PDA

View Full Version : அரசியல் கூத்துகள்



நாஞ்சில் த.க.ஜெய்
18-05-2011, 05:46 AM
இன்று ஒரு தளத்தில் நான் கண்ட செய்திகளின் தொகுப்பு ..இது முன்பே வரவேண்டியது இருப்பினும் இன்று ஒரு உண்மையினை அறிந்த நிகழ்வாக இருக்கும் என் நினைக்கிறேன்...

திருக்குவளை.மு.கருணாநிதி (தி.மு.க) ப்ரைவேட் லிமிடெட்., -- தினகரன் விளம்பரம்Wednesday, August 26, 2009 9:37 PM திருக்குவளை.மு.கருணாநிதி (தி.மு.க) ப்ரைவேட் லிமிடெட்.,1949 ல் மக்கள் நலப் பணிகளுக்காக தொடங்கப்பெற்று, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு பரிணாம வளர்ச்சிப் பெற்று இன்று மிகப்பெரும் தனியார் நிறுவனமாக , ஆலமரம் போல் விருட்சங்கள் பரப்பி தமிழகம் எங்கும் கிளைகளுடன் இயங்கி வருகிறது தலைமை அலுவலகம் :அண்ணா அறிவாலயம்,அண்ணா சாலை ,சென்னை -- 600018
நிறுவனத்தின் சின்னம் :






இதற்குப் பொருள் "Rising Sun" இல்லை "Raising Son"

நிறுவனத்தின் தொழில் :

அண்ணா, பெரியார் கொள்கைகளும் , தமிழர்களின் உணர்வுகளும் மொத்தமாகவும் , சில்லரை யாகவும் மலிவு விலையில் கிடைக்கும்

ஆண்டு வருமானம் :
30,000 கோடிகளுக்கு மேல்

நிறுவனத்தின் சிறப்பம்சம் :

அவ்வப்போது நிறுவனத்தின் பொதுக்குழு கூடி , நியமிக்கப்பெற்ற இயக்குநர்களை மீண்டும் தேர்வு செய்வார்கள்.

காலிப் பணியிடங்கள் :

தற்போது பணிகள் எவையும் காலியாக இல்லை. தேர்தல் காலத்தின் போது தொகுதிக்கு 3 முதல் 5 லட்சம் தற்காலிகப் பணியாளர்கள் தேவைப் படுவார்கள்

ஊதியம் :

ரூ. 100 முதல் ரூ.500 வரை. ( ஒரு வேளை அசைவ உணவும் அளிக்கப்படும்)

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் :

நிறுவனத்தின் 96 % பங்குகளை தம்மிடம் வைத்துள்ள திரு. கரு & கோ.


தமிழினத் தலைவருக்குப் பத்து யோசனைகள்



பதவிப்பேரம் செய்து நல்ல லாபத்திற்கு வியாபாரமும் செய்து முடிச்சாச்சு. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் எங்களினத் தலைவருக்கு சில யோசனைகள் (1) ஈழத் தமிழர்களுக்கு இறங்கற்பா பாடலாம் (2) திராவிட வரலாற்றைத் திருத்தி, புளுகி நெஞ்சுக்கு நீதி சொல்லலாம் (3) தொல்காப்பிய பூங்கா இரண்டாம் பகுதி எழுதலாம் (4) ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்று வீதம் அண்ணா அறிவாலயம் கட்டலாம் (கட்டிடத்தின் பெயரிலாவது அண்ணா இருக்கிறதே!) (5) அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தலாம் (6) மானமிகு கீ. வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகளின் 5ம் தொகுப்பு வெளியிடலாம் (7) அடுத்த வாக்கு அறுவடைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதலாம் (8) தானே தன்னிகரற்ற தமிழினத் தலைவர் என்பதை நிரூபிக்க தேவையான புள்ளிவிவரங்களைச் சேகரித்து கலைஞர் தொலைக்காட்சியில் அரைபக்க புகைப்படத்துடன் வெளியிடலாம் (9) மிச்சம் மீதி உள்ள ம.தி.மு.க நிர்வாகிகளை இழுக்க பேரம் பேசலாம் (10) அப்பப்ப நேரம் இருந்தால், இந்தப் பாழாய்ப்போன மக்களைப் பத்தி நினைக்கலாம்

நன்றி :kothinilai.blogspot

சிவா.ஜி
18-05-2011, 03:01 PM
நச்...!!:icon_b:

ஆதி
18-05-2011, 04:04 PM
இதைதான் எல்லா கட்சியும் செய்து ஜெய்..

