PDA

View Full Version : காக்கை சிறகினிலே....



rema
19-05-2011, 09:17 AM
:frown:காக்கை சிறகினிலே....
கவிதை பாடலாம்
கருமையை வைத்து..!
நிஜத்தில் கருமை.. இதம் இல்லை!

ஆப்பரிக்கனுக்கும், அமெரிக்கனுக்கும்
உள்ளிருக்கும் ரத்தம் ஓரே நிறம்...
வெளிக்காணும் தோலில் ஏன் நிறபேதம்..
இதுவும் ஒன்றா இறைவா?
உன் விசித்திறங்களுள் !

கருப்பு பணம் !
கருப்பு சந்தை !
கருப்பு துணி ,துக்க சின்னம் !
கருப்பு தேசம்....
தீமை மற்றும் துன்பத்திற்கெலாம்...
கருப்பு தான் அடைமொழியா?

பிடித்த நிறத்தில் தான்
பெண்களின் புடவை தேர்வு,
அதுபோல்....
பிடித்ததால் படைத்தாயோ கருப்பில்?
புரியவில்லை இறைவா..
உன்னையும், என் நிறத்தையும் ! :nature-smiley-003:

அக்னி
19-05-2011, 09:35 AM
ஆயிரமாயிரம் நிறங்கள் தெரியலாம், ஒளியில்...
ஒளி அணைந்துபோனால், ஒரே நிறம்தான் கருமையாய்...

எது சிறப்பு...???
என்னைக் கேட்டால் கருமைதான் என்பேன்...

நிழல்கள் எப்போதும் கருமைதானே,
விட்டுப் பிரிவதில்லையே...

பாராட்டுக்கள்...

அமரன்
19-05-2011, 06:36 PM
வெள்ளி முளைக்கத் துவங்கினாலும்
வெளிப்பதில்லை
சில இருட்டு வானங்கள்...!
................................................
நிறம் கொண்டு தாரம் ஆக்கும் குணம்
தரம் அற்றதாகக் கருதப்படும் காலம் வரும்.

மெல்லிழை சோகம் கவிதையில் ஓடுகிறது.

வெளிப்படுத்திய விதத்தில் கவிதை கவருது.

பாராட்டுகள் மின்மினி!

கீதம்
20-05-2011, 12:35 AM
கருவில் படர்ந்த கருமையால்
பேரெழில் பெற்றது கவிதை.
கரியே ஒருநாள் வைரமாம்,
அறிவியல் சொல்கிறது.
அக்னித்தூவலும் அமரச்சாரலும்
அழகியப் பின்னூட்டங்கள் மூலம்
அதையே முன்னிறுத்துகிறது.
அடியேன் என்ன சொல்ல?

கவிமழை தொடர்ந்து பொழியட்டும்,
கரு'மை'கள் கரைந்துபோகட்டும்.

rema
02-06-2011, 02:04 AM
அழகிய கவி பதில்களை தந்த அமரன் கீதம் மற்றும் அக்னி ஆகியோருக்கு நன்றி.