீதம்
23-06-2011, 08:22 AM
அக்கா,

நல்லா இருக்கீங்களா?...
இன்னிக்கு ஒரே நாள்ல எல்லா பாகத்தையும் படிச்சுட்டேன்...
நான் சரியான நேரத்துலதான் வந்துருக்கேன் போல...

கதை ரொம்ப வித்யாசமா இருக்கு...
இனிமே தினமும் வரேன்...

அகிலா, நான் நல்லா இருக்கேன். உங்களை மறுபடியும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து வாங்க. :)

மதி
23-06-2011, 09:36 AM
இப்போ சொல்லுங்க கிரிக்கு ஒரு நாற்பது வயதிருக்குமா? இந்தப்பாகம் அதிகமான சம்பவங்கள் இல்லாமல் மனம் அசைபோடும் விஷயங்களாகவே இருந்தது தொய்வு ஏற்படுத்தியது போலிருந்தது..

பார்க்கலாம். இந்தமுறை அவனுடைய பயணத்திலியாவது நல்லது நடக்கட்டும்..!

Nivas.T
23-06-2011, 09:51 AM
வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கும் மனப்போராட்டங்களின் எழுத்துவடிவம் மிக அருமை.

நன்மைகள் மட்டுமே நடக்கும் வாழ்க்கை என்றும் ருசிப்பதில்லை, வலிகள் கொடுக்கும் வாழ்க்கை என்றும் வெறுப்பதில்லை

தொடருங்கள்

அன்புரசிகன்
24-06-2011, 04:03 AM
யதார்த்தமான நகர்வு. இயலாமையால் வாடும் ஒருவனின் உணர்வுகளை நன்றாக காட்டுகிறீர்கள். தொடருங்கள். முக்கியமான கட்டத்துக்கு கதை வந்துவிட்டது போல் உள்ளது.
வாழ்த்துக்கள்.

அக்னி
24-06-2011, 08:20 AM
16வது பாகம் திடீரென நிகழ்காலம் வந்தாலும், ஒரு திரைப்படத்தைப் போலவே தெளிவாக விரிகின்றது.


சுந்தர் அப்போதே இந்தியா வந்துவிட்டதாக அல்லவா நினைத்துவிட்டேன்.
அதன் பின் நடக்கும் பாகங்கள் அனைத்தும் நிகழ்காலத்தில் நிகழ்வதாக நினைத்துத் தொடர்ந்தேன்.

இப்போதிருக்கும் இறுதிப் பாகத்திற்தான் சுந்தர் விமானம் ஏறவே போகின்றாரா...
சிறிதாய் ஏற்பட்ட குழப்பம் எனக்கு மட்டும்தான் என நினைக்கின்றேன்.

அதை விடுத்து,

மன உணர்வுகளின் போராட்டம், பிரவாகம் என்பன மிக நுணுக்கமாகக் கதைக்குள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தனியாய்ச் செதுக்கப்பட்ட தெளிவு.

இந்தப் பயணத்தில் சுந்தர் ஜாக்கியுடன் சேருவானா... இல்லை சேருவாரா... (வயதுக்கு மரியாதை :redface:)

அதீத குடிப்பழக்கத்தையும், தாயாக்க இயலாத குறையையும் ஜோசப்புக்கு அப்போதே வைத்துவிட்டதால், ஜோசப்பை அடக்கம் செய்து, கைம்பெண் ஜாக்கியை மீண்டும் மணப்பெண் ஆக்கலாமோ... பார்க்கலாம்...
எனது எதிர்பார்ப்புப் போலவே ஜாக்கி மீண்டும் கதைக்குள் வர உதவிய ஜோசப்புக்கு நன்றி...

தொடருங்கள் அக்கா...

கீதம்
24-06-2011, 08:31 AM
இப்போ சொல்லுங்க கிரிக்கு ஒரு நாற்பது வயதிருக்குமா? இந்தப்பாகம் அதிகமான சம்பவங்கள் இல்லாமல் மனம் அசைபோடும் விஷயங்களாகவே இருந்தது தொய்வு ஏற்படுத்தியது போலிருந்தது..

பார்க்கலாம். இந்தமுறை அவனுடைய பயணத்திலியாவது நல்லது நடக்கட்டும்..!

பின்னூட்டத்துக்கு நன்றி மதி.


வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கும் மனப்போராட்டங்களின் எழுத்துவடிவம் மிக அருமை.

நன்மைகள் மட்டுமே நடக்கும் வாழ்க்கை என்றும் ருசிப்பதில்லை, வலிகள் கொடுக்கும் வாழ்க்கை என்றும் வெறுப்பதில்லை

தொடருங்கள்

தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி நிவாஸ்.


யதார்த்தமான நகர்வு. இயலாமையால் வாடும் ஒருவனின் உணர்வுகளை நன்றாக காட்டுகிறீர்கள். தொடருங்கள். முக்கியமான கட்டத்துக்கு கதை வந்துவிட்டது போல் உள்ளது.
வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி அன்பு.

கீதம்
24-06-2011, 08:39 AM
சுந்தர் அப்போதே இந்தியா வந்துவிட்டதாக அல்லவா நினைத்துவிட்டேன்.
அதன் பின் நடக்கும் பாகங்கள் அனைத்தும் நிகழ்காலத்தில் நிகழ்வதாக நினைத்துத் தொடர்ந்தேன்.

இப்போதிருக்கும் இறுதிப் பாகத்திற்தான் சுந்தர் விமானம் ஏறவே போகின்றாரா...
சிறிதாய் ஏற்பட்ட குழப்பம் எனக்கு மட்டும்தான் என நினைக்கின்றேன்.

அதை விடுத்து,

மன உணர்வுகளின் போராட்டம், பிரவாகம் என்பன மிக நுணுக்கமாகக் கதைக்குள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தனியாய்ச் செதுக்கப்பட்ட தெளிவு.

இந்தப் பயணத்தில் சுந்தர் ஜாக்கியுடன் சேருவானா... இல்லை சேருவாரா... (வயதுக்கு மரியாதை :redface:)

அதீத குடிப்பழக்கத்தையும், தாயாக்க இயலாத குறையையும் ஜோசப்புக்கு அப்போதே வைத்துவிட்டதால்,
கைம்பெண் ஜாக்கி மணப்பெண் ஆகலாமோ... பார்க்கலாம்...
எனது எதிர்பார்ப்புப் போலவே ஜாக்கி மீண்டும் கதைக்குள் வர உதவிய ஜோசப்புக்கு நன்றி...

தொடருங்கள் அக்கா...

உங்களை நிறையவே குழப்பிவிட்டேன் போலும். :frown:

வயதை ஆங்காங்கே குறிப்பிட்டதால் அதன் அடிப்படையில் காலத்தைக் கணக்கெடுத்துக்கொள்வீர்கள் என்று நினைத்துவிட்டேன். கதையோட்டத்தில் அது கவனத்துக்கு வராது என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்.

கிரியிடம் பழைய நினைவுகளைச் சொன்னபின்பு சுந்தரின் மனம் சொல்லாமல் விட்டதை அசைபோடுவதாக 16 ஆம் அத்தியாயத்தின் இறுதியில் முடித்திருந்தேன் அல்லவா? அந்த அசைபோடும் நிகழ்வுகளைதான் அடுத்த அத்தியாயத்தில் ஆரம்பித்துவிட்டேன். அதனால் படிப்பவர்களுக்குத் தடுமாற்றம் எழுந்திருக்கும் என்பதை நீங்கள் சொன்னபிறகே உணர்கிறேன்.

இன்னும் நிறைய பயிற்சி வேண்டும். அதற்கு மன்ற நண்பர்கள் மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இன்னும் பல முயற்சிகள் தொடரும். :)

தடுமாறிய இடத்தைச் சுட்டி தெளிவுபடுத்தியதற்கு நன்றி அக்னி.

Ravee
24-06-2011, 08:42 AM
(23)

அக்கா! ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் அமைதியாய் இருந்தாள். அமைதியாயிருக்கவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட்டாள்! அதிசயத்திலும் அதிசயமாய் வாழ்வதற்கான பிடிப்பு முற்றிலுமாய்க் கைநழுவிப் போய்விடாமல் அக்காவின் கையில் அன்புக் கயிறு அகப்பட்டுக்கிடக்கிறது. இதுவும் ஒரு வகையில் பாசக்கயிறுதான். அந்தப் பாசக்கயிற்றை எமன் வீசினால் மரணம். இந்தப் பாசக்கயிற்றை இவள் உருவினால் மரணம். என்ன விநோதம்!


பிடிவாதம், புறக்கணிப்பு எல்லாவற்றிடமிருந்தும் தப்ப… ஓடி ஓடிக் கடைசியில் இந்தத் தீவுக்கண்டத்தினுள் தஞ்சம் புகுந்துவிட்டான். எந்தப் பொந்தினுள் நுழைந்தாலும் சில நினைவுகளிடமிருந்து தப்பவே இயலாது என்னும் நிதர்சனம் உணர்ந்துகொள்வதற்குள் வயது கூடிவிட்டது. இளமை கடந்துவிட்டது.


நான் மட்டும் ஏன் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறேன்... வெகுதூரம் ஓடிவந்த களைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன். துவங்கிய இடத்திலிருந்து ஒரு அங்குலமும் நகர்ந்திருக்கவில்லையென்னும் உண்மை நெற்றிப்பொட்டில் சுடுகிறது. இப்படி நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தால் எப்போது என் இலக்கை அடைவது? இலக்கா? அது எங்கே இருக்கிறது? அதைத் தேடுவதுதானோ என் இலக்கு? விரக்தியில் நெஞ்சு விம்மியது.

ஏன் இத்தனைப் போராட்டம்? எக்கேடோ கெட்டுப் போ என்று அக்காவும் கைவிரித்துவிட்டால் எத்தனை நலமாயிருக்கும். ஒரு தேசாந்திரியைப் போல் ஊர் ஊராய் சஞ்சாரம் செய்துகொண்டு கிடைத்ததை உண்டுவிட்டு மீதமிருக்கும் நாட்களைக் கழித்துவிடலாம். அப்பாவும் இப்படி நினைத்துதான் போனாரோ? அப்பாவின் வாழ்வாதாரம் அம்மாவின் உயிர்மூச்சில் கலந்திருந்ததோ? அவள் மூச்சை விட்டதும் இவர் வாழ்வை விட்டாரோ?


தவறுகளின் அடிப்படையிலேயே என் வாழ்க்கை அமைந்துவிட்டதா? இதுவரை என்ன சாதித்தேன்? இனிமேல் என்ன சாதிக்கப்போகிறேன்?

சுயபரிசோதனை மிகக் கடினமாயிருந்தது. பதில் கிடைக்காத கேள்விகள்! உள்ளிருந்து எழும் கேள்விகளுக்கே விடை தெரியா நிலையில் வெளியிலிருந்து வீசப்படும் கேள்விக்கணைகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கடும்பயிற்சிக்குப் பின் அதுவும் கைவந்தது. அதுவரை மனம் துளைத்துக்கொண்டிருந்த வினா அம்புகளை லாவகமாகப் பிடித்து முறித்துப்போடும் கலையில் தேர்ச்சி பெற்றாயிற்று. இலவச இணைப்பாக… வினா எழுப்பிய மனங்களை முறிக்கும் கலையும் ஏகலைவனைப் போல் ஏகாந்தமாகவே கற்றுத் தேர்ந்தாயிற்று.



நீங்கள் குடி இருக்கும் அந்த பக்கத்து வீட்டு முகவரி வேணுமே அக்கா .... ரேஸில் மீண்டும் சரியான கோட்டுக்குள் வந்த தெளிவான நடை ... அனுபவப்பட்டால் மட்டுமே சொல்லக்கூடிய அருமையான எண்ண ஓட்டங்கள் .... அந்த பாசக்கயிறு மேட்டர் ........... எத்தனை நிஜம் தெரியுமா .... !!!

கீதம்
24-06-2011, 08:42 AM
(24)

என்னதான் வீராப்பாய் தாய்நாடாவது, தந்தை நாடாவது? என்று வசனம் பேசினாலும், சென்னையின் மண்ணை மிதித்தவுடன் உடல் சிலிர்க்கத்தான் செய்தது. இவனை வரவேற்பதற்காகவே காத்திருந்தது போல் வானம் பன்னீர் தூவத்தொடங்கியது. மண்வாசனையை ஆழமாய் இழுத்து உள்ளுக்குள் அனுப்ப.... அது இதமாய் இதயம் வருடியது.

உறவு வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்டால் அதுவும் ஒரு சுகமான அவஸ்தைதான். சித்ரா வழக்கம்போல் ஆனந்தக்கண்ணீரால் அபிஷேகம் செய்து வரவேற்றாள். அவனை அங்கிங்கு நகரவிடாமல் நிறையக் கேள்விகள் கேட்டாள். ஒரு சுற்றுப் பெருத்து வந்திருப்பவனைப் பார்த்து 'ஏண்டா இப்படி இளைச்சுப் போய்க் கிடக்கே?' என்றாள்.

கார்த்திக் பார்த்ததுமே இவன் கைகளை ஆறுதலோடு பற்றியன், பற்றியவன்தான். பேசும்போதும் விடவேயில்லை. கார்த்திக்கின் முன்னெற்றியில் படர்ந்திருந்த முடிகளைக் கொத்தாய்க் களையெடுத்திருந்தது காலம். ஆமாம், தனக்கே நெற்றியின் பரப்பளவு கூடிக்கொண்டே போகிறது. அவருக்கு கூடாதா என்று நினைத்துக்கொண்டான்.

மாமா... மாமா... என்று வினீத்தும் வந்தனாவும் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தனர். நேரில் பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்தபோதும் இன்னும் மறக்காமல் இருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

புதிய வரவாக ரோஷன். பயங்கர ரோஷக்காரனாகவும் இருந்தான். சுந்தரைப் பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தான்.

"அவன் ஒண்ணும் பண்ணமாட்டான், மாமா.... டேய் ரோஷன்.. நீ உன் ப்ளேஸ்க்குப் போடா...."

பெரியமனுஷியின் தொணியில் வந்தனா சொல்லவும், 'இரு, உன்னை அப்புறம் பாத்துக்கறேன்' என்பதுபோல் சுந்தரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தன் இடத்துக்குப் போய்ப் படுத்துக்கொண்டான்.

"மாமா.... இவனுக்கு ஏன் ரோஷன்னு பேர் வச்சோம் சொல்லுங்க?" வந்தனா சிரித்தபடிக் கேட்ட போது, சித்தார்த் பாசுவின் க்விஸ் நிகழ்ச்சியில் வரும் வந்தனா மோகனை நினைவுபடுத்தினாள்.

"தெரியலையே...."

"ஹ்ரிதிக் ரோஷனை எங்க ரெண்டுபேருக்கும் ரொம்பப் பிடிக்குமா? நாங்க க்ரிஷ் பாத்துட்டு வரும்போதுதான் அப்பா பெட் ஷாப்புக்கு அழைச்சிட்டுப் போய் வாங்கித் தந்தார். அதனால நாங்க இவன்க்கு ஹ்ரிதிக் ரோஷன்னு வச்சோம். பேர் ரொம்பப் பெரிசா இருக்குன்னு வினீத்தண்ணாதான் ரோஷன்னு வச்சிட்டான்."

நீட்டி முழக்கி அவள் சொல்லிமுடிக்கும்போது சித்ரா குரல் கொடுத்தாள்.

"அந்தக் கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். மாமாவுக்கு ரொம்பக் களைப்பா இருக்கும். தொணதொணக்காம இரு."

"மாமா.... நீங்க டயர்டா இருக்கீங்களா?"

"இல்லடா... நீ சொல்லு.."

அடுத்தக் கதைக்காக அவள் வாயைத்திறக்குமுன் வினீத் இடைபுகுந்தான்.

"மாமா... இந்த வீடியோ கேமை எப்படி விளையாடுறதுன்னு சொல்லிக்கொடுங்களேன்" கையில் கொடுத்ததிலிருந்து தனியே போராடிக் களைத்துக் கடைசியாக சுந்தரிடம் வந்தான் வினீத்.

"எனக்கும் தெரியலயே" வாங்கிப் பார்த்துவிட்டு சுந்தர் சொல்ல...

"என்ன மாமா... உங்களுக்கே தெரியலங்கறீங்க? நீங்கதானே வாங்கிட்டு வந்தீங்க?"

"எனக்கு எப்படிடா தெரியும்? நாங்கெல்லாம் உங்கள மாதிரி இருக்கும்போது டிவியே கெடையாது... இப்ப என்னென்னவோ வந்திடுச்சு... எனக்கு ஒண்ணும் தெரியல.."

"ப்ச்! போங்க மாமா... நான் நாளைக்கு என் ஃப்ரெண்ட் அஷோக்கிட்ட கேட்டுப் பாக்கறேன். அவங்க அப்பாவும் ஃபாரின்ல இருக்கிறதால் அவனும் இது மாதிரி நிறைய வச்சி விளையாடுவான்."

விளையாட்டுப் பொருட்களைக் கண்டதும் பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாய்த் தெரிந்தது.

என்னதான் அக்காவும் அத்தானும் இவனை விழுந்து விழுந்து உபசரித்தாலும் ஏதோ ஒன்று.... அங்கு இயல்பாயில்லை என்பதை உணர்ந்தான். என்ன அது? ம்...? யோசித்துக்கொண்டிருந்தபோது, அக்கா வந்தனாவை அழைத்தாள்.

"அம்மு.... அப்பாவை மோட்டர் போடச்சொல்லு... பைப்பில தண்ணி வரல..."

சட்டென்று விளங்கியது. கண்ணெதிரில் இருக்கும் கணவனிடம் சொல்வதற்கு கூடத்தில் இருக்கும் மகளைக் கூப்பிட்டுச் சொல்கிறாள்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் அவ்வப்போது எழும் ஊடல் நினைவுக்கு வந்தது. எல்லா வீடுகளிலும் இப்படித்தானா? தனக்கு தாம்பத்யத்தின் நுணுக்கங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை என்னும்போது அதைப் பற்றிச் சிந்தித்து ஆவதென்ன?

'என்னக்கா... அத்தானோட 'டூ'வா?'

கேட்கத் துடித்தது. பழைய சுந்தராயிருந்தால் கேட்டிருப்பான். இப்போதுதான் பேச்சைக் குறைத்துவிட்டானே... அதனாலோ என்னவோ இப்போது பேச நினைத்தாலும் பேச்சு வரமறுக்கிறது. அமைதியாய் இருந்தான். அது அவர்கள் பிரச்சனை!


******************

சந்தடி அடங்கிவிட்டது. இரண்டு நாளாய் விடுமுறை என்பதால் கார்த்திக்கும் பிள்ளைகளும் வீட்டிலிருந்ததால் சித்ராவுக்கு சுந்தருடன் பேசும் தனிமை வாய்க்கவில்லை. மேலும் நேரவித்தியாசத்தால் தூக்கமும் சாப்பாடும் முறையாக அமையாமல் போயிற்று.

"ஸ்ஸ்ஸ்....அப்பாடா..." வேலையெல்லாம் முடித்துவிட்டு சித்ரா வந்து சோபாவில் சாய்ந்தபோதுதான் கவனித்தான். இடது கையில் மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் ஒரு ரூபாய் நாணயமளவுக்கு சுட்டக் கொப்புளம். பதறியபடியே கேட்டான்.

"என்னக்கா கையில?"

"இதுவா? போனவாரம் பூரி போடும்போது எண்ணெ தெளிச்சிடுச்சு."

"தண்ணியில காட்டினியா?"

"ப்ச்!" இல்லையென்பது போல் உதடு சுழித்தாள்.

"அதான் கொப்புளிச்சிடுச்சி. கவனமா செய்யக்கூடாதாக்கா?"

"ஆமா... போ... அப்படி உடம்பைப் பாத்து என்னாவப்போவுது!" அக்காவின் பேச்சில் அலட்சியம்.

"என்னக்கா இவ்வளவு அலட்சியமா இருக்கே... மருந்தாவது போடுறியா இல்லையா?"

"விடுறா... அது தானா ஆறிடும். இதை விடவும் பெரிய காயத்தையே மனசு தாங்கிகிட்டிருக்கு... இதென்ன காயம்?"

அக்காவின் கைக்காயத்தைப் பார்த்துத் துடித்த மனம், மனக்காயம் பற்றிக் கேட்கத் துணியவில்லை. கேட்டால் என்ன பதில் கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். உன் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிக்கிறியே என்று சொல்லி அழுது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிப்பாள். இல்லையென்றால் நீ இப்படி பிரம்மச்சாரியாவே இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா நானும் கல்யாணம் பண்ணிக்காமல் இருந்திருப்பேன் என்று குற்ற உணர்வில் குமுறுவாள். அதுவும் இல்லையெனில் அங்கொரு பெண் பார்த்து வச்சிருக்கேன், இங்கொரு பெண் பார்த்து வச்சிருக்கேன், வயசு முப்பதாவுது. எனக்கும் முப்பதில்தானே கல்யாணமாச்சு, நான் நல்லா இல்லையா? என்று தந்திரமாகப் பேசி இவனைத் திருமணத்துக்குத் தலையாட்டவைக்கும் முயற்சியில் ஈடுபடுவாள். ஏன் வம்பு? தானே வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்வதா?

இவன் கேட்பானென்று எதிர்பார்த்தாளோ என்னவோ... இவனது அமைதி கண்டு எதுவும் பேசாமல் எழுந்துபோனாள்.

இனியும் இங்கு இருந்தால் அக்கா மெல்ல பேச்சை ஆரம்பித்துவிடுவாள் என்று பயந்தவனாய், கிரியின் வீட்டுக்குப் போய் கவிதாவிடம் கிரி கொடுத்தனுப்பியவற்றைக் கொடுத்துவிட்டு வரலாமென்று முடிவெடுத்தான். பிறகுதான் நினைவுக்கு வந்தது, கவிதா அலுவலகம் முடிந்து மாலைதான் வருவாள் என்பது. வேளச்சேரியில் அவள் வீடு. அதுவரை சைதாப்பேட்டையில் சுற்றிக்கொண்டு இருக்கலாம். முடிந்தால் பழைய அலுவலக நண்பர்களையும் பார்த்துவரலாம்.

அக்காவிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவதற்காக அவளைத் தேடியபோது, கொல்லை வாயிலோரம் அமர்ந்திருந்தாள். அவள் அழுதுகொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது.

"என்னக்கா இது? நான் எப்ப வந்தாலும் இதே பிரச்சனையா? இதுக்குதான் நான் வரதே இல்ல. இருக்கிற ரெண்டு மாசத்தை சந்தோஷமா கழிச்சிட்டுப் போகணும்னு நினைக்கிறேன். நீ என்னடான்னா வந்த ரெண்டாவது நாளே அழுது என்னைக் கஷ்டப்படுத்துறே?"

அக்கா சத்தம் வெளிவராமல் இன்னும் தேம்பினாள்.

"அக்கா... ப்ளீஸ்... ஏன் இப்ப ஒண்ணுமில்லாததுக்கு அழுதுகிட்டு இருக்கே?"

அக்காவின் அழுகை தனக்காக இல்லை என்பது சற்று தாமதமாகவே புரிந்தது. தன்னிடம் வசனமெதுவும் பேசாமல் அழமாட்டாள். ஒவ்வொரு வசனத்தின் இடைவெளியையும் கண்ணீரால் நிரப்புவாள். இப்படி மெளனமாய் அழுவது அவள் பழக்கமில்லை. என்ன ஆனது? அத்தான் எந்த விஷயத்துக்காவது கோபித்துக்கொண்டாரா? கேளென்று ஒரு மனமும், பிறத்தியார் அந்தரங்கத்தில் தலையிடாதே என்றொரு மனமும் அறிவுரை சொல்ல.... சுந்தர் தடுமாறி நின்றான்.

அக்கா கண்ணைத் துடைத்துவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.

"சுந்தர்.... வீட்டுக்குள்ள வா... கொல்லையில வச்சிப் பேசவேண்டாம்"

அப்படியென்ன பரமரகசியம்? யோசனையோடு தொடர்ந்தவனை மேற்கொண்டு யோசிக்கவிடாமல் செய்தது அக்கா சொன்ன விஷயம்.