ஒன்று மட்டும் உண்மை, இங்கு எல்லாருமே பிரைவேட் லிமிடட் மாதிரித்தான் கட்சி நடத்துறாங்க..

யோசிச்சுப்பாருங்க...

கலைஞர் மட்டுமேன் அதிகமாக இந்த விடயத்தில் பேசப்படுறார் என்றால்...

திமுக அவர் தொடங்கின கட்சி இல்ல.. அண்ணா தொடங்கின கட்சி..

இன்னக்கி ஒரு குடும்பத்தின் கையிலிருக்கு...

காங் மாதிரி...

நாம காங்கை பற்றி பேசாததற்கு ஒரே காரணம்.. அது நேரு குடும்பம்... இந்திய சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட குடும்பம்.. எனும் ஒரு சப்பைக்கட்டால்தான்...

அம்மா ஊழல் செய்து சிக்கி, வழக்கு அது இது என்று அலைந்து கொண்டிருந்த போது...

அதிமுகவுக்கும் இது போலொரு விரிவாக்கம் சொன்னாங்க...

அண்ணன் தினகரன் முன்னேற்ற கழகம் என்று..

அந்த அளவுக்கு சசிக்கலா குடும்பத்தின் ஆட்சி...

ஜெ ஊழல்கள் பெரிசாக தெரிந்த போது கருணாநிதி மாசற்றமாணிக்கமாக தெரிந்தார், கருணாநிதி குடும்பம் ஊழல் செய்து சிக்கிய கொள்ள இப்போது ஜெ மாசற்றமாணிக்கமாக தெரிகிறார்..

இந்த மாற்றங்கள் மாறப்போவதில்லை.. நிர*ந்தரமாய் தொடரப்போகின்றன..

என்றும் நம் புலம்பல்களுடன்...

Nivas.T
20-05-2011, 08:55 AM
ஜெ ஊழல்கள் பெரிசாக தெரிந்த போது கருணாநிதி மாசற்றமாணிக்கமாக தெரிந்தார், கருணாநிதி குடும்பம் ஊழல் செய்து சிக்கிய கொள்ள இப்போது ஜெ மாசற்றமாணிக்கமாக தெரிகிறார்..
இந்த மாற்றங்கள் மாறப்போவதில்லை.. நிர*ந்தரமாய் தொடரப்போகின்றன..

என்றும் நம் புலம்பல்களுடன்...

இதைத்தான் நானும் வழிமொழிகிறேன்

நாஞ்சில் த.க.ஜெய்
20-05-2011, 05:11 PM
ஒன்று மட்டும் உண்மை, இங்கு எல்லாருமே பிரைவேட் லிமிடட் மாதிரித்தான் கட்சி நடத்துறாங்க..

ஆம் நண்பரே இன்று வரை எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் இந்த நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது ..ஒருசில கட்சிகளை தவிர உதாரணத்திற்கு கம் யூ னீ யிஸ் டு கட்சியினரை கூறலாம் ...இது போன்ற கட்சியினர் இன்றும் தமக்குள் தேர்தல்கள் வைத்து தங்களுடைய தலைவர்களை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் ..மற்ற கட்சிகளில் இது நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அதே நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் நிகழும் போது ஒரு சில சமயங்களில் சத்திய மூர்த்தி பவனில் நிகழும் நிகழ்வுகள் இன்று தவிர்க்க முடியாதாதாக இருக்கும் ..

ஜெ ஊழல்கள் பெரிசாக தெரிந்த போது கருணாநிதி மாசற்றமாணிக்கமாக தெரிந்தார், கருணாநிதி குடும்பம் ஊழல் செய்து சிக்கிய கொள்ள இப்போது ஜெ மாசற்றமாணிக்கமாக தெரிகிறார்..

இந்த மாற்றங்கள் மாறப்போவதில்லை.. நிரந்தரமாய் தொடரப்போகின்றன..

என்றும் நம் புலம்பல்களுடன்...

இன்றுவரை நடக்கும் உண்மைகளை நான்கு வரிகளில் தெளிவுற கூறிவிட்டீர்கள் ஆதன் அவர்களே...

