PDA

View Full Version : புறநானூறு 2011



M.Jagadeesan
30-04-2011, 12:03 PM
புறநானூறில் 312ஆம் பாடலை பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் பாடியுள்ளார்.இச்செய்யுளில் மறக்குடி மகள் ஒருத்தியின் கூற்றாகத் தாய், தந்தை,கொல்லன்,வேந்தன் மற்றும் ஆண்மகனுடைய கடமைகள் உணர்த்தப்படுகின்றன. அப்பாடல் வருமாறு.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
'ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

மகனைப் பெற்று வளர்த்தல் என் கடமை.அவனைக் கல்விகற்ற சான்றோனாக ஆக்குவது தந்தையின் கடமை.அவனுக்கு வேல் முதலிய படைக் கருவிகளைச் செய்து தருவது கொல்லனின் கடமை. நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமை.ஒளிபொருந்திய வாளைக் கையில் ஏந்திப் போர்செய்து ஆண் யானைகளைக் கொன்றுவருதல் காளையான ஆண்மகனின் கடமையாகும்" என்பது இச்செய்யுளின் கருத்து.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பெற்ற பாடல் இது. இக்கருத்து அக்காலச் சூழலுக்கு ஏற்ற கருத்தாக இருக்கலாம். ஆனால் இக்காலத்திற்கு ஏற்றதாவென்று எண்ணிப் பார்க்கவேண்டும்.எனவே இக்காலத்திற்கு ஏற்றவகையில் இருக்க வேண்டுமானால் இப்பாடலில் சிலமாற்றங்கள் தேவை. அப் பொன்முடியார் இன்று இருப்பாரானால் அவர் பின்வருமாறு பாடியிருப்பாரோ?

" ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் வங்கியின் கடனே
கைபேசி கொடுத்தல் கம்பெனியின் கடனே
இலவசம் நல்கல் வேந்தர்க்குக் கடனே
பெற்றவர் தம்மை முதியோர்
காப்பகம் சேர்த்தல் காளைக்குக் கடனே.

Nivas.T
30-04-2011, 12:05 PM
:lachen001::lachen001::lachen001:

M.Jagadeesan
30-04-2011, 12:37 PM
நன்றி நிவாஸ்!

முரளிராஜா
01-05-2011, 03:41 AM
உங்கள் கற்பனை அருமை ஜெகதீசன் சார்

கீதம்
01-05-2011, 08:44 AM
கற்பனை ரசிக்கச் செய்தாலும் கடைசி வரிகளில் இருக்கும் உண்மை சுடுகிறது. பெற்ற கடன் என்பது இதுதானோ?

M.Jagadeesan
01-05-2011, 09:10 AM
மு.ரா, மற்றும் கீதம் ஆகியோருக்கு நன்றி!