PDA

View Full Version : வித்தியாசங்கள் !



rema
19-05-2011, 09:09 AM
:icon_b:வித்தியாசங்களை
வரவேற்று... வரவேற்று ..
இயல்பிலிருந்து
விலகி... விலகி...
இப்படியே போனால்
ஒரு நாள் உணர்வோம் !
இயல்பாயிருப்பதே வித்தியாசமென்று !:lachen001:

அக்னி
19-05-2011, 09:31 AM
இயல்பு மாறுவது
தவிர்க்க இயலாதது...

நாமும் எதிர்காலத்தில்
ஆதிமனிதராகித்தான் போவோம்...

வித்தியாசமான கவிதை...
பாராட்டுக்கள்...

கீதம்
19-05-2011, 09:36 AM
வட்டப்பாதையில் பயணப்படும் மாற்றங்கள் வரவேற்கப்படும் எந்நாளும்.

யதார்த்தக்கவிதை. பாராட்டுகள் மின்மினி.

முரளிராஜா
19-05-2011, 10:24 AM
அருமையான கவிதை பாராட்டுகள் மின்மினி

அமரன்
19-05-2011, 06:30 PM
அப்போதும் சொல்லக் கூடும்
வித்தியாசத்தை விரும்பாத
வித்தியாசமானவன் என்று!

நடைமுறை மின்மினி!

பாராட்டுகள்.

ந.க
29-10-2012, 10:06 PM
உளவியலில் ஒரு பாடம் .........ஒரு வரியில் .........நன்றி..