PDA

View Full Version : விருமாண்டி செய்திகள்.



virumaandi
14-05-2011, 08:58 AM
வடிவேலு வீட்ட்டை தொடர்ந்தது எஸ் வி சேகர் மற்றும் பொன்முடி என்று ஒரு நாளில் அதிமுகவினர் அரங்கேற்றிய அராஜகம்

எஸ்வி சேகர் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்!

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
ஆகா
இதற்கு தானா ???
நன்றாக இருந்த தமிழ்நாடு இப்படி நாகரிகம் இல்லாத அரசியல் வரைதானா ???

Ravee
14-05-2011, 09:13 AM
அப்புறம் இத்தனை நாள் வாங்குனதை எல்லாம் திருப்பி தரவேணாமா ??? ............ :lachen001:

வியாசன்
14-05-2011, 10:09 AM
அப்புறம் இத்தனை நாள் வாங்குனதை எல்லாம் திருப்பி தரவேணாமா ??? ............ :lachen001:

அப்பிடி போடுங்க அருவாளை :lachen001:

virumaandi
14-05-2011, 10:16 AM
ஓஹோ இதற்கு தான் மாற்றமா

தமிழன் கன்னடத்திலானும் ஈழத்தினாலும் தமிழ் நாடினாலும் மற்றவனிடம் அடிவாங்குவதை தான் தமிழன் விரும்புகிறான்

எஈலம்
அரசியல் நாகரிகம் எல்லாம் சும்மானாச்சும் ஓட்டுக்கு தான் இல்லையா

திமுகவினர் கொண்டாங்களின் போது எந்த மந்திரியும் எம் எல் எ வும் தாக்க படவில்லை

முரளிராஜா
14-05-2011, 02:54 PM
இது போன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும், எந்த கட்சியினராக இருந்தாலும் கண்டிக்கதக்கது

சிவா.ஜி
14-05-2011, 03:13 PM
நேர்மையா சொல்லுங்க நண்பரே.....அராஜகம் எந்த ஆட்சியில் அதிகமென்பதை.....கருத்துக் கணிப்பு எடுத்தால்...நிச்சயம் 95 சதவீதம் மக்கள்...தி.மு.க ஆட்சியில்தான் ரௌடியிஸம் அதிகம் எனச் சொல்வார்கள்

எஸ்.வி. சேகர் அவர்களின் வீட்டின் மேல் கல்லெறிந்தவர்கள் ஏன் காங்கிரஸாராய் இருக்க முடியாது?...அதேபோல வடிவேலு அவர்களை ஆவேசமுள்ள விஜயகாந்த் கட்சியின் தொண்டர்கள் எதிர்க்காமல் இருப்பார்களா? இவர்களாவது கல்லடியுடன் நிறுத்தினார்கள்.....அதே தி.மு.கவினர் கொலையே செய்திருப்பார்கள்.

காரணம்...தி.மு.கவின் தலைமை.....தவறான வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்(இந்த ர் விகுதியைக்கூட தயக்கத்துடனே எழுதுகிறேன்) குடும்பமே ரௌடிக் குடும்பம்.

சரி அதெல்லாம் விடுங்க......இந்த ஐந்து வருடங்கள்....இந்த ஆட்சி நல்லதாக அமையாத பட்சத்தில்...இதே நிலைதான்...அதாவது தி.மு.க வுக்கு ஏற்பட்ட நிலைதான் அ.தி.மு.க வுக்கும்.

இப்போதிருந்தே ஏன் இந்த எரிச்சல்...?????

சிவா.ஜி
14-05-2011, 03:20 PM
__________________
இவன்-->>> விரு...விரு...விரு..விரு...விருமாண்டி.

”உலகில் எங்கு இருந்தாலும் தமிழரிடம் தமிழிலேயே பேசுவோம்....!!
மற்றவருக்கும் தமிழ் சொல்லி கொடுப்போம் !!!”

“ஓஹோ இதற்கு தான் மாற்றமா

தமிழன் கன்னடத்திலானும் ஈழத்தினாலும் தமிழ் நாடினாலும் மற்றவனிடம் அடிவாங்குவதை தான் தமிழன் விரும்புகிறான்

எஈலம்
அரசியல் நாகரிகம் எல்லாம் சும்மானாச்சும் ஓட்டுக்கு தான் இல்லையா

திமுகவினர் கொண்டாங்களின் போது எந்த மந்திரியும் எம் எல் எ வும் தாக்க படவில்லை”

ஈழத்தினாலும்....ஏங்க...ஈழத்து மக்களா ஈழத்து மக்களை அடித்தார்கள்...? இதைக்கூட சரியாக சொல்ல முடியாத நீங்கள்.......எழுதும் தமிழும், சொல்லும் கருத்தும்....

கன்னடத்து பெண்மணி என குற்றம் சுமத்தும் பச்சைத் தமிழன் தமிழ்...

உங்க தலைவர் மாதிரியே காமெடி பீஸாயிட்டீங்களே.....

praveen
15-05-2011, 04:48 AM
அதிமுகவினரெல்லாம் யார்?. மலையாளிகளா?.

பிரித்து பதிக்காதீர்கள்.

எஸ்விசேகர் வீட்டில் கல் எரிந்தது தங்கபாலு கோஸ்டியாகக்கூட இருக்கலாம் என்று பேச்சிருக்கிறது.

எந்த ஆட்சி அமைந்தாலும் முதல் 100 நாட்களுக்கு எதுவும் பேசக்கூடாது.

