PDA

View Full Version : அறிவில்லாத ஆர்ம்ஸ்ட்ராங்



M.Jagadeesan
07-05-2011, 02:19 PM
நிலவைப் பழிக்கும் அழகுமுகம் கொண்டவள்
என் காதலி!

இன்று ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்று
அங்கிருந்து பூமியைப் பார்த்தால்
நிச்சயம் எண்ணுவான்

பூமியிலேயே நிலவு இருக்க வீணாக
ஏன் இங்கு வந்தோம் என்று!!




நிலாமுற்றத்தில் நான் எழுதிய கவிதை.

Nivas.T
07-05-2011, 02:27 PM
ஆஹா அற்ப்புதம் போங்க

எப்டித்தான் உங்களுக்கு தோணுதோ :D

M.Jagadeesan
07-05-2011, 02:49 PM
நன்றி நிவாஸ்!

அக்னி
07-05-2011, 08:09 PM
பூமியிற் பொதிந்திருக்கும்
நிலவுகள் முழுவைதையும்
ஒருங்கே காணச் சென்ற
ஆர்ம்ஸ்ட்ராங்
புத்திசாலிதான்...
அதைவிட,
அதிஸ்டசாலியே...

நிலவு சென்று நிலவு பார்த்த கவிதை
மனதில் குளிராய் ஒளிர்கின்றது...

M.Jagadeesan
07-05-2011, 11:16 PM
அக்னிக்கு நன்றி!

meera
08-05-2011, 01:29 AM
அறிவில்லாத ஆம்ஸ்ட்ராங் கவிதையின் தலைப்பு கண்டு ஆம்ஸ்ட்ராங் என்ன அபத்தம் செய்தார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் வந்தேன். உங்கள் கவிதை கண்ட பின் அவர் அபத்தம் தான் செய்துவிட்டார் என்பது புரிகிறது.

கவிதை அருமை ஐயா..

M.Jagadeesan
08-05-2011, 01:34 AM
நன்றி மீரா அவர்களே!

பாலகன்
08-05-2011, 09:18 AM
நான் நம்ம கொளத்தூர் எம் எல் ஏவை பற்றி சொல்றீங்களோன்னு வந்து பார்த்தால் இவ்வளவு சிறிய அழகிய கவிதை வரிகளை காணநேர்ந்தது. பாராட்டுக்கள் ஜெகதீசன் சார். :) அவர் நிலவு வரை சென்றதால் தான் பூமி அழகு என்று கண்டுணர்ந்தார் சரிதானே?

M.Jagadeesan
08-05-2011, 09:33 AM
தங்கள் பாராட்டுக்கு நன்றி மஹாபிரபு!

சிவா.ஜி
08-05-2011, 04:18 PM
களங்கமில்லா நிலவை விட்டு....களங்கமுள்ள நிலவைத்தேடி ஏன் வந்தோமென ஆம்ஸ்ட்ராங் கவலைப்படுவான்.

நல்லக் கற்பனை. வாழ்த்துக்கள் ஜகதீசன்.

M.Jagadeesan
09-05-2011, 12:08 AM
பாராட்டுகளுக்கு நன்றி சிவா.ஜி

கீதம்
09-05-2011, 02:23 AM
அன்று மொட்டைமாடியில் நின்று
இன்னொரு நிலவா என்று
அக்கம்பக்கத்தோரை விழிவிரியச்செய்தாள்,
இன்று ஆம்ஸ்ட்ராங்கையே
அறிவிலி ஆக்கிவிட்டாளே...
அதி பாக்கியசாலிதான் அவள்,
கவிஞரின் காதலி அல்லவா?
வர்ணனைக்குப் பஞ்சம் வருமா, என்ன?

கவிதை அழகு. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
10-05-2011, 04:55 AM
பாராட்டுகளுக்கு நன்றி கீதம்!

அக்னி
10-05-2011, 11:32 AM
அன்று மொட்டைமாடியில் நின்று
இன்னொரு நிலவா என்று
அக்கம்பக்கத்தோரை விழிவிரியச்செய்தாள்,


மொட்டை மாடியில் அழகி நின்றால்
நிலவென்று
விரியும் விழிகள்,
மாடியில் மொட்டை அழகன் நின்றால்
மட்டும் கூசுவது..,
ஏன்... ஏன்... ஏன்... :confused:

கீதம்
10-05-2011, 11:50 AM
மொட்டை மாடியில் அழகி நின்றால்
நிலவென்று
விரியும் விழிகள்,
மாடியில் மொட்டை அழகன் நின்றால்
மட்டும் கூசுவது..,
ஏன்... ஏன்... ஏன்... :confused:

அதீதப் பிரதிபலிப்பினால் இருக்கலாமோ?:)

தாமரை
10-06-2011, 06:49 AM
நிலாவிலிருந்து பார்த்தால்
தெரியும் நிலவு நீ..

ஆஹா அற்புதம் அற்புதம்

அவ்வளவு பிரம்மாண்டமா
அந்த
அம்மணி!!!:lachen001::lachen001::lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
10-06-2011, 07:35 AM
அற்புதமான கவிதை ..இப்புவிதனில் நிலவென்று பலவிருக்க கையில் எட்டாத தூரத்தில் எட்டிய நிலவொன்றை தேடி சென்ற அவன் நிலை அபத்தம் தான் ...

M.Jagadeesan
10-06-2011, 07:36 AM
கவிதைக்குப் பொய் அழகு என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா தாமரை அவர்களே!

govindh
10-06-2011, 08:54 AM
பூமியில் நிலவு....!
கவி நன்று.

பாராட்டுக்கள் ஐயா.

ஆதி
10-06-2011, 08:55 AM
நிலவில் இருந்து பூமியை பார்த்தால், நிலவைக்காட்டிலும் பூமி 16 மடங்கு வெளிச்சமாய் இருக்குமாம், விஞ்ஞானம் சொன்னது..

காரணம் ஜெகதீசன் ஐயா சொன்னதாக இருக்குமோ, கோலநிலவுகளால் பூமி வெளிச்சமாக தெரிகிறதோ!!

வாழ்த்துக்கள் ஐயா...

M.Jagadeesan
10-06-2011, 09:18 AM
ஜெய், ஆதன், கோவிந்த் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

தாமரை
10-06-2011, 10:11 AM
கவிதைக்குப் பொய் அழகு என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா தாமரை அவர்களே!

நையாண்டி அதை விட அழகு என்பது தங்களுக்கும் தெரியுமல்லவா?

sarcharan
10-06-2011, 11:17 AM
மொட்டை மாடியில் அழகி நின்றால்
நிலவென்று
விரியும் விழிகள்,
மாடியில் மொட்டை அழகன் நின்றால்
மட்டும் கூசுவது..,
ஏன்... ஏன்... ஏன்... :confused:

அண்ணன் தலை சொட்டயோ?


அதீதப் பிரதிபலிப்பினால் இருக்கலாமோ?:)
:aetsch013: