PDA

View Full Version : எப்படியோ ஏறிவிட்டேன்...கீதம்
21-04-2011, 06:19 AM
மலைமுகட்டில் எழுந்த
மனமுரசும் உற்சாகக் கூப்பாடுகள்
அங்குமிங்கும் எதிரொலித்தபடியே
அடிவாரம் வந்தடைந்திருந்தன...

ஆர்வத்தை மிகைப்படுத்தி
அண்ணாந்துநோக்கவைக்கும்
ஆரவாரக் களிப்புகள் யாவும்…

உயரங்கள் எப்போதும் எனக்கு
உச்சபட்ச பீதியுருவாக்குமென்னும்
உண்மையை மறக்கச்செய்ய....

அனிச்சையாய் துளிர்த்தெழுந்தது,
அல்ப ஆவலாதியொன்று!

உச்சியினின்று தளும்பி வழிந்து
உயிர் நனைத்த சிநேகத்தின்
உடனே ஏறிவாவென்னும்
உளப்பூர்வ அழைப்புகளையும்
இறங்கும்வரை உறுதுணையாயிருப்போமென்னும்
உருக்கமான உறுதிமொழிகளையும்
உடும்பெனப் பற்றியபடியே
விடுவிடுவென்று பயணிக்கத் துவங்குகின்றன
என் பாதங்கள், பழகாத பாதைதனில்!

ஏற்றக்கோணத்தில் மலைமுகடு மறைந்து
மனமுகடுகள் மட்டுமே இலக்காக....
இலகுவில் எட்டிவிட்டேன்....

சிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
இறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்!

அவர்களோ....
நாப்பிறழ்ந்த நம்பிக்கைமொழிகளை
காற்றில் பறக்கவிட்டபடியே
என்னை மறந்து
ஏதேதோ பேசியபடி
இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Nivas.T
21-04-2011, 06:39 AM
எப்போதும் யாரோடும் எவரும்
இறுதிவரை வருவார்கள் என்பது உத்திரவாதமில்லை
யார்வந்தாலும் வராவிட்டாலும்
பயணம் மட்டும் தொடரும் நம்பிக்கையோடு

மிக அருமைங்க

இதையும் சும்மா தோணுச்சுன்னு எழுதுனீங்களா?:D

கீதம்
21-04-2011, 06:52 AM
எப்போதும் யாரோடும் எவரும்
இறுதிவரை வருவார்கள் என்பது உத்திரவாதமில்லை
யார்வந்தாலும் வராவிட்டாலும்
பயணம் மட்டும் தொடரும் நம்பிக்கையோடு

மிக அருமைங்க

இதையும் சும்மா தோணுச்சுன்னு எழுதுனீங்களா?:D

நன்றி நிவாஸ். பயணத்தின்போது சகபயணிகளாயிருந்தாலும் நம்முடன் இணக்கமாய்ப் பழகிவிட்டபின் அவர்கள் நிறுத்தத்தில் இறங்கும்போது மனதில் ஒரு வெறுமையுணர்வு கவ்வுமே கவனித்திருக்கிறீர்களா? சகபயணிகளுக்கே அப்படியெனில் சிநேகிதர்களுக்கு....?

உங்களுக்கு இதைப் படித்தபின் என்ன தோன்றி என்னைக் கேள்வி கேட்கவைத்ததோ அதுதான் எனக்கும் தோன்றியது.:)

அக்னி
21-04-2011, 09:06 AM
வாழ்க்கையில் நிகழும் பயணங்கள்
வாழ்க்கைப் பயணத்தின் குறிகாட்டி...

கூட வருவோர் எதுவரைக்கும்...???
நானோ அவரோ இறங்கும்வரைக்கும்...

கொடுக்கப்படும் வாக்குறுதிகள்,
பயணக்களைப்பைப் போக்கும் உற்சாகமூட்டல்களாக மட்டுமே கொள்ளப்படட்டும்...
அது உந்துசக்தியாக மட்டுமே இருக்கட்டும்...
அது இயங்குசக்தியானால், இறக்கங்களில் சோர்வுதான் மிச்சமாகும்...

