PDA

View Full Version : கம்ப்யூட்டர் காளிடாஸ�ம் - கிளி ஜோசியரும்lavanya
08-12-2003, 03:11 PM
கம்ப்யூட்டர் காளிடாஸம் - கிளி ஜோசியரும்

நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழ்

இந்த சிறுகதை எப்போதோ மேற்குறிப்பிட்ட இதழில் என் நண்பர் எழுதியது....ஒரு எட்டு வருடம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்...நம் மன்ற மக்களின் சந்தோஷத்திற்காக
கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருந்ததை இங்கே என் ஸ்டைலில் எழுதி பதிவு
செய்கிறேன்.தவறெனில் நிர்வாகிகள் சரியான இடத்தில் பதியவும்.


<span style='color:#0900ff'>நிறைய கூட்டம் கூடும் எப்போதும் பரப்பரப்பாக இருக்கும் அண்ணா சாலை ஓரமாக
ஒரு பெரிய ஆலமரம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அதன் அடியில் முப்பது ஆண்டுகளாக ஒரு ஜோசியர் இருந்தார்.நாராயண மூர்த்தி என்பது அவர் பெயர்.பெரு மழை
பெய்தாலும் பேய்காற்று அடித்தாலும் கலவரம் சண்டை எது நடந்தாலும் ஏன் கடலே பொங்கி
எழுந்தாலும் அவர் அந்த இடத்திற்கு வராத நாளே இருக்காது'தொழிலில்' அவ்வளவு
சிரத்தையானவர். அவர் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறதா என்பது வேறு விஷயம்.ஆனால் சமீப ஒரு வாரமாக அவர் வந்து அமரும் அந்த இடம் காலியாக இருப்பது உங்களுக்கு
உறுத்தவில்லை....அதற்கு காரணம் நம் நண்பர் காளிதாஸ்....

நம் கதாநாயகன் கம்ப்யூட்டர் காளிதாஸை மன்னிக்கவும் கம்ப்யூட்டர் காளி டாஸை
நீங்கள் நிறைய கம்ப்யூட்டர் தொடர்பான தலைப்புகளில் சந்தித்திருக்கலாம். அவரின்
அப்பா அம்மா ஆசையாக வைத்த பெயர் காளிதாஸ்..ஆனால் இவர் கம்ப்யூட்டர் மேல் உள்ள
காதலால்,வெறியால் தன் பெயரை காளிடாஸ் என மாற்றிக் கொண்டது எல்லோர்க்கும்
தெரியும்.தவிர அத்தோடு நில்லாமல் தன் மாமா பையன் கோகுலை COBOL என மாற்றம்
செய்ததும்,தன் ஒன்று விட்ட சித்தப்பா பாஸ்கரை PASCAL என பெயர் மாற்ற சொல்லி
அது கொஞ்சம் வயதான அவர் காதில் ராஸ்கல் என விழ போய் அவர் சண்டை போட்டதில் இரண்டு வீடுகளும் இன்று வரை பேசி கொள்ளாமல் போய்விட்டதிலிருந்தும் நீங்கள் காளிடாஸின் கம்ப்யூட்டர் மோகத்தை புரிந்து கொள்ள வேண்டும்...தவிர அந்த ஏரியாவுக்கு ஓட்டு கேட்டு வந்த அரசியல்வாதியை 'கட்சியின் மானிட்டரே....தமிழகத்தின் சிபியூவே கழகத்தின் ஹார்ட் டிஸ்கே ' என காளிதாஸ் அழைக்க அன்று அந்த ஏரியாவுக்கு வந்த அரசியல்வாதி அதற்கு பின் வரவே இல்லை.

ஒரு நாள் கோபாலும்,காளிதாஸம் பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு வர
எத்தனிக்கையில் சனீஸ்வரன் சரியாக ஜோஸியரை பார்த்ததால் கோபால் காளிடாஸிடம்
'மாமா வா மாமா உனக்கு ஜோஸியம் பார்க்கலாம்...உன் கல்யாணம் தள்ளிக்கிட்டே போவுது'
என சொல்ல காளிடாஸ்க்கும் ஆர்வம் மேலிட இரண்டு பேரும் ஜோசியரிடம் தன் எதிர்காலம்
பற்றி கணிக்க அந்த ஆலமரத்திடம் நெருங்கினார்கள்.