நாஞ்சில் த.க.ஜெய்
21-05-2011, 03:14 PM
தேர்தல் விளம்பர இடைவேளை (http://www.writermugil.com/?p=1467)

சூர்யா – ஜோதிகா காப்பி குடிச்சா மட்டுந்தான் பார்ப்போமோ என்ன? சரத்குமார், கார்த்திக் எல்லாம் வேட்டி கட்டிட்டு திரியற வெளம்பரத்தை எத்தனை நாள்தான் பார்க்குறது?
ஒரு சேஞ்ச்சுக்காக…. சில விளம்பர கற்பனைகள்.

http://farm6.static.flickr.com/5303/5609139581_98e106f5cb.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609139581/)

http://farm6.static.flickr.com/5144/5609139015_2c126b79e8.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609139015/)

http://farm6.static.flickr.com/5225/5609139919_2b21c41052.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609139919/)

http://farm6.static.flickr.com/5103/5609720538_f00bbbab65.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609720538/)

http://farm6.static.flickr.com/5109/5609140355_fdbd835eb4.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609140355/)

http://farm5.static.flickr.com/4111/5609721552_5b5941fec0.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609721552/)

http://farm6.static.flickr.com/5306/5609140903_9906667d80.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609140903/)

http://farm6.static.flickr.com/5226/5609140511_418f2cfc1f.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609140511/)
பிரசாரத்துலயே எசகுபிசகா உளறி, எடக்கு மடக்கா ஆக்*ஷன் பண்ணுன விஜயகாந்துக்கு, விளம்பர வாய்ப்பே கிடைக்கல. அதுக்கெல்லாம் அசருவாரா நம்ம கேப்டன். அவருக்கு சமூக அக்கறை ஜாஸ்தியாச்சே! இருக்கவே இருக்கு கேப்டன் டீவி…


http://farm5.static.flickr.com/4109/5609141367_9c69f14197.jpg (http://www.flickr.com/photos/12874716@N00/5609141367/)

நன்றி :writermugil.com

நாஞ்சில் த.க.ஜெய்
24-05-2011, 09:10 PM
நான் விஜயகாந்தை சந்திப்பேன்- வடிவேலு பேட்டி




http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/kollywoods-face-off/images/vijayakanth-vadivelu.jpg (http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/kollywoods-face-off/images/vijayakanth-vadivelu.jpg)

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எப்படியும் நடிகர் வடிவேலுவை நமது கப்சா இணைய இதழுக்கு பேட்டி எடுக்க வேண்டுமென்று பிரபல நிருபர் கப்சா பாண்டி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வடிவேலுவை சந்திக்க முடியவில்லை.விக்ரமாதித்தனை போல நமது முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பலத்த கெஞ்சலுக்கு பிறகு நமக்கு பேட்டிகொடுக்க சம்மதித்தார் நடிகர் வடிவேலு. இனி..........


கேள்வி: நீங்கள் பிரச்சாரம் செய்தும் தி.மு.க.தோற்று விட்டதே?

வடிவேலு: என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க....

கேள்வி: என்னது சூட்டிங்கா? அப்புறம் எதுக்கு விஜயகாந்த திட்டினீங்க?
வடிவேலு: நான் எப்பன்னே...விஜயகாந்த திட்டினேன். அவரு எங்க ஊர்காரரு..எல்லாம் ஒன்னுக்கு ஒண்ணா மண்ணுக்கு மன்னா மதுரையில சுத்திக்கிட்டு திரிஞ்சோம்...சின்னக்கவுண்டர் படத்துல நான் அவருக்கு பிடிச்ச கொடையைக்கூட இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்..நான் போயி அவர திட்டுறதா?

கேள்வி: அப்படின்னா....தண்ணில மிதக்கற கப்பல ஓட்டுறவன் பேருதான் கேப்டன்னு சொன்னதெல்லாம்?
வடிவேலு: ஒ...நீங்க அத கேக்குறீங்களா?நான் கேப்டன்னு சொன்னது விஜயகாந்த இல்ல....மேலே பறக்குதே பிளேனு அத ஓட்டுறவன சொன்னேன்....


