PDA

View Full Version : வவ்வால் உலகம்



கலாசுரன்
09-05-2011, 07:57 AM
*
பக்கத்து இருக்கைகள் வழக்கம்போலவே
என்னைக் கண்டு சிரித்துக்கொள்கின்றன
வாத்தியார்களின் பிரம்படியிலிருந்து
ஒருபோதும் தப்பித்துக்கொள்வதில்லை
எனது காகிதங்களில் பதிந்த கோழிக்கால்கள்..

செந்நிறக் கோடுகள் பதிந்த எனதிந்த கைகளை
உங்கள் முன் நீட்டுகிறேன்
என் குருதியின் நிறம் இதுதானென

பதில்களை எதிர்பார்ப்பதில்லை
எனது கேள்விகள் என்பதால்
முள்ளுமுருக்கு மரத்தில் வேதாளமென
என்னைத் தொங்கவிடுகிறீர்கள்

ஏதோ ஒரு கதையிலுள்ள தாய்ச் சொல்
கேளாதொரு வவ்வாலும் நானும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
இவ்வுலகம் தலைகீழாக தொங்கிக் கிடக்கிறது
*
***

கலாசுரன்

கீதம்
11-05-2011, 05:36 AM
தாய்ச்சொல் கேட்கும் வவ்வாலும்
தலைகீழாகத்தான் தொங்கும்.:)

கோழியின் கால்களில் இப்போதெல்லாம்
தட்டச்சுப் பொத்தான் பாதணிகள்!

கால்களின் அச்சைக் கொண்டு
கோழிகளை அடையாளம் காணும் காலம்
மலையேறிவிட்டது...
எனக்கும் அதில் மனக்குறை உண்டு.

நான் புரிந்துகொண்ட வரையில் கவிதை ரசிக்கிறது. பாராட்டுகள் கலாசுரன்.

கலாசுரன்
16-05-2011, 08:33 AM
நன்றி கீதம் ..:)