"உங்க அத்தானுக்கு வேற பொண்ணோட தொடர்பு இருக்குடா....”

அக்கா இதை சூடம் அணைத்துச் சொன்னாலும் நம்பும் நிலையில் சுந்தர் இல்லை. அத்தான் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவனாகையால் அக்கா எதையோ தவறுதலாய்ப் புரிந்துகொண்டு உளறுகிறாள் என்றே எண்ணினான்.

"நீ நம்பமாட்டேன்னு எனக்குத் தெரியும்... அந்தப் பொண்ணை பைக்கில் வச்சிகிட்டு சுத்துறதை நானே என் கண்ணால் பாத்தேன்.”

பைக்கில் பின்னால் அமர்த்திச் செல்லும் பெண்களுடனெல்லாம் தவறான உறவு இருக்கவேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை என்பதை அக்கா இத்தனை வருடத்தில் அறிந்திருக்கமாட்டாளா? ஏன் இப்படிப் பிதற்றுகிறாள்?

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிரச்சனை வந்த ஒரு சமயம், இப்படித்தான் அப்பா அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறாரோ என்று கற்பனை செய்து பயந்து அழுது... எல்லோரும் அவளைக் கேலிபேசியது நினைவுக்கு வந்தது. அக்கா இன்னும் மாறவே இல்லை. ஒன்றுமில்லாததையெல்லாம் பெரிதுபடுத்தி பிரச்சனையாக்குகிறாள்.

"அக்கா... நீ அத்தான்கிட்ட இதுபத்திக் கேட்டியா? அவர் என்ன சொன்னார்?"

"கேட்டா... ஆமான்னு சொல்லிட்டா... என்னடா பண்றது? எனக்குத் தெரியாம இருக்குறவரைக்குமாவது பயந்து பயந்து நடப்பார். தெரிஞ்சிட்டா அப்புறம் எனக்குத் தெரிஞ்சே அவளோட சுத்துவார்..."

"அக்கா... நீயா கண்டதையும் கற்பனை பண்ணிக்காதே... அவர் ஜெம். உனக்கே தெரியும். அப்பா அம்மா இல்லாம… ஆதரவில்லாம நாம் இருந்தப்போ.... அவர்தானேக்கா நமக்கு வாழ்க்கை கொடுத்தார்? என்ன அழகா... முறையா என்கிட்ட பெண் கேட்டு... அநாதையான தனக்கு நீதான் வாழ்க்கைத்துணையா வரணும்னு உன்கிட்ட கெஞ்சி, உன் மனசை மாத்தி... ஒரு பைசா செலவில்லாம... கல்யாணம் பண்ணி... இன்னிவரைக்கும் நம்மகிட்ட எவ்வளவு அன்பா பாசமா இருக்கார்? உம்மேலயும் குழந்தைங்க மேலயும் உயிரா இருக்கார்? அவரை சந்தேகப்படாதேக்கா..."

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்று சிலகாலமாய்ப் பூண்டிருந்த உறுதிமொழியை உடைத்து அக்காவுக்கு உபதேசித்தான்.

அக்கா சமாதானமாகவில்லை.

"நான் என்ன சொன்னாலும் நீ நம்பமாட்டே.... அந்தப் பொண்ணை உனக்கும் தெரியும்..."

எனக்குத் தெரிந்த பெண்ணா? யார்?

"அந்த உதயநாயகிதான்டா!"

உதயநாயகியா? அவளா? இது என்ன புதுக்கதை?


(தொடரும்)

Nivas.T
24-06-2011, 08:59 AM
:eek:ஐயயோ? :mini023::mini023::mini023::confused::confused:

அக்னி
24-06-2011, 09:09 AM
உங்களை நிறையவே குழப்பிவிட்டேன் போலும். :frown:
நானாகத்தான் குழம்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.
இத்தொடர்கதையை மின்னூலாக்கும் நோக்கம் இருப்பின், அப்போது, இத்தொடரெங்கும் வரும் பதிவுகள் சின்னச்சின்னத் திருத்தங்களுக்கு உதவும்.
அப்புறம்... அப்புறமென்ன அச்சடித்துப் பிரசுரிக்க வேண்டியதுதான்...



இன்னும் நிறைய பயிற்சி வேண்டும். அதற்கு மன்ற நண்பர்கள் மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இன்னும் பல முயற்சிகள் தொடரும். :)

எதையெதையோவெல்லாம் தாங்கீட்டம்... நன்றாகவே கவர்ந்து செல்லும் இதைத் தாங்க மாட்டமா... :p


(24)
என்னதான் வீராப்பாய் தாய்நாடாவது, தந்தை நாடாவது? என்று வசனம் பேசினாலும், சென்னையின் மண்ணை மிதித்தவுடன் உடல் சிலிர்க்கத்தான் செய்தது.
என் நாடு சார்ந்து, நீண்ட கால இடைவெளியில் என் மனதிலிருப்பது வீராப்பா வெறுப்பா பயமா என்பது எனக்குப் புரியாத புதிர்தான்.
கால் பதிக்க முடிந்தால் அந்நேரம் தெளிவாகலாம்.

உதயநாயகி மீண்டும் உதயமாவாள் கதையில் என நினைக்கவில்லை.
அன்று நடந்த சுந்தரின் கலாட்டா, அத்தானாரைக் கோர்த்து விட்டிருக்குமோ...

இருந்தாலும் கார்த்திக்கின் கைப்பற்றும் பற்றும் இது சித்ராவின் தவறான புரிதலோ என நினைக்கவும் வைக்கின்றது.

இதையும் மீறி, உதயநாயகியைச் சுந்தருக்குக் கட்டிவைக்க இருவரும் சேர்ந்து நாடமாடுகின்றார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

நம்ம ஜாக்கி என்னாச்சோ ஏதாச்சோ...

ஜானகி
24-06-2011, 10:42 AM
பத்து கதைகளுக்கான கருவை ஒரே கதையில் படிப்பது போன்ற உணர்வு....... கதையில் வரும் கால ஓட்டத்தால் வந்த விளைவோ....விட்டுவிட்டுப் படிப்பதால் வரும் விளைவோ...சொல்லத் தெரியவில்லை.... சுவாரசியமாகத்தான் இருக்கிறது.....உங்கள் கற்பனை வளமும், சொல்லாழமும் பிரமிப்பாக இருக்கிறது.....தொடருங்கள்.

மதி
24-06-2011, 11:19 AM
ஹாஹா.. உதயநாயகி..!! ஹீரோயினா வில்லியா??!! அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேரய்ங்கற கதையால இருக்கு...

கீதம்
25-06-2011, 09:29 AM
:eek:ஐயயோ? :mini023::mini023::mini023::confused::confused:

ஐயையோ என்று அலறினாலும் அழுதாலும் உங்களை விடுவதாயில்லை. இவ்வளவு தூரம் துணை வந்தீர்கள். முடியும் வரைக்கும் கொஞ்சம் அனுசரித்து வந்துவிடுங்கள், நிவாஸ். :)


பத்து கதைகளுக்கான கருவை ஒரே கதையில் படிப்பது போன்ற உணர்வு....... கதையில் வரும் கால ஓட்டத்தால் வந்த விளைவோ....விட்டுவிட்டுப் படிப்பதால் வரும் விளைவோ...சொல்லத் தெரியவில்லை.... சுவாரசியமாகத்தான் இருக்கிறது.....உங்கள் கற்பனை வளமும், சொல்லாழமும் பிரமிப்பாக இருக்கிறது.....தொடருங்கள்.

நன்றி ஜானகி அம்மா.... நிகழ்வுகளைக் கோர்ப்பதில் எனக்கெழுந்த தடுமாற்றம் உங்களையும் தடுமாறவைத்திருக்கலாம். எனினும் தொடர்வதற்கு மிகவும் நன்றி. :)


ஹாஹா.. உதயநாயகி..!! ஹீரோயினா வில்லியா??!! அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேரய்ங்கற கதையால இருக்கு...

ரொம்ப யோசிக்கிறீங்க... யோசிச்சுகிட்டே தொடர்ந்து வாங்க. :D

கீதம்
25-06-2011, 09:37 AM
நானாகத்தான் குழம்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.
இத்தொடர்கதையை மின்னூலாக்கும் நோக்கம் இருப்பின், அப்போது, இத்தொடரெங்கும் வரும் பதிவுகள் சின்னச்சின்னத் திருத்தங்களுக்கு உதவும்.
அப்புறம்... அப்புறமென்ன அச்சடித்துப் பிரசுரிக்க வேண்டியதுதான்...

உங்களுடைய வழிகாட்டலுக்கும்,


எதையெதையோவெல்லாம் தாங்கீட்டம்... நன்றாகவே கவர்ந்து செல்லும் இதைத் தாங்க மாட்டமா... :p

எதையும் தாங்கும் இதயத்துக்கும்,


என் நாடு சார்ந்து, நீண்ட கால இடைவெளியில் என் மனதிலிருப்பது வீராப்பா வெறுப்பா பயமா என்பது எனக்குப் புரியாத புதிர்தான்.
கால் பதிக்க முடிந்தால் அந்நேரம் தெளிவாகலாம்.

இனம் புரியா நுண்மன உணர்வின் வெளிப்பாட்டுக்கும்,


உதயநாயகி மீண்டும் உதயமாவாள் கதையில் என நினைக்கவில்லை.
அன்று நடந்த சுந்தரின் கலாட்டா, அத்தானாரைக் கோர்த்து விட்டிருக்குமோ...

இருந்தாலும் கார்த்திக்கின் கைப்பற்றும் பற்றும் இது சித்ராவின் தவறான புரிதலோ என நினைக்கவும் வைக்கின்றது.

இதையும் மீறி, உதயநாயகியைச் சுந்தருக்குக் கட்டிவைக்க இருவரும் சேர்ந்து நாடமாடுகின்றார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

நம்ம ஜாக்கி என்னாச்சோ ஏதாச்சோ...

அழகான விமர்சனத்துக்கும், அதிரடி யூகத்துக்கும் அளவிலா நன்றி அக்னி.

கீதம்
25-06-2011, 09:41 AM
(25)

இந்நாள்வரை எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருந்தும் பழகியிருந்தும்… பெயரைச் சொன்னதும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் கேட்கும் மூளை, உதயநாயகி என்ற பெயரைச் செவியில் வாங்கிய நொடியே மனத்திரையில் அவளை அந்த சிநேகப் புன்னகையுடன் உதயமாகச் செய்தது. அவள் பெயர் அப்படி! சற்றே மாறுபட்ட, நடைமுறையில் அதிகம் புழங்காத பெயர்!

சட்டென்று அந்தப் புன்னகை மறைந்து…. தான் கடைசியாகப் பார்த்த திகில் தோய்ந்த முகம் நினைவுக்கு வந்தது. சாதாரணமாய்த்தான் கேட்டாள். ரணமாய்க் கிடந்த மனத்தைக் கூறு போடுமென்று அவள் அறிந்திருக்கமாட்டாள். அந்த நிகழ்வுக்காக அவளிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், அந்த நேரத்து மனநிலை உடன்படவில்லை. அப்படியே விட்டுவிட்டான்.

இத்தனை வருடங்களுக்குப் பின் அந்தப் பெயரை மீண்டும் கேட்கிறான், மனத்திற்கொவ்வா முறையில்! அக்கா சொல்வதில் ஒரு சதவீதமும் உண்மையிருக்காது என்று உறுதியாக நம்பினாலும் அத்தானிடம் இதுபற்றிப் பேசப் பயந்தான். அவர் கோபிப்பாரே என்றல்ல... தான் அவரைத் தவறாக நினைத்துவிட்டதை எண்ணி அவர் மனம் புண்படுமே என்று!

அக்காவோ... தன் முன் கிடப்பது பாம்பா பழுதா… என்று தெளியாமல் தேம்புகிறாள். இப்படியே அக்காவின் சந்தேகத்தை வளரவிட்டால் அது குடும்பத்தின், குழந்தைகளின் நலனையும் பாதிக்கும். எப்படியாவது அவர்கள் சந்திப்பின் உண்மை கண்டறியவேண்டும். அத்தான் ஒரு மாசற்ற மாணிக்கம் என்பதை நிரூபிக்கவேண்டும்.

ஆனால்.... அந்த மாசற்ற மாணிக்கம் மற்றொரு பெண்ணைச் சந்தித்த விவரத்தை ஏன் மனைவியிடம் சொல்லாமல் மறைக்கவேண்டும்?

எழுந்த சிந்தனை மேலும் குழப்பத்துக்கே வழிவகுத்தது. குழம்பி நிற்பவளைத் தெளிவிக்க முயலாமல் தானே குழம்பினால் எப்படி?

"அக்கா... கண்ணால் பார்ப்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீரவிசாரித்து அறிவதே மெய்யின்னு பழமொழி சொல்வாங்களே... நினைவில இல்லையா? தீர விசாரிச்சு அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிப்போம்......"

"என்னத்தை விசாரிக்கிறது? அன்னைக்கு இப்படிதான் வாணி போன் பண்ணி சொல்றா... வினீத் அப்பாவை ஹோட்டல்ல பாத்தேன், கூட யாரோ ஒரு பொண்ணு இருந்துது... யாருங்கறா? நான் என்ன சொல்ல? அவர் கூட வேலை பாக்குற பொண்ணு... ஆபிஸ் விஷயமா வெளியில வந்திருப்பாங்கன்னு சொன்னேன். வீட்டுக்கு வந்ததும் கேட்கலாம்னு பாத்தா... வந்ததுமே தலைவலின்னு படுத்தாச்சி... காலையில கட்டிக்கொடுத்த சாப்பாடு அப்படியே இருக்கு... ஏன் சாப்பிடலைன்னு கேட்டா... ஆபிஸ்ல வேலை ஜாஸ்தி... சாப்பிடவே நேரம் இல்லைன்னு பொய்! எனக்குக் கோவம் வருமா வராதா? அப்படியே டிபன் பாக்ஸைத் தூக்கி அடிச்சிட்டுப் போய்ட்டேன். பேங்க்ல அடிக்கடி பணம் எடுக்குறார்... ஏன் எடுக்கறார், என்ன பண்றார் ஒண்ணுமே தெரியல.... யோசிச்சு யோசிச்சு பைத்தியமே பிடிச்சிடும்போல இருக்கு எனக்கு..."

"அக்கா... ப்ளீஸ். தைரியமா இரு.... எவ்வளவோ பெரிய துக்கத்தையெல்லாம் சமாளிச்சு வந்திருக்கே... இதையும் சமாளிச்சிடலாம். நம்பிக்கையோட இரு.... நான் பாத்துக்கறேன்"

இவன் கொடுத்த தைரியத்தால் சித்ராவின் முகவாட்டம் அந்த நிமிடம் நீங்கியது.

அத்தான் அவன்மேல் வைத்திருந்தப் பாசத்தை தற்சமயம் அவன் பறந்துகொண்டிருக்கும் பல்சார் ஒன்றே பரிவட்டம் கட்டிப் பறைசாற்றியது. எத்தனை அன்பிருந்தால் இந்த இரண்டு மாதத்தில் இவன் பயன்படுத்தவென்றே ஒரு புதிய பல்சார் வாங்கிவைத்திருப்பார்! அப்படிப்பட்டவர் ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அக்கா அவருக்கு என்ன குறை வைத்தாள்? இப்போதெல்லாம் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறாள் என்பது உண்மைதான். ஆனால்.... எல்லாமே பற்றின் அடிப்படையிலும், பாசத்தின் ஆளுமையாலும் என்பதை அவரும் நன்றாகவே அறிவார். இவனைவிடவும் ஆறேழு வயதுதான் மூத்தவர்! தன்னால் இத்தனை வருடமாய் ஒருத்தியின் நினைவிலேயே வாழமுடியும்போது இவரால் ஒருத்தியின் நிழலிலேயே வாழமுடியாதா?

ச்சீ... நான் ஏன் இப்படி தவறானக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறேன்? அக்காவின் கண்களால் அவரை ஆழமறிய முற்படுகிறேன்? இது நல்லதில்லை. அவரைக் காயப்படுத்தவும் கூடாது, அக்காவின் சந்தேகத்தையும் போக்கவேண்டும். அதற்கு.... முதலில் உதயநாயகியைச் சந்தித்துப் பேசினால் என்ன? அவளை எப்படி சந்திப்பது? இத்தனை வருடங்களில் இன்னுமா திருமணமாகாமல் இருப்பாள்? கேட்பாரில்லாதக் காரணத்தால்தான் இப்படி அடுத்தவள் புருஷனுடன் ஊர்சுற்றமுடிகிறதா?

ச்சீ…ச்சீ.... மறுபடியும் கோணல் சிந்தனை! தலையைச் சிலுப்பிக்கொண்டான்.

உதயநாயகி பணிபுரியும் அதே மருத்துவமனையில்தானே ஜாக்கியும் இருக்கிறாள். மனம் உதயநாயகியிடமிருந்து ஜாக்கியிடம் தாவியது. இத்தனை வருடத்தில் ஜாக்கி தன்னை முற்றிலும் மறந்திருப்பாளோ? தன்னைப்போல்தானே அவளுக்கும் வயது ஏறியிருக்கும்? இப்போது எப்படியிருப்பாள்?

ஜாக்கியை நினைக்குந்தோறும் பட்டாம்பூச்சியாய்ப் பறந்த நாட்களே நினைவுக்கு வந்து பரவசப்படுத்தின. ஜாக்கியை ஒரு முறை பார்த்துவிட மனம் துடித்தது. ஒரு முறை போதும். அதுவும் நேரில் வேண்டாம். எட்ட இருந்து அவளைப் பார்த்தாலும் போதும்.

பொங்கிய ஆவல் உந்த... மருத்துவமனை நோக்கி வண்டியைத் திருப்பினான். போகும் வழியில் சிறு சலனம்! உதயநாயகியைச் சந்தித்து என்ன பேசுவது? பேச்சை எப்படித் துவங்குவது? மன்னிப்புக் கேட்பதுபோல்? எப்போதோ நடந்த நிகழ்வுக்கு இப்போது மன்னிப்புக் கேட்டால்...அவள் சிரிக்கமாட்டாளா?

வேறு என்னதான் செய்வது? தன் வாழ்க்கைதான் வெற்றுக்காகிதம் போலாகிவிட்டது. அக்காவின் வாழ்க்கையாவது அலங்கோலமாகிவிடாமல் இருக்கட்டும்.

மருத்துவமனையில் முன்பு காணப்பட்ட எளிமை இல்லை. நல்ல வருமானம் என்பது அதன் ஓங்கி உயர்ந்த கட்டடங்களிலும், அங்குமிங்கும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் கணிசமான எண்ணிக்கையிலும் புரிந்தது. ரிஸப்ஷனில் ஏழெட்டுப் பெண்கள் இருந்தார்கள். விவரம் கேட்கவும் அந்தச் சின்னப்பெண்கள் இவனை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர்களுக்கு உதயநாயகியையும் தெரியவில்லை. ஜாக்கியையும் தெரியவில்லை. இந்தப் பெயர்களில் இப்போது இந்த மருத்துவமனையில் எவரும் பணிபுரியவில்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தனர்.

வேறு யாரைக் கேட்பது என்றும் புரியவில்லை. அந்த மருத்துவமனையின் பழைய ஊழியர்களுடன் சுமுகமான உறவு இருந்திருந்தாலும் யாரிடமாவது கேட்கலாம். சோர்ந்து வெளியில் வந்தவனுக்கு கவிதாவிடம் கொடுக்கவேண்டிய பொருட்களுடன் பரத்துக்கான சாக்லேட்டுகளும் இருப்பது நினைவுக்கு வர... வெயிலில் உருகிவிடாமல் இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டபடியே… எந்த நேரத்தில் வருவது என்பதைக் கேட்க கவிதாவின் கைபேசிக்குத் தொடர்பு கொண்டான்.

கவிதாவின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது. தான் இன்று வீட்டிலிருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் வரலாமென்றும் சொல்ல... நிம்மதிப்பெருமூச்சுடன் விரைந்தான். வீட்டுக்கு வரும் வழியை கவிதா தெளிவாகச் சொல்லியிருந்தபடியால் சிரமமில்லாமல் சென்று அழைப்புமணியை அழுத்தினான்.

கதவைத் திறந்தவளின் புன்னகை, பழக்கப்பட்ட உணர்வைத் தோற்றுவிக்க.... ஒரு நொடி... ஒரே நொடி தடுமாறி.... “உதயநாயகி!” என்று ஆச்சர்யக்குரல் கொடுத்தான்.

(தொடரும்)

Nivas.T
25-06-2011, 09:43 AM
ஐயையோ என்று அலறினாலும் அழுதாலும் உங்களை விடுவதாயில்லை. இவ்வளவு தூரம் துணை வந்தீர்கள். முடியும் வரைக்கும் கொஞ்சம் அனுசரித்து வந்துவிடுங்கள், நிவாஸ். :)


இது பயத்தாலோ அல்லது சலிப்பினாலோ வந்த அலறல் இல்லீங்க..... கதையின் திருப்பம் தந்த அதிர்ச்சியினால் வந்த கதறல் :D

அக்னி
25-06-2011, 09:52 AM
:eek:ஐயயோ? :mini023::mini023::mini023::confused::confused:

ரிப்பீட்டு... :confused: :confused: :confused:

ஆர்வக்கோளாறில மேலோட்டமா வாசிச்சு, முடிவைப் பார்த்த எஃபெக்ட் தான் அது.
திரும்பவும் வாசிச்சு பதில் எழுதுறேன்.

கீதம்
25-06-2011, 10:52 AM
நீங்கள் குடி இருக்கும் அந்த பக்கத்து வீட்டு முகவரி வேணுமே அக்கா .... ரேஸில் மீண்டும் சரியான கோட்டுக்குள் வந்த தெளிவான நடை ... அனுபவப்பட்டால் மட்டுமே சொல்லக்கூடிய அருமையான எண்ண ஓட்டங்கள் .... அந்த பாசக்கயிறு மேட்டர் ........... எத்தனை நிஜம் தெரியுமா .... !!!

மன்னிக்கணும் ரவி, உங்க பதிவும் என் பதிவும் ஒரே நேரத்தில் பதிவானதால் உங்களுடையது என் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டது. இப்போதுதான் கவனித்தேன். நன்றி ரவி.

சிலருக்கு உணர்வுகளின் அடிப்படையில் எழுதுவது பிடிக்கும். சிலருக்கு சம்பவங்களின் அடிப்படையில் எழுதும் கதை பிடிக்கும். தொடர்கதை என்றால் சம்பவங்கள் இருந்தால்தான் தொடர்ந்துவரும் ஆவல் உண்டாகும். எல்லா இடங்களிலும் உணர்வுகளைச் சிலாகிப்பது சரியாக வராது. அதனால்தான் தேவையான இடத்தில் மட்டும் விவரிக்கிறேன். மனம் தொட்டப் பகுதிகளைச் சுட்டிக் காட்டிப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, ரவி.

கீதம்
25-06-2011, 10:56 AM
:eek:ஐயயோ? :mini023::mini023::mini023::confused::confused:


ரிப்பீட்டு... :confused: :confused: :confused:

ஆர்வக்கோளாறில மேலோட்டமா வாசிச்சு, முடிவைப் பார்த்த எஃபெக்ட் தான் அது.
திரும்பவும் வாசிச்சு பதில் எழுதுறேன்.


ஐயையோ என்று அலறினாலும் அழுதாலும் உங்களை விடுவதாயில்லை. இவ்வளவு தூரம் துணை வந்தீர்கள். முடியும் வரைக்கும் கொஞ்சம் அனுசரித்து வந்துவிடுங்கள் :)


ரிப்பீட்டு... :):):) :icon_b:

மதி
25-06-2011, 01:46 PM
டிவிஸ்டு மேல டிவிஸ்டு வைக்கணும்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் என்ன? ஜமாய்ங்க...

"நான் உதயநாயகி இல்லே.. அவ கூட பொறந்தவ.. " இந்த வசனம் வராமலிருந்தால் சரி..!!:D:D:D

கருணை
25-06-2011, 01:59 PM
நாலு வரி எழுத ரொம்ப சிரம படுறேன் . நீங்க எப்படி இப்படி தொடர் எல்லாம் எழுதுறீங்க ?

