PDA

View Full Version : நம்பிக்கைத் துரோகிM.Jagadeesan
28-05-2011, 03:38 AM
அடி பாதகி! கிராதகி! துரோகி!
கடைசி நேரத்தில் என்னுடைய
கழுத்தை அறுத்து விட்டாயே!
முடியாது என்றுநீ முன்னமே
சொல்லி இருக்கலாமே! என்றுதான்
"விடியுமோ?" எனக்குத் தெரியவில்லை!

உயிருக்கு உயிராகப் பழகினாயே!
உன்னையே நம்பியிருந்த என்னை
வயிறு எரியும்படி செய்தாயே!
வஞ்சகியே! உனக்கு ஒருமுழக்
கயிறு எதுவும் கிடைக்கலையா?
உயிரைப் போக்கிக் கொள்ள?

யார்யாரோ கொடுப்பதாகச் சொன்னார்கள்
அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு
ஊர்வசியே! உன்னையே நம்பியிருந்தேன்
தேர்போலும் நடந்துவரும் தேவதையே!
இன்று
ஊர்பேசும்படி வைத்தாயே! உன்மத்தம்
பிடித்தவளே!

பெண்ணை நம்பாதே! என்று
பெரியவர்கள் சொல்வார்கள்.
அது உண்மை என்பதைநீ
உலகுக்குக் காட்டிவிட்டாய்!

இருண்டுவிட்டது என்உலகம் என்றுமட்டும்
எண்ணாதே!
சுருண்டு கிடக்கும் பாம்புநான்!
செத்து விட்டதாய் எண்ணாதே!
வறண்டு விடவில்லையடி உலகம்
வாய்ப்புகள் என்னைத் தேடிவரும்.

என்னம்மா! தேவகி! ஏதேதோ பிதற்றுகிறாய்!
என்று
என்அம்மா வந்து எனைக்கேட்டாள்.
அம்மா என் திருமணத்திற்கு
ஆருயிர்த் தோழி ஊர்வசியிடம்
ஐந்து லட்சம் வேண்டுமென்றேன்.
தருவதாகச் சொன்னவள் இப்போது
தகராறு செய்கிறாள்.

என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை!
சின்னதொகை என்றால் புரட்டிவிடலாம்! ஆதலினால்
தாயே! திருமணத்தைத் தள்ளிவைத்து விடலாமா?
ஆயிரம்பொய் சொல்லி திருமணத்தை நடத்துஎன்று
ஆன்றோர்கள் சொல்வார்கள் ஆனால் எனக்கோ
என்னபொய் சொல்வதென்று தெரியவில்லை அம்மா!

ஜானகி
28-05-2011, 03:44 AM
கதைகளை சுவாரசியப்படுத்தும் சஸ்பென்ஸ், இப்போது கவிதைகளிலும் தொடருகிறதே.....நன்று

பாலகன்
28-05-2011, 03:54 AM
முதல் பாதியை படிச்சதும் சிம்பு புலம்புவதை போல இருந்தது :D கடைசியில் ஆரூயிர் தோழி புலம்புவதை போல மாற்றிய உங்கள் திறமை பாராட்டுதற்குரியது ஜெகதீசரே!

M.Jagadeesan
28-05-2011, 04:07 AM
ஜானகியின் பாராட்டுகளுக்கு நன்றி!

M.Jagadeesan
28-05-2011, 04:09 AM
மகாபிரபு அவர்களே! தங்களை மன்றத்தில் அதிகம் காணமுடியவில்லையே ஏன்?
தங்களின் பாராட்டுக்கு நன்றி!

Ravee
28-05-2011, 08:07 AM
துட்டு தராவிட்டால் திட்டா .... ரொம்ப அநியாயம்ங்க ..... ரசிக்க வைத்த திருப்பம் ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ ... :lachen001:

M.Jagadeesan
28-05-2011, 08:20 AM
நன்றி! ரவி!

Nivas.T
28-05-2011, 08:29 AM
இறுதியில் திருப்பம் அருமை

நல்ல கவிதை

அக்னி
28-05-2011, 08:43 AM
ஒரு ஏமாற்றப்பட்ட காதலனையோ, காசை எதிர்பார்த்து வையும் குடிகாரக் கணவனையோதான் எதிர்பார்த்தேன்.

இனி உங்கள் படைப்புக்களில் கடைசிப் பத்தியை நெருங்குகையில், நிறுத்திவிட்டு முடிவை யோசித்துப் பார்க்கவேண்டும்.
எழுத்து ஏற்படுத்தும் சுவாரசியம் நிறுத்தவிடா என்பதுதான் தடையே.

தடையின்றித் தொடரட்டும் உங்கள் வித்தியாசப் படைப்புக்கள்...


துட்டு தராவிட்டால் திட்டா .... ரொம்ப அநியாயம்ங்க .....
துட்டுத் தராவிட்டால் திட்டுவது தவறுதான்.
ஆனால், தருவதாகச் சொல்லிக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்தால் துரோகம் தானே...


ரசிக்க வைத்த திருப்பம் ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ ... :lachen001:
இல்லீங்க... நாற்காலி போட்டு உக்காந்து யோசிப்பாராம்... :cool:

Ravee
28-05-2011, 09:01 AM
முதல் பாதியை படிச்சதும் சிம்பு புலம்புவதை போல இருந்தது :D கடைசியில் ஆரூயிர் தோழி புலம்புவதை போல மாற்றிய உங்கள் திறமை பாராட்டுதற்குரியது ஜெகதீசரே!

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப வம்பு நண்பரே ... எஸ் டி ஆரை வம்புக்கு இழுக்குரீங்களே

கீதம்
28-05-2011, 10:05 AM
வஞ்சிக்கப்பட்டவளின் வார்த்தைப் பிரயோகம் வெகு நன்று.

அவனென்று நினைக்கவைத்து இறுதியில் அவளின் புலம்பலென உணர்த்தியது அருமை! கலக்கலானத் திருப்பம், ஆயினும் கைவிடப்பட்டவளின் நிலையை நினைந்தெழும் மன வருத்தம்.

பாராட்டுகள் ஐயா.

பென்ஸ்
22-06-2011, 02:50 PM
ஹ ஹா... நல்ல சஸ்பென்ஸ்...
கடைசி வரை நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை...

M.Jagadeesan
22-06-2011, 03:15 PM
நிவாஸ், அக்னி,ரவி,கீதம், பென்ஸ் ஆகியோரின் பாராட்டுக்களுக்கு நன்றி!

rajesh2008
22-06-2011, 03:37 PM
எதிர்பாரா திருப்பம் வந்த கவிதை அருமை.

M.Jagadeesan
22-06-2011, 03:58 PM
நன்றி ராஜேஷ் 2008 !