PDA

View Full Version : சதுரங்க புதிர் -8

ஆதி
09-05-2011, 10:53 AM
இது ஒரு GrandMaster போட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புதிர்..

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/chess.jpg

2 நகர்வில் ஆட்டம் முடிகிறது, வெள்ளைக்கான தருணம் இப்போது..

கண்டு பிடிச்சு சொல்லுங்க...

சொல்வோர்க்கு 100 ஐ-கேஷ் தரப்படும்...

ஆதவா
09-05-2011, 12:48 PM
கொஞ்சம் பொறுங்கள்... படமாக இருப்பதால் சரியாக சொல்லமுடியவில்லை

sarcharan
09-05-2011, 01:06 PM
நானும் சிந்திக்கின்றேன்...

sarcharan
09-05-2011, 01:11 PM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_white1.JPG

ஆதவா
09-05-2011, 01:28 PM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_white1.JPG

இதுதான் விடையென்றால் அது தவறு!!! :rolleyes:

sarcharan
09-05-2011, 01:33 PM
இது விடை இல்லை, முதல் ஸ்டெப் மட்டும்தான்.:icon_ush: சரியான விடைக்கு சிந்தித்துக்கொண்டு இருக்கின்றேன். :confused:

lolluvathiyar
09-05-2011, 01:47 PM
இன்னும் ஸ்டெப் புரியல ( நான் செஸ்ஸில் வீக்) கருப்பு ராஜா தன் தலைக்கு மேலே இருக்கும் வெள்ளை பிசப்பை வெட்டி இருக்கலாமே ஏன் அதற்க்கு பதிலாக நகர்த்தி இருக்கிறது.
சரி அடுத்த ஸ்டெப் வெள்ளை குதிரையை எடுத்து கருப்பு ரானிக்கு அருகில் வைத்தால் ராஜாவுக்கு குதிரை மூலம் செக் அது யானையையும் வெட்ட முடியாது (அப்பவும் செக் வருகிறது) ரானியை கொன்டு குதிரையை வெட்டினால் வெள்ளை ரானிக்கு ராஜைவை வெட்ட* ரூட் கிளிய*ர் இது ச*ரியா?

ஆதவா
09-05-2011, 04:27 PM
ஆதி 2 ச்டெப்ல முடிக்க முடியல.. 3 ச்டெப் ஓகே ஆதவா

பாரதி
09-05-2011, 04:40 PM
முதலில் எனக்குத்தோன்றிய விடை இது.
1. Qf1+ NxQf1
2. Rf3+ Qf4
3. Bd4+*

மீண்டும் மீண்டும் பார்த்ததில்
1. Rc3! QxRc3
2. QxQc3+*

எனத்தோன்றுகிறது. சரியா..?:confused:

ஆதி
09-05-2011, 08:36 PM
மீண்டும் மீண்டும் பார்த்ததில்
1. Rc3! QxRc3
2. QxQc3+*

எனத்தோன்றுகிறது. சரியா..?:confused:

இதுவும் சரிதான் அண்ணா..

ஆனால் கருப்பு ராணி வெள்ளைக்கு செக் போட ஒரு வாய்ப்பிருக்கு இல்லையா ?

அதனால் 1) Rc3 Qd5# 2)Rf3+(Qa1# போட) ஆட்டம் முடிகிறது...

ஆதி
09-05-2011, 08:52 PM
புதிர் - 2

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/chess1.jpg

கருப்பிற்கான நகர்வு, இரு நகர்வில் ஆட்டம் முடிகிறது..

ஆதி
10-05-2011, 05:13 AM
கோந்து ஏதாவது வேண்டுமா மக்களே ??

sarcharan
10-05-2011, 05:25 AM
கோந்து ஏதாவது வேண்டுமா மக்களே ??
:sauer028::sauer028::sauer028:

இது என்ன நக்கலா இல்ல நாக்கலா?

sarcharan
10-05-2011, 05:48 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_pudhir2.JPG

ஓவியன்
10-05-2011, 06:15 AM
புதிர் - 2

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/chess1.jpg

கருப்பிற்கான நகர்வு, இரு நகர்வில் ஆட்டம் முடிகிறது..

கருப்பு நிறத்திற்கான முதலாவது நகர்வு...

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/chess1.jpg

கருப்பு நிறத்திற்கான இரண்டாவது நகர்வு...

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/chess2.jpg

ஓவியன்
10-05-2011, 06:19 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_pudhir2.JPG

நீங்கள் முதலாவது நகர்வு செய்த உடனே, வெள்ளை குதிரையால் நான் செக் வைத்தால் என்ன செய்வீர்கள்...?? :aetsch013:

ஓவியன்
10-05-2011, 06:32 AM
நான் முன்னர் கூறியது தப்பு, முதலில் வெள்ளைக் கட்டத்திலுள்ள மந்திரியால் செக் வைக்கணும், அதனை அவர் தன் குதிரையால் வெட்டலாம் உடனே மறுபடி கோட்டையால் செக் வைக்க ஆட்டம் முடியும்.

அல்லது அவர் அதனை வெட்டாமல் பின்னகர்ந்தாலும் கோட்டையினால் செக் வைக்க ஆட்டம் முடியும். :) :)

ஆதவா
10-05-2011, 06:53 AM
ஆதி... படத்தை கொஞ்சம் பெரிசா கொடுங்க.. எது மந்திரி, எது சிப்பாய்ன்னே கண்ணுக்குத் தெரியல..

நான் முன்னர் கூறியது தப்பு, முதலில் வெள்ளைக் கட்டத்திலுள்ள மந்திரியால் செக் வைக்கணும், அதனை அவர் தன் குதிரையால் வெட்டலாம் உடனே மறுபடி கோட்டையால் செக் வைக்க ஆட்டம் முடியும்.

அல்லது அவர் அதனை வெட்டாமல் பின்னகர்ந்தாலும் கோட்டையினால் செக் வைக்க ஆட்டம் முடியும். :) :)

ஓவி.. நீங்க சொன்னபடி பார்த்தா மூணு ஸ்டெப் வருது.
வெள்ளைகட்ட மந்திரியால செக் வச்சா, எதுக்கு நான் குதிரையால வெட்டணும்? ராஜாவை வெச்சே வெட்டுவேனே?

இன்னும் யோசிக்கலாம்!!!!

ஆதி
10-05-2011, 07:03 AM
சர்சரன் அண்ணா, ஓவி இருவரும் இன்னும் முயற்சியுங்கள்...

ஒரு கோந்து தர்றேன், ஆட்டத்தை இரு நகர்வில் முடிக்க வேண்டுமானால் இரு நகர்வும் முற்றுகையாகவே இருக்க வேண்டும்...

ஆதி
10-05-2011, 07:05 AM
ஆதி... படத்தை கொஞ்சம் பெரிசா கொடுங்க..

தெரியலேயேப்பா :(

ஆதவா
10-05-2011, 07:12 AM
சர்சரன் அண்ணா, ஓவி இருவரும் இன்னும் முயற்சியுங்கள்...

ஒரு கோந்து தர்றேன், ஆட்டத்தை இரு நகர்வில் முடிக்க வேண்டுமானால் இரு நகர்வும் முற்றுகையாகவே இருக்க வேண்டும்...

ஹலோ... படத்தை பெரிசா போடுங்கன்னா... தெரியலையாம்.... சத்தியமா சிப்பாயை கண்டுபிடிக்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுது!

அப்பறம் கோந்து இப்படி சீப்பா தராதீங்க.... வேணும்னா, முதல் ஸ்டெப் எதுன்னு சொல்லிடுங்க பிறகு மறு ஸ்டெப் நாங்க சொல்லிடறோம்!! :D

ஆதி
10-05-2011, 07:22 AM
அப்பறம் கோந்து இப்படி சீப்பா தராதீங்க.... வேணும்னா, முதல் ஸ்டெப் எதுன்னு சொல்லிடுங்க பிறகு மறு ஸ்டெப் நாங்க சொல்லிடறோம்!! :D

இந்த மாதிரி புதிர்களில் முதல் நகர்வு தானே சாவி ஆதவா...

அடுத்த நகர்வு கட்டம் கட்டிடலாம்...

ஒரு விடயம் மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும், இந்த பகுதியில் கலந்து கொள்ள போகிறவர்கள், தங்களின் சதுரங்க ஆட்டத்திரனை மேலும் மெருகேற்றி கொள்ள அதிகமான வாய்ப்புக்கள் இங்கே உண்டாகும்...

நிச்ச்சயமாய் சதுரங்கம் குறித்த புது புரிதல் உண்டாகும், இதுவரை ஆடிவந்த ஆட்டமுறையை மறுபரிசீலனைக்கு உட்படுதி புதிய உக்திகளை கற்று கொள்ளலாம்...