கீதம்
26-06-2011, 11:17 AM
இது பயத்தாலோ அல்லது சலிப்பினாலோ வந்த அலறல் இல்லீங்க..... கதையின் திருப்பம் தந்த அதிர்ச்சியினால் வந்த கதறல் :D

திடமான மனத்தோடு தொடர்ந்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நிவாஸ்.:)


டிவிஸ்டு மேல டிவிஸ்டு வைக்கணும்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் என்ன? ஜமாய்ங்க...

"நான் உதயநாயகி இல்லே.. அவ கூட பொறந்தவ.. " இந்த வசனம் வராமலிருந்தால் சரி..!!:D:D:D

உங்க ஆசையை ஏன் கெடுக்கணும்? அப்படி ஒரு வசனம் வச்சிடவேண்டியதுதான். :D


நாலு வரி எழுத ரொம்ப சிரம படுறேன் . நீங்க எப்படி இப்படி தொடர் எல்லாம் எழுதுறீங்க ?

முதலில் எழுதும்போது கொஞ்சம் தயக்கமாதான் இருக்கும். எழுத ஆரம்பிச்சிட்டால்... நிறுத்த முடியாது. ஊக்குவிக்க நம் மன்ற நண்பர்கள் இருக்கும்போது என்ன கவலை? இன்றே எழுத ஆரம்பியுங்கள், கருணை!:icon_b:

கீதம்
26-06-2011, 11:19 AM
(26)

உதயநாயகியை அங்கு எதிர்பாராக் காரணத்தால் சற்றே தடுமாறினான். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததோ? இவளை தெய்வம் என்பதும் சரியோ? சிவபூஜையில் கரடி? ம்கூம்... அதுவும் சரியாக வரவில்லை. சரி, ஏதோ ஒன்று!

இவள் எப்படி இங்கே? ஒருவேளை, முகவரி தவறி வந்துவிட்டேனோ? விழித்தபடி நின்றவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"என்ன சுந்தர் சார், அப்படியே நின்னூட்டீங்க? உள்ள வர உத்தேசமில்லையா?"

"நான்... நான்.... கவிதா..கவிதா இல்லையா..கிரியோட கவிதா..ஒய்ஃப்..... " என்னவோ சொன்னான். என்ன சொன்னான் என்பது அவனுக்கே தெளிவுபடவில்லை.

உதயநாயகி மீண்டும் சிரித்தாள்.

"ஏன் சார், கவிதா கூடத்தான் பேசுவீங்களா? எங்க கூட எல்லாம் பேசமாட்டீங்களா?" அதே பழைய குறும்பு!

ஏன் பேசமாட்டேன்? பேசத்தானே இவ்வளவு நேரம் இவளைத் தேடி அலைந்தேன்?

இப்படித்தான் எப்போதுமே நடக்கிறது. எது தேவையோ அதைத் தேடும்போது... எப்போதோ தேடியதெல்லாம் முன்னே வந்து கிடைக்கும். கிடைக்கவேண்டியது கிடைக்காது.

"உக்காருங்க.... "

"இது கிரி… கவிதா வீடுதானே?"

"ஏன் இவ்வளவு சந்தேகம் உங்களுக்கு? கவிதா வீடேதான்."

"அவங்க இல்லைங்களா?"

"ம்... யாரு? கவிதாவா? அவ பையனைக் கூப்பிடப் போயிருக்கா... இப்ப வந்திடுவா!"

"நீ…ங்க?"

"நான் கவிதாவோட சிஸ்டர்! முக ஜாடை தெரியலையா?"

"இல்ல... நான் கவிதாவை அவ்வளவா பார்த்ததில்லை. கிரி ஒரு தடவை கல்யாணப்போட்டோ காட்டினான். அதை வச்சு அடையாளம் அவ்வளவா கண்டுபிடிக்க முடியல.."

"ஓ..." கீழுதட்டைக் கடித்தபடி நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள். அப்போதாவது கொஞ்சம் சுதாரித்திருக்கலாம்.

உதயநாயகி இவனது தடுமாற்றத்தை ரசித்தபடியே உள்ளே சென்று ஜூஸ் எடுத்துவந்து கொடுத்தாள். அப்போதுதான் பிழிந்த எலுமிச்சையின் மணத்துடன் அது தொண்டையில் இதமாக இறங்கி, புத்துணர்வு கூட்டியது.

"நீங்க எப்படி இருக்கீங்க சுந்தர் சார்?"

"ம்... நான் நல்லா இருக்கேன்..." என்றவன், சட்டென்று பழைய நினைவுகளில் திளைத்தவனாய்...."அன்னைக்கு உங்ககிட்ட பேசினதுக்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். பட்... அப்போ இருந்த மனநிலையில் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு கூடத் தோணல... ஐயாம் வெரி ஸாரி..."

அவள் சிரித்தாள். "அடேயப்பா... இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் நினைவில் வச்சு பாவமன்னிப்பு கேக்கறீங்களே... வேடிக்கையா இருக்கு... அதையெல்லாம் நான் அன்னைக்கே மறந்திட்டேன். சொல்லப்போனா... உங்கள அந்த மாதிரிக் கேட்டதுக்கு நான் தான் மன்னிப்புக் கேக்கணும்..."

அத்தானைப் பற்றிக் கேட்கலாமா? வேண்டாமா? மனதுக்குள் ஒரு பெரும் போராட்டமே நடந்துகொண்டிருந்தது. அதற்குமுன் ஜாக்கியைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன? ஜாக்கி எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டால் கூடப் போதுமே!

"இப்பதான் அந்த ஹாஸ்பிடல் போய் உங்கள விசாரிச்சிட்டு வரேன்.நீங்க இப்ப அங்க வேலை செய்யலைன்னு சொன்னாங்க"

"ஆமாம், இடையில் கொஞ்சம் வீட்டுப் பிரச்சனை. நின்னுட்டேன். இப்பத்தான் ரெண்டு வருஷமா மறுபடியும் வேற இடத்துக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன். அதுசரி, என்னை எதுக்கு தேடினீங்க?"

என்ன சொல்வது? ஆரம்பத்திலேயே அவளுடன் முரண்பட்டுவிட்டால் ஜாக்கி பற்றிய தகவலை அவளிடமிருந்து எப்படித் திரட்டுவது?

எத்தனைச் சுயநலக்காரனாக இருக்கிறாயடா... உன் அக்காவின் வாழ்க்கைப் பற்றிப் பேசவேண்டிய சந்தர்ப்பத்தில் உன் காதலி பற்றி அறிய முற்படுகிறாய்! நீயும் இவ்வளவுதானா? மனம் இடித்துரைத்தது. எதையும் காதில் வாங்கும் நிலையில் அவன் இல்லை.

"ஜாக்கி... ஜாக்குலின் சிஸ்டர் பத்தி ஏதாவது தெரியுமா?"

"நீங்க இன்னும் அவங்கள மறக்காம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு!" விழிகளில் உண்மையாகவே ஆச்சர்யம் காட்டினாள்.

"எப்படிங்க மறக்க முடியும்? இன்னைக்கும் கண்ணை மூடினா அவதான் வந்து நிக்கிறா... எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். என்னால் அவளை மறக்கவே முடியல. அக்காவும் என் மனசை மாத்த எவ்வளவோ பாடுபட்டாங்க. கடைசியில் அவங்களும் கைவிட்டுட்டாங்க." விரக்தியாய்ச் சிரித்தான்.

"ஜாக்கி மேல எவ்வளவு பிடிப்பா இருக்கீங்க... தேடி வந்த உங்கள உதறி... ஜாக்கி அவ தலையில அவளே மண்ணை அள்ளிப் போட்டுகிட்டா... நாம் என்ன பண்ண முடியும்?"

உதயநாயகியைப் பார்க்குமுன் அவள் மேலிருந்த சந்தேகமெல்லாம் இப்போது எங்கே போனது என்று அவனுக்கே வியப்பாக இருந்தது. இத்தனை நல்ல பெண் இன்னொரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்க மனத்தாலும் நினையாள் என்று ஏனோ அழுத்தமான எண்ணம் தோன்றியது.

"சரி, இப்ப எங்க எப்படி இருக்கா தெரியுமா?"

"ஒண்ணும் சொல்றதுக்கில்ல சார்... அவளை நீங்க இனி பார்க்காம இருக்கிறதுதான் நல்லது."

"ஏன்? என்னாச்சி?" உதடுகள் துடிக்கக் கேட்டான்.

அவள் அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். என்ன இப்படிக் கல்நெஞ்சம் காட்டுகிறாள். இவன் தவிப்பை உள்ளுக்குள் ரசிக்கிறாளா?

இவள் யார் என் ஜாக்கியை நான் பார்க்கவேண்டாம் என்று உபதேசிப்பதற்கு? மூக்கு மேல் எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்தினான். பொறுமை! பொறுமை!

"ப்ளீஸ்... அவ அட்ரஸ் மட்டும் சொல்லுங்க... எட்ட இருந்தே பார்த்திட்டுப் போயிடறேன். அவ வாழ்க்கையில் தலையிடவே மாட்டேன். ப்ளீஸ்!"

"அது வந்து...." அவள் என்னவோ சொல்ல வாயெடுக்குமுன்...

"ம்மா...ம்மா... "

கண்ணைக் கசக்கியபடி இன்னமும் தூக்கத்திலிருந்து விடுபடாமல் அறையிலிருந்து வந்த பாலகனைக் கண்டு சுந்தர் துணுக்குற்றான். இவனைப் பார்த்துத் துணுக்குற்ற அச்சிறுவன் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு இவனை மிரள மிரளப் பார்த்தான்.

"எழுந்திட்டியா செல்லம்?.... என்னடா பாக்கிறே?.. அப்பாவோட ஃப்ரெண்ட்... சுந்தர் அங்க்கிள்.... ஹாய் சொல்லு... அங்க்கிளுக்கு ஹாய் சொல்லு செல்லம்..."

அதிர்ச்சியில் நின்ற சுந்தரைப் பார்த்து புன்னகைத்தாள்.

"என்ன சுந்தர் சார், ஷாக்காயிட்டீங்களா? கடைசியா சொல்லலாம்னு நினைச்சேன்.... இவன் அதுக்குள்ள எழுந்துவந்துட்டான்.... " மகனை தூக்கி மடியில் இருத்தியபடியே சொன்னாள்.

"கவிதா….?"

"என்ன சார், இன்னுமா புரியலை? பாட்டும் நானே... பாவமும் நானேங்கிற மாதிரி கவிதாவும் நானே... உதயநாயகியும் நானே! உதயநாயகிங்கிறது என் பாட்டி பெயர். அதனால் எல்லோரும் வீட்டில் கவிதான்னுதான் கூப்பிடுவாங்க.. கிரி எதிர் வீட்டில்தானே குடியிருந்தார்? அதனால் அவருக்கும் நான் கவிதாதான்! என்னை முன்னாடியே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். இங்க வந்து நீங்க கவிதா இல்லையான்னு கேட்டப்போதான் ஆஹா... இவருக்கு தெரியல... கொஞ்சம் கலாட்டா பண்ணுவோம்னு நினைச்சேன்.. ஸாரி, சார்!"

அதிர்ச்சியிலிருந்து விடுபட்டாலும், விளையாடுவதற்கு இவளுக்கு வேறு நேரம் காலம் கிடைக்கவில்லையா? இப்படியா ஒரு மனிதன் நொந்து கிடக்கும் வேளையில் அவன் உணர்வுகளுடன் விளையாடுவது என்று எரிச்சலாகவும் வந்தது.

அதே சமயம்... இவள் அத்தானோடு ஏன் சுற்றவேண்டும்? ஒருவேளை அத்தானின் அலுவலகத்தில்தான் பணிபுரிகிறாளோ? கிரி தன் கதையைச் சொல்லும்போதெல்லாம் அதைத் துளியும் சுவாரசியமற்றுக் கேட்டு எதையும் கருத்தில் பதியாமல் போனது எத்தனை மடத்தனம்?

"ஒரு நிமிஷம்!" இவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அவள் உள்ளே செல்ல.... பரத்தும் அவள் முந்தானையைப் பிடித்தபடியே இவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு பின்னால் சென்றான். எட்டு வயதுக்குரிய துறுதுறுப்போ... சூட்டிகையோ இல்லாமல் சிறு மழலையாய் மிரண்டு நிற்பவனைக் கண்டு மனதில் இனம் புரியா வேதனை எழுந்தது.

போன வேகத்தோடு இரண்டு கைகளிலும் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துவந்த பரத் இவனைக் கண்டதும் தயங்கி நின்றான்.

"பரத்... போ...நம்ம அங்க்கிள்தான் போ..." பின்னாலேயே குரல்கொடுத்தபடி வந்தாள் உதய.... ம்கூம்... கவிதா.

சிநேகமான இவனது சிரிப்பைக்கண்டு சற்றே நெளிந்து வளைந்து தயங்கியபடியே அவனும் புன்னகைத்தான்.

கொண்டு வந்திருந்த பேக்கிங்கின் நினைவு வர... பக்கத்தில் வைத்திருந்ததை எடுத்து கவிதாவிடம் நீட்டினான்.

"அப்பாடா.... கவிதான்னு நிரூபணமானதுக்கப்புறம்தான் தரணும்னு தோணிச்சா? உஷார் பார்ட்டிதான் சார் நீங்க" மறுபடியும் அதே குறும்பு கொப்பளிக்கும் பேச்சு!

"சரி, இப்பவாவது சொல்லுங்க...... ஜாக்கி எங்க இருக்கான்னு...ப்ளீஸ்!"

"சார், நான்தான் சொல்றேனே... நீங்க இப்ப அவ வாழ்க்கையில் குறுக்கிடவேணாம், ப்ளீஸ்!"

"இல்லைங்க, கவிதா... என்னை மன்னிச்சிடுங்க... இந்த விஷயத்தில் நான் யார் பேச்சையும் கேட்கப்போறதில்ல... என் தவிப்பைப் புரிஞ்சுக்கங்க... ஜாக்கியை நான் இருபது வருஷத்துக்கு முன்னால பாத்தது... இப்ப எப்படியிருப்பான்னு பாக்கணும்... அவ்வளவுதான். நான் குழப்பம் பண்றவனா இருந்திருந்தா... பத்து வருஷத்துக்கு முன்னாடியே அவ சொல்லை மீறி நேரில் போய் நின்னிருப்பேனே... நான் அப்படிப்பட்டவன் இல்லைங்க... புரிஞ்சுக்கங்க..."

"உங்க தவிப்பு எனக்குப் புரியுது, சார், ஆனா.. அமைதியாப் போய்கிட்டு இருக்கிற ஜாக்கியோட வாழ்க்கையில் மறுபடியும் ஒரு சூறாவளி தேவையா? உங்களுக்குக் கல்யாணம் ஆகல... அதனால் பிரச்சனையில்ல... கல்யாணமான ஒரு பெண்ணோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க... அவ கணவனைத் தவிர வேற யாரையும் மனசாலும் நினைக்க முடியாது. இந்த நிலைமையில் நீங்க அவ கண்ணில பட்டா அவ மனசு என்ன பாடுபடும்னு உங்களுக்குத் தெரியாது, சார்!"

கடந்த முறை போலவே இப்போதும் இவளே ஏன் முட்டுக்கட்டையாக முன்னால் நிற்கிறாள்? ஜென்ம சாபல்யமோ? கணவனை அல்லாது வேற்று ஆடவரைப் பெண்கள் மனதாலும் நினைக்கமாட்டார்கள் என்று எனக்கு சொல்கிறாள், இவள் எப்படிப்பட்டவள்? இவள் கடைப்பிடிக்கிறாளா, கற்புநெறி?

ஜாக்கியை சந்திக்க முடியாத ஏமாற்றமும், உள்ளுக்குள் கொழுந்து விட்டெரிந்துகொண்டிருந்த கோபமும், அக்காவின் அழுது சிவந்த முகம் நினைவில் தோன்றி உண்டாக்கிய ஆக்ரோஷமும் கட்டுக்கடங்காக் காட்டுக்குதிரைகளென வெளிக்கிளம்ப... பகுத்தறிவின் வாயிலில் புழுதி படரத்தொடங்கியது.

"நீங்க என்ன ஒழுங்குன்னு மத்தப் பெண்களைப் பத்திப் பேசறீங்க? நீங்க இன்னொருத்தி புருஷனோட சுத்தலையா?"

வன்மத்தின் ஊற்றுக்கண்ணிலிருந்து விஷம் தோய்ந்த வார்த்தைகள் குபுக்கெனச் சுரந்து வெளிப்பட்டன.

(தொடரும்)

Nivas.T
26-06-2011, 11:50 AM
கோபமும், ஆக்ரோஷமும் கட்டுக்கடங்காக் காட்டுக்குதிரைகளென வெளிக்கிளம்ப... பகுத்தறிவின் வாயிலில் புழுதி படரத்தொடங்கியது.

வன்மத்தின் ஊற்றுக்கண்ணிலிருந்து விஷம் தோய்ந்த வார்த்தைகள் குபுக்கெனச் சுரந்து வெளிப்பட்டன.


ஏனோ? இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. ஒரு காலத்தில் இதுபோன்று கட்டுபாடற்ற தன்மை என்னிடமும் இருந்ததாலோ என்னவோ?

கோபம் ஒருவனது அறிவை மழுங்கச்செய்யும் என்பது எனது அனுபவப்பூர்வ உண்மை

தொடருங்கள் ஜாக்குலினுக்கு என்ன ஆனதென்று தெரிந்துகொள்ளும் ஆவலில்

மதி
26-06-2011, 02:21 PM
ஆக... டாப் கியரில் வேகமெடுக்க ஆரம்பிச்சிருக்கு..

கவிதா.. அதிர்ச்சியில் உறைந்தாள்.. இல்லை.. புன்சிரிப்புடன் அவனது அறியாமையை நினைத்தாள்.. இப்படி ஏதாச்சும் அடுத்து வருமோ?

அக்னி
26-06-2011, 04:41 PM
எனது முதற் பகுதியின் அதிர்ச்சியை அடுத்த பாகம் போக்கிவிட்டதால்,
அதை அப்படியே விட்டுவிட்டு..,

இந்தப் பகுதி பற்றிச் சில...


என்னை முன்னாடியே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.
நானும்தான்...

எப்போதோ பார்த்த உதயநாயகியை, மீண்டும் பார்த்தவுடன் கண்டு கொண்ட சுந்தருக்குக், கிரி தன் திருமணப் படங்களை ஒரு தடவை கூடக் காட்டாமல் இருந்திருக்கலாம்.

நாம் ஒரு பொருளை அல்லது நபரை மறக்க முடியாத வகையில் நிகழும் சம்பவங்கள், அப்பொருளை அல்லது அந்நபரை ஒரு சிறு பொருத்தத்திலும் நினைவுபடுத்திவிடும்.
அதனால், கிரியின் திருமணப்படத்தைப் பார்த்தவுடன்தான், சுந்தர் "உதயநாயகி" எனக் கத்தியிருந்திருக்க வேண்டும்.

தொலைநாடொன்றில் இப்படியானதொரு திருப்பம் நிகழுமென எதிர்பார்க்க முடியாத நிலை சுந்தருக்கும் எமக்கும் இருப்பதனால் அதிகமாய் முரண் தெரியவில்லை.

ஆனாலும், கவிதா என்கின்ற உதயநாயகிக்கு சுந்தர், தன் கணவன் கிரியும் ஒரு வீட்டு, வெளிநாட்டு நண்பர்கள் என்பது தெரிந்தே இருக்கின்றது.
ஆனால் ஏன் கணவனிடம் சுந்தரைப்பற்றிக் கேட்கவோ சொல்லவோ இல்லை... :confused:

பரத்துக்கு ஏன்
எட்டு வயதுக்குரிய துறுதுறுப்போ... சூட்டிகையோஇல்லை... :confused: :confused:
கார்த்திக் வங்கியில் அடிக்கடி பணம் எடுப்பதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ...

கார்த்திக் சுந்தரின் அத்தான் என்பது, கவிதாவுக்குத் தெரிந்தும்,
சுந்தரை அவள் அறிந்திருந்தும்,
இதையெல்லாம் கிரிக்கு ஏன் அவள் சொல்லவில்லை... :confused: :confused: :confused:

இப்படித்தான் எப்போதுமே நடக்கிறது. எது தேவையோ அதைத் தேடும்போது... எப்போதோ தேடியதெல்லாம் முன்னே வந்து கிடைக்கும். கிடைக்கவேண்டியது கிடைக்காது.
:icon_b:

பகுத்தறிவின் வாயிலில் புழுதி படரத்தொடங்கியது.
:icon_b: :icon_b:

வன்மத்தின் ஊற்றுக்கண்ணிலிருந்து விஷம் தோய்ந்த வார்த்தைகள் குபுக்கெனச் சுரந்து வெளிப்பட்டன.
:icon_b: :icon_b: :icon_b:

(தொடரும்)
:)

இளசு
26-06-2011, 10:27 PM
இசையும் கதையும் என்றொரு நிகழ்ச்சி அந்நாளில் இலங்கை வானொலியில் -- அதன் இரசிகன் நான்.


அழகான பாடல்வரிகளைப் பொருத்தி இயல்பாய் தொடங்கி நகரும் முதல் பாகம் வாசித்தேன்...

எப்படி இப்படி என உங்கள் எழுத்துத்திறன் என வியந்தேன்.

பறவை பறந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

என் மனம் இலையாய்...

வாழ்த்தி மகிழ்கிறேன் கீதம்.. மெல்ல தொடர்வேன் தொடரை..

அன்புரசிகன்
26-06-2011, 11:33 PM
வழமையான கதாநாயகனாக இல்லாமல் யதார்த்தமான கதாநாயகனாக சுந்தரை சித்தரிப்பது அழகாக உள்ளது. தொடருங்கள்.

கீதம்
27-06-2011, 11:23 AM
ஏனோ? இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. ஒரு காலத்தில் இதுபோன்று கட்டுபாடற்ற தன்மை என்னிடமும் இருந்ததாலோ என்னவோ?

கோபம் ஒருவனது அறிவை மழுங்கச்செய்யும் என்பது எனது அனுபவப்பூர்வ உண்மை

தொடருங்கள் ஜாக்குலினுக்கு என்ன ஆனதென்று தெரிந்துகொள்ளும் ஆவலில்

உங்கள் ஆர்வத்திற்கும் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் என் உளப்பூர்வ நன்றி நிவாஸ்.


ஆக... டாப் கியரில் வேகமெடுக்க ஆரம்பிச்சிருக்கு..

கவிதா.. அதிர்ச்சியில் உறைந்தாள்.. இல்லை.. புன்சிரிப்புடன் அவனது அறியாமையை நினைத்தாள்.. இப்படி ஏதாச்சும் அடுத்து வருமோ?

இப்படியெல்லாம் முன்கூட்டியே யூகிச்சு என்னை எழுதவிடாமப் பண்ணக்கூடாது. அப்புறம் நான் அழுதுடுவேன்.:frown:


எனது முதற் பகுதியின் அதிர்ச்சியை அடுத்த பாகம் போக்கிவிட்டதால்,
அதை அப்படியே விட்டுவிட்டு..,

இந்தப் பகுதி பற்றிச் சில...


நானும்தான்...

எப்போதோ பார்த்த உதயநாயகியை, மீண்டும் பார்த்தவுடன் கண்டு கொண்ட சுந்தருக்குக், கிரி தன் திருமணப் படங்களை ஒரு தடவை கூடக் காட்டாமல் இருந்திருக்கலாம்.

நாம் ஒரு பொருளை அல்லது நபரை மறக்க முடியாத வகையில் நிகழும் சம்பவங்கள், அப்பொருளை அல்லது அந்நபரை ஒரு சிறு பொருத்தத்திலும் நினைவுபடுத்திவிடும்.
அதனால், கிரியின் திருமணப்படத்தைப் பார்த்தவுடன்தான், சுந்தர் "உதயநாயகி" எனக் கத்திருந்திருக்க வேண்டும்.

