PDA

View Full Version : காலம் கடந்தபின்



M.Jagadeesan
29-04-2011, 03:48 PM
குப்பைமேட்டில்
காற்றுப்போன பலூன்
கவனிப்பாரற்றுக் கிடந்தது.

நேற்று
படித்த செய்தித்தாளில்
பஜ்ஜிவைத்துக் கொடுத்தான்
கையேந்திபவன் உரிமையாளன்.

ஓய்வுபெற்ற பின்
அறுவடை இல்லாத காரணத்தால்
அரிப்பெடுத்தன அரசு ஊழியரின் கைகள்.

ஏப்ரல் மாதத்தில்
ஏழடுக்குப் போலீஸ் பாதுகாப்பில்
எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்
மே13க்குப் பிறகு
தேர்தல் கமிஷன் அலுவலகத்தில்
குவியல் குவியலாக
குப்பைகளுக்கு மத்தியில்.

அமரன்
30-04-2011, 08:09 AM
ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது பழமொழி.

பழங்கஞ்சியின் குளுச்சியும் ருசியும் பருகியவர்கள் அறிவார்கள்.

பழய பத்திரிக்கை படிக்கும் சுகம் வித்தியாச அனுபவம்.

வாசிப்பவருடைய இதழைக் குவித்தும் விரித்தும் நீட்டியும் அது செய்யும் சேட்டைகள் குழந்தையை ஞாபகமூட்டும்.

ஆறப்போட்ட வாக்கு எண்ணிக்கையும் அப்படிப் போல.

குப்பையில் கிடக்கும் குன்றாமணி.

சமகாலத்தை வடிக்கும் கவிதைக்கு பாராட்டு ஜெகதீசன் அய்யா.

M.Jagadeesan
30-04-2011, 08:10 AM
நன்றி அமரன்!