PDA

View Full Version : நடுத்தெரு நாராயணன்



M.Jagadeesan
25-04-2011, 05:55 PM
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தெரு வழியே நான் நடந்துசென்று கொண்டிருந்த போது அங்கிருந்த விளம்பரம் ஒன்று என் கண்ணில் பட்டது.

"எட்டு ரூபாய்க்கு உங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

எட்டு ரூபாய் செலுத்திவிட்டு நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டேன். என் பெயரைப் பதிவு செய்துகொண்டனர்.

அங்கிருந்த ஓர் அறையினுள் நுழைந்தேன்.அங்கே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது ஒரு கேள்வியும். வலதுபக்கக் கதவின் மீது மற்றொரு கேள்வியும் இருந்தது. இடது பக்கக் கதவின் மீது " நீங்கள் சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா?".என்றும் வலது பக்கக் கதவின்மீது 'அரசு வேலையில் சேர விரும்புகிறீர்களா?" என்றும் எழுதப்பட்டிருந்தது.சுயதொழில் செய்ய விருப்பம் இல்லாததால் வலது பக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது "லஞ்சம் வாங்குவேன்" என்றும் வலதுபக்கக் கதவின் மீது "லஞ்சம் வாங்கமாட்டேன்" என்றும் இருந்தது. வலதுபக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது " இளமையில் திருமணம் " என்றும் வலதுபக்கக் கதவின் மீது "முதுமையில் திருமணம்" என்றும் இருந்தது. வலதுபக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது 'ஒரு குழந்தை" என்றும் வலது பக்கக் கதவின் மீது "பல குழந்தைகள்" என்றும் இருந்தது. இடதுபக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது "வேலைக்குச் செல்லும் மனைவி" என்றும் வலது பக்கக் கதவின் மீது "வீட்டில் இருக்கும் மனைவி" என்றும் இருந்தது. வலது பக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது.இடதுபக்கக் கதவின் மீது "அவசரத் தேவைக்குக் கடன் வாங்குவேன்" என்றும் வலதுபக்கக் கதவின் மீது "எப்பொழுதும் கடன் வாங்கமாட்டேன்" என்றும் இருந்தது.வலதுபக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது " சேமிப்புப் பழக்கம் தேவை" என்றும் வலதுபக்கக் கதவின் மீது " சேமிப்புப் பழக்கம் தேவையில்லை" என்றும் இருந்தது. வலதுபக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது " குழந்தைகளுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம்" என்றும் வலதுபக்கக் கதவின் மீது " குழந்தைகளுக்குக் காதல் திருமணம்" என்றும் இருந்தது.இடதுபக்கக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் மற்றொரு அறை இருந்தது. இடதுபக்கக் கதவின் மீது " சொந்தவீடு " என்றும் வலதுபக்கக் கதவின் மீது " வாடகை வீடு " என்றும் இருந்த*து. வலதுபக்கக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே இரு கதவுகள் சாத்திய நிலையில் மற்றொரு அறை இருந்தது.இடதுபக்கக் கதவின் மீது "உங்கள் மனைவி சுமங்கலியாக இறக்க விருப்பமா?" என்றும் வலதுபக்கக் கதவின் மீது "உங்கள் மனைவி விதவையாக இறக்க விருப்பமா?" என்றும் இருந்தது. இடதுபக்கக் கதவைத் திறந்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஆம். மீண்டும் நான் நடுத்தெருவிற்கே வந்துவிட்டேன்.

அங்கிருந்த ஓர் அறிவிப்பில்

" நீங்கள் இருக்கவேண்டிய இடம் நடுத்தெரு தான். வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள அஞ்சும் நீங்கள் முன்னேற வாய்ப்பில்லை. உங்களுக்கு " நடுத்தெரு நாராயணன்" என்ற பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

ஜானகி
25-04-2011, 06:20 PM
கதையைத் தொடர்ந்து நாமும் போனால், நடுத்தெருவானது நாராயணர்களால் நிரம்பிவழிவதைக் காணலாம்....!

கீதம்
26-04-2011, 01:54 AM
பிரச்சனையில்லாத வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். பிரச்சனையே அதில்தான் என்று இப்போதல்லவா தெரிகிறது. சவாலைச் சந்திக்கும் திராணியற்ற மனிதர்களுக்கு நல்ல சவுக்கடிதான் கதை.