ஆதவா
10-05-2011, 07:27 AM
இந்த மாதிரி புதிர்களில் முதல் நகர்வு தானே சாவி ஆதவா...

அடுத்த நகர்வு கட்டம் கட்டிடலாம்...

என் சக்கர நாற்காலிக்குக் கீழே பிய்த்துப் போட்ட தலைமுடிகள்!!!
சோ, இப்பைக்கி Resign பண்ணிக்கிறேன்!!

ஆதி
10-05-2011, 07:31 AM
முதலில் எனக்குத்தோன்றிய விடை இது.
1. Qf1+ NxQf1
2. Rf3+ Qf4
3. Bd4+*

மீண்டும் மீண்டும் பார்த்ததில்
1. Rc3! QxRc3
2. QxQc3+*

எனத்தோன்றுகிறது. சரியா..?:confused:

பாரதி அண்ணாவின் முதல்விடையில் உள்ள முதிர்ச்சியான நகர்வை சொல்வோர்க்கு 100 ஐ*கேஷ்..

பாரதியண்ணா சரியா விடை சொன்னதற்காக தங்களுக்கும் 100 ஐகேஷ்....

தாமரை
10-05-2011, 10:18 AM
http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/chess2.jpg

முதலில் இராணியை வச்சு செக் வைங்க. இராஜாவுக்கு இராணியை போட்டுத் தள்ளுவதை விட வேற வழியில்லை.

அடுத்ததா யானையை இப்படி நகர்த்த

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/chess1.jpg

மந்திரி செக் வைக்கிறார். கீழ வந்தா யானை மிதிக்கும். கறுப்பு கட்டங்களுக்கு மேல் நோக்கிப் போனா சிப்பாய் ஈட்டியால் குத்துவான். வெள்ளைக் கட்டங்களுக்குப் போனா மந்திரி அம்பு போட்டு கொன்னுடுவாரு. அதனால் இராஜா அம்பேல். அவன் மந்திரி குறுக்கே வந்தாலும் நம்ம மந்திரி போட்டுத்தள்ளிடுவாரில்ல

சதுரங்க நீதி 1: ஓவியன் கொடுத்த அதே நகர்வுகள் தான். ஆனால் வரிசை மாற்றி இருக்கு. அதனால் வாழ்க்கையில் எப்பவும் திரும்பிப் பார்க்கணும்.

சதுரங்க நீதி 2 : பல சமயம் இப்படி மனைவியைத் தியாகம் செய்துதான் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும்.

ஆதவா
10-05-2011, 10:25 AM
http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/chess2.jpg

முதலில் இராணியை வச்சு செக் வைங்க. இராஜாவுக்கு இராணியை போட்டுத் தள்ளுவதை விட வேற வழியில்லை.

அடுத்ததா யானையை இப்படி நகர்த்த

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/chess1.jpg

மந்திரி செக் வைக்கிறார். கீழ வந்தா யானை மிதிக்கும். கறுப்பு கட்டங்களுக்கு மேல் நோக்கிப் போனா சிப்பாய் ஈட்டியால் குத்துவான். வெள்ளைக் கட்டங்களுக்குப் போனா மந்திரி அம்பு போட்டு கொன்னுடுவாரு. அதனால் இராஜா அம்பேல்.

நீதி 1: ஓவியன் கொடுத்த அதே நகர்வுகள் தான். ஆனால் வரிசை மாற்றி இருக்கு. அதனால் வாழ்க்கையில் எப்பவும் திரும்பிப் பார்க்கணும்.

நீதி 2 : பல சமயம் இப்படி மனைவியைத் தியாகம் செய்துதான் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும்.

இந்த ஸ்டெப்தான் நான் முதன் முதலா யோசிச்சது>... ஆனா நீங்க சொன்னது தப்புங்கண்னா... நான் வெள்ளை மந்திரியை வெச்சு ப்ளாக் பண்ணுவேன்!!! ஒரு ஸ்டெப் அதிகமாகுது!! :)

நீதி 2 : பல சமயம் இப்படி மனைவியைத் தியாகம் செய்துதான் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும்.

இந்த நீதி யாருக்காக?? :eek::confused:

ஓவியன்
10-05-2011, 10:28 AM
சர்சரன் அண்ணா, ஓவி இருவரும் இன்னும் முயற்சியுங்கள்...

ஒரு கோந்து தர்றேன், ஆட்டத்தை இரு நகர்வில் முடிக்க வேண்டுமானால் இரு நகர்வும் முற்றுகையாகவே இருக்க வேண்டும்...

இரண்டு நகர்வில் ஆட்டத்தை முடிக்க அடுத்ததாக நகர்த்த வேண்டிய நகர்வு இதுதான்....

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/001-1.jpg

இந்த நகர்வை எதிர்கொள்ள வெள்ளை அணியினருக்கு இரு நகர்வே உண்டு, ஒன்று குதிரையால் மந்திரியை வெட்டலாம், அல்லது ராஜாவை பின்னே கறுப்புக் கட்டத்துக்கு நகர்த்தலாம்...

குதிரையால் மந்திரியை வெட்டினால் இரண்டாவது நகர்வு இப்படி இருக்க வேண்டும்....

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/003-1.jpg

ராஜாவைப் பின்னகர்த்தினால் இரண்டாவது நகர்வு இப்படி இருக்க வேண்டும்...

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/004-1.jpg

ஓவியன்
10-05-2011, 10:33 AM
திரும்பவும் சொதப்பிட்டேன் போல ராஜாவால் மந்திரியை வெட்டினால் என்ன பண்ணுவது..?? :confused:

ஆதவா
10-05-2011, 10:34 AM
:D:D:D

தாமரை
10-05-2011, 10:34 AM
இரண்டு நகர்வில் ஆட்டத்தை முடிக்க அடுத்ததாக நகர்த்த வேண்டிய நகர்வு இதுதான்....

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/001-1.jpg

இந்த நகர்வை எதிர்கொள்ள வெள்ளை அணியினருக்கு இரு நகர்வே உண்டு, ஒன்று குதிரையால் மந்திரியை வெட்டலாம், அல்லது ராஜாவை பின்னே கறுப்புக் கட்டத்துக்கு நகர்த்தலாம்...

குதிரையால் மந்திரியை வெட்டினால் இரண்டாவது நகர்வு இப்படி இருக்க வேண்டும்....

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/003-1.jpg

ராஜாவைப் பின்னகர்த்தினால் இரண்டாவது நகர்வு இப்படி இருக்க வேண்டும்...

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/004-1.jpg

ஆமாம் இராஜாவாலேயே மந்திரியை வெட்டினா என்ன செய்வ ஓவியா?

ஆதி
10-05-2011, 10:39 AM
மிகவும் சரியான விடை அண்ணா... :D :D :D

100 ஐ-கேஷ், பாராட்டுக்கள்

*********நாம் பெரும்பாலும், ராணியை காப்பாற்றுவதிலேயே ராஜாவை விட்டுடுவோம்...

நம் குறிக்கோல், நோக்கம் எதிரி ராஜாவை வீழ்த்துவதே தவிர, நம் வீரர்களை காப்பாற்றுவதல்ல... இந்த குறிப்பை ஆட்டம் முழுக்க ஞாபகம் வச்சுக்கனும்...

இந்த ஆட்டத்தை பொருத்தமடில் வெள்ளை ராணி கருப்பு ராஜாவை முற்றுகையிட ஆயத்தமாகவே இருக்கிறது, இப்போது நாம் நகர்த்த போகிற ஒவ்வொரு நகர்வும் முக்கியம், ஒன்றிரண்டு நகர்வில் கருப்பு ஆட்டத்தை முடிக்கப்பார்ப்பது அதைவிட முக்கியம்....

வெள்ளை ராஜா ரொம்ப பாதுகாப்பா கோட்டைக்குள்ள இருக்காரு.. அவரு வெளிய வந்தா நமக்கு இன்னும் வசதி...

இப்போதைக்கு ஒரே வழி ராணிய வைத்து முற்றுகை சொல்லி அவரை வெளிய வரவைக்க வேண்டியது..

1) Qg2# Kxg2

ராணியை வைத்து நாம் செக் போட இருக்கும் இடத்தில் கருப்பு மந்திரி வெட்டுக்கிறது யானை இல்லாவிட்டால்... ஆதலால் யானை நாம் நகர்த்தும் விதத்தில் ராஜாவுக்கான அடுத்த நகர்வு தீர்மாணிக்கபட போகிற்றது...

2) Re1(Bc5+) ஆட்டம் அட்டகாசமாக முடிகிறது...