தொலைநாடொன்றில் இப்படியானதொரு திருப்பம் நிகழுமென எதிர்பார்க்க முடியாத நிலை சுந்தருக்கும் எமக்கும் இருப்பதனால் அதிகமாய் முரண் தெரியவில்லை.

ஆனாலும், கவிதா என்கின்ற உதயநாயகிக்கு சுந்தர், தன் கணவன் கிரியும் ஒரு வீட்டு, வெளிநாட்டு நண்பர்கள் என்பது தெரிந்தே இருக்கின்றது.
ஆனால் ஏன் கணவனிடம் சுந்தரைப்பற்றிக் கேட்கவோ சொல்லவோ இல்லை... :confused:

பரத்துக்கு ஏன் இல்லை... :confused: :confused:
கார்த்திக் வங்கியில் அடிக்கடி பணம் எடுப்பதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ...

கார்த்திக் சுந்தரின் அத்தான் என்பது, கவிதாவுக்குத் தெரிந்தும்,
சுந்தரை அவள் அறிந்திருந்தும்,
இதையெல்லாம் கிரிக்கு ஏன் அவள் சொல்லவில்லை... :confused: :confused: :confused:



உங்கள் கேள்விகளுக்கான... பதில்கள் பின்னால் வந்துகொண்டே இருக்கின்றன, அக்னி. அழகான விமர்சனம்! நிறைய யோசிக்கவைக்கிறீர்கள். நன்றி அக்னி.


இசையும் கதையும் என்றொரு நிகழ்ச்சி அந்நாளில் இலங்கை வானொலியில் -- அதன் இரசிகன் நான்.


அழகான பாடல்வரிகளைப் பொருத்தி இயல்பாய் தொடங்கி நகரும் முதல் பாகம் வாசித்தேன்...

எப்படி இப்படி என உங்கள் எழுத்துத்திறன் என வியந்தேன்.

பறவை பறந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

என் மனம் இலையாய்...

வாழ்த்தி மகிழ்கிறேன் கீதம்.. மெல்ல தொடர்வேன் தொடரை..

உங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மெத்த மகிழ்ச்சி இளசு அவர்களே... பொறுமையாகவே தொடருங்கள். நன்றி.


வழமையான கதாநாயகனாக இல்லாமல் யதார்த்தமான கதாநாயகனாக சுந்தரை சித்தரிப்பது அழகாக உள்ளது. தொடருங்கள்.

மிகவும் நன்றி அன்பு.

கீதம்
27-06-2011, 11:30 AM
(27)

கவிதா, சுந்தரின் கண்களை வெகுதீர்க்கமாய்ப் பார்த்தாள். என்ன உளறுகிறாய் என்பதுபோலிருந்தது அவள் பார்வை. வீரியமிகு அப்பார்வையை நேருக்கு நேர் சந்திக்கும் திராணியற்றுத் தலைகவிழ்த்தவனுக்கு வழக்கம்போல, தாமதமாகவே தவறு புரிந்தது.

நிதானமாய்க் கையாளவேண்டிய ஒரு விஷயத்தை இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல் பேசிய தன் முட்டாள்தனத்தை நொந்தபடி அடுத்து என்ன செய்வது? என்று விழித்து நின்றான். விஷயத்தை ஆரம்பித்தாயிற்று. இனி அதிலிருந்து பின்வாங்க முடியாது.

அவள் மீது குற்றமிருந்தால் அத்தானின் காதுகளுக்கு இச்செய்தி போய்விடும். உண்மை வெளியில் தெரிந்துவிட்ட ஆத்திரத்தில் 'என்னை ஆள்வைத்து வேவு பார்க்கிறாயா' என்று அக்காவிடம் அவர் பாயப்போவது கண்கூடான உண்மை. இவள் குற்றமற்றவள் என்னும் பட்சத்தில் கிரியிடம் முறையிடப்போவது உறுதி. இத்தனை நாள் நான் ஆக்கிப்போட்டதைத் தின்றுவிட்டு இன்று என் மனைவியையே கேவலமாகப் பேசுகிறாயே.... நீ என்ன ஜென்மம் என்று தன் முகத்தில் அவன் காறி உமிழப்போவதும் உறுதி.

உரலுக்குள் தலையைக் கொடுத்தாகிவிட்டது. இனி இடிபடுவதைப் பற்றி பயந்தென்ன லாபம்?

"நீங்க என் அத்தானோடு சுத்தலைன்னு சொல்லுங்க..."

"நான் ஏன் பொய் சொல்லணும்?"

அவளது அதிரடிக் கேள்வியால் சற்றுக்குழம்பினான்.

"இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்படி இன்னொரு பெண்ணோட வாழ்க்கையில்...."

"ஹலோ... ஹலோ.... மறுபடியும் என்கிட்ட மன்னிப்புக் கேட்கற சந்தர்ப்பத்தை நீங்களாகவே உருவாக்கிக்காதீங்க... அப்புறம் எத்தனை வருஷமாகுமோ.... அந்தக் கடன் கழியறதுக்கு...?"

என்ன இவள்? எத்தனை விபரீதமான விஷயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்? விளையாடுகிறாளே...

"சுந்தர் சார்.... இப்ப என்ன, உங்களுக்கு ஜாக்கியோட அட்ரஸ் தெரியணும். அதை நான் சொல்லலைன்னா... என்னையும் கார்த்திகேயன் சாரையும் ஒண்ணாப் பல இடங்களில் பார்த்த விவரத்தை கிரிக்கு சொல்லிடுவேன்னு என்னை ப்ளாக்மெயில் பண்ணப்போறீங்க, சரியா?"

சுந்தருக்கு தன்னிலை பற்றிய சுதாரிப்பு அப்போதுதான் உருவானது. 'நான் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாய் நடந்துகொள்கிறேன்? அல்லது நடந்துகொள்வேனென்று எதிர்பார்க்கப்படுகிறேன்? இத்தனை அயோக்கியத்தனத்தை உள்ளடக்கியபடிதான் இத்தனைக் காலமும் வாழ்ந்துவந்திருக்கிறேனா? அடுத்தவர் அந்தரங்கத்தில் தலையிடும் அநாகரிக புத்திக்கு நான் அடிமையானது எப்போது? இதெல்லாம் அக்காவுக்காக என்றால் அதில் உள்நோக்கம் எதுவும் இருந்திருக்கக் கூடாதே... அக்காவின் வாழ்வில் விழுந்த முடிச்சை அவிழ்க்க நினைத்து இன்னும் பல சிக்கல்களை நானே உருவாக்கிக்கொண்டிருக்கிறேனே... இதன் முடிவுதான் என்ன?'

கீழே அமர்ந்துகொண்டு இவர்களின் வாதத்தில் கவனமற்று, சிந்திய பிஸ்கட் துண்டுகளைத் தூக்கிச் செல்லும் பிள்ளையார் எறும்புகளைக் கவனித்தபடி இருந்த பரத்தின்பால் கவனம் திரும்பியது. எறும்புகளின் பின்னாலேயே தானும் ஊர்ந்துபோய் சட்டென்று அவற்றிடமிருந்து பிஸ்கட் துண்டுகளைப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டு தன் சாதனையை எண்ணி தனக்குத் தானே சிரிக்கும் அந்த மனவளர்ச்சியற்றக் குழந்தைக்கும் தனக்கும் பெரிதாய் என்ன வித்தியாசம்?

நான் ஏன் இப்படி இருக்கிறேன்? கழிவிரக்கம் உந்த.... உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் தோன்றியது. ஹெல்மெட்டைக் கையில் எடுத்த நொடி, கவிதா சிரித்தாள்.

"என்ன சுந்தர் சார், நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி றெக்கையைக் கட்டிகிட்டு....ஸாரி ஹெல்மெட்டை மாட்டிகிட்டுக் கெளம்புறீங்க?"

"ப்ளீஸ், தயவுசெஞ்சு என்னைக் கோமாளியாக்காதீங்க... ஒண்ணு நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்க. இல்ல... என்னைப் போகவிடுங்க..."

"ம்..ம்... பதில் சொல்றேன். விளையாடினது போதும், உக்காருங்க! உங்களைத்தான் சொல்றேன். உக்காருங்க சார்"

அவள் குரலில் தென்பட்ட கடுமை அவனை மறுபேச்சில்லாமல் அமரச் செய்தது. இப்படி அரைகுறையாய் விட்டுப்போவதில் அவனுக்கும் விருப்பமில்லைதான்.

"சார், கிரியும் நானும் ஆறு வருஷம் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிகிட்டோம். காதலோட அருமை எங்களுக்கும் தெரியும்."

"கைகூடின காதலைப் பத்திக் கதை கதையாப் பேசலாம். கைவிட்டுப் போன காதலோட வலி உங்களுக்கு எப்படிப் புரியும்?”

"புரியாமல்தான் நானும் கிரியும் ஜாக்கியை மறுபடியும் உங்க வாழ்க்கையில் இணைக்கணும்னு நினைச்சு முயற்சியெடுத்தோமா?"

"எ...என்..என்ன சொல்றீங்க?"

"நீங்க என்னைக்கு அவர்கிட்ட ஜாக்கியைப் பத்தி சொன்னீங்களோ... அன்னையிலிருந்து உங்களை நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் அவர் மனசு பட்டபாடு எனக்குதான் தெரியும். நீங்க இன்னும் ஜாக்கியை மறக்கலன்னு சொல்லி நடந்ததையெல்லாம் சொன்னார்..."

கிரி இவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா?

"ஆனா... பாதிதான் சொன்னீங்க போல... ஜாக்கி உங்க வீட்டை விட்டுப் போனதுக்கப்புறம் எதுவுமே அவளைப் பத்தித் தெரியாதுங்கற மாதிரி...."

வேறென்ன செய்யமுடியும்? ஜாக்கி என்னை மறந்து வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டாள் என்பதையோ.... என்னிடம் ஒரு வார்த்தையும் பேச விரும்பாமல் என்னை விரட்டியடித்துவிட்டாள் என்பதையோ... எப்படி என் வாயால் சொல்ல முடியும்? என் காதலுக்கே அது இழுக்கல்லவா? கேட்பவர்கள் ஜாக்கியைத் தவறாக நினைக்க நானே இடந்தரலாமா?

"எனக்கு ஆரம்பத்திலிருந்தே அவர் சுந்தர் சுந்தர்னு சொல்லும்போதெல்லாம் நீங்களா இருக்குமோன்னு ஒரு சந்தேகம். போட்டோவிலயாவது பாக்கலாம்னா.... நீங்க ரொம்ப முசுடாம்ல... போட்டோவுக்கே நிக்க மாட்டீங்களாம்...."

முசுடா? இப்படியொரு பெயர் என்பின்னால் உலவுகிறதா? யோசித்துப் பார்த்தபோது அது உண்மைதான் என்று புரிந்தது. கிரியைத் தவிர வேறு எவரிடமும் முகம் கொடுத்துப் பேசியதில்லை. அலுவலகத்திலும் அடிக்கடி எரிந்து விழுந்து யாரும் இவனிடம் நெருக்கம் காட்டுவதே இல்லை. தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சுற்றியுள்ளவர்களையும் முகம் சுண்டவிட்டு... என்ன வாழ்க்கை இது?

"அவர் சொன்னதுக்கப்புறம் அது நீங்கதான்னு உறுதியாயிடுச்சு. எனக்குத் தெரிஞ்ச விவரத்தையெல்லாம் அவர்கிட்ட சொன்னேன். ரொம்ப மனசு கஷ்டப்பட்டார். ஜாக்கியைப் பத்தி விசாரிச்சார். ஜாக்கியும் ஒருவேளை உங்க நினைவாகவே இருக்கலாமேன்னு சொன்னார். எப்பாடு பட்டாவது உங்க ரெண்டுபேரையும் சேர்த்துவைக்கணும்னு ரொம்ப பிரியப்பட்டார்."

கவிதா சொல்லச் சொல்ல சுந்தர் வியப்பின் விளிம்புக்கே சென்றான். கிரியின் மனத்துள் தன்னைப் பற்றி இத்தனைக் கரிசனமா? சிறுவயதில் நண்பர்கள் இருந்தாலும் பரஸ்பரம் செலுத்திய அன்பில் அதன் மகத்துவம் எதுவும் பெரிதாய்ப் புலப்படவில்லை. இன்று தனிமைச்சிறைக்குள் தான் அடைபட்டிருக்கும்வேளை பிரதிபலன் பாராத கிரியின் அன்பு அவனை மனமிளகச் செய்தது. கிரியுடன் தன்னை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையால் குறுகினான்.

"ஆனா.... ஜோஸஃப்..?"

"அந்தாள்தான் அப்பவே போய்ச்சேர்ந்திட்டானே...தெரியாதா உங்களுக்கு?"

"என்ன சொல்றீங்க?"

"உங்க அக்கா ரெண்டாவது பிரசவத்துக்காக அட்மிட் ஆகியிருந்தப்போதான் அது நடந்தது. ஆஸ்பத்திரி வாசலிலேயே நடந்தது. குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து லாரி ஏறி... ஸ்ஸ்... கோரமாயிடுச்சி…..இப்ப நினைச்சாலும்....ஸ் அப்பா...." கண்ணை மூடி உடலைச் சிலிர்த்துக்கொண்டாள்.

ஏன் அக்காவோ... அத்தானோ தன்னிடம் இதுபற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை? தெரிந்தால் ஜாக்கியை கையோடு அழைத்துவந்துவிடுவேன் என்ற பயமா? அப்படியே அழைத்துவந்தால்தான் என்ன? அவள் என் காதலிதானே?

வஞ்சிக்கப்பட்டுவிட்டதன் வலி மெல்லப் பரவி நெஞ்சை அடைத்தது. என் உயிரே அவள் நினைவில்தான் தொக்கி நிற்கிறது என்னும் உண்மை தெரிந்தும் என்னை இப்படி அழவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே... கனன்ற துயரம் கண்ணீராய்ப் பெருகியது.

"சார், சுந்தர் சார்... "

முகம்பொத்திக் குலுங்கி அழும் அவனை எப்படித் தேற்றுவது எனப்புரியாமல் தவித்தாள். திடீரென எழுந்த கேவல் கண்டு பயந்தவனாய் பரத் அம்மாவின் சேலைத்தலைப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சுந்தரையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லவேண்டாம்னு கார்த்திகேயன் சார் சொல்லியிருந்தார். ஆனா... இன்னைக்கு சூழ்நிலை என்னை எல்லாத்தையும் சொல்லவச்சிடுச்சி. நீங்க இப்படி அப்செட் ஆவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கமாட்டேன், சாரி சார்."

"இல்லீங்க... அப்செட்டெல்லாம் இல்லீங்க... ஒரு... அதிர்ச்சி... தாங்கிக்கமுடியல... அவ்வளவுதான். நெள ஐயாம் ஓக்கே.. நீங்க சொல்லுங்க...ஜாக்கி இப்ப எப்படி இருக்கா... எங்க இருக்கா?"

தெளிந்தவனாய்க் கேட்டான்.

"அந்த இன்ஸிடண்ட் நடந்த கொஞ்ச நாளிலேயே ஜாக்கி திடீர்னு வேலையை விட்டுட்டுப் போய்ட்டா... எதுவும் யார்கிட்டயும் சொல்லிக்கல... எங்க போனாள்னே தெரியல... "

"உண்மையாதான் சொல்றீங்களா?"

"ப்ராமிஸ்! இப்ப கிரி வற்புறுத்தினதுக்கப்புறம்தான் லீவு போட்டுட்டு அவளை மும்முரமா தேட ஆரம்பிச்சேன். அவ வழக்கமா போற சர்ச்.. ஃப்ரெண்ட்ஸ்... இப்படி... ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒண்ணும் முடியல... அப்பதான் ஒருநாள் தற்செயலா கார்த்திகேயன் சாரைப் பார்த்தேன். சும்மா பேசிகிட்டிருந்தோம். ஜாக்கியைப் பத்திப் பேச்சு வந்தது... அப்ப அவர் சொன்ன தகவல் கேட்டு நான் அதிர்ச்சியாயிட்டேன்"


(தொடரும்)

மதி
27-06-2011, 11:49 AM
நாங்களும் அதிர்ச்சியாயிட்டோம்...!! :eek::eek::eek:

Nivas.T
27-06-2011, 11:50 AM
முடியல

எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது?, தயவுசெய்து நீங்க தட்டச்சு பண்ணி வச்சிருக்க முழுகதையையும் எனக்கு தனிமடலிட்டுவிடுங்கள். அத ஒரே முச்சில படிச்சு முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்

Nivas.T
27-06-2011, 11:51 AM
முடியல

எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது?, தயவுசெய்து நீங்க தட்டச்சு பண்ணி வச்சிருக்க முழுகதையையும் எனக்கு தனிமடலிட்டுவிடுங்கள். அத ஒரே முச்சில படிச்சு முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்

கீதம்
27-06-2011, 12:46 PM
நாங்களும் அதிர்ச்சியாயிட்டோம்...!! :eek::eek::eek:

ஆகா... நீங்களாவது? அதிர்ச்சியாவறதாவது? அடுத்தது என்னன்னு இந்நேரம் சரியா யூகிச்சுவச்சிருப்பீங்களே...:)


முடியல

எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது?, தயவுசெய்து நீங்க தட்டச்சு பண்ணி வச்சிருக்க முழுகதையையும் எனக்கு தனிமடலிட்டுவிடுங்கள். அத ஒரே முச்சில படிச்சு முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்


முடியல

எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது?, தயவுசெய்து நீங்க தட்டச்சு பண்ணி வச்சிருக்க முழுகதையையும் எனக்கு தனிமடலிட்டுவிடுங்கள். அத ஒரே முச்சில படிச்சு முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்

ஆச தோச...நீங்க எத்தனை தடவ கேட்டாலும் சொல்லமாட்டேனே....:D

Ravee
27-06-2011, 01:32 PM
அப்ப அவர் சொன்ன தகவல் கேட்டு நான் அதிர்ச்சியாயிட்டேன்"
நானும் ஷாக் ஆகிட்டேன் :eek:

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 01:47 PM
கதை இப்போ நிகழ்காலத்த பின் பற்றி போகுதுன்னு பார்த்த கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பாக்கி சுந்தரின் காதலை காவிய காதலாக்கிடீங்களே...அதிர்ச்சி மேல அதிர்ச்சியாத்தான் கொடுக்கிறீங்க பாவம் சுந்தர்...

அன்புரசிகன்
27-06-2011, 11:23 PM
அடடடா.... இத்தனை நடந்திருச்சு... அப்போ அவுங்க தேவாலயத்தில சிஸ்டர் ஆகீட்டாங்களா??? தொடருங்கள்...

Nivas.T
28-06-2011, 07:08 AM
அடடடா.... இத்தனை நடந்திருச்சு... அப்போ அவுங்க தேவாலயத்தில சிஸ்டர் ஆகீட்டாங்களா??? தொடருங்கள்...

இருக்கலாம் அன்பு

ஏன்னா? பெருமாள் கோயில்ல முடியாதே :aetsch013::aetsch013::aetsch013::D:D:D

அக்னி
28-06-2011, 07:32 AM
எனது பல கேள்விகளுக்குப் பதில்கிட்டும் பாகமாக நீங்கள் சொன்னது போலவே இப்பாகம் அமைந்துவிட்டது. :icon_b:

கவிதா, கார்த்திக் (பெயர்ப் பொருத்தம் கூட சந்தேகம் வர வைக்குதே :)) ஒன்றாகத் திரியக் காரணத்தின் பின்னணி ஜாக்கி தானா...

பார்க்கலாம்... நீங்க தொடருங்கோ கீதம்+அக்கா...


அடடடா.... இத்தனை நடந்திருச்சு... அப்போ அவுங்க தேவாலயத்தில சிஸ்டர் ஆகீட்டாங்களா??? தொடருங்கள்...
அதெப்படி அன்புரசிகரே முடியும்...
அவங்களுக்குத்தான் திருமணம் ஆகிவிட்டதே...

இருக்கலாம் அன்பு

ஏன்னா? பெருமாள் கோயில்ல முடியாதே :aetsch013::aetsch013::aetsch013::D:D:D
நோ காமெண்ட்ஸ்...

கீதம்
28-06-2011, 08:30 AM
அப்ப அவர் சொன்ன தகவல் கேட்டு நான் அதிர்ச்சியாயிட்டேன்"
நானும் ஷாக் ஆகிட்டேன் :eek:

இது ரொம்ப ஓவர் எக்ஸ்ப்ரஷன்!:)


கதை இப்போ நிகழ்காலத்த பின் பற்றி போகுதுன்னு பார்த்த கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பாக்கி சுந்தரின் காதலை காவிய காதலாக்கிடீங்களே...அதிர்ச்சி மேல அதிர்ச்சியாத்தான் கொடுக்கிறீங்க பாவம் சுந்தர்...

காதல்னா சும்மாவா? :cool: (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கில்ல?)


அடடடா.... இத்தனை நடந்திருச்சு... அப்போ அவுங்க தேவாலயத்தில சிஸ்டர் ஆகீட்டாங்களா??? தொடருங்கள்...


இருக்கலாம் அன்பு

ஏன்னா? பெருமாள் கோயில்ல முடியாதே :aetsch013::aetsch013::aetsch013::D:D:D

உங்க ரெண்டு பேருக்கும் அக்னி பதில் சொல்லிட்டார். :)

இருந்தாலும் ரொம்பவே யோசிக்கிறீங்கப்பா....:D

கீதம்
28-06-2011, 08:32 AM
எனது பல கேள்விகளுக்குப் பதில்கிட்டும் பாகமாக நீங்கள் சொன்னது போலவே இப்பாகம் அமைந்துவிட்டது. :icon_b:

கவிதா, கார்த்திக் (பெயர்ப் பொருத்தம் கூட சந்தேகம் வர வைக்குதே :)) ஒன்றாகத் திரியக் காரணத்தின் பின்னணி ஜாக்கி தானா...

பார்க்கலாம்... நீங்க தொடருங்கோ கீதம்+அக்கா...


தொடர்வதற்கு நன்றி அக்னி. இன்னும் இரண்டு பாகங்களோடு கதை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. :icon_b:

கீதம்
28-06-2011, 08:35 AM
(28)

உச்சபட்ச அதிர்ச்சியை எதிர்நோக்கத் தன்னைத் தயார் படுத்தவே முயன்றான். மனமோ எதிர்கொள்ளும் பக்குவமற்று அவன் காலடியில் கிடந்து மன்றாடியது. பயத்தில் உடல் உதற… கோர்த்திருந்த விரல்களில் மெல்லிய நடுக்கம் உருவானது.

கடவுளே! என் தேவதையை என்னிடமிருந்து பிரித்துவிடாதே... அவளோடு நான் வாழாவிட்டாலும் பரவாயில்லை... அவளை வாழ வை என்று மனம் பிரார்த்தனை செய்யத் தொடங்கியது. பல காலமாய் மறந்திருந்த செயல் அது! இப்போது ஜாக்கிக்காக மறு பிரவேசம் செய்துகொண்டிருந்தது.

அப்படி எதைக் கேள்விப்பட்டாய் என்று கேட்பதற்கும் மனம் துணியவில்லை. கவிதாவோ சொல்வதா வேண்டாமா என்னும் புதுக்குழப்பத்திற்கு ஆளாகியிருந்தாள்.

அவள் வாயைத் திறக்குமுன் அவளுடைய கைபேசி அழைக்க... எடுத்து எண்ணைப் பார்த்தவள், யோசனையோடு பேசத்துவங்கினாள்.

"ம்..ம்... இங்கதான் இருக்கார்... "

"நான் என்ன செய்ய? அவரைப் பார்த்தாலே எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது..."

"சரி, நீங்களே வந்து பேசுங்க... அவர்கிட்ட தரவா? ... சரி...சரி..."

"நான் சொல்றேன்... "

தொடர்பைத் துண்டித்துவிட்டு சொன்னாள்.

"கார்த்திகேயன் சார்தான் பேசினார். இங்கதான் வந்துகிட்டிருக்கார்..."

