PDA

View Full Version : நண்பர்கள் சிந்திக்க !



நாஞ்சில் த.க.ஜெய்
21-04-2011, 05:50 PM
இன்றைய தினம் நமது நண்பர்களின் பதிவுகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது மிகவும் வரவேற்க்கதக்கது ..ஒவ்வொருவரும் அவரவர் பதிவுகளினை கண்டு அவர்களின்பால் தொடர்புள்ளவர்களின் பதிவுகளுக்கு பின்னோட்டம் இடுவதுடன் மற்றவர்களின் பதிவுகளையும் கவனித்து பதிவிடுங்கள் மேலும் முன்னமே பதிவிட்ட பதிவுகளின் சாராம்சம் தொடர்புடைய பதிவுகளை ஒருபதிவாக இடலாமே ..குறிப்பாக கூறவேண்டுமெனில் பலபதிவுகளை கூறலாம் இன்றைய தினம் இருபதிவுகள் இது போன்று வந்துள்ளன ..இவைகள் ஒரே பதிவின் கீழ் இருந்தால் அந்த பதிவுக்கான காரணம் முழுமை அடையும் என்பது என் எண்ணம் ...அதுபோன்று மன்ற மூத்த உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக எனக்கு படுகிறது ...அவர்களின் வேலைப்பளுவினால் இதனை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது அதேநேரத்தில் புதியவர்களாக நுழைந்து இன்று மன்றத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் நண்பர்களுடன் மூத்த நண்பர்கள் இடையேயான தொடர்பு தாமரை இலை மேல் ஒட்டிய தண்ணீராகவே உள்ளது ..இதனை மாற்ற நண்பர்களின் பங்கெடுப்பு மிகவும் அவசியம் அவர்களின் அனுபவம் என் போன்ற மன்ற இளையவர்களுக்கு வழி காட்டும் ஒளியாக இருக்கும்...
குறிப்பு :என் மனதில் தோன்றியதை தங்கள் முன் எடுத்துரைத்தேன் தவறிருந்தால் மன்னிக்கவும் ....

அக்னி
21-04-2011, 07:24 PM
பொதுவாக செய்திகள் மற்றும் இதர பகிர்வுப் பதிவுகள் என்றால், ஒரு திரியின் கீழ் ஒழுங்கமைக்கப்படுவதே மன்ற வழக்கம்.
நிர்வாக உறுப்பினர்களுக்குச் சுட்டிக்காட்டுகையில் அவர்கள் இணைத்து ஒரு திரியாக்கிவிடுவார்கள்.

ஆனால், சொந்தப் படைப்புக்கள் ஒரே கருவைத் தாங்கி வந்தாலும்,
அவை தனித் தனியாக இருத்தல் அவசியம்.
முன்பொருமுறை திரைவிமர்சனங்கள் மன்ற உறுப்பினர்களின் பார்வையிற் பதிவானபோது ஒரு குழப்ப நிலை ஏற்பட்டது நினைவுக்கு வருகின்றது.

*****

நான் பொதுவாகப் புதியவர் பழையவர் என்று தேடிச் சென்று பதிவிடுவதில்லை.
மன்றம் வந்ததும் எனது கட்டுப்பாட்டறையில் ஒளிரும் திரிகளுக்கு (Subscribed Threads) சென்று, அங்கு எனது பதிவைச் சுட்டி ஏதேனும் சொல்லியிருப்பின் அவற்றிற்குப் பதிலளித்துவிட்டு, பின்னர் மன்ற முகப்பு வந்து, முகப்பில் ஒளிரும் திரிகளைத் திறந்து பார்ப்பதே எனது வழமை.

நேரப் பிரச்சினை இதற்குமேல் அனுமதிப்பதில்லை.

பயண நேரத்தில் அலைபேசியிலிருந்து சில பதிவுகளைப் பார்த்துவிட்டுப் பின்னூட்டம் இட முடியாமல் செல்வதும் நிகழ்வதுண்டு.

பழையவர் புதியவர் என்று வேறுபாடு காட்டுவது என்பது பொதுவாக எந்த உறுப்பினரிடமும் இருக்காது என்றே நம்புகின்றேன்.