ஒருவேளை யானையை Re2 நகர்த்தின ராஜா Kf1 நகர்வார், மீண்டும் யானையை Rf2# நகர்த்த ராஜா Ke1 நகர்வார், மீண்டும் யானையை Re2#, ராஜா Kd1 நகர்வார், ஆட்டம் இப்படி இழுத்துட்டே போக, ஒரு தருணத்தில் வெள்ளை ராணி கருப்பு ராஜாவை விராட்ட ஆரம்பிக்கும்...

தாமரை
10-05-2011, 10:50 AM
இந்த ஸ்டெப்தான் நான் முதன் முதலா யோசிச்சது>... ஆனா நீங்க சொன்னது தப்புங்கண்னா... நான் வெள்ளை மந்திரியை வெச்சு ப்ளாக் பண்ணுவேன்!!! ஒரு ஸ்டெப் அதிகமாகுது!! :)

அந்த பிளாக் அர்த்தமற்ற பிளாக் என்பதால் செஸ் ஆட்டங்களில் அதை ஒரு மூவாக கருத மாட்டார்கள். ஏனென்றால் அதை வெட்டிய பிறகு இராஜாவுக்கு நகர இடமில்லை என்பதால் உடனே எதிராளி கைகுலுக்கிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டு விடுவார்.

நீதி 2 : பல சமயம் இப்படி மனைவியைத் தியாகம் செய்துதான் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும்.

இந்த நீதி யாருக்காக??

மூச்சு விட முடியாமல் திணறுபவர்களுக்காக...!!!

ஆதவா
10-05-2011, 10:52 AM
மிகவும் சரியான விடை அண்ணா... :D :D :D

100 ஐ-கேஷ், பாராட்டுக்கள்

*********நாம் பெரும்பாலும், ராணியை காப்பாற்றுவதிலேயே ராஜாவை விட்டுடுவோம்...

நம் குறிக்கோல், நோக்கம் எதிரி ராஜாவை வீழ்த்துவதே தவிர, நம் வீரர்களை காப்பாற்றுவதல்ல... இந்த குறிப்பை ஆட்டம் முழுக்க ஞாபகம் வச்சுக்கனும்...

இந்த ஆட்டத்தை பொருத்தமடில் வெள்ளை ராணி கருப்பு ராஜாவை முற்றுகையிட ஆயத்தமாகவே இருக்கிறது, இப்போது நாம் நகர்த்த போகிற ஒவ்வொரு நகர்வும் முக்கியம், ஒன்றிரண்டு நகர்வில் கருப்பு ஆட்டத்தை முடிக்கப்பார்ப்பது அதைவிட முக்கியம்....

வெள்ளை ராஜா ரொம்ப பாதுகாப்பா கோட்டைக்குள்ள இருக்காரு.. அவரு வெளிய வந்தா நமக்கு இன்னும் வசதி...

இப்போதைக்கு ஒரே வழி ராணிய வைத்து முற்றுகை சொல்லி அவரை வெளிய வரவைக்க வேண்டியது..

1) Qg2# Kxg2

ராணியை வைத்து நாம் செக் போட இருக்கும் இடத்தில் கருப்பு மந்திரி வெட்டுக்கிறது யானை இல்லாவிட்டால்... ஆதலால் யானை நாம் நகர்த்தும் விதத்தில் ராஜாவுக்கான அடுத்த நகர்வு தீர்மாணிக்கபட போகிற்றது...

2) Re1(Bc5+) ஆட்டம் அட்டகாசமாக முடிகிறது...

ஒருவேளை யானையை Re2 நகர்த்தின ராஜா Kf1 நகர்வார், மீண்டும் யானையை Rf2# நகர்த்த ராஜா Ke1 நகர்வார், மீண்டும் யானையை Re2#, ராஜா Kd1 நகர்வார், ஆட்டம் இப்படி இழுத்துட்டே போக, ஒரு தருணத்தில் வெள்ளை ராணி கருப்பு ராஜாவை விராட்ட ஆரம்பிக்கும்...

ஹலோ.... எஸ்கூஸ்மீ,. இதுல ரெண்டு ஸ்டெப் எங்க இருக்குங்க??? :confused:

1 Qg2- Kxg2
2.Re1 - Bc5
3.Be3 - BxBe3

ஆதவா
10-05-2011, 10:56 AM
அந்த பிளாக் அர்த்தமற்ற பிளாக் என்பதால் செஸ் ஆட்டங்களில் அதை ஒரு மூவாக கருத மாட்டார்கள். ஏனென்றால் அதை வெட்டிய பிறகு இராஜாவுக்கு நகர இடமில்லை என்பதால் உடனே எதிராளி கைகுலுக்கிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டு விடுவார்.
!!

ஆதி கேட்டதே ரெண்டே ரெண்டு ஸ்டெப்பில் ஆட்டம் முடிக்கணும்... ஆனாலும் ப்ளாக் பண்ணி மூணாவது ஸ்டெப்புக்கு கொண்டுவந்தேனல்லவா??? :icon_rollout: (இதன் காரணமாகவே இந்த மூவை போடவில்லை!!:mad:)
புதிர் 1 ல் இந்த பிரச்சனை கிடையாது!!

ஓவியன்
10-05-2011, 11:01 AM
சரி அடுத்த புதிரைப் போடுங்க ஆதி, இந்த தடவையாவது நம்ம மூளை வேலை செய்யுதானு பார்ப்போம்... :)

ஆதவா
10-05-2011, 11:07 AM
சரி அடுத்த புதிரைப் போடுங்க ஆதி, இந்த தடவையாவது நம்ம மூளை வேலை செய்யுதானு பார்ப்போம்... :)

ஓவி!! வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மண்டையை பிய்ச்சுட்டு இருந்தேன்!! அங்கயும் அதே கதிதானா?? :D:D

ஓவியன்
10-05-2011, 11:09 AM
நீதி 2 : பல சமயம் இப்படி மனைவியைத் தியாகம் செய்துதான் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற முடியும்.

சதுரங்கத்தில் இன்னொரு ராணியைத் திரும்ப பெறவோ அல்லது இழந்த ராணியை மீளப் பெறவோ முடியும் எனும் போது இந்த நீதியெல்லாம் ஓகே, ஆனால் நிஜவாழ்க்கையில் இதுவெல்லாம் சரிப்படாது. :lachen001::lachen001::lachen001:

ஓவியன்
10-05-2011, 11:12 AM
அங்கயும் அதே கதிதானா?? :D:D

ஹ் ஹா....!!

அது ஒண்ணுமில்லை எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் லீவில போன புண்ணியத்துல இன்று நான் தான் எல்லாமே.... :D:D:D

அதுதான் கொஞ்சம் ஓவராக குளிர் விட்டிருக்கு இன்னைக்கு... :lachen001:

தாமரை
10-05-2011, 11:23 AM
சதுரங்கத்தில் இன்னொரு ராணியைத் திரும்ப பெறவோ அல்லது இழந்த ராணியை மீளப் பெறவோ முடியும் எனும் போது இந்த நீதியெல்லாம் ஓகே, ஆனால் நிஜவாழ்க்கையில் இதுவெல்லாம் சரிப்படாது. :lachen001::lachen001::lachen001:

ஒரு இராணி போனாலும், காய்களைச் சரியா நகர்த்தினா இன்னும் சில இராணிகள் கிடைக்கும் என்பதும் சதுரங்க நீதிதான் ஓவி...(அதே ராணி அல்ல,,, அங்க கிடைப்பதும் வேற இராணிதான்)

சொல்லப் போனா நிஜ வாழ்க்கையில் முதல் இராணியைத் தொலைப்பதே இன்னொரு இராணியை அடைவதற்காகவே இருக்கும். :D:D:D:lachen001::lachen001:

ஆதி
10-05-2011, 11:28 AM
சரி அடுத்த புதிரை போடுறேன்

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/gm2chess2m.jpg

இதுவும் ஒரு GrandMaster போட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புதிர்..

வெள்ளை நகர்த்த வேண்டும் சரியாக இரு நகர்வில் ஆட்டம் முடிகிறது...

ஓவியன்
10-05-2011, 11:32 AM
வெள்ளை சிப்பாயால் வலது பக்கத்திலிருக்கும் கறுப்பு சிப்பாயை வெட்டுங்க, அவங்க அதனை வெட்ட முடியாது ஆகவே அடுத்த மூவிலே மந்திரியை வெட்டி ஒரு ராணியையே யானையையோ பெற்றால் ஆட்டம் முடியும்னு நினைச்சிட்டு பார்த்தால் அங்கே மேலே இருப்பது வெள்ளை ராணியில்லை வெள்ளை ராஜா :D:D:D.

