PDA

View Full Version : போதிமரம்!

கீதம்
19-05-2011, 02:42 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/5419/large/2_tree1.JPG

அன்றாடம் நான் கடந்துசெல்லும் பாதையோரம்
என் கவனமீர்க்கவென்றே
காத்திருக்கும் அம்மரத்தைப் பற்றி நீங்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
என்னிடம் அறிவித்திராத தன் பெயரை
அது உங்களிடம் சொல்லியிருக்க நியாயமுமில்லை..
அதன் பெயர் அறியுமுன்னரே
அதனுடன் இணக்கமாகிவிட்டது என் மனம்.

உரிபொருளுளை உடலாய்க் கொண்ட
அடிபெருத்த அம்மரம்…..
இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்
அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை.
பதிலாய்…
தன் உடல்பற்றிய ஆடையை
உருவி எறியும் குறும்புக் குழந்தை போல்
பட்டையுரித்து பரவசமாய் நிர்வாணம் காட்டி
நிறுத்துகிறது தன்னிருப்பை.

அரைகுறையாய் சட்டையுரித்து
அலுங்காமற்செல்லும் அரவம்போன்று
பதைப்பூட்டும் அது....

பழந்துணிகளைப் படுதாக்களாய்த் தொங்கவிட்டு
மறைப்பிலே மானம் காக்கும்
பாதையோர வசிப்புகளின்
பரிதாபத்தை நினைவுறுத்தும் சிலநேரம்…

நைந்த கந்தலினும் மிகுதியாய்
மனதின் நலங்கெட்டுத்திரிபவனை
பேரதிர்வோடு நினைவுபடுத்தும் சிலநேரம்….

உரித்தலுக்குப் பின்
ஏமாற்றும் வெங்காயம் போல்
சுவாரசியம் கெடுக்காமல்…
நித்தமும் பட்டையுரித்து
நவசித்திரங்களாய் விசித்திரத் தோற்றம் காட்டி,
அன்றாடக் கவலைகளையும்
அதுபோல் அப்புறப்படுத்தச் சொல்லித்தந்து
உணர்வுகளைப் புதுப்பிக்கிறது,
கடந்துசெல்லும் கணந்தோறும்!

ஜானகி
19-05-2011, 05:54 AM
பாதையோர மரமும் உங்களுக்கு போதிமரமாகக் காட்சியளிப்பது...அதிசயமே....உங்கள் பார்வையின் விசாலத்தையும், தீட்சிண்யத்தையும் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.....எனக்கும் ஏதாவது போதிமரம் தென்படுகிறதா என்று இனி கவனிக்கிறேன்...!

முரளிராஜா
19-05-2011, 10:30 AM
ஒரு மரத்தை இந்த கோணத்திலும் பார்க்கலாம் என்பதை உங்கள்
கவிதைமூலம் அறிந்து கொண்டேன்
கவிதை அருமை
வாழ்த்துகள்

கீதம்
20-05-2011, 12:14 AM
பாதையோர மரமும் உங்களுக்கு போதிமரமாகக் காட்சியளிப்பது...அதிசயமே....உங்கள் பார்வையின் விசாலத்தையும், தீட்சிண்யத்தையும் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.....எனக்கும் ஏதாவது போதிமரம் தென்படுகிறதா என்று இனி கவனிக்கிறேன்...!

சகமனிதர்கள் வாய்திறந்து அறிவுரை சொல்வார்கள். இயற்கையோ காட்சிகள் மூலமே கற்றுத் தருகிறது. கவனிக்க ஆரம்பித்தபின் கண்ணில் படுவதெல்லாம் போதிமரமே. பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

ஒரு மரத்தை இந்த கோணத்திலும் பார்க்கலாம் என்பதை உங்கள்
கவிதைமூலம் அறிந்து கொண்டேன்
கவிதை அருமை
வாழ்த்துகள்

மரத்தின் படத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? என் கவனம் ஈர்த்ததில் ஆச்சரியமென்ன? பின்னூட்டத்துக்கு நன்றி முரளிராஜா

ஆதவா
20-05-2011, 06:00 AM
சில மனிதர்களும் மரம் போன்றவர்கள்.... உதாரணத்திற்கு தமிழக மக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்... அவர்கள் மரம் போன்றவர்கள். அவர்களிடமிருந்து எவ்வளவு உரிக்கமுடியுமோ அவ்வளவு உரிக்கப்படும்!! ஆனால் மரப்பட்டை உரித்தாலும் மரத்திற்கு சேதாரமில்லை அல்லவா.. சிலசமயம் இலையுதிர்காலத்தில் உதிர்வதில்லை... மக்களின் வாய் குறுகியது! வார்த்தைகளை உதிர்ப்பதில்லை.
அதேபோல, பாவப்பட்ட எல்லாரையும் இப்படி பொருத்திப் பார்க்கலாம்.