கேள்வி: என்னது பிளைட் ஓட்டறவன சொன்னீங்களா?
வடிவேலு: ஆமாண்ணே...சத்தியமா நான் அவனைத்தானே சொன்னேன்...ஒருநாளு நான் லண்டனுக்கு சூட்டிங் போறதுக்காக பிளேனுல பறந்துக்கு இருந்தேன். அப்பா நடு வானத்துல பிளேனு கிடுகிடுன்னு ஆடுச்சு. மாரியாத்தா என்னை காப்பாத்துன்னு நேரா பிளேனு ஓட்டுற கேப்டன்கிட்ட போயி எப்பா பாத்து ஓட்டக்கூடாதா? எம்புட்டு பச்ச புள்ளைக வருதுக...இப்படி பொறுப்பில்லாம பள்ளம் மேட்டுல விட்டு பிளேன ஓட்டு றியேன்னு தான் கேட்டேன். அந்த நாதாரி தண்ணி போட்டுருப்பான் போல...விட்டான் பாருங்க ஒரு அறை...என் கன்னம் பழுத்து போச்சு. என்ன ஒரு வில்லத்தனம் பயபுள்ளைக்கு...அந்த கடுப்புலே இருந்தேன். திருவாரூர் கூட்டத்துல கலைஞர் அய்யா முன்னாடி பேச நின்னப்போ அந்த நேரம்பாத்து ஒரு பிளேனு வானத்துல பறந்துச்சு.எனக்கு அடி வாங்குன யாவுகம் வந்திருச்சு...அதான் அப்படி பேசிட்டேன்.

கேள்வி: பிளைட் ஓட்டறவன் பேரு கேப்டன் இல்லியே...பைலட்ல?
வடிவேலு: அப்படியா....பாத்தீங்களா நான் இவ்வளவு நாளா பிளேனு ஓட்டறவன் பேருதான் கேப்டன்னு நினைச்சுக்கு இருந்தேன்.நான் என்ன உங்க மாதிரி படிச்ச ஆளா? கிராமத்துக்காரன் வெள்ளாந்தியான ஆளுண்ணே....

கேள்வி: அப்படின்னா நிஜமாவே நீங்க விஜயகாந்த திட்டலியா?

வடிவேலு: நான் திரும்ப திரும்ப சொல்றேன்...விஜயகாந்து அண்ணன நான் திட்டவே இல்லே...அவரு எம்புட்டு நல்லவரு தெரியுமா? நான் இன்னைக்கு இந்த நிலமையில இருக்கறதுக்கு அவருதான் காரணம்.

கேள்வி: அப்படியா...எப்படி?

வடிவேலு: அது பழைய கதைன்னே.... சின்னக்கவுண்டர் படம் எனக்கு ரெண்டாவது படம்ண்ணே...அதுல நான் விஜயகாந்துக்கு கொடை பிடிச்சுக்கே படம் முழுக்க வருவேன். அப்புடி கொடை பிடிக்கும் பொது ஒரு தடவ கொடக்கம்பி அவரு கண்ணுல லேசா குத்திருச்சு.உடனே அவரு ஆத்திரமாகி நங்கு நங்குன்னு நடு மண்டையில குட்டிட்டாரு...அப்ப என் தெய்வம் டைரக்டரு ஆர்.வி.உதயகுமாரு அண்ணன் ஓடியாந்து ஏப்பா இந்த பச்ச மண்ணைப்போட்டு இப்படி அடிச்சேன்னு எனக்காக விஜயகாந்து அண்ணன்கிட்ட நாயம் கேட்டாரு...அதுக்கு நம்ம விஜயகாந்து அண்ணன் என்கிட்டே அடிவாங்குனவன் மகாராஜன் ஆகிடுவான்னு சொன்னாரு...அவரு வாய் முகூர்த்தம் பலிச்சிருச்சு....

கேள்வி: உங்கள அடிச்சதுக்கு நீங்க ஏதுமே சொல்லலியா?
வடிவேலு: இல்லை...எனக்கு அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிச்சு. அன்னையிலிருந்து எனக்கு ஏறுமுகம் தான். அவரு சொன்ன மாதிரி இப்ப நான் மகாராஜன் ஆகிட்டேன்.

கேள்வி: அப்புறம் எதுக்கு அவரு கட்சிக்கு பிரச்சாரத்துக்கு போகாம..தி.மு.க-வுக்கு போனீங்க?

