PDA

View Full Version : பாதிக்கப்பட்டவன்!



ரசிகன்
26-04-2011, 10:22 AM
தன்னை அறியாது
நீ முன்னிலை படுத்தப்படுகிறாய்
நினைவு ரோட்டில்....

இரு புற சாலையோர மரங்கள்
உன்னை
கண்பொத்தி அழைத்து செல்கின்றன...
ஊர்திகள்
உன் காது பொத்தி வைத்திருக்கின்றன!

டயர் பஞ்சர் ஒட்டும் கடையில்
முகவரி விசாரிக்கிறாய்...
கிட்டத்தில் இருக்கும் தேநீர் கடைக்கு...

இடம் நெருங்கியதும்
தனிமை படுத்தப்படுகிறாய்...
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்...
அடுத்து ஒரு தேநீர்...
கூடவே ஒரு சிகரட்!

புரியாத தெளிவோடு
இன்றைய செய்தித்தாளை புரட்டுகிறாய்...
பக்கத்துக்கு பக்கம்
உன்னை தொடர்புபடுத்தியே இருக்கிறது
எல்லா செய்திகளும்!

தற்கொலை...
அகால மரணம்....
காணாமல் போனவர் பற்றிய குறிப்பு...!

ஆதவா
26-04-2011, 10:35 AM
இப்படித்தான் ஊருக்குள்ள நிறையபேரு அலையறாங்களாம்!!
நல்ல கவிதைங்க..
ரெண்டே இரண்டு மாறுதல் இருந்தால் நன்றாக இருக்கும்..

நினைவு ரோட்டில் - நினைவுச் சாலையில்..
டயர் பஞ்சர் ஒட்டும் கடை - உலக்த்தில் எங்குமே டயருக்கு பஞ்சர் ஒட்டமாட்டார்கள்!! :D

sarcharan
27-04-2011, 10:47 AM
முக்கு ரோட்டுல செல வெக்காம விடமாட்டங்க போல...:icon_ush:

Nivas.T
27-04-2011, 12:06 PM
பாதிப்பு கொஞ்சம் அதிகம்தான்
ஆனா செய்தித்தாள்ல வர அளவுக்கு இல்ல
அதுவரைக்கும் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதான்

நல்லாருக்கு ரசிகரே

கீதம்
09-05-2011, 02:36 AM
ஒற்றைவரியேனும் எழுதிவைத்துவிட்டு வந்திருக்கலாம் என்று எண்ணந்தோன்றும் ஓடிவந்தவனின் சிந்தனைக் குறிப்புகளோ இவை?

கவி நன்று, ரசிகன்.

கலாசுரன்
09-05-2011, 07:48 AM
புரியாத தெளிவோடு
இன்றைய செய்தித்தாளை புரட்டுகிறாய்...
பக்கத்துக்கு பக்கம்
உன்னை தொடர்புபடுத்தியே இருக்கிறது
எல்லா செய்திகளும்!

அட்டகாசம் சதீஷ் :)