PDA

View Full Version : திடீர்க் கதைகள் (பாகம்-1)p.suresh
26-04-2011, 02:09 PM
சிறுகதைகளை பொறுமையுடன் படிக்க கால அவகாசம் இல்லாதவர்களுக்காக முளைத்தது இந்த திடீர்க்கதை

இந்த கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் என் கற்பனையே

திகில் கதை

தலைப்பு:"இறுதிநாள்"

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்,இலங்கையும் மோதிக் கொண்டிருந்தன.அவன் தன் வீட்டில் சோபாவில் அமர்ந்து நேரடி ஒளிப்பரப்பைப்

படப்படத்துக் கொண்டு பார்த்திருந்தான்.

"உங்க இதயம் ரொம்ப வீக்கா இருக்கு.tensionஏ ஆகக் கூடாது" என்று டாக்டர் சொன்னதை உதாசீனம் செய்தான்.

tvல் ஸ்லிங் பவுலர் மலிங்காவின் கையிலிருந்து அம்புபோல விடுப்பட்ட பந்து off stumpக்கு சற்றே விலகி விழுந்தபின், டெண்டுல்கரின் பேட்டில் முத்தமிட்டு நேராக

சங்ககாராவின் கையுறைக்குள் தஞ்சம் புகுந்தது.அரங்கமே நிசப்தம்.

அவனுக்கு கண்கள் இருள,நாக்கு வரள,விறுவிறுவென வேர்வை வியர்க்க, நெஞ்சுக்குள் "சுளீர்" என்று வலித்தது.

"டொக்....டொக்....டொக்....
யாரோ கதவைத் தட்டும் சத்தம்.

மிகவும் சிரமப்பட்டு நெஞ்சை அமுக்கியப்படி,

"யாரது.....?" என்றான்

"மரணம்" என்றது குரல்.


க்ரைம் கதை

தலைப்பு:"அனுதாப அலை"

வங்கக்கடலே இடம் பெயர்ந்ததோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் வெள்ளம்.கூட்டம் அலையென ஆர்ப்பரித்தது.இறகுகள் கட்சித்தலைவன் காட்டுயானைப்

போல மைக்கின் முன் பிளிரிக்கொண்டிருந்தான்.

"தமிழ் என் உயிர்மூச்சு.தமிழ் மண்ணே என் சுவாசம்.தமிழர்க்காக,தமிழுக்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்" என்று கூறியபடியே யாரும் சற்றும்

எதிர்ப்பார்க்காத போது தன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து தன் வயிற்றுக்குள் பாய்ச்சினான்.கூட்டமே அதிர்ந்தது.

மேடைக்கு கீழே,முன்பே சொல்லி வைத்தப்படி மருத்துவர்க்குழு தயார்நிலையில் இருந்தது.

தேர்தல் முடிவுகள்

இறகுகள் கட்சி அமோக வெற்றி


நகைச்சுவைக் கதை

தலைப்பு:"நான் ஒரு தடவ சொன்னா....."

தேர்தல் நாள் ஏப்ரல் 13, பூத் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது. மக்கள் வரிசையாக ஒட்டளிக்க காத்திருந்தனர்.

திடீரென்று அப்போது உச்சநடிகர் விறுவிறுவென பூத்துக்குள் நுழைந்தார்.

"தள்ளுங்கப்பா..." போலீஸ் கெடுபுடி. அவருக்கு அனைவரும் வழிவிட்டனர்.

வீடியோக்கள் படம்பிடிக்க, கேமராக்கள் மின்ன அனைவருக்கும் போஸ் கொடுத்தபின்

அவர் ஒட்டு மிஷினில் இரட்டை இலைப் பொத்தானை

ஒருமுறை அமுக்க நூறு ஓட்டுக்கள் விழுந்தன

தேர்தல் அதிகாரி மயங்கி விழுந்தார்.

ராஜாராம்
26-04-2011, 03:37 PM
உச்சநடிகரையே வம்புக்கு இழுத்திட்டுயே சுரேஷு.
திடீர்கதைகள் நன்றாக உள்ளது தொடரட்டும்

அக்னி
26-04-2011, 06:16 PM
நொடிக்கதைகள்... எனலாமா...

நீட்டி முழக்கி எழுதினாலும், இந்த மூன்று கதைகளும் சொல்லியவற்றை என்னாற் சொல்ல முடியாது...

