PDA

View Full Version : இளிக்கிறது !



lenram80
11-05-2011, 05:10 PM
கதவில்லா அறையின் உள்ளே
கதறுகிறது அழுகை!

காற்று வராமல்
வெளிச்சம் வர
ஒரு ஜன்னல்!

சூரிய ஒளி நாறுவதால்
கண்ணைச் சுற்றி ஒரு கருவளையம்!

காரித் துப்ப
மூலையில் ஒரு காகிதம்!

வாக்குப் போட்டு வாக்குப் போட்டு
நகங்கள் கறுத்தும்
ரேகை சிவந்தும் கைகள்!

கண்ணில் பட்டதை
நாக்கு தேய தின்று
பெருக்கும் வயிறு!

பஞ்சான பனை மரமாய்
கால்சட்டைக்கு கீழே
குச்சியாய் இரண்டு கால்கள்!

குருதி குதிரைப் பூட்டி
கொக்கரிக்கும் இதயம்!

இலவச குண்டுகளுக்கு
இரையாகிப் போன மனசு!

வரிசையில் விழுந்த
தள்ளுமுள்ளுவில்
பாதி பறிபோனப் பல்!

இளிக்கிறது இந்தியா!
சிரிக்கிறது உலகம்!

Nivas.T
11-05-2011, 05:20 PM
உணமைதான் தான் ராம் உண்மைதான்

ஆதங்கம் அழகாக

கவிதை அருமை பாராட்டுகள்

கீதம்
12-05-2011, 09:21 AM
பிச்சைக்காரனாய் முச்சந்தியில் நிற்பதற்கும் இச்சை மேலிட இலவசத்துக்காய் பல்லிளித்து நிற்பதற்கும் என்ன வேறுபாடு?

மக்கள்தாம் சிந்திக்கவேண்டும். கவிதையின் ஒவ்வொரு வரியிலும் உங்கள் ஆதங்கம் தெறிக்கிறது. கவி நன்று லென்ராம் அவர்களே.