PDA

View Full Version : சுதந்திரம் நாடிப் பறக்கும், ஈழத்தின் பாசப்பறவை



selvaaa
26-04-2011, 11:16 PM
http://padukai.prophpbb.com/download/file.php?id=327

சுதந்திரத் தாகப் பெண்ணின் கவிதையின் பின்னுட்டமாக

கவிதை கண்டேன்! கனா கண்டேன்!
கண் சுவர்களில் வீக்கம் கொண்டேன்!

கடல் சூழ்ந்த மேடையிலே பிணம் கண்டேன்!
கட்டிளம் காளையா? வேல் ஏந்திய வீரனா?
குருத்து வாழையடா! நாளைய செல்வமடா!

காற்றோடு பறக்கும் மேகங்களே! சேதி சொல்வாயா!
காவலன் மறைந்த சேதி சொல்வாயா!
கடலாய் பரந்து கிடக்கும் பிணச் சேதி சொல்வாயா!
குருதிக ளில்லா எம்பிள்ளைச் சேதி சொல்வாயா!
குலம் ஒன்று அழியும் சேதி சொல்வாயா!

காலடித் தொலைவில் தூங்கும் தாயிடம் சொல்வாயா
காதுபடும் தூரத்தொலை உறவுகளிடம் சொல்வாயா
கடல் கடந்து வாழும் அண்ணனிடம் சொல்வாயா

காதறுந்த மூழி வலிச் சொல்வாயா
கட்டில் இல்லா துயரம் சொல்வாயா

கண்ணீராய் சிந்துகிறேன்
குதிரமாய் கொட்டுகிறேன்

காலைப் பகலவனே எழுந்து வா
குருதிக்குள் மிதக்கும் காலைப் பகவனே எழுந்து வா

காதல் மறைந்த பூமியிலே
கருஞ்சுடராய் நிற்கும் பகலவனே எழுந்து வா

கருப்புத் தினம் பிறக்கும் முன்னே
சுதந்திரக் காற்றை சுவாசிக்க எழுந்து வா


இவன்
படுகை.காம் ஆதித்தன்.

Credit : http://www.padukai.com/topic15233.html