சுருங்க... அபாரம்...

தொடரட்டும்...

தூயவன்
26-04-2011, 07:00 PM
சூப்பர் அப்பு.. தொடருங்கள்

கீதம்
27-04-2011, 12:52 AM
மூன்று கதைகளும் மூன்று முத்துக்கள்.

முதலாவது யதார்த்தம். இதயக்கதவைத் தட்டிய மரணம். மிக அருமை.

இரண்டாவது... சுந்தர்.சி நடித்த ஏதோ ஒரு படத்தில் இதுபோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கத்திக்குத்து நடக்கும் சம்பவம் பார்த்ததாய் நினைவு. இப்படியும் நடக்கலாம் எதிர்காலத்தில் அரசியல் நாடகங்கள். எதுவும் சொல்வதற்கில்லை.

மூன்றாவது.... யதார்த்தம் மீறிய நகைச்சுவை என்றாலும் நினைத்து நினைத்து ரசிக்கமுடிந்தது. சின்னத்தைச் சொல்லாமல் விட்டிருந்தால் கதை எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.:)

பாராட்டுகள் சுரேஷ்.

p.suresh
27-04-2011, 02:47 AM
நிறை,குறைகளை பின்னூட்டமிட்டு பாராட்டிய ராஜாராம்,அக்னி,தூயவன் மற்றும் கீதம் அவர்களுக்கு நன்றி

முரளிராஜா
27-04-2011, 02:54 AM
வித்யாசமான முயற்சி கதை மூன்றுமே மிக அருமை சுரேஷ்
இன்னும் இது போன்ற கதைகளை இதே திரியில் பதிவிடுவாய் என நம்புகிறேன்.

(வரவர புத்திசாலியாகி கொண்டிருக்காயே அது எப்படி):lachen001:

M.Jagadeesan
27-04-2011, 03:11 AM
முதல் கதை விறுவிறுவென்று இருந்தது.
இரண்டாவது கதை சுறுசுறுவென்று இருந்தது.
மூன்றாவது கதை கிறுகிறுவென்று இருந்தது.

ஓவியன்
27-04-2011, 06:11 AM
தமிழுக்கு இவ்வாறான ஆரோக்கியமான கதைகளை உருவாக்கும் பாணியினைக் கொடுத்தது நம் எல்லோரது மனம் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். முத்திரைக் கதைகள், வரிக்கதைகளென அவர் அறிமுகப் படுத்தியது ஏராளம்...

அத்தகைய பாணியினை பயன்படுத்தி கண்முன்னே நடந்த, கேட்ட, பார்த்த சம்பவங்களை கற்பனையோடு கலந்து படைத்திட்ட இந்த குட்டி, குட்டிக் கதைகள் அருமை...

தொடரட்டும் சுரேஸ் உங்களது குட்டிக் கதைகளின் அணிவகுப்பு.

Nivas.T
27-04-2011, 08:25 AM
விறுவிறுவென்று போகும் சிறு சிறு கதைகள்
கருத்தைமட்டும் கவனமாகக் கொண்டு
கச்சிதமாய் அமைக்கப்பட்டுள்ளது

பாராட்டுகள் சுரேஷ்

sarcharan
27-04-2011, 10:28 AM
வீடியோக்கள் படம்பிடிக்க, கேமராக்கள் மின்ன அனைவருக்கும் போஸ் கொடுத்தபின்

அவர் ஒட்டு மிஷினில் இரட்டை இலைப் பொத்தானை

ஒருமுறை அமுக்க நூறு ஓட்டுக்கள் விழுந்தன

தேர்தல் அதிகாரி மயங்கி விழுந்தார்.

உங்க புனை பெயர் என்ன அன்புமணியா? நீங்களும் இவரை வம்புக்கு இழுக்குறீங்களே..

p.suresh
28-04-2011, 10:38 AM
நன்றி முரளி,ஜகதீசன் அய்யா,ஓவியன்,நிவாஸ்,மற்றும் சராசரண்.

த.ஜார்ஜ்
28-04-2011, 03:22 PM
முதல் கதை அருமை. நல்ல முடிவு.

ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்ல கேட்டிருக்கோம். இப்ப பொத்தானை அமுக்கினாலும் அப்படியா..?:D:D:D