PDA

View Full Version : பாதை தவறிய பயணங்கள்

கீதம்
25-04-2011, 03:07 AM
போகவேண்டிய ஊருக்கான
பயணப்பாதையைத் திட்டமிட்டு
வரைபடமாய் மனதில் பூட்டிதான்
வண்டிமாடுகளைப் பூட்டுகிறேன்.

சென்றமுறைகளில் நிகழ்ந்ததுபோல்
திசைமாறிவிடக்கூடாது என்பதில்
திடமாய் இருப்பதோடு
கண்ணயர்ந்துவிடக்கூடாது என்பதிலும்
கவனமாய் இருக்கிறேன்.

சாட்டை சுழற்றிச் சுழற்றி
சரியான பாதையை உறுதிசெய்து
காளைகளை விரட்டுகிறேன்.

கொம்புச்சலங்கைகள் குலுங்கி இசைக்க...
நுகத்தடிக்குள் நுழைக்கப்பட்டத் தலைகள்
நுண்ணிய தாளலயத்துடன் இடவலமாட....
எட்டுக்கால்கள் எட்டுவைத்துப் புழுதி கிளப்பியோட...

உற்சாகக் கொப்பளிப்போடு
வாலினை முறுக்கி,
விரசாய் முடுக்கி,
தார்க்குச்சியினையும் பதிக்க….
தறிகெட்டோடுகின்றன காளைகள்!

மனமெழுதிய பாதைகள்
வகையாய் கண்வயப்பட...
நிதானம் வெல்லும் மமதை
மெல்லக்கிளர்ந்தெழுந்து பார்வை மறைக்க...

தடுமாறிய கால்கள்
தடம் மாறிய உணர்வற்று
முன்னேறிய பயணத்தின்
துணுக்குற்ற கணமொன்றில் துடித்துப்பதறி....

பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
பின்னிழுக்க இயலாது
பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.

முடிவில் நின்றிருக்கிறேன்,
முந்தையப் பயணங்களைப் போலவே,
பார்த்தறியா ஊரின் மத்தியில்……
நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
காளைகளைச் சபித்தபடியே!

கலாசுரன்
25-04-2011, 04:16 AM
நல்லா இருக்கு கீதம் "அதிலும் இந்த வரிகள்":)
பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
பின்னிழுக்க இயலாது
பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.

ஜானகி
25-04-2011, 04:39 AM
நாங்களும், உங்களுடனேயே வந்து, திகைத்து நிற்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது.......நடைமுறை வாழ்க்கையைக் கவிதையெனும் திரையில் ரசிக்கிறோம்.....ரணம் மறந்து....நன்று !

' மமதை ' எனும் தடையினை அடையாளம் கண்டாயிற்று...இனி அதனை அகற்றும் மார்க்கமும் கைகூடும்...காத்திருப்போம் !

கீதம்
25-04-2011, 05:38 AM
நல்லா இருக்கு கீதம் "அதிலும் இந்த வரிகள்":)
பாய்ந்தோடும் பாரந்தாங்கிகளைப்
பின்னிழுக்க இயலாது
பெருமூச்சுடன் பார்த்திருக்கிறேன்.

ரசித்ததைப் பின்னூட்டமிட்டுச் சுட்டியதற்கு நன்றி கலாசுரன் அவர்களே.

நாங்களும், உங்களுடனேயே வந்து, திகைத்து நிற்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது.......நடைமுறை வாழ்க்கையைக் கவிதையெனும் திரையில் ரசிக்கிறோம்.....ரணம் மறந்து....நன்று !

' மமதை ' எனும் தடையினை அடையாளம் கண்டாயிற்று...இனி அதனை அகற்றும் மார்க்கமும் கைகூடும்...காத்திருப்போம் !

உடன் பயணித்து உணர்வறிந்ததற்கு நன்றி ஜானகி அம்மா.

இளசு
25-04-2011, 05:40 AM
அருமை கீதம்.

இரு கரங்கள்.. அதன் கட்டுக்குள்...வண்டி.. பாதை... பயணம்.. - இது தொடக்கம்..

இரு காளைகள்.. எட்டுக் கால்கள்... சுமைகள்... மாற்றம் - இது இடையில்..

முடிவு?

நம் கட்டுக்குள்( இருப்பதாய் நாம் எண்ணிக்கொண்டிருக்கும்) வாழ்க்கைப் பயணம்
எந்தப் புள்ளியில் மாறியது? ( என நாம் உணர்கிறோம்??)

