PDA

View Full Version : மீண்டும் ஒரு பயணம்



இன்பக்கவி
27-05-2011, 11:49 AM
அலுவல் தரும்
அலுப்பால்
அமைதி இழந்து
அன்பைத் தொலைத்து
இயந்திரமாய் போனது
இயல்பு வாழ்க்கை ..

ஒய்வு நேரத்தில்
தூங்கியே காலத்தை
தொலைத்து..
வாய்த்த தமிழறிவும்
வாயிலை நோக்கி
ஓடாதிருக்க
ஓடோடி வந்துவிட்டேன்
என் தாய் தமிழ்
நண்பர்களுடன்
அளவளாவ,,,,

மீண்டும் ஒரு பயணம்
தொடர போகிறேன்
உங்களின் வாழ்த்துக்களோடு :icon_b:

Ravee
27-05-2011, 11:59 AM
புதிதாக ஊருக்கு வந்தவனை அவன் தேடி திரிந்த வீட்டின் வாசல் வரை அழைத்து வந்து உபசரித்து காணாமல் போன என் உறவே ... வருக வருக ... உங்கள் வரவு நல்வரவாகுக .... :p

தெலுங்கு பட டைட்டில் போல மீண்டும் கவிதா ... மீண்டு வந்த கவிதா என்று வாருங்கள் ... :lachen001: :D :lachen001:

அக்னி
27-05-2011, 12:12 PM
மீண்டு(ம்) தொடங்கிய பயணம்,
என்றென்றும் தொடர்ந்திடட்டும்...
:p

aren
27-05-2011, 12:38 PM
வாருங்கள், உங்கள் இந்தப் பயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.

Nivas.T
27-05-2011, 12:52 PM
உங்கள் மீள் வருகை மகிழ்ச்சி
பதிவுகளை காண ஆர்வத்துடன் நான்

தொடருங்கள்

M.Jagadeesan
27-05-2011, 01:19 PM
தமிழோடு தொடர்பு வைத்துக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேரம் போவதே தெரியாது.

சிவா.ஜி
27-05-2011, 05:18 PM
வாங்க கவிதா......இனி நாளும் கவி”தா”

வாழ்த்துக்கள்ம்மா....திரும்ப இனபக்கவியை இங்கே பார்த்ததில் இன்பம் இதயத்தில். வாங்க தங்கையே....என்றும் அன்பை எங்களிடம் வாங்க.......வருக தங்கையே....

கீதம்
28-05-2011, 12:27 AM
மீண்டும் தொடரும் இப்பயணம் மகிழ்வையும் மனநிறைவையும் தரட்டும்.
இன்பக்கவி வருக, கவியின்பம் தருக!