தாமரை
10-05-2011, 11:36 AM
வெள்ளை சிப்பாயால் வலது பக்கத்திலிருக்கும் கறுப்பு சிப்பாயை வெட்டுங்க, அவங்க அதனை வெட்ட முடியாது ஆகவே அடுத்த மூவிலே மந்திரியை வெட்டி ஒரு ராணியையே யானையையோ பெற்றால் ஆட்டம் முடியும்.

ஏன் வெட்ட முடியாது. அவங்க மந்திரி டுமீல் என சுட்டுடுவாரே!!!

ஓவியன்
10-05-2011, 11:40 AM
ஏன் வெட்ட முடியாது. அவங்க மந்திரி டுமீல் என சுட்டுடுவாரே!!!

நாம எடிட் பண்ணி நம்ம பதிவை மாத்துறதுக்க உங்களை யார் கோட் பண்ணி பதில் போடச் சொன்னது...?? :sauer028:

ஆதவா
10-05-2011, 11:41 AM
யானையை வைத்து சிப்பாயை வெட்டணும்
அப்போது செக்,.
வேறு வழியின்றி மந்திரி வெட்ட, நமக்கு அடுத்த ஸ்டெப்லயே ப்ரோமஷன்!!
கருப்புக்கு எமலோகம்! :icon_b:

இப்போதைக்கு யோசிச்சது இது!! ஆனா பதிலில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்

ஆதவா
10-05-2011, 11:47 AM

ஐயாம் சாரி... இல்லூஷன் ப்ராப்லம்!! ரொம்ப்ப தப்பா சொல்லிட்டேன்!! :lachen001:

தாமரை
10-05-2011, 11:47 AM
யானையை வைத்து சிப்பாயை வெட்டணும்
அப்போது செக்,.
வேறு வழியின்றி மந்திரி வெட்ட, நமக்கு அடுத்த ஸ்டெப்லயே ப்ரோமஷன்!!
கருப்புக்கு எமலோகம்! :icon_b:

இப்போதைக்கு யோசிச்சது இது!! ஆனா பதிலில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்

வெள்ளை யானையை கறுப்பு மந்திரி வெட்ட..
கறுப்பு மந்திரியை வெள்ளைச் சிப்பாய் வெட்டினால்

கறுப்பு ராசா வெள்ளைச் சிப்பாயை வெட்டிடுவார்..

அப்படிப் பார்த்தா மிச்சம் இருப்பது கறுப்பு ராசா, கறுப்புச் சிப்பாய் மற்றும் வெள்ளை ராஜா மாத்திரமே..

அப்ப கறுப்புதான் ஜெயிக்கும்..

இரண்டு ஸ்டெப்பில் ஜெயிக்க வழி கேட்டா, இரண்டு ஸ்டெப்பில் தோற்க வழிகாட்டறீங்களே ஆதவா!!

தாமரை
10-05-2011, 11:56 AM
சரி அடுத்த புதிரை போடுறேன்

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/gm2chess2m.jpg

இதுவும் ஒரு GrandMaster போட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புதிர்..

வெள்ளை நகர்த்த வேண்டும் சரியாக இரு நகர்வில் ஆட்டம் முடிகிறது...

யானையை H6 க்கு நகர்த்த வேண்டும்.

இப்போது கறுப்பு ஆட்டக்காரருக்கு இரண்டு நகர்த்தல்களே முன்னாள் உள்ள வழிகள்

1. G7 ல் உள்ள சிப்பாயை வைத்து யானையை வெட்டுவது

இப்படி செய்தால் G6 ல் உள்ள சிப்பாயைக் கொண்டு ராஜாவுக்கு செக் வைத்து செக் மேட் செய்யலாம். இராஜாவுக்கு முன்புறம் கறுப்பு சிப்பாய் உள்ளதால் இராஜா நகர முடியாது.

2. மந்திரியை நகர்த்தினா H7 ல் உள்ள சிப்பாயைப் போட்டுத் தள்ளிடலாம். செக் மேட்.. :icon_b::icon_b::icon_b:

சதுரங்க நீதி 3 : வெட்டித்தான் ஜெயிக்கணும்னு இல்லை. வெட்றா பாக்கலாம் வெட்றா பாக்கலாம் என்று சவடால் விட்டு உசுப்பேத்தியும் சிலசமயம் ஜெயிக்கலாம்

ஓவியன்
10-05-2011, 12:07 PM
நான் இந்த விள்ளாட்டுக்கு வரலை, தாமரை அண்ணாவுக்கு மட்டும் பதில் தெரியுற மாதிரி ஆதன் கேள்வி கேட்குறாரூ... :sprachlos020:

ஆதி
10-05-2011, 12:09 PM
நீதி : வெட்டித்தான் ஜெயிக்கணும்னு இல்லை. வெட்டியா இருந்தும் ஜெயிக்கலாம்

:D :D :D

மிகவும் சரியான விடையண்ணா..

100 ஐ-கேஷ், மொத்தத்தில் என் எல்லா ஐ-கேஷையும் நீங்களே பறிச்சுடுவீங்க போல இருக்கே...

இது பார்க்க சுலபமாக தான் இருக்கும்.. ஆனால் செஸ் விளையாடும் போதும் அகப்படாத நகர்வு இது...

ஆதவா
10-05-2011, 12:12 PM

அடுத்தது கொடுங்கள்! :)

தாமரை
10-05-2011, 12:15 PM
வெம்பி அழத்
நான் இந்த விள்ளாட்டுக்கு வரலை, தாமரை அண்ணாவுக்கு மட்டும் பதில் தெரியுற மாதிரி ஆதன் கேள்வி கேட்குறாரூ... :sprachlos020:

[B]ஓவியனின் கையொப்பம்...
__________________
வெம்பி அழத்தேவையில்லை, தோல்வி மட்டும் வாழ்க்கையில்லை...

சதுரங்க நீதி 4: நமக்கு ஆறுதல் நமக்குள்ளயே இருக்கு. நாமதான் அதை பார்க்கறதில்லை,.

ஓவியன்
10-05-2011, 12:29 PM
சதுரங்க நீதி 4: நமக்கு ஆறுதல் நமக்குள்ளயே இருக்கு. நாமதான் அதை பார்க்கறதில்லை,.

நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல, சதுரங்க நீதி ரொம்ப ஓவராய்த்தான் போயிட்டிருக்கூ ஆமா... :sauer028:

ஆதி
10-05-2011, 01:10 PM
அடுத்த புதிர் - 4

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GMChessw3m.jpg

மீண்டும் Grand Master போட்டியில் இருந்து வெள்ளை நகர்த்த வேண்டும், அடுத்த மூன்று நகர்வில் ஆட்டம் முடிகிறது...

ஆதவா
10-05-2011, 03:12 PM
அடுத்த புதிர் - 4

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GMChessw3m.jpg

மீண்டும் Grand Master போட்டியில் இருந்து வெள்ளை நகர்த்த வேண்டும், அடுத்த மூன்று நகர்வில் ஆட்டம் முடிகிறது...

ஆதி.... ரொம்பநேரமாக d1 ல் இருப்பது வெள்ளைராணியா இல்லை கருப்பு ராணியா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

ஆதி
10-05-2011, 03:19 PM
வெள்ளை ராணிதான் ஆதவா....

தாமரை
10-05-2011, 03:58 PM
அடுத்த புதிர் - 4

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GMChessw3m.jpg

மீண்டும் Grand Master போட்டியில் இருந்து வெள்ளை நகர்த்த வேண்டும், அடுத்த மூன்று நகர்வில் ஆட்டம் முடிகிறது...

1. முதலில் வெள்ளை மந்திரியை e5 க்கு நகர்த்தவும்.

கறுப்பு இராஜாவை a7 க்கு மட்டுமே நகர்த்த முடியும் அல்லவா? மற்றபடி சிப்பாயோ மந்திரியோ நகராது.

2. யானையை b8 க்கு நகர்த்தவும். இப்போது இராஜா மற்றும் சிப்பாய்களை நகர்த்த முடியாது. சம்பிரதாயத்திற்கு கறுப்பு மந்திரி b7 க்கோ அல்லது c8 க்கோ நகர்வார்.

3. இப்போது இராணியை a1 க்கு நகர்த்தி செக் வைக்க...

இப்போது மந்திரியை நகர்த்தி இராணியை மறைக்கலாம். ஆனால் அடுத்து வெள்ளைச் மந்திரியை d6 க்கிற்கு நகர்த்தினால் சிப்பாய்களோ அல்லது மந்திரியோ அல்லது இராஜாவோ நகர முடியாது. அதனால் இராஜா கோமா ஸ்டேஜிற்கு போய்விடுவதால் ஆட்டம் காலி. (இதைவிட எளிய வழி இருக்கா பார்க்கிறேன்)

சதுரங்க நீதி 5: அசைய முடியாத சிப்பாயை பாதுகாப்புக்கு வச்சிகிட்டு இருந்தா ஆப்பு கன்ஃபார்ம்.

