PDA

View Full Version : கைக்கூ கவிதைகள்



M.Jagadeesan
23-05-2011, 10:47 AM
வெங்காயம்
.................

துச்சாதனன் துகில் உரித்ததால்
அழுது முறையிட்டாள் திரெளபதி.
துகில் உரித்தவனையே
அழவைத்தது வெங்காயம்.

புத்தர்
.........

ஆசையே துன்பத்திற்கு மூலகாரணம்.
இதை
அனைவரும் அறிந்துகொள்ள
ஆசைப்பட்டார் புத்தர்.

தேர்தல்
............

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
தங்களைக் கொள்ளையடிக்க
அரசியல்வாதிகளுக்கு
மக்கள் வழங்கும் அனுமதி.

மின்சாரம்
...............

வீட்டிற்கு அடிக்கடி
வந்து போகும்
விருந்தாளி.

டாஸ்மாக்
................

கல்லூரி மாணவன் ஒருவன்
தேர்வில் பாஸ்மார்க் வாங்கவில்லை.
காரணம்,
கல்லூரிக்குப் பக்கத்தில் "டாஸ்மாக்"

நாஞ்சில் த.க.ஜெய்
23-05-2011, 03:30 PM
அழகான கருத்துள்ள சிறு கவிதைகளின் தொகுப்பு ...அருமை ...தொடருங்கள்..