PDA

View Full Version : பூனைக்குட்டியின் ஜெனி...



சசிதரன்
21-04-2011, 11:06 AM
ஜெனிக்கு பூனைக்குட்டி
மிகவும் பிடிக்கிறது.

எங்கிருந்து வந்ததென்று
தெரியாத சாம்பல்நிற பூனைக்குட்டி
எப்பொழுதும் அவளையே சுற்றுகிறது

சமயங்களில் இருவரும்
நீண்ட நேரம் பேசிக் கொள்கிறார்கள்
பூனையின் மியாவ் அவளுக்கும்
அவளின் மழலை மொழி பூனைக்கும்
எப்படியோ புரிகிறது.

அவள் உறங்கும் நேரங்களில்
அவளின் சின்னஞ்சிறிய காலணிகளில்
தலை பதித்து உறங்குகிறது

அவள் நடைபழகும் நேரங்களில்
கால்களுக்கிடையில் தாவி தாவி
தானும் நடை பழகுகிறது

ஜெனிக்கு பூனைக்குட்டியை
மிகவும் பிடிக்கிறது.
பூனைக்குட்டியும் கூட நினைத்திருக்கலாம்
ஜெனியை தன் பூனைக்குட்டியென.

முரளிராஜா
21-04-2011, 11:14 AM
மியாவ் மியாவ் மியாவ்
அருமையான கவிதை நண்பா
வாழ்த்துக்கள்
அந்த பூனைகுட்டி உங்களை பார்த்தபொழுது என்ன நினைத்திருக்கும்?:)

ஷீ-நிசி
21-04-2011, 01:15 PM
பூனைக்குட்டியும் கூட நினைத்திருக்கலாம்
ஜெனியை தன் பூனைக்குட்டியென.

பூனைக்குட்டியும் கூட நினைத்திருக்கலாம்
ஜெனியை தன் மனிதகுட்டியென....

இப்படி முடித்திருக்கலாமேவென்று படித்தவுடன் எனக்கு தோன்றியது...

கவிதை மென்மை...!

Nivas.T
21-04-2011, 02:18 PM
ஒவ்வொரு விளைவுக்கும் சமமான எதிர் விளைவு உண்டு

நல்லாருக்கு சசிதரன்

த.ஜார்ஜ்
21-04-2011, 02:27 PM
வழக்கமாக உங்கள் கடைசி வரிகள் மொத்த வரிகளையும் வேறொரு கோணத்திற்கு கொண்டுபோய் விடும். நச்சென்று முடியும்.


இந்த கவிதையில் இன்னும் கொஞ்சம் கூர்மைபடுத்தலாமோ...?

இளசு
21-04-2011, 09:33 PM
அடங்கியதாய் பாவனைகாட்டி
அடக்கியாள்வோர் உண்டு...

உன் பொம்மை நான் என எண்ணவைத்து
நம்மை பொம்மையாக்கினால்?

----------------------------------------------------


இங்கிருந்து பார்த்தால் நிலவு நம்மைச் சுற்றிவரும்..

நிலவிலிருந்து பார்த்தால்?


---------------------------------------------------



Pet பார்வை - Good!

பாராட்டுகிறேன் சசி..

கீதம்
21-04-2011, 10:46 PM
கவிதையைப் படிக்கும்போதே காட்சிகள் விரிகின்றன. ஜெனிக்குட்டியும் பூனைக்குட்டியும் கொஞ்சும் அழகும், துஞ்சும் அழகும் பார்வைச் சித்திரம் வரைந்து கவியை விஞ்சி நிற்கின்றன. அழகுக் கவிதை, சசிதரன்.

sarcharan
27-04-2011, 12:23 PM
இதை எங்கயோ படித்த மாதிரி இருக்கே....
மேரி ஹேட் எ லிட்டில் லாம்ப்...லிட்டில் லாம்ப் ...லிட்டில் லாம்ப்