PDA

View Full Version : சாளரங்கள்



கலாசுரன்
06-05-2011, 03:53 AM
*
ஒரு
மேசையின்
மேல்ப்பகுதியை
முன்வைத்தபடி
அமர்ந்திருக்கிறேன்

அதன் முகத்தில்
ஒன்றின் மேல் ஒன்றாக
பல சாளரங்களை
இரு விரலசைவுகளில்
திறந்து வைக்கிறேன்

புனைவுகள்
சித்திரங்கள்
வரலாறுகள்
சிந்தனைகள்
தகவல்களென

ஒவ்வொரு சாளரமும்
தங்களை
அறிமுகப் படுத்திக்கொண்டன

எதிலும்
திருப்தி வராத மனமுமாய்
திறந்தவை
ஒவ்வொன்றாய்
மூடிவிட்டு

மேசை முகத்தையும்
கீழிழுத்து
மூடினேன்

சலிப்புடன்
திரும்பிப் பார்க்கிறேன்

திறந்திருக்கும்
என் வீட்டுச் சாளரம் வழியாக
எட்டிப்பார்த்த
நட்சத்திரங்கள்
குதூகலமாகக்
கண் சிமிட்டின..
*
***
கலாசுரன்

Nivas.T
06-05-2011, 06:20 AM
நினைவுச் சாளரம்
உண்மைச் சாளரம்
ஒப்பீடு அருமை
கலாசுரன்

நலக் கவிதை

அக்னி
06-05-2011, 11:26 AM
இரவின் இருட்டுக்குள்ளிருந்து கசியும் ஒளியும்
தண்மை தடவி உள் நுழையும் தென்றலும்
கணினியின் சாளரத்தில் சாரமற்ற உப்பாக...

அருமை கலாசுரன்...

Ravee
06-05-2011, 12:37 PM
கணினியின் சாளரங்கள் கண் எரிச்சல் கொடுப்பதாக கருதி கவனம் திருப்ப கண் கொள்ளை போனதோ நண்பரே .... நல்ல கவிதை

கீதம்
07-05-2011, 12:45 AM
கணினியைக் கையாளும் காரியமது
கச்சிதமாய்க் கையாண்ட கவியமுது.

வீட்டுச் சாளரம் வழியே
விழிபார்த்தவை யாவும்
தாரகைகளாய்ப் போனதில்
தர்மசங்கடம் ஏதுமில்லை.

அன்றி காரிகையாயிருந்திருப்பின்,
கவியின் போக்கு இன்று
கவலைக்கிடமாகியிருந்திருக்குமோ?:)

M.Jagadeesan
07-05-2011, 01:15 AM
கதவைத் திறந்து வையுங்கள்
காற்றுவரும் என்றான் ஒருவன்
காற்று மட்டுமா வந்தது?
காரிகையும் சேர்ந்து வந்தாள்.

கவிதை நன்று.

lolluvathiyar
07-05-2011, 12:56 PM
நாம் ரசிக்க வேன்டியது இயற்கை நமக்கு தந்த பொக்கிசங்களான நிலவு நட்சத்திரம் வானம் அனுபவிக்க வேன்டியது காற்று மழை வெய்யில்.

இப்படி அறுபுதமானதை விட்டு விட்டு கதவடைத்து ஏசி போட்டு மானிட்டர்ல பனி பொழியரதை பாத்தா கூட என்ன இன்பம் கிடைச்சற போகுது என்ற தத்துவத்தை மிக அழகாக சொல்லிய கலாசுரனை பாராட்டி 100 ஈபணம் கொடுத்து விட்டு நானும் நிலவை கான செல்கிறேன்.

முக்கிய குறுப்பு
(இவருக்கு என்னால வழங்க முடியல உதவியாளர்கள் யாராவது என் ஐகேசில் 100 எடுத்து இவர் அக்கௌவுன்டுக்கு மாத்துங்கோ)

கலாசுரன்
16-05-2011, 08:52 AM
பின்னூட்டத்திற்கு நன்றி நிவாஸ் :)

ஆம் அது சாரமற்ற உப்பு தான், நன்றி அக்கினி..:)

கண்கள் கொள்ளைபோனது உண்மைதான் ரவி, அவைகளைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன், பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ..:)

கவலைப் படுவது தீர்வாகாது என்று நினைக்கிறேன்
ஆனால் எடுத்துச் சொல்ல துணிந்த பின் அது ஒரு செய்தி மட்டுமே..:) மிக்க நன்றி கீதம்..:)


நன்றி ஜெகதீசன் ..:)

மிக்க நன்றி லொள்ளு வாத்தியார், நீங்கள் சொன்ன விதத்திலும் சிந்திக்க வேண்டியிருக்கிறது ..:)