பின்னர் விமர்சனம் செய்யுங்கள், தற்போது தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டு திரி ஆரம்பியுங்கள். அது தான் சரியானது.

virumaandi
15-05-2011, 12:48 PM
வெற்றி மிதப்பில் அதீத 'ஆட்டத்தில்' தொண்டர்கள்-

சென்னை: மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளதைத் தொடர்ந்து தொண்டர்கள் குறிப்பாக புது மாப்பிள்ளையாக மாறியுள்ள தேமுதிகவினர் ஆங்காங்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்காக போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு இவற்றுக்கு ஆரம்பத்திலேயே ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க முயல்வது நல்லது.

சாதாரண வெற்றி பெற்றாலே கட்சிக்கார்களைப் பிடிக்க முடியாது. தற்போது அதிமுக பெற்றுள்ள வெற்றி, குறிப்பாக தேமுதிகவுக்கு கிடைத்துள்ள வெற்றி மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. எனவே தேமுதிகவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.

தேர்தல் முடிவு வெளியான நாளன்று வாகனங்களை படு வேகமாக ஓட்டிக் கொண்டு அவர்கள் போன விதமும், பட்டாசுகளை ஆங்காங்கு வெடித்த விதமும் மக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் முகச் சுளிப்பையே ஏற்படுத்தியது.

கையில் அதிகாரம் வரப் போகிறது, அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்ற பயமும் கூடவே மக்களுக்கு வந்துள்ளது.

அதேபோல போலீஸாரும் தற்போது அதிமுகவின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

நேற்று ஜெயலலிதா தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள எம்.ஜிஆர் சிலை, பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்தையே நிறுத்தி விட்டனர் போலீஸார். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.

போக்குவரத்துப் போலீஸார் தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்ததாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒருபக்கம் வாகனங்களை சிக்கல் இல்லாமல் செல்ல வழி வகுத்து விட்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இப்படியா போக்குவரத்தை முடக்கி வைப்பது என்று அவர்கள் முனு முனுத்தனர். அதற்குள்ளேயே இப்படியா என்று அவர்கள் சலித்துக் கொண்டனர். கடந்த 1991 முதல் 96 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் தோல்வி அடைய இந்த போக்குவரத்துக் குளறுபடிகளும் ஒரு முக்கியக் காரணம்.

சென்னை நகரில் ஜெயலலிதா எங்கு சென்றாலும் உடனே அந்தப் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் போலீஸார், ஜெயலலிதா போன பின்னர்தான் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அதிமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

தற்போது மிகப் பெரிய வெற்றியுடன் கோட்டைக்குத் திரும்பியுள்ள அதிமுக இந்த விஷயத்தில் மிகக் கவனமுடன் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆட்சி மீதும், அதிமுக மீதும் அதிருப்தியும் வந்து விடும் என்பதை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.

நல்லாட்சியைத் தருவது மட்டும் ஒரு கட்சிக்கு முக்கியமானதல்ல. அவர்களையும் அறியாமல் கெட்ட பெயரை சம்பாதிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டியதும் அவசியமானது.

அதேபோல ஆட்சி நம் கையில் என்ற மமதை தொண்டர்களுக்கும் வந்து விடாமல் இருப்பதும் முக்கியம். அதிமுகவினர் மட்டுமல்ல, முதல் முறையாக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள தேமுதிகவினரும் மிகுந்த கவனத்துடன், அடக்கத்துடன் இருந்து தாங்கள் இதுவரை பெற்றுள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வதும், அதை பலமாக்கிக் கொள்வதும் அவசியம்.

அதை விட்டு விட்டு 'வடிவேலுவை அடிப்போம்' என்ற ரீதியில் கிளம்புவது அவர்களுக்கு சமூகத்தில் நிச்சயம் நல்ல பெயரைக் கொடுக்காது.

அப்படி இல்லாமல் அதிமுகவினரும், தேமுதிகவினரும் அடிதடியில் குதித்தால், இவங்களுக்கு திமுக பரவாயில்லையே என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளது.

Ravee
15-05-2011, 05:55 PM
ஐந்தாண்டுகால விடுமுறை பயணத்திற்கு பிறகு தமிழ் நாட்டுக்கு வந்திருக்கும் அண்ணன் விருமாண்டி அவர்களை வரவேற்கிறோம் .... :cool:...........:D

உதயசூரியன்
15-05-2011, 10:15 PM
ஐந்தாண்டுகால விடுமுறை பயணத்திற்கு பிறகு தமிழ் நாட்டுக்கு வந்திருக்கும் அண்ணன் விருமாண்டி அவர்களை வரவேற்கிறோம் .... :cool:...........:D
தோழன் ரவி அவர்களே.
ரெண்டு பெரும் தானே ஒண்ணா வந்தீர்கள்
ஜெயலலிதா சசிகலா மாதிரி ஐந்து வருடம் கழித்து

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

Ravee
16-05-2011, 01:29 AM
ஜெக்கும் , முக விற்கும் பூசாரி வேலை பார்க்க வீரமணி ஒருத்தர் போதும் உதய சூரியன் . நாம் எல்லாம் எதற்கு .... உங்கள் பார்வையில் நீங்கள் எல்லாம் தருமராகவும் இல்லை ..... துரியோதனாகவும் இல்லை ..... வெறும் காரிய பார்வை .......காக்காய் பார்வையை மட்டுமே தெரிகிறது ..... மதுரையில் நடந்த அராஜகங்களை நேருக்கு நேர் சந்தித்தவன் நான் ....... இப்போதைக்கு ஆட்டத்தின் அளவு ஒரு சில தனி நபர்கள் மேல் மட்டும் இருக்கலாம் ..........ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீது இருக்காது , ஆனால் கட்டுப்பாடு மீறி போகும் போது மக்கள் தீர்ப்பு மீண்டும் மாற்று கட்சிக்கு ஆதரவாக போகும் .... உதாரணம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கொளுத்தப்பட்டது . என்ன மாற்று சக்தியாய் இவர்கள் மட்டும் இருப்பதுதான் தமிழனுக்கு பிரச்சனை ..... நல்ல ஒரு புதிய கட்சி பிறந்தால் தோள் கொடுக்க நாங்கள் தயார் . இப்போது உடன் இருக்கும் உதிரி வெடிகளை நாங்கள் கட்சிகளாக கருதவில்ல்லை.

virumaandi
17-05-2011, 11:52 PM
நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்



சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.



படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.



வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறியுள்ளார்.



உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை
அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.



இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Ravee
18-05-2011, 12:06 AM
நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்


காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பரவாயில்லையே , காவல் துறை செயல்படுகிறதே ............ சென்ற ஆட்சியில் புகார் கொடுக்க சென்றவர்கள் வெறும் கையோடுதான் திரும்புவார்கள் . கொடுக்கும் கேசை எடுத்தால்தானே ...... பரவாயில்லை ஆட்சிமாற்றத்தில் ஒரு நல்ல மாறுதல் தெரிகிறது ............ :icon_b: :icon_b: :icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
18-05-2011, 04:23 AM
இப்போதிருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தனது சிப்பாயை(வடிவேல் ) பலிகொடுத்து எதிரணியின் மந்திரியை வெட்ட முயல்வது போன்று ஏன் அந்த அணியினரே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு தவறான தகவல்களை பரப்ப கூடாது?...

அன்புரசிகன்
18-05-2011, 04:29 AM
http://1.bp.blogspot.com/_ypjLHvxFR-I/S8BM2_gz9rI/AAAAAAAAAM0/Oqoo-rcocv0/s1600/BG.jpg

நன்றி http://1.bp.blogspot.com/

நல்லா ஒத்துப்போகுதெல்லே...................

ஆதவா
18-05-2011, 07:43 AM
மாத சம்பளம் வாங்குபவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்னைப் போன்ற சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கடந்தகால கொடுங்கோல் ஆட்சியாளர்களால் / அவர்களது குடும்பக்கிளைகளால் / அவர்களது கைத்தடிகளால்.. இழைக்கப்பட்ட கொடுமைகள்! நேரில் சந்தித்தால் நிறைய பட்டியலிடுவேன்.. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். திடுதிப்பென்று ஒருநாள் மதுரையில் இருந்து போன்.. “அண்னன் தான் உங்ககிட்ட பேசச்சொன்னார். நீங்க என்ன பண்றிங்கன்னா.. உடனே ஒரு இருபது லட்ச ரூபாய மதுரை ஐ.என்.ஜி.வைஸ்யா பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட் பண்ணிடுங்க.. என்ன புரியுதா?” என்று மிரட்டியது ஒரு கைத்தடி! நான் பத்திரிகையாளன் என்ற பின்புலமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டிக்கொண்டிருப்பது ஆபத்தாயிற்றே! பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து - கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்தான் - செய்து கொண்டிடுக்கும் தொழிலைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டாக வேண்டும்! அப்படி ஒருமுறை பார்க்க நேர்ந்தபோது மொபைல் நம்பரை வாங்கிக் குறித்துக் கொண்டார்கள். அண்ணன் அ’னா சொன்னார்.. சு’னா சொன்னார் என அடிக்கடி பேசலானார்கள்! ஃபிக்சட் டெபாசிட் மேட்டர் என்னடா விவரம் என விசாரித்தால்.. ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கியின் மதுரை கிளைக்கு ஒரே மாதத்தில் 30 கோடி ரூபாய் டெபாசிட் வாங்கித் தருவதாக அண்ணன் அ’னா உறுதிகூறி, அதற்கான கமிஷன் தொகையாக பல கோடி ரூபாயை முன்கூட்டியே வாங்கிக்கொண்டாராம்! உள்ளூரில் தொழில் செய்யும் எல்லோரையும் அதட்டி - உருட்டி - மிரட்டியே அந்த 30 கோடி ரூபாயை டெபாசிட் பண்ண வைத்தார்கள். கடனை உடனை வாங்கி ஃபிக்சட் டெபாசிட் செய்தார்கள் அப்பாவிகள் பலரும். அந்த அளவுக்கு அராஜகம் தலைவிரித்து ஆட்டம் ஆடிய மதுரையில் உதிக்காத சூரியன் ஒரு சீட்டைக்கூட பிடிக்காமல் மண்ணைக் கவ்வியது என்போன்ற சொந்தத் தொழில் செய்பவர்களுக்கெல்லாம் தவுசன்வாலா பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டிய சந்தோஷம். தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என அடம்பிடித்துக் குரல் கொடுத்த - ப்ரஃபைல் படத்திலேயே உதய சூரியனைப் போட்டுக்கொண்டு வடம் பிடித்த இணைய நண்பர்களுக்கெல்லாம் அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்யா தெரியும்! இந்தமுறையும் அவனுக ஆட்சிக்கு வந்திருந்தானுங்கன்னா தமிழ் நாட்டை அந்த ஆண்டவானால மட்டுமில்லை.. எவனாலயும் காப்பாத்தியிருக்க முடியாது!

நன்றி : டி.செல்வம், திருநெல்வேலி. தினமலர்.காம்,

இது நான் கேள்விப்படும் பல அராஜகங்களில் ஒன்று... இதற்கு முன்னர் கேள்விப்பட்டதும், பார்த்ததும் எல்லாமே உண்மையாக இருக்க, இதுவும் கட்டுக்கதையாக இருக்க வாய்ப்பில்லை!!! நடந்திருக்கு சார்....

சிவா.ஜி
18-05-2011, 03:08 PM
நிச்சயமா நடந்திருக்கு ஆதவா...என் கதையே அதற்கு ஆதாரம்...நான் விரிவாகப் பிறகு உண்மைச் சம்பவங்களில் சொல்கிறேன். அங்கு உண்மையை மட்டுமே சொல்ல முடியுமென்பதால்.....