அத்தானா? இங்கு எதற்கு வருகிறார்? சரி, வரட்டும், எல்லாவற்றையும் நேரிலேயே பேசிக்கொள்ளலாம். இனியும் பயந்தால் வேலைக்கு ஆகாது. ஆனால்... அதற்குமுன் நான் அறிந்துகொள்ளவேண்டியது ஒன்று உள்ளதே... என் ஜாக்கி என்னவானாள்? குறைந்தபட்சம் அவள் இருக்கிறாள் என்பது தெரிந்தாலும் போதும்.

"கவிதா... ப்ளீஸ்... ஜாக்கி இப்ப உயிரோடு இருக்காளா இல்லையா? அதையாவது சொல்லுங்க... நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்."

"ஐயோ... சார், என்ன இப்படியெல்லாம் நினைக்கறீங்க..? ஜாக்கி நல்லா இருக்காங்க... கவலைப்படாதீங்க... கார்த்திகேயன் சார் வந்து எல்லா விஷயத்தையும் விவரமா சொல்வார். அதுவரைக்கும் டிவி பாக்கிறதுன்னா பாத்துகிட்டிருங்க... நான் லைட்டா டிபன் ஏதாவது செய்யறேன்..."

"அதெல்லாம் வேண்டாங்க..."

"ம்கூம், முதல் தடவையா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க... எப்படி சும்மா அனுப்பறது? இதோ... சீக்கிரமா வந்திடறேன்.... உங்களுக்கு வெங்காய பஜ்ஜி ரொம்பப் பிடிக்கும்னு கிரி சொல்வார்... அதையே பண்ணிடவா?"

இதைக்கூடவா கிரி இவளிடம் சொல்லியிருக்கிறான்?

"உங்களுக்கு வீண் சிரமம், நீங்க வாங்க... "

அவள் எதையும் காதில் வாங்காமல் தொலைக்காட்சியை ஓடவிட்டு ரிமோட்டை இவன் கையில் கொடுத்துவிட்டுச் சென்றாள். கே டிவியில் கருப்புவெள்ளைப் படம் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. சுவாரசியமற்றுப் பார்த்திருந்தான்.

பரத் அவள் பின்னால் செல்லாமல் இருந்தது வியப்பை அளித்தது. ஒரு சிறிய பொம்மைக் காரை எங்கிருந்தோ எடுத்துவந்தவன் இவனருகில் அமர்ந்து இவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சோபாவின் ஓரங்களில் ஓட்டமுயல... அது தயங்கித் தயங்கி இவனருகில் வந்து மீண்டும் விலகிச் சென்றது. வழக்கமாய் குழந்தைகளின் குறும்புகளை ரசிப்பவனுக்கு அன்று பரத்திடம் அணுகவும் மனம் இடம் தரவில்லை.

வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தவனின் உள்ளே ஊடுருவி உயிர் பறித்தது அப்போது ஒளிபரப்பான ஒரு பாடல்!

காதல் என்பது தேன்கூடு - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும் - அது
கனவாய்ப் போனால் மனம் வாடும்…

உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD2071'&lang=ta)..

சுந்தர் ஆயாசத்துடன் கண்களை மூடி, பின்னால் சாய்ந்தான். உள்ளே போராட்டமொன்று உருவாகிக்கொண்டிருந்தது. நானும் என் உள்ளத்தை ஒருத்திக்குத்தானே கொடுத்தேன். அவளை உயிராகவும் மதிக்கிறேன். ஏன் மற்றவர்களுக்கு அது புரியவே இல்லை?

என்னவோ என்னிடம் மறைக்கப்படுகிறது. அது என்ன? இப்படி இவர்கள் என்னிடம் ஜாக்கியைப் பற்றி மறைக்கவேண்டிய அவசியம்தான் என்ன? ஜோஸஃப் இறந்தபின்னும் ஜாக்கியை சந்திக்கும் என் ஆவலுக்கு அணைபோடப்படுகிறது. அவளது அமைதியான வாழ்க்கையில் இடைபுகுந்து சலனம் உண்டாக்காதே என்று அறிவுறுத்தப்படுகிறது. மறைமுகமாக என்னிடம் இவர்கள் தெரிவிக்க முயல்வதுதான் என்ன?

யோசித்ததில் மண்டைதான் காய்ந்தது. வெகுநேரத்துக்குப் பின் சட்டென்று மூளைக்குள் ஒரு மின்னல்! ஒருவேளை.... ஜாக்கி மறுமணம் செய்துகொண்டுவிட்டாளா…?

இருக்கலாம்… இருக்கலாம். இருக்கலாமென்ன? அப்படித்தான் இருக்கும். அதனால்தான் அவளை சந்திக்க விடாமல் என்னைத் தடுக்கிறார்கள்.

தீர்மானத்துக்கு வந்தபின் மனம் ஆச்சர்யப்படத்தக்க வகையில் அமைதியடைந்திருந்தது. இரு கோடுகள் தத்துவம் போல்... பெரிய அதிர்ச்சியை எதிர்பார்த்தவனுக்கு இந்த விஷயம் அத்தனை அதிர்ச்சி தராததில் வியப்பொன்றும் இல்லையென்று நினைத்துக்கொண்டான்.

என் ஜாக்கி இனியாவது நல்லபடியாக வாழட்டும். குடும்பம், குழந்தைகள் என்று அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை இப்போதாவது கிடைத்ததே... போதும், இது போதும், இனி அவள் முகத்தில் எந்தக்காலமும் மகிழ்ச்சியும் பூரிப்பும் பொங்கி வழியட்டும்.

என் தேவதை அவள்! தேவதைகள் எங்கிருந்தால் என்ன? சந்தோஷமாக இறக்கைக் கட்டிப் பறந்துகொண்டே இருக்கவேண்டும். முடங்கிப் போய் மூலையில் கிடக்கக் கூடாது.

இத்தனைக் காலம் அவளைப் பார்க்காமல் இருந்த என்னால் இனியும் அவளைப் பார்க்காமல் வாழ்க்கையைக் கடத்துவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. ஜாக்கியின் வாழ்வில் புயல் உருவாக நான் காரணமாக மாட்டேன்.

சபதமெடுத்த சமயம், கார்த்திக் வந்தான்.

"சுந்தர், என்கூட வா... உன் கிட்டப் பேசணும்"

கார்த்திக்கின் முகத்தில் இத்தனை இறுக்கம் இதுவரை கண்டதில்லை. அன்று அப்பா தன்னுடன் பேசவேண்டுமென்று அழைத்துச் சென்றது நினைவுக்கு வர... முதல் தடவையாக கார்த்திக்கைப் பார்த்து பயம் வந்தது.

ஏன் என்று கேட்கவில்லை. எங்கே என்று கேட்கவில்லை, எதற்கு என்றும் கேட்கவில்லை. கவிதாவிடமும் விடைபெற மறந்து... மந்திரித்துவிடப்பட்டவனைப்போல் கார்த்திக்கின் பின்னால் செல்ல...

"ஏன் சார் வந்ததும் போறீங்க...? ரெண்டுபேரும் சாப்பிட்டுப் போகலாம்... எல்லாம் ரெடியாயிடுச்சி..." கவிதாவின் குரல் கேட்பாரற்றுக் காற்றில் கரைந்தது.


(தொடரும்)

Ravee
28-06-2011, 09:03 AM
http://fc08.deviantart.net/fs70/f/2010/294/7/d/jerry_diffin_head_rotation_by_evanpeartree-d318sow.gif

அக்னி
28-06-2011, 09:08 AM
சுந்தரின் மனப்போராட்டங்களை நன்றாகவே இப்பாகமும் பதிவு செய்திருக்கின்றது.

இத்தொடர் முடியப்போகின்றது என்பதனாலும்,
முடிவு என்னாகுமோ என்ற எதிர்பார்ப்பினாலும்,
இப்பாகத்தில் எப்பிடியும் தராததால்,
இப்பாகம் எனக்கு வேண்டாம்... :rolleyes: :cool:

Nivas.T
28-06-2011, 09:22 AM
:frown:எனக்கும் தான் :frown::frown:

Ravee
28-06-2011, 09:24 AM
அடடடா.... இத்தனை நடந்திருச்சு... அப்போ அவுங்க தேவாலயத்தில சிஸ்டர் ஆகீட்டாங்களா??? தொடருங்கள்...


இருக்கலாம் அன்பு

ஏன்னா? பெருமாள் கோயில்ல முடியாதே



:lachen001: :D :p :lachen001: :icon_b: :D :p :lachen001: :D

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 09:50 AM
இந்த சின்னத்திரை தொடரினை போல் ஒரு பிடியும் இன்றி முடித்துவிட்டீர்கள்
(http://im-smiley.com/)

(http://im-smiley.com/)http://im-smiley.com/imgs/big-animated/na-na.gif (http://im-smiley.com/)

மதி
28-06-2011, 10:05 AM
நான் குழம்பறதா இல்லை.. அட நான் கண்டுக்கவே போறதில்லை..
யார் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன??

ஆமா... வெங்காய பஜ்ஜி காலியாச்சா..? இல்லே யாரும் சாப்பிடாம வீணாப்போச்சா?:icon_ush::icon_ush::icon_ush:

கீதம்
28-06-2011, 10:12 AM
நான் குழம்பறதா இல்லை.. அட நான் கண்டுக்கவே போறதில்லை..
யார் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன??

ஆமா... வெங்காய பஜ்ஜி காலியாச்சா..? இல்லே யாரும் சாப்பிடாம வீணாப்போச்சா?:icon_ush::icon_ush::icon_ush:

பாருங்க... மதி.எல்லாரும் ஜாக்கியைப் பத்திதான் கவலைப்படறாங்க. நீங்க ஒருத்தர்தான் கவிதா கஷ்டப்பட்டு செஞ்ச வெங்காய பஜ்ஜி பத்திக் கவலைப்படுறீங்க. உங்க நல்ல மனசை நான் எப்படிப் பாராட்ட? :aktion033::aktion033::aktion033:

அக்னி
28-06-2011, 10:23 AM
எப்பவுமே பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடுறதில மட்டுமே மதி குறியா இருக்காருன்னு புரியுது...
அப்புறம் எப்பிடி... ... ...

மதி... ரூட்ட மாத்துங்க...

மதி
28-06-2011, 10:59 AM
ஜாக்கிய என்னிக்கு வேணும்னாலும் பாத்துக்கலாம்.. கஷ்டப்பட்டு செஞ்ச பஜ்ஜி வீணாயிடக்கூடாதில்ல..

மதி
28-06-2011, 11:00 AM
எப்பவுமே பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடுறதில மட்டுமே மதி குறியா இருக்காருன்னு புரியுது...
அப்புறம் எப்பிடி... ... ...

மதி... ரூட்ட மாத்துங்க...

எத்தனை ரூட்ட மாத்தினாலும் கடைசியா சாயங்காலம் வீட்டுக்குப் போய் தானே ஆகணும்..:icon_rollout::icon_rollout:

அக்னி
28-06-2011, 11:32 AM
ஜாக்கிய என்னிக்கு வேணும்னாலும் பாத்துக்கலாம்.. கஷ்டப்பட்டு செஞ்ச பஜ்ஜி வீணாயிடக்கூடாதில்ல..
இப்பிடியிருந்தா...

எத்தனை ரூட்ட மாத்தினாலும் கடைசியா சாயங்காலம் வீட்டுக்குப் போய் தானே ஆகணும்..:icon_rollout::icon_rollout:
வீட்டுக்குப் போன மாதிரித்தான் இருக்கும்...

ஒரு மாதிரியா இருப்போம் என்றால் ஒரு மாதிரியா ஆக்கிடுறாங்களே...

Ravee
28-06-2011, 01:24 PM
இன்னும் இரண்டு பாகங்களோடு கதை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. :icon_b:

http://graphics.desivalley.com/wp-content/uploads/2010/08/clapping-hands.gif

கீதம்
29-06-2011, 11:22 AM
தலை சுற்றிக் கிறுகிறுத்து, பின் இரண்டே பாகங்களில் கதை முடியும் என்ற அறிவிப்புக் கண்டு ‘அப்பாடா தொல்லைவிட்டது’ என்று மகிழ்ச்சியோடு கைகொட்டி ஆரவாரிக்கும் ரவீக்கும், எதுவும் சொல்லமாட்டேன் என்று ஏமாற்றத்துடன் சொல்லிவிட்டு எட்டி எட்டிப் பார்க்கும் அக்னிக்கும், கூடவே சோகவயப்பட்ட நிவாஸுக்கும், அடுத்தப் பகுதி போடும்வரை கண்ணைத் திறக்கமாட்டேன் என்று சபதமெடுத்திருக்கும் ஜெய்க்கும், யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? வெங்காய பஜ்ஜி என்ன ஆனது என்று யதார்த்தமாய் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் மதிக்கும் இன்னும் என்மீது நம்பிக்கை வைத்துத் தொடர்ந்துகொண்டிருக்கும் வாசகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி. :):):)

கீதம்
29-06-2011, 11:23 AM
(29)

பயணிக்கும் பாதையின் பிரக்ஞையற்று, முன்னே செல்பவனின் முதுகில் கண்கள் ஊன்றி கவனமாய்ப் பின்தொடர்ந்துகொண்டிருந்தது சுந்தரின் இருசக்கர வாகனம். இன்னும் எத்தனை நேரம்தான் நூல் பிடித்தாற்போல் அதன் வால் பிடித்துச் செல்வது என்று சலிப்புத் தோன்றிய நிமிடம், அதை உணர்ந்ததுபோல் சாலையோர வேப்பரமரமொன்றின் கீழ் ஓரங்கட்டப்பட்டது கார்த்திக்கின் ஸ்கூட்டர். சுந்தரும் வேகம் மட்டுப்படுத்தி கார்த்திக்கின் அருகில் வந்து நின்றான்.


சுற்றிலும் பொட்டல்வெளியாயிருக்க... ஆங்காங்கு சில கட்டடங்கள் அரைகுறையாய் நின்றுகொண்டிருந்தன. வேப்பமரத்தையொட்டி இருந்த மதிலின் நீளத்தை வைத்து உள்ளே சற்றே பெரிய கட்டடம் உள்ளது என்பதையும், உள்ளிருந்து அவ்வப்போது வந்துகொண்டிருந்த ஆரவாரக்கூச்சல் மூலம் அது உயிர்ப்புடன் உள்ளது என்பதையும் அறியமுடிந்தது.. சென்னையை விட்டு வெளியில் வந்துவிட்டோம் என்பதும் அப்போதுதான் புரிந்தது. இங்கே எதற்கு அழைத்துவரப் பட்டிருக்கிறேன் என்பதுபோல் கார்த்திக்கைப் பார்க்க... கார்த்திக் ஒரு பெருமூச்சுடன் ஒரு நெடிய பின்னோக்கிய பயணத்துக்கு தன் ஞாபகத்திறனைத் தயார்படுத்திக்கொண்டான்.

"சுந்தர், உனக்கு ஜாக்கியைப் பத்தி என்ன தெரியணும்?"

சுந்தர் கடுங்கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தான். இதென்ன கேள்வி? எனக்கு என்ன தெரியவேண்டும் என்பது இவருக்குத் தெரியாதா? என் ஜாக்கியையும் என்னையும் பிரித்துவைத்து இவர்கள் ஆடும் நாடகத்தின் திரையை நானே விலக்கிவிட்டேன் என்பதை இவர்களுக்கு உணர்த்திவிடுவதுதான் நல்லது.

"இங்க பாருங்க... நீங்க எதுக்கு ஜாக்கியைப் பார்க்கவிடாம தடுக்கிறீங்கன்னு தெரியும். அவளுக்கு வேற கல்யாணமாயிடுச்சு. அதானே? சரி, இனி நான் ஜாக்கியைப் பத்திப் பேசல... என்னை ஆளவிடுங்க... "

"சுந்தர், விஷயத்தை முழுசாப் புரிஞ்சுக்காம உங்க அக்கா மாதிரியே வம்பு பண்ணாதே...."

"என்ன புரிஞ்சிக்கணும்?"

"ஜாக்கி வேற கல்யாணம் பண்ணிக்கல... அவ கடந்த பத்து வருஷமா என்னோட பாதுகாப்பில்தான் இருக்கா... "

"எ..என்ன?"

சட்டென்று தொண்டைக்குழிக்குள் பயப்பிரவாகம் பந்தாய் அடைத்தது. கவிதாவின் அதிர்ச்சிக்குக் காரணமும் புரிந்தது.

"ஆமா... சுந்தர், நான் தான் ஜாக்கியோட கார்டியன்."

"கார்டியனா? எதுக்கு?"

"என்னை மன்னிச்சிடு சுந்தர், நிறைய விஷயங்களை நான் உங்கிட்டயிருந்து மறைச்சிட்டேன்...."

இதுவரை இறுகிக்கிடந்த முகம் இப்போது இளக்கத்துடன் இவனிடம் இறைஞ்சத் தொடங்கியிருந்தது.

சுந்தரோ பொங்கி வந்த உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.பேசும் திராணியற்றுப் பராக்குப் பார்த்தபடி எச்சில் விழுங்கினான். கபாலத்துக்குள் கலவர வளையமிட்ட எண்ணங்களைக் கட்டுக்குள் கொண்டுவரமுயன்றான்.

அவசரமாய் அந்தம் சொல்லி சுந்தரை அதிர்ச்சியில் நிறுத்தியவன் சாவதானமாய் ஆதியைச் சொல்லி அவனை அமைதிப்படுத்தவும் விழைந்தான்.

"ஸோ... உனக்கு ஜோஸஃப் இறந்தது தெரியும்."

"ம், இப்பதான் கவிதா சொன்னாங்க"

வார்த்தைகளை அழுத்திச் சொன்னான். இத்தனை வருடங்களாய் என்னிடமிருந்து மறைத்துவிட்டாயே என்னும் குற்றச்சாட்டு அதில் தொணித்தது.

“அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்?"

"அதை நீங்க சொல்லுவீங்கன்னு சொன்னாங்க"

வெறுப்புத் தெறிக்கும் வார்த்தைகளை வேறுபக்கம் முகம் திருப்பிச் சொன்னான்.

“சரி, சொல்றேன். பாடாப்படுத்திட்டிருந்த புருஷன் பரலோகம் போய்ச்சேர்ந்தானேன்னு ஜாக்கியால் நிம்மதியா இருக்க முடியல... ஊரெல்லாம் கடன்! இவ பேரைச் சொல்லிச் சொல்லியே வாங்கியிருப்பான் போல. கடங்காரங்க கழுத்தை நெறிக்கவும், இவளுக்கு என்ன பண்றதுன்னு புரியாம, அவங்க அக்காகிட்ட உதவி கேட்டிருக்கா... அவளுக்கு என்ன பிரச்சனையோ தெரியல.. ஒரு பைசா இல்லன்னு சொல்லிட்டாளாம். அவங்க அப்பாவுக்கும் அங்க சரியான மரியாதை இல்லை போலிருக்கு. அவராலயும் எதுவும் பண்ண முடியல. அதனால் யாருக்கும் சொல்லிக்காம மும்பை போய் பழைய ஆஸ்பத்திரியில வேலை செய்யலாம்னு நினைச்சு இங்க இருந்து கிளம்பியிருக்கா... ஏர்போர்ட்ல அசந்திட்டா போல... பாஸ்போர்ட், பணம் எல்லாத்தையும் பறிகொடுத்திட்டா... அந்த நேரம் எங்க கம்பெனியோட க்ளையண்ட் ஒருத்தரை வழியனுப்ப நான் ஏர்போர்ட் போயிருந்தேன். அப்பதான் இவளைப் பாத்தேன். கூட்டத்துக்கு மத்தியில் உக்கார்ந்து எதுவும் புரியாம அழுதுகிட்டிருக்கா... மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. பார்க்கவுமே மனசு கனத்துப் போச்சு. நம்ப வீட்டுக்கு மருமகளா வந்திருக்கவேண்டிய பொண்ணு இப்படி அநாதையாட்டம் அழுதுட்டு நிக்குதேன்னு வேதனையாயிடுச்சு. நீ கல்யாணம் பண்ணியிருந்தா அவ எனக்குத் தங்கச்சி. அந்த உரிமையோட அவளை நம்ம வீட்டுக்குக் கூட்டிவந்தேன். அப்புறம் உங்கிட்ட விஷயத்தைச் சொல்வோம்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்தா... உங்க அக்கா வழக்கம்போல பேயாட்டம் ஆடுறா... உங்கிட்ட இவளப் பத்தி எதுவும் சொல்லக்கூடாதுன்னு கத்துறா... எப்படி இந்த வீட்டுக்கு இவளைக் கூட்டிட்டு வரலாம்னு குதிக்கிறா... அந்தப் பொண்ணை அசிங்க அசிங்கமாப் பேசுறா... ஏற்கனவே மனசுடைஞ்சு போன பொண்ணு. என்னவாவது பண்ணிகிச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமாயிடுச்சு. ஆனாலும் அந்த அப்பாவிப் பொண்ணை அநாதரவா விட மனசு கேட்கல... அதனால...."

"அதனால...?" சுந்தரின் கேள்வி தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொள்ள... நடுக்கமாய் காற்று மட்டுமே வெளிப்பட்டது.

"அதனால... யோசிச்சுப் பாத்து ஒரு முடிவுக்கு வந்தேன். என்னை வளர்த்த அநாதை இல்லத்து நிர்வாகி தேவகியம்மாகிட்டப் பேசி அவளை அங்கேயே தங்கவைக்க ஏற்பாடு பண்ணினேன். ஜாக்கிக்கும் இதில் ரொம்ப சந்தோஷம். அநாதைக் குழந்தைகளைப் பார்த்து அவ தன் துக்கத்தையெல்லாம் மறந்தா... ஆனாலும் ஒரு கண்டிஷன் போட்டா... உன்கிட்ட அவளைப் பத்தி எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டா... சித்ராவோட நடவடிக்கை அந்த அளவுக்கு அவளைப் பாதிச்சிருக்கு. நான் அவளை அங்க விட்டுட்டு வந்ததோட சரி, இடையில் போய்ப் பாக்கவும் இல்ல. கொஞ்சநாள் எந்தப் பிரச்சனையும் இல்ல, திடீர்னு ஒருநாள் தேவகியம்மா என்னை வரச்சொன்னாங்க. ஜாக்கிகிட்ட ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க. பேசிக்கிட்டிருக்கும்போதே தூங்கிடறா…. சாப்பிடும்போது தூங்கிடறா…. ஒருநாள் அடுப்பு வேலையா இருக்கும்போது அப்படியே தூங்கிட்டா…. பக்கத்தில இருந்தவங்க பார்க்கலைன்னா... அன்னிக்கு பெரிய விபத்து உண்டாகியிருக்கும்னு சொன்னாங்க... ஏற்கனவே ஓரளவு அவ குடும்பத்தைப் பத்திக் கேள்விப்பட்டிருந்ததால இது அவங்க அம்மாவுக்கு வந்த நோயா இருக்கலாம்னு தோணி டாக்டர்ட்ட அழைச்சிட்டுப் போனேன்.. அவர் இது நார்கோலெப்ஸிதான்னு உறுதியா சொல்லி ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பிச்சார். அதுக்கான செலவையும் நானே ஏத்துகிட்டேன். இதையெல்லாம் உன்கிட்ட மறைக்கிறோமேன்னு குற்ற உணர்வு என்னைக் கொல்லும். சொல்லிடலாம்னு துடிப்பேன். ஆனா... அடுத்த நிமிஷமே உங்க அக்கா நினைவு வந்து என்னைக் கட்டுப்படுத்திடும். ஜாக்கியும் பிடிவாதமா இருந்ததால் என்னால் ஒண்ணும் பண்ணமுடியல. என்னை மன்னிச்சிடு, சுந்தர்..."."

கார்த்திக் சொல்லி முடித்த வினாடி, சுந்தர், கார்த்திக்கின் கரங்களை எடுத்து, கண்ணீர் மல்கும் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, விசும்பினான். ஒரு சராசரி மனிதனுக்குமேல் சகாயங்கள் செய்து தன் காதலை வாழவைத்த உத்தமனை எப்படியெல்லாம் அவதூறு நினைத்தோம் என்ற எண்ணமே அவனைக் கொல்லாமல் கொன்றது.

