PDA

View Full Version : அது!கீதம்
28-05-2011, 09:39 AM
அது,

அவதரித்தது,

அழகாயிருந்தது,

அற்புதமாயிருந்தது,

அலங்காரமாயிருந்தது,

அசாதாரணமாயிருந்தது,

அதிநுட்பமதியோடிருந்தது,

அதிசயிக்கத்தக்கதாயிருந்தது,

அபாரத்திறனோடமைந்திருந்தது,

அளவிலாக்கலைநயத்தோடிருந்தது,

அரங்கேறியாடுமார்வமிகக்கொண்டது,

அரிதாரப்பூச்சிலேயுளந்திளைத்துநின்றது,

அணுவணுவாயுள்ளங்கவரும்வண்ணமிருந்தது,

அநேகமனங்களையண்மித்திருந்தது,

அடிமைகளையுருவாக்கியிருந்தது,

அழகினாராதனையிற்கிறங்கியது,

அரங்கதிரச்சதிராடியசத்தியது,

அற்பசுகத்திலாழ்ந்திருந்தது,

அதீதகர்வங்கொண்டது,

அகங்காரங்கிளர்ந்தது,

அகஞ்சுருக்கியது,

அவமதித்தது,

அடிபட்டது,

அது!

அடுத்தது,

அறிமுகமானது,

அழகாயிருந்தது,

அன்றாடியிருந்தது,

அடியோடகற்றப்பட்டது,

அகம்பாவமடக்கப்பட்டது,

அலட்சியவுருவானது,

அடையாளமழிந்தது,

அனைத்துமிழந்தது,

அங்கந்தளர்ந்தது,

அனாதரவானது,

அழகொழிந்தது,

அழுதரற்றியது,

அகமறிந்தது,

அடங்கியது,

அழிந்தது,

அது!

அக்னி
28-05-2011, 09:45 AM
அ வில் ஏற்றிய
அம்பு என்னைத் துளைத்து உள்ளே தங்கிவிட்டது...

வார்த்தைகள் இல்லை...
அது சொல்ல...

Ravee
28-05-2011, 09:58 AM
தமிழும், கணிதமும், கலை நயமும் ஒருங்கே கீதம் ... கீதம் என்று அலை போல அடித்து ஆரவாரம் செய்கிறதே .... :)

Nivas.T
28-05-2011, 10:06 AM
இது அதுவா? இல்லை அது இதுவா?

இதுவாவது அதுவா? இல்லை அதுவாவது இதுவா?

இதுவும் இதுவும் அதுவா? இல்லை
அதுவும் அதுவும் அதுவா?

இதுவும் இதுவும் இதுவா ? இல்லை
அதுவும் அதுவும் இதுவா ?

அதுவாக இருந்தாலும் இதுவாக இருந்தாலும்
அந்த அது எது

என்னும் குழப்பத்துடன்...

பாராட்டுகளுங்க :D

ஓ....ஒருவேளை அதுவா...... ?

கீதம்
28-05-2011, 10:10 AM
இது ஒரு சோதனை முயற்சியே. ஒவ்வொரு வரியும் ஒரே வார்த்தையாய்ப் பரிணமிக்கும் வகையில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வார்த்தைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. சற்றே நிதானித்துப் பார்த்தால் பொருள் புரியும். புரியவில்லையெனில் பிறகு தருகிறேன்.

பின்னூட்டங்களுக்கு நன்றி அக்னி, நன்றி ரவி.

கீதம்
28-05-2011, 10:13 AM
இது அதுவா? இல்லை அது இதுவா?

இதுவாவது அதுவா? இல்லை அதுவாவது இதுவா?

இதுவும் இதுவும் அதுவா? இல்லை
அதுவும் அதுவும் அதுவா?

இதுவும் இதுவும் இதுவா ? இல்லை
அதுவும் அதுவும் இதுவா ?

அதுவாக இருந்தாலும் இதுவாக இருந்தாலும்
அந்த அது எது

என்னும் குழப்பத்துடன்...

பாராட்டுகளுங்க :D

ஓ....ஒருவேளை அதுவா...... ?

ரொம்ப குழப்பிக்காதீங்க, நிவாஸ்.

இதில் ஒருவரின் வாழ்க்கையைக் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் யாரென்று படித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

திரைமறைவு வேலை இதில் இல்லை.

இவருக்கும் திரை மறைவில் வேலை இல்லை.:icon_b:

சிவா.ஜி
03-06-2011, 01:53 PM
ஜெய ஜெய மங்கள ஜெய ஜெய.....!!!!