அமரன்
18-05-2011, 07:06 PM
அடடே... தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தானா.. இது நாள் வரை இது தெரியாமப் போச்சே..

virumaandi
18-05-2011, 09:24 PM
மு.க.அழகிரி
திருமண மண்டபம் மீது தாக்குதல்








மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.



மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார். ‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா

விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.




நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.



இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

virumaandi
18-05-2011, 09:25 PM
அழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்



மதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.




அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

virumaandi
18-05-2011, 10:27 PM
*தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு
ஐகோர்ட்டில் வழக்கு*



புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து ஜார்ஜ்
கோட்டைக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னையில் 1640ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோட்டைதான் அதிகார மையமாக செயல்பட்டு வருகிறது.
பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இந்த கோட்டை, அரசு அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு
வருகிறது.


அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு
வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து
வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த
ஆட்சியில் முடிவு செய்தார்.


இதுசம்பந்தமாக சட்டசபை விதி 110 ன் கீழ் சட்டசபையில் அறிவிப்பை அவர்
வெளியிட்டார். 110 ம் விதியின் கீழ் வெளியிடப்பட்டதால் அந்த அறிவிப்பை பற்றி
யாரும் விவாதிக்க முடியாது.


ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையை
பராமரிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவிட வேண்டியதிருப்பதாலும், அங்கு போதிய
இடவசதிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம்
செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டது.


இந்த நிலையில் 2006ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட
தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை அந்த அரசு தேர்வு
செய்தது. இதற்காக அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவாணர் அரங்கம்
இடிக்கப்பட்டது.


ஆங்கிலேய கவர்னர் கன்னிமாரா பிரபு 1890 ம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள்
பழைய கட்டிடத்தில் இயங்கும், சென்னையிலேயே முதல் போலீஸ் நிலையமான
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையமும் அகற்றப்பட்டது.


அந்த இடத்தில் ரூ.450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூ.1,100 கோடி செலவில் புதிய
தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரமாண்டமான விழாவில் திறந்து
வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தில் தலைமைச் செயலகம் மட்டுமல்ல, சட்டசபையும்
இயங்குகிறது,


இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத்
தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதற்காக கோட்டை புதுப்பிக்கப்படுவதாகவும்
பத்திரிகைகளில் செய்திகள், படங்கள் வெளியாகியுள்ளன.


ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில், பழைய அரசால் நூலகம்
அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தையும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. செய்திகளைப்
பார்க்கும்போது, புதிய தலைமைச் செயலகத்தை அப்படியே கைவிடுவதற்கு இந்த அரசு
முடிவெடுத்திருப்பது தெரிகிறது.


இது சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
பல கோடி பணத்தை போட்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது
சரியான செயல்பாடு அல்ல.


தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை
இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை
இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர்,
பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.


புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவது சரிதான் என்று அரசு எடுத்திருந்த
முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம் என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம்
அளிக்க வேண்டும்.


எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை, புதிய தலைமை செயலகத்தையும்,
சட்டசபையையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

virumaandi
18-05-2011, 10:33 PM
திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க உத்தரவிட்டதாக தகவல்?







முந்தைய திமுக அரசு மாணவர்கள் நலன் கருதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் புதிய புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன் பலகோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.



திமுக அரசு கடந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இணையதளங்களிலும் புத்தகங்கள் வெளியாகி உள்ளன.



இந்நிலையில் திடீரென சில பகுதிகளில் சமச்சீர் கல்வி புத்தக விநியோகத்தை நிறுத்துமாறு அரசிடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் செம்மொழி மாநாடு மற்றும் முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு ஆகியவை இருப்பதால், இதை நீக்குவதற்கு உத்தவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை அழிக்கவும் உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய புத்தகங்கள் கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



பல லட்ச ரூபாய் செலவழித்து தமிழக அரசு தயாரித்த புத்தகங்கள் அழிக்கப்படுவதால் அரசுப் பணம் வீணக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

virumaandi
18-05-2011, 10:54 PM
மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்








மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.



மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார். ‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா

விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.




நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.



இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

virumaandi
18-05-2011, 11:05 PM
அழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்



மதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.




அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அன்புரசிகன்
19-05-2011, 12:36 AM
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார். ‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.


நம்பும் படியாக இல்லை விருமாண்டி. நான் அதிமுக அல்லது திமுக ஆதரவாளன் அல்ல. ஆனால் பலர் வந்து உடைச்சதாகவும் ஒரு காவலாளி வந்து துரத்தியதாகவும் கூறியது நம்பும்படியாக இல்லை. இதுவே காவலாளியும் தீவிரமாக தாக்கப்பட்டார் என்றிருந்தாலாவது............... லொஜிக் இடிக்குது. இல்ல சுப்ரீம் ஸ்டார் அல்டிமேட் ஸ்டார் ஆக்ஷன் கிங் இளையதளபதி சின்னத்தளபதி விக்ரம் சூர்யா போன்றவர்களின் கலவையா அந்த காவலாளி???

திரைப்படங்களில் பார்ப்பது போல் தம்மை தாமே தாக்கி அனுதாபம் வாங்குவது போலும் அதிமுக விற்கு எதிராக மக்களை திருப்புவது போன்ற நடவெடிக்கையாகவே தெரிகிறது.

