PDA

View Full Version : ஒருவழிப் பாதை



M.Jagadeesan
11-05-2011, 12:54 PM
குளம் நிறையநீர் இருந்தாலும்
குடிப்பதற்கு ஆளில்லாத காரணத்தால்
பாசிபிடித்துப் பச்சையாகத் தெரிந்தது.

தேர்வு மண்டபத்தில் ஒருமாணவன்
எல்லாக் கேள்விக்கும் விடைதெரிந்தும்
எழுதாமலேயே உட்கார்ந்திருந்தான்.

முப்பது வயதைத் தாண்டிய
முதிர்கன்னி ஒருத்தி
முகம்பார்க்கும் கண்ணாடி முன்பாக
முழுநேரமும் தவம் கிடந்தாள்.

செத்தைகளையும் குச்சிகளையும்
சேகரித்த பெண்ணொருத்தி
மார்கழிக் குளிரிலும்
அவற்றை எரித்துக் குளிர்காயாமல்
அடுக்கிவைத்து அழகு பார்த்தாள்.

பறிக்க ஆளில்லாமல்
பழுத்த பழங்களெல்லாம்
அழுகிப்போய் மரக்கிளையில்
அங்கங்கே தொங்கிக்கொண்டிருந்தன.


எந்த ஒரு செயலுக்கும் வருவதற்கு ஒரு வழியிருந்தால் போவதற்கும் ஒரு வழியிருக்கவேண்டும். தேங்கிக் கிடக்குமானால் பயனற்றுப் போய்விடும். குளத்திலே ஊறும் நீரை மனிதர்கள் பயன்படுத்தவில்லை எனில் அது கெட்டுவிடும். விடை தெரிந்தும் ஒரு மாணவன் எழுதவில்லையெனில், அவன் தேர்வில் தோல்வி அடைவதோடு அவன் முன்னேற்றமும் தடைப்படும். ஒரு பெண்ணுக்குப் பிறந்தவீடு என்று ஒன்று இருந்தால், புகுந்தவீடு என ஒன்று இருக்கவேண்டும். அழகாக இருந்தாலும் முதிர்கன்னியை இவ்வுலகம் மதிக்காது. செல்வம் சேர்ப்பதின் பயன் அதைத் தனக்கும் மற்றவர்களுக்கும் செலவழிப்பதுதான். செல்வத்தை சேர்த்துக் கொண்டே இருந்தால் அதனால் யாருக்கு என்ன பயன்? செத்தை சேர்ப்பது குளிர்காயத்தான். அடுக்கிவைத்து அழகு பார்ப்பதற்காக அல்ல. பழங்களை யாரும் உண்ணவில்லை என்றால் அந்த மரத்தால் யாருக்கு என்ன பயன்?

Nivas.T
11-05-2011, 04:58 PM
:confused:

புரியலீங்க ஐயா

பூமகள்
13-05-2011, 10:32 AM
ஒற்றை வழிப் பாதையில்
ஒற்றையாய் செல்கையிலே
ஒரு துணையில்லை - மனத்
துணிவுண்டு..

மார்கழிக் குளிரிலே
மாந்தர் தாம் காய்ந்திடவே
ஆடவர் தான் அருகில்லை
இருப்பு வைக்க விறகுண்டு..

பழுத்த பழம் பறிக்க
பிள்ளை முகம் இங்கில்லை..
அணில் பல்லால் கடித்திடவே
அணில் பிள்ளை
பலவுண்டு..

பாசி படர்ந்த நீரெல்லாம்
பாசம் பேச ஆளில்லை..
பானை சோறு தின்றிடவே
பச்சை இலை நிரம்பவுண்டு..

தனித்திருக்கும் கொடுமையிலும்
ஏதோ ஓர் நலமுண்டோ..

இயற்கைக்கு அது
இம்சையாய் முடிந்திடுமோ..

எண்ணிப் பார்க்க
எவர் உண்டு..
எண்ணி விட்டால்
முடிவு உண்டோ??!!

---

அருமை ஐயா. :)

M.Jagadeesan
13-05-2011, 11:02 AM
நன்றி நிவாஸ்.

M.Jagadeesan
13-05-2011, 11:03 AM
பூமகள் பாராட்டுக்கு நன்றி!

கீதம்
16-05-2011, 08:11 AM
கோரிக்கையற்றுக் கிடக்குதன்னே வேரில் பழுத்த பலா என்று அன்று பாரதிதாசன் பாடியது நினைவுக்கு வருகிறது.

துய்ப்பாரின்றி தேற்றும் செல்வத்தால் யாது பயன்? அழகாக மிக அழகாக கவியாக்கியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.

கீதம்
16-05-2011, 08:12 AM
பூமகள் கண்ணோட்டம் கவியோட்டமாய் ரசிக்கச் செய்தது. பாராட்டுகள் பூமகள்.

M.Jagadeesan
16-05-2011, 08:41 AM
கீதத்தின் பாராட்டுக்கு நன்றி!