PDA

View Full Version : குமுதம், ஆனந்த விகடன் போன்றவற்றை இலவசமாகப் படிக்க...



lenram80
10-05-2011, 02:03 PM
குமுதம், ஆனந்த விகடன் போன்றவற்றை இலவசமாகப் படிக்க முன்பு ஒரு நண்பர் ( 2008, 2009 ம் ஆண்டு வாக்கில்) ஒரு ப்ரொவுசரை தமிழ் மன்றத்தில் சொல்லி இருந்தார். அந்த நண்பர் பெயரையும், அந்த ப்ரொவுசர் பெயரையும் மறந்துவிட்டேன் :) யாருக்காவது தெரியுமா?

praveen
10-05-2011, 02:44 PM
நான் தான் இங்கே ஒபேரா பிரவுசர் என்று சொன்னதாக நியாபகம், தற்போதும் அவை வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் நிர்வாக குழு சார்பில் ஒருவர் இம்மாதிரி (ஏ)மாற்று வழி பற்றி தளத்திலே தெரிவிப்பது நல்ல விசயமல்ல என்றதனால், நான் அதற்குபின் இம்மாதிரி ஆராய்ச்சிகளை சொல்வதில்லை. அது நம் தளத்திற்கு நல்லதுமல்ல என்றும் அறிகிறேன்.


தனிமடலில் கேட்டாலும் சொல்ல மாட்டேன், எனவே தனிமடலிட்டு பதில் வரவில்லை என்று வருந்த வேண்டாம் :).

தூயவன்
10-05-2011, 02:50 PM
இலவசம் என்று ஓடி வந்தேன் இப்படி ஏமாற்றி விட்டீர்களே :frown::frown::frown:

சிவா.ஜி
10-05-2011, 03:53 PM
ஆனந்தவிகடனுக்கு வருஷத்துக்கு ஆயிரம் ரூபாதாங்க பாஸ்...நான் பணம் கட்டிப் படிச்சு அனுபவிக்கிறேன்....நல்லாருக்கு.

lenram80
11-05-2011, 05:50 PM
சிவாஜி.. நீங்க சொல்றது கரெக்ட் தான். நான் எனக்கு வேணும்னு நினைச்சிருந்தா அந்த பதிப்பு வந்த 3 வருசத்துக்கு முன்னாடியே அதை பண்ணி இருப்பேன். இன்னொரு நண்பருக்காகக் கேட்டேன். அவர் அதிர்ஸ்டம் அவ்ளோ தான்

ஷீ-நிசி
12-05-2011, 01:36 AM
லென்ராம்... நான் கூட இதுபோன்ற தளங்களை கேள்விபட்டிருக்கிறேன்... முயற்சித்து பார்க்கிறேன். கிடைத்தால் உங்களுக்கு தனிமடலிடுகிறேன்...

lenram80
12-05-2011, 12:05 PM
நன்றி ஷீ-நிசி

sharavanan
08-06-2011, 05:03 AM
http://youthful.vikatan.com

இந்த வலைதளம் விகடன் படிக்க உதவும்

தங்கவேல்
08-06-2011, 08:36 AM
கிட்டத்தட்ட மூன்று வருடமாய் பணம் கட்டிப் படித்து வருகிறேன். சமீபத்தில் தான் விகடன் 2ஜியில் ஏறுக்கு மாறான போக்கில் நடந்து வருகிறது

பாரதி
08-06-2011, 09:16 AM
குமுதம் இணைய தளத்தில் பயனாளராக பதிவு செய்திருந்தால் சில பகுதிகளை இலவசமாகவே படிக்கலாம். முன்பு முழுக்க இலவசமாகத்தான் இருந்தது!