“நீங்கதான் என்னை மன்னிக்கணும், தெய்வம் அத்தான், நீங்க. என் ஜாக்கியை எனக்காக பத்திரமா பாதுகாத்த காவல் தெய்வம். உயிர் இருக்கிறவரைக்கும் என்னால் உங்கள மறக்கவே முடியாது... அத்தான்... நீங்க செஞ்சிருக்கிறது எத்தனைப் பெரிய விஷயம். அதை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க... என்னால் நினைச்சே பாக்க முடியல... உங்களைப் போய்... உங்களைப் போய்... நான் எப்படியெல்லாம்... ச்சே.. நான் மனுஷனே இல்ல. என்னை உங்க கையாலேயே நாலு அறை அறைங்க... அப்பத்தான் என் மனசு ஆறும்...”

உணர்ச்சிவசப்பட்டிருந்த சுந்தர் சுயநிலைக்கு வரும்வரை அவனை அணைத்தபடி கார்த்திக் அமைதியாய் நின்றிருந்தான்.

"அத்தான், ஜாக்கி இப்ப எங்க இருக்கா? நான் அவளைப் பாக்கணும்"

"தாராளமா பார், உனக்கும் ஜாக்கிக்கும் நடுவில் இருக்கிறது இந்த மதில் சுவர் மட்டும்தான்."

"என்ன சொல்றீங்க?"

"அவ இருக்கிற அநாதை இல்லத்துக்கு வெளியில் நின்னுதான் நாம பேசிட்டிருக்கோம்."

என்ன? என் ஜாக்கி இங்குதான் இருக்கிறாளா? நான் நினைத்தால் இப்போதே என் ஜாக்கியைப் பார்க்கமுடியுமா? கார்த்திக் சொல்வதை நம்பமுடியாமல் பார்த்தான்.

"சுந்தர், அவளுக்கு அதிர்ச்சி தர எந்த விஷயத்தையும் சட்டுனு சொல்லக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டா... ஏன் சிரிச்சா கூட மயங்கி விழுந்திடுவா... இந்த நிலையில் நீ அவளைப் பார்த்தா உன் மனசு என்ன பாடுபடும்? அதனால்தான் அவளைப் பத்தி உன்கிட்ட எதுவும் சொல்லவேண்டாம்னு நினைச்சேன். ஆனா.... நீ இன்னும் அவ நினைப்பிலேயே இருக்கிறதா உதயநாயகி மூலமா தெரிஞ்சுகிட்டேன். கிரியும் என்னோடு பேசினார். ஜாக்கி எந்த நிலையில் இருந்தாலும் நீ அவளை ஏத்துப்பேன்னு உறுதியா சொன்னார். இந்த லீவில் நீ வரும்போது எப்படியும் ஜாக்கியைக் கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கெஞ்சினார். ஜாக்கிக்கு நீ வந்திருக்கிற விஷயத்தை எப்படியோ சொல்லியாச்சு. ஆனா... உன்னை சந்திக்க பிடிவாதமா மறுத்திட்டா... நானும் உதயநாயகியும் அடிக்கடி வந்து அவ மனசை மாத்துற முயற்சியில் இறங்கியிருக்கோம்..."

"அக்கா...."

"உன் அக்காவை நான் சமாளிச்சுக்கறேன். இன்னும் அவளுக்குப் பயந்துகிட்டிருந்தால் உன் வாழ்க்கை என்னாகிறது? முதலில் ஜாக்கி சம்மதம் வேணும்... அதுதான் இப்போ முக்கியம்."

சுந்தர் சொல்ல வார்த்தையின்றித் தவித்தான். தான் ஒருவன் நன்றாக இருக்கவேண்டுமென்று எத்தனை உள்ளங்கள் பாடுபடுகின்றன? இது தெரியாமல் நான் ஒவ்வொருவரையும் காயப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறேனே...

ஆனந்தப் பரவசத்தால் அங்கமெல்லாம் துள்ள... கார்த்திக்கைக் கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தக்கடன் தீரவே தீராது என்று நினைத்தவனாய்... தன் வாழ்க்கையில் இத்தகு அற்புதமான மனிதர்களை இணைத்த ஆண்டவனுக்கு நன்றி சொன்னான்.

(தொடரும்)

Nivas.T
29-06-2011, 12:22 PM
அப்படி இப்பத்தான் ஓரளவுக்கு நிம்மதியா இருக்கு. முடிவையும் சொல்லிட்டா முழு நிம்மதியா இருக்கும். சீக்கிரம் சொல்லிடுங்க.



தலை சுற்றிக் கிறுகிறுத்து, பின் இரண்டே பாகங்களில் கதை முடியும் என்ற அறிவிப்புக் கண்டு ‘அப்பாடா தொல்லைவிட்டது’ என்று மகிழ்ச்சியோடு கைகொட்டி ஆரவாரிக்கும் ரவீக்கும், எதுவும் சொல்லமாட்டேன் என்று ஏமாற்றத்துடன் சொல்லிவிட்டு எட்டி எட்டிப் பார்க்கும் அக்னிக்கும், கூடவே சோகவயப்பட்ட நிவாஸுக்கும், அடுத்தப் பகுதி போடும்வரை கண்ணைத் திறக்கமாட்டேன் என்று சபதமெடுத்திருக்கும் ஜெய்க்கும், யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? வெங்காய பஜ்ஜி என்ன ஆனது என்று யதார்த்தமாய் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் மதிக்கும் இன்னும் என்மீது நம்பிக்கை வைத்துத் தொடர்ந்துகொண்டிருக்கும் வாசகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி. :):):)

:traurig001::traurig001::traurig001::traurig001:

Ravee
29-06-2011, 01:25 PM
‘அப்பாடா தொல்லைவிட்டது’ என்று மகிழ்ச்சியோடு கைகொட்டி ஆரவாரிக்கும் ரவீக்கும்,என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

http://www.tenaflyguy.com/sad-animated-animation-boy-smiley-emoticon-000346-large.gif

அக்னி
29-06-2011, 01:42 PM
ஜாக்கிக்கு மனநலம் குன்றியிருக்குமோ என எண்ணியிருந்தேன்.
ஜாக்கியின் அம்மாவின் உடல்நோயை மறந்துவிட்டேன்.

இந்தப் பாகம் பற்றிச் சொல்வதானால், தொடரின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுவிட்டன.

சுந்தர் ஜாக்கியைப் பார்க்க இனித் தடையில்லை.
ஆனால், ஜாக்கி சுந்தரைப் பார்க்க முடியாதவளாகிவிடுவாளோ என மன ஓரம் சிறு சஞ்சலம்.

அப்படி நிகழ்ந்தால்,
என் இப்பதிவின் முதல் வரியில் ஜாக்கிக்குப் பதிலாகச் சுந்தரைச் சேர்க்கவும் முடியலாம்.

உண்மைக் காதல் இணைவதை மரணம் பிரிக்காதிருக்கட்டும்.

கீதம்
30-06-2011, 11:04 AM
அப்படி இப்பத்தான் ஓரளவுக்கு நிம்மதியா இருக்கு. முடிவையும் சொல்லிட்டா முழு நிம்மதியா இருக்கும். சீக்கிரம் சொல்லிடுங்க.



நன்றி நிவாஸ். இன்னைக்கு முடிவைச் சொல்லிடுவேன். :icon_b:




‘அப்பாடா தொல்லைவிட்டது’ என்று மகிழ்ச்சியோடு கைகொட்டி ஆரவாரிக்கும் ரவீக்கும்,என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

http://www.tenaflyguy.com/sad-animated-animation-boy-smiley-emoticon-000346-large.gif

கேலி பேசறதுக்கெல்லாம் இப்படி கன்னத்தில் கைவைத்துக் கவலைப்படக்கூடாது.:)


ஜாக்கிக்கு மனநலம் குன்றியிருக்குமோ என எண்ணியிருந்தேன்.
ஜாக்கியின் அம்மாவின் உடல்நோயை மறந்துவிட்டேன்.

இந்தப் பாகம் பற்றிச் சொல்வதானால், தொடரின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுவிட்டன.

சுந்தர் ஜாக்கியைப் பார்க்க இனித் தடையில்லை.
ஆனால், ஜாக்கி சுந்தரைப் பார்க்க முடியாதவளாகிவிடுவாளோ என மன ஓரம் சிறு சஞ்சலம்.

அப்படி நிகழ்ந்தால்,
என் இப்பதிவின் முதல் வரியில் ஜாக்கிக்குப் பதிலாகச் சுந்தரைச் சேர்க்கவும் முடியலாம்.

உண்மைக் காதல் இணைவதை மரணம் பிரிக்காதிருக்கட்டும்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது அக்னி. முடிவைப் படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள். :)

கீதம்
30-06-2011, 11:12 AM
(30)

வேப்பமரத்தில் அடைவதற்குப் பறவைகள் திரும்பிவிட்டன. புதிதாய் தம்மிடத்தில் ஆட்களைக் கண்டதாலோ என்னவோ இறங்காமல் மரத்தை வட்டமிட்டு ஆரவாரித்திருந்தன. சூரியன் தன் அன்றையக் கடமையை முடித்து மெல்ல விடைபெறத் தொடங்கினான். இதுபோன்றதொரு அழகிய மாலையில்தானே ஜாக்கி முதன்முதலாய் தன்னிடம் மனம் திறந்து பேசினாள் என்பது நினைவுக்கு வந்தது. ஜாக்கியும் சுவருக்கு அப்புறமிருந்து இந்தக் காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருக்கக் கூடும் என்னும் எண்ணம் தோன்றியபோது......... மெல்லிய புன்னகையொன்று உதடுகளில் கசிந்து வெளிப்பட்டது. கார்த்திக் கவனித்திருக்கவேண்டும்.

"என்ன சுந்தர், எவ்வளவு நேரம்தான் யோசிப்பே? நிலைமையைச் சொல்லிட்டேன். அடுத்து என்ன செய்யலாம், நீயே சொல்லு..."

கார்த்திக்கின் பேச்சில் இத்தனை வருடச் சுமையை இறக்கிவைத்த ஆயாசம் தெரிந்தாலும் இன்னும் தன் கடமை முடியவில்லையென்பதும் கவனத்தில் உறுத்தியது.

சுந்தர் வெகுவாகக் குழம்பியும் தெளிந்தும் மீண்டும் குழம்பியும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்திருந்தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதுபோல் ஜாக்கி இத்தனை அருகில் இருந்தும் தன் கரங்களில் சேர்வாளோ மாட்டாளோ என்னும் எண்ணம் தொண்டையில் சிக்கிய முள்ளாய் நெருடியது.

"அத்தான், வீட்டுக்குப் போய் அக்காகிட்ட விவரம் சொல்வோம். அக்காவோட சம்மதத்தோடு ஜாக்கியை நம்ம வீட்டுக்குக் கூட்டிப்போவோம். அக்காவே வந்து கூப்பிட்டா ஜாக்கி மறுக்கமாட்டா... " பெண்டுலமாய் ஊசலாடிய மனம் இப்போது நிலைபெற்றிருந்தது..

"நடக்கிற கதையைப் பேசு"

"எனக்கென்னவோ அக்கா மனசு இப்ப மாறியிருக்கும்னுதான் தோணுது."

"சுந்தர், நீ போகாத ஊருக்கு வழி தேடுறே... உங்க அக்கா அவ சிநேகிதி வாணியோட நாத்தனாரை உனக்குப் பாத்துவச்சிகிட்டு உன்னைத் தன் வழிக்குக் கொண்டுவர சமயம் பாத்துகிட்டிருக்கா... அவகிட்ட இதெல்லாம் எடுபடாது. நீ மறுபடியும் உனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டுடாதே... "

கார்த்திக் அவசரப்படுத்தினான்.

"வாங்க வீட்டுக்குப் போகலாம்" சுந்தர் தன் முடிவில் பிடிவாதமாய் இருந்தான்.




***********

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு….

கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு..

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம் (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDSP0030'&lang=ta)…


விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் அமைதியாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது இல்லத்தின் பிரார்த்தனைநேரம். அலுவலகத்தின் வரவேற்பறையில் நிலைகொள்ளாமல் தவித்திருந்தான் சுந்தர்.

ஜாக்கி பிடிவாதம் தளர்த்துவாளா? பிடிகொடுத்துப் பேசுவாளா? தன்னைக் கண்டதும் அழுவாளா? சந்தோஷப்படுவாளா? ஏன் வந்தாய் என்று ஆவேசப்படுவாளா? இப்போதாவது வந்தாயே என்று அரவணைப்பாளா? உணர்ச்சிவசப்பட்டால் ஆபத்தாயிற்றே... எப்படி அவளை சமாளிப்பது?

கலவையான உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த மனத்தோடு காத்திருந்தவனின் அருகில் கிட்டத்தட்ட குற்ற உணர்வை மொத்தக் குத்தகைக்கு எடுத்தவள் போல் சித்ரா!

முன் தினம் மாலை சுந்தர் சித்ராவிடம் ஒளிவு மறைவில்லாமல் எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னான். கார்த்திக்கின் பெருந்தன்மையான குணத்தில் துவங்கி, உதயநாயகியுடனான நட்பு, கிரியின் உத்வேகம், ஜாக்கியின் மீதான அக்கறை, அவளுக்கிருக்கும் நோய், இந்த நிலையிலும் ஜாக்கியின் மீதான தன் காதலில் எள்ளளவும் குறைவில்லை என்பது வரை ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல...... சித்ரா கொஞ்சம் கொஞ்சமாய் இளகத் தொடங்கினாள்.

பிரதிபலன் பாராமல் கார்த்திக் செய்திருக்கும் அளப்பரிய செய்கையையும் தான் சுயநலத்துடன் ஜாக்கியிடம் நடந்துகொண்ட செய்கையையும் ஒப்பிட்டு சித்ரா அவமானத்தால் தலைகுனிந்து நின்றாள். தன் தம்பியின் நலத்தில் அக்கறை காட்டுவதுபோல் அவன் வாழ்வைக் கரையானாய்த் தான் அரித்துவந்திருக்கும் இழிசெயலை எண்ணி மருகினாள்.

எந்த அளவுக்கு தான் கிராதகியாய் இருந்திருந்தால் தன் அன்புக்கணவன் தன்னிடம் பத்துவருடங்களாய் ஒரு மாபெரும் செய்கையை மறைத்துவந்திருக்கமுடியும் என்று நினைக்கும்போதுதான் சித்ராவுக்கு தான் இத்தனை வருடங்களாய் எத்தனைக் கொடூரமனம் கொண்டிருந்திருக்கிறோம் என்பதும் புரிந்தது.

இதற்கு மேலும் சுந்தரின் வாழ்க்கையில் தான் குறுக்கிடுவது அவன் தன்மீது கொண்ட பாசத்தை விலைபேசுவதற்கு சமம் என்றெண்ணியவளாய் நடந்த தவறுகளுக்காக சுந்தரிடம் மன்னிப்புக் கோரினாள். கார்த்திக்கின் காலடியில் மெளனமாய் மண்டியிட்டு அழுதாள். சித்ரா இத்தனை விரைவில் மனம் மாறுவாள் என்பதை கார்த்திக்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் விளைவாகவே காலை விடிந்தும் விடியாத பொழுதில் இல்லப் பிரவேசம்.

தேவகியம்மா அன்போடு வரவேற்றார். சுந்தரை அவர் பார்த்தப் பார்வையில் பெருமிதம் பொங்கி வழிந்தது. எந்த அசம்பாவிதமும் நடைபெறலாம் என்னும் முன்னெச்சரிக்கையோடு ஜாக்கியை வரவழைக்க ஆளனுப்பினார்.

"ஜாக்கியை நான் வரச்சொன்னேனு சொல்லிக் கூட்டிவாம்மா.. வேற எதுவும் சொல்லவேண்டாம்"

சுந்தரின் கால்கள் தள்ளாடத் துவங்கின. என் தேவதை வருகிறாள், வந்துகொண்டிருக்கிறாள், வந்துவிட்டாள்... இதோ.. இதோ... என் ஜாக்கி...

சுந்தரின் எதிர்பார்ப்புகளைப் பொய்த்தபடி அவனெதிரில் வந்து நின்றாள் ஜாக்கி. கைத்தறிச் சேலை சுற்றி, கனிந்த முகத்துடன் ஒரு பெண்துறவியைப் போல் காட்சியளித்தாள். இவளா என் ஜாக்கி? என் தேவதை? வாளிப்பும் வனப்பும் குலைந்து, தேகம் மெலிந்து, தோல் சுருங்கி, கண்கள் பஞ்சடைந்து, கருவளையங்கள் சூழ்ந்து...... அந்த அழகுப் பதுமையைக் காலம் இத்தனை விரைவில் சீரழித்திருக்கவேண்டாம்...

சித்ரா அவளது கோலம் கண்டு முகம்பொத்திக் குலுங்கினாள்.

"ஜாக்கி"

சுந்தரின் வாய் தன்னையறியாது அவள் பெயரை உச்சரித்தது. ஜாக்கியின் கண்களில் ஒரு மின்னல்!

"சுந்தர்..."

சுந்தர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று திரும்பினான். என் ஜாக்கி என்னை மறக்கவில்லை. ஒரு குரலில் ஒரு நொடியில் என்னை அடையாளங்கண்டுகொண்டாள்.

"சுந்தர்.... சுந்தர்... " ஜாக்கி பரவசமானாள்.

"ஜாக்கி... ஜாக்கி... ஐயோ... ஜாக்கி... நீயா இது... என்னால நம்பவே முடியலையே... ஜாக்கி… நீ ஏன் இப்படி....."

உணர்வுகளின் கொந்தளிப்பு எல்லைமீற சுந்தர் மயங்கிச் சரிந்தான்.



*****************

பிரமாதமான மதிய விருந்துக்குப் பின், ரோஷனுடன் வினீத், வந்தனா விளையாடிக்கொண்டிருக்க, அவர்களோடு தானும் உற்சாகமாய் விளையாடும் பரத்தினைப் பார்த்து கவிதா மனம் குளிர்ந்துநின்றாள். எப்போதும் எவருடனும் அதிகம் பழகாதவன், இப்படி முன்பின் அறிமுகமில்லாத இவர்களுடன் விளையாடுவதைக் கண்டு தாய்மையின் பூரிப்பில் உளம் திளைத்து நின்றாள்.

சுந்தர் கிரியுடன் உற்சாகமாய்ப் போனில் பேசிக்கொண்டிருக்க... சித்ரா ஜாக்கியின் அருகில் அமர்ந்து அவள் கரங்களைத் தன் மடியில் வைத்து ஆறுதலாய் நீவிக்கொண்டிருந்தாள். கார்த்திக் சித்ராவின் இந்தச் செய்கையைப் பார்த்து இந்தப் பரிவும் பாசமும் என்றென்றும் நீடித்திருக்க வேண்டுமே என்று ரகசியமாய் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

"ஜாக்கி... நீ மயக்கம் போட்டுடுவேன்னு நாங்க எல்லாரும் பயந்தோம். அதனால்தான் எல்லாரும் ஒரே சமயம் உள்ள வராம சுந்தரையும் சித்ராவையும் மட்டும் அனுப்பிட்டு நானும் கவிதாவும் குழந்தைகளோட வேன்ல காத்திட்டிருந்தோம். கடைசியில எப்பவும் போல எங்க சுந்தரை மயங்கவச்சிட்டியே...”

கார்த்திக் ஜாக்கியைக் கலாய்க்க... ஜாக்கி வெட்கப் புன்னகை பூத்தாள்.

"ஜாக்கிக்கு வெட்கப்படக்கூடத் தெரியுமா?" இது சித்ரா.

"அட, எல்லாரும் கலாட்டா பண்ணிட்டே இருக்காதீங்க... பாரு, சுந்தர் நம்மள மொறச்சு மொறச்சுப் பாத்திட்டிருக்கான்."

கார்த்திக்கின் கலாட்டாவால் எல்லோரும் ஏகமாய்ச் சிரித்தனர்.

சுந்தர் பேசி முடித்துவிட்டு போனைக் கவிதாவின் கையில் கொடுக்க, அவளும் பேசிமுடித்துவிட்டு சித்ராவிடம் வந்தாள்.

"ம்..ம்.. இத்தனை வருஷத்துக்கப்புறம் பார்த்திருக்காங்க... ஏதாவது மனம் விட்டுப் பேசுவாங்க.. இப்படி பக்கத்திலேயே உக்காந்திருந்தா என்ன அர்த்தம்?" கவிதா சித்ராவின் காதில் கிசுகிசுக்க... அப்போதுதான் உணர்ந்தவளாய் சித்ரா...

"யார் யார் என்கூட பீச்சுக்கு வரா...?"

குரல் கொடுக்க... 'நான் நான்' என்று போட்டிபோட்டுக்கொண்டு வந்த குழந்தைகளுக்குப் போட்டியாக கவிதாவும் கார்த்திக்கும் 'நான்...நான்' என்று சொல்ல, சுந்தரும் ஜாக்கியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடி பார்த்திருக்க... சற்று நேரத்தில் அவர்கள் இருவரையும் தவிர்த்து ரோஷன் முதற்கொண்டு அனைவரும் காணாமற்போயினர்.



******************



அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே
கண்ணில் ஈரம்... (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGVJA0066'&lang=ta)



சுந்தர் பாடலை ஓடவிட்டுப் பின்னணியில் ஜாக்கியை ரசித்துக்கொண்டிருந்தான். ஜாக்கி அவனது மார்பில் தஞ்சமடைந்திருந்தாள். விழிகளின் சங்கமத்துக்குப் பின் விழிநீர்த்துளிகள் சங்கமித்தன. இதழ்களின் சங்கமத்துக்குப் பின் வார்த்தைகள் சங்கமித்தன.

"ஜாக்கி...."

"ம்?"

"எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு"

"எனக்கும்தான்"

"எப்படிடி உன்னால் என்னை இத்தனைக்காலம் மறந்து வாழமுடிஞ்சது?"

"ப்ச்! உன்னோட காதல் இத்தனை ஸ்ட்ராங்கா இருக்கும்னு நான் நினைச்சே பாக்கல சுந்தர், கொஞ்சநாள் ஆனதும் மறந்திடுவேன்னு நினைச்சிட்டேன்.. ஸாரிப்பா..."

"வெறும் ஸாரி சொன்னா பத்தாது... நிறைய காதல் பண்ணனும், இத்தனை நாள் என்னை எப்படியெல்லாம் தவிக்கவச்சே... அத்தனைத் தவிப்பையும் போக்கணும்"

"எப்படி?"

"எப்படியா... ம்? இப்படி..." அவள் காதில் கிசுகிசுக்க...

"யூ நாட்டீ..." அவள் செல்லக்கோபத்துடன் அவனைப் பிடித்துத் தள்ள,

"அட, இப்பத்தான்டி நீ என் பழைய ஜாக்கி... " முத்தமிட்டு மீண்டும் கட்டிக்கொண்டான்.

"ஐ லவ் யூ சுந்தர்" இதைச் சொல்லும்போது ஜாக்கியின் கண்கள் மறுபடியும் கலங்கின.

"இதை விட எனக்கு வேறென்னடி வேணும், என் தங்கமே...... கிரிகிட்டே பேசிட்டேன். இனி அங்க வரப்போறதில்லைன்னு சொல்லிட்டேன்... அக்காவும் அத்தானும் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல நம்ம கல்யாணத்துக்கு பதிவு பண்ணிட்டாங்க... இன்னும் கொஞ்சநாள்தான். அப்புறம் உன்னைவிட்டு எங்கயும் போகவே மாட்டேன். நார்கொலெப்ஸிக்கு கம்ப்ளீட் ட்ரீட்மெண்ட் இல்லைன்னாலும் மருந்து மாத்திரை மூலமாவும் சில பயிற்சிகள் மூலமாவும் கட்டுப்பாட்டில் வச்சிருக்கலாமாம். அதனால் நீ எதுக்கும் கவலைப்படாதேடா குட்டி... என்னடி நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ பதிலே சொல்லமாட்டேங்கிறே?"