சதுரங்க நீதி 6: ஜெயிக்க செக்கு மட்டும் பத்தாது. கேஸையும் (கேஸில்) அப்பப்ப பயன்படுத்தணும்.

சிவா.ஜி
10-05-2011, 04:19 PM
நிறவெறியுள்ள இந்த ஆட்டம் எனக்கு வோணாம்......பின்ன என்னங்க....கறுப்புராஜா...வெள்ளை மந்திரி....இன்னாதிது....?

(ஒண்ணும் புரியலங்கறத வெளிப்படையா ஒத்துக்க முடியுமா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

ஆதி
10-05-2011, 05:07 PM
1. முதலில் வெள்ளை மந்திரியை e5 க்கு நகர்த்தவும்.

கறுப்பு இராஜாவை a7 க்கு மட்டுமே நகர்த்த முடியும் அல்லவா? மற்றபடி சிப்பாயோ மந்திரியோ நகராது.

2. யானையை b8 க்கு நகர்த்தவும். இப்போது இராஜா மற்றும் சிப்பாய்களை நகர்த்த முடியாது. சம்பிரதாயத்திற்கு கறுப்பு மந்திரி b7 க்கோ அல்லது c8 க்கோ நகர்வார்.

3. இப்போது இராணியை a1 க்கு நகர்த்தி செக் வைக்க...

இப்போது மந்திரியை நகர்த்தி இராணியை மறைக்கலாம். ஆனால் அடுத்து வெள்ளைச் மந்திரியை d6 க்கிற்கு நகர்த்தினால் சிப்பாய்களோ அல்லது மந்திரியோ அல்லது இராஜாவோ நகர முடியாது. அதனால் இராஜா கோமா ஸ்டேஜிற்கு போய்விடுவதால் ஆட்டம் காலி. (இதைவிட எளிய வழி இருக்கா பார்க்கிறேன்)

சதுரங்க நீதி 5: அசைய முடியாத சிப்பாயை பாதுகாப்புக்கு வச்சிகிட்டு இருந்தா ஆப்பு கன்ஃபார்ம்.

சதுரங்க நீதி 6: ஜெயிக்க செக்கு மட்டும் பத்தாது. கேஸையும் (கேஸில்) அப்பப்ப பயன்படுத்தணும்.

அண்ணா, அடுத்த நகர்வில்லாத நிலையுண்டானால் ஆட்டம் சமன் செய்யப்படும்..

வெள்ளை வென்றதாக எடுத்துக் கொள்ள இயலாது...

சுலபமான வழி இருக்கு, அண்ணா சரியா மூன்று நகர்வில் ஆட்டம் முடியும்..

பாரதி
10-05-2011, 05:09 PM
புதிர் - 4

1. Qg4 Ka7
2. Qd7+ Bb7
3. Re7 Ka6 அல்லது Ka8 அல்லது Kb8
4. Qxb7+ #

பாரதி
10-05-2011, 05:12 PM
புதிரை பதிக்கும் போது கருப்பா, வெள்ளையா - யார் வெற்றி பெற வேண்டும் என்பதையும் சேர்த்து குறிப்பிட்டால் நல்லது.

ஆதி
10-05-2011, 05:28 PM
புதிரை பதிக்கும் போது கருப்பா, வெள்ளையா - யார் வெற்றி பெற வேண்டும் என்பதையும் சேர்த்து குறிப்பிட்டால் நல்லது.

அண்ணா, எந்த நிறத்தை முதலில் நகர்த்த சொல்கிறோமோ அதுவே வெற்றி பெரும் அணியாக இருக்கும் என்பது சதுரங்கத்தில் எழுதப்படாத புதிர் நியதிகளில் ஒன்று...

ஆதி
10-05-2011, 05:32 PM
புதிர் - 4

1. Qg4 Ka7
2. Qd7+ Bb7
3. Re7 Ka6 அல்லது Ka8 அல்லது Kb8
4. Qxb7+ #

நான்கு நகர்வு வருதே அண்ணா ??

மூன்று நகர்வில் முடிக்க வேண்டுமே...

பாரதி
10-05-2011, 06:04 PM
1. Bh8! Ka7
2. Qa1! Kb7
3. Qg7+#

பாரதி
10-05-2011, 06:14 PM
1. Bh8! Kc7
2. Qc2+ Kd7 அல்லது Kd6
3. Qc6+#

1. Bh8! Kc7
2. Qc2+ Kb7
3. Qh7+#

ஆதி
10-05-2011, 06:45 PM
1. Bh8! Ka7
2. Qa1! Kb7
3. Qg7+#

இது மிகவும் சரியான விடையண்ணா..

100 *இ*பணம் வந்து சேருமண்ணா...

ஆதி
11-05-2011, 04:54 AM
அடுத்த புதிரும் GrandMaster போட்டியில் இருந்து

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GM4chesswm2.jpg

வெள்ளைக்கான நகர்வு, ஆட்டம் இரு நகர்வில் முடிகிறது...

sarcharan
11-05-2011, 05:05 AM
அடுத்த புதிரும் GrandMaster போட்டியில் இருந்து
வெள்ளைக்கான நகர்வு, ஆட்டம் இரு நகர்வில் முடிகிறது...

http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_white_knight2_checkmate.JPG

தாமரை
11-05-2011, 05:26 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_white_knight2_checkmate.JPG

இரண்டாவது நகர்த்தலுக்கு மந்திரியையும் உபயோகிக்கலாம்..

Hg3->f5; Kg7-h8
Bg5 -> f6

ஆதவா
11-05-2011, 05:44 AM
1. Bh8! Kc7
2. Qc2+ Kd7 அல்லது Kd6
3. Qc6+#

1. Bh8! Kc7
2. Qc2+ Kb7
3. Qh7+#

இது மிகவும் சரியான விடையண்ணா..

100 *இ*பணம் வந்து சேருமண்ணா...

என்னங்க இது..... மூவ்மெண்டே தப்பா இருக்கு???

சதுரங்கம் என்பது இரு நாடுகளுக்கிடையிலான போர் என்பது நீங்கள் அறிவீர்கள். அதில் ராஜாதான் பிரதானம். அவரைக் காப்பாற்றத்தான் மற்றவர்கள் வீழுகிறார்கள்... முதலில் இந்த புதிரில் மந்திரி மாட்டியிருப்பதை கவனிக்கவேண்டும். வெறும் ராஜாவை மட்டும் நகர்த்திக் கொண்டிருந்தால் அது முதிர்ச்சியற்ற ஆட்டம்!!

பாரதியண்ணாவின் விடை தவறானது... ஆனால் நீங்கள் சரி என்று எப்படி சொல்கிறீர்கள்??

1. Bh8! Ka7
2. Qa1! Kb7
3. Qg7+#

இது அவரது விடை... இந்த நகர்வில் ராஜா Kc7 செல்வதுதான் அதன் பெஸ்ட் மூவ். ஏனெனில் அப்பொழுதுதான் மந்திரி வெளியேற முடியும். Ka7 வைத்தால் மந்திரி கேடயமாகி நகர வழியின்றி தவிப்பாரல்லவா?? எனில் நீங்கள் மூன்றாவது நகர்வில் ஆட்டத்தை முடிக்க முடியாது!! (நான்காவது நகர்வில்தான் முடியும்.)

ஆதி... இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்!!

ஆதவா
11-05-2011, 05:54 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_white_knight2_checkmate.JPG

சரன் அண்ணே... மிஸ்டேக்கு மிஸ்டேக்கு..... இரண்டாவது குதிரையை நீங்கள் தூக்கி வைத்தால் கருப்பு சிப்பாய் ஏறி சவாரி செய்தே கொன்றுவிடமாட்டானா???

தாமரை அண்ணாவின் பதில்தான் சரியானது!! :icon_b:

ஆதி
11-05-2011, 07:27 AM
என்னங்க இது..... மூவ்மெண்டே தப்பா இருக்கு???

சதுரங்கம் என்பது இரு நாடுகளுக்கிடையிலான போர் என்பது நீங்கள் அறிவீர்கள். அதில் ராஜாதான் பிரதானம். அவரைக் காப்பாற்றத்தான் மற்றவர்கள் வீழுகிறார்கள்... முதலில் இந்த புதிரில் மந்திரி மாட்டியிருப்பதை கவனிக்கவேண்டும். வெறும் ராஜாவை மட்டும் நகர்த்திக் கொண்டிருந்தால் அது முதிர்ச்சியற்ற ஆட்டம்!!

பாரதியண்ணாவின் விடை தவறானது... ஆனால் நீங்கள் சரி என்று எப்படி சொல்கிறீர்கள்??