ஆனா...அழிந்தது....அதில்தான் ஒரு சந்தேகம். பார்ப்போம் தங்கை என்ன சொல்கிறாரென்று....

அசத்திட்டீங்க தங்கையே.

Nivas.T
03-06-2011, 01:57 PM
:eek::eek::eek:
ஆமா இதுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையே:sprachlos020::sprachlos020::sprachlos020:

ஆதவா
03-06-2011, 02:35 PM
கவிதையின் புறவடிவம் இரட்டை அம்பு போன்று இருந்தது. ஒன்று பெரியதாகவும் கூர்ந்தும் இரண்டாவது சிறியதாகவும் முனைமழுங்கியும் இருந்தது. இருவரை அடக்கியிருப்பதாகக் கேள்வி. தவிர, வார்த்தைகளின் நீளம் குறையக் குறைய ”அதன்” தரமும் குறைவது மிக அழகான கவிதையின் புறவடிவமைப்பு. ”அ” வரிசையில் அமைந்த சொற்களைக் கொண்ட அல்லது மோனைக் கவிதைகளைப் படிக்கும் பொழுது சிலசமயம் சலிப்புணர்வு மிதந்து வரும். இக்கவிதையில் அப்படியொரு உணர்வே எழவில்லை என்பதுதான் பெரிய ப்ளஸ்!

ஜானகி
03-06-2011, 03:02 PM
[ நாயகன் பாணியில் ].......அ..அ....அ....அ.....ஆ....ஆஆ....ஆஆஆ.........[ இதற்கும் விளக்கம் தர யாராவது வரமாட்டார்களா என்ன...]

[ வடிவேலு பாணியில் ] அது.....

[ ரஜனி பாணியில் ]... எது...எது....எது.....அர்த்தம் புரியும்படி சொன்ன கவியும், அர்த்தம் புரிந்து கைதட்டின ரசிகனும் பூமியிலே இருந்ததா சரித்திரமே இல்லை....

இது எப்படி....

Ravee
04-06-2011, 06:24 AM

ஆஹா அம்மா சூப்பரு ..............:lachen001:

கீதம்
04-06-2011, 09:41 AM
ஜெய ஜெய மங்கள ஜெய ஜெய.....!!!!

ஆனா...அழிந்தது....அதில்தான் ஒரு சந்தேகம். பார்ப்போம் தங்கை என்ன சொல்கிறாரென்று....

அசத்திட்டீங்க தங்கையே.

அண்ணா... நீங்க என்ன நினைக்கறீங்கன்னு புரியுது... ஆனால் அது இது இல்லை, இது அது இல்லை, அட, ஏன் வம்பு? எதுவுமே எதுவும் இல்லை. :D

:eek::eek::eek:
ஆமா இதுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையே:sprachlos020::sprachlos020::sprachlos020:

சொல்லிடறேன் நிவாஸ். உங்க ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி.

கவிதையின் புறவடிவம் இரட்டை அம்பு போன்று இருந்தது. ஒன்று பெரியதாகவும் கூர்ந்தும் இரண்டாவது சிறியதாகவும் முனைமழுங்கியும் இருந்தது. இருவரை அடக்கியிருப்பதாகக் கேள்வி. தவிர, வார்த்தைகளின் நீளம் குறையக் குறைய ”அதன்” தரமும் குறைவது மிக அழகான கவிதையின் புறவடிவமைப்பு. ”அ” வரிசையில் அமைந்த சொற்களைக் கொண்ட அல்லது மோனைக் கவிதைகளைப் படிக்கும் பொழுது சிலசமயம் சலிப்புணர்வு மிதந்து வரும். இக்கவிதையில் அப்படியொரு உணர்வே எழவில்லை என்பதுதான் பெரிய ப்ளஸ்!

இதைக் கவிதைன்னு சொல்லமுடியுமான்னு தெரியல. ஆனா எழுதும்போது ரொம்ப வித்தியாசமா தோன்றியது. எவ்வளவு (தட்டச்சு) அடிச்சாலும் தாங்கிக் கொள்ளக் கூடியது தமிழ்மன்றம் அப்படிங்கிற நம்பிக்கையில் பதிச்சிட்டேன்.:) நன்றி ஆதவா.

[ நாயகன் பாணியில் ].......அ..அ....அ....அ.....ஆ....ஆஆ....ஆஆஆ.........[ இதற்கும் விளக்கம் தர யாராவது வரமாட்டார்களா என்ன...]

[ வடிவேலு பாணியில் ] அது.....

[ ரஜனி பாணியில் ]... எது...எது....எது.....அர்த்தம் புரியும்படி சொன்ன கவியும், அர்த்தம் புரிந்து கைதட்டின ரசிகனும் பூமியிலே இருந்ததா சரித்திரமே இல்லை....

