PDA

View Full Version : மனதில் உறுதி வேண்டும்....meera
08-05-2011, 01:22 AM
அன்பு நண்பர்களே, இது என் முதல் கட்டுரை முயற்சி. நாலு வார்த்தைகளை கோர்த்தால் கவிதை என் எண்ணிக்கொண்டிருந்த என்னை இப்படி எழுதுவதே கவிதை என்பதை புரிய வைத்தது நம் மன்றமும், நம் மன்ற மக்களும். சரியான நேரத்தில் ஒருவருக்கு சரியான ஊக்கமளித்தால் யாரும் எதையும் சுலபமாய் சாதிக்கலாம் என்பதை நான் இங்கே கண்டேன்.

முதலில் நனைவருக்கும் நன்றி.

ஆக எஅனது முதல் கட்டுரையும் இங்கே தான் ஆரம்பிக்கிறேன். என் தாய்வீட்டில் சரியான தாலாட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.:icon_b:

என் ஆழ்மனதில் ஒரு கேள்வி அதற்கான விடையை இங்கே தேடுகிறேன்.

நம்மில் பலரும் உனக்கு யாரை பிடிக்கும்? உன் முன்மாதிரி யார்? நீ யாரைப்போல் வரவேண்டும்? என்று கேட்டால், எனக்கு மகாத்மா காந்தி பிடிக்கும். என் முன்மாதிரி அன்னை தெரசா.நேதாஜி போல் நெஞ்சுரம் கொண்டு விளங்கவேண்டும் இப்படி வரலாறு பேசியவர்களை பற்றி சொல்கிறோமே தவிர, என் தந்தையை போல் உழக்க வேண்டும்,என் தாயைப்போல் எல்லோரிடமும் பரிவு காட்ட வேண்டும், என் நண்பனைப்போல் உறுதியோடு சாதிக்க வேண்டும். இப்படி சொல்பவர்கள் மிக்கக்குறைவு என்பதை விட நான் கேட்டதே இல்லை என்பது என் எண்ணம்.

இப்படியெல்லாம் சொல்வதால் நான் அன்னை தெரசாவை வெறுப்பவள் அல்ல.மகாத்மாவை மதிக்காதவள் அல்ல. நேதாஜியை சாடுபவளும் அல்ல என்பதை நான் இங்கே தெளிவாக சொல்கிறேன். எனக்கும் அன்னை தெரசாவின் அன்பு பிடிக்கும்,மகாத்மாவின் அஹிம்சை பிடிக்கும்,நேதாஜியின் வீரம் பிடிக்கும்.

சாதனைகளை எடுத்துக்காட்டும் போதும், சாதித்தவர்களை சுட்டிக்காட்டும் போதும் ஆப்ரஹம் லிங்கனை சொல்கிறோம்,ஐன்ஸ்டீனை சொல்கிறோம், தாமஸ் ஆல்வா எடிசனைச் சொல்கிறோம். ஆனால் யாரேனும் என் பக்கது தெருவில் இவன் இதை சாதித்தான் என சொல்கிறோமா? என் பக்கத்து ஊரில் அவன் அதை சாதித்தான் என சொல்கிறோமா?

ஒருவேளை நாமோ, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எவரும் எதையும் சாதிக்கவில்லையா????

சாதனை என்பது என்ன???????

தொடரும்.....

Ravee
08-05-2011, 03:45 AM
நாம் நம் பள்ளிக்காலத்தில் இருந்தே அறிவை ஒரு திணிப்பாகவே பெற்று வருகிறோம் .... எதையும் அனுபவிப்பதில்லை . அனுபவ அறிவு இருந்தால் அக்கம் பக்கம் அனைத்தும் நமக்குள் வந்து இருக்கும் .... என் வீட்டில் என் குழந்தையிடம் இருந்தே இந்த முயற்சியை எடுத்து வருகிறேன் ஆனால் பள்ளி திறந்த உடன் அதை சாகடித்து விடுவார்கள் ..... :(

