PDA

View Full Version : மொபைல் சிம் கார்டில் அழித்த எண்களை மீண்டும் கொண்டுவர உதவுங்களேன்

kalaiselvan2
29-05-2011, 10:41 AM
என்னுடைய மொபைலில் உள்ள சிம் கார்டு மற்றும் போனில் உள்ள எண்களை தவறுதலாய் அழித்துவிட்டேன். அதை மீண்டும் எடுக்க முயற்சி செய்து இணையத்தில் தேடினேன். ஆனால் ட்ரையல் வெர்ஷன் தான் கிடைத்தது. எதேனும் இணைய சுட்டியில் இலவச மென்பொருள் கிடைத்தால் நலமாய் இருக்கும், மொபைலில் அழித்த எண்களை புளுடூத் மூலம் கணிணியில் கனெக்ட் செய்து எடுக்ககூடிய அளவில் மென்பொருள் கிடைத்தால் பரவாயில்லை.

Ravee
01-06-2011, 07:55 AM
முடியாது என்றே பலர் சொல்கிறார்கள். இயங்கும் அலைபேசியின் குறிப்பிட்ட மாடலுக்கான மென்பொருளை கணிப்பொறியில் நிறுவி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் செயல் படாத போது அதை மீட்பதற்கு வழி இல்லை என்றே சொல்கிறார்கள் .... சில நேரம் உள்ளூர் மேதைகளால் செய்ய முடியாத ஒன்றை கூகுல் மூலமாக தேர்வு செய்யலாம். முயன்று பாருங்கள் .... எனக்கும் விடை தெரிந்தால் சொல்கிறேன் . தங்களுடைய அலை பேசியின் மாடல் எப்போது வாங்கியது.என்ற விவரம் தந்தால் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

kalaiselvan2
12-06-2011, 06:12 AM
நன்றி திரு. ரவி அவர்களே தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், என் கைபேசி புதியதாக வந்திருக்கும் Samsung E2652 Champ Duos இதில் போனில் இருக்கும் எண்களை அழித்தால் சிம்மில் இருகக்கும் எண்களும் சேர்ந்து அழிந்து விட்டது, நானும் குகூளில் தேடினேன் கிடைத்த மென்பொருட்கள் எல்லாம் சிம் கார்டு ரீடர் மூலம் தான் மீட்கும் வகையில் உள்ளது. புளுடூத் மூலம் எடுக்க முடியவில்லை நம்ம நண்பர் மொக்கச்சாமியும் தனி மடலில் சில மென்பொருட்கள் கொடுத்தார். ஆனால் அவைகள் சரிசெய்ய இயலவில்லை

aren
13-06-2011, 02:40 AM
இன்னொரு வழியையும் முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு புதிய சிம் கார்டை உங்களுடைய மொபைல் போனில் போட்டு, அந்த மொபைலில் இருக்கும் தொலைபேசி எண்களை இந்த சிம் கார்டில் இறக்குமதி செய்யும்படி கட்டளையிடுங்கள். அந்த அழிந்த அல்லது அழித்த தொலைபேசி எண்களும் இறக்குமதியாகும்.

எனக்கு இது மாதிரி நடந்துள்ளது.

ஆனால் சிம் கார்டில் அழித்த எண்களை எப்படி ஏற்றுவது. நான் மேலே சொன்னவற்றை மாற்றி செய்துபாருங்கள். அதாவது புது மொபைலில் இந்த பழைய சிம் கார்டைப் போட்டு சிம்மில் இருக்கும் எண்களை மொபைலுக்கு ஏற்றுங்கள். கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

kalaiselvan2
13-06-2011, 11:44 AM
நன்றி ஆரேன் அவர்களே முயற்சிக்கிறேன்.

அமரன்
13-06-2011, 07:23 PM
இன்னொரு வழியையும் முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு புதிய சிம் கார்டை உங்களுடைய மொபைல் போனில் போட்டு, அந்த மொபைலில் இருக்கும் தொலைபேசி எண்களை இந்த சிம் கார்டில் இறக்குமதி செய்யும்படி கட்டளையிடுங்கள். அந்த அழிந்த அல்லது அழித்த தொலைபேசி எண்களும் இறக்குமதியாகும்.

எனக்கு இது மாதிரி நடந்துள்ளது.

ஆனால் சிம் கார்டில் அழித்த எண்களை எப்படி ஏற்றுவது. நான் மேலே சொன்னவற்றை மாற்றி செய்துபாருங்கள். அதாவது புது மொபைலில் இந்த பழைய சிம் கார்டைப் போட்டு சிம்மில் இருக்கும் எண்களை மொபைலுக்கு ஏற்றுங்கள். கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் சொல்வது வேறு வகை என்று நினைக்கிறேன். என் அலைபேசியில் நான் சேமிக்கும் எண்கள் அனைத்தும் என் சேவை வழங்குனரின் நினைவகத்திலும் சேமிக்கப்படுகின்றன. அந்த வசதியால் இழந்த இலக்கங்களை மீளப்பெற இயலும். அதன் வழியே நீங்கள் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.

aren
14-06-2011, 04:25 AM

நான் என்னுடைய தற்சமயம் உபயோகப்படுத்தாத மொபைல் ஃபோனை சிங்கப்பூரிலிருந்து துபாய் சென்ற போது எடுத்துச் சென்றேன். அங்கே ஒரு புது சிம் கார்டை வாங்கி என்னுடைய மொபைல் ஃபோனில் இட்டேன், அது தானாகே என் மொபைல் ஃபோனில் இருக்கும் எண்களை அப்டேட் செய்துகொண்டது. அதில் ஆச்சர்யம் என்னவென்றால் நான் வேண்டாம் என்று டிலீட் செய்த அனைத்து தொலைபேசி எண்களும் திரும்பவும் வந்துவிட்டது.