1. Bh8! Ka7
2. Qa1! Kb7
3. Qh7+#

இது அவரது விடை... இந்த நகர்வில் ராஜா Kc7 செல்வதுதான் அதன் பெஸ்ட் மூவ். ஏனெனில் அப்பொழுதுதான் மந்திரி வெளியேற முடியும். Ka7 வைத்தால் மந்திரி கேடயமாகி நகர வழியின்றி தவிப்பாரல்லவா?? எனில் நீங்கள் மூன்றாவது நகர்வில் ஆட்டத்தை முடிக்க முடியாது!! (நான்காவது நகர்வில்தான் முடியும்.)

ஆதி... இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்!!

பெஸ்ட் மூவ் Ka7 தான்..

யானையை வைத்து செக் போட்ட பிசப் வச்சி மறச்சுக்கலாம்...

1) Bh8 Kc7
2) Qc2+ Kb7/d7
3) Qg7#

ஆதவா
11-05-2011, 07:35 AM
1) Be5 Ka7
2) Qa1 Kb7
3) Qg7#

Be5 ல் இருக்கும் போது Qg7 க்கு எப்படிங்க போகும்?? ராணி மந்திரியைத் தாண்டினா பாவாடை தடுக்கி விழுந்து மூக்கு உடைஞ்சுபோகும்!!! :eek:

ஆதி
11-05-2011, 07:46 AM
Be5 ல் இருக்கும் போது Qg7 க்கு எப்படிங்க போகும்?? ராணி மந்திரியைத் தாண்டினா பாவாடை தடுக்கி விழுந்து மூக்கு உடைஞ்சுபோகும்!!! :eek:

படத்தை பார்க்காமலே எழுதிட்டேங்க...

Kc7னுக்கு பதில் எடிட் பண்ணி போட்டா உங்க கேள்வி..

அதை மறந்துடுங்க...

இப்போ புரிகிறதா ?

Ka7 தான் சரியான மூவ்

Kc7 போட்டா அடுத்த நகர்வே வெள்ளை செக் வைக்கும், தப்பிச்சு ஓடனும்...

Ka7 போட்ட பிசப் வச்சு மறச்சுக்கலாம்... கொஞ்சம் ஆட்டம் காட்டலாம்...

ஆதவா
11-05-2011, 07:58 AM
பெஸ்ட் மூவ் Ka7 தான்..

யானையை வைத்து செக் போட்ட பிசப் வச்சி மறச்சுக்கலாம்...

1) Bh8 Kc7
2) Qc2 Kc7/d7
3) Qc6#

தப்பு கண்ணா தப்பூ!!

1.Bh8 - Kc7
2. Qc2 - Kb7
3.Qc6 - Ka1
4. Qc7 -

இதுவே மந்திரியை வெச்சு ப்ளாக் பண்ணி இழுக்கவும் செய்யலாம்!!

சரி இதை விடுங்க... அடுத்த புதிர் கொடுங்க பாஸ்

பாரதி
11-05-2011, 09:04 AM
1. Bh8! Ka7
2. Qa1! Kb7
3. Qg7+#

1. Bh8! Kc7
2. Qc2+ Kd7 அல்லது Kd6
3. Qc6+#

1. Bh8! Kc7
2. Qc2+ Kb7
3. Qh7+#

என்னங்க இது..... மூவ்மெண்டே தப்பா இருக்கு???

பாரதியண்ணாவின் விடை தவறானது... ஆனால் நீங்கள் சரி என்று எப்படி சொல்கிறீர்கள்??

1. Bh8! Ka7
2. Qa1! Kb7
3. Qg7+#

தப்பு கண்ணா தப்பூ!!

1.Bh8 - Kc7
2.Qc2 - Kb7
3.Qc6 - Ka1
4. Qc7 -
இதுவே மந்திரியை வெச்சு ப்ளாக் பண்ணி இழுக்கவும் செய்யலாம்!!

அன்பு ஆதவா,
முதல் நகர்த்தலுக்குப் பின்னர் இராஜா ந்கரும் வாய்ப்புகளை (Ka7 அல்லது Kc7) கணக்கிட்டு மூன்று வகைகளில் விடை தந்திருக்கிறேன். மூன்று வாய்ப்புகளிலும் எப்படி ஆட்டத்தை முடிப்பது என கூறி இருக்கிறேனே தவிர, தவறான விடை தந்ததாக கருதவில்லை.

மேலும் கடைசியாக நீங்கள் தந்திருக்கும் தீர்வில் மூன்றாவது நகர்த்தல் Qc6 என்று இருப்பது குறைவான நகர்வுகளில் ஆட்டத்தை முடிக்க உதவாது. அதற்கு நான் முன்பே கூறி இருக்கும் தீர்வான Qh7 என்பதுதான் உடனடியாக ஆட்டத்தை முடிக்கும் வழியாகும்.

ஆதவா
11-05-2011, 09:09 AM
மூணே ஸ்டெப்ல ஆட்டம் முடிய பாரதியண்ணா சொன்னமாதிரி இன்னொரு வழியும் இருக்குங்க!!! (இது ஓகேன்னா, பாரதியண்ணா சொன்னதும் ஓகேதான்... சாரிங்க!!)

1. Bh8 - Kc7
2. Qc2 - Kb7
3. Qh7#

:D:D:D ரொம்ப குழப்பிட்டேனோ!!

ஆதவா
11-05-2011, 09:18 AM
அடுத்த புதிரும் GrandMaster போட்டியில் இருந்து

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GM4chesswm2.jpg

வெள்ளைக்கான நகர்வு, ஆட்டம் இரு நகர்வில் முடிகிறது...

1. Bf6 - KxBf6
2. Hh5#

ஒருவேளை ராஜா வெட்டவில்லையெனில்....

1. Bf6 - Kh6
2. Hf5#

ஆதி
11-05-2011, 09:20 AM
1. Bf6 - KxBf6
2. Hh5#

?

மிகவும் சரியான விடை ஆதவா..

100 ஐ-கேஷ் கணக்குல வச்சுக்கோங்க....

2) Nh5# சரியான ஈடு...

ஆதி
11-05-2011, 09:48 AM
புதிர் -6

இதுவும் GM போட்டியில் இருந்தே...

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GM5chessWM5s.jpg

வெள்ளை நகர்த்த வேண்டும், கருப்பு ஒரு நகர்வு தப்பாக ஆடினால் ஆட்டத்தின் மூன்றாவது நகர்வில் வெள்ளை வெல்லும், இல்லை என்றால் ஐந்தாவது நகர்விலேயே வெள்ளையால் வெல்ல முடியும்...

ஆதவா
12-05-2011, 04:03 AM
முதலில் ஆட்டத்தின் நிலைமையைப் பார்க்கலாம்.

1. கிட்டத்தட்ட இரண்டு பக்கமும் சமமான படை இருந்தாலும் வெள்ளை முன்னேறியிருக்கிறது. ஆகவே ஆட்டம் வெள்ளையின் கையில்தான். நாம் அட்டாக் முறையில் ஆட்டம் ஆடலாம். பின் வாங்கவேண்டியதில்லை. எனவே அவர்களுக்கு நகர்வு தரக்கூடாது!!

2. மந்திரியும் இராணியும் வீரனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெள்ளையின் முதல் நகர்வு இராணியை போரிலிருந்து அந்தபுரத்துக்கு அனுப்புவதுதான். அல்லது இராஜாவுக்கு செக் வைப்பது.

3. கருப்பு இராஜா மூலைக்குச் செல்வது தவிர வேறிடங்கள் ஏதுமில்லை அதேசமயம் வெள்ளை இராஜா கேஸ்ட்லிங்கில் நகர்ந்திருப்பதால் இப்போதைக்கு பயமில்லை!! சோ, கருப்பு ராணிக்கு செக் வைக்கும் சந்தர்ப்பம் கிடையாது என்பதால் அவர்களது ஆட்டம் நமது நகர்வின் மீதே இருக்கும்!!

4. ஐந்தாவது நகர்வு என்பதால் நிறைய திட்டங்கள் போடவேண்டியிருக்கிறது.

4.1

Nf5 - Kh8
Qxg6 - PxQg6
Rh3 - Hh6
RxHh6#

ஒருவேளை இராணியை சிப்பாய் வெட்டாமல் யானையை f7 க்குக் கொண்டுவந்தால்?

Nf5 - Kh8
Qxg6 - Rf7
QxRf7 - Ph5
Qg7#

5 ஸ்டெப் கொஞ்சம் ஜாஸ்தி... ரொம்ப டைம் ஆகுது... 2 ஸ்டெப் 3 ஸ்டெப் இப்போதைக்கு கொடுங்க ஆதி...

sarcharan
12-05-2011, 04:16 AM
ஆதவாவின் விடை சரி என்று தோன்றுகிறது! ஆதனின் பதிலுக்கு காத்திருப்போம்.