மீரா .... ஆயிஷா - குறுநாவல் என்று கூகுளில் தட்டி அந்த கதையை படியுங்கள் .... பிழைகள் எங்கிருந்து புறப்படுகிறது என்று இன்னும் பேசுவோம் .

http://sagotharan.files.wordpress.com/2010/11/book_6.jpg

Nivas.T
08-05-2011, 06:57 AM
நல்ல தலைப்பு கட்டுரை வரைய, அலசி ஆராய நல்ல ஒரு விடயம்

தொடருங்கள் மீரா

Nivas.T
08-05-2011, 09:10 AM
மீரா .... ஆயிஷா - குறுநாவல் என்று கூகுளில் தட்டி அந்த கதையை படியுங்கள் .... பிழைகள் எங்கிருந்து புறப்படுகிறது என்று இன்னும் பேசுவோம் .

http://sagotharan.files.wordpress.com/2010/11/book_6.jpg

உண்மையில் சொல்கிறேன் இது கதையா? அல்லது உண்மைச் சம்பவமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்றைய ஆசிரியர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகதம் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தத்திரி மேலும் தொடரட்டும்.

இப்படி ஒரு நாவலை வழங்கிய உங்களுக்கு கோடி நன்றிகள் ரவி அண்ணா.

இதனை மன்றத்தில் ஏற்றிவிடுங்கள்? இல்லையென்றால் நானே செய்துவிடுகிறேன்.

இன்னும் தொடருவோம்

meera
09-05-2011, 01:59 AM
நாம் நம் பள்ளிக்காலத்தில் இருந்தே அறிவை ஒரு திணிப்பாகவே பெற்று வருகிறோம் .... எதையும் அனுபவிப்பதில்லை . அனுபவ அறிவு இருந்தால் அக்கம் பக்கம் அனைத்தும் நமக்குள் வந்து இருக்கும் .... என் வீட்டில் என் குழந்தையிடம் இருந்தே இந்த முயற்சியை எடுத்து வருகிறேன் ஆனால் பள்ளி திறந்த உடன் அதை சாகடித்து விடுவார்கள் ..... :(

மீரா .... ஆயிஷா - குறுநாவல் என்று கூகுளில் தட்டி அந்த கதையை படியுங்கள் .... பிழைகள் எங்கிருந்து புறப்படுகிறது என்று இன்னும் பேசுவோம் .

http://sagotharan.files.wordpress.com/2010/11/book_6.jpg

நன்றி ரவி, இந்த நாவலை வாசிக்க தொடங்கி இருக்கிறேன்.படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன்.

meera
09-05-2011, 02:00 AM
நல்ல தலைப்பு கட்டுரை வரைய, அலசி ஆராய நல்ல ஒரு விடயம்

தொடருங்கள் மீரா

பின்னூட்டமிட்டதற்கு நன்றி நிவாஸ்.

வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஆராய்வோம்:icon_b:

meera
09-05-2011, 02:05 AM
சாதனை என்பது உலகம் புகழும் அளவிற்கு உயர்வு பெறுவது தான் சாதனையா??

அப்படியானால் சாமானியர்கள் செய்யும் செயல் சாதனை இல்லையா?

சாதித்தவர்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் எத்தனை சாமானியர்களின் உழைப்பும்,தியாகமும் இருக்கிறது.

ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கைகள் தட்டும் போது தானே ஓசை வருகிறது.

சாதனையும் அப்படியே…..

மகாத்மாவின் வெற்றிக்கு பின்னால் ஆயிரமாயிரம் தொண்டர்களின் உழைப்பும்,வியர்வையும் இருக்கிறதே!

நான் இங்கே எழுத நினைப்பது சராசரி குடும்பங்களின் சாதனை பற்றி..

தென் தமிழ் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்தவள் என் தோழி ராதா. 1980களில் இந்தியாவில் கிராமங்கள் எப்படி இருந்தன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அப்படிப்பட்ட கிராமம் தான் தோழியின் கிராமமும். குடிசைகள் தவிர ஒரே ஒரு ஓட்டு வீடு.

