PDA

View Full Version : இரை



சசிதரன்
25-04-2011, 03:51 PM
உதட்டின் பிளவுகளில்
மிக மெல்லிதாய்
ஓர் நேர்கோடாய்
கசிகிறது உதிரம்

சட்டென இதழ் பொருத்தி
புசிக்கத் துவங்குகிறாய்.
உன் எச்சில்
மிக காரமாய்
உள்பரவுகிறது.

அடர்வனத்தினுள்
பற்களினிடையே இரை கவ்வும்
வேட்டை மிருகத்தை
நினைவில் கொணரும்
உன் கண்களில்
காதல் உணர்தல்
அத்தனை எளிதாயில்லை

கடைவாயின் ஓரம்
உதிரம் ஒட்டியிருக்க
ஸ்திரமாய் புன்னகைத்தபடி
விலகி நடக்கிறாய்

காதலெனவும்
காமமெனவும்
உன்னால் விளக்க முடியுமென்றாலும்
இரையெனவே நான் உணர்கிறேன்

Nivas.T
25-04-2011, 03:56 PM
கண்களால் தின்றது பாதி
உதடுகளால் உண்டது பாதி
உயிர்மட்டுமே மிச்சம் என்பது
நம் காதலின் நியதி


அழகான காதல் கவிதை சசிதரன்

தொடரட்டும் காதல் பயணம்

கீதம்
26-04-2011, 01:56 AM
காதலோ... காமமோ...
மென்னுணர்வறியா கருமமது
வன்புணர்வினும் வலிமிகுந்ததென்றே
துன்புறுத்தி வேட்கை கொள்பவனை
வசைபாடத் துணியும் வேளை...
பொறியெனத்தட்டுகிறதோர் எண்ணம்!

இரையென்றுணரும்பொழுதிலும்
விருட்டென்று விடுபடா மனநிலையை
வலியேற்பில் வெறிகொள்ளும் வன்மனமென்றே
உரைத்தலும் தகுமோவென்றே
உள்ளுக்குள் எழுகிறதோர் ஐயம்!

வரம்பு மீறிய வாழ்வியல், கவிதையாய் உங்கள் வார்த்தைகளில்! பாராட்டுகள் சசிதரன்.

முரளிராஜா
26-04-2011, 02:52 AM
அருமையான கவிதை
பாராட்டுக்கள் நண்பரே