Nivas.T
12-05-2011, 06:36 AM
4.1

Nf5 - Kh8
Qxg6 - PxQg6
Rh3 - Hh6
RxHh6#

Nf5 - Kh8
Qxg6 - Rf7
QxRf7 - Ph5
Qg7#

ஆதவா நீங்கள் பயன்படுத்தும் இந்த காய் நகர்வின் குறியீடுகள் எனக்கு புரியவில்லை எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்

நான் இதில் கொஞ்சம் பூஜ்யம் :D:frown::redface:

sarcharan
12-05-2011, 06:59 AM
சுலபம் தான்.
R- யானை (ரூக்)
B-பிஷப்
N/H- குதிரை (நைட்)
Q -ராணி
K- ராஜா
பான (pawn) கணக்கு வெக்கறது இல்லை.

எ டு ஹச் வரைல முவ் பண்ணலாம்

Qxg6 - ராணி g6ல் முவ் பண்ணனும்! அது மாதிரி மற்றதும்! மத்தத, நம்ம ஜுனியர் விசுவநாதன் ஆனந்துகள் சொல்வாங்க

சரிதானாங்ணா?:frown:

ஆதவா
12-05-2011, 07:01 AM
ஆதவா நீங்கள் பயன்படுத்தும் இந்த காய் நகர்வின் குறியீடுகள் எனக்கு புரியவில்லை எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்

நான் இதில் கொஞ்சம் பூஜ்யம் :D:frown::redface:

சதுரங்கம் ஆடப்படும்பொழுது குறித்து வைக்கப்படுபவை இவை..
செஸ் போர்டில் ஒவ்வொரு பக்கத்திற்கும் கட்டங்களைக் குறிக்கும் எண் மற்றும் எழுத்து இருப்பதைக் காணலாம்.

1. வெள்ளை காய்கள் இருக்கும் இடமிருந்து வலம் a முதல் h வரையும்
கீழிருந்து மேல் 1 முதல் 8 வரையும் குறிக்கப்பட்டிருக்கும்.

2. ஒவ்வொரு காய்களும் ஏதாவது ஒரு குறிக்கப்பட்ட கட்டத்திலிருக்கும். உதாரணத்திற்கு மேற்கண்ட ஆட்டத்தில் வெள்ளை ராஜா இருக்குமிடம் g1

3. ஒவ்வொரு காய்களுக்கும் பெயருண்டு. King, Queen, Rook, Bishop, Knight, Pawn, இவற்றின் முதல் எழுத்தைக் கொண்டு அதன் அடுத்த நகர்வை குறியீடுகளின் மூலம் குறிக்கலாம்.. உதாரணத்திற்கு மேற்கண்ட ஆட்டத்தில் எனது முதல் நகர்வு Nf5 (King, Knight ஆகிய இரண்டும் Kவில் தொடங்குவதால் குதிரைக்கு N என்று குறிக்கலாம். சிலர் H என்றுகூட சொல்லுவார்கள்.) குதிரையை f5 கட்டத்திற்கு நகர்த்துவதாகக் குறிக்கிறது!!

அது செக் என்பதால் + குறியீடு போடவேண்டும்.. (நான் கொடுக்கவில்லை.) அதனால் கருப்பின் நகர்வு Kh8 அதாவது இராஜா h8 கட்டத்திற்கு நகர்கிறார்!!!

இன்னும் குறியீடுகள் நிறைய உண்டுங்க...

!, !!, ?, #, x, போன்றவை உபயோகப்படுத்தப்படும்!!

ஆதி... செஸ் குறித்த பாடங்கள் நீங்கள் ஆரம்பிக்கலாமே??

ஆதி
12-05-2011, 07:55 AM
ஆனால் Pawn எந்த குறியும் கிடையாது...

Pawn நகரும் கட்டங்களை வைத்து அதன் இருப்பை சொல்வார்கள்..

உதாரணமாக, Pawn a2-ல் கட்டத்தில் இருந்து a3-ல் நகர்ந்தால், a3 என்று மட்டுமே அதை குறிப்பெடுப்பார்கள்...

a3-ல் இருக்கும் Pawn, b4-ல் இருக்கும் குதிரையை வெட்டினால் அதனனை axNb4 என்று குறிக்கப்படும்...

a8 b8 c8 d8 e8 f8 g8 h8
a7 b7 c7 d7 e7 f7 g7 h7
a6 b6 c6 d6 e6 f6 g6 h6
a5 b5 c5 d5 e5 f5 g5 h5
a4 b4 c4 d4 e4 f4 g4 h4
a3 b3 c3 d3 e3 f3 g3 h3
a2 b2 c2 d2 e2 f2 g2 h2
a1 b1 c1 d1 e1 f1 g1 h1

இப்படித்தான் குறிக்கப்படுகிறது சதுரங்கத்தின் கட்டங்கள்...

a1 b1 c1 d1 e1 f1 g1 h1 - வெள்ளையின் சிறப்பாற்றல் கொண்டகாய்களான யானை, குதிரை, மந்திரி, ராணி, ராஜா, மந்திரி, குதிரை, யானை என் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.. வெள்ளை ராணி வெள்ளை கட்டத்தில் இருக்கும், வெள்ளை ராஜா கருப்பு கட்டத்தில் இருக்கும், அதாவது வெள்ளை ராணி d1-லும், வெள்ளை ராஜா e1-லும் இருக்கும்...

சதுரங்க பலகையில் வெள்ளை காய்களின் வலது புறமூலை வெள்ளைக்கட்டமாக இருக்கும் அதாவது h1 வெள்ளை கட்டமாக இருக்க வேண்டும்.. அதே போல கருப்புக்காயின் வலது புறமூலையும் வெள்ளையாக இருக்கும் அதாவது a8 வெள்ளை கட்டமாக இருக்கும்... மாற்றி வைத்தால் பலகையின் எல்லா கணக்கும் மாறும், ராணி வலது புறமும், ராஜா இடது புறமும் மாறும்... இது தவறானதும் கூட...

a2 b2 c2 d2 e2 f2 g2 h2 - கட்டங்களில் வெள்ளை Pawnகள் இருக்கும்...

a8 b8 c8 d8 e8 f8 g8 h8 - கருப்பின் சிறப்பாற்றல் கொண்டகாய்களான யானை, குதிரை, மந்திரி, ராணி, ராஜா, மந்திரி, குதிரை, யானை என் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.. கருப்பு ராணி கருப்பு கட்டத்திலும், கருப்பு ராஜா வெள்ளை கட்டத்திலும் இருக்கும், e8-ல் கருப்பு ராணியும், d8-ல் கருப்பு ராஜாவும் இருக்கும்....

a7 b7 c7 d7 e7 f7 g7 h7 - கருப்பின் Pawnகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்...

நிவாஸ் குழப்பிட்டேனா ? புரிகிறதென்றால் மேலும் தொடர்கிறேன்... இல்லை என்றால் முதலில் இருந்து தொடர வேண்டும் :D

Nivas.T
12-05-2011, 09:43 AM
மிக்க நன்றி சரண்
மிக்க நன்றி ஆதவா

நிவாஸ் குழப்பிட்டேனா ? புரிகிறதென்றால் மேலும் தொடர்கிறேன்... இல்லை என்றால் முதலில் இருந்து தொடர வேண்டும் :D

இல்லை ஆதன் மிகத்தெளிவு

சில விதிமுறைகள் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆனால் நீங்கள் கூறியதில் நிறைய புது விடயங்கள் உள்ளது

மேலும் தொடருங்கள் ஆதன்

ஆர்வத்துடன் நான்

ஆதவா
12-05-2011, 09:56 AM
ஆதி, நான் சொன்னது தப்பான விடையா? (தவறாக இருந்தால் சுட்டவும்.. நானும் யோசித்து யோசித்து சலித்துவிட்டேன்) சரியாக இருந்தால் அடுத்த புதிர் தரவும்.

ஆதி
12-05-2011, 10:09 AM
ஆதி, நான் சொன்னது தப்பான விடையா? (தவறாக இருந்தால் சுட்டவும்.. நானும் யோசித்து யோசித்து சலித்துவிட்டேன்) சரியாக இருந்தால் அடுத்த புதிர் தரவும்.

உங்க விடை சரி ஆதவா..

2) Qxg6 Qxf2+
3) KxQf2

இப்படி ஆடினா ஒரு நகர்வு கூடும் மற்றபடி எல்லாம் சரி...

100 ஐ-கேஷ் கணக்குல வச்சுக்கோங்க...

ஆதவா
12-05-2011, 10:15 AM
உங்க விடை சரி ஆதவா..