அழகிரி அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்தை திமுக ஆதரவாளர்கள் தாக்கியதில்லையா??? ஒருவர் தீமூட்டி கொல்லப்படவில்லையா?? பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை? இன்று உறவுகள் ஒன்றாக கைகோர்த்துவிட்டீர்கள். தம் உறவுகளை இழந்தவர்களின் நிலை என்ன???

virumaandi
19-05-2011, 12:59 AM
நல்ல சட்டம் ஒழுங்கு
மாற்றம் தேவைன்னு சொன்னவங்க எதற்காக சொன்னாங்க..
இதுக்கு பெயர் தான் நீதியை நிலை நாட்டுவதா??

அன்பு அவர்களே லாஜிக் இல்லா மேஜிக்காக பல நிகழ்சிகளை இலங்கை செய்திகளாக அளிக்கும் போது நாங்கள் நம்புகிறோம்..

பத்திரிகை செய்திகள் ஒன்றல்ல...... பல வந்த வண்ணம் உள்ளது..
மக்கள் அச்சதுடன் பார்க்கின்றனர்..

விளைவு ஜெயலலிதாவே முன்பு தோற்றது போல ஆகும்

அன்புரசிகன்
19-05-2011, 01:25 AM
அன்பு அவர்களே லாஜிக் இல்லா மேஜிக்காக பல நிகழ்சிகளை இலங்கை செய்திகளாக அளிக்கும் போது நாங்கள் நம்புகிறோம்..


அது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்...

selvaaa
19-05-2011, 01:31 AM
சென்னை அரசினர் தோட்டத்தில் ரூ.1,100 கோடியில் புதிய தலைமைச் செயலகத்தை கடந்த அரசு கட்டியது. தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் அதிமுக, தலைமைச் செயலகத்தை பழைய இடத்துக்கு மாற்ற முடிவு செய்து, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே, தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வது நியாயமா?

ஏற்கனவே 1100 கோடி வீண்டிக்கப்பட்டுவிட்டது என்பதை விட, அதில் கடந்த அதிமுகவும் ஆர்வம் காட்டியது என்பதுவே உண்மை. அவ்வாறு அவர்கள் புதிய கட்டிடம் கட்ட ராணிமேரி கல்லூரி வளாகத்தை வளைக்க முயற்சித்ததும் நாம் அறியாதது இல்லை.

அது போல், பழைய தலைமைச் செயலகம் வாடகைக்கான இடம் என்றிருக்கும் பொழுது, அதனை சீரமைக்கும் பணி... வாடகைப் பணம் என மேலும் மேலும் பணத்தை வீணடிப்பதைத் தான் நீங்கள் விரும்புவீர்கள் ஆயின்,

அ.தி.மு.க - ஜெ. ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கைக்கு ஜெ போடுங்கள்.


இல்லை, உண்மையாக மக்கள் பணத்தினை சரியாக பயன்படுத்த மட்டுமே நாங்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றால், இது சரியா?


விருப்பு வெறுப்புக்கு அப்பாற்ப்பட்டு பொதுமக்களுக்கு நன்மை செய்வதாக உறுதிமொழியுடன் வரும் ஆட்சியாளர்கள், இப்படி தன் முந்தய ஆட்சியாளர் செய்த தவறுக்காக இப்படி நடந்து கொள்வது மீண்டும் தவறு செய்வது நியாயமா?

என்னும் சரியான அரசு உத்தரவு பிறக்கிப்படவில்லை. இப்படியொரு சூழ்நிலையில், நடுநிலையில் இருந்து நீங்கள் பரப்பும் சரியான கருத்துக்களே ஆட்சியாளர்கள் மண்டையில் குட்டும்.

sarcharan
19-05-2011, 08:50 AM
ஜெயாவின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

எங்காவது ஒரு ஜோசியன் சொல்லி இருப்பான் அதன் பேரில் செய்யப்படுவது தான் இந்த இடமாற்றம்

முன்பு கண்ணகி சிலையும் இப்படி தான் உடைக்கப்பட்டது

ஆதவா
19-05-2011, 09:00 AM
ஜெயாவின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

எங்காவது ஒரு ஜோசியன் சொல்லி இருப்பான் அதன் பேரில் செய்யப்படுவது தான் இந்த இடமாற்றம்

முன்பு கண்ணகி சிலையும் இப்படி தான் உடைக்கப்பட்டது

ஜெ,. என்ன மந்திரவாதிங்களா?? சூழ்ச்சி பண்ணி கவுக்கிறதுக்கு???

அம்மாவின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. (கண்டிக்கத்தக்கது என்று சொல்லவேண்டுமானால் புதிய செயலகத்தை என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்து..)
இப்போது செலவு செய்யும் பல கோடி ரூபாய்கள் வீண்தான், இரண்டுநாளாக அமைச்சர்களுடன் ஆலோசனை, ட்ராஃபிக் நிறுத்தக் கூடாது என்று ஆணை என்று ஏறிக் கொண்டு போகும்பொழுது அலுவலக மாற்றம் செய்து அடுத்த கட்சிக்காரர்கள் பேசும்படி ஒரு முதல்வர் வைத்துக் கொள்ளக்கூடாது!!!

