PDA

View Full Version : தனக்குத் தானே சூன்யம்.



M.Jagadeesan
16-05-2011, 03:03 AM
தான் பின்னிய வலையில் இருந்து
தப்பிக்க வழி தெரியாமல்
சிக்கித் தவித்தது சிலந்தி.

வெயிலின் வெம்மை
தாங்க முடியாமல்
வெந்து மாய்கிறான்
வெங்கதிரோன்.

வீம்புக்குக் குரலெடுத்துப்
பாடியதால் தவளை
பாம்புக்குத் திருநெல்வேலி
அல்வா ஆனது.

கோடரிக் காம்பு செய்வதற்காகத்
தச்சனுக்கு மரம் கொடுத்தது
காட்டு மரங்கள்.

தான் கட்டிய
ஊழல் மாளிகையே
சிறைச்சாலை ஆனது
அரசியல்வாதிக்கு!

Ravee
16-05-2011, 04:23 AM
காலத்துக்கு ஏற்ற கவிதை அருமை அருமை .... :lachen001:

M.Jagadeesan
16-05-2011, 05:14 AM
நன்றி ரவி அவர்களே!

Nivas.T
16-05-2011, 06:29 AM
உண்மையின் உவமைகள்

நல்ல கவிதை ஐயா

அக்னி
16-05-2011, 06:38 AM
நல்ல கருத்தான கவிதை...

ஆனால்,
அ(மற்ற)வை வைத்துக்கொண்டவை
அவற்றின் வாழ்வை முடித்துவைக்க..,
அரசியல்வாதி மட்டும்
அதிலும் வாழ்கின்றானே... :confused:

M.Jagadeesan
16-05-2011, 07:02 AM
நல்ல கருத்தான கவிதை...

ஆனால்,
அ(மற்ற)வை வைத்துக்கொண்டவை
அவற்றின் வாழ்வை முடித்துவைக்க..,
அரசியல்வாதி மட்டும்
அதிலும் வாழ்கின்றானே... :confused:

மானம் போனபின் வாழ்ந்தென்ன பயன்?

M.Jagadeesan
16-05-2011, 07:03 AM
பாராட்டுக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
16-05-2011, 07:59 AM
ரசிக்கவைத்த உவமைகளும் உண்மைகளும். பாராட்டுகள் ஐயா.

sarcharan
16-05-2011, 08:25 AM
கவிதை சூப்பர் ஐயா :)

M.Jagadeesan
16-05-2011, 08:39 AM
கீதம்,சர்சரன் பாராட்டுகளுக்கு நன்றி!!

அக்னி
16-05-2011, 09:19 AM
மானம் போனபின் வாழ்ந்தென்ன பயன்?
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் களல்லவே
இவர்கள்...
மானம் என்ற ஒன்று இருந்தால்,
இவர்கள் உயிரை விட்டிருப்பார்களே...

மானம் பற்றிய கவலை
எமக்குத்தான்.
இவர்களைப் பொறுத்தவரையில்
அவமானம் கூடப்
பொருட்டல்ல.

நல்லவேளை,
மானம் இவர்களிடம் இல்லாதது...
இல்லையென்றால்,
அதையும் வைத்திருப்பார்கள்
அடமானம்...

ஜானகி
16-05-2011, 09:43 AM
"இன்பமும் துன்பமும் பிறர் தர வாரா "

தங்களின் கவிதையும் அக்னி அவர்களின் பதிலும் அருமை.

வெற்றி
16-05-2011, 09:54 AM
நல்ல கவித... இதை படித்தவுடன் என் சொந்த கதை தான் நினைவுக்கு வருகிறது.

திருமணம் ஆன புதிதில் திருமதி மொக்கச்சாமி பாயசம் வைக்கிறேன் பேர்வழிஎன (பலா பாயசம்) வைத்து தர , அதை சாப்பிட சாப்பிட குமட்டிகொண்டு வந்தது.. ஆனலும் மனைவி மனக் நோகக்கூடாது என ப்ப்ப்ப்ராமதம். என சொல்லித்தொலைத்து தான் .... (எனக்கு நானே அன்று வைத்த சூனியம் ) . என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அதே பலா பாயசம்..:frown::frown:

M.Jagadeesan
16-05-2011, 10:49 AM
நல்ல கவித... இதை படித்தவுடன் என் சொந்த கதை தான் நினைவுக்கு வருகிறது.

திருமணம் ஆன புதிதில் திருமதி மொக்கச்சாமி பாயசம் வைக்கிறேன் பேர்வழிஎன (பலா பாயசம்) வைத்து தர , அதை சாப்பிட சாப்பிட குமட்டிகொண்டு வந்தது.. ஆனலும் மனைவி மனக் நோகக்கூடாது என ப்ப்ப்ப்ராமதம். என சொல்லித்தொலைத்து தான் .... (எனக்கு நானே அன்று வைத்த சூனியம் ) . என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அதே பலா பாயசம்..:frown::frown:

ஆக ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சொந்த சூன்யம் வைத்துக்கொள்கிறீர்கள்!

M.Jagadeesan
16-05-2011, 10:58 AM
ஜானகி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
16-05-2011, 02:21 PM
ஜெகதீசன் ஐயாவின் கவிதை ,அக்னி அவர்களின் அரசியல் வாதிகளிடம் இல்லாத மானம் பற்றிய கவிதை மொக்கைசாமி அவர்களின் தலைப்புக்கேற்ற அவர் பட்ட அவதி பற்றிய விளக்கம் அருமை ....

M.Jagadeesan
16-05-2011, 02:24 PM
நன்றி! ஜெய் அவர்களே!