ஜோசியரின் கெட்ட நேரம் காளிதாஸ் உருவத்தில் வருவதை அறியாத ஜோசியர்
நாராயண மூர்த்தி 'வாங்க வாங்க என்கிட்டே எப்போ வந்தீங்களோ அப்பவே உங்களுக்கு
நல்ல நேரம்தான் 'என வாயெல்லாம் பல்லாய் அழைக்க இருவரும் அவரிடம் அமர
காளிதாஸ் 'ஏன் சார்..இப்பதான் கம்ப்யூட்டர் ஜோசியம் வந்திடுச்சே இன்னும் ஏன் இந்த கிளி
எல்லாம் பழக்கி பழைய டைப்பாவே இருக்கீங்க..'என்று சலித்துக்கொண்டே உட்கார
அந்த தருணமே ஜோசியருக்கு 'இது நல்ல பார்ட்டி இல்லை என்று தோணிவிட்டது.கோபால் 'மாமாவுக்குதான் பார்க்கணும்..மாமா பேர் காளி தாஸ் ..என சொல்லி நம்மாள் முறைக்க ஆரம்பித்தவுடன் இல்லை இல்லை காளிடாஸ் என்று திருத்தினான்.

நாராயணா ஜோசியர் கிளியை கூண்டு கதவு நீக்கி 'நாதமுனி நல்வாக்கு சொல்லும்
பரமேஸ்வர அருள் பெற்ற ஜெயமாலினி கிளியே...அண்ணன் காளிடாஸ்க்கு நல்ல சீட்டு
ஒண்ணு எடம்மா..'என்று பாடியபடியே அழைக்க அந்த கிளி வெளியே வந்து ஒவ்வொரு
சீட்டாய் எடுக்க நம்மாள் பொறுமையிழந்து 'என்னா ஸார்,டேட்டாபேஸ்லாம் கரெக்டா
மெயிண்டைன் பண்றதில்லையா....?கிளி இவ்வளவு டிலே பண்ணுது...அதுக்கு SEEK,
INDEX லாம் சொல்லி கொடுக்கலையா...? DATA கலெக்ட் பண்றதுக்கே இவ்வளவு
நேரம்னா எப்ப நீ Process பண்ணி OUTPUT Report கொடுக்கப்போறே...என்று கேட்டவுடன்
ஜோசியர் நாராயண மூர்த்திக்கு வயிறு கலக்க ஆரம்பித்தது...டேட்டாபேஸ்,இண்டெக்ஸ்,சீக்,
ப்ராஸஸ் எதுவுமே அவருக்கு ஒன்றும் புரியவில்லை.கடைசியாக கிளி போட்ட சீட்டை
எடுத்து பிரிக்க அவர் கெட்ட நேரம் உச்சியில் இருந்ததால் அந்த சீட்டில் எதுவுமே
படம் இல்லை.வெறுமையாய் இருந்தது...இருந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை
யில் காளிடாஸிடம் உரையாட தொடங்கினார்.

"உங்க நட்சத்திரம் சொல்லுங்க..."

"WORD STAR"

(ஜோசியர் குழம்பினார்..அப்படி ஒரு நட்சத்திரமே இல்லையே.....)

"பிடிச்ச மிருகம் சொல்லுங்க...."

"FOXPRO"

(ஜோசியருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது...)

"அப்படிங்களா....நல்ல மிருகம்.....பிடிச்ச பழம் ....?"

" APPLE MAC...."

மனதுக்குள் ...( ஆஹா இன்னிக்கு முழிச்ச முழியே சரியில்லையே.....) "பிடிச்ச
தலைவர்லாம் யாருங்க.....?

"பில் கேட்ஸ் ,கார்டெல் மூர், சார்லஸ் பாபேஜ்....."

ஜோசியர் நாராயண மூர்த்திக்கு உலகமே வெறுத்து போனது...இனி எது கேட்டாலும்
பிரச்னை ஆகி விடும்....ஜோசியர் கடைசியாக ஒரு அஸ்திரத்தில் காளிடாஸை வீழ்த்த
திட்டமிட்டார்.

"சரி பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க....."

காளிடாஸ் பட்டென்று " 6.22 " என்றான். ஜோசியர் முழுதும் குழம்பி போய்
என்ன '6.22..ஆ...? என்றார் பரிதாபமாக......

காளிடாஸ் பெருமையாய் 'ஆமாம் அதுவும் பத்துக்குள்ளேதானே இருக்கு...."