நன்று...

மலையேறிய பயத்தைத் தொடர்ந்து மலையேறிய கீதம்+அக்கா,
பயத்தை எட்டிப் பிடித்தாரா... அல்லது உச்சியில் வைத்து எட்டி உதைந்தாரா...

சசிதரன்
21-04-2011, 10:44 AM
ஏற தூண்டுதலாய் இருந்தவர்கள் இறங்கி போனாலும், நீங்கள் உச்சியில் இருப்பது நன்மைதானே... :)

முரளிராஜா
21-04-2011, 11:10 AM
உங்கள் கவிதை முத்துக்களில் இதுவும் ஒன்று
வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
21-04-2011, 01:03 PM
உண்மைதான்... மனம் எப்பொழுதும் ஒரு சின்ன சின்ன தட்டிகொடுத்தலையும், சின்ன சின்ன பாராட்டுக்களையும் எதிர்பார்க்கத்தான் செய்கிறது... நியாயமாய் கிடைக்க வேண்டிய தருணங்களில் கூட அது கிடைக்காமல் போனால்.. வேதனையடையத்தானே செய்யும்..

இளசு
21-04-2011, 10:11 PM
உள்ளத்தில் உதிக்கும் உணர்வுகள்..

வெள்ளை மேகமாய், காற்றுப்புகையாய்
கலைந்து மறையக்கூடிய எண்ணச் சிதறல்கள்..

கைக்கு எட்டாமல் , வடிவம் சிக்காமல்
கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மன அலைகள்..

உங்களிடம் மட்டும்-
கார்மேகமாய்
காரம்பசுப் பாலாய்
கடல் கடைந்த அமுதமாய்..
கவிதையாய்.. கதையாய்..

வாழ்த்துகிறேன் கீதம்..

--------------------------------------

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைப்பவர் உலகம் இது..
ஏறச்சொன்னவர் இருக்காமல்
இறங்கியது கண்டு பதறும் மனது...

நல்ல மனம் வாழ்க!

ஜானகி
22-04-2011, 01:42 AM
பயத்தை, சோகத்தை, வீழ்ச்சியை, எட்டிஉதைக்கத் துணிந்துவிட்டால், மார்க்கம் பல புதிதாய்ப் பிறக்கும்...வழிகாட்ட....தன்னம்பிக்கைதான் நிரந்தரமான...நம்பிக்கையான.. தோழன்...என்றுமே...

கீதம்
22-04-2011, 11:01 AM
வாழ்க்கையில் நிகழும் பயணங்கள்
வாழ்க்கைப் பயணத்தின் குறிகாட்டி...

கூட வருவோர் எதுவரைக்கும்...???
நானோ அவரோ இறங்கும்வரைக்கும்...

கொடுக்கப்படும் வாக்குறுதிகள்,
பயணக்களைப்பைப் போக்கும் உற்சாகமூட்டல்களாக மட்டுமே கொள்ளப்படட்டும்...
அது உந்துசக்தியாக மட்டுமே இருக்கட்டும்...
அது இயங்குசக்தியானால், இறக்கங்களில் சோர்வுதான் மிச்சமாகும்...

நன்று...

மலையேறிய பயத்தைத் தொடர்ந்து மலையேறிய கீதம்+அக்கா,
பயத்தை எட்டிப் பிடித்தாரா... அல்லது உச்சியில் வைத்து எட்டி உதைந்தாரா...

அழகாகச் சொல்லியிருக்கிறீங்க அக்னி. அதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இருந்தால் இப்படி புலம்பல்கள் வெளிப்படாதே....

அக்காவைப் பற்றிக் கேட்கிறீங்களா? இருக்கப் பிடிக்காமலும் இறங்கும் வழியறியாமலும் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருக்கிறார்.:)

கீதம்
22-04-2011, 11:03 AM
ஏற தூண்டுதலாய் இருந்தவர்கள் இறங்கி போனாலும், நீங்கள் உச்சியில் இருப்பது நன்மைதானே... :)

ஒற்றையாளாய் மைதானத்தில் பந்து உருட்டுவதினும் கொடுமை அல்லவா அது?