மரத்தைக் கண்டபிறகு கிளை பெரியது, ஊஞ்சல் ஆடலாம், இலைகள், சருகுகள், நிழல், வேர் என்றெல்லாம் பழைய சங்கை ஊதாமல் புதிதாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்!

M.Jagadeesan
20-05-2011, 06:40 AM
மரத்தைப் பார்த்தால் இந்தியாவில் உள்ள மரம் போலத் தெரியவில்லை. ஆனாலும் பிரம்மாண்டமாக உள்ளது. கல்லும் கதை சொல்லும் என்பார்கள். தங்களுக்கு மரம் சொன்ன பாடம் அருமையான கவிதையாக உருவெடுத்துள்ளது.

கீதம்
22-05-2011, 10:12 PM

பாராட்டுக்கு நன்றி ஆதவா.

மரத்தைப் பார்த்தால் இந்தியாவில் உள்ள மரம் போலத் தெரியவில்லை. ஆனாலும் பிரம்மாண்டமாக உள்ளது. கல்லும் கதை சொல்லும் என்பார்கள். தங்களுக்கு மரம் சொன்ன பாடம் அருமையான கவிதையாக உருவெடுத்துள்ளது.

நன்றி ஐயா. இந்த மரம் எங்கள் வீட்டருகில் (ஆஸ்திரேலியாவில்) உள்ளது. பெயர் தெரியவில்லை. அறிந்தபின் அறிவிக்கிறேன்.

அக்னி
28-05-2011, 01:09 AM
மரம் புதுப்பிக்கப்படுகின்றதா... புதுப்பிக்கின்றதா...

இதுவரைக்கும் இம்மரத்தை எத்தனை பேர் கடந்திருப்பர்...
கீதம் கடந்ததால் கவிபாடப்பெற்றது, கொடுத்து வைத்த மரம்...

தோலுரிந்து போனாலும்
பசுமை இழக்கமாட்டேன்
எனக் குத்திக்காட்டுதோ
பட்டை உரிக்கும் மரம்...

Ravee
28-05-2011, 08:37 AM
மாற்றத்திற்கு தன்னை தினமும் ஆட்படுத்திக்கொள்ளும் மரம் நமக்கு சொல்லும் பாடம் உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது ... மாற மறுப்பதின் வாழ்க்கையை இயற்கை மறுத்துவிடுகிறது.

கீதம்
28-05-2011, 09:56 AM
மரம் புதுப்பிக்கப்படுகின்றதா... புதுப்பிக்கின்றதா...

இதுவரைக்கும் இம்மரத்தை எத்தனை பேர் கடந்திருப்பர்...
கீதம் கடந்ததால் கவிபாடப்பெற்றது, கொடுத்து வைத்த மரம்...

தோலுரிந்து போனாலும்
பசுமை இழக்கமாட்டேன்
எனக் குத்திக்காட்டுதோ
பட்டை உரிக்கும் மரம்...

நன்றி அக்னி.

மாற்றத்திற்கு தன்னை தினமும் ஆட்படுத்திக்கொள்ளும் மரம் நமக்கு சொல்லும் பாடம் உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது ... மாற மறுப்பதின் வாழ்க்கையை இயற்கை மறுத்துவிடுகிறது.

நன்றி ரவி.

Nivas.T
28-05-2011, 10:14 AM
தன்னை உரித்து
உன்னை உணர்த்தி
எண்ணம் தரித்து
கவிதைத் திரிக்க
போதனை தந்த
போதிமரத்துக்கு நன்றி

அழகான எண்ணோட்டம்
நயமான வரிகள்
ஆழ்ந்த கருத்துகள்

பரட்டுகளுங்க....

கீதம்
29-05-2011, 12:52 AM
தன்னை உரித்து
உன்னை உணர்த்தி
எண்ணம் தரித்து
கவிதைத் திரிக்க
போதனை தந்த
போதிமரத்துக்கு நன்றி

அழகான எண்ணோட்டம்
நயமான வரிகள்
ஆழ்ந்த கருத்துகள்

பரட்டுகளுங்க....

நன்றி நிவாஸ்.