தன் மார்பில் சாய்ந்தபடி உறக்கத்தின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் ஜாக்கியைப் பரிதாபப் பார்வை பார்த்தபடி மெல்ல ஒரு பூவைப் போல் இருகைகளாலும் அள்ளி படுக்கையில் பரப்பினான், அவளையும் அடுத்தப் பாடலையும் ரசித்தபடி!


பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே...
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே...

நேற்றுவரை நேரம் போகவில்லையே...
உனது அருகே நேரம் போதவில்லையே...
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே….. (http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGGVP0095'&lang=ta)

(முற்றும்)

பூமகள்
30-06-2011, 11:31 AM
முடிச்சிட்டீங்களா...??!! இனி தான் நான் படிக்கவே ஆரம்பிக்கப் போறேன்...!!

உங்க தொடர் அடுத்த பாகம் வரைக் காக்க விடுவதில்லை.. ஆகவே தான் படிக்கவில்லை அக்கா..

கட்டாயம் படித்து விரைவில் பதிலிடுகிறேன். :)

Ravee
30-06-2011, 12:15 PM
https://lh4.googleusercontent.com/-YWQZjM0wYW8/TgxlR20U7RI/AAAAAAAAAr4/f_fAGKvUnK0/sundar%252520and%252520jakki.JPG



இல்லறத்தில் இணைய காத்து இருக்கும் சுந்தருக்கும் :wub::love-smiley-008: ஜாக்கிக்கும் , இல்லறத்தை நல்லறமாய் பேணும் கிரி,:liebe028: கவிதா கார்த்திக்,:liebe028: சித்ரா தம்பதிகளுக்கும் நண்டு :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:சிண்டுகள் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி அம்போ என்று காணாமல் போன அப்பாவுக்கு :icon_wacko:ஒரு சாரி சொல்லி அழுகாச்சி :traurig001: காட்சி இல்லாமல் இறுதியில் சுபமாய் முடித்த கீதம் அக்காவுக்கு :icon_clap: ஒரு "ஓ" போட்டு விடை பெறுகிறேன் ..... :080402gudl_prv:

கீதம்
30-06-2011, 12:21 PM
https://lh4.googleusercontent.com/-YWQZjM0wYW8/TgxlR20U7RI/AAAAAAAAAr4/f_fAGKvUnK0/sundar%252520and%252520jakki.JPG
இல்லறத்தில் இணைய காத்து இருக்கும் சுந்தருக்கும் :love-smiley-008::wub: ஜாக்கிக்கும் , இல்லறத்தை நல்லறமாய் பேணும் கிரி,:liebe028: கவிதா கார்த்திக்,:liebe028: சித்ரா தம்பதிகளுக்கும் நண்டு :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:சிண்டுகள் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி அம்போ என்று காணாமல் போன அப்பாவுக்கு :icon_wacko:ஒரு சாரி சொல்லி அழுகாச்சி :traurig001: காட்சி இல்லாமல் இறுதியில் சுபமாய் முடித்த கீதம் அக்காவுக்கு :icon_clap: ஒரு "ஓ" போட்டு விடை பெறுகிறேன் ..... :080402gudl_prv:

ரவீ... உங்க பாராட்டுக்கும் அற்புதமான படத்துக்கும் நன்றி. உண்மையை சொல்லுங்க. சினிமாத்தனமா முடிச்சிட்டேன்னு நினைக்கறீங்களா? :confused:

Ravee
30-06-2011, 12:30 PM
ரவீ... உங்க பாராட்டுக்கும் அற்புதமான படத்துக்கும் நன்றி. உண்மையை சொல்லுங்க. சினிமாத்தனமா முடிச்சிட்டேன்னு நினைக்கறீங்களா? :confused:

தேவதை கதைகளில் எப்பவும் இறுதியில் சந்தோசமான முடிவுதானே அக்கா .... ஜாக்கியும் ஒரு தேவதைதானே .... முடிவு சரிதான் .... ஆனால் இதை கொஞ்சம் முன்னாலேயே போட்டு இருக்கலாம்......:rolleyes:

Nivas.T
30-06-2011, 01:18 PM
ஒரு எதார்த்தமான முடிவு, சுந்தரைப் பொறுத்தவரை ஜாக்கி மாறியிருந்தாலும் அவன் காதல் மாறவில்லை.

காதலின் வசம் விழுந்தவன் உடல்மட்டுமல்ல உள்ளம்தான் பெரிது என்று உணர்ந்தால் தான் காதலின் வெற்றியே. அப்படி ஒரு வெற்றி பெற்ற காதல்தான் இது. இப்படி காதலுக்காக ஒரு சில விசயங்களை துச்சமென எண்ணி தியாகம் செய்பவர்கள் அரிதே. அப்படி ஒரு அரிதான மனிதனாக இருந்து வாழ்கிறது சுந்தரின் கதாப்பாத்திரம்.

இளமையின் தேடல்வழி விழுந்துவிட்ட காதலினால் வினைகள் பல கண்டுவிட்டாலும் காதலில் அது சுகமே. அதன் அனுபவம் ஓர் அலாதி. இருப்பினும் பெண்கள் என்றும் காயத்தை மூடிமறைத்து இயல்பு வாழ்க்கைக்கு எளிதில் திரும்பிவிடுவார்கள். மதம், இனம், மொழி, நிறம், என்று எப்படி இருந்தாலும் பெண் பெண்தான் என்பதுபோல் எடுத்துக்காட்டாய் இருக்கிறது ஜாக்கி என்ற கதாப்பாத்திரம்.

உள்ளங்கள் என்றுமே உலர்வதில்லை சிலருக்கு. ஆனால் சிலரது உள்ளங்கள் என்றுமே காய்வதில்லை. இறக்க என்பது இவ்வளவுதான் என்று இறுதியிட முடியாத அளவுக்கு இருப்பதுதான் இறக்கம். அதுபோல் இருக்கும் எண்ணம் அனைவருக்கும் அமைவதில்லை, அப்படி அமைந்தவர் சிலரும் நெடுநாள் இருப்பதில்லை. இப்படி ஆயிரத்தில் ஒருவராய் இருக்கும் பண்புடைய இயல்பாய் இருக்கிறது கார்த்திக் என்கிற கதாப்பாத்திரம்.

உயிரினும் உயந்தது மானம், அந்த மானத்தினும் பெரிது நட்பு. அப்பா, அண்ணன், அக்கா, தம்பி என்று என்று ஆயிரம் பந்தங்கள் இருந்தாலும் உறவின் பாசத்தைவிட பன்மடங்கு மதிக்கத்தக்கது நட்பின் பாசம். அப்படி அந்த நட்பின் பெருமையாய் சிறப்பாய் இருப்பது கிரியின் கதாப்பாத்திரம்.

உணர்வுகளும் உறவுக்களும் இங்கு தோற்கவில்லை அவை என்றுமே இறப்பதில்லை என்று புதுவிதமாய் இன்னொரு கோணத்திலிருந்து சொல்லப்பட்ட கதை இது. பூக்கள் பூக்கும் தருணம் வாழ்வில் வசந்தம் தரும் உறவுகள் பூப்பதாய் இருக்கிறது.

மிக்க நன்றி.

மதி
30-06-2011, 02:12 PM
விக்ரமன் படம் பார்த்த உணர்வு.. :eek::eek::eek:

அவர் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூன்று வகை. நல்லவர், மிக நல்லவர், மிக மிக நல்லவர்..!! சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மட்டும் அந்த கதாபாத்திரத்தை வில்லத்தனமாக காட்டியிருக்கும். ஆனால் அவர் மிக நல்லவர்.:eek::eek:

கதைக்கு வருவோம். இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருமே பரிதாபப்பட வைக்கிறார்கள். சுந்தராகட்டும், கிரியாகட்டும், கதையின் நாயகியான ஜாக்கியாகட்டும், இல்லை கவிதா, சித்ரா.. இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் 'அச்சச்சோ' என உச் கொட்ட வைப்பதாகவே அவர் நிலமை இருக்கிறது. ஆமா.. இடையில் உதயநாயகி என்கிற கவிதா சுந்தரை ஒரு மாதிரி கண்ணோட்டத்துடன் பார்க்கிற மாதிரி காண்பித்துவிட்டு கடைசியில் கிரியும் கவிதாவும் சொந்தக்காரர்கள்..காதலித்தே திருமணம் செய்தார்கள் என சொல்வது இடிக்கிறது. அப்போ முன்னே சொன்னது.. எங்களை திசைத்திருப்புவதற்காகவா??:D:D:D:D

ஒரு கதாபாத்திரங்களும் கூட 'க்ரே ஷேட்' இல்லாமல் இருந்தது ஏமாற்றமே. ஆயினும் கதையோட்டமும் சம்பவக்கோர்வைகளும் விறுவிறுவென்று சென்றது. உண்மையில் நீங்கள் சிறந்த திரைக்கதையாசிரியராகலாம். :icon_ush::icon_ush:வழக்கம் போல புதுமைகளும் (சினிமா பாடல்களை சந்தர்ப்பத்திற்கேற்ப புகுத்தியது), மற்றும் மனவோட்டங்களை வரிப்படுத்தியதும் இக்கதையின் இன்னுமொரு சிறப்பு.

இறுதிபாகம் ஏமாற்றமே. சித்ரா ஒரு இரவிலேயே சமாதனமாவதாய் காட்டுவதும், ஜாக்கி உடனே சம்மதம் சொல்லுவதும். :confused::confused: அப்புறம் சில பாகங்களை படிக்கும் போது சில திரைப்படங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஜாக்கி வருமிடம் ஆடுகளம், மற்றும் உதயநாயகியுடன் கார்த்திக் சுற்றுவது அதை சித்ரா பார்த்தது, அஞ்சலி படங்களை ஞாபகப்படுத்தியது.

இத்தனை இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றமே. வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்க முடியாத வகையில் தனித்து இருக்கிறது கதாபாத்திரங்களும் அதன் குணங்களும். ஆனாலும் இத்தனை விஷயங்களையும் அழகாக கோர்த்து ஒரு இடத்திலேயும் பிசகாமல் சிக்கலில்லாமல் முடித்ததும்... எழுத ஆரம்பித்ததை முடித்தே தீருவேன் என்று தினம் ஒரு பாகம் பதிந்ததும் உங்களுக்கே இருக்கும் தனித்திறமை. அதற்கு எனது ஸ்பெஷல் வந்தனம் மற்றும் பாராட்டு....

(எல்லாம் இருக்கட்டும்.. சுந்தரின் வயது என்னனு என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை.. ஏன் கேக்கறேன்னு மட்டும் கேக்காதீங்க.. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:)

ஜானகி
30-06-2011, 02:18 PM
கொத்துக் கொத்தாகப் பூக்கள் பூக்கும் என்று எதிர்பார்த்த எங்கள் கண்முன்னே ஒரு கதம்ப மாலையல்லவா தெரிகிறது...!

அன்பு எனும் நார் இருந்தால், எல்லாவிதப் பூக்களையும் இணைத்துவிடலாம்...!


நடைமுறைக்கு ஒத்துவராவிட்டாலும், கற்பனையிலாவது சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சியே..!

கதம்ப மாலையில், உணர்ச்சிகளின் உயிரோட்டமும், பாத்திரங்களின் குணச் சித்திரமும், தத்துவங்களின் தாளிப்பும், தொய்வில்லாத நடையும், விறு விறுப்பான சஸ்பென்ஸும், பின்னிப் பிணந்து அழகூட்டியுள்ளன.

பல எழுத்தாளர்களின் பாதிப்பும் எதிரொலிக்கின்றன.

வாழ்த்துக்கள்...தொடரட்டும் பணி....

கீதம்
01-07-2011, 02:48 AM
பின்னூட்டமிட்டு கதை பற்றிய கருத்துக்களைத் தெரிவித்த ரவி, நிவாஸ், மதி, ஜானகி அம்மாவுக்கு என் நன்றி.:):):):)

அப்பாடா... இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. இப்படி உங்க மனசில் எழும் எண்ணங்களை எல்லாம் அழகாகத் தெரிவித்ததற்கும், நிறைய குறைகள் இருந்தும், குறைவாக சுட்டியதற்கும், நிறைகள் குறைவாக இருந்தும், நிறைவாக சுட்டியதற்கும் நன்றி மக்களே.:icon_b:

வழக்கம்போல கதைக்கான கதையைச் சொல்லிடறேன். :D

1. சும்மா ஜாலிக்காக எழுதியது, காவியம் படைக்கவேண்டும் என்னும் எண்ணமெல்லாம் இல்லை. மனத்துக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒரு சிக்கலிலிருந்து என்னை மீட்க நான் கையாண்ட யுக்தி தொடர்கதை எழுதுவது. ஆனால்... பலியாடுகளாய் நீங்கள் மாறியது பரிதாபத்துக்குரியது.:frown:

2. சமீபத்தில் என் அம்மா அவருடைய தோழி பற்றி சொல்லி வருந்தினார். நார்கோலெப்ஸி என்ற நோயைப் பற்றி அப்போதுதான் அறிந்துகொள்ள முடிந்தது. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. மகனும் மகளும் திருமணமாகி வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். அவர் அடிக்கடி தூங்குகிறார் என்னும் குற்றச்சாட்டுடன் உறவினர்களால் கேலிக்கு ஆளாகிக்கொண்டிருந்தாராம். கேஸ்காரருக்கு பணம் எடுக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பிவராததால் பயந்து பக்கத்துவீட்டாரைத் துணைக்கழைத்து உள்ளே சென்றபோது... பீரோ திறந்திருக்க... பணம் நகையெல்லாம் பார்வையில் படும்படி இருக்க... அந்தம்மாள் உறங்கிக்கொண்டிருந்தாராம். இன்னொரு நாள் சமையல் செய்யும்போது உறங்கிவிட... அடுப்பில் வைத்தது கருகும் வாடையால் அக்கம்பக்கத்தவர் கதவை உடைத்துவந்து தீவிபத்திலிருந்து இவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களுக்குப் பின் அவரை ஒரு கைதி போலவே எப்பொழுதும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியில் செல்கிறார் அவர் கணவர். வீட்டு வேலைகள் எதையும் செய்யவிடுவதில்லை. அவரைப் பார்க்கப்போனபோது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவர், அப்படியே நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கினாராம். எப்படித் துறுதுறுப்பாய் பேசிச் சிரித்து வளைய வந்தவர் இன்று இப்படி இருந்தும் இல்லாதவராய்க் காட்சியளிக்கிறாரே என்று அம்மா புலம்பியபின் எனக்கு ஒரு யோசனை எழுந்தது. இந்நோயைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் இப்படித் தூங்குபவர்களை 'தூங்குமூஞ்சி, மூதேவி‘ என்றெல்லாம் திட்டுவார்களே... ஒரு கதை மூலம் இதைப் பற்றி பிறரும் அறியச் செய்தால் என்ன என்று தோன்றியது. இது இரண்டாவது காரணம். :rolleyes:

3. இதுவரை பரீட்சித்துப் பார்க்காத, அதிகம் அனுபவமில்லாத காதல் களம் எடுத்து அதை வெற்றிகரமாக முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம் என்னும் சுயபரிசோதனை முயற்சி மூன்றாவது. இடையில் பாடல்களை இணைத்தால் சுவையாக இருக்கும் என்று எண்ணினேன். அதற்காக அந்தந்த கால கட்டத்தில் வெளிவந்த பாடல்களை எடுத்து அவற்றிலிருந்து பொருத்தமான வரிகளைத் தேர்ந்தெடுத்து தேவையான இடங்களில் புகுத்தி... எப்படியோ இந்த ஒரு மாதமும் என் மூளைக்கு நல்ல வேலை கொடுத்திருந்தேன்.:icon_rollout:

கதையின் முடிவும் சுபமாய் முடியவேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்ததால்தான் தலைப்பை 'பூக்கள் பூக்கும் தருணம்' என்று வைத்தேன். பூக்கள் பூக்கும் தருணம் பார்த்தாரும் இல்லையே என்பதைப் போல் மனங்கள் மாறும் தருணங்களையும் எதிர்பார்க்கமுடியாது என்னும் அர்த்தத்தில். ;)

சித்ராவின் மனம் மாறக் காரணம் உண்டு. தன்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கவேண்டும் என்று பாடுபடும்போது தான் மட்டும் அதற்கு குறுக்கே நிற்பதைப் போன்ற உணர்வு வந்தால் எந்த மனிதனுமே தன்னை மாற்றிக் கொள்ள முயல்வான். இப்படி ஒரு வசனத்தோடு... "இப்ப எல்லாரும் நல்லவங்களாயிட்டீங்க, நான் மட்டும் தான் பொல்லாதவனாப் போய்ட்டேன்":traurig001:

அதுவுமில்லாமல் சித்ராவுக்கு பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் பற்றிக் குறிப்பிட்டக் காரணம், ஜாக்கியை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் இயல்பாயில்லை என்பதை உணர்த்தவே.:mini023:

இன்னொன்று... ஜானகி அம்மா குறிப்பிடுவதைப் போல்... நிஜ வாழ்க்கையில் இப்படி எல்லாம் சுமுகமாக முடியுமென்ற உத்திரவாதம் இல்லாதபோது நிழலிலாவது அதை நிறைவேற்றி மகிழலாமே என்னும் அல்ப ஆசையும்.:cool:

இன்னொரு சமாதானமும் சொல்லலாம்... மனிதர்களில் எல்லாருமே நல்லவர்களுமில்லை, கெட்டவர்களுமில்லை என்பது போல். சுந்தரைப் பொறுத்தவரை, கவிதாவைப் பொறுத்தவரை கிரி நல்லவன், ஆனால் அவனுடைய பெற்றோரையும், கவிதாவின் பெற்றோரையும் பொறுத்தவரை நம்பிக்கை துரோகி, அல்லது சுயநலக்காரன் அல்லது திமிர்பிடித்தவன் இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் கதைமாந்தர்கள் எல்லாரும் நல்லவர்களாய்க் காட்டியிருப்பதில் தவறேதுமில்லையென்று நினைக்கிறேன். சில சமயம் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே எதிரிகளாய் அமைவது உண்டு அல்லவா?:icon_p:

ஜாக்கி மனம் மாறக் காரணம்: ஜாக்கியின் மனதில் சுந்தரின் மேல் காதல் இருந்தாலும் முதலில் தவிர்க்கக் காரணம் அவன் அம்மா இறந்த குற்ற உணர்வு.:huh:

இரண்டாவது முறை மறுக்கக் காரணம், அவளது நோய்... அதனால் அவள் இழந்த பொலிவு.:frown:

சுந்தர் இன்னமும் தன் மீது தீராத காதலுடன் இருக்கிறான் என்பதை அவளைப் பார்த்த நொடி மயங்கிவிழும்போது அறியமுடிகிறது. எந்த அளவுக்கு மனம் பலவீனப்பட்டிருந்தால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும்! மற்றக் காட்சிகளையும் வசனங்களையும் வாசகர் யூகத்துக்கே விட்டுவிட்டதால் நிறைவுறாத தன்மை பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது.

அடுத்தது, சுந்தரின் மீதான உதயநாயகியின் கண்ணோட்டம். :cool: இதற்கும் காரணங்கள் உண்டு. உதயநாயகியின் பணி அப்படி. எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றுப் பேசவேண்டிய பணி. அவளுக்கும் இயல்பாகவே அந்தக் குணம் இருந்ததால் குறும்பாய்ப் பேசுகிறாள்.

ஒரு அழகான ஆண்மகனைக் கண்டால் பெண்கள் கண்ணோட்டமிடுவது (சைட் அடிப்பது) பல இடங்களிலும் நடப்பதுதான்.(ஆண்களுக்கு மட்டுமே அந்த உரிமையும் சலுகையும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? :)) இந்த இடத்தில் நான் செய்த தவறு சுந்தரை வர்ணிக்காமல் விட்டதுதான். இந்த இடத்தில் மட்டுமல்ல, எந்த இடத்திலுமே சுந்தரைப் பற்றிய வர்ணனை இல்லை. எழுதவேண்டும் என்று நினைத்து எழுதாமல் விட்டதால் என்னை நானே குட்டிக்கொள்கிறேன். :sport-smiley-019: நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதி முடித்துவிட்டேன். அதைச் சரியாக முறையில் வாசகர்களிடம் சேர்ப்பிப்பதில் மட்டும் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறேன் போலும். :icon_p:

சுந்தர் இருபது வருடத்துக்கு முன்னால் ஜாக்கியை முதன் முதலாகப் பார்த்தான். அப்போது அவன் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது. (டீன் ஏஜ்... :whistling:)

டீன் ஏஜ் காதலில் முதிர்ச்சி இருக்காது என்பார்கள். ஆனால் சுந்தரால் அந்தக் காதலை அத்தனை எளிதில் மறக்கமுடியவில்லை. இருபது வருடங்களுக்குப் பின்னும், இளமையின் அழகு குறைந்தபின்னும் காதல் மட்டும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொல்ல நினைத்தேன். இத்தகையக் காதலொன்றைக் கேள்விப்பட்டவள் என்பதால் அதையே கதைக்கருவாய் எடுத்தேன். அவர்கள் பெற்றோர் பகையால் இறுதிவரை இணையவில்லை என்பது உண்மை.:frown:

இனி இப்போதைக்கு அடுத்த முயற்சி பயிற்சி எதுவும் இல்லையென்பதால் மன்ற மக்கள் கலவரப்படவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.:icon_dance:

அப்புறம் வேறென்ன? எதுவாக இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க. அடுத்தடுத்த கதைகளில் ஜமாய்ச்சிடலாம்.:thumbsup:

மதி
01-07-2011, 04:27 AM
மதித்து பதிலளித்ததற்கு நன்றி.. :D:D:D:D:D

gmsganesan
01-07-2011, 04:43 AM
மிகவும் நன்றாக இருக்கிறது.

Ravee
01-07-2011, 06:34 AM
அப்புறம் வேறென்ன? எதுவாக இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க. அடுத்தடுத்த கதைகளில் ஜமாய்ச்சிடலாம்... :)



http://reviews.in.88db.com/images/yawn-baby.jpg


பாவம் ரொம்ப அசதியா இருக்கீங்க ..... யாரும் இந்த ஸ்பீடில தொடர்கதை எழுதினதா மன்றத்தில் தகவல் இல்லை.... அதுவும் 30 பகுதிகள் 30 ம் தேதிக்குள் பதிவிட்டது சாதனை ...... கொஞ்ச நாள் ஒய்வு எடுங்க .... அடுத்த கதை களத்துக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்வோம் .... கதையின் அந்த அந்த வாரத்துக்கு படம் நான், பகுதி நீங்கள் ஓகேயா ? ..... :icon_b:

innamburan
01-07-2011, 06:39 AM
உடனடி பதில்: சினிமாத்தனமாக இல்லை. மறுபடியும் படித்து விட்டு எழுதணும். நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
01-07-2011, 08:32 AM
அடுத்தப் பகுதி போடும்வரை கண்ணைத் திறக்கமாட்டேன் என்று சபதமெடுத்திருக்கும் ஜெய்க்கும்சபதம் நிறைவேறிவிட்டது கீதம் அவர்களே ...அருமையான முடிவுரை ...இதில் தோன்றும் முதல் சந்தேகம் இவர்கள் முதுமையில் இணைந்து வாழ அடியெடுத்து வைக்கும் ஜோடிகளா ? என்று தான் ..சிறுவயதில் தோன்றிய காதலின் ஈர்ப்பு இத்தனை ஆண்டு காலமாக காத்திருந்து நிறைவேறிய காதலின் வாழ்க்கை துவக்கமென நிறைவாக முடித்து விட்டீர்கள் ...வாழ்த்துகள் சுந்தர் மற்றும் ஜாக்கிக்கு..