வித்தியாச சிந்தனையைக் கதையாக்கியவிதம் அருமை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
26-04-2011, 02:37 AM
பாராட்டிய கீதம், ஜானகி ஆகியோருக்கு நன்றி!!

lolluvathiyar
26-04-2011, 10:54 AM
இப்படி ரூம் ரூமா போய் வெளிய வர முடியாக சிக்கி தவிப்பத்தற்க்கு பதில் அட்லீஸ்ட் நடுத்தெருவுக்காவது வந்து சேர்ந்து வெளியுலகம் பார்த்தீங்க என்று சந்தோச பட்டுக்கோங்க.
கதை சூப்பர்

ஆதவா
26-04-2011, 11:00 AM
வாழ்க்கை ஒரு போர்க்களம்!
வாழ்ந்துதானே பார்க்கணும்
போராடி வெல்லடா!!

-ஆடுகளம் பாடல்தான் நினைவுக்கு வருகிறது!!!

தலைப்பிலேயே கதையின் முடிவு இருப்பதால் படிக்கப்படிக்க இதுதான் முடிவு என்று தெரிந்துவிடுகிறது

ஓவியன்
26-04-2011, 11:00 AM
சொல்ல வந்த கருத்தினை சொல்லிய விதம் அருமை, நீங்கள் தெரிவு செய்த பாதை உங்களை நடுத்தெருவுக்கு அழைத்து வந்தது போல, உங்களைத் தொடர்ந்து வந்த நாங்களும் நடுத்தெருவுக்கு வர வேண்டியதாயிற்று...!!:D

வித்தியாசமான கருவினை அழகாகக் கையாண்டமைக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..!!:)

aren
26-04-2011, 12:35 PM
நல்ல சிந்தனையைத் தூண்டும் கதை. இன்னும் எழுதுங்கள்.

M.Jagadeesan
26-04-2011, 01:16 PM
லொள்ளுவாத்தியார்,ஆதவா, ஓவியன், ஆரென் ஆகியோருடைய பாராட்டுகளுக்கு நன்றி!

sarcharan
27-04-2011, 11:45 AM
அங்கிருந்த ஓர் அறிவிப்பில்

" நீங்கள் இருக்கவேண்டிய இடம் நடுத்தெரு தான். வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள அஞ்சும் நீங்கள் முன்னேற வாய்ப்பில்லை. உங்களுக்கு " நடுத்தெரு நாராயணன்" என்ற பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

ஹ ஹா ஹா ஹாஆ...

என்ன சார் நீங்களும் கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?

ராணாஸ் க்ரூப்ல இன்னொரு வரவு.. ரா ரா ப்ளீஸ் நோட் திஸ்

Nivas.T
27-04-2011, 01:02 PM
சிந்திக்க வைக்கும் கருத்து

ஆழமான பொருள்கொண்ட நகைச்சுவைக் கதை

நன்று

M.Jagadeesan
27-04-2011, 01:06 PM
என்னுடைய பெயரில் "ரா" வரவில்லை. எனவே "ராணாக்களின் ராஜ்ஜியத்தில்" என்னைச் சேர்க்கமுடியாது.

sarcharan
27-04-2011, 01:16 PM
என்னுடைய பெயரில் "ரா" வரவில்லை. எனவே "ராணாக்களின் ராஜ்ஜியத்தில்" என்னைச் சேர்க்கமுடியாது.

" நடுத்தெரு நாராயணன்" - இதுல "ரா" வருதே!!;)

M.Jagadeesan
28-04-2011, 01:52 AM
" நடுத்தெரு நாராயணன் " என்பது கதையின் பெயர். என்னுடைய பெயர் அல்ல.

sarcharan
28-04-2011, 12:35 PM
:) சே.. எப்படியாவது உங்கள எங்களது அணியின் தலைவராக ஆக்கலமுன்னா தப்பிச்சுடுறீங்களே!!

முன்னாடி எங்களது ஐவரணியின் தலைவராக தலை இருந்தார். இப்போ அந்த அணியே சிதறிவிட்டது...

சரி போனால் போகட்டும், ரா ராவே எங்களது அணியின் தலைவராக ஆகிடுறோம்...

த.ஜார்ஜ்
28-04-2011, 03:13 PM
இத்தனை கதவுகளை சலிக்காமல் திறந்து கொண்டிருந்த உங்கள் விடா முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.