PDA

View Full Version : மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்...



simariba
25-04-2011, 01:00 AM
என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...

ஜானகி
25-04-2011, 02:24 AM
பருத்தி [ பட்டுநூல் ]வண்ணத்தில் தோய்ந்து, காய்ந்து, கவிதையாய் மலர்ந்ததோ.... நன்று !

simariba
25-04-2011, 02:53 AM
பருத்தி [ பட்டுநூல் ]வண்ணத்தில் தோய்ந்து, காய்ந்து, கவிதையாய் மலர்ந்ததோ.... நன்று !

நன்றி ஜானகி!

கீதம்
25-04-2011, 02:54 AM
பட்டென்று சொல்லும்,
புறந்தள்ளப்பட்டது
புனிதமணப்பட்டோ?

கண்பட்டு மண்பட்டு
அழகுப்பட்டு அழுக்குப்பட்டு
மனம் புண்பட்டுவிடுமோவென்றோ...?

செம்பட்டு பார்த்ததும்
பட்டென்று பழங்கதையும்
பட்டதும் கெட்டதும் முன்வந்து
பட்டுமனம் துடிக்குமோவென்றோ....?

உம் கைப்பட்டு நெய்த கவிப்பட்டு
திரும்பிய என் பார்வைப்பட்டு
நெளியும் ஏராளப் பட்டுப்பூச்சிகளின்
சாபம் தாங்கிய என் அலமாரிப்பட்டும்.

உமாமீனா
25-04-2011, 06:35 AM
:icon_clap::icon_clap:

Nivas.T
25-04-2011, 07:06 AM
கவிதை அழகு

simariba
25-04-2011, 09:57 AM
பட்டென்று சொல்லும்,
புறந்தள்ளப்பட்டது
புனிதமணப்பட்டோ?

கண்பட்டு மண்பட்டு
அழகுப்பட்டு அழுக்குப்பட்டு
மனம் புண்பட்டுவிடுமோவென்றோ...?

செம்பட்டு பார்த்ததும்
பட்டென்று பழங்கதையும்
பட்டதும் கெட்டதும் முன்வந்து
பட்டுமனம் துடிக்குமோவென்றோ....?

உம் கைப்பட்டு நெய்த கவிப்பட்டு
திரும்பிய என் பார்வைப்பட்டு
நெளியும் ஏராளப் பட்டுப்பூச்சிகளின்
சாபம் தாங்கிய என் அலமாரிப்பட்டும்.

நன்றி கீதம்! கவி அருமை! அட மூன்று முறை படித்தும் இன்னும் முழுமையாய் புரியவில்லை! உங்கள் படைப்புகள் ஒரு வித முழுமையுடன், ஆளுமையுடன், அழகாக இருக்கின்றன.

simariba
25-04-2011, 09:58 AM
நன்றி உமா மீனா!

நன்றி த. நிவாஸ்!

நாஞ்சில் த.க.ஜெய்
25-04-2011, 10:57 AM
பட்டொன்று தன்னிலை கூறும் உணர்மிகு வரிகள் ...

கீதம்
26-04-2011, 02:15 AM
நன்றி கீதம்! கவி அருமை! அட மூன்று முறை படித்தும் இன்னும் முழுமையாய் புரியவில்லை! உங்கள் படைப்புகள் ஒரு வித முழுமையுடன், ஆளுமையுடன், அழகாக இருக்கின்றன.

என்னங்க அபி இப்படி சொல்லிட்டீங்க...?

பட்டுப்புடவையைப் பத்திப் பேசினதாலே நானும் உணர்ச்சிவசப்பட்டு பட்டு பட்டுன்னு விளையாடிட்டேன்.

அது ஒண்ணுமில்ல...


பட்டென்று சொல்லும்,
புறந்தள்ளப்பட்டது
புனிதமணப்பட்டோ?

கட்டாம வச்சிருக்கிறதா ஏங்குதே ஒரு பட்டுப்புடவை... அது கல்யாணத்துக்குன்னு எடுத்தாதான்னு கேட்டிருக்கேன்.