பாதையெல்லாம் மாறிவரும்..
பயணம் முடிந்துவிடும்..
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.

மனக்கேணி நீர் இறைச்சலுக்கு
மனம் நிறைந்த பாராட்டு!

Nivas.T
25-04-2011, 05:42 AM
வலப்பக்க மாட்டின் கையிற்றை இழுத்து பிடித்து
இடப்பக்க மாட்டை மட்டும் தட்டினால் போதும்
வண்டி வலப்பக்கம் திரும்பும், இடப்பக்கம்
திரும்ப இடப்பக்க மாட்டை இழுத்து வலப்பக்க
மாட்டினை தட்டவேண்டும்,

இப்படி நாம் சொன்னால் கேக்கும் மாடுகளை
நம் கட்டுப்பாட்டை விட்டு அவை பாதைக்கு போக விட்டால்

தெரியாத ஊரில் மட்டுமல்ல, சில நேரம் வயல் நடுவிலும் நிற்கக்கூடும்

வழக்கம் போல்தான்
கவிதை நல்லாருக்குங்க

கீதம்
25-04-2011, 06:07 AM
அருமை கீதம்.

இரு கரங்கள்.. அதன் கட்டுக்குள்...வண்டி.. பாதை... பயணம்.. - இது தொடக்கம்..

இரு காளைகள்.. எட்டுக் கால்கள்... சுமைகள்... மாற்றம் - இது இடையில்..

முடிவு?

நம் கட்டுக்குள்( இருப்பதாய் நாம் எண்ணிக்கொண்டிருக்கும்) வாழ்க்கைப் பயணம்
எந்தப் புள்ளியில் மாறியது? ( என நாம் உணர்கிறோம்??)

பாதையெல்லாம் மாறிவரும்..
பயணம் முடிந்துவிடும்..
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.

மனக்கேணி நீர் இறைச்சலுக்கு
மனம் நிறைந்த பாராட்டு!

உங்கள் பார்வையின் தனித்துவம் கண்டு மலைப்பும் வியப்பும் மிகக்கொண்டு மகிழ்வோடு திரிகிறது என் மனவண்டு.

நன்றி இளசு அவர்களே.

கீதம்
25-04-2011, 06:11 AM
வலப்பக்க மாட்டின் கையிற்றை இழுத்து பிடித்து
இடப்பக்க மாட்டை மட்டும் தட்டினால் போதும்
வண்டி வலப்பக்கம் திரும்பும், இடப்பக்கம்
திரும்ப இடப்பக்க மாட்டை இழுத்து வலப்பக்க
மாட்டினை தட்டவேண்டும்,

இப்படி நாம் சொன்னால் கேக்கும் மாடுகளை
நம் கட்டுப்பாட்டை விட்டு அவை பாதைக்கு போக விட்டால்

தெரியாத ஊரில் மட்டுமல்ல, சில நேரம் வயல் நடுவிலும் நிற்கக்கூடும்

வழக்கம் போல்தான்
கவிதை நல்லாருக்குங்க

அழகாய்ச் சொல்லித்தருகிறீர்கள் மாட்டை வசப்படுத்தி பாதையில் பயணிக்கச்செய்யும் உத்தி. ஆனால்... நாமே நம் வசமில்லையெனில்... மாட்டை வழிநடத்துவது எப்படி?

பாராட்டுக்கும் பின்னூட்டமிட்டு கருத்துரைத்ததற்கும் நன்றி நிவாஸ்.

கௌதமன்
02-07-2011, 01:41 PM
ஏன் என்னை சபிக்க வேண்டும்
என்ன தவறு நான் செய்தேன்!
எத்தனை முறை வந்திருப்பேன்
என் இளங்கன்று பருவத்தில்
ஓடிக் களித்த இடம் இதுவல்லவா!
காளையானவுடன் கைகழுவி விட்டுவிட்டால்
பிறந்தவிடம் மறந்திடுமா?
வரும்பாதையிலே எருமையண்ணா
சிரித்துப் பேசியதை பார்க்காமல் விட்டுவிட்டு
திசைமாறி வந்ததாய் நீ ஏன் அரட்டுகிறாய்!
கேள்வி ஏதும் கேட்காமல்
என் ஜோடி காளையே சும்மா இருக்கும்போது
நீ மட்டும் இப்படி புலம்பி கவி வடிக்கலாமா?

