PDA

View Full Version : உங்கள் விருப்பம்



சசிதரன்
10-05-2011, 03:49 PM
தயங்கி தயங்கி
சன்னல் வழி
உள்நுழையும் வெளிச்சம்
மெல்ல அறை நிரப்புகிறது

காற்றை துரத்தும்
மின்விசிறியின் வேகம்
மிதமாகவே இருக்கிறது

வெளிச்ச பாதையில்
மேலெழும்பி பரவுகிறது
நேற்றிரவு உதிர்ந்த
சிகரெட் சாம்பல்

தவறுதலாகவோ
அல்லது
வேண்டுமென்றோ உடைக்கப்பட்ட
கண்ணாடிக் குவளை
அறையின் வலப்பக்க மூலையில்.

இன்னதென்று உறுதிப்படுத்தவியலாத
மெலிதான வாசத்தை
கவனிக்க தவற வேண்டாம்

உங்கள் யூகங்களைக் கொண்டு
நேற்றிரவின் காட்சியை
நிரப்பிக் கொள்ளுங்கள்
காமம் என்றோ
மரணம் (கொலை (அ) தற்கொலை) என்றோ
ஒரு கவிதையின் தோல்வி என்றோ.

சிவா.ஜி
10-05-2011, 04:22 PM
கவிதைக்கொலையின் கவலையில் கல்ப் அடித்தக் கவிஞனின் அறைபோல தெரிகிறது.....ஹா...ஹா.....வரிகளெல்லாம் நன்றாக இருக்கிறது சசி.....ஆனால் கவிதை என்ன சொல்க்றதென்று என் சின்ன மூளைக்குப் புரியவில்லை.


வாழ்த்துக்கள்.

கீதம்
11-05-2011, 05:52 AM
மிதமான மழையோ... இடியுடன் கூடிய கனத்த மழையோ... தமிழகத்தின் சில இடங்களிலோ... பெரும்பாலான பகுதிகளிலோ....

என்று வானிலை அறிக்கை சொல்வார்களே... அதை நினைவுபடுத்துகிறது இக்கவிதை.

நிச்சயம் அது கவிதையின் தோல்வி அல்ல,

இதோ... கண்முன்னே வெற்றிநடை போடுகிறதே அழகிய கவிதையென!

பாராட்டுகள் சசிதரன்.

ஜானகி
11-05-2011, 01:54 PM
" வெள்ளி எழுந்து..வியாழன் உறங்கிற்று.." என்பது போல, இருளைப் போக்க, ஒளி வந்துகொண்டிருக்கிறது.....நடந்ததை மறந்து, புதியதோர் உலகம் செய்ய, விழிமின்....என்று சொல்ல முற்படுகிறாரோ....?

Ravee
12-05-2011, 12:49 PM
கவிதைக்கொலையின் கவலையில் கல்ப் அடித்தக் கவிஞனின் அறைபோல தெரிகிறது.....ஹா...ஹா.....வரிகளெல்லாம் நன்றாக இருக்கிறது சசி.....ஆனால் கவிதை என்ன சொல்க்றதென்று என் சின்ன மூளைக்குப் புரியவில்லை.


வாழ்த்துக்கள்.


என் சின்ன மூளைக்கு - :eek: :eek: :eek:

கலாசுரன்
16-05-2011, 08:35 AM
நல்லதொரு காட்சிப்படிமம் சசிதரன் ....!!!

வாழ்த்துக்கள்