அப்புறம் கல்யாணத்துக்கு எடுத்ததுன்னா அதை கட்டாம இருக்கிறதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்.


கண்பட்டு மண்பட்டு
அழகுப்பட்டு அழுக்குப்பட்டு
மனம் புண்பட்டுவிடுமோவென்றோ...?

ஒண்ணு... அந்த நாளின் சுகமான நினைவுகளுக்கு சாட்சியா இருக்கிற இந்தப்புடவையை அடிக்கடி கட்டினா அழுக்காகி வீணாகிடுமே... அப்படிங்கிற பயத்தால் கட்டாம இருக்குறது.


செம்பட்டு பார்த்ததும்
பட்டென்று பழங்கதையும்
பட்டதும் கெட்டதும் முன்வந்து
பட்டுமனம் துடிக்குமோவென்றோ....?

ரெண்டாவது.... கொஞ்சம் வில்லங்கமானது. அதாவது அந்தக் கல்யாணத்தில் உடன்பாடில்லாது சம்மதிச்சிருந்தா... (பொதுவா சொன்னேங்க... உங்களைன்னு எடுத்துக்காதீங்க அபி) அந்த நாளைப் பற்றிய நினைவுகளை மறுபடியும் நினைவுபடுத்திடக்கூடாதேங்கிற எண்ணமா இருக்கலாம்.


உம் கைப்பட்டு நெய்த கவிப்பட்டு
திரும்பிய என் பார்வைப்பட்டு
நெளியும் ஏராளப் பட்டுப்பூச்சிகளின்
சாபம் தாங்கிய என் அலமாரிப்பட்டும்.

கடைசி பத்தியில் என்னுடைய பட்டுப்புடவைகளும் கட்டும் வாய்ப்பில்லாம அலமாரியில் சும்மா அடுக்கிவச்சிருக்கிறதப் பாத்து உங்க கவிதை போலத்தான் புலம்புமோன்னு ஒரு நினைப்பும் கூடவே வருதுன்னு சொல்லியிருகேன். ஒரு பட்டுப்புடவைக்காக எத்தனைப் பட்டுப் புழுக்களை அழிச்சிருப்பாங்க... அதான் பட்டுப்பூச்சிகளின் சாபம்னு சொன்னேன்.:)

இப்ப எல்லாம் ஓகேதானே... அபி?:icon_b:

முரளிராஜா
26-04-2011, 03:04 AM
ஒரு பட்டுபுடவையின் நிலையை அழகாய் உங்கள் கவிதையில் பார்க்கிறேன்
கவிதை அருமை

simariba
28-04-2011, 07:15 AM
நன்றி நாஞ்சில் த.க. ஜெய்!

நன்றி கீதம், இப்போ புரியுது. சரி தான், கல்யாணப்பட்டு தான். வீணாகிட கூடாதேன்னு ஓரமா தொங்க விட்டு பத்திரமா வைச்சிருகேன்.

நன்றி முரளி ராஜா!

அமரன்
30-04-2011, 08:52 AM
நீங்கள் பட்டு நூலில் பாட்டு நெய்திருந்தாலும்
நான் வேறுபட்டு பாட்டை தோய்த்தெடுக்கிறேன்.

விளக்கமாகச் சொல்வதைக் காட்டிலும் சுருக்கமாகச் சொல்லி விளக்கலாம்.

தாமரை அண்ணா..

அவரைப் பற்றிய மதிப்பு மிக்க எண்ணங்களும், அவருடைய பெறுமதியும். அவர் ஏற்படுத்திய அலைகளும் அவரை ஏதோ நெருங்க முடியாதவராக நினைக்க வைக்கும். பழகவோ, பயன்படுத்தவோ கடினமானவராகக் காட்டும். ஆனால் உண்மை தலைகீழ். இவரைப் போலப் பலரும் உண்டு நம்மைச் சூழ.. ஆனால், இவரைப் போலச் சிலர்தான் உண்டு, கவிப்பட்டைப் போல புலம்பாதிருக்க..

பட்டாடை கட்டி வந்த கவிதையின் சர சர சத்தம் இனிய கீதமானது..

பாராட்டுகள் அபி.