[காளை மாடு சொன்னது எனக்கு மட்டும்தான் கேட்டுச்சு :D]

Ravee
03-07-2011, 12:20 AM
முடிவில் நின்றிருக்கிறேன்,
முந்தையப் பயணங்களைப் போலவே,
பார்த்தறியா ஊரின் மத்தியில்……
நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
காளைகளைச் சபித்தபடியே!

பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
பாவம் என்ன செய்யும் காளைகள்

கீதம்
11-07-2011, 03:28 AM
ஏன் என்னை சபிக்க வேண்டும்
என்ன தவறு நான் செய்தேன்!
எத்தனை முறை வந்திருப்பேன்
என் இளங்கன்று பருவத்தில்
ஓடிக் களித்த இடம் இதுவல்லவா!
காளையானவுடன் கைகழுவி விட்டுவிட்டால்
பிறந்தவிடம் மறந்திடுமா?
வரும்பாதையிலே எருமையண்ணா
சிரித்துப் பேசியதை பார்க்காமல் விட்டுவிட்டு
திசைமாறி வந்ததாய் நீ ஏன் அரட்டுகிறாய்!
கேள்வி ஏதும் கேட்காமல்
என் ஜோடி காளையே சும்மா இருக்கும்போது
நீ மட்டும் இப்படி புலம்பி கவி வடிக்கலாமா?

[காளை மாடு சொன்னது எனக்கு மட்டும்தான் கேட்டுச்சு :D]

அப்படியென்றால் அந்த ஜோடிக் காளை நீங்கதானா? என்னேயொரு கவித்துவக்காளை! :D

அக்காளை நடக்கும் வழியே அக்காளும் நடப்பதுதான் நல்வழியோ? :)

நன்றியும் பாராட்டும் கெளதமன். :icon_b:

கீதம்
11-07-2011, 03:30 AM
முடிவில் நின்றிருக்கிறேன்,
முந்தையப் பயணங்களைப் போலவே,
பார்த்தறியா ஊரின் மத்தியில்……
நுரைதள்ளிப் பெருமூச்சுவிடும்
காளைகளைச் சபித்தபடியே!

பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
பாவம் என்ன செய்யும் காளைகள்

கண்போன போக்கிலே கால் போகலாமான்னு காளைகளைக் கண்டிப்பதைவிட்டு என்ன கரிசனம் அவற்றின் மேல்? :)

பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

நாஞ்சில் த.க.ஜெய்
11-07-2011, 07:05 AM
மனமெனும் காளையை கட்டுபடுத்தும் சாட்டையை பதமாக சுழற்றாவிடில் திசைமாறும் இந்த பாதை மாறிய பயணங்கள் ...அருமை தொடருங்கள் கீதம் அவர்களே...

கீதம்
15-07-2011, 02:27 AM
மனமெனும் காளையை கட்டுபடுத்தும் சாட்டையை பதமாக சுழற்றாவிடில் திசைமாறும் இந்த பாதை மாறிய பயணங்கள் ...அருமை தொடருங்கள் கீதம் அவர்களே...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

innamburan
15-07-2011, 06:39 AM
மனம் எழுதிய பாதைகளின் சுவடு தெரிந்தால்...
அருமையான, சிந்தனையை தூண்டும் கவிதை.

பென்ஸ்
15-07-2011, 06:53 AM
நாம் சொல்ல வந்த வார்த்தைகளை எனக்கு முன்னமே
(எழுத்து பிழையில்லாமல்) பதித்து விடும் இளசுவுக்கு என் அன்பை சொல்லி கொண்டு...

கீதம்....
மிக மிக அருமையான கவிதை...
சொல்லப்பட்ட விதம் மிக மிக அருமை...

இயேசுநாதரோ அல்லது முகமது நபியோ
கடவுளின் போதனைகளை சொல்லும் போது
உவமைகள் வழியாகவே சொன்னார்கள்....

சொல்லவந்த காரியமும் அதை சொல்ல எடுத்த உவமையும் மிக கச்சிதம்....

மாமதை வராமல் இருக்கதானோ என்னவோ
கடவுள் மனிதனுக்கு அவ்வபோது ஒரு "செக்" வைத்து
பின் நல்வழி நடத்துகிறார்...

வாழ்த்துகள் கீதம்...

கீதம்
21-07-2011, 10:39 PM

உங்கள் பரந்த விமர்சனப்பார்வைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி பென்ஸ் அவர்களே.