பின்னூட்டத்துக்கு நன்றி சசிதரன்.

கீதம்
22-04-2011, 11:04 AM
உங்கள் கவிதை முத்துக்களில் இதுவும் ஒன்று
வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி முரளிராஜா.

கீதம்
23-04-2011, 08:52 AM
உண்மைதான்... மனம் எப்பொழுதும் ஒரு சின்ன சின்ன தட்டிகொடுத்தலையும், சின்ன சின்ன பாராட்டுக்களையும் எதிர்பார்க்கத்தான் செய்கிறது... நியாயமாய் கிடைக்க வேண்டிய தருணங்களில் கூட அது கிடைக்காமல் போனால்.. வேதனையடையத்தானே செய்யும்..

சரியாகச் சொன்னீர்கள். கருத்துக்கு நன்றி ஷீ-நிசி.

கீதம்
23-04-2011, 09:00 AM
உள்ளத்தில் உதிக்கும் உணர்வுகள்..

வெள்ளை மேகமாய், காற்றுப்புகையாய்
கலைந்து மறையக்கூடிய எண்ணச் சிதறல்கள்..

கைக்கு எட்டாமல் , வடிவம் சிக்காமல்
கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மன அலைகள்..

உங்களிடம் மட்டும்-
கார்மேகமாய்
காரம்பசுப் பாலாய்
கடல் கடைந்த அமுதமாய்..
கவிதையாய்.. கதையாய்..

வாழ்த்துகிறேன் கீதம்..

--------------------------------------

ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைப்பவர் உலகம் இது..
ஏறச்சொன்னவர் இருக்காமல்
இறங்கியது கண்டு பதறும் மனது...

நல்ல மனம் வாழ்க!

வாழ்த்துக்கு நன்றி இளசு அவர்களே.

நல்ல மனம் என்கிறீர்,
நன்றாய்ப் பாரும்
நிழல்போலே மறைந்திருக்கும்
சில தன்னலமும் அதனுள்.

கீதம்
23-04-2011, 09:02 AM
பயத்தை, சோகத்தை, வீழ்ச்சியை, எட்டிஉதைக்கத் துணிந்துவிட்டால், மார்க்கம் பல புதிதாய்ப் பிறக்கும்...வழிகாட்ட....தன்னம்பிக்கைதான் நிரந்தரமான...நம்பிக்கையான.. தோழன்...என்றுமே...

தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு என் மகிழ்வான நன்றி ஜானகி அம்மா.

அமரன்
23-04-2011, 06:41 PM
ஏறினவங்களுக்கு இறங்கவும் தெரியும்தானே.

அதை இதைச் சொல்லி பிள்ளையை வரவழைத்துவிட்டு தூக்கிக் கொண்டாடுவது அம்மா. அதை சினேகத்திடம் எப்போதும் எதிர்பார்க்க முடியாது.

கவிதையின்படி சொன்னதை மீறியது நட்பின் இழுக்கு என்றால், எதிர்ப்பார்ப்புடன் பயணித்தது...???

நினைத்தனை கவிதையின் புனையும் திறமைக்கு வாழ்த்துக்கா.

கீதம்
24-04-2011, 01:50 AM

அதான்... சொல்லிவிட்டேனே.... கொஞ்சம் தன்னலமும் உள்ளோடியிருக்கிறதென்று...

எப்படியோ ஏறிவிட்டேன்... எப்படியும் இறங்கிவிடுவேன்.:)

கருத்திட்டு ஊக்குவித்ததற்கு நன்றி அமரன்.

கலாசுரன்
25-04-2011, 04:09 AM
கவிதை அதன் வேலையை சற்று நிதானமாகச் செய்கிறது...!

வாசிப்பின் பின்னர் யோசிக்கிறேன் :)

கீதம்
26-04-2011, 01:12 AM
கவிதை அதன் வேலையை சற்று நிதானமாகச் செய்கிறது...!

வாசிப்பின் பின்னர் யோசிக்கிறேன் :)

வாசித்ததற்காகவும் யோசிப்பதற்காகவும் உவந்து நவில்கிறேன் நன்றி.