படிப்பு என்பதை நினைக்கும் நிலையில் பெற்றோர்கள் இல்லை. ஆனாலும் அந்த கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரையிலான பள்ளிக்கூடம் இருந்தது. அதற்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டும் வருவதுண்டு. அங்கு குழந்தைகள் படிக்கவருகிறார்களோ இல்லையோ மதிய உணவில் குழந்தைகள் அனைவரும் ஆஜராகிவிடுவர். காமராஜரின் கனவு எப்படி நிறைவேருகிறது பார்த்தீர்களா?.

நம் கதாநயகி ராதா மட்டும் என்ன? அவளும் மதிய உணவில் கட்டாயம் ஆஜர் தான். அந்த ஓட்டு வீட்டுக்கு சொந்தக்காரர் ராதாவின் அப்பா. சிறுதோழில் ஒன்று அவருடையது. ஓரளவு வசதி.மத்திய வர்க்கத்திற்கு கொஞ்சம் மேலே. பணக்கார வர்க்கத்துக்கு கொஞ்சம் கீழே.

படிப்பறிவு வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்ற நிலையில் உள்ள கிராமம். யாரும் தன் பிள்ளையின் கல்வியறிவு பற்றி கவலைகொள்ளும் நிலையில் இல்லை. ஆகயே ஆசிரியைக்கும் கல்வி கற்றுத்தரும் அவசியம் இல்லை. காலையில் வந்தால் அட்டன்டன்ஸ் எடுத்துவிட்டு பிள்ளைகளை விளையாட அனுப்புவது. இரண்டு குழந்தைகள் ஆசிரியருக்கு பேன் பார்க்க வகுப்பில் இருப்பார்கள். மதிய உணவு முடிந்து ஆசிரியர் தூங்கிவிடுவார். அவர் ஒரு சுதந்திர பறவை.

ராதாவுடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிமார்கள்.ராதாவின் தந்தைக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். ஆசிரியையின் செயல் அவரை பாதிக்க ஒரு நாள் அந்த ஆசிரியையிடம் சண்டைபோட மறுநாள் பள்ளிக்கு மூடுவிழா. ஆசிரியை ஒருமாதம் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டார்.

பின் சிலரை அனுப்பி ஆசிரியரிடம் பேச சில நிபந்தனைகளின் பேரில் மீண்டும் வேலைக்கு வந்தார். அதன் பின் ராதாவின் அப்பாவும் ஏதும் கேட்பதில்லை. ஆசிரியை ராதாவையும் ஏதும் கண்டுகொள்வதில்லை. அவள் பள்ளி சென்றாலும் செல்லாவிட்டாலும் பாஸாகிவிடுவாள். ராதாவின் தந்தை வெறுத்துப்போய் தன் மகன்கள் இருவரையும் பக்கத்து டவுனில் உள்ள ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளியில் சேர்த்துவிட்டார். ராதாவை பெரிதாய் படிக்கவைக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. ஒரு சராசரி தந்தையாய் தன் மகளுக்கு கடிதம் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்றே எண்ணி இருந்தார். ஆகா ராதாவின் கல்வி அந்த கிராமத்திலே தான் தொடர்ந்தது.

காலங்கள் சென்று ஐந்தாம் வகுப்பு முடித்த மகளை பக்கத்து டவுனில் ஆறாம் வகுப்பு சேர்க்க விடுதியுடன் கூடிய பள்ளியை தேர்வு செய்தார். அங்கே சேர்க்கைகான விதிமுறைகளைக்கண்டு வியந்துபோனார். ஆறாம் வகுப்பு சேர்க்கை பெற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அன்றைய தினம் தேர்வு முடிந்து குழந்தைகள் வெளியே வரும்வரை காத்திருந்து அவர்களிடம் என்னென்ன கேள்வி கேட்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார். வீடு வந்தவர் ராதாவிடம் முதல்முறையாக பள்ளி பாடம் பற்றி பேச. மிரண்டு போனாள் அவள். காரணம் அவள் தந்தை அ,ஆ எழுதச்சொல்ல ஆரம்பமே தெரியாத அவள் எங்கிருந்து எழுதுவது??? விழிபிதுங்கி நிற்க்கும் மகளை பார்க்க அவருக்கு பாவமாக இருந்தாது.அன்று அவளின் தந்தை அவளின் முதல் ஆசான் ஆனார்..தொடரும்

meera
09-05-2011, 02:34 AM
கண்கள் கண்ணீரில் தத்தளிக்குது எனக்கு. இது கதையல்ல.எத்தனை பள்ளிகளில் நிஜமாய் இருக்கிறது தெரியுமா. இதை ஏன் பயிற்சி ஆசிரியர்களுக்கு காண்பித்தார்கள் என்பது புரிகிறது.