சித்ராவின் மனம் மாறக் காரணம் உண்டு. தன்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கவேண்டும் என்று பாடுபடும்போது தான் மட்டும் அதற்கு குறுக்கே நிற்பதைப் போன்ற உணர்வு வந்தால் எந்த மனிதனுமே தன்னை மாற்றிக் கொள்ள முயல்வான். இப்படி ஒரு வசனத்தோடு... "இப்ப எல்லாரும் நல்லவங்களாயிட்டீங்க, நான் மட்டும் தான் பொல்லாதவனாப் போய்ட்டேன்"ஒருவர் மீதுள்ள கோபம் ஒரே நாளில் தீர்ந்து விடுமா என்ன ? ..அது போல் ஜாக்கி மற்றும் சுந்தர் மீதான காதலின் நிலை ஒத்து கொள்ளலாம் ...தன தம்பியின் இந்நிலைக்கு காரணமான மற்றும் தன தாயின் இறப்புக்கு காரணமான ஜாக்கியின் மீதான கோபம் எப்படி அக்காவிற்கு குறைந்தது ? பத்து வருடமாக ஒரு பெண்ணை தனக்கு தெரியாமல் பாதுகாத்த கணவன் மீது தனக்கு பிடிக்காத பெண்ணிற்கு எப்படி உதவலாம் என்று கோபம் வருவதென்பது பெண்களின் இயற்கை ..அப்படியிருக்க இந்த ஒரு நிலைபாடில் மட்டும் சிறிது குறை இருப்பதாக தோன்றுகிறது ...


சமீபத்தில் என் அம்மா அவருடைய தோழி பற்றி சொல்லி வருந்தினார். நார்கோலெப்ஸி என்ற நோயைப் பற்றி அப்போதுதான் அறிந்துகொள்ள முடிந்தது. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. மகனும் மகளும் திருமணமாகி வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். அவர் அடிக்கடி தூங்குகிறார் என்னும் குற்றச்சாட்டுடன் உறவினர்களால் கேலிக்கு ஆளாகிக்கொண்டிருந்தாராம். கேஸ்காரருக்கு பணம் எடுக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பிவராததால் பயந்து பக்கத்துவீட்டாரைத் துணைக்கழைத்து உள்ளே சென்றபோது... பீரோ திறந்திருக்க... பணம் நகையெல்லாம் பார்வையில் படும்படி இருக்க... அந்தம்மாள் உறங்கிக்கொண்டிருந்தாராம். இன்னொரு நாள் சமையல் செய்யும்போது உறங்கிவிட... அடுப்பில் வைத்தது கருகும் வாடையால் அக்கம்பக்கத்தவர் கதவை உடைத்துவந்து தீவிபத்திலிருந்து இவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களுக்குப் பின் அவரை ஒரு கைதி போலவே எப்பொழுதும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியில் செல்கிறார் அவர் கணவர். வீட்டு வேலைகள் எதையும் செய்யவிடுவதில்லை. அவரைப் பார்க்கப்போனபோது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவர், அப்படியே நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கினாராம். எப்படித் துறுதுறுப்பாய் பேசிச் சிரித்து வளைய வந்தவர் இன்று இப்படி இருந்தும் இல்லாதவராய்க் காட்சியளிக்கிறாரே என்று அம்மா புலம்பியபின் எனக்கு ஒரு யோசனை எழுந்தது. இந்நோயைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் இப்படித் தூங்குபவர்களை 'தூங்குமூஞ்சி, மூதேவி‘ என்றெல்லாம் திட்டுவார்களே... ஒரு கதை மூலம் இதைப் பற்றி பிறரும் அறியச் செய்தால் என்ன என்று தோன்றியது. இது இரண்டாவது காரணம்.

பெரிதும் அறிய படாத ஒரு குறைபாட்டினை களமாக கொண்டு மற்றவர்கள் அறியும் வகையில் சிறப்பாக வடித்துள்ளீர்கள் ....மற்றொன்று குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு விரைவாக எங்களுக்கொரு அற்புத படிப்பினை அளித்த கீதம் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்
http://im-smiley.com/imgs/big-animated/beer.gif ...
(http://im-smiley.com/smiley/flash-smiley/)

Ravee
02-07-2011, 11:45 PM
அப்புறம் வேறென்ன? எதுவாக இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க. அடுத்தடுத்த கதைகளில் ஜமாய்ச்சிடலாம்... :)





பாவம் ரொம்ப அசதியா இருக்கீங்க ..... யாரும் இந்த ஸ்பீடில தொடர்கதை எழுதினதா மன்றத்தில் தகவல் இல்லை.... அதுவும் 30 பகுதிகள் 30 ம் தேதிக்குள் பதிவிட்டது சாதனை ...... கொஞ்ச நாள் ஒய்வு எடுங்க .... அடுத்த கதை களத்துக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்வோம் .... கதையின் அந்த அந்த வாரத்துக்கு படம் நான், பகுதி நீங்கள் ஓகேயா ? ..... :icon_b:



அக்காவுக்கு சம்மதம் இல்லையோ ???

கீதம்
03-07-2011, 01:34 AM
ரவீ... அக்கா இப்ப கொஞ்சம் பிஸி. அதான் பதில் சொல்லல. குழந்தைகளுக்கு அரையாண்டு விடுமுறை நேற்றிலிருந்து துவங்க, உறவினர் வருகை இனிதே இணைய... அக்காவின் சைனஸ் பிரச்சனையும் நேரம் பார்த்துக் கைகோர்த்துக்கொள்ள... உடனடியாய் பதில் சொல்ல முடியல. கொஞ்சம் பொறுத்தருள்க. விரைவில் வந்து இணைகிறேன்.

Ravee
03-07-2011, 01:51 AM
விடுமுறையை சந்தோசமாக கொண்டாடுங்கள் அக்கா ........... மீண்டும் சந்திப்போம்.......... :)

பாரதி
03-07-2011, 09:07 AM
:aktion033::080402cool_prv::icon_03:
வழமையான கதையாக முடிந்தாலும்...
ஒவ்வொரு பாத்திரத்தையும் கவனமாக வடிவமைத்து,
கதையில் திருப்பங்களை அமைத்து,
சுவையான பாடல்களை பொருத்தமாக சேர்த்து,
எல்லாவற்றையும் விட அசராமல் மீண்டும் ஒரு தொடர் தந்து அசத்திய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்கள் உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.

கீதம்
03-07-2011, 11:17 PM
முடிச்சிட்டீங்களா...??!! இனி தான் நான் படிக்கவே ஆரம்பிக்கப் போறேன்...!!

உங்க தொடர் அடுத்த பாகம் வரைக் காக்க விடுவதில்லை.. ஆகவே தான் படிக்கவில்லை அக்கா..

கட்டாயம் படித்து விரைவில் பதிலிடுகிறேன். :)

நன்றி பூமகள்.


மிகவும் நன்றாக இருக்கிறது.

உங்கள் முதல் பதிவே இக்கதைக்குப் பின்னூட்டமானதில் மிகவும் மகிழ்கிறேன். உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் மன்றத்தில் முழுமையாய் இணைந்துகொள்ளுங்கள் நண்பரே.


அப்புறம் வேறென்ன? எதுவாக இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்க. அடுத்தடுத்த கதைகளில் ஜமாய்ச்சிடலாம்... :)

பாவம் ரொம்ப அசதியா இருக்கீங்க ..... யாரும் இந்த ஸ்பீடில தொடர்கதை எழுதினதா மன்றத்தில் தகவல் இல்லை.... அதுவும் 30 பகுதிகள் 30 ம் தேதிக்குள் பதிவிட்டது சாதனை ...... கொஞ்ச நாள் ஒய்வு எடுங்க .... அடுத்த கதை களத்துக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்வோம் .... கதையின் அந்த அந்த வாரத்துக்கு படம் நான், பகுதி நீங்கள் ஓகேயா ? ..... :icon_b: [/INDENT]

நன்றி ரவி. அந்தக் கொட்டாவிப் பாப்பாவைப் பார்த்தா... எனக்கும் தூக்கம்தான் வருது. (ஜாக்கி இதைப் பார்க்காமல் இருக்கக் கடவது.:) )

அடுத்த கதைக்கு நீங்க சொன்னபடி செய்யலாம் ரவி. உங்க பிரமாதமான படங்களும் கதையைத் தூக்கி நிறுத்த உதவும் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே...:icon_b:


உடனடி பதில்: சினிமாத்தனமாக இல்லை. மறுபடியும் படித்து விட்டு எழுதணும். நன்றி.

உங்கள் நேரத்தைச் செலவிட்டு இக்கதையைப் படித்ததோடு உடனடிக் கருத்து வெளியிட்டதற்கு நன்றி ஐயா.

கீதம்
03-07-2011, 11:26 PM
சபதம் நிறைவேறிவிட்டது கீதம் அவர்களே ...அருமையான முடிவுரை ...இதில் தோன்றும் முதல் சந்தேகம் இவர்கள் முதுமையில் இணைந்து வாழ அடியெடுத்து வைக்கும் ஜோடிகளா ? என்று தான் ..சிறுவயதில் தோன்றிய காதலின் ஈர்ப்பு இத்தனை ஆண்டு காலமாக காத்திருந்து நிறைவேறிய காதலின் வாழ்க்கை துவக்கமென நிறைவாக முடித்து விட்டீர்கள் ...வாழ்த்துகள் சுந்தர் மற்றும் ஜாக்கிக்கு..
ஒருவர் மீதுள்ள கோபம் ஒரே நாளில் தீர்ந்து விடுமா என்ன ? ..அது போல் ஜாக்கி மற்றும் சுந்தர் மீதான காதலின் நிலை ஒத்து கொள்ளலாம் ...தன தம்பியின் இந்நிலைக்கு காரணமான மற்றும் தன தாயின் இறப்புக்கு காரணமான ஜாக்கியின் மீதான கோபம் எப்படி அக்காவிற்கு குறைந்தது ? பத்து வருடமாக ஒரு பெண்ணை தனக்கு தெரியாமல் பாதுகாத்த கணவன் மீது தனக்கு பிடிக்காத பெண்ணிற்கு எப்படி உதவலாம் என்று கோபம் வருவதென்பது பெண்களின் இயற்கை ..அப்படியிருக்க இந்த ஒரு நிலைபாடில் மட்டும் சிறிது குறை இருப்பதாக தோன்றுகிறது ...



பெரிதும் அறிய படாத ஒரு குறைபாட்டினை களமாக கொண்டு மற்றவர்கள் அறியும் வகையில் சிறப்பாக வடித்துள்ளீர்கள் ....மற்றொன்று குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு விரைவாக எங்களுக்கொரு அற்புத படிப்பினை அளித்த கீதம் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்
http://im-smiley.com/imgs/big-animated/beer.gif ...
(http://im-smiley.com/smiley/flash-smiley/)

விரிவான விமர்சனத்துக்கு நன்றி ஜெய். முடிந்தவரை விளக்கம் அளித்திருக்கிறேன். கடைசிப்பகுதியை இன்னும் கொஞ்சம் நீட்டி முடித்திருக்கலாம். அப்போது மனமாற்றங்களையும் எண்ணவோட்டங்களையும் விரிவாக எழுத முடிந்திருக்கும். ஆனால் சூழல் கொஞ்சம் ஒத்துழைக்காததால் அதிரடியாய் முடிக்கவேண்டியதாயிற்று. ஒவ்வொன்றிலிருந்தும் புதிதாய்க் கற்றுக்கொள்ளமுடிகிறதே....:icon_b:

அதுசரி, எதற்கு பூங்கொத்தைக் கையில் கொடுக்காமல் காட்டிக் காட்டி ஏமாத்தறீங்க?:D


விடுமுறையை சந்தோசமாக கொண்டாடுங்கள் அக்கா ........... மீண்டும் சந்திப்போம்.......... :)

நன்றி ரவீ.:)


:aktion033::080402cool_prv::icon_03:
வழமையான கதையாக முடிந்தாலும்...
ஒவ்வொரு பாத்திரத்தையும் கவனமாக வடிவமைத்து,
கதையில் திருப்பங்களை அமைத்து,
சுவையான பாடல்களை பொருத்தமாக சேர்த்து,
எல்லாவற்றையும் விட அசராமல் மீண்டும் ஒரு தொடர் தந்து அசத்திய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
உங்கள் உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.

உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி பாரதி அவர்களே.

அன்புரசிகன்
04-07-2011, 12:30 AM
அழகாக எடுத்த தொடரை முடித்துள்ளீர்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள் அக்கா...

அனைத்து பாத்திரங்களும் சூழ்நிலைகளும் யதார்த்தமாக பயணித்தது. முன்பே சொன்னது போல் பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்து கதை சொல்வது போல் அத்தனை யதார்த்த அழுத்தம் எழுத்தில் தென்பட்டது.

இறுதி இரண்டு பாகத்தில் பச்சை மாறி சிகப்பிற்கு மாறும் வீதி சமிக்கை விளக்கை கண்டு விரைவு படுத்தும் மோட்டார் வண்டிகளை போல் விரைவு படுத்தியுள்ளீர்கள். அது குறையாக தெரியவில்லை. அதற்கு முதல் பாகத்தில் இந்த இரண்டையும் பகிர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முடிவு யதார்த்தமாக இல்லை. ஆனால் கதைக்கு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் அக்கா...

(கேட்டவுடனே தொடர்கதை ஆரம்பித்ததற்கு நன்றி. ஆமா.. அடுத்தது எப்போ??? :) )

கீதம்
08-07-2011, 01:47 AM
அழகாக எடுத்த தொடரை முடித்துள்ளீர்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள் அக்கா...

அனைத்து பாத்திரங்களும் சூழ்நிலைகளும் யதார்த்தமாக பயணித்தது. முன்பே சொன்னது போல் பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்து கதை சொல்வது போல் அத்தனை யதார்த்த அழுத்தம் எழுத்தில் தென்பட்டது.

இறுதி இரண்டு பாகத்தில் பச்சை மாறி சிகப்பிற்கு மாறும் வீதி சமிக்கை விளக்கை கண்டு விரைவு படுத்தும் மோட்டார் வண்டிகளை போல் விரைவு படுத்தியுள்ளீர்கள். அது குறையாக தெரியவில்லை. அதற்கு முதல் பாகத்தில் இந்த இரண்டையும் பகிர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முடிவு யதார்த்தமாக இல்லை. ஆனால் கதைக்கு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் அக்கா...

வாழ்த்துக்கு நன்றி அன்பு. முன்வைத்த விமர்சனங்களை மனதில் பதித்துக்கொள்கிறேன். அடுத்தடுத்த முறைகளில் கவனத்தில் கொள்வேன்.:icon_b:


(கேட்டவுடனே தொடர்கதை ஆரம்பித்ததற்கு நன்றி. ஆமா.. அடுத்தது எப்போ??? :) )

:traurig001::traurig001::traurig001:

பூமகள்
08-07-2011, 11:20 AM
ஒருவழியாய் முப்பது பாகத்தையும் படித்து முடித்துவிட்டேன் அக்கா..

என்னவென்று சொல்வது.. எதிலிருந்து ஆரம்பிப்பது..

ஜாக்குலின் பாத்திர படைப்பு எனக்கு மதராசப்பட்டின எமியை நினைவூட்டியது.. அவள் பற்றிய முதல் வர்ணனையே மனக்கண்ணில் அவள் தேவதை போல வளைய வர வைத்தது..

படிக்க சில தினங்கள் எடுத்துக் கொண்டதால் ஜாக்கி என் கனவில் தினமும் வந்தாள்.. எத்தனை திறமையான வார்த்தையாடல்கள்... இயல்பான காட்சியமைப்புகள்..

காட்சிக்குள் நம்மைக் கட்டிப் போடுவதில் வெற்றி.. பாடல்கள் பல எனக்குத் தெரிந்திராதவை.. அனைத்தும் அருமை.. அந்தந்த பாகத்துக்கு தகுந்தது போல் எப்படி உங்களால் இப்படி சரியான பாடலை அதுவும் சரணத்தோடு சேர்த்து எழுத முடிந்தது... மெச்சுகிறேன் அக்கா..

ஜாக்கி, சுந்தர் காதல் வெகு சிறப்பு.. மனிதர்களுக்கிடையேயான முடிச்சினை போட்ட இடம் அருமை. பாராட்டுகள்.

கீதம்
11-07-2011, 03:45 AM
ஒருவழியாய் முப்பது பாகத்தையும் படித்து முடித்துவிட்டேன் அக்கா..

என்னவென்று சொல்வது.. எதிலிருந்து ஆரம்பிப்பது..

ஜாக்குலின் பாத்திர படைப்பு எனக்கு மதராசப்பட்டின எமியை நினைவூட்டியது.. அவள் பற்றிய முதல் வர்ணனையே மனக்கண்ணில் அவள் தேவதை போல வளைய வர வைத்தது..

படிக்க சில தினங்கள் எடுத்துக் கொண்டதால் ஜாக்கி என் கனவில் தினமும் வந்தாள்.. எத்தனை திறமையான வார்த்தையாடல்கள்... இயல்பான காட்சியமைப்புகள்..

காட்சிக்குள் நம்மைக் கட்டிப் போடுவதில் வெற்றி.. பாடல்கள் பல எனக்குத் தெரிந்திராதவை.. அனைத்தும் அருமை.. அந்தந்த பாகத்துக்கு தகுந்தது போல் எப்படி உங்களால் இப்படி சரியான பாடலை அதுவும் சரணத்தோடு சேர்த்து எழுத முடிந்தது... மெச்சுகிறேன் அக்கா..

ஜாக்கி, சுந்தர் காதல் வெகு சிறப்பு.. மனிதர்களுக்கிடையேயான முடிச்சினை போட்ட இடம் அருமை. பாராட்டுகள்.

நன்றி பூமகள். கிடைக்கும் நேரத்தில் முழுக்கதையையும் படித்ததற்கும், விமர்சனப்பாராட்டுக்கும் நன்றிம்மா.:)

KAMAKSHE
11-07-2011, 04:52 PM
கீதம்... கீதம்....கீதம்....

ஒரே மூச்சில் இன்று படித்து முடித்தேன்.

அதே மூச்சில் என் விமர்சனமும், இதோ

சுந்தரின் காதல் - ( சும்மா வார்த்தை ஜாலத்துக்காக எழுதப்படவில்லை. கீழே போட்டுள்ள ஒவ்வொரு காதலுக்கும் அர்த்தமுண்டு சுந்தரின் காதல் கதையில் )

கவிதைக் காதல்

காய்ச்சும் காதல்

கிண்டும் காதல்

கீறும் காதல்

குப்பைக் காதல்

கூடும் காதல்

கெடுக்கும் காதல்

கேள்விக் காதல்

கையாலாகாத காதல்

கொல்லும் காதல்

கோபக் காதல்

************************

சண்டைக் காதல்

சாக்கடைக் காதல்

சிரிப்புக் காதல், சிந்தனைக் காதல்

சீறும் காதல்

சுடும் காதல்

சூடும் காதல்

செல்லக் காதல்

சேட்டைக் காதல்

சைகைக் காதல்

சொற்பக் காதல்

சோகக் காதல்

************************

ஞாயிற்றுக் காதல்

************************

டக்டக்டக் காதல்

டமாரக் காதல்

டிக்டிக்டிக் காதல்

டீப் காதல்

டூவிடும் காதல்

************************

தவிக்கும் காதல்

தாங்கும் காதல்

தித்திக்கும் காதல், திகட்டும் காதல், திட்டும் காதல்

தீவிரக் காதல், தீராக் காதல், தீயான காதல்

துவளும் காதல்

தூண்டும் காதல்

தெளிந்த காதல்

தேய்ந்த காதல்

தைரியக் காதல்

தொடரும் காதல்

தோற்கும் காதல்

************************

நல்ல காதல்

நாளான காதல்

நில்லாக் காதல்

நீளக் காதல்

நுட்பக் காதல்

நூலான காதல்

நெறிக்கும் காதல்

நேர்க் காதல்

நைசான காதல்

நொய்நொய் காதல்

நோவும் காதல்

************************

பரவசக் காதல்

பாடும் காதல் ( இல்லையா பின்ன? )

பிடுங்கும் காதல்

பீறிடும் காதல்

புஷ்பக் காதல்

பூக்கும் காதல்

பெண்டெடுக்கும் காதல்

பேய்க் காதல்

பைபை காதல் ( bye )

பொய்க் காதல்

போகும் காதல்

பெளதிகக் காதல்

************************

மல்லிகைக் காதல்

மாமிசக் காதல்

மின்சாரக் காதல்

மீளாக் காதல்

மும்முரக் காதல்

மூர்க்கக் காதல்

மெல்லிய காதல்

மேதாவிக் காதல்

மையிடாக் காதல்

மொள்ளமாரிக் காதல்

மோசக் காதல்

மெளனக் காதல்

************************

யவ்வனக் காதல்

யாதுமாகிக் காதல்

************************

ரம்பக் காதல்

ராமர் காதல்

ரிங்ரிங் இல்லாக் காதல்

ரீல் இல்லாக் காதல்

ருத்ரக் காதல்

ரூல் இல்லாக் காதல்

ரெட் காதல்

ரேஷன் காதல்

ரைட்ரைட் காதல்

ரொம்பக் காதல், ரெளடிக் காதல்

ரோஷக் காதல்

************************

லவ்லவ் காதல்

லாங் காதல்

லிப் டு லிப் காதல்

லீக் காதல் ( league )

லுக்ஸ் காதல்

லூஸ் காதல்

லெஃப்ட்ரைட் காதல்

லேட் காதல்

லைலா காதல்

லொள்லொள் காதல்

லோலோ காதல்

************************

வசீகரக் காதல்

வாலிபக் காதல்

விலக்கும் காதல்

வீக் காதல்

வூட்டுக் காதல்

வெங்காயக் காதல்

வேகாக் காதல்

வையும் காதல்

வொண்டர்ஃபுல் காதல்

************************

அக்காவின் திருமண ஏற்பாடுகள் தடைபடுமே? - இருந்தாலும் ஜாக்கியை அழைக்க ஓடுகிறான்.

உதவிக்கு அம்மா கெஞ்சி அழைத்தாலும் காது கொடுக்கவில்லை. மாறாக ஜாக்கி என்ன நினைக்கிறாள் என்றே யோசனை

இதோ அம்மா படியில் உருண்டு மண்டை உடை பட்டாள் - இருந்தும் ஜாக்கி என்ன செய்கிறாள் என்ற எண்ணம்

அம்மா இறந்துவிட்டாள் - ஓஹோ - ஜாக்கிக்கு என்ன ஆயிருக்கும் ? இதுதான் மனதில்

தம்பிக்கு திருமணம் ஆகவில்லையென பின்னால் துடித்து கதறப்போகும் அக்காவின் திருமணம் இன்று நின்றதே - ம்கூம் - கவலையில்லை ஜாக்கி எங்கே போனாள்?

அப்பா மனமுடைந்தார் , ஓடியும் விட்டார். ஏன் ? அத்தனை பாரமும் அவர் ஒருவருக்குத்தான் இல்லையா? சுந்தர் என்ன அவர் கவலையில் பங்கெடுக்கவா போகிறான் ? - அவனுக்கு ஜாக்கி ஜாக்கி ....

கிரி போன்ற நண்பன் யாருக்கு கிடைப்பார்கள்? - ஒருதலையாக்கினானே அந்த நட்பை - ஜாக்கியின் ஃப்ளாஷ் பாக்கால்

அக்காவின் பிரசவம் - ஜாக்கி இங்கு இருக்கிறாளா?

அக்காவின் மன அழுத்தம் - அய்யோ பாவம் ஜாக்கி வாழ்க்கை இப்படி ஆயிற்றே?

அத்தானின் நல்ல குணம் - அவர் அப்படித்தான் - என் ஜாக்கி பாவம்

அக்கா அத்தான் வாழ்க்கையில் விரிசல் - அய்யோ ஜாக்கி இப்பொழுதாவது கிடைப்பாளா எனக்கு?

ஜாக்கி இதோ

வந்து விட்டாள் என்னிடம்

ஜாக்கி

தந்து விட்டாள் தன்னை

இனிமேலாவது காதல் எனும் புகை மண்டலத்திலிருந்து வெளியே வந்து, கண்களைக்கழுவி, வெளிச்சத்தைப் பார்த்து வெளி உலகத்தில் வசிக்க முற்படுவானா சுந்தர்?

கீதம்...

கீதம்....

கீதம்....

WONDERFUL SCRIPT - LOVELY NARRATIONS - CRAZY BUT BEAUTIFUL LOVE STORY -

கதையை விழுந்து விழுந்து படித்த காமாக்ஷி