பார்ப்போம்... இன்னும் என்ன நடக்கப் போகிறது என.

sarcharan
19-05-2011, 09:18 AM
இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு... போக போக பாப்போம்...
ஜெவின் அட்டூழியங்கள்

ஆதவா
19-05-2011, 09:42 AM
இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு... போக போக பாப்போம்...
ஜெவின் அட்டூழியங்கள்

உங்களை வாத்தியார் ஹீரோவா போட்டாலும் போட்டார், இப்படி சுடறீங்களே???
இந்தமுறையாவது நல்லாட்சி கிடைக்கும் என்று நம்புங்க சார்...
ஒவ்வொரு ஐந்து வருடமும் நம்பிக்கையிலதானே போகுது!!

sarcharan
19-05-2011, 09:43 AM
அப்படியா அப்போ அமைதி ஆகிடுறேன்

lolluvathiyar
19-05-2011, 01:13 PM
நல்லதோ கெட்டதோ பிடிச்சிருக்கோ பிடிக்கலியோ ஏராளமான செலவு செஞ்சு தலைமை செயலத்தை கட்டியாச்சு அதனால் அங்கெயே போய் ஆட்சி புரிவதுதான் நல்லது. புதிய ஆட்சி எடுத்த இந்த முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. மேலும் இது தாற்காலிகமான முடிவாக தான் இருக்க முடியும் (ஜிம்மிக்ஸ்) நிச்சயம் புதிய கட்டிடத்திற்க்கு போய் விடுவார்கள் என்று நம்புகிறேன்.

selvaaa
19-05-2011, 01:33 PM
வாத்தியாரே சரியா சொன்னீங்க!

இப்போதைய வீண் செலவை இன்றைய அரசின் நெகட்டிவ் பாயிண்ட்டில் போட்டுக்குவோம்.

செல்வா
19-05-2011, 07:06 PM
எல்லா இடங்களிலும் வெறும் கல்வீச்சும், கண்ணாடிச் சேதம் மட்டுமே நடந்து வருவதால் எனக்கென்னவோ ஆளும் கட்சியின் அட்டகாசமாகத் தெரியவில்லை. அதோடு வழக்குகள் கொடுத்தால் வாங்கிக்கொள்வதும் காவல்துறைப் பாதுகாப்பு கொடுக்கப் படுவதையும் பார்த்தால். சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார்களோ? என்று தான் தோன்றுகிறது.

அழுது வடிந்து அனுதாபம் தேட முயல்கிறார்களோ என்னவோ?

ஆனால் அராஜகம் என்று பார்த்தால் திமுக அதிமுக இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.

anna
20-05-2011, 01:22 PM
1200 கோடிக்கு முதல்ல ஆப்பு வச்சாசு. இப்ப ரங்கசாமி கூட தகராற ஆரம்பிச்சாச்சு. எப்ப யானைகள் எல்லாம் முதுமலைக்கு போகுமுனு தெரியலை. இந்த தடவை ஒரு மாற்றமாக பூனைகளை எல்லாம் பூந்தம்ல்லி பூனைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டியது தான் (யாரவது ஜோஷியகாரர் சொன்னால் மேற் சொன்னதும் நடக்கும்)என்னடா இது தமிழனுக்கும் தமிழுக்கும் வந்த சோதனை? மொத்தல தமிழனையும் தமிழ்நாட்டையும் காமெடி பீஸா ஆக்கிட்டாங்கப்பா.

ஆதி
20-05-2011, 01:35 PM
இது அம்மாவுக்கு புதிதல்ல...

கருணாநிதி தொட்டத்தை அம்மா தொடமாட்டார்.. தீட்டு...

எம்.ஜி.ஆர் சாமாதி இடிக்கப்பட்டு கட்டப்பட்டது... இன்னும் பல சொல்லலாம்...

சரி, இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை எந்த கணக்கில் சேர்ப்பது.. இதனாலும் விலைவாசி உயருமே ??

இவங்க ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுக்க நாம துணை போறதை நினைத்தான் வருத்தமா இருக்கு...

விக்ரம்
20-05-2011, 01:44 PM
மே 13ந் தேதிக்கு முன்னர் சிலரின் கருத்துக்கள் திகார் முன்னேற்ற கழகத்தின் கொ.ப.செ கருத்துக்கள் போன்று இருந்தது.

மே 13ந் தேதிக்கு பின்னர் அம்மா.தி.மு.க கொ.ப.செ போல் சிலரின் கருத்துக்கள் இருக்கக் கூடாது..

ஒரு நல்ல ஆட்சியாளராக ஜெயா மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா?

புதிய கட்டடத்தில் தலைமைச் செயலகம் நடத்த ஜெயாவின் ஈகோ விட்டுக் கொடுக்காது. அத மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

சிவா.ஜி
20-05-2011, 04:45 PM
என்னமோ அந்த புதிய தலைமைச் செயலகத்தை இடிச்சுத் தள்ளிட்ட மாதிரியில்ல புலம்புறாங்க....அது அப்படியேத்தானே இருக்கு. ஏற்கனவே இருந்த கட்டடத்துலத்தானே, ......ஏற்கனவே சட்டசபை நடந்த இடத்துலத்தானே இப்ப நடக்குது....என்னமோ அம்மாதான் 1100 கோடிய வீணாக்குனதா ஏன் இந்த கருணாநிதி புலம்பல் மற்றும் ஏமாற்று ஃபார்முலா?

புதுக்கட்டிடம்......எதற்குப் பயன்படுத்துறாங்கன்னு...பாப்போம்.....முதல்ல அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பெறட்டும்....கருணாநிதி மாதிரி......அரைவேக்காட்டுத்தனமா.....இந்தக் கட்டிடத்தை எதுக்கு பயன்படுத்தனும்?

போங்கய்யா...போய் வேற ஏதாவது வேல இருந்தா பாருங்க....!!!

நாஞ்சில் த.க.ஜெய்
20-05-2011, 06:25 PM
பழமையை போற்ற வேண்டும் எனும் முதல்வரின் கொள்கை நியாயமானது அதேநேரத்தில் வீணாகும் மக்கள் பணத்தின் மதிப்பினை அறிந்த ஒரு முதல்வர் செய்யும் அழகல்ல இது ..

சரி, இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை எந்த கணக்கில் சேர்ப்பது.. இதனாலும் விலைவாசி உயருமே ??
இவங்க ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுக்க நாம துணை போறதை நினைத்தான் வருத்தமா இருக்கு... உண்மையான வார்த்தைகள் நண்பரே ..