அற்புதமான நூலை அறிய கொடுத்த உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி ரவி.

கீதம்
09-05-2011, 02:48 AM
நல்ல முயற்சி மீரா... பாராட்டுகிறேன். உங்கள் தேடல் எங்களுக்கும் நல்வழி காட்டும் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள். நானும் பின்வருகிறேன்.

ரவி குறிப்பிட்ட நூலை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் கருத்துப் பதிவு செய்கிறேன். நன்றி ரவி.

அன்புரசிகன்
09-05-2011, 03:42 AM
நல்லதொரு தொடர் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அதற்கு...

முதல் பாகத்தில் உள்ளவற்றில் எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்கிறேன்.

சாதனைகள் என்பது வெளிக்கொணர்வதில் தான் அதன் வெற்றி உள்ளது. உப்பு இல்லாதவிடத்து தான் உப்பின் அருமை தெரியும் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை சமையல் கலை கூட ஒரு சாதனையின் வெளிப்பாடு தான். ஆனால் இதை ஏற்க தயாராக பலரில்லை.

சாதனைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் சூழ்நிலை நிச்சயம் தேவை. (என்னைப்பொறுத்தவரை) ஒரு பேட்டியில் இசைப்புயல் கூறியது. ஒஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்பதற்கு முன் உங்களது திறமையை அவர்களிடத்து அடையச்செய்ய வேண்டும். இதை பலர் செய்வதில்லை. காரணம் கணிசமான அளவு பணச்செலவு. தாமே அதை செய்ய முற்பட்டால் அது தோல்வியில் முடிந்தால் இந்திய ஊடகங்கள் அதையே பெரிதுபடுத்தி மானத்தை வாங்கிவிடுவார்கள் என்று பல இசையமைப்பாளர்கள் அதற்கு முன்வருவதில்லை. காரணம் வெற்றியை போற்றும் எம் சமுதாயம் தோல்வியை மதிப்பதில்லை.

என்னைப்பொறுத்தவரை பலரால் இயலாத ஒன்றை ஒருவரால் நிறைவேற்ற முடிந்தால் அது சாதனை தான். அது சாதகமோ பாதகமோ... ஒசாமாவின் சாதனை அமெரிக்காவின் மூக்கில் விரல் விட்டு ஆட்டியது.

பெற்றோரை முன்னுதாரணமாக எடுக்காததற்கு காரணம் பெற்றோரின் வழிகாட்டல் தான் என்பது எனது எண்ணம். எந்தப்பெற்றோரும் தம்மிலும் தன் பிள்ளை மேலிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் தான். இதில் தவறு சொல்ல ஏதுமில்லை. அவர்கள் தமக்கும் மேலுள்ள ஒருவரை சுட்டிக்காட்டி வளர்ப்பதால் அதுவே பிள்ளைகளின் மனதில் பதிந்துவிடுகிறது. எனது பெற்றோர் கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவர்கள் மகாத்மா நேத்தாஜி என்று சொல்லவில்லை. நீ அந்த அண்ணாவைப்போல் வரவேண்டும். இந்த அக்காவைப்போல் வரவேண்டும் என்று தான் சொல்வார்கள்.

aren
09-05-2011, 06:16 AM
நல்ல முயற்சி மீரா. நம் அருகிலேயே பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது, காரணம் நாம் சாதனை என்பது எது என்று தெரியாமல் முழிப்பதனாலேயே. இன்னும் எழுதுங்கள்.

meera
09-05-2011, 07:21 AM
நல்ல முயற்சி மீரா... பாராட்டுகிறேன். உங்கள் தேடல் எங்களுக்கும் நல்வழி காட்டும் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள். நானும் பின்வருகிறேன்.