வடிவேலு: அவ்வ்வ்வவ்...எத்தனை தடைவைன்னே சொல்றது அது பிரச்சாரம் இல்லே...சூட்டிங்க்ன்னு. ஒரு நாளு அழகிரி அண்ணன் என்னை கூப்பிட்டு சன் பிக்சர்ஸ் ஒரு படம் எடுக்கறாங்க...நீதான் ஹீரோ. இந்தாருக்கு டயலாக் பேப்பரு...படிச்சுப்பாரு...ரெண்டு நாள்ல வேன் வரும் ஏறி சூட்டிங் போயிடுன்னு சொன்னாரு..சொன்ன மாதிரியே ரெண்டுநாள்ல ஒரு வேனை அனுப்பி இதுல ஏறி உக்காந்துக்கங்கன்னு சன் டீவிக்கரங்க சொன்னாங்க...நானும் சூட்டிங் தானேன்னு நம்பி ஏறி உக்காந்தேன். அவங்களும் ஊர் ஊரா கூட்டிக்கு போயி..சந்துக்கு சந்துக்கு நிக்கவச்சு பேச சொன்னாங்க....சுத்தி கேமரா வச்சுக்கு படமெல்லாம் எடுத்தாங்க....

கேள்வி: உங்களுக்கு சந்தேகம் வரலியா?

வடிவேலு: எனக்கும் லேசா ஒரு சந்தேகம் வந்துச்சு.டப்பிங் தனியாவுள்ள பேசுவோம். இவங்க மைக்லாம் கொடுத்து பேச சொல்றாங்கலேன்னு....அவங்க கிட்டேயும் கேட்டேன்.அதுக்கு ஒருத்தன் சொன்னான்...இது டைரக்டு டப்பிங்க்ன்னு...ஆனா அதுல ஒருத்தன் அப்பவே சொன்னான்..

கேள்வி: என்னன்னு சொன்னான்?

வடிவேலு: நாம என்ன சொன்னாலும் நம்புறாரு...இவரு ரொம்ப நல்லவருன்னான்.

கேள்வி: அப்படியா அவங்க உங்கள ஏமாத்திட்டாங்க....இப்ப என்ன பண்ணப்போறீங்க?

வடிவேலு: நேரா விஜயகாந்து அண்ணன பாத்து அவரு கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும். நான் வரட்டா...

இத்துடன் பேட்டி நிறைவு பெறுகிறது.

நன்றி : ragariz.blogspot

arun
26-06-2011, 05:30 PM
பாரபட்சம் பாக்காம எல்லார் காலையும் வாரி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி

இளசு
26-06-2011, 10:49 PM
கற்பனை விளம்பரங்களும் வடிவேலு கப்சா பேட்டியும் அருமை.

பகிர்தலுக்கு நன்றி நாஞ்சில் ஜெய்..

சிவா.ஜி
27-06-2011, 04:45 AM
ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற விளம்பரங்கள்...(ஜெயா-சசி மட்டும்தான் இன்றைய சூழலுக்குப் பொருத்தமில்லாமலிருக்கிறது)

நல்லக் கற்பனை. பகிர்வுக்கு நன்றி ஜெய்.

Ravee
27-06-2011, 05:07 AM
ஹா ஹா ஹா எங்க அலுவலகமே சிரிச்சது .... கலக்கி இருக்காங்க .......... பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி நண்பரே :lachen001: :lachen001: :lachen001:

ஆதி
27-06-2011, 07:08 AM
அனைத்தும் மிக அருமை... குறிப்பா சுப்பு சூப்பர்...

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 10:14 AM
தோழர்கள் அருண் இளசு ,சிவாஜி ,நிவாஸ்.T , ரவி ,மற்றும் ஆதன் விமர்சனங்களுக்கு நன்றிகள் ...

கனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் ...அடாடாட என்ன கடி (http://sangarfree.blogspot.com/2011/05/blog-post_20.html)


http://2.bp.blogspot.com/-CcBKOaVkWaE/TdZLk7rC_1I/AAAAAAAAAlk/E7BNDMALx0A/s1600/images.jpg (http://2.bp.blogspot.com/-CcBKOaVkWaE/TdZLk7rC_1I/AAAAAAAAAlk/E7BNDMALx0A/s1600/images.jpg)



கனிமொழி கைது விவகாரத்தை ரஜினியிடம் கூறினால் சந்தோசத்தில் உடனே வீடு திரும்புவார் ....நையாண்டி

கனிமொழியின் மகன் ஆதித்யா பாவம் ! இப்படிப்பட்ட தாய்க்கு பிள்ளையாக பிறந்தோமே என்று குழந்தை மனது பாடுபடும்! .............கணியன்

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! #ஒண்ணுக்கொன்னுஆதரவுஉள்ளத்திலஏன்பிரிவு.....? ...................ஆயிலியன்


செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம் .........................செய்யிது முஸ்தபா