இது எப்படி....

ஜானகி அம்மா.... கலக்கல்!:icon_b:

கீதம்
04-06-2011, 09:51 AM
அது என்பது வாக்கியங்களில் வேறுபடும் பொருளைப் பதிந்திருக்கிறேன்.

அது, (ஒரு ஜீவன்)

அந்த ஜீவன் குழந்தையாய் அவதரித்தது,

அந்தக்குழந்தை அழகாயிருந்தது,

அற்புதமாய் இருந்தது,

இயற்கையழகுடன் அசாதாரணமாய் இருந்தது,

செயற்கையாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது,

வளரும்போது அதிநுட்பமதியோடு இருந்தது,

அறிவு அதிசயிக்கத்தக்கதாய் இருந்தது,

மேலும் அபாரத்திறனோடு அமைந்திருந்தது,

அளவிலாக் கலைநயத்தோடு இருந்தது,

மனத்துள் அரங்கு ஏறி ஆடும் ஆர்வம் மிகக் கொண்டது.

குமரிப்பருவத்தில் அரிதாரப் பூச்சிலே உள்ளம் திளைத்து நின்றது.

அவள் அழகும் திறமையும் அணு அணுவாய் உள்ளங்கவரும் வண்ணம் இருந்தது.

அவள் நினைவுகளே அநேக மனங்களை அண்மித்திருந்தது.

அவள் அழகு பல அடிமைகளை (ரசிகர்களை) உருவாக்கியிருந்தது.

புகழ்போதை கொண்ட மனம் அழகின் ஆராதனையில் கிறங்கியது.

வெறி கொண்ட மனம் அரங்கு அதிரச் சதிராடி அசத்தியது.

அற்ப சுகத்தில் ஆழ்ந்திருந்தது,

அதீத கர்வம் கொண்டது.

அகங்காரம் கிளர்ந்தது.

அகம் சுருக்கியது.

அதனால் அடுத்தவரை அவமதித்தது.

அதன் காரணமாய் ஆணவம் அடிபட்டது.

அவளுக்கு அடுத்தது (அடுத்த அழகு)

அவளுக்குப் போட்டியாக அறிமுகமானது,

அவளை விடவும் அழகாயிருந்தது,

அன்றாடியிருந்தது,

அடியோடு அகற்றப்பட்டது

அவளது அகம்பாவம் அடக்கப்பட்டது.

அவள் தேகம் அலட்சிய உரு(வம்)வானது.

அவளுடைய அடையாளம் அழிந்தது.

அடைமொழி அனைத்தையும் இழந்தது.

அவளுடைய அங்கம் தளர்ந்தது.

அவள் நிலை அனாதரவானது.

அவளுடைய அழகு ஒழிந்தது.

உணர்ந்த மனம் அழுது அரற்றியது.

உண்மையை அகம் அறிந்தது.

ஆட்டம் அடங்கியது.

ஆணவம் அழிந்தது.

அது! (மீந்தது அது மட்டுமே! அது ..... ஆதியிலிருந்த ஜீவன்)

நடிகை என்றில்லை, எந்த ஒரு மனிதனுமே புகழின் உச்சியில் இருக்கும்போது ஆயிரம் பேர் சுற்றிவருவார்கள். கொஞ்சம் நிலை தாழ்ந்தாலோ எவருமே சீண்ட மாட்டார்கள். அதிலும் அவருடைய ஆணவத்தால் அந்நிலை அடைந்திருப்பாராயின் அப்போது அவர் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

சொல்ல நினைத்தது இதுதான். ஆனால் இதை அதில் சரியா சொல்லியிருக்கேனான்னுதான் தெரியவில்லை.

Nivas.T
04-06-2011, 11:56 AM
பிரமாதம் :aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::sport-smiley-018:

ஜானகி
04-06-2011, 12:18 PM
இது.......அது.........இதுதான் கீதம்......பாராட்டுக்கள் !

ஆடி....பாடி....அடங்குவதுதான் வாழ்க்கை...!

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 04:28 PM
வார்த்தைகளின் வர்ணஜாலம் ....:medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080:

lenram80
07-06-2011, 12:58 PM
திமுக ஆட்சி போனதை இப்படியா கவிதையில் சொல்வீர்கள். கலைஞருக்கு ஒரு காப்பி அனுப்பி வையுங்கள் பிளீஸ்.

சிவா.ஜி
07-06-2011, 01:28 PM
திமுக ஆட்சி போனதை இப்படியா கவிதையில் சொல்வீர்கள். கலைஞருக்கு ஒரு காப்பி அனுப்பி வையுங்கள் பிளீஸ்.

