PDA

View Full Version : மந்திரம்! - குமுதம் (4-5-2011) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
27-04-2011, 05:53 AM
மந்திரம்!

ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால் முதல் முறையாக அவள் அம்மா வீட்டுக்கு சென்றுவிட,
அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு தெரியாமால் படாத பாடு பட்டுவிட்டான்.
சட்டை எடுக்க பிரோவை திறக்க, முன்னாடி வந்து விழுந்தது ரதியின் டைரி.

எடுத்து படிக்க ஆரம்பித்தான்...

''அலுவலகம் செல்ல அவசர குளியல் போட்டு கிளம்பும் உன்னை, தலை முதுகு தேய்த்து,
குளிப்பாட்டி உன் தலையை என் முந்தானையால் துவட்டும்
என் கடைமையை செய்ய நேரம் இல்லையே என்ற வருத்தமடா எனக்கு''

என்னடி.....ன்னு நீ என்னை கூப்பிடும் போது என் உடம்பில் உள்ள
அனைத்து செல்களும் புதிதாய் பிறந்தது போன்ற உணர்வு எனக்குள். '

''மாமான்னு நான் கூப்பிடும்போது சிலிர்க்கும் உன் கண்களையும்
மலரும் உன் முகத்தையும் பார்க்க கோடி கண்கள் வேண்டுமடா''

''எனது கோபமோ உனது கோபமோ நீர்குமிழி மாதிரி சிறிது நேரத்தில் முடிந்துவிடும்,
அதனால் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு மட்டும் போகக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.
ஏன்னா நான் இல்லாமல் நீ சிரம படக்கூடாது என்றுதான்டா''

ராமுவுக்கு ரதியின் அன்பு கலந்த வரிகளை படித்ததும் சாட்டையால் அடித்தார் போல உணர்ந்தான்.
உடனே கிளம்பினான், அலுவலகம் அல்ல அந்த தேவதையின் அம்மா வீட்டுக்கு... தேவதையை அழைத்து வர...


http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_3rd_F.jpg

Nivas.T
27-04-2011, 07:18 AM
கதை நல்லாருக்கு கமலக்கண்ணன்

பாராட்டுகள் + வாழ்த்துக்கள்

க.கமலக்கண்ணன்
27-04-2011, 07:40 AM
நன்றி Nivas.T உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்...

ஓவியன்
27-04-2011, 07:47 AM
நலமா கமல கண்ணன், வீட்டில் எல்லோரும் நலம் தானே....

உங்கள் மீதான உங்களது மனைவியின் புரிந்துணர்வும் அன்பும் ஏற்கனவே உங்களது முன்னைய பல பதிவுகள் மூலம் நாமறிந்ததே, அந்த புரிந்துணர்வின் ஒரு பகுதி இந்த கதையின் கருவிலும் பங்கு செலுத்தியிருக்கின்றதென நான் நம்புகிறேன்.

அழகான கரு, இல்லறத்தை நல்லறமாக்கும் புரிந்துணர்வை உணர வைக்கும் கதை, அது பிரபல சஞ்சிகை ஒன்றில் வெளிவந்ததையிட்டு உங்களைப் போல எனக்கும் கொள்ளை மகிழ்சி, இன்னமும் இந்த குமுதம் இதழ் நானிருக்கும் நாட்டுக்கு வந்து சேரவில்லை, வழக்கமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் அந்த வாரத்துக்குரிய சஞ்சிகைகளை என்னால் பெற முடியும். அதனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்காகக் காத்திருக்கின்றேன், உங்களது கதையினை என் நண்பர்களிடம் காட்டி இதுவும் என் நண்பர் ஒருவர் எழுதிய கதைதான் என சொல்லி மகிழ....

க.கமலக்கண்ணன்
27-04-2011, 11:12 AM
நன்றி ஓவியன் அனைவரும் நலம். நீங்கள் நலமா? உங்களின் துணைவியார் நலமா?


உங்கள் மீதான உங்களது மனைவியின் புரிந்துணர்வும் அன்பும் ஏற்கனவே உங்களது முன்னைய பல பதிவுகள் மூலம் நாமறிந்ததே, அந்த புரிந்துணர்வின் ஒரு பகுதி இந்த கதையின் கருவிலும் பங்கு செலுத்தியிருக்கின்றதென நான் நம்புகிறேன்.

மனைவியின் அன்பும் புரிதலும் எனக்கு பலம். இந்த கதையின் ஒரு பகுதி கரு அல்ல, முழுவதுமே அவர்கள்தான்...

எல்லாவற்றையும் எழுதிகிறீர்களே என்னை வைத்து ஒரு கதை எழுதுங்கள் என்று கட்டளையிடாமல் என்னை வைத்து ஒரு கதை எழுத கூடாதா என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததன் விளைவு

ஆனால் அந்த தேவதை கேட்பதற்கு முன்பே இந்த கதையை எழுதி முடித்து அவரிடம் காண்பிக்க வைத்திருந்தேன். அவர்கள் கேட்டபோது இதைத்தான் Made of each other என்று சொல்வார்களோ என்று நினைத்தேன்.(ஆங்கிலத்திற்கு மன்னிக்க)

உங்களின் அன்புக்கு மிக்க நன்றிகள்.


உங்களது கதையினை என் நண்பர்களிடம் காட்டி இதுவும் என் நண்பர் ஒருவர் எழுதிய கதைதான் என சொல்லி மகிழ....


அதற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்துடன்...

கீதம்
28-04-2011, 08:16 AM
விட்டுக்கொடுத்தலே அன்பான இல்லறத்தின் அஸ்திவாரம். அதை அழகாக எடுத்தியம்புகிறது கதை. சொற்சிக்கனம் கையாளப்பட்டிருந்தாலும் சொல்லவந்ததை நிறைவாகவே சொல்லிமுடித்திருக்கிறீர்கள். நல்லதொரு கதையைப் படைத்ததற்கும் அது குமுதம் இதழில் வெளிவந்ததற்கும் பாராட்டுகள் கமல கண்ணன்.

க.கமலக்கண்ணன்
28-04-2011, 10:23 AM
விட்டுக்கொடுத்தலே அன்பான இல்லறத்தின் அஸ்திவாரம்.

உண்மைதான் கீதம்

விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை, கெட்டு போகிறவர்கள்

விட்டு கொடுப்பதில்லை...

உங்களின் பாராட்டுக்கு நன்றிகள் பல