ஜோசியர் நாராயணமூர்த்தி சட்டென எழுந்தார்.எல்லா சீட்டையும் அள்ளி தன் தோள்
பையில் போட்டார்.ஒரு கையால் கூண்டை தூக்கி கொண்டார்.மற்றொரு கையால்
அமர்ந்திருந்த பாயை சுருட்டி கொண்டு விடுவிடுவென நடந்தார்.அப்போது போனவர்தான்
இதுவரை எங்கே போனார்.என்ன ஆனார் என்று தெரியவில்லை.</span>

இளசு
08-12-2003, 06:13 PM
ஒரு படத்தில் விவேக் அழகேசன் என்ற பெயரை அல்கேட்ஸ் என்று
மாற்றிக்கொண்டு அமெரிக்க விசாவோடு ஷார்ட்ஸோடு ஊட்டியில் அலைவார்.
அவருக்கு முன்னோடியா இந்த காளி DOS..
இனிஷியலை MS என்று மாற்றாமல் போனாரே இந்த லார்டு லபக்கு DOS!

எட்டுவருட நினைவை வைத்திருக்கும் மூளை..
இங்கித சொந்தக் குறும்பு சேர்த்த இதயம்..
விசைப்பலகையில் புயலான விரல்கள்..
லாவின் விசுவரூபம்..உண்மைச்சொரூபம் மெள்ள மெள்ள தெரிகிறது..
வளரட்டும் இன்னும்.
வாழ்த்தும் பாராட்டும் லாவ்!

முத்து
08-12-2003, 06:19 PM
லாவண்யா அவர்களே ...
நல்ல நகைச்சுவை ..
ஒவ்வொரு பதிவிலும்
தனி முத்திரையைக் காட்டுகிறீர்கள் ...
நன்றிகள் ....

நிலா
08-12-2003, 10:40 PM
லாவண்யா அருமையா எழுதுறீங்க!பாராட்டுகள்!

பாரதி
09-12-2003, 12:32 AM
நன்றி லாவ். உங்கள் நண்பருக்கும் (அவரையும் இங்கே வரச்சொல்லுங்களேன்) உங்களுக்கும்.

lavanya
09-12-2003, 12:32 AM
நன்றி நண்பர் இளசு,முத்து,நிலா.....

poo
09-12-2003, 06:49 AM
சிரிக்க.. சிரிக்க...

நாயகி லாவ்...

(என் அக்கா!!)

மன்மதன்
09-12-2003, 08:39 AM
ஜோசியர் நாராயணமூர்த்தி சட்டென எழுந்தார்.எல்லா சீட்டையும் அள்ளி தன் தோள்
பையில் போட்டார்.ஒரு கையால் கூண்டை தூக்கி கொண்டார்.மற்றொரு கையால்
அமர்ந்திருந்த பாயை சுருட்டி கொண்டு விடுவிடுவென நடந்தார்.அப்போது போனவர்தான்
இதுவரை எங்கே போனார்.என்ன ஆனார் என்று தெரியவில்லை.

அவர் எங்கே போனார்னு எனக்கு தெரியாது..ஆனாலும் அந்த காளிடாஸ் இங்கேதான் மன்றத்தில் எங்காவது இருக்காருன்னு நினைக்கிறேன்..


.

Mathu
09-12-2003, 10:29 AM
ரஸனைக்குரிய சிரிப்பு அதில் லாவன்யாவின் வரிகள் அசத்தல்.
இன்றைய கையெழுத்து வாசகமும் அருமை.

lavanya
09-12-2003, 10:39 AM
நன்றி நண்பர் பாரதி.....நண்பர் என்ன...? எல்லோரையும் கூப்பிட்டு
கொண்டுதான் இருக்கிறேன் மன்றத்துக்கு...

நன்றி தம்பி பூவுக்கு....

நன்றி நண்பர் மதன் அவர்களே...


நன்றி நண்பர் மாது அவர்களே ...(பேர் மாதுன்னு இருக்கு கையெழுத்து மதன்னு இருக்கு - ' என்னை விட அதிகமா'
குழப்புறீங்களே

mania
09-12-2003, 10:48 AM
அருமை லாவ்ஸ் சிரித்து சிரித்து............
அன்புடன்
மணியா

puppy
09-12-2003, 10:55 AM
லாவ்ண்யா.....அசத்துறீங்க.......பாராட்டுக்கள்

மன்மதன்
09-12-2003, 11:19 AM
அது மாது அல்ல .. மது..
அவரும் மதன்..நானும் மதன்...ஹிஹிஹிஹி

lavanya
09-12-2003, 05:37 PM
நன்றி மணியா, பப்பி அவர்களே

poornima
02-03-2009, 06:56 AM
நவீனத்துக்கு ஏற்றார்போல் இந்த நகைச்சுவை கதையை மாற்ற முடியும் என்பதுதான்
இதில் உள்ள நிறைவான அம்சம்