சூப்பர்...!!!!:icon_b:

முரளிராஜா
09-06-2011, 04:45 PM
வித்யாசமான முயற்சி
பாராட்டுகள் கீதம்

M.Jagadeesan
10-06-2011, 01:01 AM
அது எதுவோ என்று நினைத்தேன். அது இதுதான் என்று நீங்கள் சொன்னபிறகே விளங்கியது. அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்.

கீதம்
10-06-2011, 02:47 AM
பிரமாதம் :aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::sport-smiley-018:

நன்றி நிவாஸ்.

இது.......அது.........இதுதான் கீதம்......பாராட்டுக்கள் !

ஆடி....பாடி....அடங்குவதுதான் வாழ்க்கை...!

சரியா சொன்னீங்க. நன்றி ஜானகி அம்மா.

வார்த்தைகளின் வர்ணஜாலம் ....:medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080:

நன்றி ஜெய்.

திமுக ஆட்சி போனதை இப்படியா கவிதையில் சொல்வீர்கள். கலைஞருக்கு ஒரு காப்பி அனுப்பி வையுங்கள் பிளீஸ்.

வம்பை நானே விலைக்கு வாங்குவேனா? :) பின்னூட்டத்துக்கு நன்றிங்க லென்ராம்.

சூப்பர்...!!!!:icon_b:

அது இல்லை என்றதும் இதுவா?:icon_ush:

வித்யாசமான முயற்சி
பாராட்டுகள் கீதம்

நன்றி முரளிராஜா.

அது எதுவோ என்று நினைத்தேன். அது இதுதான் என்று நீங்கள் சொன்னபிறகே விளங்கியது. அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்.

நன்றி ஐயா. நீங்கள் எதையோ நினைக்கவேண்டுமானால் இந்தக் கவிதையைத்தான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22572) சொல்லவேண்டும்.:)

கலாசுரன்
16-06-2011, 11:47 AM
மிகவும் நல்லாயிருந்தது அது ....!!!
அருமையாக இருந்தது அது...!!

அது
அதுவாகவே இருப்பது நல்லது....!!

மொத்தத்தில் அது மிகவும் வியப்பூட்டியது என்னை ...!!!

அதை நான் அதுதான் என்று சம்மதிக்கிறேன் ..!!

வாழ்த்துக்கள் ...!!!

கீதம்
11-07-2011, 03:33 AM

நன்றி கலாசுரன்.

KAMAKSHE
11-07-2011, 08:06 AM
கவிதை

படித்தேன்

மிகரசித்தேன்

புதியமுயற்சியது

விடாமுயற்சியும்கூட

ஒவ்வொருவார்த்தையும்

இடுகின்றதுஒய்யாரநடனம்

புரியாவிட்டாலும்கூடபுரிகிறது

படிப்பவர்எவரும்உன்னை

பாராட்டிதீரவேண்டும்

அப்படியொருநயம்

நெகிழ்வுமுண்டு

நேசமுண்டு

கீதமுன்

பாங்கு

அது!!

கீதம்
15-07-2011, 02:23 AM
கவிதை

படித்தேன்

மிகரசித்தேன்

புதியமுயற்சியது

விடாமுயற்சியும்கூட

ஒவ்வொருவார்த்தையும்

இடுகின்றதுஒய்யாரநடனம்

புரியாவிட்டாலும்கூடபுரிகிறது

படிப்பவர்எவரும்உன்னை

பாராட்டிதீரவேண்டும்

அப்படியொருநயம்

நெகிழ்வுமுண்டு

நேசமுண்டு

கீதமுன்

பாங்கு

அது!!

அருமை, காமாக்ஷி, எத்தனை சிரமத்துடன் வார்த்தைகளை நயத்துடன் அமைத்திருக்கிறீர்கள் என்று வியந்து பாராட்டுகிறேன். நன்றி.

innamburan
15-07-2011, 06:46 AM
எனக்கு 'அது' கவிதை கிடைக்கவில்லையே. எப்படி தேடவேண்டும், பாரதி/கீதம்?

கீதம்
15-07-2011, 07:11 AM
எனக்கு 'அது' கவிதை கிடைக்கவில்லையே. எப்படி தேடவேண்டும், பாரதி/கீதம்?

தாங்கள் இரண்டாம் பக்கத்தில் இருக்கிறீர்கள். கவிதை முதல் பக்கத்தில் உள்ளது. கீழே இருக்கும் 1 என்ற எண்ணைச் சொடுக்கினால் காணலாம். உங்கள் உதவிக்காக முதல் பக்கம் இதோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=27292)...