PDA

View Full Version : கோரிக்கை- ?



rajureva
30-04-2011, 12:09 PM
மின்சாரம் கேட்டோம்
தீப்பட்டி கொடுத்தார்கள்
வயிறு பற்றி எறிந்தது

M.Jagadeesan
30-04-2011, 12:41 PM
மின்சாரம் கேட்டோம்
தீவட்டிக் கொடுத்தார்கள்
வீடு பற்றி எரிந்தது.

p.suresh
01-05-2011, 01:29 AM
குடும்பத்தலைவி1:துவைச்ச துணிய காய வைக்க இப்பல்லாம் நாங்க கம்பி கட்றதே இல்ல....

குடும்பத்தலைவி2:பின்ன....

குடும்பத்தலைவி1:கரெண்ட் கம்பியிலேயே துணியக் காய வைச்சிக்கிறோம்.....

குடும்பத்தலைவி2:...!!!!

முரளிராஜா
01-05-2011, 03:43 AM
தீப்பெட்டியாவது கொடுத்தோமேனு சந்தோசபடுங்க:D:D

ஓவியன்
01-05-2011, 04:49 AM
மின்சாரம் கேட்டோம்
தீப்பட்டி கொடுத்தார்கள்
வயிறு பற்றி எறிந்தது

இலவசமாக வந்தது,
பாதி கூலிக்கு
நம் உழைப்பில்
உருவான தீப்பெட்டி...!!

கீதம்
01-05-2011, 09:02 AM
மின்சாரம் கேட்டோம்
தீப்பட்டி கொடுத்தார்கள்
வயிறு பற்றி எரிகிறது.

மூன்று வரிகளில் முடக்கிவிட்டீர்கள் இலவசங்களின் அடிப்படையிலான இன்றைய வாழ்க்கையின் அவலத்தை. கவிதை நன்று.

தீக்குச்சியின் உரசலில் பற்றியெரியும் பின்னூட்டங்களும் பிரமாதம். பாராட்டுகள்.

selvaaa
02-05-2011, 01:24 AM
இலவசம் என்னும்
பூட்டிக்கிடக்கும் கருவறையின்
சாவி நீ - அதனை

திருட முயற்சிக்கும்
கள்ளச் சாவியை (இலஞ்சம்)
ஒழித்துவிட்டால்

அதுவும் சுகமே!
நாம் செய்த உதவி அல்லவா?