கௌதமன்
09-07-2011, 07:00 PM
[CENTER]

அன்றாடம் நான் கடந்துசெல்லும் பாதையோரம்
என் கவனமீர்க்கவென்றே
காத்திருக்கும் அம்மரத்தைப் பற்றி நீங்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகா! இதோ என் போதி மரம்
என் மரமா எனக்கேட்பது புரிகிறது
என்ன செய்வது நான் கௌதமன்
என்னை புத்தன் ஆக்கியது இம்மரம்தான்!

innamburan
09-07-2011, 09:59 PM
மரம் எங்கிருந்தால் என்ன?
சோதனை எங்கிருந்து வந்தால் என்ன?
அறம் எங்கும் வளரலாமே.
போதனை அங்கு வந்திடுமே.
இன்னம்பூரான்

கீதம்
11-07-2011, 03:01 AM
ஆகா! இதோ என் போதி மரம்
என் மரமா எனக்கேட்பது புரிகிறது
என்ன செய்வது நான் கௌதமன்
என்னை புத்தன் ஆக்கியது இம்மரம்தான்!

நன்றி கெளதமன்.

எனக்கு மட்டுமல்ல, உமக்கும் போதித்ததோ...
ஊடகம் வழியே உதிர்ந்த மரவுரிகள்!

அன்று முற்றும் துறந்தவருக்கு
முழுதாய் உதவின மரவுரிகள்;
இன்று முழுமையடைய நமக்கும் உதவின,
முற்றும் துறக்க முயலும் மரவுரிகள்! :icon_b:

மரம் எங்கிருந்தால் என்ன?
சோதனை எங்கிருந்து வந்தால் என்ன?
அறம் எங்கும் வளரலாமே.
போதனை அங்கு வந்திடுமே.
இன்னம்பூரான்

பின்னூட்டமிட்டு எண்ணவோட்டம் விளக்கியதற்கு நன்றி ஐயா.

நாஞ்சில் த.க.ஜெய்
11-07-2011, 07:56 AM
போதனைகள் பல கூறும் காட்சிகள் நாம் காணும் ஒவ்வொரு நிகழ்விலும்... பாராட்டுகள் கீதம் அவர்களே ...

கீதம்
15-07-2011, 02:26 AM
போதனைகள் பல கூறும் காட்சிகள் நாம் காணும் ஒவ்வொரு நிகழ்விலும்... பாராட்டுகள் கீதம் அவர்களே ...

பாராட்டுக்கு நன்றி ஜெய்.

பென்ஸ்
15-07-2011, 06:40 AM
அதன் பெயர் அறியுமுன்னரே
அதனுடன் இணக்கமாகிவிட்டது என் மனம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமல் நெருக்கமாகிவிடும் சில
பொருட்கள், நாம் அவற்றை விட்டு செல்லும் போது மட்டுமே அதை
எவ்வளவு மிஸ் பன்னுறோமுன்னு தெரியும்....

அந்த வகையில், தினம் கானும் ஒரு மரத்தின் மீதான அன்பை சொலும்
இந்த கவிதை நன்று....

அன்றாட கவலைகளை பட்டையுரித்து புதிதாக இருக்க சொல்லும் போதிமரம்.... அருமை..

ஆனால் நீங்க கஸ்டபட்டு கவிதை எழுத அதில் குற்றம் கண்டு பிடிப்பது
என்று என்னை பொன்று கிளம்பி இருப்பது கொஞ்சம் கடினம்தான்...

பெயரறியாத மரத்தை போதி மரமென்று அழைப்பது நீங்களா...???:D

பழந்துணிகளைப் படுதாக்களாய்த் தொங்கவிட்டு
மறைப்பிலே மானம் காக்கும்
பாதையோர வசிப்புகளின்
பரிதாபத்தை நினைவுறுத்தும் சிலநேரம்…

நைந்த கந்தலினும் மிகுதியாய்
மனதின் நலங்கெட்டுத்திரிபவனை
பேரதிர்வோடு நினைவுபடுத்தும் சிலநேரம்….

நம்மை அறியாமல் நெருக்கமாகி விடும் சிறிய பொருளாயிருந்தாலும்
அதை மனதிற்க்கு வருத்தம் கொடுக்கும் அந்த ஒரு விசயத்தோடும் நாம் ஒப்பிட்டு பார்ப்பதில்லை...
அதனால் எனக்கு மனநிலை தவறிய ஒருவனோடு இந்த அன்புக்குரிய மரத்தை ஒப்பிட்டது சரியாக தெரியவில்லை...

"பேரதிர்வோடு" என்றாலும்....
அந்த எண்ணம் வரும் போது நம்மிடம் இருந்து அன்பிற்க்கு பதிலாய் பரிதாப உணர்வுதானே வரும்...???

இந்த கவிதையில் உணர்வுகளும் அதன் பாதிப்புகளும் சரியாக வடிக்க படவில்லை என்பது என் கருத்து...