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு , ஆசையயை அடக்காவிட்டால் திகாரில் போய் துஞ்சு #கனிமொழிகள் ..................டிபிசீ டி

முன் செய்த (மே-2009) சதி,வேறுரூபத்தில் பின் வந்து (மே-2011) கைதி ஆக்கியிருக்கிறது ......................................கோளாறு

சட்டபடி சந்திப்பேன் - கனிபொழி. # ஓ.. ராசாவை தான் சட்டபடி சந்திப்பேன்னு சொன்னீர்களா?.....................................................தமிழ்தாசன்


கலைஞருக்கு தமிழக மக்கள் தண்டனை- பதவி இழப்பு.. கனிமொழிக்கு நீதிமன்று தண்டனை - சிறையடைப்பு #யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல.............................................................லோசன் எஆர்வி

முருகா என்னை மாதிரி வயசான கிழவங்க கிட்டர்ந்து இந்த நாட்டை காப்பாத்துப்பா - ஸ்ரீராமசந்திரமூர்த்தி #தில்லுமுல்லு........... ஆயிலியன்


நிருபர்: உங்க பொண்ணு ஜெயில்ல இருக்குதாமே! கலைஞ்சர்: ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி!.......................................சிர்தாத

ராசாத்தி: போற எடத்துல பொறுப்ப நடந்துக்கணும்.. மாப்ள மனசு கோணாம பாத்துக்கணும் ......................எஸ் .ஜி .ஆர்

கனியயைப் புடிச்சி கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்... #கனிமொழிகள் --------------------tbcd

பாலூட்டி வளர்த்த கனி பதவி கொடுத்து பார்த்த கனி , முக வளர்த்த செல்லக் கனி நாளை வரும் திகாருக்கு - செல்லாம்மா, என் செல்லமா #கனிமொழிகள்...................................................tbcd

காதறுந்த ஊசியும் வாராது காண் திகார்வழிக்கே #கனிமொழிகள்............tbcd


"கருணா"நிதியின் முள்ளிவாய்க்கால் ஆரம்பம், காங்கிரஸின் முள்ளிவாய்க்காய் எப்போது #ஆவலுடன் .................கானாபிரபா

சே ஆங்கிலம் படிச்சிருக்கலாம் - அழகிரி ; சே எதுக்கு ஆங்கிலம் படிச்சேன் - கனிமொழி #ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் ....கானாபிரபா

தமிழ் மட்டும் தெரிஞ்சா தப்பிக்கலாம் #தயாளு அம்மாள் பொன்மொழி, கிடைக்குமிடம் கோபாலபுரம் .......................................கானாபிரபா


திமுகவை தமிழகத்தில் வேண்டுமானல் மைனாரிட்டி அரசாக இருந்திருக்கலாம், திஹாரில் அவர்கள்தான் மெஜாரிட்டி 2 எம்.பி.கள் ...............................................சிர்தர்ட்


ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியலியே. # கனிமொழி & ராசா திகார் ;;;;;;;;;;;;;;;;;;;;;சிர்த்ஹாத்
நன்றி: sangarfree.blogspot

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 07:12 PM
குறிப்பு :
வார்த்தைகள் சில தமிங்க்லீஷில் உள்ளது... தோழர்கள் பொறுத்தருள்க ...

https://mail.google.com/mail/?ui=2&ik=80dd4405c9&view=att&th=130d7905b3fd60ff&attid=0.2&disp=emb&realattid=b30bec9f0ea7a8e6_0.1.1&zw

https://mail.google.com/mail/?ui=2&ik=80dd4405c9&view=att&th=130d7905b3fd60ff&attid=0.1&disp=emb&realattid=b30bec9f0ea7a8e6_0.1.2&zw

https://mail.google.com/mail/?ui=2&ik=80dd4405c9&view=att&th=130d7905b3fd60ff&attid=0.3&disp=emb&realattid=b30bec9f0ea7a8e6_0.1.4&zw








நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய சகோதரருக்கு மற்றும் அவருக்கனுப்பிய தோழர்களுக்கு ....

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 10:45 AM
இன்னும் சில அரசியல் சிரிப்புகள்
http://www.tamilmantram.com/vb/[IMG]http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=91&pictureid=454http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=91&pictureid=454

vseenu
20-09-2011, 03:32 PM
மிகச்சிறந்த கற்பனை. ரசித்தேன்.இந்தியாவை நினைத்து வருந்தினேன்