ஆதவா
21-05-2011, 04:29 AM
என்னமோ அந்த புதிய தலைமைச் செயலகத்தை இடிச்சுத் தள்ளிட்ட மாதிரியில்ல புலம்புறாங்க....அது அப்படியேத்தானே இருக்கு. ஏற்கனவே இருந்த கட்டடத்துலத்தானே, ......ஏற்கனவே சட்டசபை நடந்த இடத்துலத்தானே இப்ப நடக்குது....என்னமோ அம்மாதான் 1100 கோடிய வீணாக்குனதா ஏன் இந்த கருணாநிதி புலம்பல் மற்றும் ஏமாற்று ஃபார்முலா?

புதுக்கட்டிடம்......எதற்குப் பயன்படுத்துறாங்கன்னு...பாப்போம்.....முதல்ல அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பெறட்டும்....இந்தக் கட்டிடத்தை எதுக்கு பயன்படுத்தனும்?

போங்கய்யா...போய் வேற ஏதாவது வேல இருந்தா பாருங்க....!!!


புதிய தலைமைச் செயலகம் குறித்தும், செயலக மாற்றம் குறித்தும் அம்மா அவர்கள் அறீக்கை கொடுத்திருக்கிறார்கள், அதன்படி நிர்வாக ஒழுங்கிற்காகவும், இன்னும் முழுமையடையாத பணிகளுக்காகவும் செயலகத்தை மாற்றியதாக சொல்லியிருக்கிறார்... சோ, செயலகம் மாற்றப்பட்டதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றி பேசுதல் இப்போதைக்கு வீண் தான்!!

இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கே... புதிய செயலகத்தை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை நாம் பார்க்கத்தானே போகிறோம்!!

Nivas.T
21-05-2011, 12:39 PM
என்னமோ அந்த புதிய தலைமைச் செயலகத்தை இடிச்சுத் தள்ளிட்ட மாதிரியில்ல புலம்புறாங்க....அது அப்படியேத்தானே இருக்கு. ஏற்கனவே இருந்த கட்டடத்துலத்தானே, ......ஏற்கனவே சட்டசபை நடந்த இடத்துலத்தானே இப்ப நடக்குது....என்னமோ அம்மாதான் 1100 கோடிய வீணாக்குனதா ஏன் இந்த கருணாநிதி புலம்பல் மற்றும் ஏமாற்று ஃபார்முலா?

புதுக்கட்டிடம்......எதற்குப் பயன்படுத்துறாங்கன்னு...பாப்போம்.....முதல்ல அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பெறட்டும்....கருணாநிதி மாதிரி......அரைவேக்காட்டுத்தனமா.....இந்தக் கட்டிடத்தை எதுக்கு பயன்படுத்தனும்?

போங்கய்யா...போய் வேற ஏதாவது வேல இருந்தா பாருங்க....!!!

இதுபோல்தான்

அவர்கள் செய்வது தவறாக இருந்தாலும் அதனை மறைத்து அவர்களுக்கு வழியமைத்துக் கொடுப்பது நாம்தான். யாராக இருந்தாலும் தவறு தவறுதான் என்ற எண்ணம் அனைத்துமக்களிடம் எப்பொழுது உருவாகிறது அப்பொழுதுதான் இந்த நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் விடிவு காலம்.

படித்த நாமே இப்படி என்றால் பாமர மக்களுக்கு சொல்லவா வேண்டும்?

எந்த ஒரு அரசியல் வாதியையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. அவர்களை நாம்தான் ஊக்கப் படுத்துகிறோம், நாமே தான் அனுபவிக்க வேண்டும்.

நாம் அவர்களை செம்மை படுத்த முயல்வதில்லை ஏனெனில் அதற்க்கு நாம் முதலில் செம்மையாக இருக்க வேண்டுமே.

ஆதி
22-05-2011, 10:39 AM
என்னமோ அந்த புதிய தலைமைச் செயலகத்தை இடிச்சுத் தள்ளிட்ட மாதிரியில்ல புலம்புறாங்க....அது அப்படியேத்தானே இருக்கு. ஏற்கனவே இருந்த கட்டடத்துலத்தானே, ......ஏற்கனவே சட்டசபை நடந்த இடத்துலத்தானே இப்ப நடக்குது....என்னமோ அம்மாதான் 1100 கோடிய வீணாக்குனதா ஏன் இந்த கருணாநிதி புலம்பல் மற்றும் ஏமாற்று ஃபார்முலா?

புதுக்கட்டிடம்......எதற்குப் பயன்படுத்துறாங்கன்னு...பாப்போம்.....முதல்ல அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பெறட்டும்....கருணாநிதி மாதிரி......அரைவேக்காட்டுத்தனமா.....இந்தக் கட்டிடத்தை எதுக்கு பயன்படுத்தனும்?

போங்கய்யா...போய் வேற ஏதாவது வேல இருந்தா பாருங்க....!!!

சரி, சென்ற ஆட்சியின் போது அம்மா அவர்கள், சட்டப்பேரவை கட்டத்தானே அண்ணா பல்கலைகழத்தின் இடத்தையும், ராணிமேரி கல்லூரி இடத்தையும் கேட்டு சர்ச்சைக்குள்ளாகி கொண்டாட்கள்...

ராணிமேரி கல்லூரி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது போலிஸாரால் தடியடிக்குள்ளானது நினைவிருக்கிறதா அண்ணா ?

அதாவது அம்மாவின் மனதிலும் புதிய சட்டப்பேரவை கட்ட திட்டம் இருந்தது, அதனை அவர்களின் ஆட்சி காலத்துக்குள் செய்ய எத்தனித்து அவரும் இடங்களை தேர்வு செய்தார், ஆனால் அது சர்ச்சைக்குரியனவாகவே இருந்ததால், அவரால் அதனை மேல்நடத்த முடியவில்லை..