2) Qxg6 Qxf2+
3) KxQf2

இப்படி ஆடினா ஒரு நகர்வு கூடும் மற்றபடி எல்லாம் சரி...

100 ஐ-கேஷ் கணக்குல வச்சுக்கோங்க...

இது தேவையில்லாத ஆட்டமாகத்தான் இருக்கும். கிங்கு மூலையில உயிருக்கு போராடிட்டு இருக்கிறப்ப, குயினுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?

சரி அடுத்த புதிர் போடுங்க... இன்னிக்கு விட்டா திங்கட்கிழமைதான்..

ஆதி
12-05-2011, 10:23 AM
இது தேவையில்லாத ஆட்டமாகத்தான் இருக்கும். கிங்கு மூலையில உயிருக்கு போராடிட்டு இருக்கிறப்ப, குயினுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?

சரி அடுத்த புதிர் போடுங்க... இன்னிக்கு விட்டா திங்கட்கிழமைதான்..

அப்படியில்லை ஆதவா, இது போன்ற நகர்வுகள் சில சமயங்களில் ஆட்டத்தை நீட்ட வசதியாக இருக்கும்...

ஆதி
12-05-2011, 10:28 AM
புதிர் - 7

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/cp4wm3.jpg

வெள்ளைக்கான நகர்வு, ஆட்டம் மூன்று நகர்வில் முடிகிறது...

ஆதவா
12-05-2011, 10:34 AM
புதிர் - 7

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/cp4wm3.jpg

வெள்ளைக்கான நகர்வு, ஆட்டம் மூன்று நகர்வில் முடிகிறது...

சுமாராகப் பார்த்ததில்....
குயின் பலி கொடுத்து, சிப்பாய்கள் மூலம்தான் ஆட்டம் முடிகிறது...

திரும்பவும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்..

----------------

Qxh5+ - G6xQh5
G6+ - f7xg6
f5xg6#

அல்லது

Qxh5+ - Bh6
QxBh6#

ஆதி
12-05-2011, 10:52 AM
சுமாராகப் பார்த்ததில்....
குயின் பலி கொடுத்து, சிப்பாய்கள் மூலம்தான் ஆட்டம் முடிகிறது...

திரும்பவும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்..

----------------

Qxh5+ - G6xQh5
G6+ - f7xg6
f5xg6#

அல்லது

Qxh5+ - Bh6
QxBh6#

இரண்டும் சரி, முதல் பதிலே முதிர்ச்சியான ஆட்டம்..

100 ஐ-கேஷ் கணக்கு வச்சுக்கோங்க, கடினமாக இருக்க வேண்டாம் என்றே கொடுத்தேன்...

ஆதி
12-05-2011, 11:05 AM
புதிர் - 8

மீண்டும் ஒரு GM போட்டியில் இருந்து...

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GM6Wm6.jpg

வெள்ளைக்கான நகர்வு.. c4வில் இருக்கும் கருப்பு புரவி b2வில் இருக்கும் வெள்ளை ராஜாவை மிரட்டிக் கொண்டிருப்பதை கவனிக்க...

ஆறு நகர்வில் ஆட்டம் முடிகிறது...

ஆதவா
12-05-2011, 11:17 AM
அஞ்சு நகர்வுக்கே தலை சுத்திடுச்சு... (மூணுமணிநேரம் திணறத் திணற யோசிச்சேன்.)

ஆறு நகர்வா??? அவ்வ்.....

Nivas.T
12-05-2011, 11:44 AM
புதிர் - 8

மீண்டும் ஒரு GM போட்டியில் இருந்து...

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GM6Wm6.jpg

வெள்ளைக்கான நகர்வு.. c5வில் இருக்கும் கருப்பு புரவி b2வில் இருக்கும் வெள்ளை ராஜாவை மிரட்டிக் கொண்டிருப்பதை கவனிக்க...

ஆறு நகர்வில் ஆட்டம் முடிகிறது...

hc4 என்று நினைக்கிறேன்:confused:

ஆதி
12-05-2011, 12:02 PM
hc4 என்று நினைக்கிறேன்:confused:

மாற்றிட்டேன் நிவாஸ், சுட்டியமைக்கு நன்றி...

சின்ன திருத்தம்...

Hc4 அல்ல Nc4

ராஜா - ரா - King - K

ராணி - ம - Queen - Q

யானை - யா - Rook - R

புரவி - பு - Knight - N/Kt

அமைச்சன் - அ - Bishop - B

சிப்பாய் - - Pawn -

தமிழ் குறியீடுகளை சும்மா நானே போட்டிருக்கேன்...

அ8 ஆ8 இ8 ஈ8 உ8 ஊ8 எ8 ஏ8
அ7 ஆ7 இ7 ஈ7 உ7 ஊ7 எ7 ஏ7
அ6 ஆ6 இ6 ஈ6 உ6 ஊ6 எ6 ஏ6
அ5 ஆ5 இ5 ஈ5 உ5 ஊ5 எ5 ஏ5
அ4 ஆ4 இ4 ஈ4 உ4 ஊ4 எ4 ஏ4
அ3 ஆ3 இ3 ஈ3 உ3 ஊ3 எ3 ஏ3
அ2 ஆ2 இ2 ஈ2 உ2 ஊ2 எ2 ஏ2
அ1 ஆ1 இ1 ஈ1 உ1 ஊ1 எ1 ஏ1

இப்படி நாம சதுரங்கத்த மாற்றிக் கொள்ளலாமே...

என்ன குழப்பமா இருக்கும் பழகும் வரைக்கும்...

Nivas.T
12-05-2011, 12:44 PM
இதுகூட நல்லத்தான் இருக்கு:)

சதுரங்கமே நாம கண்டுபிடிச்சதுதான்
அதனால நம்ம எழுத்துக்கள போட்டுக்கலாம்:D:D:D:D

ஆதவா
13-05-2011, 07:55 AM
புதிர் - 8

மீண்டும் ஒரு GM போட்டியில் இருந்து...

http://i250.photobucket.com/albums/gg246/adhidin/GM6Wm6.jpg

வெள்ளைக்கான நகர்வு.. c4வில் இருக்கும் கருப்பு புரவி b2வில் இருக்கும் வெள்ளை ராஜாவை மிரட்டிக் கொண்டிருப்பதை கவனிக்க...

ஆறு நகர்வில் ஆட்டம் முடிகிறது...

இது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஒண்ணும் தோணவில்லை.
வெள்ளைக்கு எடுத்த எடுப்பிலேயே குதிரையால் ஆப்பு இருப்பதால் பின்வாங்குவதைக் காட்டிலும் அடிப்பதுதான் நகர்வு குறைப்பதற்கான வழி. ஆனால் குதிரையை அடிப்பதற்கான விலை ராணி அல்லது யானை!!!

கருப்பு இராஜாவுக்கு a7 ஐ விட்டால் வேறு நகர்வு கிடையாது என்பதால் இராணியை எப்படியாவது உள்ளே நுழைக்கவேண்டும்!! எப்படி?????

இன்றுவரை பார்த்துவிட்டு நீங்களே பதில் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன் ஆதி..

ஆதி
13-05-2011, 01:56 PM
ரொம்ப கடினமா இருக்கோ ?

சரி நானே ப*திலை போட்டுடவா ?

ஆதவா
13-05-2011, 02:10 PM
ரொம்ப கடினமா இருக்கோ ?

சரி நானே ப*திலை போட்டுடவா ?

ஆறு ஸ்டெப் என்பதாலோ என்னவோ... கணிக்கமுடியலைங்க. நானும் ரொம்ப யோசிச்சுப் பார்த்துட்டேன். உள்ள போய் இராஜாவை அடிக்கணும்னு மட்டும் தோணுது. ஆனா எப்படின்னு தெரியலை!!
பதிலைப் போட்டுட்டு அடுத்த புதிரைப் போடுங்க.

ஆதி
13-05-2011, 02:19 PM
1) QxNc4 BxQc4

2) Rxa5 b6xRa5

3) Rxa5 Ba6

4) RxBa6 Qb3 +

5) KxQb3 Any

6) Ra8#

ஆதவா
13-05-2011, 02:34 PM
:eek::eek::eek:

நாஞ்சில் த.க.ஜெய்
15-05-2011, 03:34 PM
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த விளையாட்டு.... தொடருங்கள் நானும் கலந்து கொள்கிறேன் உங்களோடு ....

ஆதவா
25-05-2011, 08:42 AM
ஸ்டாக் அவ்வளவுதானா?? :rolleyes:

ஆதி
25-05-2011, 08:45 AM
ஸ்டாக் எக்கசக்கமா இருக்கு.. பணி பளுவில் இந்த பக்கம் வர இயலவில்லை...

விரைவில் தொடர்கிறேன்..