PDA

View Full Version : மிதிவண்டி ஓட்டிக்கு ஒரு ஜே!



rema
17-05-2011, 03:57 PM
:aktion033:அதிகம் மெனக்கெடாமல்
அமர்ந்தவாறு பறக்கும்.....
வாகன ஓட்டிகள் மத்தியில்
நீங்கள் உழை(மிதி)த்தே முன்னேறுபவர்கள்...!
வண்ண விதவித அழகு வாகனங்கள்...
ஏக்கத்தை ஏற்படுத்தினாலும்...
ஏளனமாய் பார்க்கப்பட்டாலும்
இலக்கை மட்டுமே எதிர்நோக்கி பறப்பவர்கள்...!
உடற்பயிற்சி அவசியமில்லாதவர்கள் !
ஆனால் வாழ்த்துகிறோம்.....
விரைவில் நீங்களும் எங்கள் பிரிவில் சேர...!
அதுவரை நிமிர்ந்து பெருமையுடன் மிதித்து செல்லுங்கள்...!
மிதிவண்டிiயும் உங்கள் துன்பங்களையும்...!
நீங்கள் இன்னும் நச்சுப்புகையை கக்கவில்லை.....
ஓலிப்பானால் செவிகளை செவிடாக்கவில்லை......
புவி உங்களால் சுத்தமாகிறது !வாழ்க நீங்கள் !! :nature-smiley-003:

அமரன்
17-05-2011, 06:29 PM
எதிர்க்காத்தில் பத்துக் கிலோமீட்டர் மிதித்து படிக்கப் போனதுவும்
முழங்காலளவு சட்டைக்குள் புகுந்து சேட்டை விடும் காற்றைச் சமாளித்தபடி, கண்களுக்குள் விழும் புழுதித் துணுக்குகளை தவிர்த்தபடி, விஷப்பாம்புகளுக்கு இரையாகாமல் பயணித்த பெண்கள் நினைவுக்கு வந்து நெஞ்சு நிமிர வைக்கிறார்கள். வாழ்க பொருளாதாரத் தடை!!!
பயணம் தொடரட்டும் மின்மினி.

Ravee
17-05-2011, 06:44 PM
நல்வரவு மின்மினி .... இந்த மாத பட்ஜெட்டில் மிதி வண்டி வாங்க ஒரு பங்கு எடுத்து வைத்து விட்டேன் ............... அவ்வவ்வ்வ்வ்

sarcharan
18-05-2011, 02:12 PM
சைக்கிள் வாழ்க...

சைக்கிள் ஒட்டி சைட் அடிப்பவர்களும் வாழ்க

M.Jagadeesan
18-05-2011, 02:54 PM
கவிதை நன்று மின்மினி!

சிவா.ஜி
18-05-2011, 03:57 PM
காலத்திற்கேற்ற கவிதை(ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்)

வாழ்த்துக்கள் மின்மினி மற்றும் வரவேற்புகள்.

கீதம்
18-05-2011, 09:51 PM
மிதிவண்டியை மதித்து ஒரு மணியான கவிதை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மிதிவண்டியை குழந்தைகளுக்கானது என்று நாம் ஓரங்கட்டிவிட்டுவிட்டது நமது துரதிஷ்டமே.

அருமையான சிந்தனையைத் தூண்டும் கவிதைக்குப் பாராட்டுகள்.

rema
24-05-2011, 06:32 AM
பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி !:p

apdiya
24-05-2011, 06:59 AM
மின்மினி - பாராட்டுகள் - அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

Nivas.T
24-05-2011, 07:50 AM
நல்ல கவிதை

பாராட்டுகள் மின்மினி

நாஞ்சில் த.க.ஜெய்
24-05-2011, 01:54 PM
செலவின்றி ஒரு உடற்பயிற்சி ..இன்றைய சூழலில் தேவையான கவிதை ..தொடருங்கள் ...

rema
02-06-2011, 01:07 AM
:icon_b:பாராட்டிய அன்புள்ளங்களுக்கு நன்றி !