PDA

View Full Version : உணவே மருந்தாகிறது



கிருஷ்ணன்
23-05-2011, 01:07 PM
பிரம்மி, பிரம்ம மாண்டூகி, மாண்டூக பரனி,கொட்டு கோலா போன்ற பல பெயர்கள் கொண்ட நாம் அனைவரும் அறிந்த கீரை வல்லாரை. ஆயுளை கூட்டி, இளமையை தரும் காயகல்பம் என்று ஆயுர்வேதம் இதை அழைகிறது. இளமை மட்டுமன்றி, உடல் வனப்பு, சக்தி, மூளை திறன், நினைவாற்றல், ஜீரண சக்தி, ரத்த விருத்தி என அனைத்து விதத்திலும் நன்மை செய்யும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கும், ரத்த சோகை கண்டவர்களுக்கும் அருமருந்து.
தையாமின்(பி1), நையாசின்(பி3), ரிபோஃபேளாவின்(பி2) , பைரிடாக்ஸின்(பி6) மற்றும் கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம், சோடியம் .......அப்பாடா..... சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆயுர்வேத ரசாயனங்கள் செய்வதற்கு இது முக்கிய மூலப் பொருளாக உள்ளது. அதுமட்டுமின்றி நாள்பட்ட வியாதிகளை தீர்க்கவும் வல்லாரை பெரிதும் உதவி புரிகிறது. வெரிகோஸ் வெயின்ஸ், சோரியாசிஸ், நாள்பட்ட ஆராத காயம் , வயிற்றுப்புண், தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.இது சளி ,ஆஸ்துமா போன்றவற்றிர்க்கும் மருந்தாகும்.

உணவில் அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்ட பயன்களை பெறலாம்.