PDA

View Full Version : காலம் மாறியதுM.Jagadeesan
30-05-2011, 03:04 PM
பயந்துகொண்டே கதவைத் தட்டினார் தர்மலிங்கம்.

கதவைத் திறந்தான் பூபதி. தர்மலிங்கத்தைக் கண்டவுடன் கடுங்கோபம் அடைந்தான் பூபதி."பணம் கேட்டு வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்ல, ஒருதடவ சொன்னா புத்தியில ஏறாதா?" பொரிந்து தள்ளினான் பூபதி.

"இல்ல தம்பி, வீட்டுல கொஞ்சம் பணக்கஷ்டம், அதான்.." என்று இழுத்தார் தர்மலிங்கம்.

"யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்ல. சிக்கனமா இருக்கணும்னு உனக்குத் தெரியாதா? பணம் கையில இருந்தா தாம் தூம்னு செலவு பண்ணவேண்டியது; பணம் இல்லாட்டி இங்க வந்து தலைய சொரியவேண்டியது;ஒன்னாந்தேதியான ஐயாவுக்கு மூக்குல வேர்த்திருமோ? பணக்கஷ்டம்னா யார்கிட்டயாவது போய்க் கடன் கேளு. நகைநட்டு இருந்தா அடகு வை. நேத்துகூட வந்தியாமே! எம் பொண்டாட்டி சொன்னா. வீட்ல தனியா இருக்குற பொம்பளகிட்ட உனக்கு என்ன பேச்சு? மரியாத கெட்டுரும்.உன்னையெல்லாம் வீட்டுக்குள்ளாற நுழையவிட்டதே தப்பு. போய்யா வெளிய" என்று சொல்லி பூபதி கதவை சாத்தினான்.

ஆறு மாதமாக வீட்டுவாடகை தராமல் இப்படி இழுத்தடிக்கிறானே என்று தர்மலிங்கம் தள்ளாடியபடியே நடந்து சென்றார்.

Nivas.T
30-05-2011, 03:07 PM
:eek:
கடன் கொடுத்தவன் என்று எதிர்பார்த்தேன்:aetsch013:
வீட்டுக்காரன் என்று சொல்லிவிட்டீர்கள்:confused::frown:

ஒரு நொடிக்கதை
பிரமாதம் :)

M.Jagadeesan
30-05-2011, 03:26 PM
பாராட்டுக்கு நன்றி நிவாஸ்.

சிவா.ஜி
30-05-2011, 05:06 PM
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன்...அந்தக்காலம்...
கடன்கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்குகிறான் இந்த வேந்தன்.......

பாராட்டுக்கள் ஜெகதீசன். சுருங்கிய வரிகளில் அடங்கியக் கருத்துக்கள் அருமை.

aren
31-05-2011, 03:21 AM
நான் மகன் அப்பாவிடன் பணம் கேட்கிறான் என்று நினைத்தேன்.

M.Jagadeesan
31-05-2011, 04:06 AM
சிவா.ஜி,ஆரென் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

அன்புரசிகன்
31-05-2011, 04:41 AM
உதுக்கெல்லாம் சிங்கப்பாதை தான் சரி... :D
மனதை நெருடும் கதை. கையாலாகத தர்மலிங்கம்...
வாழ்த்துக்கள் ஐயா.

M.Jagadeesan
31-05-2011, 06:00 AM
உதுக்கெல்லாம் சிங்கப்பாதை தான் சரி... :D
மனதை நெருடும் கதை. கையாலாகத தர்மலிங்கம்...
வாழ்த்துக்கள் ஐயா.

வாழ்த்துக்கு நன்றி!

கீதம்
31-05-2011, 08:40 AM
புலிவாலைப் பிடித்த கதைதான். வீடும் காலியாகாது, வாடகையும் வசூலாகாது, வசவு வேறு கூடுதலாக! பாவம் அந்த தர்மலிங்கம். குறுங்கதையானாலும் பிரமாதம்.

sarcharan
31-05-2011, 09:29 AM
காலம் கலிகாலம் ஆகிபோச்சு என்பது சரிதான் போல...

முதல்ல வயதான அப்பா தான் தன்னோட மகன்கிட்ட உதவி கேக்குறாருன்னு நெனச்சேன்

என்கிட்டயும் கடன வாங்கீட்டு என்னையும் பல பேரு சுத்தல்ல விட்டு இருக்காங்க...

Nivas.T
31-05-2011, 09:48 AM
காலம் கலிகாலம் ஆகிபோச்சு என்பது சரிதான் போல...

முதல்ல வயதான அப்பா தான் தன்னோட மகன்கிட்ட உதவி கேக்குறாருன்னு நெனச்சேன்

என்கிட்டயும் கடன வாங்கீட்டு என்னையும் பல பேரு சுத்தல்ல விட்டு இருக்காங்க...
:eek::eek::eek:
சாரா ஒரு ஒருலச்ச ரூபாய் கடனா கிடைக்குமா ? :D:D

அக்னி
31-05-2011, 12:51 PM
வாடகைக்கு வீடெடுப்பதென்றால், சிக்கிவிட்டான் ஒரு அடிமை என்ற நிலைதானே அதிகம்...

கதையிலாவது, ஒரு வீட்டுச் சொந்தக்காரரை வாயடைக்க வைத்த,
ஜெகதீஸன் ஐயாவுக்கு :icon_b:

ஆனால், கதையின் இறுதி வரி சொல்கின்றது,
உரிமை பெற முதுமை படும் பாடு...

பாராட்டு...

ஜானகி
31-05-2011, 04:09 PM
கதையில் சுடும் கற்பனை நிஜமாகாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...