ஆனால், புதியவர்களின் ஆக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய கடப்பாடு,
அப்புதியவருக்கு முன்னாடி வந்த அனைத்துப் பழையவர்களுக்கும்,
நிச்சயம் இருத்தல் வேண்டும்...

இளசு
21-04-2011, 08:59 PM
நாஞ்சில் ஜெய்

இப்பதிவு உங்கள் மன்ற ஆர்வம், பாசத்தைக் காட்டுகிறது. தவறொன்றும் இல்லை இப்பதிவில்.


அக்னி சொன்னவற்றை வழிமொழிகிறேன்.

1) சேர்த்துத் திரிக்கலாம் எனத் தோன்றுபவற்றை நிர்வாக உறுப்பினருக்குத் தெரிவியுங்கள்.

2) பழகிய அன்பு காரணமாய் சிலருக்குள் பின்னூட்ட சிநேகம் தெரியும். மற்றவரும் பழகியபின் அப்பழக்கத்தின் பயனாளி ஆவர்.

இயன்றவரை பின்னூட்டம், ஊக்கம் அளிக்க எல்லாருமே முயல வேண்டும்.

நேரமின்மை, பின் வந்து செய்யலாம் என்ற தள்ளிப்போடல் ஆகியவற்றால் சுணக்கம் நேர்கிறது.


குறைகளைச் சுட்டுங்கள். களைய அதுவே முதல் படி!

நாஞ்சில் த.க.ஜெய்
25-04-2011, 10:43 AM
நான் கூறிய கருத்துகளுக்கு மதிப்பளித்து மறுமொழியிட்ட அக்னி மற்றும் இளசு அவர்களுக்கு எனது நன்றிகள்...நீங்கள் கூறுவது உண்மை தான் அக்னி அவர்களே இன்றையதினம் பதிவிடும் போது முன்னரே பதிவிட்ட பல பதிவுகளை தேடிபிடித்து பதிவிடுவது என்பது இயலாதது. அதேநேரத்தில் அதுபோன்ற பதிவுகளின் சாராம்சம் கொண்ட பதிவுகள் பழைய பதிவுகளை காணாமல் பல தொடர்கின்றன ..உதாரணத்திற்கு நண்பர் ஆதவா எழுதிய ஊழலுக்கு எதிரான போராட்டம்: எழுச்சிபெறுமா இந்தியா? தலைப்பில் உள்ளபதிவில் நண்பர் முரளிராஜா எழுதியஊழலுக்கு எதிராக வாக்களியுங்கள் எனுபதிவு இருந்தால் அந்த பதிவு முழுமையானதாக இருக்கும் என்பது என் எண்ணம் அது போன்று நான் எழுதிய 49 ஒ பிரிவின் அவசியம் எனும் தலைப்பில் எழுதிய பதிவின் கீழ் நண்பர் ஆதன் எழுதிய கூடலூர் மசினகுடியில் வாக்காளர்கள் அதிருப்தி-'49 ஓ'வுக்கு வாக்களித்தனர் என்ற பதிவு பதியபட்டால் அந்தபதிவின் சாராம்சம் முழுமையடைந்ததாக இருக்கும் ..அதேபோல் நண்பர் ஆளுங்க எழுதிய உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011 என்ற பதிவின் கீழ் தோனி 52 என்ற பதிவு இருந்தால் அந்த பதிவு முழுமையடையும் இதுபோன்ற பல பதிவுகள் உள்ளன நான் கூறவருவதும் இதுதான் .. மற்றொன்று மன்ற மூத்த நண்பர்களின் பதிவுகளின் மேல் உள்ள ஈர்ப்பால் அவர்களின் பதிவினை நான் தவறவிடுகிறேனோ என்ற எண்ணம் தான் காரணம் நண்பர் இளசு அவர்களே ..ஏனெனில் மன்ற மூத்த நண்பர்கள் விவாதிக்கும் போது நான் அறியாத பல அனுபவங்கள் அவர்களின் வார்த்தைகளை வெளிவருகிறது இது தான் இன்றைய இளைய நண்பர்கள் அவசியம் அறிய வேண்டியது ..அதற்காக தான் கூறுகிறேன் ...