PDA

View Full Version : என் மூன்றாம் உலகம்!



ரசிகன்
09-05-2011, 09:23 AM
அதிகாலை
தேநீர் கோப்பைக்கும்
சாயுங்கால மதுக்கோப்பைக்கும்
இடைப்பட்ட குக்கிராமம் எனது!

வற்றிப்போன இதயங்கள்
குடியிருக்கும்
மிக விசாலமான தெருவில்
இடதுபக்கம் என் வீடு...

முற்பொழுதொன்றில்
அவள் பார்வை பட்ட
ஒதுக்குப்புறத்தில் எனதறை...
அலங்கோலமாய் தானிருக்கும்
குப்பை இருக்காது!

அதில்
நான்கு பேர் மொத்தம்...
ஒரு நான்,
ஒரு பொய்,
ஒரு வால் அறுபட்ட கனவு,
மற்றுமொரு துணையிழந்த நினைவு!

பின்னிரவுகளில்
ஜன்னல் வழி வரும்
நிலா,
மற்றும் பூனைக்குட்டி கணக்கில் இல்லை!

கீதம்
11-05-2011, 05:42 AM
முரண்களில் முட்டிமோதித்
திக்கற்றுத் தவிக்கிறது என் யூகம்.
உங்கள் மூன்றாம் உலகத்தின் விலாசத்தை
இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லியிருக்கலாம்.:)

கவிதை நன்று ரசிகன்.