கீதம்
15-07-2011, 07:01 AM
அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமல் நெருக்கமாகிவிடும் சில
பொருட்கள், நாம் அவற்றை விட்டு செல்லும் போது மட்டுமே அதை
எவ்வளவு மிஸ் பன்னுறோமுன்னு தெரியும்....

அந்த வகையில், தினம் கானும் ஒரு மரத்தின் மீதான அன்பை சொலும்
இந்த கவிதை நன்று....

அன்றாட கவலைகளை பட்டையுரித்து புதிதாக இருக்க சொல்லும் போதிமரம்.... அருமை..

ஆனால் நீங்க கஸ்டபட்டு கவிதை எழுத அதில் குற்றம் கண்டு பிடிப்பது
என்று என்னை பொன்று கிளம்பி இருப்பது கொஞ்சம் கடினம்தான்...

பெயரறியாத மரத்தை போதி மரமென்று அழைப்பது நீங்களா...???:D

நம்மை அறியாமல் நெருக்கமாகி விடும் சிறிய பொருளாயிருந்தாலும்
அதை மனதிற்க்கு வருத்தம் கொடுக்கும் அந்த ஒரு விசயத்தோடும் நாம் ஒப்பிட்டு பார்ப்பதில்லை...
அதனால் எனக்கு மனநிலை தவறிய ஒருவனோடு இந்த அன்புக்குரிய மரத்தை ஒப்பிட்டது சரியாக தெரியவில்லை...

"பேரதிர்வோடு" என்றாலும்....
அந்த எண்ணம் வரும் போது நம்மிடம் இருந்து அன்பிற்க்கு பதிலாய் பரிதாப உணர்வுதானே வரும்...???

இந்த கவிதையில் உணர்வுகளும் அதன் பாதிப்புகளும் சரியாக வடிக்க படவில்லை என்பது என் கருத்து...

கவிதையில் குற்றம் கண்டுபிடிப்பதாக நான் என்றுமே நினைப்பதில்லை. உங்களைப் போன்ற அருமையான விமர்சகர்களால் இன்னும் வளம் பெறும் என் எழுத்து என்றே மகிழ்ந்து நன்றி கூறுகிறேன். :)

இந்த மரம் என் கவனம் ஈர்ப்பதால் எனக்கு இணக்கமானது. என் கவனத்தை எப்படி ஈர்த்தது? நான் சுட்டிய உவமைகள் போல் என்னை எண்ணவைத்ததன் மூலம்தானே... எல்லா மரங்களும் இலைகளாலும், வண்ண வண்ண மலர்களாலும் ஈர்க்கும் போது இந்த மரம் ஒழுங்கற்ற... நைந்த மரப்பட்டைகளைக் காற்றில் விசிறி நித்தமும் உரு மாற்றி என்னை ஈர்ப்பதால் எனக்குள் எழுந்த உணர்வினை வடித்தேன். நீங்கள் சொல்வது போல் அதில் உணர்வுகளின் பாதிப்பு குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.

எனக்கு போதனை தந்ததால் போதிமரமாயிற்று. :D பெயர் அறியா மரத்தை வெறெப்படி நான் குறிக்க?

ஆதவா
15-07-2011, 09:00 AM
ஹேஎ... சிங்கம் களம் இறங்கிடுச்சே!!!!
அருமையான விமர்சனம் பென்ஸன்ண்ணா

கீதாக்காவின் ஏற்புரை மிக அழகு!!

பென்ஸ்
15-07-2011, 10:37 AM
ஹேஎ... சிங்கம் களம் இறங்கிடுச்சே!!!!
அருமையான விமர்சனம் பென்ஸன்ண்ணா

கீதாக்காவின் ஏற்புரை மிக அழகு!!
அதுக்கேல்லாம்... கவிதை புரியுற மாதிரி இருக்கனும்....
பத்து தடவை கவிதையை படித்தாலும் புரியாத மாதிரி கவிதை
எழுதுறவங்களை என்ன பண்ணுறது...

ஷீ-நிசி
15-07-2011, 03:09 PM
ஒவ்வொரு மரமும் போதி(க்கும்)மரம் தான்...போல!

கீதம்
21-07-2011, 10:37 PM
ஒவ்வொரு மரமும் போதி(க்கும்)மரம் தான்...போல!

உண்மைதான் ஷீ - நிசி. மரம் மட்டுமல்ல, உயிர்ப்புடனிருக்கும் ஒவ்வொன்றும் நமக்கு ஏதோ ஒரு வகையில் வாழும் கலையைக் கற்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன. கருத்துக்கு நன்றி.