PDA

View Full Version : யார் அவர்?

குணமதி
20-05-2011, 06:34 AM
யார் அவர்?

"தம்பி, நான் ஏது செய்வேனடா? தமிழைவிட மற்றொரு மொழி சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது" என்று நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டார். ஆனால், ஆங்கில இலக்கியத்தைக் கற்றதோடன்றி, ஆங்கிலத்தில் கவிதையும் கட்டுரையும் எழுதும் ஆவலையும் தவிர்க்க இயலவில்லை.

ஆங்கிலேயர் இந்திய மொழிகளை 'வெர்னாகுலர்' (Vernaculars) என்று குறிப்பிட்டபோதெல்லாம், அச்சொல் அடிமை மொழி என்ற பொருள் கொண்டதென்று தம் சினத்தை வெளிப்படுத்தித் "தமிழ்மொழி தத்துவமும் கவியழகும் செறிந்த, ஆங்கிலேயர் பயன்படுத்தும் அடிமை மொழியினும் மிகச்சிறந்த இலக்கியத்தை உடையது" (The Tamil language, for instance, has a living philosophical and poetical literature that is far grander to my mind than that of the vernacular of England) என்று கூறி மகிழ்ந்தார்.

ஆனால் ஆங்கில இலக்கியச் செல்வத்தைத் தமிழ் இலக்கியத்திற்கு உரமூட்டப் பயன்படுத்திக் கொள்வதில் அவர் தவறேதும் காணவில்லை.

நன்றி : பேரா. மருதநாயகம் - 'பாரதி ஆறு பாரதிதாசன் பத்து' பக்கம்- 9.

அவர் யாரென நாளைக்குக் கூறுகிறேன். நீங்கள் கண்டுபிடித்தால் கூறுங்கள்!

செகதீசனார் சரியாகக் கூறினார்! அவர் பெரும்பாவலர் சுப்பிரமணிய பாரதியார் தாம்.

M.Jagadeesan
21-05-2011, 12:58 AM
பாரதியார்?

குணமதி
21-05-2011, 02:12 AM
அருமை!

அவரேதான்.

கீதம்
22-05-2011, 09:04 AM
அதனால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குங்காணோம் என்று அவரால் பாட முடிந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே.

நாஞ்சில் த.க.ஜெய்
22-05-2011, 02:32 PM
பிற மொழியின் சுவைதனை அனுபவித்து உணர்ந்தவர்களால் தான் தத்தம் தாய்மொழியாம் தமிழின் இனிமைதனை உணரமுடியும் ..என்று கற்றுணர்ந்த கவி பாரதியார் அவர்களின் உள்ளக்கிடக்கையை தெளிவுற காட்டுகிறது இந்த பதிவு...

குணமதி
23-05-2011, 03:48 PM
அதனால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்குங்காணோம் என்று அவரால் பாட முடிந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே.

சரியாகச் சொன்னீர்கள்! நன்றி.

குணமதி
23-05-2011, 03:49 PM
பிற மொழியின் சுவைதனை அனுபவித்து உணர்ந்தவர்களால் தான் தத்தம் தாய்மொழியாம் தமிழின் இனிமைதனை உணரமுடியும் ..என்று கற்றுணர்ந்த கவி பாரதியார் அவர்களின் உள்ளக்கிடக்கையை தெளிவுற காட்டுகிறது இந்த பதிவு...

படித்துப் பின்னூட்டமிட்ட நாஞ்சிலார்க்கு நன்றி.