கருணாநிதி, அரசாங்க இடமான ஓமலூரார் தோட்டத்திலேயே அதனை கட்டினார்..

அது கட்டி முடிக்கப்பட்ட போதே அதனை நான் பயன்படுத்த மாட்டேன் என்று அம்மா சொல்லிவிட்டார்.. ஒரே காரணம் அது கருணாநிதியால் கட்டப்பட்ட ஒன்று..

இந்தியாவின் பாராளுமன்றம் எது என்று கேட்டால் எம்மிடம் பதில் உண்டு..

தமிழக சட்டப்பேரவை எங்கிருக்கு என்று கேட்டால்..

திமுக ஆட்சியில் ஓமலூரார் தோட்டம், அதிமுக ஆட்சியில் ஜார்ஜ்கோட்டை என்றுதான் பதில் சொல்ல முடியும்..

ஜார்ஜ் கோட்டையாவது தமிழக அரசுக்கு சொந்தம் என்றால் உங்களின் வாதம் சரி அது ராணுவதிற்கு சொந்தமான இடம், சட்டசபைக்கு பல நல்ல கட்டிடங்கள் இருந்து, உபரியாக இந்த புதிய கட்டிடம் இருந்தால், இதை வேறு எதற்கு பயன்படுத்துறாஙக் நு பார்க்கலாம் என்று சொல்லலாம், ஆனால் இருக்குறதே ஒரு இடம் அதனை எதற்கு பயன்படுத்துறாங்கனு பார்க்கலாம் என்று சொல்வதை நீங்கள் பார்க்கும் போதுதான் மலைப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது..

உங்கள் வரிப்பணம் வீணாவதை நீங்கள் ஏற்க தாயராக இருப்பதால், நாங்களும் ஏற்கவேண்டும் என்று வாதாடி கருணாநிதியை இழுத்து வந்து அரசியல் புரிவதை கண்டிப்பாக, வன்மையாக எதிர்க்கிறேன்..

இந்த பரிவர்தனையில் ஊழலே நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா உங்களால் ?

சிவா.ஜி
22-05-2011, 02:59 PM
ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பெற்ற(இன்னும் முடியாத) கட்டிடத்தை தனது தலைமை செயலகமாய் ஏற்றுக்கொள்ள முடியாத புதிய முதல்வரை தவறாக நினைக்க முடியவில்லை. ஒரு சாதாரன மனிதனே முடிக்கப்படாத கட்டிடத்துக்கு தன் குடியிருப்பை மாற்றிக்கொள்ளத் தயங்கும்போது.....இது தவறா?

அந்தக் கட்டிடத்தை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு?

இதில்(அதாவது பழைய ஜார்ஜ் கோட்டையில் சட்டசபையை தொடர்வது) எங்கள் வரிப்பணம் எங்கே வீணானது ஆதன்? புதிய கட்டிடம் கட்டப்பெற்றதில்தான் பல கோடிகள் மக்கள் பணம் கருணாநிதியின் குடும்ப ஆட்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. அது நிச்சயம் வெளியே வரப்போகிறது.

மொத்தத்தில்....கருணாநிதியின் ஆட்சி...நமது தமிழ்நாட்டின் அரசியலில்....மிகப்பெரிய களங்கம்....இதை நியாயப்படுத்துவோரை நான்....எந்தவிதத்திலும் நல்லக் குடிமகனாய் நினைக்கவேயில்லை. இனி இதைப் பற்றி நான் பேசினால்...எனக்கு மரியாதையில்லை.

இனி அரசியல் பதிவுகளில் எனது பார்வை இருக்காது.
வாழ்க தமிழ்!

அமரன்
22-05-2011, 06:37 PM
விருமாண்டி அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்தும் ஒன்றாகப்பட்டுள்ளன.

கண்ணியமான முறையில் செய்திகளை அலசுங்கள்..

துணை நிர்வாகி.

அமரன்
22-05-2011, 06:43 PM
விருமாண்டி..

துணை நிர்வாகியாக இல்லாவிட்டால் உங்கள் பதிவுகளைப் படிக்கவே மாட்டேன். ஏனெனில் உங்கள் பதிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று அறுதியான முடிவுக்கு வந்துவிட்டேன்

அரசியல் களம் போற போக்கைப் பார்த்தால் இன்னும் சிலரது அரசியல் பதிவுகளையும் புறக்கணிக்கும் மன நிலைக்கு வந்துடுவேன் போல.

மற்றவர்களும் இந்த முடிவுக்கு வந்து விடாமல் அனைவரும் பார்த்துக்கொள்ளுங்கள்.

தூயவன்
23-05-2011, 01:24 PM
எனக்கென்வோ கருணாநிதியின் குடுப்பதில் இருந்து தான் ஒருவர் விருமாண்டி என்ற புனை பெயரில் மன்றத்தில் உலா வருகிறார் என்று தோன்றுகிறது.. இது குறித்து உண்மையை அறிய மன்ற CBI ல் முறையிடவுள்ளேன்.

THEVENTHIRAR
31-07-2011, 09:11 AM
முதலில் விமர்சிக்கும் வர்ணனையாளர்கள் நடுநிலை மனதோடு இருந்தால் அனைத்தும் சோதிக்கலாம்.


ஆனால் இங்க பெரும்பாலும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்ட மனதோடு அதை தீர்க்க இந்த தளத்தில் வசைபாடி மனதை சாந்தப்படுத்திக் கொள்கிறீர்...

ம்ம்ம்..நடக்கட்டும் அப்படியாவது இந்த தளம் உதவட்டும்.