ரவி குறிப்பிட்ட நூலை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் கருத்துப் பதிவு செய்கிறேன். நன்றி ரவி.

பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்திய தோழி கீதம் அவர்களுக்கு என் நன்றி. அந்த நாவலை படிக்க தவறாதீர்கள்.

meera
09-05-2011, 07:25 AM
நல்லதொரு தொடர் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அதற்கு...

முதல் பாகத்தில் உள்ளவற்றில் எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்கிறேன்.

சாதனைகள் என்பது வெளிக்கொணர்வதில் தான் அதன் வெற்றி உள்ளது. உப்பு இல்லாதவிடத்து தான் உப்பின் அருமை தெரியும் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை சமையல் கலை கூட ஒரு சாதனையின் வெளிப்பாடு தான். ஆனால் இதை ஏற்க தயாராக பலரில்லை.

சாதனைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் சூழ்நிலை நிச்சயம் தேவை. (என்னைப்பொறுத்தவரை) ஒரு பேட்டியில் இசைப்புயல் கூறியது. ஒஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்பதற்கு முன் உங்களது திறமையை அவர்களிடத்து அடையச்செய்ய வேண்டும். இதை பலர் செய்வதில்லை. காரணம் கணிசமான அளவு பணச்செலவு. தாமே அதை செய்ய முற்பட்டால் அது தோல்வியில் முடிந்தால் இந்திய ஊடகங்கள் அதையே பெரிதுபடுத்தி மானத்தை வாங்கிவிடுவார்கள் என்று பல இசையமைப்பாளர்கள் அதற்கு முன்வருவதில்லை. காரணம் வெற்றியை போற்றும் எம் சமுதாயம் தோல்வியை மதிப்பதில்லை.

என்னைப்பொறுத்தவரை பலரால் இயலாத ஒன்றை ஒருவரால் நிறைவேற்ற முடிந்தால் அது சாதனை தான். அது சாதகமோ பாதகமோ... ஒசாமாவின் சாதனை அமெரிக்காவின் மூக்கில் விரல் விட்டு ஆட்டியது.

பெற்றோரை முன்னுதாரணமாக எடுக்காததற்கு காரணம் பெற்றோரின் வழிகாட்டல் தான் என்பது எனது எண்ணம். எந்தப்பெற்றோரும் தம்மிலும் தன் பிள்ளை மேலிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் தான். இதில் தவறு சொல்ல ஏதுமில்லை. அவர்கள் தமக்கும் மேலுள்ள ஒருவரை சுட்டிக்காட்டி வளர்ப்பதால் அதுவே பிள்ளைகளின் மனதில் பதிந்துவிடுகிறது. எனது பெற்றோர் கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவர்கள் மகாத்மா நேத்தாஜி என்று சொல்லவில்லை. நீ அந்த அண்ணாவைப்போல் வரவேண்டும். இந்த அக்காவைப்போல் வரவேண்டும் என்று தான் சொல்வார்கள்.

அன்பு அண்ணா மிக்க நன்றி உங்கள் விமர்சனத்திற்கும், பார்வைக்கும். நீங்கள் சொல்வது சரிதான் சரியான நேரத்தில் சரியாய் தன் திறனை வெளிக்கொணர்ந்தவர்கள் சாதனையாளர்களாயினர். அதை சரிவர சொல்ல தெரியாதவர்கள் பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து மறைகின்றார்கள்.

meera
09-05-2011, 07:29 AM
நல்ல முயற்சி மீரா. நம் அருகிலேயே பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது, காரணம் நாம் சாதனை என்பது எது என்று தெரியாமல் முழிப்பதனாலேயே. இன்னும் எழுதுங்கள்.

உங்களின் பின்னூட்டம் கண்டு என் மனம் குழந்தையாய் துள்ளுகிறது.ஊக்கத்திற்க்கு நன்றி அண்ணா.:icon_rollout::icon_rollout: