PDA

View Full Version : காதல் இராஜா கடிதங்கள்..kaathalraja
16-05-2011, 08:13 AM
அன்பானவர்களே..

அறிமுகப்படுத்திய வேகத்தில் ஆண்டவன் என்னை வேறு பணிகளுக்குத் திருப்பி விட்டு விட்டான்..
இடம் மாறி இப்போது சொந்த ஊரில் குடியமர்ந்து விட்டேன்..
காலம் என்னை வேகமாக அலைக்கழித்து விட்டது.. கரையோரம் ஒதுங்கிய சிப்பியாய் சலனமற்று அமர்ந்திருக்கிறேன்..

மீண்டும் இப்போது உங்களுடன் அன்பான உங்கள் காதல் ராஜா..

காதலுடன்
ராஜா

அக்னி
16-05-2011, 09:34 AM
வருக ராஜா அவர்களே...

சிப்பியைத் திறந்து முத்துக்களை ஒளிரவிடுங்கள்...

வாழ்த்தி வரவேற்கின்றேன்...

kaathalraja
16-05-2011, 10:08 AM
நன்றி அக்னி..

என் கடிதங்களால் உங்கள் கன்னம் வருடக் காத்திருக்கிறேன் நண்பர்களே..

காதலுடன்
இராஜா..

kaathalraja
02-06-2011, 09:30 AM
http://4.bp.blogspot.com/_67MYipaR2qo/S_pUzUKixxI/AAAAAAAAAAw/SCOYTqaO09Q/s1600/Z214008Romance-Posters.jpg

என்
பறவை நினைவுகளில் உன்
பங்களிப்புதனைப் படம் பிடித்துப் பார்க்கையில்
இதயத்தின் ஈரமான ஓர் ஓரத்தில்
வலிக்கிறது…. இன்னும்.

அதற்கு நீ காதல் என்று பெயரிட்டதாய் நினைவு.

காதல் என நாம் கருதிய நினைவுகளில்
மெல்ல நான் மூழ்குகையில்
என் சிந்தனைகளே என்னைச்
சிரத்தையோடு சிதைக்கின்றன.

இப்போது என் இதயம் கேட்பது சொல்லட்டுமா?

ஒரு தாய்ப்பறவை தன்
குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு.

மழலை பசியுணர்ந்து
மார்பு கொடுக்கும் தாய்மை.

குலுங்கி நான் அழும்போது
குனிந்து என் முதுகு தடவி
ஆறுதல் சொல்லும் தோழமை.

தோல்வி கண்டு நான் துவளுகையில்
இறைவன் துணை சொல்லி
இதயம் தேற்றும் இதம்.

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்
உனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி.

கைவிரல் பின்னிக் கொண்டு
காலம் முழுமைக்கும்
காதலி நான் உண்டு என்று
கண்டுகொள்ள வைக்கும் சிநேகம்.

கூடல் வயது குன்றிய பின்னரும்
காதல் என்பது கரையாத ஒன்று என
அன்பு காட்டும் அண்மை.

கோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்
அமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்
ஆதிக்கம் கலந்த அன்பு.

எங்கேனும் நான் எல்லை மீறினால்
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்
உன்னிரு கண் ஈரம்.

இத்தனை கேட்டாலும்
என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.

கிடைப்பாயா?

Nivas.T
02-06-2011, 10:00 AM
கவிதை மிக அருமை

தொடருங்கள் காதல்ராஜா
பாராட்டுகள்

Ravee
02-06-2011, 10:07 AM
வருக ராஜா அவர்களே...

சிப்பியைத் திறந்து முத்துக்களை ஒளிரவிடுங்கள்...

வாழ்த்தி வரவேற்கின்றேன்...

அது என்ன களை மட்டும் மிள்ர்கிறது ..... :lachen001: :lachen001: :lachen001:

kaathalraja
02-06-2011, 12:48 PM
மிக்க நன்றி நிவாஸ்.. :-)

அக்னி
02-06-2011, 02:29 PM
அது என்ன களை மட்டும் மிள்ர்கிறது ..... :lachen001: :lachen001: :lachen001:

ஒரு சிப்பிக்குள் முத்தொன்று இருப்பதாகத்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
சிப்பியாய் இருக்கும் ராஜா அவர்கள் முத்துக்கள் பலவற்றைத் தருவாரென்ற நம்பிக்கையில்,
ஒரு சிப்பியிலிருந்து முத்துக்கள் எனக் குறிப்பிடவே, கொஞ்சம் மிளிரவைக்கவேண்டியதாய்விட்டது...
:)

Ravee
02-06-2011, 02:44 PM
ஒரு சிப்பிக்குள் முத்தொன்று இருப்பதாகத்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
சிப்பியாய் இருக்கும் ராஜா அவர்கள் முத்துக்கள் பலவற்றைத் தருவாரென்ற நம்பிக்கையில்,
ஒரு சிப்பியிலிருந்து முத்துக்கள் எனக் குறிப்பிடவே, கொஞ்சம் மிளிரவைக்கவேண்டியதாய்விட்டது...
:)

ஆமாம் அக்னி , ஒவ்வொரு வார்த்தைகளையும் அனுபவித்து எழுதி இருக்கிறார் ... அந்த கடைசி பத்து வரிகள் மிகவும் அருமை ...

கூடல் வயது குன்றிய பின்னரும்
காதல் என்பது கரையாத ஒன்று என
அன்பு காட்டும் அண்மை.

கோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்
அமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்
ஆதிக்கம் கலந்த அன்பு.

எங்கேனும் நான் எல்லை மீறினால்
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்
உன்னிரு கண் ஈரம்

கீதம்
03-06-2011, 02:09 AM
சின்னச் சின்ன ஆசைகள் ஒன்று கூடி பேராசைகளானதோ?

அற்புத உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்துகின்றன வரிகள்.

சுகமான சோகம். நிறையட்டும் காதல், பெருகட்டும் கவிதைகள்.

ஜானகி
03-06-2011, 06:27 AM
மலர்களால் வருடுவது போன்ற இதமான வார்த்தைகளில் அழுத்தமான உணர்வுகள்.....சபாஷ் !

கலாசுரன்
16-06-2011, 11:38 AM
நல்லா இருக்கு ...!!!