PDA

View Full Version : ஒரு கைப்பிடி இரவு!



ரசிகன்
06-05-2011, 10:45 AM
யுத்த களத்தின்
புழுதியில் நசுக்கப்படுகிறது
என் இரவுகள்!

சுட்டெரிக்கும் நிலவில்
பரிமாறப்படும் நிழலில்
நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!

மந்திரக்காரியாகவே
தந்திரங்களை முன் வைக்கிறாய்!
சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
நிர்வாணமாகிறது எனதறை!

நிபந்தனையோடு
கரையத் தொடங்குகிறாய்...
வெற்றியில் பாதியும்
தோல்வியில் பாதியும் எனக்கு!

அச்சத்தின் வாடையோடு
களமிறக்கப்படுகிறது
கூர் தீட்டப்பட்ட வாளோடு புரவி!

அக்னி
06-05-2011, 11:06 AM
கூர்தீட்டப்பட்ட வாளோடு புரவி...
வாளேந்தப் போவது யாரோ...

உணர்வுகளின் பெருக்கத்தில்
குறுகிப் போகும் இரவு...

இந்த இரவு குறுகிப்போனதற்கான
உணர்வு புரியாமல் நான்...

கீதம்
07-05-2011, 12:58 AM
வெற்றிதோல்வியில் சரிபாதி
என்றானபின் வீண்யுத்தம் எதற்கு?
சமரசமாகிவிடுங்களேன்,
சாத்தானோடும், இரவுகளோடும்!

கலாசுரன்
09-05-2011, 07:43 AM
சுட்டெரிக்கும் நிலவில்
பரிமாறப்படும் நிழலில்
நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!

இந்த வரிகளில் பயணித்த எனக்கு பிரம்மிப்பே உருவானது ...!!!
நல்ல சொல்லாடல்


மந்திரக்காரியாகவே
தந்திரங்களை முன் வைக்கிறாய்!
சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
நிர்வாணமாகிறது எனதறை!


நிர்வாணமாக்கப்படும் கவிஞனின் அறை மிகுந்த ஒரு தாக்கத்தை தந்தது சதீஷ்...!

இவ்வகை போர்களில் திருப்தி வரவே வராது தான் அதனால் அது தொடரட்டும் :)

வாழ்த்துக்கள்